Jump to content

முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்

cyber-attack.jpgஇலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் வைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது.

Tamil Eealam Cyber Arm என்ற அமைப்பே இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

தமது வலைத்தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ள குறிப்பிட்ட இணையத்தள முகாமைத்துவம், இதை தமது செய்தி குழுவுக்கு இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://thinakkural.lk/article/42203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Eealam Cyber Arm என்ற பெயர் நன்றாகவே உள்ளது.
ஆனால்... சிங்கள போட்டி இணையத் தளங்கள், இந்த வேலையை செய்து விட்டு, 
தமிழரின் மேல் பழியை போட்டு... தப்பிக்க பார்க்கிறார்களோ, என்ற சந்தேகமும் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலை செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tecf.jpg

‘ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரில் மூன்றாவது தடவையாக சைபர் தாக்குதல்!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்என ற பெயரில் மூன்றாவது தடவையாக 05 இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் அணி சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என இலங்கை சைபர் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று, இலங்கையின் அமைச்சரவை அலுவலக இணையம், தூதரகத்தின் இணையத்தளங்கள், அரச நிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இணையத் தளங்கலுக்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இருப்பினும் 05 இணையத்தளங்கள் மீது மட்டுமே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சைபர் தாக்குதலை இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது.

 

EYQ_d43XgAIrWaD.jpg

 

EYRPy4VXQAUwyj4.jpg

 

EYRKLjaXQAEELdr.jpg

 

EYRFVtyX0AELuUA.jpg

http://athavannews.com/ஒப்பரேசன்-முள்ளிவாய்க்/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தின் பல இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்

இலங்கை அரசாங்கத்தின் பல இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றறுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

cyber-attack1-1.jpg
சுகாதார அமைச்சின் இணையத்தளத்தினை இலக்குவைத்து சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும் இணையத்தளம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.cyber-attack-3.jpg
இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினதும் பொதுநிர்வாக அமைச்சினதும் இணையத்தளங்களும் சைபர் தாக்குதல்களிற்கு இலக்காகியுள்ளன.

http://thinakkural.lk/article/44163

Link to comment
Share on other sites

கோவிட்19 இனை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவந்த 'எமது வீரர்கள் (?)', இந்த மின்வலை தாக்குதல்களையும் ஒரு கை பார்த்து விடுவார்கள் (?) - ரம்புக்கலை (?) ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் நோக்கம் என்ன? இலங்கை அதிகாரி தகவல்

இலங்கையில் சில இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளன என்பதை உறுதி செய்துள்ள இலங்கையின் கணிணி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு நிலையம் எனினும் எனினும் தரவுகள் எவையும் திருடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.certc-300x143.jpg
பலதரப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வெறுப்பை தூண்டும் செய்திகளை பரப்புவதுமே இந்த சைபர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் நோக்கம் என இலங்கையின் கணிணி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் தெரிவித்துள்ளார்.cyber-attack1-2.jpg
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்ககூடாது என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளோம்,இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/44380

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சைபர் தாக்குதலுக்கு அறிவுறுத்தலை பின்பற்றாமையே காரணம்’ – கமல் தெரிவிப்பு

 

Add-a-subheading-1-4.jpg?189db0&189db0

 

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே, அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு காணப்படுகின்றது. அத்துடன், விமானப்படையினரின் கணினிப்பிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயலாற்றுகின்றன.

இந்த நிலையில், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கியுள்ளது.

பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதனை பின்பற்றியுள்ளன. எனினும், ஒரு சிலர் அதனை பின்பற்றவில்லை. உரிய நேரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாக குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாக நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

https://newuthayan.com/சைபர்-தாக்குதலுக்கு-அறி/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.