Jump to content

உலகத்தில் இல்லாத நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறுகின்றது : மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் - மாவை

Recommended Posts

(எம்.நியூட்டன்)

மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதே, எமது வேண்டுகோள் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தெல்லிப்பளையில் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ்.மாவட்டத் தலைவர் பிருந்தாபன் தலைமையில் நடைபேற்றது. அங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

மக்கள் பிரதிநிதியாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கச் சென்றமையை தடுத்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களை தனிமைப்படுத்த முயற்சித்தமையையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றிருந்தது,

நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற முன்னாள் முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன் மற்றும் பல மக்கள் பிரதிதிகள் இராணுவத்தினரின் சோதனை நிலையங்களில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் நினைவேந்தலுக்காக சென்றதை தடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது. மனிதாபிமான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உலகத்தில் இல்லாத நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறுகின்றது. சர்வதேசம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் உள்ள நிலையில் இலங்கையில் யுத்த கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

ஆனால் இன விடுதலைக்காக பலியானவர்களை நினைவு கூர தடை எற்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்க முடியாது என்றால் நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/82300

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

மக்கள் பிரதிநிதிகள் நினைவேந்தலுக்காக சென்றதை தடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது. மனிதாபிமான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் அனுமதிக்கவில்லை. எல்லாம் முடிந்தபின் அனுமதிக்கவேண்டும் என்பதில் பயனில்லை. எமக்கு அஞ்சலி செலுத்த உள்ள உரிமையை சட்டம்பிகளால் நிரம்பிவழியும் கூட்டமைப்பு நீதிமன்றம்   நாடி உறுதிசெயுங்கள். ஆயுத கிளர்ச்சி நடத்திய JVP யினால் ஒவொரு வருடமும் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படட ரோஹன விஜேவீரவுக்கு அஞ்சலி வைக்க முடியுமாயின் எங்கள் மக்கள் தங்களது உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி  உரிமை ஏன் மறுக்கப்படுகின்றது என்பதை நீதி மன்றில் கேளுங்கள்.நீங்கள் வலிகாமம் காணி தொடர்பாக வழக்கு போட்டபோது நாமும் உதவினோம். இப்போதும் இந்த விடயம் தொடர்பாக உதவுவோம். செய்வீர்களா அல்லது வழமை போல தேர்தல் கண்கொண்டு வெறும் பேச்சா ?

ஆயுத போராடடம் ஓய்ந்து நல்லிணக்கம் என்று பம்பரம் ஆடிய பின்னரும் பழைய பல்லவி என்றால் நாடு எப்படி உருப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, puthalvan said:

நியாயமான கேள்வி... புதல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ampanai said:

மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதே, எமது வேண்டுகோள் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உங்களைப்போலை அரசியல்வாதிகளாலைதான் சிங்கள அரசுகளுக்கு தமிழ்மக்கள் மேலை இருந்த பயபக்தி மரியாதை எல்லாம் துலைஞ்சு போச்சுது. சிங்கள ஏரியாவிலை கடைவைச்சிருக்கிற தமிழ் முதலாளிகளுக்கு இருக்கிற மானம் மரியாதை மதிப்பு கூட உங்களுக்கு இல்லை. நீங்களும் உங்கடை கூட்டு மேளங்களும் பாராளுமன்றத்திலை எதை பேசினாலும் சிங்கள அரசியல்வாதிகள் காது குடுத்தே கேட்கிறார்கள் இல்லை. முந்தி தெமில எண்டாலே ஒரு பயம் இருந்தது. அதையெல்லம் கெடுத்த மனிசரெண்டால் நீங்களும் சம்பந்தரும் தான். நீங்கள் தான் சூடு சுரணை இல்லாத ஆக்கள் எண்டு பாத்தால் கூட மாட வைச்சிருக்கிறதும் சரியில்லை......அதுதான் சு..சு.....சு 😁

இருந்துகளும் சரியில்லை.....வந்ததும் சரியில்லை 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.