Sign in to follow this  
நந்தி

அறம் கூற்றாகலியே ஏன் ?

Recommended Posts

அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார்.

கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ?  இல்லை, அறனும் கொலையானானோ ?

பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று      பால்குடி மழலை எல்லாம்

முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன்.

அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார்

அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே

அநீதிக்கு ஆட்சியும்  நீதிக்குப் பாடையும்  ஆண்டவா நீதி எங்கே உந்தன்            அருள் ஆட்சி செத்ததிங்கே .

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, நந்தி said:

அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார்.

--------

அநீதிக்கு ஆட்சியும்  நீதிக்குப் பாடையும்  ஆண்டவா நீதி எங்கே உந்தன்            அருள் ஆட்சி செத்ததிங்கே .

"அரசன் அன்றறுப்பான்... தெய்வம் நின்றறுக்கும்" என்பார்கள்.
சீனாவுடனான  இலங்கையின் நெருங்கிய உறவு,  
ஸ்ரீலங்காவின் பொருளாதார நெருக்கடி போன்றவை மூலம்... 
இலங்கை... பாரிய விளைவுகளை சந்திக்கும் என்றே... எனது மனம் சொல்கின்றது.

உலகின் பெரும் வல்லரசு நாடுகளே... அண்மையில் "வெலவெலத்து"ப்  போய் நிற்பதை... 
இப்போ காண்கின்றோம். அதில்... இலங்கை எம்மாத்திரம்? 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"  அரசியல் தமிழர்க்கு மட்டும்தானே பிழையாய் கிடக்கு. அதனால்தான் கூற்றாவில்லையோ தெரியாது.....ம்.....இதுவும் கடந்து போகும் நந்தி.....!   🤔

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்ட பின்னராக, அதன் வெளிவிவகார கொள்கையில் நீண்ட கால அடிப்படையில் சீனா ஒரு எதிரியாக நிச்சயமாக பார்க்கப்படும். சீனாவின் முன்னைய தலைவர் அதை ஒரு பொருளாதார வல்லரசாக மாற்ற திட்டங்களை போட்டார். அந்த வெற்றியில், தற்போதைய சீன கம்னியூஸ்ட்  ஆட்சியாளர்கள், தங்களை முதலில் ஆசியாவிலும் பின்னர் உலகிலும் வல்லரசாக முயன்று வருகின்றனர்.  இடையில் வந்தது/உருவாக்கப்பட்டது கோவிட் 19. எதுவானாலும், அது சீனாவின் திட்டங்களில் சடுதியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சீனா, தான் முன் வைத்த காலை பின் வைக்க தயாரில்லை - ஆசியாவில் ஒரு வல்லரசே இருக்க முடியும்.  இந்தியா தான் அதை ஒன்றில் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை .....     
    • குசினி - அறிவால் உருவானது வாசினி - பெண்குதிரை  
    • கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை.     இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில் முரண்பாடு கூடத்தான் செய்கிறது. ஆனால், ஏற்கனவே ஆரோக்கியமாக இயங்கி வந்த குடும்பங்கள் இப்போது மிகவும் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிறன. குடும்பங்களுக்கிடையே முரண்பாடுகள் பெரியளவுக்கு அதிகரிக்காவிடினும், குடும்பங்கள் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். எங்களது குடும்ப கட்டமைப்புக்கள் இன்னும் சிதைந்து போகவில்லை.எங்களுடைய கலாச்சாரத்தில் குடும்ப கட்டமைப்பு என்பது இறுக்கமானதாகவும் வலுவானதாகவும் பாதுகாப்பை தரக் கூடிய அரணாகவும் இன்னமும் இருக்கின்றது என்பது உண்மை தான். நீண்டகாலமாக நடந்த போரில் எம் மக்களுக்கு தாங்குதிறனும் அதிகரித்துள்ளது.இதனால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தன்மையும் உள்ளது. எங்கே குடும்பம் சிதையாமல் இறுக்கமாக ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு தொழிற்படுகின்ற குடும்பமாக இருக்கும் குடும்பங்களில் சுனாமிக் காலங்களிலும் சரி யுத்த காலத்திலும் சரி இப்போதும் சரி பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. http://www.nimirvu.org/2020/05/blog-post_27.html