Jump to content

அறம் கூற்றாகலியே ஏன் ?


Recommended Posts

அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார்.

கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ?  இல்லை, அறனும் கொலையானானோ ?

பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று      பால்குடி மழலை எல்லாம்

முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன்.

அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார்

அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே

அநீதிக்கு ஆட்சியும்  நீதிக்குப் பாடையும்  ஆண்டவா நீதி எங்கே உந்தன்            அருள் ஆட்சி செத்ததிங்கே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தி said:

அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார்.

--------

அநீதிக்கு ஆட்சியும்  நீதிக்குப் பாடையும்  ஆண்டவா நீதி எங்கே உந்தன்            அருள் ஆட்சி செத்ததிங்கே .

"அரசன் அன்றறுப்பான்... தெய்வம் நின்றறுக்கும்" என்பார்கள்.
சீனாவுடனான  இலங்கையின் நெருங்கிய உறவு,  
ஸ்ரீலங்காவின் பொருளாதார நெருக்கடி போன்றவை மூலம்... 
இலங்கை... பாரிய விளைவுகளை சந்திக்கும் என்றே... எனது மனம் சொல்கின்றது.

உலகின் பெரும் வல்லரசு நாடுகளே... அண்மையில் "வெலவெலத்து"ப்  போய் நிற்பதை... 
இப்போ காண்கின்றோம். அதில்... இலங்கை எம்மாத்திரம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"  அரசியல் தமிழர்க்கு மட்டும்தானே பிழையாய் கிடக்கு. அதனால்தான் கூற்றாவில்லையோ தெரியாது.....ம்.....இதுவும் கடந்து போகும் நந்தி.....!   🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.