Jump to content

எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

Recommended Posts

Kamal.jpg

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

2019 மே 19 ஆம் திகதி 30 வருட யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து முப்படையினரும், பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் வரை நாட்டில் ஒரு பயங்கரவாத சம்பவம் கூட நிகழாதை உறுதி செய்து அமைதியை பாதுகாத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியை சேர்ந்த 29 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் வெற்றிக்கான தங்களது நீண்ட பயணத்தின் போது 14 ஆயிரம் யுத்தவீரர்கள் வாழ்நாள் காயங்களை சந்தித்து சக்கர நாற்காலிகளுக்குள்ளும் கட்டில்களிற்குள்ளும் முடக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் நீடித்த இறுதிகட்ட வன்னி நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 900 படைவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். 29 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகி நிரந்தரமான கடும் காயங்களுடன் வாழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/எந்த-சக்தியும்-தேசிய-பாத/

Link to comment
Share on other sites

வடபகுதி மக்கள் தொடர்பில் படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வடபகுதியில் மக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமாக ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்குமாறு வடக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஆயிரத்தை நெருங்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மேலும் பொதுப்போக்குவரத்தும் இப்போது வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளதால் மக்கள் அதிகம் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அவசியமான தேவை கருதி வெளியில் செல்லுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா வைரஸ் அபாயம் இன்னும் நீங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அநாவசியமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143547?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, போல் said:
Kamal.jpg

முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியை சேர்ந்த 29 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் வெற்றிக்கான தங்களது நீண்ட பயணத்தின் போது 14 ஆயிரம் யுத்தவீரர்கள் வாழ்நாள் காயங்களை சந்தித்து சக்கர நாற்காலிகளுக்குள்ளும் கட்டில்களிற்குள்ளும் முடக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் நீடித்த இறுதிகட்ட வன்னி நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 900 படைவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். 29 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகி நிரந்தரமான கடும் காயங்களுடன் வாழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளால்.... ஸ்ரீலங்கா👨‍🏭 படையினருக்கு, ஏற்பட்ட   உண்மையான இழப்புக் கணக்கை காட்டிய, 
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவுக்கு.... நன்றி. :)

அப்பிடியே.... படையிலிருந்து  தப்பி 🏃‍♂️ ஓடியவர்களின் 👨‍🦽 கணக்கையும் 🧑‍🦼 காட்டுங்களேன்.
அது.... எத்தனை லட்சம்  என அறிய ஆவலாக உள்ளோம். :grin:

Link to comment
Share on other sites

56 minutes ago, போல் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது

சீனாவை தவிர!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே ஆபத்தானவர்கள். தண்டனை கிடைக்கும் வரை குற்றவாளிகளும் தம்மை பாதுகாக்க பலவாறு உளறத்தான் செய்வர். 

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

உங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்றால் என்ன? தமிழ் பேசும் மக்களை அடிமைகளாக முப்படைகளையும் கொண்டு நடாத்துவது என்றால், பௌத்த மேலாதிக்க சிந்தனை உள்ளவரை நீங்கள் மாறப்போவதும் இல்லை. 

ஆனால், நாட்டை 'அபிவிருத்தி ' என்ற பெயரில் சீனா, இந்தியா, அமெரிக்க, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கொடுத்து மக்களை கடனாளிகளாக மாற்றி விடுவதும் தேசிய பாதுகாப்பிற்கு பலமானதே 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Major General Sumetha Perera மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலரானார்.

இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் யாழ் இராணுவத்தளபதி ருவான் வணிகசூரிய வடக்கு ஆளுனராகின்றார்.

திருமதி சார்ள்ஸ், சுங்கத் திணைக்களத்தில் இருந்து கிளப்பவே, வடக்கு ஆளுநராக அனுப்பப்பட்டார். இனி வேறு உப்புசப்பில்லா வேலைக்கு அனுப்பப்படுவார்.

image_cd469e4da8.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.