Jump to content

11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறுகின்றது.

இன்றைய போர் வெற்றி விழாவில் 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இராணுவத்தினருக்கு வழங்கும் கௌரவமாக இந்தப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>வழமையாக இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள் என விமர்சையாக போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டாலும்கூட, கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் ஆடம்பரமில்லாது அமைதியான முறையில் போர் வெற்றி விழா கொண்டாடப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

http://thinakkural.lk/article/42369

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்ட இராணுவத்தினர்

IMG_9375.jpg

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக சுடரேற்றபட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக அக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சிலருடன், சுகாதார விதிமுறைகளை பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் எட்டு இராணுவத்தினர் ஏன் தீபம் ஏற்றுகின்றீர்கள் ? அதற்கு அனுமதி இல்லை உங்களை கைது செய்வோம் என மிரட்டி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைந்தனர்.

அதற்கு கட்சியின் செயலாளர் நாம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே அஞ்சலி செலுத்துகின்றோம். உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடையில்லை என கூறி அஞ்சலி நிகழ்வினை நடாத்தினார்கள்.

சிறிது நேரத்தில் அஞ்சலி நிகழ்வை முடித்து விட்டு , தீபத்தை அகற்றி விட்டு உள்ளே செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தியமைக்கு அமைவாக ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டு இருந்ததனால் , அதனை அணைக்காது , அது அணைந்த பின்னர் அதனை அகற்றுகின்றோம் என கட்சியின் செயலாளர் கூறி அவர்கள் அலுவலகத்திற்குள் சென்றுள்ளனர்.

அதனை அடுத்து அவ்விடத்தில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினரும் பொலிசாரும் சில நிமிடத்தில் இராணுவத்தினர் மட்டும் தமது ஜீப் ரக வாகனத்தில் திரும்பி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து அதனை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

இறந்தவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து அதனை தூக்கி வீசிய இராணுவத்தின் அநாகரிக செயற்பாடு உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களை அவமதிக்கும் செயற்பாடு. என கட்சியினர் தெரிவித்தனர்.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-19/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

(வேறொரு தலைப்பில் பதிந்த  இப் பதிவு, இங்கும் பொருந்துகின்றது என்பதால்... மீண்டும் இணைத்துள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இலங்கையில் இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இதுவே கடைசியாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ள முடியும் என ஆரம்பத்தில் எவரும் நம்பவில்லை - சரத் பொன்சேக்கா

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தை எம்மால்  வெற்றி கொள்ள முடியும் என  ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை.

ஆனால் எமது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையினால் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்க முடிந்தது.

இதற்காக யுத்தத்தில் அர்ப்பணிப்புடன் போராடிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கௌரவத்தை தெரிவித்துக் கொள்வதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் எவரும் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும் என்று நம்பவில்லை. எனினும் எமது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை என்பவற்றினால் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

இராணுவத்தில் 5200 வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர். சுமார் 3000 பேர் அங்கவீனமடைந்தனர். 15000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவ்வறான நிலையில் பெற்றுக்கொண்ட வெற்றியை கொண்டாட விரும்புகின்றோம்.

யுத்த வெற்றியைக்கொண்டாட விரும்புபவர்களுக்கும் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு அர்ப்பணிப்புடன் யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/82278?fbclid=IwAR0KJ4VmJHW8EPgA1yWQe8yPO7FGmArLyLqYyiAnXb37jfwDox9h4xiH1us

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ள முடியும் என ஆரம்பத்தில் எவரும் நம்பவில்லை - சரத் பொன்சேக்கா

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தை எம்மால்  வெற்றி கொள்ள முடியும் என  ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை.

ஆனால் எமது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையினால் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்க முடிந்தது.

இதற்காக யுத்தத்தில் அர்ப்பணிப்புடன் போராடிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கௌரவத்தை தெரிவித்துக் கொள்வதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் எவரும் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும் என்று நம்பவில்லை. எனினும் எமது அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை என்பவற்றினால் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

இராணுவத்தில் 5200 வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர். சுமார் 3000 பேர் அங்கவீனமடைந்தனர். 15000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவ்வறான நிலையில் பெற்றுக்கொண்ட வெற்றியை கொண்டாட விரும்புகின்றோம்.

யுத்த வெற்றியைக்கொண்டாட விரும்புபவர்களுக்கும் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு அர்ப்பணிப்புடன் யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/82278?fbclid=IwAR0KJ4VmJHW8EPgA1yWQe8yPO7FGmArLyLqYyiAnXb37jfwDox9h4xiH1us

ஜனாதிபதியின் யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

கொழும்பான் நீங்கள் மேலே குறிப்பிட்ட திரியில் எழுதிய கருத்து 
Posted 7 hours ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா .

இப்போது இந்த திரியில் வெற்றிப்பெருமித்தம் கொள்ளும் ராணுவ தளபதியின் உரையை பதிந்து உள்ளீர்கள்.

இரண்டு பதிவுகளையும் பார்க்கும் பொழுது நீங்கள் ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பவர் போலும், புலிகளின் தார்மீக போராட்டத்தை எதிர்ப்பவர் போலும் தான் நான் விளங்கி கொள்கிறேன்.
 
என்னுடைய விளக்கம் தவறு என்று புரிய வைப்பீர்களா? நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஜனாதிபதியின் யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

கொழும்பான் நீங்கள் மேலே குறிப்பிட்ட திரியில் எழுதிய கருத்து 
Posted 7 hours ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா .

இப்போது இந்த திரியில் வெற்றிப்பெருமித்தம் கொள்ளும் ராணுவ தளபதியின் உரையை பதிந்து உள்ளீர்கள்.

இரண்டு பதிவுகளையும் பார்க்கும் பொழுது நீங்கள் ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பவர் போலும், புலிகளின் தார்மீக போராட்டத்தை எதிர்ப்பவர் போலும் தான் நான் விளங்கி கொள்கிறேன்.
 

என்னுடைய விளக்கம் தவறு என்று புரிய வைப்பீர்களா? நன்றி 

ஐயா சசி வர்ணம்!
இப்பதான் உங்களுக்கு உண்மை முகம் தெரிய வெளிக்கிட்டதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

(வேறொரு தலைப்பில் பதிந்த  இப் பதிவு, இங்கும் பொருந்துகின்றது என்பதால்... மீண்டும் இணைத்துள்ளேன்)

இது நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ / 

2000ம் ஆண்டு ஆனையிற‌வில் ஓயாத‌ அலை மூன்று தாக்குலின் போது கையில் வைத்து இருந்த‌ துப்பாக்கிய‌ கீழ‌ போட்டு விட்டு சாவ‌ச்சேரி ம‌ட்டும் திரும்பி பார்க்காம‌ ஓடின‌ கோழை இராணுவ‌ம் / ஆயுத‌த்துட‌ன் நீண்ட‌ தூர‌ம் ஓட‌ ஏலாது தானே அது தான் சாலை ஓர‌ம் தூக்கி எறிந்து விட்டு ஓட்ட‌ம் எடுத்த‌வை   உயிர் த‌ப்பினா போதும் என்று 😁/

ஒரு இன‌த்தை ப‌ல‌ நாடுக‌ளின்  த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌  ஆயுத‌ம் மூல‌ம் அழித்து விட்டு , அத‌ற்கு பெய‌ர் வெற்றியாம்  😉/ ப‌ழைய‌ வ‌ர‌லாறை இவ‌ன் ம‌ற‌ந்து விட்டான் போல‌ , 

2007 கொழும்பில் இருந்து ப‌லாளிக்கு இவ‌ரும் ச‌ர‌த்பென்சேக்காவும் விமான‌ம் மூல‌ம் வ‌ந்து கொண்டு இருந்த‌ நேர‌ம் , பூன‌க‌ரியில் இருந்து போராளிக‌ள் கிட்டு பீர‌ங்கி மூல‌ம் ப‌லாளிய‌ அதிர‌ வைக்க‌ , உயிர் ப‌ய‌த்தில் விமான‌த்தை கொழும்புக்கு திருப்பி  விட‌ சொன்ன‌வ‌ன் இந்த‌ சொட்டை 😁 /

இவ‌ங்க‌ளால் ஒரு போதும் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இட‌ம் பிடிக்க‌ முடியாது /

இந்த‌ இன‌ வெறிய‌னுக்கு எம் என‌த்தை கூட‌ நின்று அழித்த‌வ‌னுக்கு  ஜ‌ல்ரா அடிக்கிற‌தும் பார்க்க‌ கோயில் வாச‌லில் பிச்சை எடுத்து பிழைக்க‌லாம் 😁

 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட‌வ‌ர் ஒரு க‌த‌வை பூட்டினா இன்னொரு க‌த‌வை திற‌ந்து தான் விடுவார் , எம் போராட்ட‌த்தில் ம‌டிந்து போன‌ மாவீர‌ செல்வ‌ங்க‌ள் மீண்டும் ம‌று பிற‌ப்பு எடுத்து வ‌ந்த‌தாய் தெரியுது / 

1998ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டில் பிற‌ந்த‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி எல்லாமே தெரியும் , அது ம‌ட்டும் அல்ல‌ ஆயுத‌ங்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌மும் தெரியும் , 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எம் போராட்ட‌த்தை த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொண்டு சேர்த்த‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கே / 

த‌லைவ‌ர் ம‌ட்டும் உயிருட‌ன் இருந்து இருக்க‌னும் , ம‌னுச‌ன் பெரிய‌ ஒரு கொரிலா தாக்குத‌லுக்கு த‌யார் ஆகி இருப்பார் , எங்க‌ட‌ க‌ஸ்ர‌கால‌ம் 2009ம் ஆண்டு இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம் 😓/  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ப‌ழ‌நெடுமாற‌ன் ஜயா சொன்ன‌து  தான் நினைவுக்கு வ‌ருது / சிங்க‌ள‌வ‌ன் த‌னிய‌ வ‌ந்து இருக்க‌னும் கொழும்பில் கூட‌ த‌மிழீழ‌ புலிக் கொடி ப‌ற‌ந்து இருக்கும் / 

த‌மிழீழ‌த்தை நேசிக்கும் பிள்ளைக‌ளுக்கு கோடி காசு பெரிசு இல்ல‌ , கொண்ட‌ கொள்கை தான் பெரிசு , 

உந்த‌ வெற்றி விழாவை சிங்க‌ள‌வ‌ன் எத்த‌ன‌ வ‌ருட‌த்துக்கு கொண்டாட‌ போகிறான் என்ற‌த‌ பொறுத்து இருந்து பாப்போம் /

ப‌ல‌ உற‌வுக‌ள் சொன்ன‌து மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ஒரு போதும் வீன் போகாது என்று , 

பொறுத்தார் பூமி ஆள்வார் 💪


 

Link to comment
Share on other sites

ஆயுதப் போராட்டம் சரியா தவறா அல்ல என்பது முதல் கேள்வி,

ஒர் இனத்தின் மீதான அடக்கு முறை சரியா தவறா என்பதே.

அதன் பின்னர் புரியும் உன் பிழையும் என் சரியும் 

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

சிறந்த ஒரு மனிதாபிமான கிரிக்கெட் வீரர் என தமிழ் இளைஞர்கள் ஒருதொகையினர் நம்பிக் கொண்டிருக்கும், நான் உட்பட, குமார் சங்கக்கார அவர்களின் நேற்றைய பதிவு இது.

“இந்த நினைவு நாளில், நம் தேசத்திற்காக தியாகத்தை செய்த துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் செலுத்துகிறோம். புனிதமான பிரார்த்தனையிலும் நன்றியுணர்விலும் நாங்கள் தலை வணங்குகின்றோம்”

தமிழர்களை “சிறிலங்கர்களாக” அணிதிரட்டும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இவ்வாறானவர்கள் தங்களை மனித நேயம் மிக்கவர்களாக அடையாளம் காட்டிக்கொண்டு. பௌத்த பேரினவாதத்திற்கு சந்தர்ப்பம் வரும் போது தவறாமல் முட்டுக்கொடுப்பவர்கள்.

இன்றோடு இவரையும் நான் நம்ப மாட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

ஜனாதிபதியின் யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

கொழும்பான் நீங்கள் மேலே குறிப்பிட்ட திரியில் எழுதிய கருத்து 
Posted 7 hours ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள் இந்த ஏழை மக்களுக்கு. 

சுமந்திரன், பிரபாகரன் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறியது ஒருவேளை இந்த துன்ப நிகழ்வை கருத்தில் கொண்டோ தெரியவில்லை. அதிலும் ஓரளவு உண்மயுண்டு.

உங்களை நம்மி வ‌ந்த எங்களை கடைசியில் இப்படியான நிலயில் விட்டிட்டு எல்லோரும் ஓடிவிட்டீர்களே ஐயா .


இது ஒரு சாதரணா ஏழைய தந்தையின் அழுகுரல், இது கூடவா விளங்கவில்லை. இதில் எங்கு தமிழ்தேசியத்தை எதிர்த்து எழுதியுள்ளேன்
 

 

இப்போது இந்த திரியில் வெற்றிப்பெருமித்தம் கொள்ளும் ராணுவ தளபதியின் உரையை பதிந்து உள்ளீர்கள்.

இச்செய்தி இங்கு இணைக்கப்ப்ட்ட காரணம் இது இத்திரிக்கு ஒரளவு தொடர்பான செய்தியா

இருந்தபடியினால்தான்
(இத்திரியின் 1ம், 2ம் செய்தியை பார்க்கவும்) மற்ற‌படி ராணுவத்தை மகிமைப்படுத்த அல்ல. 

செய்திகளை இணைப்பவர்களை வைத்து அவர்களின் பண்பை எடை போடக்கூடாது. தமிழ்தேசிய செய்திகளை இணைபாவர்கள் எல்லாம் தேசிய உணர்வுள்ளவர்கள் அல்ல, அதுபோல் இலங்கை அரசு சார்பான செய்திகளை இணப்பவர்கள் எல்லாம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

3 hours ago, Sasi_varnam said:

இரண்டு பதிவுகளையும் பார்க்கும் பொழுது நீங்கள் ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பவர் போலும், புலிகளின் தார்மீக போராட்டத்தை எதிர்ப்பவர் போலும் தான் நான் விளங்கி கொள்கிறேன்.
 
என்னுடைய விளக்கம் தவறு என்று புரிய வைப்பீர்களா? நன்றி 

 

2 hours ago, குமாரசாமி said:

ஐயா சசி வர்ணம்!
இப்பதான் உங்களுக்கு உண்மை முகம் தெரிய வெளிக்கிட்டதே?

என்னைபற்றி ஒன்றுமே தெரியாது உடன் நீங்களே உங்க‌ள் மனதில் எடுத்த முடிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, colomban said:

இப்போது இந்த திரியில் வெற்றிப்பெருமித்தம் கொள்ளும் ராணுவ தளபதியின் உரையை பதிந்து உள்ளீர்கள்.

இச்செய்தி இங்கு இணைக்கப்ப்ட்ட காரணம் இது இத்திரிக்கு ஒரளவு தொடர்பான செய்தியா

இருந்தபடியினால்தான்
(இத்திரியின் 1ம், 2ம் செய்தியை பார்க்கவும்) மற்ற‌படி ராணுவத்தை மகிமைப்படுத்த அல்ல. 

செய்திகளை இணைப்பவர்களை வைத்து அவர்களின் பண்பை எடை போடக்கூடாது. தமிழ்தேசிய செய்திகளை இணைபாவர்கள் எல்லாம் தேசிய உணர்வுள்ளவர்கள் அல்ல, அதுபோல் இலங்கை அரசு சார்பான செய்திகளை இணப்பவர்கள் எல்லாம் தமிழ் 

என‌க்கு தெரிந்து இந்த‌ செய்தி இணைத்த‌ உடையார் ஜ‌யா நூற்றுக்கு நூறு த‌மிழ் தேசிய‌வாதி , இந்த‌ திரியில் க‌ருத்து எழுதின‌வ‌ர்க‌ளும் த‌மிழ் தேசிய‌வாதிக‌ள் தான் / 


போராட்ட‌ உண‌ர்வு மாவீர‌ர்க‌ள் மீது உள்ள‌ ப‌ற்று எப்ப‌வும் என‌க்குள்ளே இருக்க‌னும் என்று விரும்புவேன் ,  சில‌ ச‌மைய‌ம் க‌ய‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்தை த‌லைவ‌ரை ப‌ற்றி கேவ‌ல‌மாக‌ எழுதுவ‌தை வேடிக்கை பார்க்க‌ முடியாது , அப்போது மெள‌வுன‌ம் க‌லைந்து த‌க்க‌ ப‌தில‌டி குடுக்க‌ நேரிடும் 😉💪

Link to comment
Share on other sites

இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இன்றைய போர் வெற்றி விழா நிகழ்வுகளில் டக்ளஸ் தேவானந்தா

98323362_711437069397650_104840423566789

Link to comment
Share on other sites

22 hours ago, உடையார் said:

இலங்கையில் இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஹிட்லரின் ஜெர்மனி எடுத்த முடிவுகளை அன்று அந்த மக்களும் தேச பக்தி என்றுதான் நம்பினார்கள்.  

Link to comment
Share on other sites

கப்டன் அன்புச்செல்வனையும் போர் தின்றது!
கப்டன் அபயசிங்கவையும் போர் தின்றது!

மே18
அன்புச்செல்வனின் தாயும் அழுகிறாள்!
அபயசிங்கவின் தாயும் அழுகிறாள்!

இரண்டு ஒப்பாரிகளும் வேறு வேறு மொழிகள்!
இரண்டு ஒப்பாரிகளும் வேறுவேறு இடங்கள்!

அபயசிங்கவும் அன்புச்செல்வனும் ஒரே நாளில் இறந்தார்கள்.
ஒரே இடத்தில் இறந்தார்கள்.
ஒரே போர்தான் அவர்களை தின்றது!

அபயசிங்கவின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது!
அன்புச்செல்வனின் கல்லறை இடித்து தூளாக்கப்பட்டது!

அபயசிங்கவின் தாயின் ஒப்பாரி தெளிவாய் கேட்கிறது!
அன்புச்செல்வனின் தாயின் ஒப்பாரி கேட்கவேயில்லை!

ஒரே நாட்டில்
ஒரே நாளில்
இருவேறு இடத்தில்...

இரண்டு இனங்கள் வலியால் துடிக்கின்றன!
இடையில் சிலர் குதூகலிக்கின்றனர்!!

போர் தின்ற மக்கள் கூடி அழ தடை!
ஏன் என்று கேட்டால் அவனுக்கும் தடை!

அபயசிங்கவின் அம்மா முள்ளிவாய்க்காலுக்கு வரவேண்டும்!

அன்புச்செல்வனின் அம்மா
அம்பாந்தோட்டைக்கு போகவேணும்!

அன்புச்செல்வனின் அம்மாவும்
அபயசிங்கவின் அம்மாவும்
சந்திக்கவேண்டும்!

வலிகளுக்கு மொழிகள் இல்லை!
வலிகளுக்கு இனம் இல்லை!
வலிகளுக்கு மதமும் இல்லை!

அன்புச்செல்வனின் அம்மாவின் கண்ணீரும் உப்புக்கரிக்கும்!
அபயசிங்கவின் அம்மாவின் கண்ணீரும் உப்புக்கரிக்கும்!

பெத்தவயிறு பத்தி எரிஞ்சு வாற கண்ணீர் ஒரே நிறம்!

சிவப்பு !!!!!

#தமிழ்ப்பொடியன் - 
முகநூல் பதிவாளர் 

 

Link to comment
Share on other sites

இன்றுவரை யாராவது ஒரு சிங்களத்தின் முக்கிய தலைவராவது தமிழர் படுகொலை குறித்து வருத்தமாவது தெரிவித்துள்ளாரா?

வரலாறு எம்மை விடுவிக்கும் என்பார்கள். ஆனால் ஏனோ தற்போதைய தமிழ்த் தலைமைகளிடம் அது மருந்திற்கும் கிடையாது. றோபேட் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி, அவனின் கப்பல் நவம்பர் 19 1659இல் கடல்சீற்றத்தில் மாட்டுண்டு இலங்கையில் கரையொதுங்கியது.

அவனுடன் கூடிய 16 பேர், அவன் தந்தை உட்பட கைதாகி கண்டியில் கண்டி அரசனால் சிறைவைக்கப்பட்டனர். அவன் தந்தை அங்கு இறந்து போக, 20 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் அவனும் சகா ஒருவனும் தப்பி, அரிப்பில் நிலைகொண்டிருந்த போத்துக்கேயரிடம் சென்று அவர்களுடாக பிரித்தானியா சென்றடைந்தனர். றோபேட் நொக்ஸ் 1681இல் எழுதிய 'Historical Relations of Ceylon' என்ற நூலில் பின்வரும் குறிப்பு ஒன்று உண்டு.

"They (Sinhala authorities) are craftily and treacherous to be trusted upon any professions, for their manner of speaking is very smooth and courteous in so much. THOSE WHO ARE UNACQUAINTED WITH THEIR DISPOSITION AND MANNERS MAY EASILY BE DECEIVED BY THEM. For they make an account of no conscience of lying, neither is it any shame or disgrace to them if they be catched in telling lies it is so customary".

அதாவது 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே, அன்பொழுகப் பேசி, ஆரத்தழுவி ஏமாற்றுவதில் வல்லவர்கள். வழமையாகவே பொய் சொல்வதில் வல்லவர்களான இவர்கள், அதில் மாட்டிக் கொள்ளும் போது, அதை அவமானமாகவோ இழிவாகவோ கருதாதவர்கள், என்கிறார் சிங்களத் தலைமைகள் குறித்து றோபேட் நொக்ஸ். இவர்களின் பண்புகளை முன்பின் தெரியாதவர்கள் இலகுவாக இவர்களிடம் ஏமாந்து விடுவார்கள் என்கிறார் மேலும்.

கடந்த 350 வருடங்களில் சிங்களத் தலைமைகள் அதில் எவ்விதத்திலாவது மாறிவிட்டார்களா? இவர்களை இவர்கள் பண்புகளை நன்கறிந்த நாம் தொடர்ந்தும் ஏமாறுவதன் விந்தைதான் என்ன? இதைத் தான் இணக்க அரசியல் என்ற சோரம் போதல் என்பதா? வரலாறு எம்மை விடுவிக்குமானால் இலவு காத்த கிளிகள் எம்மத்தியில் குறையும்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
 
மூலம் - முகநூல் பதிவு ஒன்றில் இருந்து சில மாற்றங்களுடன் 
 
Link to comment
Share on other sites

அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!> இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) - மனோ கணேசன் 

இன்று பெருந்தேசியவாதம், போர் வெற்றி விழாவை கொண்டாடுகிறது. சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டு சிந்தனையோட்டங்களின் ஊடாக தனது அரசியல், இராணுவ பலத்தை உறுதி செய்துகொள்ள இன்றைய ஆட்சி எதுவும் செய்யும். இந்த கொண்டாட்டமும் அதில் ஒன்றுதான்.

“பிறிதொரு அந்நிய நாட்டுடன் போர் செய்யவில்லை”, “உள்நாட்டுக்குள்ளேயே நடந்த போர்”, “இறந்து போனவர்களும் இலங்கையர்களே” என்ற வாதங்கள் எல்லாம், இங்கே எடுபடாது. இந்த இனவாத இறுக்கம்தான், இவர்களது இருப்புக்கு அடித்தளம். இதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

தமிழ் தேசியவாதம் போரில் மரணித்தோரை நினைந்து கதறி அழுகிறது. அஞ்சலி செலுத்துகிறது. போர் வெற்றி விழாவும், அஞ்சலி நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று ஈடு செய்பவையல்ல. ஒடுக்குவோரின் தேசியவாதமும், ஒடுக்கப்படுவோரின் தேசியவாதமும் ஒன்றுக்கொன்று சமமானவையல்ல.

இனி நாம், “இங்கே இருந்து எங்கே” என சிந்திக்க வேண்டும். வருடாந்த அஞ்சலி ஒன்று மட்டுமே எமது அரசியல் பயணம் ஆகிவிட முடியாது.

நடந்தவைகளுக்கான தீர்வுகளை தேடல், அதேவேளை, இதுபோன்ற அழிவுகள் மீண்டும் நிகழ்ந்துவிடாமலிருக்க வழி தேடல் ஆகிய இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரலாற்றில் தமிழினம் சரியான முடிவுகளையும், பிழையான முடிவுகளையும் ஒருசேர எடுத்துள்ளது. இந்த சரிகளுக்கும், பிழைகளுக்கும் ஒரு கட்சி, இயக்கம், தலைமை பொறுப்பேற்க முடியாது. இவை அனைத்தும் கடந்த சுமார் 80 வருட நிகழ்வுகளின் சங்கிலி தொடர் தொகுப்பு.

இனி, நிகழ்ந்துவிட்ட பிழைகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். எடுத்த சரியான முடிவுகளை இன்னமும் வலுப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!

இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) - மனோ கணேசன்

 

இனவாதம்

சாத்தான், வேதம் ஓதும் கதையாக, கொழும்பிலே நெல்சன் மண்டேலாவின் பாரிய சிலையை அமைக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலாவின் வாழ்வில் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் உள்ளன.

ஒன்று, அவர் ஆயுத போராட்டவழிமுறையை ஒருபோதும் நிராகரிக்கவில்லை. “அரச பயங்கரவாதமே எங்களை ஆயுதம் தூக்க வைத்தது” என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

28 வருடங்கள் சிறையில் இருந்த அவரிடம், “ஆயுத வழிமுறையை பகிரங்கமாக நிராகரித்தால், விடுவிக்கப்படுவீர்கள்” என வெள்ளை அரசு பேரம் பேசியும் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்.

இரண்டாவது, கடைசியில் விடுவிக்கப்பட்டு, சுதந்திர தென்னாபிரிக்க அரசதிபராக அவர் பதவியேற்றதும், அவரது ஏஎன்சி கட்சிக்குள்ளே, “வெள்ளையரை பழி தீர்ப்போம்” என்ற கருத்து வலுவாக எழுந்தது.

எப்படி ஆயுத வழிமுறையும் ஒரு போராட்ட வடிவம் என்பதை மறுக்க அவர் உறுதியாக மறுத்து விட்டாரோ, அதேபோல், வெள்ளை சர்வாதிகார அரசுக்கு பதில் கறுப்பு சர்வாதிகார அரசை நிறுவி பழி தீர்க்கவும் அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.

ஆகவே அவர் இன்றும், என்றும், மனிதரில் மாணிக்கமாக எங்கள் மனங்களில் வாழ்கிறார். வாழ்ந்து உலகிற்கு வழி காட்டுகிறார்.

தென்னாபிரிகாவின் பக்கத்து நாடான சிம்பாப்வேயும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி விடுதலை பெற்ற நாடுதான். ஆனால், முன்னால் போராளியான அந்நாட்டு அதிபர் ரொபர்ட் முகாபே தனது நாட்டை, வெள்ளையரை பழி தீர்க்கும் பாதையில் அழைத்து சென்றதால், இன்று நாடு குட்டிச்சுவராகி இருக்கிறது.

ஒரு விடுதலை போராளியாக உருவெடுத்த ரொபர்ட் முகாபே உலக சரித்திரத்தில் கரும்புள்ளியாக இடம் பெற்று இறந்து போனார். சிம்பாப்வே நாடு ஒதுக்கப்படுகிறது.

மியான்மர் நாட்டு பிரதமர் ஆங் சன் சூகியின் நிலைமையும் இதுதான். ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் மீதான மியான்மார் பெளத்த இராணுவ வெறியாட்டத்தை கண்டிக்க தவறியும், படுகொலைகளை மறுத்தும் அவர் அவர் எடுத்துள்ள புது வடிவம், அவர் மீது உலகம் கொண்டிருந்த மரியாதையை இழக்க செய்துள்ளது.

கனடாவும், சர்வதேச மன்னிப்பு சபையும் அவருக்கு வழங்கியிருந்த விருதுகளை வாபஸ் வாங்கி விட்டன. அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசும் திரும்ப பெறப்பட வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. மியான்மர் மீண்டும் ஒதுக்கப்படுகிறது.

ஆகவே இனவாதம் தோல்வியடையும். அதில் சந்தேகம் இல்லை.

இலங்கை தீவில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன்தான் நாம் வாழ போகிறோம். இதில் மாற்றுக்கருத்து உள்ளவர்களுடன் வாதிட நான் தயாரில்லை.

ஆகவே சிங்கள மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். கஷ்டமான காரியம் என்றாலும், சிலர் நினைப்பது போல் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை. 1994, 2001, 2015 ஆகிய காலகட்டங்களில் கணிசமான சிங்கள மக்கள் சமாதானம், சகவாழ்வு என்ற முகாம்களுக்கு வந்தார்கள்.

இன்றைய அரச பெருந்தேசியவாதம்தான், சிங்கள பெளத்தத்தின் அதியுயர் உச்ச கட்டம். இனி மேலே போக இடமில்லை.

ஆகவே அரசியல், பொருளாதார, சமூக, உலக, இயற்கை காரணங்கள் காரணமாக, சிங்கள மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, இது உடைந்து நொறுங்கும். அதற்கு மாற்று அரசு இதுபோல் வராது.

அப்போது முற்போக்கு, ஜனநாயக சிங்கள மக்களுடன் சேர்ந்துக்கொள்ள நாம் தவற கூடாது. அதுவரை “ஒரே இலங்கை, பல மொழிகள், பல மதங்கள், பல இனங்கள்” என்ற சகவாழ்வுக்கான பரப்புரையை செய்துவர மறக்கவும் கூடாது.

Link to comment
Share on other sites

அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!

இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) - மனோ கணேசன்

 

இடைவெளி

2015க்கு பிறகு நம் கொண்டு வந்த நல்லாட்சியின் மீது பெரும் குற்றப்பட்டியல் இருக்கிறது.

இந்த புதிய ஆட்சி வந்த புதிதில், அந்த குற்றப்பட்டியலை ஆளுகின்ற அரசுக்கு சமனாக, தமிழ், முஸ்லிம் பெருங்குடி மக்களில் ஒரு பிரிவினரே பெரிய எடுப்பில் வாசிக்க தொடங்கினார்கள். இப்போது அந்த வாசனை கொஞ்சம் ஓய்ந்து போய் விட்டது.

என்னிடமும் ஒரு பட்டியல் இருக்கிறது. அது சாதனை பட்டியல். அதில் முதலில் இருப்பதுதான், இடைவெளி என்ற SPACE.

அஞ்சலி செய்ய, கூட்டம் நடத்த, ஆர்ப்பாட்டம் செய்ய, கடையடைப்பு நடத்த, ஊர்வலம் செல்ல, கேள்வி கேட்க என்று பல்வேறு ஜனநாயக உரிமைகளை படிப்படியாக தேசிய பரப்பில் கொண்ட வந்து நாம் குவித்தோம்.

அவை இயல்பாக தமிழர் பரப்பிலும் பயன்படுத்தப்பட்டன. இன்று மீண்டும் 2015க்கு முந்தைய இறுக்கம் தலை காட்டுகிறது.

ஆகவே அந்த ஜனநாயக இடைவெளியை பாதுகாக்க, நாடு முழுக்க போராட தயாராகும், ஜனநாயக சக்திகளுடன் நாமும் கரம் கோர்ப்போம்.

Link to comment
Share on other sites

அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!

இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) - மனோ கணேசன்

 

உலகம்

2009ன் இந்த மாதத்தில் நடைபெற்ற போரை சாட்சியமில்லாத போராக இலங்கை நடத்தி முடித்து விட்டது. இதற்கு உலகம் துணை போனது. இதுதான் உண்மை.

இறுதி தினங்களில், உள்நாட்டு தமிழர்களின் அழுத்தம் காரணமாக, பிரிட்டிஷ், பிரான்சிய வெளிவிவகார அமைச்சர்கள் இங்கே வந்து யுத்தத்தை நிறுத்துங்கள் என ஜனாதிபதி மஹிந்தவிடம் சொன்னார்களே தவிர, உலகம் முழுக்க இலங்கை அரசின் யுத்த முனைப்பின் பக்கமே இருந்தது.

ஆகவே மஹிந்த இவர்களை கணக்கில் எடுக்கவே இல்லை. மில்லிபேன்ட், குச்னர் ஆகிய இருவரையும், மகிந்த கொழும்பில் சந்திக்காமல், தனது ஊருக்கு வரவழைத்து, ஒரு விடுமுறை கூடாரத்தில் சந்தித்தார்.

இவர்கள் இருவரும் கடைசியில், “நாங்கள் பிரபாகரனை காக்க வரவில்லை. மக்களை காக்கத்தான் வந்தோம்” என வாக்குமூலம் கொடுத்தார்கள். "அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று மகிந்த கூற, அன்றைய அந்த சோக சூழலில் சிரிப்பு காட்டிவிட்டு, அவர்கள் இருவரும் போயே போய் விட்டார்கள்.

இன்னொரு சிரிப்பு நடிகர் கூட்டமும் இருந்தது.

அரசுடன் போரில் ஈடுபட்டிருந்த புலிகளுக்கு முழுமையான எதிர்ப்பு நிலைபாட்டை இந்திய மத்திய அரசு எடுத்திருந்தது.

இதற்குள், தமிழக அரசியல்வாதிகள் என்ற இன்னொரு சிரிப்பு நடிகர் கூட்டமும், அந்த சோக சூழலில் சிரிப்பு காட்டியது. இவர்களினால் ஒருகாலத்தில் பயன் இருந்ததுதான். பின்னாளில் அது மறைந்தது.

விடுதலை புலிகள் உட்பட, இலங்கை தமிழ் அரசியலர்கள் அந்த கடைசி தருணங்களில் தொலைபேசியில் அழைத்து பேசும் அளவுக்கு இவர்களை அதீதமாக நம்பி ஏமாந்த கதை நீண்டது.

உலகில் எதிரெதிர் தரப்புகளில் இருக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதல் கம்யூனிஸ்ட் கியூபா வரை எல்லோருமே தங்கள் முரண்பாடுகளை மறந்து விட்டு, இலங்கை அரசின் பக்கம் நின்றன.

இதை இலங்கை அரசு எப்படி சாத்தியமாக்கியது என நிதானமாக சிந்திக்க வேண்டும்.

மேலே சொன்ன உலக நாடுகள் அனைத்தும் சுத்தமானவையல்ல. ஆனால், உலக ஒழுங்கு (World Order) என்ற ஒன்று இருக்கிறதே!

நாம் மட்டும் என்ன? ரொம்ப சுத்தமானவர்களா? நமக்கு நமது நலன் முக்கியம். அவர்களுக்கு அவர்கள் நலன் முக்கியம். இரண்டு நலன்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் வாய்ப்புகளை வரலாறு தந்தது. நாம் தவற விட்டோம்.

இனியும் அப்படி வாய்ப்புகள் வரும். அவற்றை நாம் தவற விடக்கூடாது.

குறிப்பாக இந்திய மத்திய அரசு முக்கியமானது. அதை மீறி இந்த பிராந்தியத்தில் எதுவும் நடை பெறாது. அங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு அதன் நட்பு முக்கியமானது என்ற அடிப்படை உண்மைகளை முட்டாள்தனமாக மறக்க கூடாது.

Link to comment
Share on other sites

அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!

இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) - மனோ கணேசன்

ஒற்றுமை

போராட்டத்தின் இலக்கை எப்படியும் வரையறுக்கலாம். ஆனால், வன்முறை, போர், போராட்டம் என்று வரும்போது, அது வடக்கு கிழக்கு என்று வரையறை செய்ய முடியாது. நாடு முழுக்க அதன் தாக்கம் இருந்தது. நிகழ்ந்தது.

வடக்கில் சென்று குடியேறிய மலையக பூர்வீக தமிழர்களையும் போராட்டமும், போரும் உள்வாங்கின. மாவீரர்களாக கணிசமான மலையக தமிழர் பங்களித்துள்ளனர். அவர்களின் பெயர்களை அறிவிக்கும் போது, அவர்களின், சொந்த ஊரின் பெயர்களை அறிவிக்க வேண்டாம். அது அங்கே வன்முறையை ஏற்படுத்தும், என அப்போது புலிகள் பொறுப்புடன் முடிவெடுத்திருந்தனர். இது எனக்கு தெரியும்.

இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்கால் வரை புலிகளுடன் சென்று மாண்டவர்களில், மீண்டவர்களில், வன்னியில், கிளிநொச்சியில் வாழ்ந்த மலையக பூர்வீக தமிழர்கள் கணிசமாக இருந்தனர். இருக்கின்றனர்.

இந்த வரலாற்று உண்மையை நாம் மறக்க கூடாது. அந்த இன ஒற்றுமையை அழித்து விட முனைய கூடாது.

 

அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!

இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) - மனோ கணேசன்

போராட்ட வடிவம்

போராட்ட வடிவங்கள் காலத்துக்கு காலம் மாறும். ஆகவே அதை, இதை ஏற்கிறீர்களா, இல்லையா என நாம் சண்டையிட்டு காலத்தை வீணடிக்க கூடாது.

“அரச பயங்கரவாதமே எங்களை ஆயுதம் தூக்க வைத்தது” என்ற நிலைபாட்டை கொண்ட, நெல்சன் மண்டேலாவுக்கு இலங்கை அரசே சிலை எடுக்கிறதே! அப்புறம் என்ன?

சிலருக்கு ஆயுத போர் வடிவம் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது. ஆனால், அது ஒரு போராட்ட வடிவம். அதை தீர்மானிப்பது, அடக்குமுறையாளர்களே என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

"வருடாந்த அஞ்சலி ஒன்று மட்டுமே எமது அரசியல் பயணம் ஆகிவிட முடியாது" - மனோ கணேசன்

தமிழ் தேசியம் மீது பற்றுள்ள அனைவரும் இதை பொதுவாக ஏற்றுக்கொள்ளும் கருத்து. ஆனால்,

-  இங்கிருந்து அடுத்த கட்டம் என்ன? எப்படி பயணிப்பது? 
-  எது சரியான பாதை? எப்படி தீர்மானிப்பது ? 
-  யாருடன் பயணிப்பது? யார் தலைமை தாங்குவது?  
-  நம்ப நட, ஆனால் நம்பி நடவாதே 

மனோ கணேசன் அவர்களின் பதிவில் இருந்து, எமது கொள்கை வகுப்பிற்கு தேவையானது இது :: 

  • உலகில் எதிரெதிர் தரப்புகளில் இருக்கும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதல் கம்யூனிஸ்ட் கியூபா வரை எல்லோருமே தங்கள் முரண்பாடுகளை மறந்து விட்டு, இலங்கை அரசின் பக்கம் நின்றன. இதை இலங்கை அரசு எப்படி சாத்தியமாக்கியது என நிதானமாக சிந்திக்க வேண்டும்.
  • மேலே சொன்ன உலக நாடுகள் அனைத்தும் சுத்தமானவையல்ல. ஆனால், உலக ஒழுங்கு (World Order) என்ற ஒன்று இருக்கிறதே! நாம் மட்டும் என்ன? ரொம்ப சுத்தமானவர்களா? நமக்கு நமது நலன் முக்கியம். அவர்களுக்கு அவர்கள் நலன் முக்கியம். இரண்டு நலன்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் வாய்ப்புகளை வரலாறு தந்தது. நாம் தவற விட்டோம். இனியும் அப்படி வாய்ப்புகள் வரும். அவற்றை நாம் தவற விடக்கூடாது.
  • குறிப்பாக இந்திய மத்திய அரசு முக்கியமானது. அதை மீறி இந்த பிராந்தியத்தில் எதுவும் நடை பெறாது. அங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு அதன் நட்பு முக்கியமானது என்ற அடிப்படை உண்மைகளை முட்டாள்தனமாக மறக்க கூடாது.
Link to comment
Share on other sites

புலிகளை சிங்களம் அநீதியான முறையில் வென்று 11 ஆண்டுகள் முடிந்துவிட்டது. 

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் தொடக்கம் சிங்கள ஊடகவியலார்கள், கல்விமான்களை, சமூக ஆர்வலர்கள்  என உள்ளடக்கி அநேகமானோர் இன்றும் சாதாரண தமிழ் மக்களுடன் தோழமை உணர்வுடன் பழகவில்லை. மாறாக சிங்கள மக்களை ஒரு பாசிச மனநிலைக்குள் வைத்துள்ளார்கள். .

புலிகள் அழிக்கப்பட்டு விட்டவுடன் "பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள்" என்ற அடிப்படையில் சிங்கள மக்கள் இன ஐக்கியத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் தயாராகியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆக, இவர்கள் எப்படிப்பட்ட இனம் என மீண்டும் கற்றுள்ளோம்.  

ஆக, விடுதலைப்புலிகளால் தான் தீர்வு கிடைக்கவில்லை என்றும் இல்லை சிங்களவன் நல்லவன், தீர்வை தருவான் என நம்பும் தமிழ் பேசும், முஸ்லீம்கள் தலைவர்கள் உட்பட, அந்த வட்டத்திற்கு வெளியே வந்து தீர்விற்கான தேடுதல்களை முன்னெடுக்கவேண்டும்.   

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.