Jump to content

புத்தளத்தில் மாதா சொரூபம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Recommended Posts

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் சிலையின் கண்ணாடிக் ௯ண்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (19) மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/143606

Link to comment
Share on other sites

கோட்டாவின் கைங்கரியம், இன்னும் தொடரும் .

Link to comment
Share on other sites

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

Link to comment
Share on other sites

17 hours ago, Rajesh said:

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று, பாதுகாப்பு செயலாளர் நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலையும் நடாத்தும் சாத்தியங்கள் இல்லை என்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2020 at 03:13, Vankalayan said:

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

அப்ப  உங்களுக்கு உடைத்தவர்கள்  யார் என்று தெரியுமாக்கும் ?

***

Link to comment
Share on other sites

***

18 hours ago, Gowin said:

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

நான் நினைக்கிறன் யாராவது இந்து பஸ் ஏறி புத்தளம் போய் சிலை உடைத்திருப்பான் என்று ஒரு விளக்கம் வந்தாலும் வரலாம்.🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

On 19/5/2020 at 19:40, Rajesh said:

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாதிரி செயல்கள் கண்டிக்கப்பட வேணும்!

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Vankalayan said:

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

அப்படி இல்லை யாராவது ஓர் சைவதமிழன் உடைச்சிருப்பான் அப்படித்தானே வங்கேலான்🤣

சாமி கூட கல்லெறி வாங்கும் நாடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Gowin said:

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

ஒரு சிறு திருத்தம் சிங்கள கிறிஸ்தவர்களும் ,முஸ்லீம்களும்,சிங்கள பெள்த்தர்களும்,சிறிய அளவில் இந்துக்களும்  வாழ்கின்றன்ர்

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி இல்லை யாராவது ஓர் சைவதமிழன் உடைச்சிருப்பான் அப்படித்தானே வங்கேலான்🤣

சாமி கூட கல்லெறி வாங்கும் நாடு 

நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

12 hours ago, பெருமாள் said:

அப்ப  உங்களுக்கு உடைத்தவர்கள்  யார் என்று தெரியுமாக்கும் ?

ராணுவம் செய்ததென்று எப்படி முடிவெடுக்கலாம். அங்கு முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோருமே சீவிக்கிறார்கள். ராணுவம் செய்வதட்கு எதாவது நோக்கம் இருக்கிறதா? எனது கருத்து ராணுவத்தை எடுத்த எடுப்பில் குற்றம் சாடியதட்காகவே. அவர்கள் செய்திருக்கமாட்ட்டார்கள் என்று சொல்லவில்லை.

இங்கு அநேகமானோர் எதிர்மறையாக சிந்திப்பதால்தான் பிரச்சினையே உருவாகின்றது. நான் எந்த ஒருவரையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கவில்லை. நீங்களாகவே தீர்மானித்து முடிவுக்கு வரும்போது நான் என்ன செய்ய முடியும்?

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

முடிவெடுத்த நீங்கள் தானே அண்மையில் தென்பகுதிகளில் புத்தர்சிலைகளை உடைத்தவர்களை பிடித்திருக்கிறார்கள் விசாரணையும் போகிறது இவர்களையும் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அப்போ தெரியும் 

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிவெடுத்த நீங்கள் தானே அண்மையில் தென்பகுதிகளில் புத்தர்சிலைகளை உடைத்தவர்களை பிடித்திருக்கிறார்கள் விசாரணையும் போகிறது இவர்களையும் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அப்போ தெரியும் 

நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?

உங்களின் ஊகத்தை சொன்னேன் அவ்வளவுதான் 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 02:38, Vankalayan said:

முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என

ஒரு முஸ்லீம் சைவமாக முடியாது அதே போல் பவுத்தன் சைவமாக முடியாது இன்னும் ஏன்  .இந்த அல்லோயாவும் ஜேகோவும் நினைத்தே  பார்க்க முடியாது. 

ஆனால் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது அல்லுலோயா அல்லது ஜெகோவா போன்றவர்களால் முஸ்லீம் ஏரியாவில் போய்  மதம் மாறச்சொல்லி  கேட்க்க முடிவதில்லை அதே போல் முஸ்லீம் களால் மேற் சொன்ன அந்த இரு கூட்டம்களுக்குள் போய்  தங்கள் மதத்தை  பரவ  முடியவில்லை ?

Link to comment
Share on other sites

50 minutes ago, பெருமாள் said:

நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன்.

பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன்.

பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 

சிலை வழிபாட்டை கேலிசெய்யும் அல்லேலூயா கூட்டம் இதை உடைத்திருக்கலாம்

அல்லது அல்லேலூயா கூட்டம் மீது பழி போடுவதற்காக பாவாடைக்கூட்டம் செய்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம், பணம் எதையும் செய்யும்..... ஒருத்தனின் வறுமையும், கடனும், கையறு நிலையும் கழுதையிடம் கூட அடிமையாய் நிக்க வைக்கும்.....!   

Link to comment
Share on other sites

Police identify man who damaged religious statues

May 21, 2020, 10:20 pm  The Island
 
The Puttalam police have identified the man who has been attacking Christian religious statues in Puttalam and Palaviya in recent days.

The suspect had been identified with CCTV footage.

The suspect has damaged the statues at the St. Mary’s Church in Puttalam and Sacred Heart Church at Palaviya.

The suspect, who was once a Catholic, had converted to a denomination that doesn’t believe in the use of statues. He has also attacked two Christian statues previously and had been arrested. (RK)

தமிழில் சுருக்கமாக:

புத்தளம் மேரீஸ் ஆலயத்தில் சிலை உடைத்தவர் முன்னர் கத்தோலிக்கராக இருந்து பின்னர் அல்லேலூயா ஆனவர். அல்லேலூயாக்கள் சிலைகளை வழிபடுவதில்லை.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=222595

Link to comment
Share on other sites

16 hours ago, MEERA said:

சிலை வழிபாட்டை கேலிசெய்யும் அல்லேலூயா கூட்டம் இதை உடைத்திருக்கலாம்

அல்லது அல்லேலூயா கூட்டம் மீது பழி போடுவதற்காக பாவாடைக்கூட்டம் செய்திருக்கலாம்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.