• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Rajesh

புத்தளத்தில் மாதா சொரூபம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Recommended Posts

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் சிலையின் கண்ணாடிக் ௯ண்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (19) மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/143606

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கோட்டாவின் கைங்கரியம், இன்னும் தொடரும் .

 

Share this post


Link to post
Share on other sites

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

Share this post


Link to post
Share on other sites

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Rajesh said:

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று, பாதுகாப்பு செயலாளர் நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலையும் நடாத்தும் சாத்தியங்கள் இல்லை என்கிறார். 

Share this post


Link to post
Share on other sites
On 20/5/2020 at 03:13, Vankalayan said:

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

அப்ப  உங்களுக்கு உடைத்தவர்கள்  யார் என்று தெரியுமாக்கும் ?

***

Share this post


Link to post
Share on other sites

***

18 hours ago, Gowin said:

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

நான் நினைக்கிறன் யாராவது இந்து பஸ் ஏறி புத்தளம் போய் சிலை உடைத்திருப்பான் என்று ஒரு விளக்கம் வந்தாலும் வரலாம்.🤣🤣🤣🤣🤣

Share this post


Link to post
Share on other sites
On 19/5/2020 at 19:40, Rajesh said:

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாதிரி செயல்கள் கண்டிக்கப்பட வேணும்!

***

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, Vankalayan said:

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

அப்படி இல்லை யாராவது ஓர் சைவதமிழன் உடைச்சிருப்பான் அப்படித்தானே வங்கேலான்🤣

சாமி கூட கல்லெறி வாங்கும் நாடு 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, Gowin said:

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

ஒரு சிறு திருத்தம் சிங்கள கிறிஸ்தவர்களும் ,முஸ்லீம்களும்,சிங்கள பெள்த்தர்களும்,சிறிய அளவில் இந்துக்களும்  வாழ்கின்றன்ர்

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி இல்லை யாராவது ஓர் சைவதமிழன் உடைச்சிருப்பான் அப்படித்தானே வங்கேலான்🤣

சாமி கூட கல்லெறி வாங்கும் நாடு 

நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

12 hours ago, பெருமாள் said:

அப்ப  உங்களுக்கு உடைத்தவர்கள்  யார் என்று தெரியுமாக்கும் ?

 

ராணுவம் செய்ததென்று எப்படி முடிவெடுக்கலாம். அங்கு முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோருமே சீவிக்கிறார்கள். ராணுவம் செய்வதட்கு எதாவது நோக்கம் இருக்கிறதா? எனது கருத்து ராணுவத்தை எடுத்த எடுப்பில் குற்றம் சாடியதட்காகவே. அவர்கள் செய்திருக்கமாட்ட்டார்கள் என்று சொல்லவில்லை.

இங்கு அநேகமானோர் எதிர்மறையாக சிந்திப்பதால்தான் பிரச்சினையே உருவாகின்றது. நான் எந்த ஒருவரையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கவில்லை. நீங்களாகவே தீர்மானித்து முடிவுக்கு வரும்போது நான் என்ன செய்ய முடியும்?

***

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, Vankalayan said:

நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

முடிவெடுத்த நீங்கள் தானே அண்மையில் தென்பகுதிகளில் புத்தர்சிலைகளை உடைத்தவர்களை பிடித்திருக்கிறார்கள் விசாரணையும் போகிறது இவர்களையும் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அப்போ தெரியும் 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிவெடுத்த நீங்கள் தானே அண்மையில் தென்பகுதிகளில் புத்தர்சிலைகளை உடைத்தவர்களை பிடித்திருக்கிறார்கள் விசாரணையும் போகிறது இவர்களையும் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அப்போ தெரியும் 

நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Vankalayan said:

நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?

உங்களின் ஊகத்தை சொன்னேன் அவ்வளவுதான் 🤣🤣

Share this post


Link to post
Share on other sites
On 21/5/2020 at 02:38, Vankalayan said:

முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என

ஒரு முஸ்லீம் சைவமாக முடியாது அதே போல் பவுத்தன் சைவமாக முடியாது இன்னும் ஏன்  .இந்த அல்லோயாவும் ஜேகோவும் நினைத்தே  பார்க்க முடியாது. 

ஆனால் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது அல்லுலோயா அல்லது ஜெகோவா போன்றவர்களால் முஸ்லீம் ஏரியாவில் போய்  மதம் மாறச்சொல்லி  கேட்க்க முடிவதில்லை அதே போல் முஸ்லீம் களால் மேற் சொன்ன அந்த இரு கூட்டம்களுக்குள் போய்  தங்கள் மதத்தை  பரவ  முடியவில்லை ?

Share this post


Link to post
Share on other sites
50 minutes ago, பெருமாள் said:

ஒரு முஸ்லீம் சைவமாக முடியாது அதே போல் பவுத்தன் சைவமாக முடியாது இன்னும் ஏன்  .இந்த அல்லோயாவும் ஜேகோவும் நினைத்தே  பார்க்க முடியாது. 

ஆனால் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது அல்லுலோயா அல்லது ஜெகோவா போன்றவர்களால் முஸ்லீம் ஏரியாவில் போய்  மதம் மாறச்சொல்லி  கேட்க்க முடிவதில்லை அதே போல் முஸ்லீம் களால் மேற் சொன்ன அந்த இரு கூட்டம்களுக்குள் போய்  தங்கள் மதத்தை  பரவ  முடியவில்லை ?

நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன்.

பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
8 hours ago, Vankalayan said:

நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன்.

பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 

சிலை வழிபாட்டை கேலிசெய்யும் அல்லேலூயா கூட்டம் இதை உடைத்திருக்கலாம்

அல்லது அல்லேலூயா கூட்டம் மீது பழி போடுவதற்காக பாவாடைக்கூட்டம் செய்திருக்கலாம்

Edited by MEERA

Share this post


Link to post
Share on other sites

பணம், பணம் எதையும் செய்யும்..... ஒருத்தனின் வறுமையும், கடனும், கையறு நிலையும் கழுதையிடம் கூட அடிமையாய் நிக்க வைக்கும்.....!   

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Police identify man who damaged religious statues

May 21, 2020, 10:20 pm  The Island
 

The Puttalam police have identified the man who has been attacking Christian religious statues in Puttalam and Palaviya in recent days.

 

The suspect had been identified with CCTV footage.

 

The suspect has damaged the statues at the St. Mary’s Church in Puttalam and Sacred Heart Church at Palaviya.

 

The suspect, who was once a Catholic, had converted to a denomination that doesn’t believe in the use of statues. He has also attacked two Christian statues previously and had been arrested. (RK)

தமிழில் சுருக்கமாக:

புத்தளம் மேரீஸ் ஆலயத்தில் சிலை உடைத்தவர் முன்னர் கத்தோலிக்கராக இருந்து பின்னர் அல்லேலூயா ஆனவர். அல்லேலூயாக்கள் சிலைகளை வழிபடுவதில்லை.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=222595

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, MEERA said:

சிலை வழிபாட்டை கேலிசெய்யும் அல்லேலூயா கூட்டம் இதை உடைத்திருக்கலாம்

அல்லது அல்லேலூயா கூட்டம் மீது பழி போடுவதற்காக பாவாடைக்கூட்டம் செய்திருக்கலாம்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சி - அடியோடு அழிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் (ஆர்.யசி) நாட்டில் பயங்கரவாதிகளின் ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவ்வாறன அடிப்படைவாதிகளின் முயற்சிகளை ஆரம்பத்திலேயே இல்லது செய்வோம் எனவும்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுகின்றார். கொக்காவில் போரின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து பாரிய அச்சுறுத்தல் ஒன்று கடந்த காலத்தில் எழுந்தது, அவ்வாறான நேரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தெரிவு  செய்யப்பட்டர். அவர் ஜனாதிபதியான பின்னர் என்னை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். அதாவது நாட்டின் பாதுகாப்பு குறித்த மிக முக்கிய பொறுப்பை அவர் என்னிடம் ஒப்படைத்தார். தேசிய பாதுகாப்பு என்பது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டினை பாதுகாப்பதோ அல்லது வேறு நாடுகளிடம் இருந்து ஏற்படும் நெருக்கடிகளை கையாள்வது மட்டுமல்ல. இந்த நாட்டில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் வேலைகளிலும், கொவிட் -19 போன்ற நோய் தாக்கங்களில் மக்கள் மரணிக்க நேரும் சந்தர்ப்பங்களில் அவ்வாறான நெருக்கடிகளில் இருந்து மக்களையும் நாட்டினையும் பாதுகாப்பதும் தேசிய பாதுகாப்பு கடமைகளில் பிரதானமான ஒன்றாகும். அதனையே இன்று நாம் முன்னெடுத்து வருகின்றோம். கடந்த காலத்தில் எமது இராணுவத்திற்கு உறங்கக் கூட நேரம் இருக்கவில்லை. எமது மக்களை பாதுகாக்க வேண்டிய தூக்கமின்றி அவர்கள் கடமை புரிந்தனர். அந்த செயற்பாடே எமது வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மீண்டும் கொவிட் வைரஸ் பரவல் தலைதூக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. ஆனால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம். என்ன அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டாலும் மீண்டும் கொவிட் வைரஸ் தலைதூக்க விடாது நாம் மக்களை மீட்கும் எமது கடமையை மிகச்சரியாக முன்னெடுப்போம் என்ற சான்றிதழை எம்மால் வழங்க முடியும். ஆகவே  மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் எமது நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்றால் எமது கடமைகளை நாம் சரியாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். எமது கடமை பொறுப்புக்களை நாம் சரியான நிறைவேற்றினால் எமது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வார்கள். இந்த நாட்டில் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை எமக்கு உள்ளது. விடுதலைப்புலிகளுடன் நாம் முன்னெடுத்த ஆயுத போராட்டடம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம்திகதி காலை 10.30 மணியுடன் நந்திக்கடல் எல்லையுடன் முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். பயங்கரவாத ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக மாறும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே பொறுப்புள்ள இராணுவம் என்ற விதத்தில் இந்த நட்டு மக்களை மீண்டும் அழிவுக்கு கொண்டு செல்லும் பயங்கரவாதத்தை தலைதூக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுக்கும்  நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். இலங்கையில் சகல மக்களும் அமைதியாக வாழ வேண்டும். ஆனால் இலங்கையில் கடந்த காலங்களில் அடிப்படைவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இந்த உலகத்தின் பழமையான மதம் ஒன்றினை தவறாக கருத்துரு கொடுத்து அடிப்படைவாதிகள் சிலர் இந்த நாட்டில் உருவாக்கி எமது மக்களை பலிகொடுக்க நினைக்கின்றனர் என்றால் அதற்கு எதிராக செயற்படுவதும் எமது கடமையாகும். யுத்தத்தில் 28 ஆயிரம் வீரர்களை இழந்து மீட்டெடுத்த எமது நாட்டினை மீண்டும் நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என்றார்.    https://www.virakesari.lk/article/85723
    • தேர்தல் பிரசாரத்தில் ‘விடுதலைப் புலிகள்’ -கபில் தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று நேற்று உருவானதல்ல. நீண்டகாலமாகவே இவ்வாறான வழக்கம் இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட போதும்,  அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடுக்கின்ற போக்கு இன்று வரை  தொடர்கிறது. தெற்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலாபம் பெறுகிறார்கள். வடக்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு ஆதரவான  கருத்துக்கள் மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள். அரசியல்வாதிகள் மத்தியில் இலாபம் தேடுகின்ற முறைதான் வேறுபடுகின்றதே தவிர, இரண்டு தரப்புக்குமே, விடுதலைப் புலிகள் தான் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்து வருகின்றனர். இந்த தேர்தலிலும் அந்த பொன் முட்டையிடும் வாத்தை பயன்படுத்திக் கொள்வதில் தமிழ்- சிங்கள அரசியல்வாதிகள்  தயங்கவில்லை. இந்த முறை தமிழ் அரசியல் பரப்பில் கிழக்கில் கருணா தொடங்கி வைத்த பிரசாரம் இப்போது வடக்கிலும் தீவிரமடைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று, அரசாங்கத்துக்கு தேவையான தகவல்களைக் கொடுத்து, புலிகள் இயக்கத்தின் அழிவுக் காரணமான கருணா, இப்போது புலிகள் இயக்கத்தில் தாம் இருந்த போது பெற்றுக் கொண்ட நன்மதிப்பை,தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில், பிரதியமைச்சராக இருந்த போது செய்த நல்ல விடயங்கள் குறித்து, பிரசாரம் செய்வதை விட, அவர்  புலிகள் இயக்கத்தில் போராட்டத்தில் பெற்ற நற்பெயரையே பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார். பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களின் பெயர்களை அவர் மேடைகளில் கூறித் திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். யாரை அவர் விமர்சித்துக் கொண்டு, வெளியேறினாரோ- அவர்களை வைத்தே இன்று வாக்குக் கேட்கும் நிலையில் இருக்கிறார் கருணா. அவர் மாத்திரமன்றி, புலிகளையும், புலிகளின் கொள்கைகளையும் விமர்சித்தவர்கள் கூட, இப்போது புலிகளுக்காக பேசுகிறார்கள், புலிகளைப் புகழுகிறார்கள். வடக்கு அரசியல் களத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவது இன்னும் அதிகம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று எல்லா தரப்புகளுக்கும் ஏதோ ஒரு வகையில் புலிகளையும் புலிகளின் போராட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளே உருவாக்கினர் என்று ஒரு பக்கம் கூறப்படுகின்ற நிலையில், கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் அதனை மறுத்து வந்தனர். ஆனால், கருணா இப்போது, தானே கூட்டமைப்பை உருவாக்கினேன் என்று உரிமை கோருகிறார். இன்றொரு புறத்தில், தம்பி பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பு என்ற வீடு இப்போது சிதைந்து போய்க் கிடக்கிறது என்று ஏளனமான குறிப்பிட்டிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “பிரபாகரன் உருவாக்கிய வீடு” என்று அவர் குறிப்பிட்டது, தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டைத் தான். ஆனால், அதற்கு இன்னொரு வகையிலும் அர்த்தம் கொள்ள முடியும் என்பது அவருக்குத் தெரியாததல்ல. கூட்டமைப்பு இப்போது வழி கெட்டுப் போயிருக்கிறது என்று அவர் விமர்சித்திருக்கலாம். அதற்குள் “தம்பி பிரபாகரனை” விக்னேஸ்வரன் கொண்டு வந்தது அப்பட்டமான அரசியல் நோக்கத்துடன் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இறுதிக் கட்டப் போர் வரை, முள்ளிவாய்க்காலில் இருந்தவர் அவர். புலிகளின் போக்குவரத்துப் பிரிவில் சாரதியாக இருந்து விட்டு, லெப்.செல்லக்கிளி அம்மானின் சகோதரர் என்ற அடிப்படையில், புலிகளே அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். 2004 பொதுத்தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்த புலிகளின் நம்பிக்கையை, அவர் இப்போது மொட்டு கட்சிக்காக துஸ்பிரயோகம் செய்கிறார். போரின் முடிவுக் கட்டத்தில் இனி போராட்டம் சரிப்படாது, போய் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்காக எதையாவது செய்யுங்கள் என்று, புலிகளின் தளபதிகள் தன்னிடம் கூறி அனுப்பி வைத்தனர் என்று கூறியிருக்கிறார் கனகரத்தினம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஏன் மகிந்த ராஜபக்சவின் தரப்புடன் இணைந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.  இவர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது அவரது விருப்பம். அதற்காக, புலிகள் கூறியபடி தான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக கூறித் திரிவது தான் மோசமான செயல். முள்ளிவாய்க்கால் களத்தில் இப்படியொரு ஆலோசனை கூறப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. மொட்டு கட்சியின் சாதனைகளைக் கூறி, அல்லது வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைப் பெற முடியாது என்பதால் தான்-  அவர், புலிகளின் தலைவர்கள் கூறினார்கள், அரசாங்கத்துடன் இணைந்தேன் என்று வாக்கு பிச்சை கேட்கிறார். இவரைப் போல பலர், புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தக் கிளம்பியிருக்கிறார்கள். புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் எவரிடத்திலும், அரசியல் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டும். அரசியல் ரீதியாக கொள்கைகளை முன்னிறுத்தியோ, திட்டங்களை முன்வைத்தோ வாக்குகளைக் கேட்கும் திராணியற்றவர்களுக்கே. புலிகள் இலகுவான வாக்குத் தேடும் கருவிகளாக இருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் போராட்டத்தை, வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரமோ, அருகதையோ யாருக்கும் கிடையாது. அது புலிகள் இயக்கத்தின் போராளியாக இருந்தாலும் சரி, பொறுப்பில் இருந்தவர்களாக இருந்தாலும் சரி, அத்தகைய அருகதை யாருக்கும் கிடையாது. புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்று அர்த்தமில்லை. ஏனென்றால், புலிகள் இயக்கத்தில்,- அதன் வளர்ச்சியில், உயிர்துறந்த 30,000 பேருக்கு மேற்பட்டவர்கள், போராளிகளாக இருந்த பல்லாயிரம் பேர், இந்தப் போராட்டத்துக்கு பின்புலத்தில் இருந்து உதவிய இலட்சக்கணக்கானவர்கள் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. காசைக் கொடுத்து, இயக்கத்தை வளர்த்தவர்களாகட்டும், உயிரைக் கொடுத்து போராடியவர்களாகட்டும், உடல் உறுப்புகளை இழந்து வாடுபவர்களாகட்டும்,  எல்லோரும் சேர்ந்து உருவாக்கியது தான் புலிகள் இயக்கம். இலட்சக்கணக்கானவர்களின் தியாகங்களாலும், உணர்வுகளாலும், குருதியாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம். இதனை தனியொருவர் உரிமை கோரவும் முடியாது. தனியொருவரின் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடியாது. முன்னாள் போராளிகள் கூட தேர்தல் தேவைகள், நலன்களுக்காக புலிகள் இயக்கத்தின் பெயரையும், பிரபாகரனின் பெயரையும், மாவீரர்களையும் பயன்படுத்த முற்படுகின்றனர். தனிப்பட்ட அரசியல் நலன்கள், கருத்துக்களை தமிழ் மக்களின் மீது திணிப்பதற்கு விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்துவது நல்லதல்ல. அரசியல், தேர்தல் என்று வந்து விட்டால், அவர்களுக்கு எல்லாம் அது மறந்து போய் விடுகிறது. எப்படியெல்லாம் புலிகளையும், போராட்டத்தையும், மாவீரர்களையும் விலை பேசலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். தமிழ் அரசியல் பரப்பில் மாத்திரமன்றி, சிங்களத் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களுக்கும் கூட புலிகள் தேவைப்படுகிறார்கள். அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மட்டுமல்ல,  முன்னாள் நாடாளுதன்ற உறுப்பினர் அங்கஜனும் கூட சாட்சி. அவரும் கூட இந்த மண் எங்களின் சொந்தமண் என்று வாக்கு கேட்டதை மறந்து விட முடியுமா?.   https://www.virakesari.lk/article/85693
    • கோத்தாவின் ஆலோசனை வெற்றிகரமாக நிறைவேறி அரசு பெரும் இலாபம் ஈட்டும்போது 1000 என்ன 10000 கேட்டாலும் கொடுப்பதற்கு அவர் அனுமதி வழங்குவார். எங்கள் சம் போல் அடுத்த பெளர்னமி, வெசாக் என்று அவர் கூறவில்லையே..! 😌
    • வடக்கின் களம் யாருக்கு பலம்? July 12, 2020 தாயகன் சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிர தேர்தல் பிரசார யுத்தத்தில் களமிறங்கியுள்ளன . வழக்கம் போலவே இம்முறையும் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம்,முஸ்லிம் இனவாதம் என்ற ஆயுதங்கள் மூலமே தேர்தல் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதை தவிர்த்து தமது எதிரிக்கட்சிகள் மீது வசைபாடும்,சேறுபூசும் குற்றம்சாட்டும் பிரசாரங்களும் அதிகளவில் இடம்பெறுவதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நடக்கப்போகும் தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன் வடக்கு,கிழக்கு மக்களுக்கு இந்த தேர்தலில் ஆர்வம் இல்லை என்ற விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய விடயம் உண்மையே .இந்த தேர்தல் பிரசார யுத்தத்தில் வடக்கு மாகாண கள நிலைவரமும் கவலைக்கிடமாகவே உள்ளது.   தேர்தல்கள் ஆணையாளர் கூறியதுபோல் இந்த தேர்தலில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு குறிப்பாக வடக்கு மக்களுக்கு ஆர்வம் இல்லாதபோதும் ஆர்வம் உள்ள மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இங்கு வழக்கத்துக்கு மாறாக இம்முறை கட்சிகளுக்கிடையில் கடுமையான தேர்தல் போட்டி ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் பிரசார யுத்தத்தில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய இரு பிரதான கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.   வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்-கிளிநொச்சி இணைந்த தேர்தல் மாவட்டம்,வன்னி தேர்தல் மாவட்டம் என இரண்டு தேர்தல் மாவட்டங்களே உள்ளன. இதில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 571,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 28 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 287,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.   இந்த இரு மாவட்டங்களுக்குமான 13 ஆசனங்களை தமதாக்கிக் கொள்வதற்காகவே 735 வேட்பாளர்கள், 858872 வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக களமிறங்கி பிரசார சமராடி வருவதனால் இம்முறை வடக்கு மாகாணத்தில் வாக்குகள் சிதறப்போகும் நிலையும் இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த சில உறுப்பினர்களுக்கு இம்முறை அவர்களின் ஆசனங்கள் பறிபோகும் கள நிலைவரத்தையும் வடக்கில் காண முடிகின்றது.   கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலிருந்து 13 பேர் பாராளுமன்றம் சென்றனர். இதில் 11 பேர் தமிழ் கட்சிகளை பிரதிநிதிதித்துவப்படுத்திய தமிழர்களாகவும் இருவர் இரு பிரதான சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம்களாகவும் பாராளுமன்றம் சென்றனர். இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யாழ் -கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 பேரும் சிங்களக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தமிழர் ஒருவரும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியான ஈ.பி.டி.பி.யிலிருந்து ஒருவருமான 7 பேரும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் 4 பேரும் சிங்களக்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து முஸ்லிம் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முஸ்லிம் ஒருவருமென 6 பேரும் பாராளுமன்றம் சென்றனர். வடக்கு தேர்தல் களத்தில் கடந்த முறை களமிறங்கிய அதே அரசியல் கட்சிகள் இம்முறையும் களமிறங்கியிருந்தால் வாக்குகளும் சிதறியிருக்காது.தேர்தல் முடிவுகளும் மாறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதியதொரு கட்சி பலமானதொரு மாற்று அணியாக களமிறங்கியுள்ளதே வடக்கில் கடும் தேர்தல் போட்டியொன்றை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் களமிறக்கத்தால் இதுவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அடைமொழியைப் பயன்படுத்தி தமது பாராளுமன்ற ஆசனங்களை தக்க வைத்து வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்தான் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்த மக்கள் பலமுள்ளவர்களின் கட்சியாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இருப்பதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே யாழ்,வன்னி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த சிலரின் பாராளுமன்ற ஆசனங்கள் பறிபோகும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. அதேவேளை வடக்கில் போட்டியிடும் ஏனைய கட்சிகளுக்கென்றுள்ள வாக்கு வங்கிகள் குறிப்பாக ஈ.பி.டி.பி ,ஐ,தே.க., ஸ்ரீல .சு.க., பொதுஜன பெரமுன ஆகியவற்றின் வாக்கு வங்கிகளும் இக்கட்சியின் வரவினால் சரியக்கூடிய கள நிலையும் உண்டு. இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் தலைவர்களான சிலர் மீதும் கொண்ட வெறுப்பின்,வேதனையின் காரணமாக மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து வந்த மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான மாற்று அணியாக களமிறங்கும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடிய சூழலும் காணப்படுவதனால் இக்கட்சிகள் வாக்கு வங்கிகளும் சரிவை சந்திக்கலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.ஸ்ரீதரன் 72058 வாக்குகளையும் மாவை சேனாதிராஜா 58782வாக்குகளையும் எம்.ஏ .சுமந்திரன் 58043 வாக்குகளையும் த .சித்தார்த்தன் 53740 வாக்குகளையும் ஈ.சரவணபவன் 43289 வாக்குளையும் பெற்று பாராளுமன்றம் தெரிவாகினர் .அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் விஜயகலா மகேஸ்வரன் 13071 வாக்குகளையும் ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா 16399 வாக்குளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். இதேபோன்று வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் 34620 வாக்குகளையும் செல்வம் அடைக்கலநாதன் 26397 வாக்குகளையும் சிவசக்தி ஆனந்தன் 25027 வாக்குகளையும் சிவமோகன் 18412 வாக்குளையும் பெற்ற அதேவேளை ஐ.தே .க.வில் போட்டியிட்ட ரிசாத் பதியுதீன் 26291 வாக்குளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட காதர் மஸ்தான் 7298 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். இதில் முதலில் யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை கவனத்தில் எடுத்தால் கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பு 5 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் இம்முறை அதில் 2 ஆசனங்களை இழக்க வேண்டிய கள நிலைவரம் உள்ளது. ஏனெனில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 2013 ஆம் ஆண்டு களமிறங்கிய சி.வி.விக்னேஸ்வரன் 1,32,255 விருப்பு வாக்குகளைப்பெற்றிருந்தார். அதே கட்சியில் போட்டியிட்ட அனந்தி சசிதரன் 87,870விருப்பு வாக்குளைப் பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருந்தவபாலன் 42 925வாக்குகளைப் பெற்று ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார்.அதேவேளை சுரேஷ் பிரேமச்சந்திரனும் கூட்டமைப்பில் போட்டியிட்டு 25000 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நான்கு பேரும் இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளதால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரிய வாக்குகள் பிரிந்து குறைந்தது 2 ஆசனங்களை அது இழக்கும் நிலைமையில் உள்ளது. அதேபோன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலை உள்ளது. ஏனெனில் கடந்த தேர்தலில் இக்கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான 4 பேரில் 25027 வாக்குளைப் பெற்று மூன்றாவது இடத்திலிருந்த சிவசக்தி ஆனந்தன் இம்முறை விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் களமிறங்கி உள்ளார். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியிலும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலையுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 13 ஆசனங்கள் உள்ள நிலையில் கடந்த தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 9 ஆசனங்களைப் பெற்றிருந்தபோதும் இம்முறை அது 6 ஆகக் குறைவடைவதுடன் அந்த 3 ஆசனங்களையும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்றுக்கொள்ளும் களநிலைவரமே உள்ளது. ஏனைய 4ஆசனங்களையும் ஈ.பி.டி.பி.,ஐ.தே .க.,பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 207577 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. 30232 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி 20025 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17309 வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று சக்தி தாமே எனக் கூறிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் [தமிழ் தேசிய மக்கள் முன்னணி] 15022 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அதேவேளை வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 89886 வாக்குகளைப்பெற்று 4ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 39513 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 120965 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன. இந்த ஆசனங்கள்,வாக்குகளின் எண்ணிக்கையிலேயே இம்முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் மூலம் தமிழ்தேசியக்கூட்டமைப்பே அதிக நெருக்கடியை சந்திக்கவுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதிலுள்ள பங்காளிக்கட்சிகளின் சண்டை,வெளியேற்றங்களினால் அது பலவீனமடைந்து நிலையில் உள்ளது. அத்துடன் அக்கூட்டமைப்பின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தற்போது உட்கட்சிப் பூசல்களினால் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதிலுள்ள ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான,தமிழ்மக்களை விசனமடைய வைத்த கருத்துக்கள்,செயற்பாடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவமோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவமோ இதுவரையில் அவ்வாறானவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமையே இவ்விரு கட்சிகள் மீதும் தமிழ் மக்களை அதிருப்தி கொள்ள வைத்துள்ளன. இந்த அதிருப்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் வெளிப்படுமா?   http://thinakkural.lk/article/54109
    • எழும்பி நடக்கவே கஸ்டப்படுகினம்...உந்தக் காசுகளை வாங்கி என்ன செய்யினம்..