Jump to content

தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது'-ஒபாமா


Recommended Posts

`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா

ஒபாமா ( Instagram )

ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினுக்கு, இந்தப் பட்டமளிப்பு நாள் கூடுதல் ஸ்பெஷல். டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டவர் ரேச்சல்.

ரேச்சல் ஹேண்டலின்
 
ரேச்சல் ஹேண்டலின்
Twitter

``தன்னைப் பற்றிப் புறம் பேசியவர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறாள் என் மகள் ரேச்சல். நான், இந்த உலகத்திலேயே பெருமைக்குரிய தந்தையாகத் தற்போது உணருகிறேன்” எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரேச்சலின் தந்தை ஜே ஹேண்டலின்.

முதல் தலைமுறையாக மேல்நிலைப்பள்ளியை முடித்தவர், ஆறு வருட கடும் உழைப்புக்குப் பிறகு முனைவர் பட்டம் பெற்றவர், பல போராட்டங்களைக் கடந்து கல்லூரிப் படிப்பை முடித்தவர் என நேற்றைய பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ரேச்சல்போல ஒவ்வொரு கதை இருக்கிறது. அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து முழுவதும் ஆன்லைன் வழியாக நடந்து முடிந்திருக்கும் இந்தப் பட்டமளிப்பு தினத்தில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ஒபாமா நிகழ்த்திய உரைதான் தற்போது வைரலாகியுள்ளது. ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. அவர் பேசியதன் முழு மொழிபெயர்ப்பு பின்வருமாறு,

Obama
 
Obama

“இந்த ஆண்டு பட்டம்பெறும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரிடமும் நான் பெருமை கொள்கிறேன். பட்டம் பெறுவது என்பது எந்த ஒரு சூழலிலும் பெரும் சாதனைதான். சிலர் பெரும் நோய்களைக் கடந்து வந்திருப்பீர்கள் அல்லது உங்களது பெற்றோரின் வேலை பறிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருப்பீர்கள். இவை தவிர சமூக ஊடகங்கள் கொடுக்கும் அழுத்தம், பள்ளிகளில் நிகழும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து வரும் செய்திகள், கண்முன்னே நிகழும் காலநிலை மாற்றம் என, அத்தனையும் கொடுக்கும் அழுத்தங்களையும் கடந்து பட்டமளிப்பு விழாக்களுக்காக நீங்கள் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் இந்தச் சர்வதேசத் தொற்றால் தற்போது உலகமே தலைகீழாகிக் கிடக்கிறது. நாம் அனைவருமே நமது பெற்றோர்களை நேசிப்பவர்கள்தான் ஆனால், வீட்டிலேயே மாதக்கணக்கில் முடங்கியிருந்து அவர்களுடன் பொழுதைக் கழிக்கவேண்டியிருக்கும் என நாம் கடந்த காலங்களில் யோசித்துக்கூட இருக்க மாட்டோம்.

நான் தற்போது உங்களுடன் நேர்மையாகச் சிலவற்றைப் பகிர்கிறேன். பட்டமளிப்பு விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என்கிற மனக்கஷ்டம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும். எனது பள்ளிப் பட்டமளிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது எனக்குத் தற்போது அவ்வளவாக நினைவில் இல்லை. என்னுடைய பட்டமளிப்பு உரைகள் மிக நீண்ட நேரம் நடக்கும். மற்றபடி பட்டமளிப்பு விழாக்களில் பேசுவதைக் கேட்பது அத்தனை மோசமானதாக இருந்ததில்லை. பட்டம் பெறும்போது அணிந்துகொள்ளும் கேப் எல்லோருக்கும் பொருந்தியும் போகாது. குறிப்பாக என்னைப் போன்ற பெரிய காதுகளை உடையவர்களுக்கு நிச்சயம் பொருந்திப் போகவே போகாது. மற்றபடி இந்தப் பொதுச்சுகாதாரச் சீர்கேடு சரியானதும் நண்பர்களைச் சந்தித்துப் பேசப் போதுமான கால அவகாசம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

#Graduation2020
 
#Graduation2020
Ted S. Warren

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய பருவம் இனி தொடங்குகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பும் துறை, நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கும் துணை, உங்கள் வாழ்க்கைக்கான கொள்கைப் பிடிமானம் அனைத்தையும் முடிவெடுக்க வேண்டிய காலம் இது. ஆனால், உலகம் தற்போது இருக்கும் சூழலில் இவற்றை யோசிப்பது அச்சத்துக்குரியதாக இருக்கிறது.

ஜனநாயகத்தின் இயங்குதல் நாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் சிந்திப்பதில்தான் சாத்தியப்படும், சுற்றி இருப்பவர்கள் பசித்து நோயுற்றிருக்கும்போது வெறுமனே பணம் ஈட்டுவதில் எவ்விதப் பயனுமில்லை
ஒபாமா

இலையுதிர்காலத் தொடக்கத்தில் நாம் கல்லூரியில் சேர்ந்துவிடுவோம், கல்லூரி முதல் நாளில் பெற்றோர்கள் தங்களது காரில் அழைத்துச் சென்று நம்மை இறக்கிவிடுவார்கள் என்று இதுநாள் வரை நீங்கள் தேக்கி வைத்திருந்த கனவு நெடுந்தூரம் விலகி இருக்கிறது. பகுதிநேரமாக வேலை பார்த்துக் கொண்டே நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்திருந்தால் உங்களுடைய முதல் வேலையைப் பெறுவது தற்போது சந்தேகத்துக்குரியதாகி இருக்கிறது. நல்ல நிலையில் இருந்த பல குடும்பங்கள் தற்போது எதுவும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே துன்பங்களைச் சந்தித்து வந்த குடும்பங்கள் தற்போது நூலிழையில் தங்களது நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு உள்ளார்கள்.

 

இதனால் இதற்கு முந்தைய தலைமுறைகளைவிட மிக வேகமாக வளரும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். இந்தச் சர்வதேசத் தொற்று நமது நாட்டின் தற்போதைய நிலையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.அதன் வழியாக இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றி இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிறவேற்றுமை, அடிப்படைச் சுகாதாரப் போதாமை உள்ளிட்டப் பிரச்னைகள் தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரியத் தொடங்கி இருக்கின்றன. இந்தச் சூழல் இனி பழைமைவாதம் இனி நமக்குப் பயன்படப்போவதில்லை என்பதை இளையதலைமுறைக்கு உணர்த்தி இருக்கிறது. ஜனநாயகத்தின் இயங்குதல் நாம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் சிந்திப்பதில்தான் சாத்தியப்படும், சுற்றி இருப்பவர்கள் பசித்து நோயுற்றிருக்கும்போது வெறுமனே பணம் ஈட்டுவதில் எவ்விதப் பயனுமில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறது.

#Graduation2020
 
#Graduation2020
Ross D. Franklin

இந்தக் காலம் உங்களது பிள்ளைப்பருவத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இவர்களால் தீர்வு கிடைக்கும் என நீங்கள் இதுநாள் வரை நம்பியிருந்தவர்களிடம் இந்தச் சூழலுக்கான பதில் இல்லை, சிலரிடம் இதற்கான சரியான கேள்விகளே இல்லை. ஆகையால், இனி இந்த உலகம் ஆற்றுப்படுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இந்த நிச்சயமற்றச் சூழலில் பெரியவர்கள் எவரும் `உனக்கு இது புரியாது நீ சிறுமி எனவோ ’இதை இதுநாள் வரை இப்படித்தான் செய்து வந்தோம் நீயும் இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று கட்டளையிடவோ முடியாது. அதனால், இந்த உலகத்தை மறுமையாக வடிவமைக்கும் வாய்ப்பு நீங்கள் பற்றிக்கொள்ளக் கிடைத்திருக்கிறது.

இந்தப் பெரியவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் உங்கள் கையில் கிடைத்திருக்கும் ஆற்றலைக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நான் சொல்லப் போவதில்லை ஆனால், மூன்றே மூன்று அறிவுரைகளை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

 
ஒருவர் மற்றொருவருடைய போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள்.
ஒபாமா
 • பயம்கொள்ளாதீர்கள். அமெரிக்கா இதற்கு முன்பும் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்திருக்கிறது. அடிமைமுறை, சிவில்யுத்தம்,பஞ்சம், பிணி, 9/11 என அத்தனையிலிருந்தும் நாம் மீண்டு வலுவாக எழுந்திருக்கிறோம். அந்தச் சூழல்களில் உங்களைப் போன்ற இளைய தலைமுறைகள்தான் கடந்தகாலத்தின் தவறுகளைத் திருத்தி அமெரிக்காவைக் கடைத்தேற்றியிருக்கிறார்கள்.

 • உங்களுக்குச் சரியெனத் தோன்றியதைச் செய்யுங்கள். தங்களால் முடிந்ததை, தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதைத்தான் பிள்ளைகள் சிந்திப்பார்கள். ஆனால், அதனால்தான் நிலைமை சிக்கலாவதாகப் பெரியவர்கள், பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் சொல்லுவார்கள். ஆனால் நேர்மை, கடின உழைப்பு, பொறுப்பு, தாராளமனப்பான்மை, பிறருக்கு மரியாதை போன்ற நீட்டித்த பண்புகளால் நீங்கள் உங்களை உருவாக்கிக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எல்லா நேரங்களிலும் உங்களது செயல் சரியாக அமைந்துவிடாது. சிலநேரங்களில் எங்களைப் போலவே நீங்களும் தவறிழைக்கக் கூடும். அத்தகைய கடினமான சூழல்களில்கூட உங்களது உண்மைத்தன்மைதான் அனைவரையும் உற்றுநோக்க வைக்கும். அவர்களை உங்களை நோக்கி ஈர்க்கும். பிரிதொரு நாளில் தீராத பிரச்னைகளின் பக்கமில்லாமல் தீர்வுகளின் பக்கம் நீங்கள் இருப்பீர்கள்.

 • இறுதியாக, தனியொரு மனிதராக எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு சமூகத்தைக் கட்டமையுங்கள். இந்த அச்சமூட்டும் காலத்தில் மனிதப் பண்புகளின்றிச் செயல்படுவது எளிது. நான், என் குடும்பம், என்னைப்போலவே சிந்திக்கும் என்னைப்போலவே இருக்கும் மக்களை மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்கிற எண்ணத்தை நாம் எளிதில் வளர்த்துவிடலாம். ஆனால், இந்த ஊழிக்காலத்தைக் கடக்க வேண்டும் என்றால், அதற்குப்பிறகான உலகில் எல்லோருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்றால், இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதை நாம் ஒன்றிணைந்து செய்தால் மட்டுமே சாத்தியம். ஒருவர் மற்றொருவருடைய போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருங்கள். ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுங்கள். பாலியல்பொதுமைச் சிந்தனைகள், நிற வேற்றுமை, தகுதி, பேராசை என நம்மை இதுநாள் வரைப் பிரித்த பழைமைவாத எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிய பாதையில் இந்த உலகத்தை வழிநடத்துங்கள்.

உங்களுக்காக மிஷலும் நானும் எங்களது பவுண்டேஷன் வழியாக உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மையில் எங்களது உதவி உங்களுக்குத் தேவையாக இருக்காது, ஏனெனில் ஏற்கெனவே நீங்கள் உலகை வழிநடத்தத் தொடங்கிவிட்டீர்கள்.

வாழ்த்துகள்!

https://www.vikatan.com/news/world/obamas-inspiring-piece-of-advice-for-graduating-students-amid-pandemic?artfrm=v4

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விசுகு... ஒரு  குடும்பத்தை மேம்படுத்தி விடுவதை போன்ற,  செயல்  என்பது மிகவும் பொருத்தமானது.   👍 இதனை... உங்கள் அம்மாவின் திவசத்திற்கு செய்ததை, அவர் மிகவும், பெருமையுடன்,  மனம் மகிழ்வார் என்பது உறுதி. 🙏
  • பக்குவமாக  சொல்வதை,  அவங்கள்  கேட்க மாட்டாங்களே.... மனோ.  புலி மாதிரி, அடித்துச்  சொன்னால் தான்... கேட்பார்கள்.  
  • எமது ஊரில் பலருக்கும் தெரிந்த எல்லோருக்கும் உதவியாக இருந்த அதிலும் எமது பெற்றோருக்கு நற்பணிகள் பலவும் செய்த ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் வாழட்டும் என்பதற்காக அவர்களுக்கு செலவுக்கு பணத்தை அனுப்புவதை விடுத்து அவர்களின் நிலை அறிந்து அவர்களின் விருப்பு முயற்சி ஆளுமையை கேட்டு கண்டறிந்து உதவுவோம் என்ற  நிலைப்பாட்டுக்கு ஏற்ப அங்குள்ள எங்கள் பெரியப்பாவின் பேரன் நேரில் சென்று அவர்கள் அனைவரையும் ஒன்று கூடி பேசி அவர்கள் தமது கடைசி மகளின் வீட்டில் தான் (வன்னியில்)  இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது கடைசி மகளது வீட்டிலேயே அவர்களது நீண்ட நாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டதற்கு இணங்க அம்மாவின் முதலாவது துவசமான இன்று கோழிக்கோடு. - ‪140 000‬ ரூபாய்கள் கோழிகள் - ‪100 000‬ ரூபாய்கள் ‪60 - 6‬ மாதக்கோழிகள் 40 - முட்டை இடும் கோழிகள் 10 - சேவல்கள் குழாய்கிணறு - ‪110 000‬ ரூபாய்கள் மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள் (அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்க பட்டுள்ளது) அத்துடன் அம்மாவின் முதலாவது துவசமான இன்று அந்த பகுதியில் வாழும் 100 பேருக்கு அம்மாவின் நினைவாக சாப்பாடு கொடுக்க போதுமான அனைத்து மரக்கறிகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்க பட்டுள்ளது. அம்மாவின் நினைவாக அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களித்து  இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வின் இறுதிக்காலத்தில் தாமே உழைத்து மகிழ்வாக வாழ உதவ முடிந்ததில் மிகவும் சந்தோசப்படுகின்றோம். https://photos.app.goo.gl/zRtFeueuLGfzmn5x6 தகவல் : விசுகு 
  • ''எளிய மக்களின் யுத்தம் எப்படி வன்முறையாகும்?!'' - 'கர்ணன்' குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்! தேவன் சார்லஸ் மாரி செல்வராஜ் ''அப்போது யாருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது என்று சொல்லவேண்டும் என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனிலோ, கலெக்டர் அலுவலகத்திலோ ஆட்சியாளர்களின் படங்களைவைத்து காட்டியிருக்கலாம். என்னுடைய நோக்கம் அதுவல்ல. தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'கர்ணன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எளிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் 1990-களில் பேருந்துகள் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கொடியன்குளம் கலவரம் ஆகியவை படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ''கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995 எனும்போது, மாரி செல்வராஜ் ஏன் '1997-ன் முற்பகுதியில்' இருந்து எனக் படத்தை தொடங்குகிறார்'' என்கிற விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்தும், 'கர்ணன்' படத்தின் குறியீடுகள் குறித்தும் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசினேன்.   ''படத்தில் ஏராளமான விலங்குகள், உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருகின்றன. இதற்கு ஏதும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறதா?'' ''நான் பத்தாண்டுகள் கிராமத்தில் ஆடு, மாடுகள் மேய்த்திருக்கிறேன். பனிரெண்டாவது படிக்கும்வரை ஆடு, மாடுகளோடுதான் அதிகம் பழகியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். என்னுடைய உணர்வுகள், பிரச்னைகள், காதல் என எல்லாவற்றையும் முதலில் பகிர்ந்துகொள்வது விலங்குகளிடம்தான். விலங்குகளிடம் என்னுடைய குரல், என்னுடைய எண்ணங்களுக்கான ஒப்புதல் கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன். அதில் ஒரு ஆறுதல் கிடைக்கும். என்னுடைய சிறுகதைகள், கவிதைகள் என எல்லாவற்றிலும் விலங்குகள் அதிகம் இருக்கும். ஒரு தெரு என யோசித்தால் அதில் விலங்குகள் இல்லாமல் எப்படியிருக்க முடியும்?! மிக முக்கியமாக மனிதர்களின் ஆன்மாவை படம்பிடித்துக்காட்டுவதற்கு விலங்குகள் ஒரு கருவியாக இருப்பதாக நான் நம்புகிறேன். சக மனிதர்களோடு உறவாடுவதைவிட, அவர்களை பார்ப்பதைவிட, விலங்குகளோடு மனிதர்களுக்கு வெளியே யாருக்கும் தெரியாத ரகசியப்பிணைப்பு ஒன்று உண்டு. அதனால் உயிரினங்களைவைத்து கதை சொல்லும்போது அதன்வழியாக மனிதர்களின் ஆன்மாவைக் கண்டுபிடித்துவிடலாம். அதன்மூலம் உணர்வுகளை அவர்களுக்குள் கடத்திவிடலாம். அதனால், மனிதர்களின் உணர்வுகளோடு பேசுவதற்கு விலங்குகளைவிட்டால் மிகச்சரியான உருவகம் (Metaphor) இல்லை என்றுதான் நினைக்கிறேன். ''   '' 'கர்ணன்' படத்தில் குறிப்பிடப்பட்ட 1997-ம் ஆண்டு என்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதுகுறித்து உங்கள் பதில் என்ன?''   கர்ணன் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ், தனுஷ், லால் ''நான் படத்தில் ஆண்டை குறிப்பிட்டதே ஆட்சியாளர்களை காட்டுவதற்காக அல்ல. ஆட்சியாளர்களைக் காட்டவேண்டும் அல்லது அப்போது யாருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது என்று சொல்லவேண்டும் என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனிலோ, கலெக்டர் அலுவலகத்திலோ ஆட்சியாளர்களின் படங்களைவைத்து காட்டியிருக்கலாம். என்னுடைய நோக்கம் அதுவல்ல. இந்த கதை நடக்கும் நேரத்தில் மக்களிடத்தில் என்னவெல்லாம் இருந்தது, என்னவெல்லாம் இல்லை என்பதற்காக அப்போது பேருந்து வசதியில்லை, மொபைல் இல்லை எனப் புரிந்துகொள்வதற்காக ஆண்டை குறிப்பிட்டேன். மேலும் படம் சென்சாருக்குப் போய்விட்டுத்தான் வெளியே வந்திருக்கிறது. அங்கே அவர்கள் சிலவற்றை சாப்பிட எடுத்துக்கொண்டார்கள். நான் ஒரு புனைவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒட்டுமொத்த மனித சமூகத்தில் எளிய மக்கள் என்னவெல்லாம் யுத்தம் நடத்தினார்களோ, என்னென்ன பிரச்னைகளுக்காக எல்லாம் போர் புரிந்தார்களோ, சமர் புரிந்தார்களோ அதையெல்லாம் காட்சிப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம். ஆனால், புனைவில் ஒரு ஒரிஜினல் எமோஷன் சேரும்போது அதில் பிரச்னைகள் வரும் என்பது இப்போது புரிகிறது. அது பிழையா என்று கேட்டால் பிழைதான். அதை நான் மறுக்கவில்லை. அந்தப் பிழையை சரிசெய்துகொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அதை இப்போது மாற்றிவிட்டோம். நாளை முதல் படத்தில் ஆண்டே குறிப்பிடப்படாது.'' ''படத்தில் மிக முக்கியமான குறியீடாக இருப்பது தலை இல்லாத ஓவியம்... அந்த ஓவியம் யாரைக் குறிப்பிடுகிறது?!''   கர்ணன் ''எதற்கும் ஒற்றை பதில் கிடையாது. ஒரு படைப்பாளியிடம் இது யார், இதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்பதே ஒரு மோசமான வன்முறை. ஏனென்றால் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் அது பலவிதமான அர்தத்தை, புரிதலைக் கொடுக்கும். ஒரு படைப்பாளனாக நான் நினைப்பது ஒவ்வொருமுறை படத்தைப் பார்க்கும்போதும் வெவ்வேறு அர்த்தங்கள் கிடைக்க வேண்டும். நேரடியாக இப்படித்தான் படத்தைப் பார்க்க வேண்டும், இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவ்வளவு உழைப்பு அவசியம் இல்லை. நான் உருவாக்க வேண்டும் என ஆசைப்படுவது பத்து நாள் கழித்து படம் பார்க்கும்போது அது வேறு ஒன்றாகத் தெரியவேண்டும். 40 வருடம் கழித்துப் பார்க்கும்போது வேறு ஒரு உருவமாகத் தெரியவேண்டும். அன்றைக்கு நடந்த விஷயத்தைவைத்து அதில் வேறு அர்த்தம் கிடைக்க வேண்டும். காலம் கடந்து நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் Metaphor-களை நிறைய பயன்படுத்துகிறோம். இந்த விஷுவல் காலம் கடந்து நிற்கவேண்டும். இது பல அர்த்தங்களை உருவாக்கவேண்டும். பல வழித்தடங்களை உருவாக்கவேண்டும். ஒரே அர்த்தத்தை, ஒரு பதிலை சொல்வதற்கு உருவகம் தேவையில்லை. அதற்கு ஒரு வசனத்தை சொல்லிவிட்டுப் போகலாம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையோடு, வெவ்வேறு புரிதல்களோடு பார்க்கிறார்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரோடும் பயணிக்கக்கூடிய தகுதி ஒரு படைப்பாளனாக எனக்கு இருக்க வேண்டும். படம் பார்க்கும் அத்தனை மனிதர்களின் மூலைக்குள்ளும் சென்றுவந்தால்தான் நான் முழுமையான கலைஞன்.''   ''படத்தில் நாயக பிம்பம் அதிகமாக இருப்பது குறித்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' '' எப்போதுமே ஒரு பிரச்னையை தொடங்குவதற்கு, அதைப்பற்றி பேசுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். புளியங்குளம் எனும் ஊரில் எவ்வளவோ பேர் இருந்தும் அந்த ஊரின் கதையை நான் வந்துதான் சொல்லியிருக்கிறேன். ஒரு மனிதனிடம் இருந்துதான் எல்லாமே தொடங்கும். மக்கள் பிரச்னைகளைப்பார்த்து அதை நெறிப்படுத்துவதற்கு, அதை சரிப்படுத்துவதற்கு, அதை தொடங்கிவைப்பதற்கு ஒரு கல், ஒரு கை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட கையாகத்தான் நான் கர்ணணைப் பார்க்கிறேன்.'' ''படத்தில் போலீஸுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பது சரியா... வன்முறைக்கு வன்முறைதான் தீர்வா?''   '' இந்தப் படம் வன்முறைப் படமாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது, இதன் நோக்கம், இதன் ஆன்மா, திசை திருப்பப்பட்டுவிடக்கூடாது என நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். எளிய மக்களின் போராட்டத்தை, அவர்களின் வாழ்வியலைத்தான் படமாக எடுத்திருக்கிறேன். இந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், அந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், காலாப்படை, யானைப்படை எனப் போர்புரிந்த ராஜாக்களின் யுத்தங்கள் யுத்தமாகவே இருக்கும்போது, எளிய மக்களின் யுத்தம் மட்டும் எப்படி வன்முறையாகப் பார்க்கப்படுகிறது என்பது புரியவில்லை. நான் எடுக்க நினைத்தது யுத்தப் படம்தான். யுத்தங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எளிய மக்கள், வறண்ட பூமிக்களில் யுத்தத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணபிரானை, கர்ணன் கொலைசெய்யும்போதுகூட, எப்படி அதைக் காட்சிப்படுத்துவது எனத் தெரியாமல் கஷ்டப்பட்டேன். படத்தில் நேரடியாகக் கர்ணன் ஒரு கொலைதான் செய்வான். அதற்கும் கதறிஅழுவான். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நினைத்து, வாழ்வு நிர்கதியானதை நினைத்து, அனைத்து உயிரினங்களையும் நினைத்து கதறித் துடிப்பான். அந்தக் கொலையை வீரமாக மிகைப்படுத்தி படத்தில் ஒரு காட்சிகூட இருக்காது. என் பயத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் தனுஷ் சார் போக்கிவிட்டார். எனக்கு பெரிய பதற்றம் இருந்தது. இப்படி ஆகிவிடுமோ, இப்படி மாறிவிடுமோ, வேறு மாதிரி புரிந்துகொள்ளப்படுமோ என்கிற என் நிம்மதியின்மையை தன்னுடைய பர்ஃபாமென்ஸால் ஆற்றுப்படுத்தினார் தனுஷ் சார். அப்படியிருந்தும் இன்னும் பயந்து அந்த ஷாட் முடிந்ததும் குழந்தை இன்சர்ட் வைப்பது, கழுதைக்குட்டி இன்சர்ட் வைப்பது என எல்லாமுமே செய்தேன். இவ்வளவு இருந்தும் எளிய மக்களின் போராட்டம் வன்முறையாகத் தெரிகிறது என்றால் நான் இன்னும் நிறைய சினிமா கற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.''     https://cinema.vikatan.com/tamil-cinema/director-mari-selvaraj-explains-about-karnan-controversies
  • குடும்பத்துடன் பார்க்க கூடிய படம், ஒவ்வொருவரும் நன்றாக நடித்துள்ளார்கள், அன்புற்கினியாளின் நடிப்பு அபாரம், அவளின் சிரிப்புக்கு விலையில்லை
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.