Jump to content

சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம்

இலங்கை கிரிக்கட் வீரர்களில் நல்லவர், நேர்மையாயனவர், இனவாதம் அற்றவர் என்று எல்லாம் தமிழ் இளைஞர் , யுவதிகளினால் பாராட்டி மிகவும் மதிக்கப்பட்டுவந்த முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை வென்றதாக தென் இலங்கையில் கொண்டாடப்படும் மே 19 வெற்றி நாளில் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து அவரின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்களின் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த படையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ள அவர் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருட்டுக்கு கூட  சிறு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என்றும் இது அவரின் இனவாத மனநிலையை படம்போட்டு காட்டுகின்றது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“எமது தேசத்துக்காக இந்த நாளில் உச்சபட்ச தியாகத்தை செய்த வீரமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகின்றோம். பிரார்த்தனை மற்றும் நன்றி உணர்வுகளுடன் எமது சிரம்களை தாழ்த்துகின்றோம்” என்று சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Screenshot (1)
 
http://www.samakalam.com/செய்திகள்/சங்ககாராவின்-யுத்த-வெற்ற/

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு தமிழ் மக்களின் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

இவனுக்கள் தமிழனின் வாக்குல வென்றுபோட்டு சிங்கள சுதந்திரனாளுக்கு ஓடுற சுமந்திரனை மறந்திட்டு சிங்கள சங்ககாராவை வறுத்தெடுக்கிறது அநியாயம்.

Link to comment
Share on other sites

இவர் 2018இல் இப்படி சொன்னவர்:

இப்ப இன்னொரு கதை 

அதுவேற இவர் தான் Marylebone Cricket Clubங்கு தலைவர் வேறை!. 

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

“எமது தேசத்துக்காக இந்த நாளில் உச்சபட்ச தியாகத்தை செய்த வீரமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகின்றோம். பிரார்த்தனை மற்றும் நன்றி உணர்வுகளுடன் எமது சிரம்களை தாழ்த்துகின்றோம்” என்று சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், , ’காலத்தின் தேவை தேசாந்திரமா பிரிந்துகிடக்கும் கும் தமிழர்களின் களின் ஒற்றுமையில் மாத்திரமே ஈழத்தின் விடியல் தங்கியுள்ளது’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா முரளிதரன் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இதனை நாங்கள் எப்போதுமே சொல்லி வருகிறோம்.

எம்மவர்களில் சிலர் இவர்களை தூக்கி தலையில் வைக்கிறது.. பிறகு அவங்கள் தங்கள் புத்தியைக் காட்டினதும்.. தலையில் அடித்துப் புலம்பிறது.

உந்த சிங்கள பேரினவாத விசுவாசிகளுக்கு.. இப்போ காவடி தூக்கிறது.. சூரியக் கதிர் நடவடிக்கையோடு கொழும்புக்கு வந்து இப்போ.. தமக்குள் தாமே.. யாழ்ப்பாணக் கொழும்பு மேட்டுகுடின்னு சொல்லிக்கிட்டு இருக்கிற ஒரு கூட்டம். அதில் கம்பன் கழகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை சங்காவை திட்டிய  பொழுது ஒரு ஏழு எட்டு பேர் பாய்ந்து விழுந்து குதறினவை அதிலும் சங்காவின் பரமரசிகர் அன்றில் இருந்து யாழில் சங்காவின் படம் உள்ள புனை பெயரில் சுனாமி போல் செய்தி இணைப்பு செய்தவர் சங்காவின் படம் யாழில் எங்கும் இருக்கணும் எனும் கொள்கையாக்கும் .சமீபத்தில் சங்கா யாழில் உள்ள தமிழ் சனத்துக்கு உதவி எனும் திரியில் நானும் சிங்களவனை எடைபோடுவதில் அவசரப்பட்டு விட்டேனாக்கும் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டுருந்தன் .ஆனால் இன்று இந்த செய்தி சிங்களவன் சிங்களவந்தான் என்று நிரூபிக்கின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎05‎-‎2020 at 07:42, கிருபன் said:

சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம்

இலங்கை கிரிக்கட் வீரர்களில் நல்லவர், நேர்மையாயனவர், இனவாதம் அற்றவர் என்று எல்லாம் தமிழ் இளைஞர் , யுவதிகளினால் பாராட்டி மிகவும் மதிக்கப்பட்டுவந்த முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை வென்றதாக தென் இலங்கையில் கொண்டாடப்படும் மே 19 வெற்றி நாளில் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து அவரின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்களின் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த படையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ள அவர் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருட்டுக்கு கூட  சிறு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என்றும் இது அவரின் இனவாத மனநிலையை படம்போட்டு காட்டுகின்றது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“எமது தேசத்துக்காக இந்த நாளில் உச்சபட்ச தியாகத்தை செய்த வீரமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகின்றோம். பிரார்த்தனை மற்றும் நன்றி உணர்வுகளுடன் எமது சிரம்களை தாழ்த்துகின்றோம்” என்று சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Screenshot (1)
 
http://www.samakalam.com/செய்திகள்/சங்ககாராவின்-யுத்த-வெற்ற/

இதில் எங்கு அவர் படையினர் என்ற சொல்லை பாவித்தார் ?...//தேசத்திற்காய் உயிர் நீத்த  ஆண்கள்/பெண்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.//   இதில் அவர் புலிகளையும் சேர்த்து சொன்னதாக நாம் ஏன் நினைக்க கூடாது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஓமோம் ஏன் நினைக்கக்கூடாது :cool:

அப்போ புலிகளும் சிங்கள தேசத்திற்காகதான் உயிர் நீத்தார்கள் என்று நீங்கள் நினைச்சு கொள்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இதில் எங்கு அவர் படையினர் என்ற சொல்லை பாவித்தார் ?...//தேசத்திற்காய் உயிர் நீத்த  ஆண்கள்/பெண்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.//   இதில் அவர் புலிகளையும் சேர்த்து சொன்னதாக நாம் ஏன் நினைக்க கூடாது ?

இவ  இன்னிக்கு வேலைக்கு  போகலைபோல் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்கள தளத்துக்கு போய்.... தேசத்தின் வீரர்களை நினைவு கூறும் அதேவேளை.... இந்திய அமைதி படை என்ற பெயரில், நாட்டின் சுதந்திரத்தை பறிக்க வந்தவர்களுடன் மோதி, துரத்தி, நாட்டின் சுதந்திரத்தை அந்நியர்களிடம் இருந்து காத்த, பிரபாகரனையும், புலி வீரர்களையும் இந்த நேரத்தில் நினைக்க கடமைப் பட்டுளோம்... என்று போட்டு விட்டேன்.... ஒருவர் கூட மறுதலிக்க வில்லை. முடிந்தால் சமே சைடு கோல் போடுங்கள்.

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

On 20/5/2020 at 02:42, கிருபன் said:

“எமது தேசத்துக்காக இந்த நாளில் உச்சபட்ச தியாகத்தை செய்த வீரமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகின்றோம். பிரார்த்தனை மற்றும் நன்றி உணர்வுகளுடன் எமது சிரம்களை தாழ்த்துகின்றோம்” என்று சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் இவரும் ??  

Sri Lankan navy man who struck Rajiv with rifle butt arrested for ...

Man who wanted to kill Rajiv Gandhi predicts Rahul will become PM ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

ஒரு சிங்கள தளத்துக்கு போய்.... தேசத்தின் வீரர்களை நினைவு கூறும் அதேவேளை.... இந்திய அமைதி படை என்ற பெயரில், நாட்டின் சுதந்திரத்தை பறிக்க வந்தவர்களுடன் மோதி, துரத்தி, நாட்டின் சுதந்திரத்தை அந்நியர்களிடம் இருந்து காத்த, பிரபாகரனையும், புலி வீரர்களையும் இந்த நேரத்தில் நினைக்க கடமைப் பட்டுளோம்... என்று போட்டு விட்டேன்.... ஒருவர் கூட மறுதலிக்க வில்லை. முடிந்தால் சமே சைடு கோல் போடுங்கள்.

சிங்கள பகுதிகளுக்கு சென்றால் சில இடங்களில் புலிகளை பிடிக்கும் சில இடங்களில் வெறுப்பார்கள் இது இரண்டு இனத்திலும் இருக்கு 

சங்காவை பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது எனக்கு விளையாட்டை மட்டும் பிடிக்கும் வீரர்களின் ரசிகன் இல்லை 

இலங்கையில் யுத்த வெற்றி கொண்டாடும் போது அவரும் ஏதாவது செய்தி சொல்லத்தான் வேண்டும்  யுத்தமே நடக்கல மக்களை மீட்கும் போராட்டம் என்று சொன்ன நம்ம ஆட்கள் கனபேர் இருக்கு 

அதை விட புலிகளில் இருந்து வந்து அவர்களையே விமர்சித்து புத்தகம் வெளியீடு செய்த ஆட்களே வெளிநாடுகளில் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இதில் எங்கு அவர் படையினர் என்ற சொல்லை பாவித்தார் ?...//தேசத்திற்காய் உயிர் நீத்த  ஆண்கள்/பெண்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.//   இதில் அவர் புலிகளையும் சேர்த்து சொன்னதாக நாம் ஏன் நினைக்க கூடாது ?

புலிகளுக்கு தான் சொல்ல வேண்டாம்.. மே 18 வரையும் பின்னும் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொல்லி இருக்கலாமே. புலிகளை விட சிங்களப் படைகளால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் தானே அதிகம். இது கூடவா சங்ககாரவுக்கு தெரியவில்லை..??! சிங்களவர்களுக்கு தெரியவில்லை..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

ஒரு சிங்கள தளத்துக்கு போய்.... தேசத்தின் வீரர்களை நினைவு கூறும் அதேவேளை.... இந்திய அமைதி படை என்ற பெயரில், நாட்டின் சுதந்திரத்தை பறிக்க வந்தவர்களுடன் மோதி, துரத்தி, நாட்டின் சுதந்திரத்தை அந்நியர்களிடம் இருந்து காத்த, பிரபாகரனையும், புலி வீரர்களையும் இந்த நேரத்தில் நினைக்க கடமைப் பட்டுளோம்... என்று போட்டு விட்டேன்.... ஒருவர் கூட மறுதலிக்க வில்லை. முடிந்தால் சமே சைடு கோல் போடுங்கள்.

 மறுதலிக்க மாட்டார்கள். தமது இனத்தையே விற்று பிழைக்க அவர்கள் என்ன தமிழர்களா?

தமது காரியம் ஆகவேண்டுமென்றால் எதிரிகளைகூட நண்பர்களாய் ஆக்குவதில் உலக அளவில் சிறந்தவர்கள் அமெரிக்காவுக்கு அடுத்தது முஸ்லீம்களும் சிங்களவர்களும்தான்.

அதேவேளை இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்த  ஜெயவர்த்தன ஒரு தேச துரோகி என்றும் பதிவிட்டிருக்கலாம் நீங்கள்.

அப்போது தெரிந்திருக்கும்  மறுதலிப்புக்கு பதிலாய் எத்தனை ஆயிரம் அசிங்கமான  பதிலடிகளை நீங்கள் சிங்களவரிடமிருந்து பரிசாய் பெற்று கொண்டிருப்பீகள் என்று.

அவர்கள் தமது இன விஷயத்தில் மானஸ்தர்கள்.

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

இதில் எங்கு அவர் படையினர் என்ற சொல்லை பாவித்தார் ?...//தேசத்திற்காய் உயிர் நீத்த  ஆண்கள்/பெண்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.//   இதில் அவர் புலிகளையும் சேர்த்து சொன்னதாக நாம் ஏன் நினைக்க கூடாது ?

நீங்கள் சொன்னது சரியாக இருந்தாலும் , அவர் சிங்களவர் என்பதால் எம்மவர் அப்படி நினைக்கிறார்கள். அவர்கள் எதிர்மறையாகவே நினைக்க பழக்கப்படட படியால் அப்படி யோசிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஓமோம் ஏன் நினைக்கக்கூடாது :cool:

19 hours ago, valavan said:

அப்போ புலிகளும் சிங்கள தேசத்திற்காகதான் உயிர் நீத்தார்கள் என்று நீங்கள் நினைச்சு கொள்கிறீர்களா?

18 hours ago, nedukkalapoovan said:

புலிகளுக்கு தான் சொல்ல வேண்டாம்.. மே 18 வரையும் பின்னும் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொல்லி இருக்கலாமே. புலிகளை விட சிங்களப் படைகளால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் தானே அதிகம். இது கூடவா சங்ககாரவுக்கு தெரியவில்லை..??! சிங்களவர்களுக்கு தெரியவில்லை..??! 

அவர் எங்கேயாவது "இலங்கை" அல்லது "சிங்கள தேசம்" என்ற சொல்லை பாவித்தாரா ?...இருக்கிற எல்லோரையும் எதிரியாய் பார்க்கும் பழக்கத்தை இனி மேலாவது விடுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவர் எங்கேயாவது "இலங்கை" அல்லது "சிங்கள தேசம்" என்ற சொல்லை பாவித்தாரா ?...இருக்கிற எல்லோரையும் எதிரியாய் பார்க்கும் பழக்கத்தை இனி மேலாவது விடுங்கள் 

ஆமாம் ஆமாம்.. சிங்கள தேச வெற்றி விழா நாளில்.. விடும் ருவிட்டர்.. உலக சமாதானத்தை குறிச்சு நிற்கு தாம் என்று நீங்கள்.. உங்கள் அதிஉச்ச சங்கா.. விசுவாசத்தால் காண்கிறீர்கள் போலும். 

உங்களைப் போல ஒரு சிலர் கள்ளைப் பாலென வார்க்க நிற்பது காலம் காலமாக நடப்பது தான். இப்படித்தான் தமிழர்களை அவர்கள் அரசியல் வியாதிகளும் காலம் காலமாக ஏமாற்றி வருகின்றனர். 

இப்படி எத்தனையைப் பார்த்திட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.