Jump to content

இம்மாதம் மட்டுமே நிவாரண நிதி : கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் - பிரதமர்


Recommended Posts

(இராஜதுரை ஹஷான் )

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடற்படைக்குள் தான் பிரச்சினைகாணப்படுகின்றது. அதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.

மாணவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதால் பாடசாலை, பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கடமையாகும். மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதால் பல்கலைக்கழகம், பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் திணைக்களங்கள் திறக்கப்பட்டு சேவை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

பொதுத்தேர்தல் இன்று நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாறுப்பட்ட தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

இம்மாதம் 5000 நிவாரண நிதியை மக்களுக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குவின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பது அவசியம். இம்மாத்ததிற்கு மாத்திரம் இந்த நிவாரண நிதியை வழங்க முயற்சிப்போம். அடுத்த மாதம் நிவாரண நிதி வழங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

 

https://www.virakesari.lk/article/82437

 

Link to comment
Share on other sites

2 minutes ago, ampanai said:

அடுத்த மாதம் நிவாரண நிதி வழங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

 

வெசாக்கூடு  நிர்மாணிப்போருக்கு நிவாரணம் - பசில்

(இராஜதுரை ஹஷான் )

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் மற்றும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெசாக், பொசன் பண்டிகை இரத்து செய்யப்பட்டன.
இதனால் வெசாக் கூடு, அலங்கார நிர்மாணிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கும் என பொருளாதார புத்தாக்க செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெசாக் கூடு நிர்மாணிப்பாளர்களது சங்கத்தினருக்கும், செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலினாலும்,கொரோனா வைரஸ் தாக்கத்தினாலும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகையினை கொண்டாட முடியவில்லை. இதனால் வெசாக் கூடு, மற்றும் அலங்கார நிர்மாணிப்பவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வங்கி கடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன் இம்முறை பொசன் பண்டிகையின் போது பாதுகாப்பான முறையில் அலங்கார நிர்மாணங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் குறப்பிட்டனர்.

நிர்மாணங்களை நிர்மாணிக்கும் போது தேசிய உற்பத்தி மூலப்பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கும், நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/82413

Link to comment
Share on other sites

"கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டோம்" என உண்மைக்கு புறம்பாக மகிந்தா கூறுவது தேர்தலை அவசரமாக நடாத்தி 3/2 பெரும்பான்மை பெறவே. 

ஆனால், இலங்கையில் போதியளவு நோயுக்கான பரிசோதனை செய்யப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் இல்லை. ஆகவே, பெரும்பான்மையான நோயாளர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவதும் இல்லை. 

சிலவேளை, இரண்டாவது தொற்று அலை வீசுமாக இருந்தால், நிச்சயம் மக்கள் அதிகம் சிக்கலுக்கு உள்ளாவார்கள். பொருளாதர ரீதியாகவும் அதிகம், குறிப்பாக வறுமையில் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் உழைப்பாளிகள் கடினப்படுவார்கள்.  

Link to comment
Share on other sites

உலகளாவிய கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று 24 மணி உலகளாவிய கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று 24 மணித்தியாலங்களில் அதாவது ஒரு நாளில் 1.06 லட்சத்தை முதற்தடவையாக எட்டியுள்ளது.

Global daily cases increased by most ever, WHO says
2:24 ET pm: Countries around the world collectively reported more new cases to the WHO in the past 24 hours than ever before, WHO Director-General Tedros Adhanom Ghebreyesus said. Most new infections are coming from the Americas, followed by Europe and the Middle East, according to data compiled by the WHO. However, the virus could be spreading unknown in parts of the world with limited testing capacity and health care infrastructure. —Will Feuer

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5000 ரூபாய் கொடுப்பனவை நிறுத்துவது பாரிய குற்றம் – சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரசினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில்லைஎன அரசாங்கம் தீர்மானிதால் அதன் மூலம் அரசாங்கம் பாரிய குற்றத்தையிழைக்கின்றது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

நிவாரணத்தை அரசியல்மயபபடுத்தும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்காக மக்கள் அணிதிரள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

patali.000.champika-300x150.jpg
மக்கள் பட்டியினின் பிடியில் சிக்கியுள்ளனர்,பல்வேறு விதமான நெருக்கடிகளினால் சுமைகளை எதிர்கொண்டுள்ளனர் என சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை அகற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் அமைச்சர் இந்த கொடுப்பனவினை விநியோகிப்பதற்கான பொறுப்பை கிராமசேவையாளர்களிடம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Covid-19-1-300x213.jpg
பியகமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் அரசாங்கம் பணத்தை அச்சடித்துள்ளது என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணத்தை தரகுப்பணமாக ஒப்பந்தக்காரர்களிற்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ஜூன் மாதத்திற்கான 5000 ரூபாய் கொடுப்பனவை அரசாங்கம் நிறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/43051

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் ரூபாய் வழங்க பாலியல் இலஞ்சம் கோரல்

@Aravinda.jpg?189db0&189db0

 

மலையகத்தில் 5000 ரூபா சமுர்த்தி உதவி கொடுப்பனவு வழங்களில் இழுத்தடிப்புகளும், கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,

இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருகின்றனர். நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் பிரதேச அரசியல் வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனியாவது எந்தவித பாகுபாடுகளும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்பதாகவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/ஐயாயிரம்-ரூபாய்-வழங்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.