• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இராணுவ ஆட்சிக்கு இடமளியோம் - மரிக்கார்

Recommended Posts

(செ.தேன்மொழி)

நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார்.

marikar.jpg

 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

புண்ணியத்திற்காக தோன்றிய ஜனாதிபதியாகவே கோதாபய ராஜபக்ஷ காண்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆட்சியைக் கைப்பற்றிய தருணத்திலிருந்து இன்று வரை கொரோனா வைரஸ் பரவல்இ எலிக்காய்ச்சல் மற்றும் வெள்ளப் பெருக்கு என்று அழிவுகளே ஏற்பட்டு வருகின்றன.
எமது ஆட்சிக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எந்தவித விண்ணப்பங்களும் பூர்த்திச் செய்யப்படாமல் அனைவருக்கும் உடனே நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால். தற்போதைய அரசாங்கம் கொரேனா நெருக்கடியால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்தும் இன்னமும் முழுமையாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

வைரஸ் பரவலினால் நாடுமூடப்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலே இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இந்தக்காலப்பகுதியில் சிலர் அவர்களது வீடுகளிலிருந்தே தொழில் செய்யவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதனால் வழமைக்கு மாறாக நீர் மற்றும் மின்சாரம், தொலைபேசி பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனால் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை சிலருக்கு ஊதியம்கிடைக்கப்படாமளும் இன்னும் சிலருக்கு அரைவாசி ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கள் அவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத கழிவையோ அல்லது ஆறு மாதகால கால அவகாசத்தையோ பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓமாகம பகுதியில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு முன்னர் கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி, உற்பத்தி நிலையங்கள் என்பவற்றை முன்னேற்றுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எக்காலத்திற்கும் உகந்த செயற்பாடுகளாகும். ஆனால் அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும் என்று கூறுவது மூடத்தனமானதாகும். அரசாங்கம் மக்களின் நலரனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைத்தரும் விடயங்களை முன்னெடுத்தால் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்போம். அதனை விடுத்து எமது ஆட்சிகாலத்தில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பேச்சு சுகந்திரம் ஊடகசு தந்திரம், சுயாதீனமான நசீதித்துறை என்பறை ஒழித்து அடக்குமுறைஆட்சி, அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படுதல் மற்றும் இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தால். அதற்கு எதிராக குறல் எழுப்புவோம்.

அரசாங்கத்தின் துணையில் இருக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் டைக்கோட் அணிந்த மோசடிதாரர்களோ, சால்வை அணிந்த மோசடிகாரர்களோ கிடையாது. நாட்டிலர் இதுவரையிருந்த ஆட்சிமுறைக்க மாறுப்பட்ட முறையிலான மக்களின் நலனைமட்டும் கருத்திற்கொண்ட ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

https://www.virakesari.lk/article/82434

Share this post


Link to post
Share on other sites

எதோ இவரை கேட்டு விட்டு தான் இராணுவம் ஆட்சியை பிடிக்குமாக்கும்; 

Share this post


Link to post
Share on other sites

மரிக்கார் எந்த நாட்டுல இருந்து பேசுறார்?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

ஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார் 

http://www.ft.lk/columns/Defence-re-defined-The-military-as-first-resort/4-700510

 

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, ampanai said:

ஏற்கனவே அங்கு இராணுவ ஆட்சிதானே நடக்கின்றது: பேராசிரியர் சொல்கிறார் 

http://www.ft.lk/columns/Defence-re-defined-The-military-as-first-resort/4-700510

 

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, Vankalayan said:

அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

ஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....?

10 hours ago, ampanai said:

நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

இடமளிப்பதற்கும் இடமளிக்காமலிருப்பதற்கும் நீங்க யாரு மரைக்கார்  ..? 
பியூஸ் போன கூட்டமெலாம் பண்ணும் அலப்பறைகள் தாங்கமுடியலடா சாமி 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Vankalayan said:

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

புத்த கோவிலில் ஒரு பிரச்சனை என்றால் அதில் வந்து தலையிட வேண்டியது காவல்துறை - அது சனநாயக நாடு.

ஒரு பொது சுகாதார பிரச்சனை என்றால் அங்கே தலையிடவேண்டியது சுகாதார துறையும் அதுசார் வல்லுனர்களும். மாறாக, இங்கே எல்லாமே முப்படை, அதலான் தான் அதிகளவில் கடற்படை பாதிப்பு 

அங்கே வந்து இராணுவம் தலையிட்டால் ? அது இராணுவ ஆட்சி நடக்கும் நாடு 

99090656_10158068616556855_46833268288389120_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=ri0rbdouAQIAX8j5wQ4&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=0ae8a1cc66b2f4b03bcc24e156407d7d&oe=5EEBC6CC

 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ அதுதான் கொரோனாவை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு , வைத்தியர்கள் ,மருத்துவ பணியாளர்களை தவிர்த்து கடற்படையை அனுப்பி போராட விட்டவைகளோ, இந்த கைங்கரியத்தால் தான் ஆயிரத்திற்குள் மட்டுப்பட வேண்டிய தொற்று தற்போது மீறியுள்ளது. அதுசரி உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய வியாத்மக புத்திஜீவி யாரோ ....?

 

வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.

 கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, Vankalayan said:

கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

இது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,
கொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால்  அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.

உண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.

இதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில் 
அதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர் 
அவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா  தான்   

Edited by அக்னியஷ்த்ரா

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

இது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்களை வைத்து கூறும் கூற்று ,
கொரானா நோய்த்தொற்று தொற்றியுள்ள அநேக இளவயதுடையோர் அறிகுறிகளை காட்டாமலே குணமடைவதாக WHO தெரிவித்திருந்தது ஆனால்  அவர்கள் பலபேருக்கு காவிகளாக செயற்பட்டிருக்கலாம்.

உண்மையான இலக்கம் செய்யப்படும் Swab டெஸ்ட் அடிப்படையிலேயே வெளித்தெரியும் அதனடிப்படையில் இலங்கை ஒரு மில்லியன் தொகைக்கு 930 சோதனைகள் ,சிங்கப்பூரோ 51,600 சோதனைகள்.

இதனாலேயே சிங்கப்பூரில் அதிக நோயாளிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர் , இவர்களில் 
அதிகமான Foreign Dom களில் தங்கியிருந்தவர்கள் மிக அரிதான மற்றும் அறிகுறிகளே வெளித்தெரியாமல் இருந்தவர்கள் ஆனால் சோதனைகளில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்கள். இலங்கையில் இப்படி பலபேர் 
அவர்களாகவே நோய்களை பரப்பி குணமடைகின்றனர். இலங்கையின் இந்த கணக்கெல்லாம் வியாத்மக கப்ரால் ஒரு காலத்தில் அடித்துவிட்ட பொருளாதார வளர்ச்சி 8-9% புருடா வகையறா  தான்   

இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.

இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை. 

Share this post


Link to post
Share on other sites
On 20/5/2020 at 22:00, Vankalayan said:

நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.

எப்படி ? அமெரிக்காவுக்குப் போன்போட்டா 😂

On 20/5/2020 at 22:39, Vankalayan said:

இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

ஐயா

வெள்ளையடிப்பதுதான் உங்கள் தொழிலோ 🤔

On 21/5/2020 at 21:52, Vankalayan said:

வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை.

 கோரோனோ இலங்கையில்  இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.

கொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா 😂

Share this post


Link to post
Share on other sites
On 21/5/2020 at 12:39, Vankalayan said:

ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள்.

ஜனாதிபதியாக வீற்றிருப்பவர், ஒரு இனத்தை அழித்த போர்க்குற்றவாளி.  மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை, அதி உயர் பதவிகளுக்கு நியமிப்பவரும் அவர். இதன் பின்னும் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்?   வெகு விரைவில் இதற்கு பதில் கிடைக்கும். அதுவரை பொறுத்திருங்கள்.

On 22/5/2020 at 11:52, Vankalayan said:

மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது

மற்றய நாடுகளுக்குள் கொரோனா கொண்டு செல்லப்பட்டது. நமது நாடு தேடிப்போய் வாங்கி வந்ததனால், முன்னேறி இருக்கிறது. முழுவதுமாக  அழித்து விட்டால்  சந்தோசம். 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Vankalayan said:

இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே.

இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை.

அதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி 
கொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, Kapithan said:

எப்படி ? அமெரிக்காவுக்குப் போன்போட்டா 😂

ஐயா

வெள்ளையடிப்பதுதான் உங்கள் தொழிலோ 🤔

கொயபல்ஸ் என்று ஒருவர் ஜேர்மனியில் இருந்ததாக நினைவில் உள்ளது. அவரை உங்களுக்குத் தெரியுமா 😂

சிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதான் திடீர் மரணம் ,சும்மா இருந்தவர் கீழே விழுந்து மரணம் என்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறதே ..இப்பவே அவசரப்பட்டால் எப்படி 
கொஞ்சம் பொறுங்கோ கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 

அப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும்? வருடக்கணக்காகுமா ? அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே? 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Vankalayan said:

சிலவேளைகளில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கோயபல்சை போன்றவர்கள் கோயபல்சை மறக்க மாடடார்கள்.

 

ஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது ☹️

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் எவ்வளவு காலம் செல்லும்? வருடக்கணக்காகுமா ? அப்படி என்றால் வெளி நாடுகளில் அவர்களை கண்டுபிடித்தும் நிறைய மரணங்கள் சம்பவிக்குதே?

எல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
சிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்
வெறும் 23 பேர் தான் 
ஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.
சிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர் 
சோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.
நான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை

Share this post


Link to post
Share on other sites

Vankalayan,

இலங்கையில் கொரோனா உறுதி செய்யபட்டவர்கள் வெறும் 1106 இறப்பு தொகை வெறும் 9.
இலங்கையின் கைலிலாகாத கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை
இலங்கை கொரோனா இறப்பு தொகையில் அமெரிக்கா,  இங்கிலாந்தை  முந்துகின்றது    என்று பத்திரிக்கைகளில் செய்தி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் 😂

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, Kapithan said:

ஒரு இனத்தைக் கருவறுத்தவர்களுக்குகொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் எப்படி உங்களால் வெள்ளையடிக்க முடிகிறது ☹️

யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

எல்லாமே நிகழ்தகவு தான் .. தொற்றுபவர்கள் எல்லோரும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்றால் கொரோனாவால் கூட ஒன்றும் செய்யமுடியாது.
சிங்கப்பூரின் தொகை 31600 ஐ தொடுகிறது மரணமடைந்த வர்கள்
வெறும் 23 பேர் தான் 
ஆக பாதிக்கப்பட்டோரில் இது 0.0686 வீதம்.
சிங்கப்பூர் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தாலே இவர்களில் அநேகர் தாங்களாகவே குணம்டைந்திருப்பர் 
சோதனைேயே உண்மை நிலவரத்தை வெளிக்காட்டியது.
நான் கூற வருவதும் இதைத்தான் ஏற்கனவே அண்டப் புளுகுகளுக்கு பெயர் போன இலங்கை அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வேண்டுமானால் நம்பலாம் அது உங்கள் உரிமை

அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, Vankalayan said:

அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா

நல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை

இலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.
வட பிராந்திய வைத்தியர்களை விட 
கோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு
https://www.wsws.org/en/articles/2020/04/29/jaff-a29.html

எப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல
 

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, Vankalayan said:

யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. 

 

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம்  மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள். 🙂

Share this post


Link to post
Share on other sites
Just now, அக்னியஷ்த்ரா said:

நல்லா ஆட்டுக்குள் கொண்டு வந்து மாட்டை ஓட்டுகிறீர்கள் வங்காலை

இலங்கையின் புள்ளிவிபர ஓட்டையை பற்றிகதைத்தால் ஜெர்மனி பிரான்ஸ் நோர்வெயை தூக்கி கொண்டு வருகிறீர்கள்.
வட பிராந்திய வைத்தியர்களை விட 
கோத்தாவுக்கும் உங்களுக்கும் தான் கன விடயம் தெரியும் போல கிடக்கு
https://www.wsws.org/en/articles/2020/04/29/jaff-a29.html

எப்பிடி இருக்கு இனி இதை வைத்தியர்களின் ஆகாசப்புழுகு என்பீர்கள் போல
 

அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. 

Just now, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால், அனுபவம்  மேலும் அதிகமாகத் தேவை என்று பொருள். 🙂

இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Vankalayan said:

அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. 

இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.

அப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன். 🙂

Share this post


Link to post
Share on other sites
Just now, Kapithan said:

அப்படியென்றால் எழுத வேண்டாம். உம்மை நம்புகிறேன். 🙂

உணமையை மட்டுமே எழுதுவேன். 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன? பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது.   மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது.   சிலகாலத்திற்கு முன் ஓர் நண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புலவரால் தமிழில் எழுதப்பட்ட சிறிய பாடலொன்றின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இக் கவிதையில் நம்பத்தகாத சில அம்சங்கள் இருந்தாலும் இப்புனித ஆலயத்தின் ஆரம்பகாலத்தையும் வரலாற்றையும் இது விளக்குகின்றது. எனவே இக்கவிதையிற் சொல்லப்பட்ட வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கேற்பட்டது. பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக அத்தகவலை இங்கு சமர்ப்பிக்கிறேன்..   சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த மனு நீதி கண்ட சோழன் என்ற அரசன் கைலாச புராணத் திலிருந்து திருகோணமலையின் அற்புதங்களையும் அங்கு வாழும் மக்களின் சிறப்புக்களையும் அறிந்து அவ்விடத் துக்கு வந்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்த அவனது மகன் குளக்கோட்டு மகாராஜாகலியுக வருடம் 512 வது ஆண்டு (கிறிஸ்துவுக்கு முன் 1589-ம் ஆண்டு ) வைகாசி மாதம் பத்தாம் நாள் திங்கட்கிழமை, தெப்பக்குளம் போன்றவற்றை ஏற்படுத்தி இக் கோவிலைப் புனருத்தாரணம் செய்வித்தான்.   கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின் கோவிலின் நாளாந்த தேவைக்கு அரிசி மற்றும் பொருட்களை சோழ மண்டலத்திலிருந்து வரவழைப்பதிலுள்ள கஷ்டங்களை அரசன் உணர்ந்தான். அதனால் 2800 அமோனம் காணியை நெல் விளைச்சலுக்காக பண்படுத்தி அக்காணிக்கு நீர்ப்பாசன வசதி செய்வதற்காக ஓர் குளத்தையும் கட்டுவித்து கோணேசர்சுவாமிக்கு அதைக் காணிக்கையாக்கினான்.   அதன் பின் அவன் வடக்கேயுள்ள மருகூர் என்னும் கிராமத்திற்கு சென்று கலியுகம் 516ம் ஆண்டு பங்குனி 24ம்தேதி ஏழு வேளாள குடும்பத்தினரை திருக்கோணமலைக்கு அழைத்து வந்து குடியமர்த்தினான். அவர்களுக்கு கோவிலும் அதற்குச் சொந்தமான காணிகளும் மரபு வழியாகச் சேர வேண்டியது என்பதை உறுதிப்படுத்தினான்.   கோவில் சொத்துக்களை பராமரிக்கவும் வரவு செலவுகள் விழாக்கள் நடத்துதல் அரசர்களுக்கு பட்டுடை தரித்தல் போன்றவற்றை கவனிக்கும் பொறுப்புக்களும் இக்குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.   கோவில் தொண்டுகளுக்கு மேலும் ஆட்கள் தேவைப்பட்டதால், குளக்கோட்டு மன்னன், காரைக்காடு என்னும் கிராமத்துக்கு சென்று கட்டாயமாக 20 குடும்பங்களை கொண் டுந்து மேற்கூறப்பட்ட அதே ஆண்டில் வைகாசி 10ம் நாள் குடியேற்றி சிவலிங்கத்தை அலங்கரித்தல் ஆலயத்துக்கு மலர்கள் சேகரித்தல் ஆலயத்தை தினசரி பெருக்கி சுத்தமாக்குதல், அபிஷேகத்துக்கு தண்ணீர் அள்ளிக் சொடுத்தல், நெல்லுக்குத்துதல், கோவிலை' சாணி கொண்டு மெழுகுதல் தேவாரம் ஓதுதல் மேள வாத்தியம் நாதஸ்வரம் வாசித்தல், வேள்விக்கு உதவி செய்தல், விசேட கனங்களில் கொடி ஏற்றுதல் இறக்குதல், சந்தனம் அரைத்தல், கோவில் ஆபரணங்களை புடம் போடுதல் போன்ற வேலைகளுக்கு நிய மித்தான். இம்மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய நிலம் அளிக்கப்பட்டதுடன், இவர்களில் ஐந்து பேர் தெரிந்தெடுக்கப்பட்டு பண்டாரத்தார்' என சிறப்பாக அழைக்கப்பட்டனர்.   முதல் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட ஏழு குடும்பத்தினரும் தானாட்டார்' என்றும், அதற்கு பின் குடியமர்த்தப்பட்ட 20 குடும்பத்தினரும் வாரி பட்டர்' என்றும் குறிப்பிடப்பட்டனர்.   "வாரிபட்டர்களுக்கும் தானாட்டாருக்குமிடைமிடையே ஏதாவது தகராறு ஏற்படும் போது நீதி வழங்குவதற்கு ஒரு வருமில்லையென்பதை உணர்ந்த அரசன், அவர்களுக்குத் தலைவராக ஒருவரை நியமனம் செய்ய முடிவு செய்தான். அதனால் மதுரை சென்று தனியுண்ண பூபாலன் என்ற பேரறிஞரை அழைத்து வந்து அவருக்கு வன்னியன் பட்டம் சூட்டி திருக்கோணமலையின் கவர்னராக நியமித்தான். குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கவும், சிறைக்கனுப்பவும் தேவையானால் மரண தண்டன விதிக்கவும், கோவில் காரியங்கள் தவறேதுமின்றி நடைபெற வேண்டிய நடவடிக்கையெடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது 1635 இல் வரையப்பட்ட கோணேஸ்வரர் கோவிலை சுற்றிய வரைப்படம்.  அத்துடன் கட்டுக்குளம் மக்கள் தங்கள் சேவையை கோவிலுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டுமென்றும், நிலா வெளிமக்கள் கோவில் விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டுமென்றும், கோவிலுக்கு ஆறு அமோனம் நெல்லும், கிடைக்கும் வரிப்பணத்திலும் வாணிக வரிப்பணத்திலும் பத்திலொருபங்கும் கோவிலுக்கு கொடுக்க வேண்டுமென்றும் கொட்டியாரத்து கிராம மக்கள், கோவிலுக்கு வெ ற்றிலை, வாழைப்பழம் சந்தனக் கட்டை , தயிர், நெய், 100 அமோனம் அரிசி, ஆமணக்கு, புன்னை, இலுப்பை விதைகள் வழங்க வேண்டுமெனவும் அரசன் கட்டளையிட்டான். கடைசியில் குறிப்பிடப்பட்ட விதைகள், ஐரதீவு மக்களிடம் கொடுக்கப்பட்டு எண்ணையாக்கப்பட்டவுடன், அந்த எண்ணை செவுளி முனை தொட்டியனிடம்" தரப்படவேண்டும். அவன், எண்ணையின் அளவை கோவில் கணக்கில் பதிந்த பின்னர் எண்ணையை கோயில் களஞ்சியத்தில் ஊற்றிவைக்க வேண்டும். இவ்வெண்ணை கோவில் விளக்குகள் எரிக்கப் பயன்படுத்தப்படும்.   'கோவிலின் தெற்கு புறத்தில் எண்ணையை ஊற்றி வைப்பதற்காக ஏழு களஞ்சியங்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தான்,   இந்த உத்தரவுகள் விடப்பட்ட பின்னர் மன்னன் கோவில் உள் விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கினான். தினசரி 1000 நெய் விளக்குகளும், 11,000 எண்ணெய் விளக்குகளும் கோவிலின் உள்ளும் புறமும் ஏற்றப்பட வேண்டும் என்று கோவில் ஊழியர்களுக்கு கட்டளையிட்டான் கோவில் மண்டபமெங்கும் கஸ்தூரியும் சந்தனமம் கலந்த ரோஜாப்பூ பன்னீர்தெளிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட காலங்களில் நிவேதனத்துக்கு தயிர் சாதம் தயாரிக்க வேண்டுமென்றும், சுப் பிரமணியருக்கு 12 வெள்ளித் தாம்பாளங்களிலும், பிள்ளையாருக்கு 6 வெள்ளித் தாம்பாளங்களிலும், மீதியுள்ள தெய்வங்களுக்கு 128 செப்புத்தாம்பளங்களிலும் நிவேதனம் படைக்கவேண்டுமெனவும் உத்தரவிட்டான்.   அத்துடன் நிவேதனத்துக்கு பல ஆயிரக்கணக்கான அமுது உருண்டைகள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்ட விசேட தினங்களில் ஆயிரம் தகழிகளையுடைய கற்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டுமென்றும் பணித்தான்.'   (மேற் கூறப்பட்ட கோவில் நிறுவப்பட்ட விபரங்களையும் கோவிலில் நடை பெற்றுவந்த நிகழ்ச்சிகளையும் விளக்கமாகச கூறிய கவி ராஜவரோதயன் கோவில் சிறப்புற்றோங்குவது பற்றியும், பின்னர் வெளிநாட்டுக்காரர்களால் கைப்பற்றப்படும் என்றும் மன்னன் கூறிய தீர்க்க தரிசனங்களைக் குறிப்பிட்டு விட்டு மேலும் கூறுவதாவது)   அரசன் ஒரு நாள் கோவில் புனித குளத்தில் நீராடி தனது பூஜை பிரார்த்தனைகளை முடித்து விட்டு, தனது தலையில் ஓர் உருத்திராட்ச மாலையணிந்து நெற்றியில் திரு நீறணித்து, இருகைகளிலும் மலர்கள் ஏந்தியபடி கோவில் பிரசாரத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்துள் நுழைந்தான். உள்ளே நுழைந்த அரசன் வெகு நேரமாகியும் வெளியே வராததைக்கண்ட அவனது மெய்காப்பாளர்கள், சந்தேகங்கொண்டு உள்ளே நுழைந்த போது கடவுளின் திருவுருவத்தின் முன்னே அவன் ஓர் தாமரை மலராக உருமாறியிருந்ததைக் கண்டு பிரலாபிக்கத் தொடங்கினர்.   திருமூலர் மறைந்ததற்கும் அரசன் மலராக உருமாறியதற்கும் ஒரு இரத்த தொடர்பு இருக்கிறது. அதே போல குளக்கோட்டு மகாராஜாவும் கடவுளில் ஒருவராகி விட்டார். திருகோணநாதமலை மக்கள் அவருக்கு தங்கள் நன்றியைக்காட்டத் தயங்கவில்லை.   குளக்கோட்டு மகாராஜாவின் உருமாற்றம் நிகழ்ந்து பல வருடங்களின் பின், கஜ பாகு மகாராஜா என அழைக்கப்பட்ட மன்னன் ஒருவன் திரு கோணாமலைக்கு யாத்திரை வந்தான். வந்த இடத்தில் கோவில் அதுவரை நிர்வகித்து வந்த பாசபட்டர் (பாசுபதர்) இறந்து விட்டதையும் அவருக்கு பின் அதை ஒருவரும் கவனிக்காததையும் கண்டு துக்கித்தான் கோவில் குருக்களின்றி பூசையில்லாமலிருந்த நிலையை மாற்றியமைக்க முடிவு செய்தான். 1870 இல் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் அரசன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது இரு பிராமணச் சிறுவர்கள் கையில் வேதத்துடன் சமுத்திரத்தில் மிதந்து வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டவுடன் மகிழ்ச்யடைந்து, தன்னிருக்கை விட்டெழுந்து அவர்களை நோக்கி கடலில் இறங்கிச் சென்று இருகைகளிலும் ஒவ்வொருவரைப் பிடித்து கரைக்கு அழைத்து வந்தான். அவர்களை இருபாதி என்று அழைத்தான்.   அவர்கள் இருவரையும் கோவில் குருக்களாக நியமித்து அவர்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிந்து நடக்கும்படி வன்னியருக்கும், தானாட்டார், வாரியப் பட்டருக்கும் உத்தரவிட்ட துடன், அவர்களது சேவையை முன்போல அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.   கஜபாகு மகராஜா, ஐந்து வகையான நகர சேவையாளர்களை (பொற் கொல்லர், மட்பாண்டம் செய்வோர், நாவிதர், வண்ணக்கர், பறையர்) திருமலையில் குடியமர்த்தி அவர்களுக்கு. நிலமும் நெல்வயலும் வழங்கினார்.    அடுத்ததாக மகாவலிகங்கைக்கு அணித்தாக உள்ள கொட்டியாரத்தில் ஓர் குளம் கட்டுவிக்கவும் , 6350 அமோனம் நெற் காணிகளில் விளைச்சலைப் பெருக்கவும், புன்னை இலுப்பை ஆமணக்கு, கொக்கோ மரங்களைப் பயிரிடவும் கஜபாகு ஏற்பாடு செய்தான். இவற்றின் வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை கோவிலுக்கு அளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டான்   சைவ வணக்க ஸ்தலத்தை இத்துத்தள்ளிவிட்டு அவ்விடத்தில் ஓர் பௌத்த ஆலயத்தை நிர்மாணிப்பதென தான் முன்பு திட்டமிட்ட பாவத்துக்கு கழுவாய் தேடிக்கொள்ளுமுகமாகவே கஜபாகு மன்னன் கோணேசர் சுவாமிக்கு மேற்கண்ட தொண்டுகளைப் புரிந்தான்.   அதன் பின்னர் கஜபாகு மகராஜா, நாட்டுப் பிரஜைகளை அழைத்து குளக்கோட்டு மகாராஜா ஸ்தாபித்த நிறுவவனங்களை அழித்துவிடாதபடி பாதுகாக்கும்படி கட்டளையிட்டதுடன் இரு பாதி பிராமணர்களுக்கு ராஜகுரு, என்ற பட்டமளித்ததுடன் கோவிலுக்கு சொந்தமான நகைகளையும், செல்வங்களையும் அவர்களிடமே ஒப்படைத்தான்.   பின்னர், தனது தலைநகராகிய அனுராதபுரம் திரும்பி நீண்டகாலம் ஆட்சிபுரிந்ததன் பின்னர் சிவனடி சேர்த்தான்''   குறித்த கையெழுத்துப் பாடலில் கூறப்பட்டுள்ள கருத்தை ஓரளவு மொழி பெயர்த்து மேலே தந்துள்ளேன். இலங்கையின் பழைய வரலாற்றை ஆராய்பவர்களுக்கு இது ஒரு தூண்டுதலாக அமையும் என்பது எனது நம்பிக்கை .   இங்ஙனம், தங்கள் உண்மையுள்ள இன்டியோபைலஸ்,  கல்பென்ரின், 21 நவம்பர், -1831 உண்மைப் பிரதி. ஒப்பம்: சி. ரெய்மரா அரசாங்கப் பதிவாளர். குடியேற்ற நாட்டு செயலாளர் அவவலகம், கொழும்பு, 23 மே 1928.   நன்றி சுதந்திரன் - 29.09.1968     இப்பத்திரிகை நூலகம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.   https://www.namathumalayagam.com/2020/07/koneswaraTemple.html
    • விசுவாசம் படத்தின் கண்ணான கண்ணே என்ற பாடல் பாடி அசத்திய சஹானா  
    • கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் …… Last updated Jul 13, 2020 கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! ”  என பாடம் புகட்டியவன் ரஞ்சன்.   இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை. ஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல்,  இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய். சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பிரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார். மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின. வாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன். உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது. ‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத்தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று.   கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது. நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள். இராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை. பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன. மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன். உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய். மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை. தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய். அதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன.   மோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய். ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரிஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய். உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய். உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான். அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான். நினைவுப்பகிர்வு:- அஜித் வெளியீடு :களத்தில் இதழ்  ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “   https://www.thaarakam.com/news/141753
    • அம்பாறை தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் – சயனொளிபவன்   திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் சிங்கள மக்கள் இடையேயும், இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் மக்கள் இடையேயும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் ஒரு ஆசனம் யாருக்கு கிடைக்க போகின்றது என்பதே தற்பொழுது எழுந்துள்ள கேள்வியாகும். பெரும்பாலும் இந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள போவது அதாவுல்லாவா இல்லை தமிழ் மக்களா என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்துள்ளது என்று குறித்த தேர்தல் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சயனொளிபவன் தெரிவித்தார். நாவிதன்வெளியில் நேற்று (12) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலிலே பல தேசிய மற்றும் பேரினவாத கட்சிகளும், அத்தோடு எண்ணிலடங்கா வேட்பாளர்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் ஆசனத்தை கைப்பற்ற கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. தற்பொழுது அம்பாறை மாவட்ட தமிழர்களின் அளிக்கப்படக்கூடிய வாக்குகளாக 95,000 வாக்குகள் கனிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் பிரநிதித்துத்துவத்தை இழக்க செய்வதற்காகவும் பல தேசிய கட்சிகளும் பல சுயேட்சை குழுக்களும் இத்தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளனர் கட்சி பேதங்கள், தனிப்பட்ட வெற்றி தோல்விகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியே ஆக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் நாம் இன்று பயணிக்கின்றோம். பெரும்பாலான வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் களமிறக்கியுள்ளனர். இதனை நாம் நன்கு உணராவிடின் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி வலையிலே சிக்கி அரசியல் அநாதையாகிவிடுவது மாத்திரமன்றி பிற சமூகத்திடம் கையேந்தி நிற்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு அம்பாறை தமிழர்கள் நாம் புறந்தள்ளப்படுவோம்.” – என்றார்.   https://newuthayan.com/அம்பாறை-தமிழர்களின்-இருப/
    • பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சி - அடியோடு அழிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் (ஆர்.யசி) நாட்டில் பயங்கரவாதிகளின் ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவ்வாறன அடிப்படைவாதிகளின் முயற்சிகளை ஆரம்பத்திலேயே இல்லது செய்வோம் எனவும்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுகின்றார். கொக்காவில் போரின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து பாரிய அச்சுறுத்தல் ஒன்று கடந்த காலத்தில் எழுந்தது, அவ்வாறான நேரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தெரிவு  செய்யப்பட்டர். அவர் ஜனாதிபதியான பின்னர் என்னை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். அதாவது நாட்டின் பாதுகாப்பு குறித்த மிக முக்கிய பொறுப்பை அவர் என்னிடம் ஒப்படைத்தார். தேசிய பாதுகாப்பு என்பது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டினை பாதுகாப்பதோ அல்லது வேறு நாடுகளிடம் இருந்து ஏற்படும் நெருக்கடிகளை கையாள்வது மட்டுமல்ல. இந்த நாட்டில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் வேலைகளிலும், கொவிட் -19 போன்ற நோய் தாக்கங்களில் மக்கள் மரணிக்க நேரும் சந்தர்ப்பங்களில் அவ்வாறான நெருக்கடிகளில் இருந்து மக்களையும் நாட்டினையும் பாதுகாப்பதும் தேசிய பாதுகாப்பு கடமைகளில் பிரதானமான ஒன்றாகும். அதனையே இன்று நாம் முன்னெடுத்து வருகின்றோம். கடந்த காலத்தில் எமது இராணுவத்திற்கு உறங்கக் கூட நேரம் இருக்கவில்லை. எமது மக்களை பாதுகாக்க வேண்டிய தூக்கமின்றி அவர்கள் கடமை புரிந்தனர். அந்த செயற்பாடே எமது வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மீண்டும் கொவிட் வைரஸ் பரவல் தலைதூக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. ஆனால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம். என்ன அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டாலும் மீண்டும் கொவிட் வைரஸ் தலைதூக்க விடாது நாம் மக்களை மீட்கும் எமது கடமையை மிகச்சரியாக முன்னெடுப்போம் என்ற சான்றிதழை எம்மால் வழங்க முடியும். ஆகவே  மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் எமது நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்றால் எமது கடமைகளை நாம் சரியாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். எமது கடமை பொறுப்புக்களை நாம் சரியான நிறைவேற்றினால் எமது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வார்கள். இந்த நாட்டில் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை எமக்கு உள்ளது. விடுதலைப்புலிகளுடன் நாம் முன்னெடுத்த ஆயுத போராட்டடம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம்திகதி காலை 10.30 மணியுடன் நந்திக்கடல் எல்லையுடன் முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். பயங்கரவாத ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக மாறும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே பொறுப்புள்ள இராணுவம் என்ற விதத்தில் இந்த நட்டு மக்களை மீண்டும் அழிவுக்கு கொண்டு செல்லும் பயங்கரவாதத்தை தலைதூக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுக்கும்  நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். இலங்கையில் சகல மக்களும் அமைதியாக வாழ வேண்டும். ஆனால் இலங்கையில் கடந்த காலங்களில் அடிப்படைவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இந்த உலகத்தின் பழமையான மதம் ஒன்றினை தவறாக கருத்துரு கொடுத்து அடிப்படைவாதிகள் சிலர் இந்த நாட்டில் உருவாக்கி எமது மக்களை பலிகொடுக்க நினைக்கின்றனர் என்றால் அதற்கு எதிராக செயற்படுவதும் எமது கடமையாகும். யுத்தத்தில் 28 ஆயிரம் வீரர்களை இழந்து மீட்டெடுத்த எமது நாட்டினை மீண்டும் நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என்றார்.    https://www.virakesari.lk/article/85723