Jump to content

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் தொழில்நுட்பம்

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், அவரை பற்றிய நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு.

மேலும், ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன மாற்றங்களை செய்திருப்பார் என்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியை பற்றி தங்கபாலு தெரிவித்ததாவது;

''இளைய பாரதத்தை கட்டி எழுப்பியவர் ராஜீவ் காந்தி, அவர் கொண்டு வந்த திட்டங்களால் தான் இன்று இந்தியா இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி தான் அடித்தளமிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில் நுட்ப மேம்பாடு மிக அவசியம் என்பதை அன்றே அடையாளம் கண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தியை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவரை போல் தன்னலமற்ற தலைவரை பார்க்க முடியாது. தனது நலத்தை பற்றி ஒரு நாளும் அவர் சிந்தித்தது கிடையாது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் ராஜீவ்காந்தி மிக உறுதியுடன் இருந்தார். சுதந்திர இந்தியா உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க வேண்டும் என எண்ணியவர்.
 

ராஜீவ்காந்தி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தார் என்றால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்திருக்கும். அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். புதிய இந்தியாவில் வறுமை இருக்கக்கூடாது, அரசியல், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் ஏற்றம் பெற வேண்டும் என சிந்தித்து செயல்பட்டவர் ராஜீவ் காந்தி. இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்தவர் அவர்.

ராஜீவ் காந்தி மட்டும் மறையவில்லை என்றால் இந்நேரம் ஏழ்மையும்; வறுமையும் இல்லாத இந்தியாவை உருவாக்கியிருப்பார். சமூக பொருளாதார திட்டத்தில் புதுமையைக் கொண்டு வந்தார். இந்தியா தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் ராஜீவ். அவரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம்'', என்று தனது எண்ண ஓட்டங்களையும், ராஜீவை பற்றிய நினைவலைகளையும் தங்கபாலு பகிர்ந்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kv-thangabalu-says-if-rajiv-gandhi-had-been-alive-he-would-have-made-india-a-superpower-386133.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடத்தெரியாதவள் மேடை சரியெல்லை என்டாளாம்.

ராஜீவின் மரணத்திற்கு பின் வளர்ச்சியடையத் தொடங்கிய சீனா.. இன்று உலகப் பொருண்மியத்தின் இரண்டாம் இடத்தை தொட்டுவிட்டது. 

குறிப்பாக தமிழக காங்கிரஸூக்கும்.. ராஜீவ் குடும்பத்திற்கும்.. ராஜீவின் மரணம் தான் அரசியல் முதலீடு. 

இதனால்.. ஹிந்தியா பொருண்மிய ரீதியில் ஒருபோதும் வளர முடியாது. வேணும் என்றால் ராஜீவ் குடும்ப செல்வச் செழிப்பில்.. செல்வாக்கில் வளர்ச்சி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் ஊழலை அறிமுக‌ம் செய்து வைச்ச‌தே இந்த‌ ராஜிவ் காந்தி தான் /

இதில‌ நாட்டு வ‌ள‌ர்சியை ப‌ற்றி இவ‌ர் அறிக்கை விடுகிறார் / 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது இந்தியா வல்லரசு இல்லை என்று இப்பவும் ஒரு வல்லரசுக்கு தேவையான பணத்தை விட அதிக பணம் உள்ளது முக்கியமாய் மாநில கட்சிகளின் தலைவர்களின்  பினாமிகளை பிடிச்ச்சு உலுப்ப  டிரில்லியன் கணக்கான கருப்பு பணம் வந்து கொட்டும் அதைவிட மத்தியில் உள்ள கட்சிகளின் பினாமிகள் எங்கெங்கினும் பணமாயும் தங்க கட்டி பாளம்களாய்  உள்ளன தங்கபாலு அரசியலுக்கு வருமுன் எவ்வளவு சொத்து வைத்து இருந்தவர் இப்ப எவ்வளவு வைத்து இருக்கிறார் ?

உங்க ராசீவ் சொந்த புத்தி இல்லாமல் ஆடி அடங்கினவர் நல்லகாலம் அவருக்கும் மொழி பெயர்க்க போகாமல் இருந்ததில் தமிழ் தப்பிக்கொண்டது 

 

Link to comment
Share on other sites

19 hours ago, பெருமாள் said:

யார் சொன்னது இந்தியா வல்லரசு இல்லை என்று இப்பவும் ஒரு வல்லரசுக்கு தேவையான பணத்தை விட அதிக பணம் உள்ளது முக்கியமாய் மாநில கட்சிகளின் தலைவர்களின்  பினாமிகளை பிடிச்ச்சு உலுப்ப  டிரில்லியன் கணக்கான கருப்பு பணம் வந்து கொட்டும் அதைவிட மத்தியில் உள்ள கட்சிகளின் பினாமிகள் எங்கெங்கினும் பணமாயும் தங்க கட்டி பாளம்களாய்  உள்ளன தங்கபாலு அரசியலுக்கு வருமுன் எவ்வளவு சொத்து வைத்து இருந்தவர் இப்ப எவ்வளவு வைத்து இருக்கிறார் ?

உங்க ராசீவ் சொந்த புத்தி இல்லாமல் ஆடி அடங்கினவர் நல்லகாலம் அவருக்கும் மொழி பெயர்க்க போகாமல் இருந்ததில் தமிழ் தப்பிக்கொண்டது 

 

பெருமாள்,  அவரது பெயரே தவறான மொழி பெயர்ப்பு தானே. உண்மை பெயர் தகர பாலு. பிறந்தவுடன் யாரோ  தங்க பாலு என்று எழுதி விட்டாகள். 

Link to comment
Share on other sites

On 21/5/2020 at 05:32, தமிழ் சிறி said:

அவரை போல் தன்னலமற்ற தலைவரை பார்க்க முடியாது. தனது நலத்தை பற்றி ஒரு நாளும் அவர் சிந்தித்தது கிடையாது.

அப்படியா??!!

3 hours ago, tulpen said:

தங்க பாலு

இவர் ஒரு தெலுங்கர்தானே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பழுவூர்கிழான் said:

அப்படியா??!!

 

22 hours ago, பெருமாள் said:

 

 

பழுவூர்கிழான் அவர்களே...  அப்படித்தான், தங்க (பித்தளை) பாலு..  சொல்கிறார். :)
எதற்கும்... பெருமாள், இணைத்த...  :rolleyes: காணொளியையையும்  பாருங்களேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 21/5/2020 at 15:02, தமிழ் சிறி said:

ராஜீவ்காந்தி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தார் என்றால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்திருக்கும். அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்

ஒருமுறை அயோத்தி நகரை ஆட்சி செய்த திரிசங்கு பல வரங்களைப் பெற்றிருந்த விசுவாமித்திர முனிவரைச் சந்தித்தான்.

"தவமுனியே..! முனிவர்கள் பலரும் பூத உடலுடன் சொர்க்க லோகம் சென்று வருவது போல், நானும் அங்கு சென்று வர ஆசைப்படுகிறேன். எனது ஆசையை நிறைவேற்றித் தாருங்கள் " என்றான்.

இந்திரன் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த விசுவாமித்திரர், ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அந்த யாகத்தின் சக்தியைக் கொண்டு, திரிசங்குவை, பூத உடலுடன் இந்திரன் வீற்றிருக்கும் சபைக்கு நடுவே கொண்டு போய் நிறுத்தினார். இதைப் பார்த்து ஆத்திரம் கொண்ட இந்திரன், திரிசங்குவை காலால் உதைத்து பூலோகம் நோக்கித் தள்ளினான்.

மேலிருந்து கீழே விழுந்த திரிசங்கு, "விசுவாமித்திரரே.! காப்பாற்றுங்கள்" என்று ஓலமிட்டான்.

உடனே விசுவாமித்திரர், திரிசங்கு கீழே விழாமல் இருக்க யாகத்திற்கு நெய் வார்க்கும் சுருக்கை என்ற கரண்டியை மேல் நோக்கி வீசினார். அது அந்தரத்திலேயே திரிசங்குவை தடுத்து நிறுத்தியது.

பின்னர் விசுவாமித்திரர் தன் தவ வலிமையக் கொண்டு, அந்தரத்திலேயே ஒரு சொர்க்கலோகத்தை படைக்க தொடங்கி , அதில் திரிசங்குவை இந்திரனாக அமர வைத்தார்.

டிஸ்கி :

அதென்ன ஆ உ என்டா .. வல்லரசு ( ? ).. அவர் மட்டும் உயிரோடு இருந்தால் அதற்கும் மேல கதைய படிக்குக..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பழுவூர்கிழான் said:

அப்படியா??!!

இவர் ஒரு தெலுங்கர்தானே?!

இவரும் ஒரிஜினல் இல்லையா? :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.