Jump to content

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஒருபோதும் செய்யமாட்டேன் -திட்டவட்டமாக அறிவித்தார் கோட்டாபய


Recommended Posts

நாடாளுமன்றை மீள கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது.

நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசியலமைப்பின்படி என்னசெய்யமுடியுமோ அதனை நான் செய்வேன்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143745?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

கொடூர பாசிசவாத ஆட்சிமுறைக்குள் ஸ்ரீலங்கா! எச்சரிக்கை விடுத்துள்ள பிரமுகர்

ஆட்சியிலுள்ள அதிகார வர்க்கத்தினரது அரசியல் நோக்கங்களுக்காகவே படையினர் பலவித குற்றச் செயல்களை கடந்த காலங்களில் நிகழ்த்தியிருப்பதாக விமர்சனம் வெளியிட்டுள்ள நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தற்போது அந்த இரு அணியினரும் ஒன்றிணைந்திருப்பதால் பாரிய ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

கொடூர பாசிசவாத ஆட்சிமுறைக்கு ஸ்ரீலங்கா சென்று கொண்டிருப்பதாகவும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா படையினரின் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தனர். அவர்கள் தத்தமது நோக்கங்களுக்காக அவற்றை செய்யவில்லை. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக செய்தார்கள்.

இன்று ஆட்சியிலுள்ளவர்களுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றனர். அரச உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும் 60 வயதாகின்ற போது எப்படியாவது தொடர்ந்தும் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கே விரும்புகின்றனர்.

தங்களுக்குத் தெரிந்த விடயங்களை வைத்து அரச அனுசரணையைப் பெற்று வாகனங்களைப் பெற்று சுகபோகங்களை அனுபவிக்கவும், அதிகாரங்களை பயன்படுத்தவும் 90 வயதுவரையும் இப்படியே இருக்க விரும்புகின்றனர்.

ஆட்சியாளர்களுக்காக சட்டங்களை வளைக்கவும், திருத்தவும் மாற்றியெழுதவும் அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். அவர்கள் இராணுவத்திலும் இருக்கின்றார்கள். இந்த அனைவருமே தமது இனவாத, மதவாத அதிகாரிகளை இணைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு செல்ல ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

குறிப்பிட்ட 5 வருடங்களிற்குள் தேவையான வசதிகளை அமைத்துக் கொள்வதற்கு திறமையுடைய பலரையும் இணைத்திருப்பதால் அதற்கேற்ற வகையிலான வழிகளை அமைத்துக்கொள்கிறார்கள். கொடூர பாசிசவாதத்திற்கு வெள்ளைச் சுண்ணாம்பு இட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியின் மற்றுமொரு அங்கத்தையே ஆட்சியாளர்கள் செய்யத் தயராகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143710

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம்.

கோத்தபாயவின் காட்டுமிராண்டி சுயரூபங்கள் வெளிப்படுது!

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது.

நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம்.

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

429844-1553262603.jpg

என்னை கேட்டா எல்லாத்தையும் கலைத்து போட்டு அரசவையை கொண்டு வந்திடலாம்.. 👍 அந்த பக்கம் இந்தப்பக்கம் விசிறி விட பெண்கள் .. ஆமாஞ்சாமி போட ரெண்டு அல்லகைஸ்  .. நடுவில கோட்டா.. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை இன வாக்குகளால்.. ஒரு சர்வாதிகாரியை தெரிவு செய்தல் தான்.. ஐ தே க ஜே ஆர் இயற்றிய நிறைவேற்று அதிகாரம் பொருந்திய சொறீலங்காவின் சன நாய் அகம். இதற்கு மேற்குலகம் வக்காளத்து வேற.

பக்கச்சார்பற்ற நீதி நடைமுறையில்லாத.. இராணுவ ஆட்சி கொண்ட ஒரு அரசு என்பது.. எப்படி சனநாயகம் ஆகும். 

ஊத்தபாய சரியாக ஜே ஆரின் எண்ணக்கங்களை அப்படியே பிரதிபலிக்கிறார். நவீன இடியமீனுக்கு கிடைத்த அற்புத சர்வாதிகாரக் கதிரை.. நிறைவேற்று அதிகார சொறீலங்கா சிங்கள சனாதிபதிப் பதவி. 

 

Link to comment
Share on other sites

36 minutes ago, nedukkalapoovan said:

பெரும்பான்மை இன வாக்குகளால்.. ஒரு சர்வாதிகாரியை தெரிவு செய்தல் தான்.. ஐ தே க ஜே ஆர் இயற்றிய நிறைவேற்று அதிகாரம் பொருந்திய சொறீலங்காவின் சன நாய் அகம். இதற்கு மேற்குலகம் வக்காளத்து வேற.

பக்கச்சார்பற்ற நீதி நடைமுறையில்லாத.. இராணுவ ஆட்சி கொண்ட ஒரு அரசு என்பது.. எப்படி சனநாயகம் ஆகும். 

ஊத்தபாய சரியாக ஜே ஆரின் எண்ணக்கங்களை அப்படியே பிரதிபலிக்கிறார். நவீன இடியமீனுக்கு கிடைத்த அற்புத சர்வாதிகாரக் கதிரை.. நிறைவேற்று அதிகார சொறீலங்கா சிங்கள சனாதிபதிப் பதவி. 

 

மகிந்த - கோத்தபாய கொம்பனி என்ற இந்த மோசமான நபர்களை அன்றே பதவிக்கு கொண்டுவராமல் செய்திருக்கலாம்.  அதற்தகான வலு தமிழர்களிடம் இருந்தும் பேதைத்தனமான தமிழர்களின்  ராஜதந்திரப்  பலவீனங்களை பயன்படுத்தியே இந்த இனவெறி நபர்கள்  2005 ல் பதவிக்கு வந்தனர்.  

நெடுக்கு நீங்கள் இன்று எழுதுவது போல் அன்றய தலைமைக்கு உங்கள் அட்வைஸ் கொடுத்திருந்தால் நிச்சயம் இன்றய நிலையை விட மேலான நிலையில் தமிழர்கள் இருந்திருபார்கள். காலத்தை தவறவிட்டுவிட்டு இன்று புலம்புவதில்   என்ன பயன?   

வரப் போகும் பாராளுமன்ற தேர்தலில் 2/3 பெரும்பான்மையுடன் இவர்கள் பதவிக்கு வருவார்கள் என்றால் இதை விட மோசமாக தமிழர்களை அடக்குவார்கள்.   

7 hours ago, Rajesh said:

கோத்தபாயவின் காட்டுமிராண்டி சுயரூபங்கள் வெளிப்படுது!

  பதவிக்கு வர முன்பே  இவர்கள் மோசமானவர்கள் என்பது தெரிந்த விடயம் தான். இவர்களை பதவிக்கு கொண்டுவர உதவியது தப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மகிந்த - கோத்தபாய கொம்பனி என்ற இந்த மோசமான நபர்களை அன்றே பதவிக்கு கொண்டுவராமல் செய்திருக்கலாம்.  அதற்தகான வலு தமிழர்களிடம் இருந்தும் பேதைத்தனமான தமிழர்களின்  ராஜதந்திரப்  பலவீனங்களை பயன்படுத்தியே இந்த இனவெறி நபர்கள்  2005 ல் பதவிக்கு வந்தனர்.  

நெடுக்கு நீங்கள் இன்று எழுதுவது போல் அன்றய தலைமைக்கு உங்கள் அட்வைஸ் கொடுத்திருந்தால் நிச்சயம் இன்றய நிலையை விட மேலான நிலையில் தமிழர்கள் இருந்திருபார்கள். காலத்தை தவறவிட்டுவிட்டு இன்று புலம்புவதில்   என்ன பயன?   

வரப் போகும் பாராளுமன்ற தேர்தலில் 2/3 பெரும்பான்மையுடன் இவர்கள் பதவிக்கு வருவார்கள் என்றால் இதை விட மோசமாக தமிழர்களை அடக்குவார்கள்.   

 

இந்தப் பதிவை பாருங்கள். இது 2012 இல் எழுதியதி. எமது தற்போதைய அரசியல் தலைமைகள்.. சுய சம்பாத்தியத்திற்காக சோரம் போவதில் போட்டி போடுகிறார்களே தவிர மக்களின் உரிமை.. அரசியல் உரிமை இவற்றில் அவர்களிடம் எந்த தெளிவான நிகழ்ச்சி நிரலும் இல்லை.

ஆனால்.. சிங்களத்திடம் மொத்த இலங்கைத் தீவையும் சிங்கள மயமாக்கும் தெளிவான திட்டம் இன்று நேற்றல்ல.. 1965 இலேயே ஆரம்பமாகிவிட்டது. இப்போ தீவிரமாகி இருக்கிறது. அதனால் தான் ஈழத்துக் காந்தி என்றழைக்கப்படும்.. செல்வநாயகம் ஐயாவே தனித் தமிழீழத்தை முன்வைத்து.. தமிழ் மக்களின் முன் அதற்கான அரசியல் அங்கீகாரத்தை வாக்குகளால் அளிக்கக் கேட்டு வெற்றியும் பெற்றார்.

மேலும்.. இந்த லிங்கை வாசியுங்கள்..

http://kundumani.blogspot.com/2012/03/blog-post_09.html

மேலும் 2015 இல் எழுதியது..

http://kundumani.blogspot.com/2015/11/blog-post.html

அவுஸிலும் எழுந்த சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரான கண்டனக் குரல்களை நலிவுபடுத்தப் பாடுபடும் சில தமிழர்களை உள்வாங்கி சிங்கள பேரினத் தேசியத்தின் ஊடுருவல் ஊடகங்கள் சன நாயகப் பூச்சுப் பூசி செய்யும் நாசகார செயற்பாடுகள் பற்றிய எச்சரிக்கைப் பதிவு: இது அந்தக் கட்டுரைக்கான இணைப்பு

இந்தக் காணொளியையும் காணுங்கள்..



தொடர்ந்து வாசியுங்கள்...

மே 2009 க்குப் பின் டெயிலி மிரர் சிங்கள பெருந்தேசியத்தின் ஆணவக் குரலாக விளங்கிய ஆங்கில ஊடகத்தின் கிளையாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டத் தோல்வியோடு கருத்தியல் ரீதியில் நசுக்க நச்சுப் பாய்ச்ச உருவானதே இந்த தமிழ்மிரர் என்ற ஊடகம். (போருக்கு முன்னரும் போரின் போதும் வைக்கப்பட்ட பல சனநாயகக் கருத்துக்களை வெட்டி அகற்றி சிங்களப் பெரிந்தேசிய இனத்தை களிப்பூட்டக் கூடிய சிங்களப் பெரிந்தேசிய இனத்தின் பேரினவாதச் சிந்தனைகளை செயல்வடிவம் பெறத்தக்க கருத்துக்களை அனுமதித்து வந்தது ஆங்கில டெயிலிமிரர். அதன் செயற்பாட்டை நேரடியாகக் கண்டவர்கள் நாங்கள்.)

சுமந்திரனின் 58 ஆயிரம் (கள்ள வாக்கு உட்பட) வாக்குக்கு மாங்கு மாங்கென்று வக்காளத்து வாங்கும் இந்த ஊடகம்.. அவரின் பேச்சுக்கு செயற்பாடுகளுக்கு சனநாயக சாயம் பூச வெளிக்கிடும் இந்த ஊடகம்.. தாயக மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பிரித்தாளும் சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப்பாடுபடும் சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்குவது ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றல்ல.

சுமந்திரனின் அரசியல் தோல்விகள்.. தாயக மக்களாலும்.. அவருக்கு இனங்காட்டப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களாலும் இனங்காணப்பட்டுள்ளது.
சுமந்திரன் பயணிக்கும் பாதை 2009 ஆயுதப் போராட்ட மெளனிப்புக்குப் பின்.. தமிழ் மக்களுக்கு உள்ள அர்ப்ப சொற்ப சந்தர்ப்பங்களையும் இல்லாமல் செய்யும் என்ற பயம்.. தாயக மக்களிடமும் நிறைந்துள்ளது என்பதை அரசியல் போராளிகளின்.. தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில்.. அந்த மக்கள் முன்வைத்து வரும் பகிரங்க கருத்துக்கள் பறைசாற்றி நிற்கின்றன.

சுமந்திரன்.. யாழ் ஆக்கிரமிப்பு காணி விடுவிப்பில் தோல்வி கண்டார்.

சுமந்திரன்.. ஐநா மனித உரிமைகள் அவையில் சிங்கள அரச பயங்கரவாதத்தை கண்டிக்கவும் அதன் இன அழிப்பை இனங்காட்டவும் தவறினார்.

சுமந்திரன்..சம்பூர் மக்களின் பாதுக்காப்பான மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த ஒரு அக்கறையும் இன்றி தேர்தல் பொறுக்கி அரசியலாக சம்பூர் மக்களின் நில விடுவிப்பை பயன்படுத்தி விட்டு அடங்கி விட்டார்.

சுமந்திரன்.. 2002 பிரபா - ஹக்கீம் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் பாதுகாப்பான வெளியேற்றம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பாக இன்றும் பேசித் திரிவது அநாவசியமாக இரண்டு சமூகங்களிடையேயும் பிரிவினையையும் பதட்டத்தையும் அரசியல் ஒத்துவாராமையையும் நீட்டி நிலைப்பிக்க முனையும் சிங்கள பேரின அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களின் பங்களிப்போடு சிங்கள பேரின அரசின் பொருண்மியப் புறக்கணிப்புக்களில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் தாயக மக்களை.. புலம்பெயர் மக்களிடம் இருந்தும் பிரிக்கும் கருத்தியல் என்பது தாயக மக்களை தொடர்ந்து ஆதரவற்ற அநாதைகளாக்கி அதில் அரசியல் குளிர்காய நினைக்கும் நரித்தனமே மிஞ்சி உள்ளது.

இதனையே சிங்கள ஆளும் பேரினவாத அரசியல் சக்திகளும்.. அண்டையில் ஹிந்திய வல்லாதிக்கமும் அமுல்படுத்த விரும்புகின்றன. இதன் மூலம் தாயக தமிழ் மக்களின் அரசியல்.. விடுதலை உணர்வை அடக்கி தமக்குள் அடிமையாக வைச்சிருக்கலாம் என்று இந்த இரண்டு அரசுகளும் கணக்குப் போடுகின்றன.

உணர்ச்சி இன்றி அரசியல் இல்லை. சிங்களப் பேரின பேரினவாத தேச உணர்ச்சி அரசியலை கண்டிக்க வக்கில்லாத தமிழ்மிரர் சிங்கள பேரின அரசின் கொடுமைகளை இன்றும் சந்தித்து இடம்பெயர்ந்து நிற்கும் தமிழ் மக்களிடம் எப்படியான அரசியலை எதிர்பார்க்கிறது. கைகட்டி நிற்கும் அரசியலையா..??!

சனநாயகம் என்ற போர்வையில்.. சிங்களப் பேரினவாத சிந்தனைகளை தமிழர் தேசம் எங்கும் விதைத்து அதனை சிங்கள தேசமாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவ உதயமானதே இந்த தமிழ்மிரர். இதில் வரும் ஆக்கங்கள் கட்டுரைகளை உன்னிப்பாக நோக்கின் அதன் வரவு இருப்பு செயற்பாடு எவ்வளவு நாசுக்காக இதனை செய்து வருகிறது என்பதை இட்டு தெளிவூட்டம் பெறலாம்.

சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல்.. சமூக.. பொருண்மிய.. நில உரிமைகளையும் வழங்கப் போவதில்லை. இந்த அடிப்படையில் இருந்து தான் தமிழ் அரசியல் கைதிகளின் பொதுமன்னிப்பும் அணுக்கப்படுகிறது. இதே சிங்கள அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த ஜே வி பி குழுவினருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுகிறது.

சிங்களப் பேரினவாத அரசுக்கு முண்டுகொடுக்கக் கூடிய தமிழ் ஆயுக்குழுக்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது. சிங்கள பேரினவாத அரசுக்கு சேவகம் செய்யக் கூடிய முன்னாள் புலிக் காட்டிக்கொடுப்பாளர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால்.. அப்பாவி தமிழ் மக்களுக்கும்.. அரசியல் கைதிகளுக்கும் அது சாத்தியமில்லை என்று முழங்குகிறது. அதுவும் ஐநா அவர்களின் விடுதலை தொடர்பில் சுட்டிக்காட்டிய பின்னும்.

சுமந்திரன்.. போலி வாக்குறுதிகளை தந்து இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வரும் சிங்களப் பேரின அரசுக்கு முண்டுகொடுப்பது ஏன்..??! அதன் செயற்பாடுகளை சர்வதே அரங்கில் மறைத்து நிற்பது ஏன்..?!

சுமந்திரன் ஒரு பக்கம் போலி வாக்குறுதிகளை வழங்க.. அதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பக்கம் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. கறுப்பு தீபாவளி கொண்டாடுகிறது. இந்த முரண்பாடுகளுக்கு சுமந்திரனின் பதில் என்ன..??! தமிழ்மிரர் என்ற ஒற்றர் ஊடகத்தின் சனநாயக நிலைப்பாடு என்ன..?!

சுமந்திரன் தொடர்ந்தும் தாயக தமிழ் பேசும் மக்களையும் புலம்பெயர் தமிழ் பேசும் மக்களையும் துருவமயப்படுத்தும் செயலை செய்து கொண்டிருக்க அனுமதிக்கப்படுவதானது எதிர்காலத்தில் தாயக தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்களப் பேரினவாத அரசியல் நிரல்படுத்தப்பட்ட ஒன்றாகி தமிழ் மக்கள் எந்த வித அரசியல் உரிமைகளும் நில உரிமைகளும் அற்று சிங்களவர்களால் சூழப்பட்ட ஒரு பயங்கர சூழலில் வாழும் நிலைக்கே கொண்டு செல்லும். இந்த அடிமை வாழ்வில் இருந்து கொண்டு தமிழர்களால் உண்மையான சனநாயகத்தை ஒருபோதும் சுகிக்க முடியாத நிலையே தோன்றும்.

அப்போது அவர்களுக்கு குரல்கொடுக்க தமிழ்மிரர் ஆட்டுக்குட்டிமிரர்கள் இருக்கா. அவற்றின் இன்றைய இருப்பின் நோக்கமே தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்கி மொத்த தீவையும் சிங்கள சிறீலங்கா ஆக்குவதுதான். அதற்கு சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாத சுயநலமிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுமந்திரனின் தமிழர் விரோத செயற்பாடுகள்.. புகலிடத்தில் இருந்து வரும் எச்சரிக்கைகளூடு இனங்காணப்படுவதை தடுக்க சிங்களப் பேரினத் தேசிய ஊடகங்கள் முக்கி முழங்குவதில் இருந்து.. அவரின் செயற்பாடுகள் சிங்களப் பெரிந்தேசிய இனத்தின் பேரினவாத நிலைப்பாடுகளை பாதுக்காகவும் தக்க வைக்கவும் எவ்வளவு உபயோகம் ஆகிறது என்பதை விளங்கிக் கொண்டு.. புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இந்த ஆபத்துக்களில் இருந்து தாயக தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து ஒதுங்காமல் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்.

58 ஆயிரம் வாக்குப் பெற்ற சுமந்திரனுக்காக அழும்.. தமிழ்மிரர் ஒரு இலட்சம் வாக்குப் பெற்ற விக்கிக்காக அழாது. 80 ஆயிரம் வாக்குப் பெற்ற அனந்திக்காக அழாது. 70 ஆயிரம் வாக்குப் பெற்ற சிறீதரனுக்காக அழாது. ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களின் இதயத்தில் உள்ளதை முன்வைத்து அரசியல் செய்ய முனைகிறார்கள். சுமந்திரன்.. தமிழ் மக்களின் இதயத்தை சிங்களவர்களுக்காக சிதைக்கும் அரசியலை முன்னெடுக்கிறார். இதில் இருந்து சுமந்திரனின் 58 ஆயிரம் வாக்கும் வெற்றியும் இப்போ சந்தேகத்தையே கிளப்புகிறது. இந்த வாக்குப் பின்னும் வெற்றிக்குப் பின்னும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் நிழல் கரங்கள் செயற்பட்டுள்ளதை இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது என்றால் அது மிகையல்ல.

சுமந்திரன் சம்பந்தன் தொடர்பில் எல்லா தமிழ் மக்களும் மிகவும் அவதானமாக எச்சரிக்கையாக இருந்து அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தொடர் வாக்குறுதித் தோல்விகளை சந்தித்து வரும் இவ்விருவரும்.. தமிழ் மக்களின் தாயக அரசியலை தொடர்ந்து நலினப்படுத்தும் சிங்களப் பெரிந்தேசிய பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கும் ஹிந்திய வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கும் பாதுகாப்பும் நுழைவு அனுமதியும் ஒத்துழைப்புமே நல்கி வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால்... தமிழ் மக்களுக்கு சொந்தமாக ஒரு அரசியலே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும். அதன் பின் அங்கு சனநாயகம் என்பதே தமிழ் மக்களுக்கு இருக்காது. அதனை நோக்கி கொண்டு செல்வது தான் தமிழ்மிரர் போன்ற போருக்கும் பின் உதயமான சிங்களப் பெருந்தேசிய பேரினவாத ஊடக ஊதுகுழல்களின் கிளை விரிவாக்கமாகும். சிங்களப் பேரினவாத சிந்தனைகளை தமிழ்மக்களிடம் நாசூக்காக விதைக்கவே இவை உருவாக்கப்பட்டுள்ளன என்ற எச்சரிக்கையும் அவதானிப்பும் தமிழ் மக்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ங்கோத்தாவிற்கு நான் ஆதரவு வழங்குகிறேன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

கோத்தபாயவின் காட்டுமிராண்டி சுயரூபங்கள் வெளிப்படுது!

 

58 minutes ago, Kapithan said:

ங்கோத்தாவிற்கு நான் ஆதரவு வழங்குகிறேன் 😂

கேட்கவே காது குளிருது...

கோத்தா கம்பெனியை. தேடி கொண்டுவந்தது....'சி' னாவும் 'மு' னாவும்...

நமக்கு , 'த' வுக்கு இழப்பதற்கு  எதுவுமே இல்லை. 

கோவணத்தையும் கழட்டி  கொடுத்து விட்டு போய் கொண்டே இருப்போம்ல்ல... 🤧👍
 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

 

கேட்கவே காது குளிருது...

கோத்தா கம்பெனியை. தேடி கொண்டுவந்தது....'சி' னாவும் 'மு' னாவும்...

நமக்கு , 'த' வுக்கு இழப்பதற்கு  எதுவுமே இல்லை. 

கோவணத்தையும் கழட்டி  கொடுத்து விட்டு போய் கொண்டே இருப்போம்ல்ல... 🤧👍
 

நாதமுனி கோத்தா கொம்பனியை முதலில் 2005 ல் ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள்  தமிழ் அரசியல் தலைவர்களே என்பதை 2005 ம் ஆண்டின் மகிந்தவுக்கு விழுந்த வாக்கு வீதத்தை பார்த்தால்  தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நாதமுனி கோத்தா கொம்பனியை முதலில் 2005 ல் ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள்  தமிழ் அரசியல் தலைவர்களே என்பதை 2005 ம் ஆண்டின் மகிந்தவுக்கு விழுந்த வாக்கு வீதத்தை பார்த்தால்  தெரியும். 

ஏன் சுத்தி வளைக்கிறீர்கள்...

புலிகளினால் தான், ரணில் வடபகுதி வாக்குகள் கிடைக்காமல் ஒரு லட்ச்சத்து சொச்சம் வாக்குகளால் தோல்வி அடைந்தார்.

பகிஷ்கரிப்புக்காக, பணம் கொடுத்தார்கள் மகிந்த கொம்பனி என்று விசாரித்து எழுதப் போனதால் ஒரு வெடி லசந்தாவுக்கு கூடுதலாக விழுந்தது.

Link to comment
Share on other sites

18 minutes ago, Nathamuni said:

ஏன் சுத்தி வளைக்கிறீர்கள்...

புலிகளினால் தான், ரணில் வடபகுதி வாக்குகள் கிடைக்காமல் ஒரு லட்ச்சத்து சொச்சம் வாக்குகளால் தோல்வி அடைந்தார்.

பகிஷ்கரிப்புக்காக, பணம் கொடுத்தார்கள் மகிந்த கொம்பனி என்று விசாரித்து எழுதப் போனதால் ஒரு வெடி லசந்தாவுக்கு கூடுதலாக விழுந்தது.

இப்போது கூட தமிழரின் வாக்குக்கள்  கிடைக்காத்தால் தான் ரணில் தோல்வியடைந்தார் என்று மனதுக்குள் இன்பமுறுகின்றீர்களேயொழிய ரணிலை விட மோசமான மகிந்த வந்து இனப்படுகொலை புரிந்ததை கூற மறுக்கிறீர்கள்.  ரணில் வந்திருந்தால் தமிழர்  இன்றைய நிலையை விட மேலான  நிலையில் இருந்திருப்பார்கள் என்பது தாயகத்திறகு நான் போயிருந்த போது அங்கு  வாழும் மக்களின் எண்ணமாக இருந்தது.  அது உண்மையும் கூட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த 2005 பல்லவி.

ரணில் ஆட்சிக்கு வந்தார். நல்லாட்சின்னு வேற புளுகித் திரிஞ்சிச்சினம் எங்கடை ஆக்கள். என்ன ஆச்சு...??! 

ஐ தே க கட்சி பிரேமதாச காலத்தின் பின் தொடர்ந்து தேர்தல்களில் வீழ்ச்சியே கண்டு வருகிறது. அதற்கு எழுச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணி வைச்சாலும்.. உருப்படுகுதில்லை.. கூட்டணி இல்லாமலும் உருப்படுகுதில்லை. ரணிலின் ராசி அப்படி.

ரணில் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் பிரதமராக இருந்த போதுதான்.. சமாதான காலத்தில் தான்.. சொறீலங்கா இராணுவம் பலப்படுத்தப்பட்டது. புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டன. கருணா பிளவு நிகழ்ந்தது. சம்பூரில்.. புலிகள்.. மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. போருக்குரிய அனைத்து முஸ்தீபுகளையும் சந்திரிக்கா - ரணில் தரப்புச் செய்தது.

மகிந்தர் அதைத் தொடர்ந்தார். அவருக்கு.. ரணில் - சந்திரிக்காவுக்கு இருந்த அதே சர்வதேச.. ஹிந்திய - சீன ஆதரவு தொடர்ந்தது. 

ரணில் வந்திருந்தாலும்... போர் நடந்தே தான் இருந்திருக்கும். 

விளைவு.. இதை விட மோசமாகக் கூட இருந்திருக்கலாம். காரணம்.. மகிந்த கும்பலுக்கு.. சற்றும் குறையாமல்.. போர்க்குற்றங்களை இழைத்த சந்திரிக்கா.. அவற்றை எப்படி சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைத்து தப்பினார் என்பதற்கு மண்ணோடு மண்ணாய் போன.. செம்மணிப் புதைகுழிகள்.. குற்றமே இல்லாமல் மறக்கடிக்கப்பட்ட நவாலி.. நாகர்கோவில்.. மடு.. புதுக்குடியிருப்பு படுகொலைகள்.. கிருசாந்தி குமாரசாமி போன்ற அப்பாவி மாணவிகளின் படுகொலைகள் சாட்சி... அதையும் செய்தது சந்திரிக்கா.. ரத்வத்த.. சரத் பொன்சேகா கூட்டுத்தான். மகிந்த - கோத்தாவோடும் சேர்ந்து செய்ததும் அவர் தான்.

அதே சரத் பொன்சேகாவுக்கு வாக்கேட்டு சுத்தப் பித்தலாட்ட அரசியல் செய்த.. சம் சும் கும்பல் கண்டது.. மிலேச்சத்தன இனப்படுகொலையாளர்களை பாதுகாத்தது மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

இப்போது கூட தமிழரின் வாக்குக்கள்  கிடைக்காத்தால் தான் ரணில் தோல்வியடைந்தார் என்று மனதுக்குள் இன்பமுறுகின்றீர்களேயொழிய ரணிலை விட மோசமான மகிந்த வந்து இனப்படுகொலை புரிந்ததை கூற மறுக்கிறீர்கள்.  ரணில் வந்திருந்தால் தமிழர்  இன்றைய நிலையை விட மேலான  நிலையில் இருந்திருப்பார்கள் என்பது தாயகத்திறகு நான் போயிருந்த போது அங்கு  வாழும் மக்களின் எண்ணமாக இருந்தது.  அது உண்மையும் கூட. 

நீங்கள் ரணில் விசயத்தில் நடக்காததை சொல்லுகிறீர்கள். மகிந்த விசயத்தில் நடந்த முடிந்த ஒன்றை ரணில் செய்திருப்பார் என்று சொல்கிறீர்கள்.

ரணில் வந்திருந்தால், இன்றும் புலிகளும், பிரபாகரனும் இருந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு அல்ல, சர்வதேச கணிப்பு. 

****

தாயகத்தில் யாரை சந்தித்தீர்கள் என்று சொல்லுங்கோவன் பார்ப்பம்...

சும்மா... தாயகத்தில் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லாமல்.... உங்கள் கருத்துக்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்களை சந்தித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

நான் வேறு திரியில் சொல்லி இருந்தேன். சேம் சைடு கோல் போட்டு பார்த்தே அடுத்தவர்களின் கருத்தினை அறிய முடியும். அதாவது அவர்கள் நிலைப்பாட்டினை ஊகித்து, அதுக்கு அமைய கருத்துக்களை சொல்வது. அதன் மூலம் மேலதிக அபிப்பிராயங்களை எடுப்பது. 

நான் என்னுடன் விவாதிப்பவர் நடுநிலையுடன் வந்து விவாதிக்க வேண்டும் என நினைப்பேன். ஒரு முடிவுடன் வந்து வாதிடுபவருடன், விவாதம் வராது...சண்டை தான் வரும்.

எனது நிலைப்பாட்டினை தெரியப்படுத்தினால், அவர் ஆமாம் சாமி போட்டு விடுவார் என தெரியும்.

Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னை கேட்டா எல்லாத்தையும் கலைத்து போட்டு அரசவையை கொண்டு வந்திடலாம்.. 👍 அந்த பக்கம் இந்தப்பக்கம் விசிறி விட பெண்கள் .. ஆமாஞ்சாமி போட ரெண்டு அல்லகைஸ்  .. நடுவில கோட்டா.. 👌

நடுவில்  சனாதிபதி இருப்பது இல்லை பிரச்சனை, ஒற்றையாட்சி  முறை. 

அங்கேயே முழு அதிகாரமும் இருப்பது தான் நாட்டில் பிரச்சனை. 

மாகாணங்களுக்கு அரசியல் அதிகார பரவலை தந்தால்,  சனாதிபதியால் முழு  அதிகாரங்களையும் வைத்திருக்கமுடியாத நிலை இருக்கும். அதுவே, மேலை நாடுகளில் பொதுவாக உண்டு. 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

நீங்கள் ரணில் விசயத்தில் நடக்காததை சொல்லுகிறீர்கள். மகிந்த விசயத்தில் நடந்த முடிந்த ஒன்றை ரணில் செய்திருப்பார் என்று சொல்கிறீர்கள்.

ரணில் வந்திருந்தால், இன்றும் புலிகளும், பிரபாகரனும் இருந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு அல்ல, சர்வதேச கணிப்பு. 

****

தாயகத்தில் யாரை சந்தித்தீர்கள் என்று சொல்லுங்கோவன் பார்ப்பம்...

சும்மா... தாயகத்தில் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லாமல்.... உங்கள் கருத்துக்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்களை சந்தித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

நான் வேறு திரியில் சொல்லி இருந்தேன். சேம் சைடு கோல் போட்டு பார்த்தே அடுத்தவர்களின் கருத்தினை அறிய முடியும். அதாவது அவர்கள் நிலைப்பாட்டினை ஊகித்து, அதுக்கு அமைய கருத்துக்களை சொல்வது. அதன் மூலம் மேலதிக அபிப்பிராயங்களை எடுப்பது. 

நான் என்னுடன் விவாதிப்பவர் நடுநிலையுடன் வந்து விவாதிக்க வேண்டும் என நினைப்பேன். ஒரு முடிவுடன் வந்து வாதிடுபவருடன், விவாதம் வராது...சண்டை தான் வரும்.

எனது நிலைப்பாட்டினை தெரியப்படுத்தினால், அவர் ஆமாம் சாமி போட்டு விடுவார் என தெரியும்.

நாதமுனி நான் சந்தித்த‍து பல தரப்பட்ட மக்களை. நான் என்றுமே ஆமாம் சாமி  போடுவர்களை விரும்புவதில்லை. புலிகளுக்கு எதிராக சகட்டு மேனிக்ககு குற்றச்சாட்டுகளை அடுக்குபவர்களோடு யாழ் களத்திலேயே நான் வாதாடியதற்கான பதிவுகள் இன்னும் உண்டு. வேண்டுமானால் பழைய பதிவுகளை பாருங்கள்.  ஆமாம் சாமி போடுபவர்களை நான் அதிகமாக சந்தித்த‍து இங்கு யாழ் களத்தில் தான்.  அதை செய்யாத‍தாலேயே பலருக்கு என் மீது வெறுப்பு. அ தை பற்றி கவலை இல்லை.

Link to comment
Share on other sites

11 hours ago, tulpen said:

 பதவிக்கு வர முன்பே  இவர்கள் மோசமானவர்கள் என்பது தெரிந்த விடயம் தான். இவர்களை பதவிக்கு கொண்டுவர உதவியது தப்பு. 

தமிழரைப் பொறுத்தவரையில் பதவிக்கு வரும் எல்லா சாத்தான்களும் ஒன்டையொன்டு வென்ற கூட்டமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

ஏன் சுத்தி வளைக்கிறீர்கள்...

புலிகளினால் தான், ரணில் வடபகுதி வாக்குகள் கிடைக்காமல் ஒரு லட்ச்சத்து சொச்சம் வாக்குகளால் தோல்வி அடைந்தார்.

பகிஷ்கரிப்புக்காக, பணம் கொடுத்தார்கள் மகிந்த கொம்பனி என்று விசாரித்து எழுதப் போனதால் ஒரு வெடி லசந்தாவுக்கு கூடுதலாக விழுந்தது

அழகான எழுத்து நடை. நீங்கள் கூற விரும்பியதை நகைச்சுவையுடன் அழுத்தமாகக் கூறியுள்ளீர்கள். 👍

Link to comment
Share on other sites

12 hours ago, Nathamuni said:

ஏன் சுத்தி வளைக்கிறீர்கள்...

புலிகளினால் தான், ரணில் வடபகுதி வாக்குகள் கிடைக்காமல் ஒரு லட்ச்சத்து சொச்சம் வாக்குகளால் தோல்வி அடைந்தார்.

பகிஷ்கரிப்புக்காக, பணம் கொடுத்தார்கள் மகிந்த கொம்பனி என்று விசாரித்து எழுதப் போனதால் ஒரு வெடி லசந்தாவுக்கு கூடுதலாக விழுந்தது.

சுத்தி வளைக்காமல் நேரடியாகவே உண்மையை கூறி விடடீர்கள். சில வேளைகளில் ஏற்றுக்கொள்ள கஷடமாக இருந்தாலும் உண்மையை கூறி உள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி போன்று இந்நாள் ஜனாதிபதியும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் .!

1580831020_3936160_hirunews_gotabaya-and

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 2018ம் ஆண்டு 52 நாள் அரசியல் சதிப் புரட்சியின்போது உயர் நீதிமன்றத்துக்குச் சவால் விட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருந்தார்.
எனினும், நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் பிரகாரம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீளக்கூட்டப்பட்டது.

இதை இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மனதில்கொண்டு செயற்பட வேண்டும்.
தற்போதைய மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் நாடாளுமன்றத்தை சபாநாயகரால் கூட மீளக்கூட்ட முடியும்.
அதற்குரிய அதிகாரம் தற்போதைய அரசமைப்பில் இருக்கின்றது” – என்றார்.

http://puthusudar.lk/2020/05/23/முன்னாள்-ஜனாதிபதி-போன்று/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 18:55, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னை கேட்டா எல்லாத்தையும் கலைத்து போட்டு அரசவையை கொண்டு வந்திடலாம்.. 👍 அந்த பக்கம் இந்தப்பக்கம் விசிறி விட பெண்கள் .. ஆமாஞ்சாமி போட ரெண்டு அல்லகைஸ்  .. நடுவில கோட்டா..

அது பழைய கதை.  புதிதாக ஏதாவது சொல்லுங்கள்.  விடுதலைப் போராட்டம் அடக்கப்பட்டவுடனேயே, இந்த ராஜபக்ஸ குடும்பம்; தங்களை அரசர்களாக சித்தரித்து, தென்பகுதியில் அங்கங்கு கட்டிடவுட்டுகள் வைக்கப்பட்டன. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.