Jump to content

கோட்டாபயவின் அருவருப்பான உரைக்கு பொறுத்திருந்து உரிய பதில் வழங்குவேன்! சம்பந்தன் தெரிவிப்பு


Recommended Posts

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, 'எம்மைப்போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்றஅழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் தங்கள் நிலைபாடு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தொடர்பில் பேசிய அவர், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டமைப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246624?ref=home-top-trending

 

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன்

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Rajesh said:

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

கோட்டாபாய சொன்னதை ஊடகங்கள் திரிபு படித்து கூறிவிட்டார்கள்...இனங்களுக்கு இடையே முறுகலை உண்டாக்குவதற்காக

Link to comment
Share on other sites

"ஜனாதிபதி கூறியது தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை"

 

Link to comment
Share on other sites

50 minutes ago, ampanai said:

"ஜனாதிபதி கூறியது தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை"

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, போல் said:

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் வைகாசி 19 சதுர்தசி திதி - கார்த்திகை நாள் நல்லா இருக்கு..👌

WUfWw_HjhsFRgerqDItU2sRkdo62d6GSiFi18Wcf

டிஸ்கி :

நல்ல நாள் குறித்தான கருத்து..👍

Link to comment
Share on other sites

சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது தான் ஆயுதப்போராட்டம்
தந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா? என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரிய சுமந்திரனின் நேர்காணல் தொடர்பில் விளக்கமளிக்கிறார்.
 
(சிங்கக் கொடியின் உருவாக்கம், தந்தை செல்வா, சுதந்திர தினம் )
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனைப்போல ஒரு நல்லவர், வல்லவர், தீரன், வீரன் இல்லை என்று ஒரு சில தமிழர் கனவில் நீந்திக்கொண்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து  வைத்துக்கொள்ள வேண்டுமானால், சுமந்திரனைப்போல் பச்சோந்திகள் பலர் சம்பந்தன் ஐயாவுக்கு தேவை. இவர்களை விலக்கினால் சிங்களத்திடம் இவர்கள் பெற்ற கையூட்டு பட்டியல் வெளிவந்துவிடும் என்கிற பயமாக இருக்கலாம், அல்லது இவருக்குப் பதிலாக   வேறொரு  திறமையானவர் தெரிவு செய்யப்பட்டால், சம்பந்தனின் திறமை இன்மையால் தமிழரின் உடமை, உயிர் இழப்புகளுக்கு இவரது இழுத்தடிப்பு  காரணம். திறமையற்ற அரசியல்வாதி. என்கிற உண்மை வெளிவந்து விடும். சம்பந்தரைப்போல் ராஜதந்திரி இல்லை  என்ற பெயரைத் தக்க  வைத்திருப்பதற்காக,  சுமந்திரனை கக்கத்திற்குள் வைத்தே இருப்பார் சம்பந்தன்.  

Link to comment
Share on other sites

சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி  விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

On 22/5/2020 at 08:08, Rajesh said:

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

அடுத்த கிரிஸ்மசுக்கா இருக்கும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 21:25, போல் said:

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பார்த்து.....மெல்லமாய்.... பிறகு நாடு  சின்னாபின்னமாய் போயிடும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கப்படும் சன்மானத்தைப்பொறுத்து.

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

கொடுக்கப்படும் சன்மானத்தைப்பொறுத்து.

அதான் உண்மை!
சம்பந்தனுக்கு கிடைச்ச ஒரு ஆடம்பர வீடு போதாதுனு நினைக்கிறன்.
சுமந்திரன் புதுசு புதுசா புகுத்துற ஆக்களுக்கும் ஆடம்பர வீடு கேக்கிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு விரைவாக முடிவுகளுக்கு வந்திடாதீர்கள் இதுவும் தனிப்பட்ட கருத்தாக இருக்கப்போகுது,
பிறகு உங்களுக்கு தான் நஷ்ட்டம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 07:25, Vankalayan said:

சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி  விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.

சம்மந்தர்ட ஜோக்கெல்லாம் பெரிசா கோட்டா எடுக்கமாட்டார் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 18:19, போல் said:

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

சரியாகச் சொன்னீர்கள். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை. கடைசி காலத்தில் பெட்டி பெட்டியாக வாங்கி பிற்கால சந்ததிகள் சந்தோஷமிழந்து வாழ இப்பவே சேமிக்கனும்

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை.

அதால தானே அவங்களை எல்லை தாண்டிய இந்திய பயங்கரவாதிகள் என்டு அழைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.