Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபயவின் அருவருப்பான உரைக்கு பொறுத்திருந்து உரிய பதில் வழங்குவேன்! சம்பந்தன் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, 'எம்மைப்போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்றஅழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் தங்கள் நிலைபாடு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தொடர்பில் பேசிய அவர், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டமைப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246624?ref=home-top-trending

 

  • Like 2
Link to post
Share on other sites
7 hours ago, போல் said:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன்

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Rajesh said:

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

கோட்டாபாய சொன்னதை ஊடகங்கள் திரிபு படித்து கூறிவிட்டார்கள்...இனங்களுக்கு இடையே முறுகலை உண்டாக்குவதற்காக

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

"ஜனாதிபதி கூறியது தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை"

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ampanai said:

"ஜனாதிபதி கூறியது தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை"

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

  • Like 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, போல் said:

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

உண்மை. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அடுத்த வருடம் வைகாசி 19 சதுர்தசி திதி - கார்த்திகை நாள் நல்லா இருக்கு..👌

WUfWw_HjhsFRgerqDItU2sRkdo62d6GSiFi18Wcf

டிஸ்கி :

நல்ல நாள் குறித்தான கருத்து..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது தான் ஆயுதப்போராட்டம்
தந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா? என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரிய சுமந்திரனின் நேர்காணல் தொடர்பில் விளக்கமளிக்கிறார்.
 
(சிங்கக் கொடியின் உருவாக்கம், தந்தை செல்வா, சுதந்திர தினம் )
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனைப்போல ஒரு நல்லவர், வல்லவர், தீரன், வீரன் இல்லை என்று ஒரு சில தமிழர் கனவில் நீந்திக்கொண்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து  வைத்துக்கொள்ள வேண்டுமானால், சுமந்திரனைப்போல் பச்சோந்திகள் பலர் சம்பந்தன் ஐயாவுக்கு தேவை. இவர்களை விலக்கினால் சிங்களத்திடம் இவர்கள் பெற்ற கையூட்டு பட்டியல் வெளிவந்துவிடும் என்கிற பயமாக இருக்கலாம், அல்லது இவருக்குப் பதிலாக   வேறொரு  திறமையானவர் தெரிவு செய்யப்பட்டால், சம்பந்தனின் திறமை இன்மையால் தமிழரின் உடமை, உயிர் இழப்புகளுக்கு இவரது இழுத்தடிப்பு  காரணம். திறமையற்ற அரசியல்வாதி. என்கிற உண்மை வெளிவந்து விடும். சம்பந்தரைப்போல் ராஜதந்திரி இல்லை  என்ற பெயரைத் தக்க  வைத்திருப்பதற்காக,  சுமந்திரனை கக்கத்திற்குள் வைத்தே இருப்பார் சம்பந்தன்.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி  விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 08:08, Rajesh said:

எப்ப பதில்? அடுத்த தீவாளிக்கா? அடுத்த பொங்கலுக்கா?

அடுத்த கிரிஸ்மசுக்கா இருக்கும் 😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 21:25, போல் said:

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பார்த்து.....மெல்லமாய்.... பிறகு நாடு  சின்னாபின்னமாய் போயிடும் 😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கப்படும் சன்மானத்தைப்பொறுத்து.

Link to post
Share on other sites
3 hours ago, satan said:

கொடுக்கப்படும் சன்மானத்தைப்பொறுத்து.

அதான் உண்மை!
சம்பந்தனுக்கு கிடைச்ச ஒரு ஆடம்பர வீடு போதாதுனு நினைக்கிறன்.
சுமந்திரன் புதுசு புதுசா புகுத்துற ஆக்களுக்கும் ஆடம்பர வீடு கேக்கிறாரோ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு விரைவாக முடிவுகளுக்கு வந்திடாதீர்கள் இதுவும் தனிப்பட்ட கருத்தாக இருக்கப்போகுது,
பிறகு உங்களுக்கு தான் நஷ்ட்டம்  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 07:25, Vankalayan said:

சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி  விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.

சம்மந்தர்ட ஜோக்கெல்லாம் பெரிசா கோட்டா எடுக்கமாட்டார் 😉

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 18:19, போல் said:

தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.

சரியாகச் சொன்னீர்கள். 😊

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை. கடைசி காலத்தில் பெட்டி பெட்டியாக வாங்கி பிற்கால சந்ததிகள் சந்தோஷமிழந்து வாழ இப்பவே சேமிக்கனும்

Link to post
Share on other sites
4 hours ago, உடையார் said:

சிங்களவன் இந்திய றோவின் அனுசரனையுடன் நான்றாக கையாளுகின்றான் எம் அரசியல்வாதிகளை.

அதால தானே அவங்களை எல்லை தாண்டிய இந்திய பயங்கரவாதிகள் என்டு அழைக்கிறார்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீ கோவணம் எப்பவும் இருக்கும்  🤣🤣🤣 (பகிடிக்கு அண்ணை)👃
    • அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .
    • தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பளை  புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு  தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பளை  புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும், தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் நலன் புரிச் சங்கத்தினர் கூடி ஆராய்ந்து இது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பா.சுரேஷ்குமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் மிகவும் நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில்  வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு புற்று நோய் வைத்தியசாலை ஆகிய தெல்லிப்பளை  புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின்  கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில்  மத்திய அரசாங்கத்தின் கீழ் செல்லும்போது இங்கே பல நிர்வாக சிக்கல்கள்  தோன்றுவதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன ஏற்கனவே பல வசதிகளைக் கொண்ட மாபெரும் வைத்தியசாலையாக வளர்ந்து வரும் புற்றுநோய் வைத்தியசாலையை தற்போதைய  நிலையில்  நோயாளர்கள் வழமை போன்று தமது சிகிச்சையினை பெற்றுக் கொள்கின்றனர். இதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்லும்போது பல இடர்பாடுகளை நிர்வாக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு  கடிதம் ஒன்றினையும் தாங்கள் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/91022
    • *அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை. -கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம- சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R  உறுப்புரையை திருத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறது. அந்த உறுப்புரை மாகாண சபைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நோக்கத்துக்கு வருடாந்த பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதை விதந்துரைக்கும் நிதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு பேரவையின் விதந்துரையின் பெயரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அந்த ஆணைக்குழு மூன்று உறுப்பினர்களை கொண்டிருக்கும். அந்த உறுப்பினர்கள் மூன்று பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும் ஒவ்வொருவரும் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் புலமை கொண்டவர்களாகவும் உயர் பதவிகளை வகித்தவர்களாகவும் இருக்க வேண்டும். புதிய சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு அரசியலமைப்பு பேரவை என்று குறிப்பிடுவதை நீக்குவதன் மூலமாக இந்த நியமனங்களை ஜனாதிபதி தானாகவே செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். 17A  அத்தியாயத்தில் உள்ள எந்தவொரு ஏற்பாட்டையும் நீக்குவதற்கு அல்லது திருத்துவதற்கான எந்தவொரு சட்டமூலமும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்கு முன்னதாக ஒவ்வொரு மாகாண சபைக்கும் அவற்றின் அபிப்பிராயங்களை பெறுவதற்காக ஜனாதிபதியால் அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படாத பட்சத்தில் அது சட்டமாக வர முடியாது. சகல மாகாண சபைகளினதும் பதவி காலங்கள் முடிந்த காரணத்தால் அவ்வாறு செய்யப்படவில்லை. புதிய மாகாண சபைகளும் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அதனால் கடந்தவாரம் 20ஆவது திருத்த சட்டமூலம் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்யப்பட்டமை அரசியலமைப்பின் உறுப்புரை 154Gக்கு முரணானதாகும். மேலும், தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளுடன் கலந்தாலோசனை செய்ய தவறியமை மக்களின் வாக்குரிமையையும் பாதிப்பதாகும். மக்களின் வாக்குரிமை என்பது அரசியலமைப்பின் உறுப்புரை 3இனால் பாதுகாக்கப்படுகின்ற மக்களின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்ட அம்சமாகும். சாதாரணமாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒழுங்கு பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்த சட்டமூலத்தை வாபஸ் பெற்று அதிலிருந்து அதன் 41ஆவது பிரிவை நீக்கிவிட்டு மீண்டும் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதாகும். ஆனால், அத்தகையதொரு நடவடிக்கை எடுப்பது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. உறுப்புரை 154R அதன் தற்போதைய வடிவிலேயே அரசியலமைப்பில் தொடர்ந்து இருக்கும் வரை அரசியலமைப்பு பேரவையும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் அந்த பேரவையின் ஆலோசனையின் பேரிலேயே நிதி ஆணைக்குழுவுக்கான நியமனங்களை ஜனாதிபதி செய்யலாம். ஆனால், 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் அரசியலமைப்பு பேரவையை நீக்குவதை நோக்காகக் கொண்டிருக்கிறது. இங்கு தான் பெரும்பாலும் எளிதில் கையாள முடியாத பிரச்சினை இருக்கிறது. 20ஆவது திருத்த சட்ட மூலத்தை வரைந்த அநாமதேய நபர் அரசியலமைப்பின் 17A அத்தியாயத்தின் அவசியத்தை கவனிக்க தவறிவிட்டார் போலும். சட்டமூலத்தின் முதலாவது வாசிப்பை முன்மொழிந்த நீதியமைச்சரும் அரசியலமைப்பின் உறுப்புரை 154G(2) இன் அவசியத்தை அலட்சியம் செய்துவிட்டார் போலும். இந்த இருவரும் சேர்ந்துதான் இந்த திரிசங்கு நிலையை தீர்த்து வைக்க வேண்டியது அவசியமாகும். https://www.virakesari.lk/article/91030
    • இது ஊமை குத்தில்ல அக்னி இருட்டு அறையில் முரட்டு குத்து🤣 ஆனா நீங்கள் எங்ககிட்ட கனக்க எதிர்பாக்கிறியள். நாங்கள் சும்மா இங்க வந்து எழுதுறது, சீமானின் பின்னால திரியுறது இப்படித்தான் செய்வம்.  இதுக்கு மேல எதுவும் செய்யமாட்டம், ஏன்னா முடியாது🤣 சீமானை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் இப்படி வம்பு கதைக்கத்தான் நாங்கள் சரி: ஆனால் இதனால் ஊரில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களுக்குதான் பிள்ளையான் போன்ற பல திறமையான தலைவர்கள் இருக்கிறார்களே?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.