• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
போல்

ஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி! சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்

Recommended Posts

Posted (edited)
5 hours ago, Kapithan said:

இதற்கு இன்னுமொரு பெயர் இருக்கிறது - எஸ்கேப்பிசம்.😂 Escape-ism 😎

 

நான் பிறருடைய தரத்தை ஒருபோதும் அளவிடேன். எனக்கூட்டப்பட்ட கல்வி எல்லோருமே சமமானவர்கள் என எனக்கு புகட்டியுள்ளது. 😀

 

Quote

உண்மையில் இவர் மேட்டுக் குடி அல்ல. மேட்டுக் குடியாகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் என எண்ணுகிறேன்.😏

ஒரு கருத்தை முன்வைத்தால் அதிலுள்ள குறைகளை அல்லது தவறான வாதத்தை சுட்டிக் காட்டி வாதாடுவதுதான் முறை. அதை விடுத்து , வாதாடுபவரின் நிறம் சரியில்லை, வாதாடுபவர் மீசை வைத்திருக்கிறார். அவர் அப்படி. இவர் இப்படி. அதனால் இவருடன் வாதாடமாட்டேன் என்று கூறுவது நகைப்பிற்குரியது. சபாஷ் ...கபித்தான் 
போட்டு காட்டு காட்டு என்று காட்டியதில் சாயம் வெளுத்துவிட்டது , நல்ல வேளை எழுதிய கருத்தையும் அழித்து விட்டு ஆள் ஓடவில்லை என்று சந்தோஷப்படுங்கோ 

Edited by அக்னியஷ்த்ரா
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 29/5/2020 at 02:52, கற்பகதரு said:

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை.

பெயரை மாற்றி, உருவை மாற்றி,   நல்ல தரம் தான்!

Share this post


Link to post
Share on other sites

இந்த குத்தமைப்பால் எம்மினத்துக்கு ஓரு விமோசனமும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.எனது கேள்வி என்ன என்றால் ஏன் இவர்களை எமது வாக்குப் பலத்தால் ஒதுக்க முடியவில்லை என்பது தான்.

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த குத்தமைப்பால் எம்மினத்துக்கு ஓரு விமோசனமும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.எனது கேள்வி என்ன என்றால் ஏன் இவர்களை எமது வாக்குப் பலத்தால் ஒதுக்க முடியவில்லை என்பது தான்.

அது தான் புரியாத புதிராக இருக்கிறது.
இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வாக்கைப் போட்டுவிட்டு அடுத்த 5 வருடத்துக்கு திட்டுகிறார்கள்.திரும்பவும் அவர்களுக்கே வாக்கைப் போடுகிறார்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

மன்னனும் சமஸ்தான கோமாளியும் திருவாய் மலர்ந்து அவ்வப்போது ஏதாவது மக்களுக்கு சொன்னால் தவிர என்ன நடக்கிறது எது நடக்கிறது என்ற விபரம் எவருக்கும் தெரிவதில்லை. செய்திகளை உடனுக்குடன் வெளியிட கட்சியின்பெயரில் இணையத்தளம் அல்லது சமூகவலைதளம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களுக்கு தேவை இருட்டடிப்பு. சனங்களை இருட்டில் இருந்து திறந்த அரசியல் வெளிக்கு கொண்டுவந்து சுயசிந்தனைக்கு  அடித்தளம் அமைத்தால் மட்டும் எதிர்காலத்தில் ஏதாவது மாற்றம் நிகழ இடமுண்டு. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் போல் அங்குள்ளவர்கள் அரசியல் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அவர்களிடம் மட்டும் தான் வாக்கு பலம் உண்டு எங்களிடம் அது இல்லை.

Edited by vanangaamudi

Share this post


Link to post
Share on other sites
On 26/5/2020 at 15:40, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் ஏந்தச் செய்த தமிழ்த் தலைவர்களே இதற்கான கருத்தை சொல்ல கடமைப்பட்டவர்கள்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த குத்தமைப்பால் எம்மினத்துக்கு ஓரு விமோசனமும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.எனது கேள்வி என்ன என்றால் ஏன் இவர்களை எமது வாக்குப் பலத்தால் ஒதுக்க முடியவில்லை என்பது தான்.

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

அது தான் புரியாத புதிராக இருக்கிறது.
இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வாக்கைப் போட்டுவிட்டு அடுத்த 5 வருடத்துக்கு திட்டுகிறார்கள்.திரும்பவும் அவர்களுக்கே வாக்கைப் போடுகிறார்கள்.

இதே குழப்பம்தான் எனக்கும். என்னைப் பொறுத்தவரையில் இதற்கு எப்போது நாம் விடை காணுகின்றோமோ அது எமது விடியலின் தொடக்கமாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, manimaran said:

இதே குழப்பம்தான் எனக்கும். என்னைப் பொறுத்தவரையில் இதற்கு எப்போது நாம் விடை காணுகின்றோமோ அது எமது விடியலின் தொடக்கமாக இருக்கும்.

தமிழ் மக்களின் ஒருபிரிவினரின் ஆணவ/கௌரவ/சுயநல அரசியலும், பெரும்பாலான பாமர தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வில் உள்ள குறைபாடும் தான்.

இவர்கள் அனைவரும் தூர நோக்கில் சிந்திப்பதில்லை.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

இதனாலேயே சம்பந்தன், மாவை, சுமந்திரன், டக்ளஸ், ........ இன்னோரன்ன கோஷ்டிகளுக்கு கணிசமான வாக்குகள் விழுது.

மறுபுறத்தில் உறுதியான மாற்று தலைவர்களும் இல்லை.

விக்கியர் இன்னும் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு உறுதியான தலைவர் என்டு தன்னை நிரூபிக்கவில்லை. கடந்த ஓரிரு வருஷங்களை, கட்சி தொடங்கியபின் அவர் இதுக்கு பயன்படுத்த தவறிவிட்டார்.

கஜேந்திரகுமார் ஒன்றுக்கும் உதவாத கஜேந்திரன், சுகாஸ் போன்ற உதவாக்கரைகளை இணைத்து தானும் ஒரு முதிர்ச்சியற்றவராகவும் சுயநல அரசியல்வாதியாகவும் மட்டும் செயற்படுகிறார். 

அரசியலுக்கு முன்வரும் பெரும்பாலான வட-கிழக்கு இளைஞர்கள் கூட செயற்திறன் மிக்கவர்களாக இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அரச வேலைக்கு பிச்சைப்பாத்திரத்துடன் திரிபவர்களாக அல்லது எவனாவது அனுப்பும் காசில் சுகமாக வாழ நினைப்பவர்களாக அல்லது எவனாவது அனுப்பும் காசில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் மனநிலை உடையவர்களாக இருக்கிறார்கள்.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த குத்தமைப்பால் எம்மினத்துக்கு ஓரு விமோசனமும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.எனது கேள்வி என்ன என்றால் ஏன் இவர்களை எமது வாக்குப் பலத்தால் ஒதுக்க முடியவில்லை என்பது தான்.

மக்களை கவரதக்கதாக உணர்ச்சியூட்டி பேசி ஏமாற்றுவதில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் நிபுணர்கள் வெற்றி அவர்களுக்கு மக்களுக்கு விமோசனம் இல்லை.

On 29/5/2020 at 03:48, Kapithan said:

ஒரு கருத்தை முன்வைத்தால் அதிலுள்ள குறைகளை அல்லது தவறான வாதத்தை சுட்டிக் காட்டி வாதாடுவதுதான் முறை.

இவைகள் தான் உங்கள் நல்ல கருத்துக்களா

On 28/5/2020 at 21:47, Kapithan said:

சைவ  வேளாள + முக்கியமாக,  படித்த, பொருளாதார பலம் மிக்க, தென்னிந்திய திருச்சபையினைப் பின்னணியாகக் கொண்ட,  ஆங்கிலக் கல்வியறிவு ஊட்டப்பட்ட (தெரியாதவர்களுக்கு - அமெரிக்கன் மிசன்) வேளாள அதிகார வர்க்கத்தினர்

 

On 28/5/2020 at 21:47, Kapithan said:

உமது ஆட்களெல்லோருமே தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். அது மட்டுமல்ல எதிரியோடு சேர்ந்து நின்றுகொண்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயற்பட்டனர்.

 

 

On 28/5/2020 at 21:47, Kapithan said:

எனக்கு கதை விடலாமென்று நினைக்காதீர். அமெரிக்கன் மிசன் தொடர்பாக ஆதியோடந்தமறிந்தவன். என்னால் புடுப் புட்டு வைக்க முடியும். 

 

On 29/5/2020 at 03:48, Kapithan said:

உண்மையில் இவர் மேட்டுக் குடி அல்ல. மேட்டுக் குடியாகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் என எண்ணுகிறேன்.😏

 

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவைகள் தான் உங்கள் நல்ல கருத்துக்களா

 

என்னால் கூறப்பட்டவை உறுதிப்படுத்தப்பட்ட  வரலாற்று உண்மைகள். உங்களால் தவறு என நிரூபிக்க முடியுமா ? Proven facts. 
இவற்றைத்தான் நீங்கள் கேள்விக்கு  உட்படுத்த வேண்டுமேயல்லாமல் எழுதுபவனின் குணனலன்களையல்ல. ☹️

என்னால் கூறப்பட்ட விடயங்களை பிழையென நிரூபிக்க முடியுமா 👍

 

சிந்தப்பட்ட இரத்தைதை அசிங்கப்படுத்த முனைந்ததன் காரணமாக எழுந்த கோபத்தில்,  சில சொற்கள் முறைதவறி வந்திருக்கலாம். அவற்றை தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள். 🙏

ஆனால் என்னால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்குப் பதில் கூறுங்கள். 🤔

Share this post


Link to post
Share on other sites
Quote

ஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி! சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்

இந்தப்படம் இப்பவும் ஓடுதே.....!?!?!?!

இண்டைக்கு இரவு வந்து ஒருக்கால் செக்கன்ட் சோ பாப்பம்  😂

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, குமாரசாமி said:

இந்தப்படம் இப்பவும் ஓடுதே.....!?!?!?!

இண்டைக்கு இரவு வந்து ஒருக்கால் செக்கன்ட் சோ பாப்பம்  😂

ஓம் ஓம் ஆனால் ஜெனிவாவுக்கு போகோணும்.
துல்பனிடம் சொன்னா கொண்டு போய்க் காட்டுவார்.

Share this post


Link to post
Share on other sites
On 29/5/2020 at 04:23, கற்பகதரு said:

அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள்.

எப்பிடியெப்பிடி....? விநாயகமூர்த்தி  முரளிதரன், டக்கிளஸ் போல காட்டிக்கொடுத்து ...... நக்கி பிழைக்க வேண்டும் என்கிறீர்களா? அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்கள் ஆயுதம் தூக்க இந்த மெத்தப் படித்தவர்கள்தான் காரணம். இப்போ யார் முட்டாள்கள் உங்கள் பார்வையில்? ஆயுதம் தூக்கியவன், அதனால் தன் குறிக்கோளை அடைய வேண்டும். இல்லை அதனாலேயே மடியவேண்டும். இல்லையாயின்: அவனும், அவன் சார்ந்தவர்களும் எதிரிக்கு அடிமையே. தன் குடும்பத்தையே அதற்கு விலை கொடுத்து மடிந்தவன் வீரன். சுயநலத்தில் மௌனம் காத்தவர்களும், துணை போனவர்களும் அடிமை விலங்கில் இருந்து கொண்டு, மடிந்தவர்களை முட்டாள்களாக்கி, எதிரிக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். முன் எச்சரிக்கை இல்லாத தலைவர்கள், இளஞர்களை ஆயுதம் தூக்க வைத்து, சந்ததி அழிந்த பின்னும், தம்மை சாணக்கியர் என்று தட்டிக்கொள்ளும் துர்பாக்கியம். நம் இனத்துக்கு.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.