Jump to content

முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா

முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா

 

ஹாங்காங் மீது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனாவால் ஹாங்காங் முடிவுக்கு வருகிறது.
பதிவு: மே 22,  2020 10:33 AM
பெய்ஜிங்
 
2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது அதன் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது.
 
நாடாளுமன்றம் அதன் ஆண்டு கூட்டத்தொடரை இன்று நடத்திய பின்னர் இந்த சட்டம் குறித்த விவரங்கள் வழங்கப்படும் என்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜாங் யேசுய் தெரிவித்துள்ளார்.
 
ஜாங் யேசுய் கூறியதாவது:-
 
"புதிய சூழ்நிலைகள் மற்றும் தேவைகளின் வெளிச்சத்தில், தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை பயன்படுத்துகிறது" ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க ஒரு புதிய சட்ட கட்டமைப்பையும் அமலாக்க பொறிமுறையையும் நிறுவுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
புதிய சட்டம் ஹாங்காங்கின் நிலப்பரப்பில் அனுமதிக்கப்படாத பல சுதந்திரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் மீது சீனாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.
 
ஹாங்காங் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கை குறித்த கூறுகையில்., இது தொடர்பான விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் ஹாங்காங் ஊடகங்கள் இந்த சட்டம் பிரிவினை, வெளிநாட்டு தலையீடு, பயங்கரவாதம் மற்றும் மத்திய அரசைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து தேசத்துரோக நடவடிக்கைகளையும் தடை செய்யும் என்று தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கை ஒரு நிதி மையமாக அதன் நற்பெயரை கடுமையாக பாதிக்கும் என்று ஹாங்காங்கில் உள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது நடந்தால்,` ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்` அதிகாரப்பூர்வமாக அழிக்கப்படும் "என்று ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர் டென்னிஸ் குவோக் கூறினார். 
 
ஹாங்காங்கின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும், ஏனெனில் அங்கு வசிக்கும் குடிமக்களில் குறைந்தது 85,000 பேர் அமெரிக்கர்கள். மேலும் 1,300 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன, இதில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனமும் பங்குகளை வைத்துள்ளது.
 
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறும் போது இந்த திட்டம் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது". "அது நடந்தால் நாங்கள் அந்த பிரச்சினையை மிகவும் வலுவாக கையாளுவோம் செய்வோம்," என்று தெரிவித்தார். 
 
 
 
Link to post
Share on other sites

சீனாவின் சட்டத்தில் என்ன இருக்கிறது?

சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹாங்காங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது.

அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும்.

இதுதான் ஹாங்காங் மக்களுக்கு அச்சமூட்டுகிறது.

https://www.bbc.com/tamil/global-52789085

Link to post
Share on other sites

பிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது. 

Link to post
Share on other sites
22 hours ago, ampanai said:

பிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது. 

பிரித்தானியா தனது பொருளாதார நலன்களின் அடிப்படையிலன்றி மக்கள் நலன் காக்கும் அரசல்ல என்பது அதனால் கைமாற்றிவிட்டுச் சென்ற இலங்கைத்தீவு படும்பாடே எடுத்தக்காட்டு. 23ஆணடுகளில் கொங்கொங் படும்பாடு. தமது நலன்களுக்காக மேற்கு மட்டுமல்ல கிழக்கும் எதையும் செய்யும் என்பதை வரலாறுப் பதிவுகளில் கொட்டிக்கிடக்கிறது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nochchi said:

பிரித்தானியா தனது பொருளாதார நலன்களின் அடிப்படையிலன்றி மக்கள் நலன் காக்கும் அரசல்ல என்பது அதனால் கைமாற்றிவிட்டுச் சென்ற இலங்கைத்தீவு படும்பாடே எடுத்தக்காட்டு. 23ஆணடுகளில் கொங்கொங் படும்பாடு. தமது நலன்களுக்காக மேற்கு மட்டுமல்ல கிழக்கும் எதையும் செய்யும் என்பதை வரலாறுப் பதிவுகளில் கொட்டிக்கிடக்கிறது. 

இவர்களால் விடுவிக்கப்பட்ட நாடுகள் ஒன்று சண்டை போட்டபடி இருக்கணும் இல்லை இவர்களின் சப்பாத்தை  நக்கி கொண்டு இருக்கணும் உதாரணம் இந்தியா மோடி .

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன தளபதியின் கருத்தினால் அச்சம்

ஹொங்கொங்கின் இறைமையை உறுதிசெய்யப்போவதாக சீனா இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங்கிற்கான சீனா இராணுவத்தின் தளபதி சென்டாவோஜியாங் இதனை தெரிவித்துள்ளார்.

china-army-officer-hong-300x168.jpg
சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டங்களினால் ஹொங்கொங்கில் மீண்டும் பதட்டநிலையும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துள்ள நிலையிலேயே சீன இராணுவஅதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் புதிய மிகவும் ஆபத்தான தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கின் சிவில் உரிமைகளிற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியாகியுள்ள நிலையிலேயே சீன இராணுவ அதிகாரி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

Hong-Kong-protests-300x169.jpg
ஹொங்கொங்கின் தேசிய இறைமையையும் அபிவிருத்தி நலன்களையும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மையையும் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளும் படையினரும் உறுதிபூண்டுள்ளனர், நம்பிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவ அதிகாரி அவர்களால் அது முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

honghonk-2-300x169.jpg

புதிய பாதுகாப்பு சட்டம் முதற்தடவையாக சீன படையினர் ஹொங்கொங்கில் செயற்படுவதற்கு அனுமதித்துள்ளதால் அச்சநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தால் சீன படையினர் வீதிகளில் இறங்கலாம் என்ற அச்சம் ஹொங்கொங்கில் காணப்படுகின்றது.
சீனாவின் உத்தேச சட்டத்திற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிhப்பு உருவாகியுள்ளது.

http://thinakkural.lk/article/43543

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 22:23, ampanai said:

பிரித்தானிய அரசு எவ்வாறு ஈழத்தை சிங்கள கொடுங்கோல் ஆடசியாளர்களிடம் ஒப்படைத்ததோ அதேபோன்று ஹாங்கொங்கை அதன் மக்களையும் ஏமாற்றிவிட்டது. 

ஹாங் காங் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அவர்கள் Han இனத்தவர்கள். 

பிரித்தானியவே , சீனாவின் 100 வருட மேற்கு காலனித்துவ அரசுகளின் அவமானகரப்படுத்துத்தில்  பிரித்து 100 வருட குத்தகைக்கு எடுத்து. 

சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை. 

சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது.

அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.

Link to post
Share on other sites
9 minutes ago, Kadancha said:

சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை. 

உண்மை, அனால் இந்த வளர்ச்சியை கட்டுப்படுத்தும் / குறைக்கும் வல்லமையையும் உலகம் கொண்டுள்ளது.  

9 minutes ago, Kadancha said:

சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது.

சீனா பொறுமையாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவின் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.  

11 minutes ago, Kadancha said:

அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.

ஆம், உண்மை. ஆனால், சீனா ஒன்றும் செய்யாமல் இருக்கும் / இருந்த அப்பாவியும் இல்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

சீனா பொறுமையாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவின் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.  

 

18 minutes ago, ampanai said:

ஆம், உண்மை. ஆனால், சீனா ஒன்றும் செய்யாமல் இருக்கும் / இருந்த அப்பாவியும் இல்லை. 

கிந்தியா காஸ்மீர், Goa இற்குள்  படைகளை அனுப்பியது போல ஏதாவது செய்ததா?

இவ்வளுவுக்கும், ஹாங் கொங் சீனாவின் இறையாண்மை நிலப்பரப்பு, பிரித்தானியாவிடல் குத்தகைக்கு இருந்த போதே. 

One country, two  system என்பதை மிகவும் பொறுமையுடனும், அவதானத்துடனும் மதித்தே Hong Kong ஐ நடத்தி வந்தது.

இதை பாவித்து, வெளியார், அதுவும் சீனாவின் 100 வருட அவமானத்துக்கு காரணாமான அரசுகள், ஹாங் காங் ஐ சனநாயகம் என்ற போர்வையில் சீனாவை சீண்டி இழுத்து, குலைக்க முயல்வது தெரிந்தும் பொறுமையாகவே இருந்தது, ஹாங் காங் இல் இந்த குழப்பத்தை உண்டு பண்ணும் உள்ளூர் வாசிகளுடன்  பேசி தீர்க்கலாம் என்று.

எந்தவோர் அரசும், தன்னுடைய இறைமையுள்ள  நிலப்பரப்பிலேயே, அதனுடைய 100 வருடங்கள் அவமானப்படுத்திய  இந்த மேற்கு நாடுகளின்  உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிகளும் ஆர்ப்பாட்டகருடன் சேர்ந்து பின்னிற்றகிறார்கள் என்று தெரிந்தும் பொறுமையாக இதுவரைக்கும் இருப்பது  என்பது Statecraft இல்  நடப்பது அருமை அல்லது இல்லை.   
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்

ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்

சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா - இப்போது சீனாவின் மூத்த தலைமை அமைப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளது - இது ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
 
சீனா தனது பிராந்தியத்தில் முதன்முறையாக தனது சொந்த பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவுவதையும் இந்த சட்டம் வழி வகுக்கலாம்.
 
ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும்.
 
70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.  
 
ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
 
அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீனா அறிமுகப் படுத்தும் இந்த சட்டத்தின் உண்மையான விளைவு, Hong Kong எப்போதுமே One Country, Two System ஆக இருக்கும்.

இந்த சட்டம் வராவிட்டால், 2047 ஹாங் காங் சீனாவுடன் ஒன்னு Country ஆகி விடும்.

உண்மையில் இதை Hong Kong அரசாங்கமே செய்து இருக்க வேண்டும், சீனாவும் அதையே விரும்பியது.

ஆனால்.ஹாங் கொங் இன் வலிமையற்ற அரசாங்கம் அந்த சட்டத்தை இயற்ற முடியவில்லை.

மேலும், சீன, மேற்றுகின் உளவுத்துரையும், முகமற்ற ராஜதந்திரிகளும் செய்யும் நாரி வேலையை பார்த்துக் கொண்டு, தனது கவனத்தை பொருளதாரா  வளர்ச்சியில் இருந்து தளர்த்துவதத்திற்கு தயாரில்லை.

இந்த சட்டத்தின் நோக்கமம், நடைமுறையும், ஹாங் காங் இந்த நீதி துறைக்கும், நிர்வாகத்தின் கீழேயே இருக்கும் என்பதே சீனாவிநத்தம், ஹாங் காங் இணைத்தும் எதிர்பார்ப்பு, அதன் மூலம் கொங் காங் வாசிகள் நிம்மதியும், திருப்தியும் அடைகிறார்கள்.

மேலும், இது சீனாவை பாதுகாக்கும். West இன் தடைகள் சீனாவை விட West ஐயே அதிகம் தாக்கும், காலப்போக்கில் சீனாவுக்குள்ள தாக்கம் அகன்று விடும். இது West இற்கு கடுக்காய் குளிசை போல கைக்கிறது. 

இது தான் உண்மை நிலவரம், West இன் ஊதுகுழல்களும், US, UK தமது கண்கள், காதுகள், வாய்கள் அடைக்கப்பட்டு,   கைகளும்  கட்டப்பட்டதாலும் வந்த வெப்பியார துடிப்பே தவிர, உண்மையில் ஹாங் காங் மக்களின் அக்கறையில் துள்ளவில்லை. 

  
 "If HK didn't enact Article 23 National Security legislation then it would have to be 1 country 1 system after 2047. With National Security legislation it will be 1 country 2 systems.

As HK's weak Govt couldn't meet their commitments under Article 23 the PRC enacted it under Article 18.

So people who are domiciled here are happy to have the legislation if it is subject to HK's judicial systems, which looks like the intention."    

Edited by Kadancha
amend
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்

ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.
பதிவு: மே 30,  2020 17:03 PM
லண்டன்

ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில், ஹாங்காகங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து  குடியுரிமை வழங்க இங்கிலாந்து 

உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

இங்கிலாந்தின்  இந்த முடிவு சீனாவை கொந்தளிக்கச் செய்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும்
வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது.அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு 
வரப்பட்டது.

மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் இதை தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. முன்பு ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுவாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், அவர்கள் மீதான அக்கறையால்,இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.அதன்படி, 350,000 வெளிநாடுவாழ் 
நாட்டினரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய வெளியுறவுச்செயலர் டொமினிக் ராப்  வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டினரின் விசா உரிமைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இது, அவர்கள் எதிர்காலத்தில் 
இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
ஆனால், இன்னொருபக்கம், புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட காலம் போராடி, இப்போதுதான்  ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியே கொண்டுவந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர், பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்கள் இங்கிலாந்திற்குள் வருவதை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/30170324/Three-million-Hong-Kong-residents-eligible-for-UK.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு; சீனா கோபம்

ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு; சீனா கோபம்

இங்கிலாந்தின் காலனியாக இருந்து வந்த ஹாங்காங் இப்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஹாங்காங்கை சீனாவிடம் 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ஒப்படைத்தபோது, ஹாங்காங்கின் சுயாட்சிக்கு உத்தரவாதம் தரப்பட்டது.


ஆனால் தற்போது ஹாங்காங்கின் சுயாட்சியை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்தன.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி திரள்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தனியார் அமர்வில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தன. சீனாவின் பாதுகாப்பு சட்டம், ஹாங்காங்கின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் என கூறின.

முறையான கூட்டத்தை தடுத்த சீனா, இந்த தலையீடை நிறுத்துமாறு அவர்களை கோபத்துடன் எச்சரித்தது.

சீனா தனது நடவடிக்கையில் உறுதியாக இருந்தால் ஹாங்காங்கில் இங்கிலாந்து பாஸ்போர்ட்டு வைத்துள்ள 3½ லட்சம் பேருக்கு தாங்கள் குடியுரிமை வழங்குவதற்கு பாதை வகுப்பதாகி விடும் என்று இங்கிலாந்து கூறி உள்ளது. ஆனால் இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அப்படிச்செய்தால், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என கூறியது.

ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவையும் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை குறைகூறின. இதையொட்டி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/World/2020/05/31031904/World-countries-intervene-in-Hong-Kong-issue-China.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town

 

Link to post
Share on other sites

காஷ்மீரை அடாவடியாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்த கிந்தியாவை இந்த உலகு கண்டிக்கவில்லையே. பிறகு  கொங்கொங் விடயத்தில் ஏனிந்தக் கொதிப்பு.

Edited by nochchi
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.