Jump to content

ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Update-1.jpg

ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை

உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், 2ஆவது அலை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை உலக நாடுகள் அமுல்படுத்தி வந்தன.

அத்தோடு, முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், தற்போது பல நாடுகளும் முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தி வருகின்றன. இதனையடுத்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் ஒரு இலட்சத்து 1,400-க்கும் மேற்பட்டோருக்கு தாக்கியுள்ளமை பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 இலட்சத்து 94 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த தொற்று காரணமாக இதுவரையில் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான  20 இலட்சத்து 81 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர்.

http://athavannews.com/ஒரே-நாளில்-ஒரு-இலட்சத்து/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்ப ஓயாத அலைகள் இரண்டு  மூன்று என்கினம் .😄

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு இப்ப ஓயாத அலைகள் இரண்டு  மூன்று என்கினம் .😄

இப்ப சொல்லாட்டி.... திரும்பவும், "ட்ரம்மிடம்" பேச்சு  வாங்க அவர்கள் தயாரில்லை.
அதனால்.. "குருட்டுப் பூனை, விட்டத்தில் பாய்ந்த மாதிரி" அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். :grin:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.