Sign in to follow this  
உடையார்

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழும்ப எத்தனை ஆண்டுகள் தேவை? ‘பாத்பைன்டர்’ ஆய்வு

Recommended Posts

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழும்ப எத்தனை ஆண்டுகள் தேவை? ‘பாத்பைன்டர்’ ஆய்வு

road-2.jpgஉலகப் பொருளாதாரத்தின் மீள் எழுச்சி குறித்து சர்வதேச சமூகம் மிகுந்த அக்கறையுடன் செயற்படத் தொடங்கியுள்ளது. அத்தோடு, கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை உலக சமூகம் ஆராயத் தொடங்கியுள்ளது.

தொழிற்சாலை மற்றும் வியாபார சரிவு காரணமாகப் பல்லாயிரக்கணக்கான வேலைகள் இழப்பு, பணிபுரியும் ஊழியர்களின் வருமானம் குறைவு ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, வறுமை நிலை மீண்டும் உயரும். மக்கள் பசியுடன் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இந்நிலையானது மிகவும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கவேண்டிய காலகட்டத்தை இட்டுச் செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும், இது தற்போதுள்ள பொருளாதார கட்டமைப்புகளை மறுஆய்வு செய்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.

இலங்கையின் தற்போதைய நிலையானது 3/4 பங்காக இருக்க முடியுமா? 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே சவால்களை எதிர்நோக்கி இருந்த நாடுகள் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது

கோவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் ஆபத்தானது என தெரியவந்துள்ளது. இந்நிலையிலிருந்து மீள்வதற்குப் பல வழி முறைகள் உள்ளன. பாத்பைண்டர் என்ற அறக்கட்டளை முன்வைத்த அறிக்கைக்கு விசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி உட்பட 20 நிபுணர்களைக் கொண்ட குழுவினரால் மேற்கொண்ட யோசனைகளின் படி தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5000-2-2-2.pngபாத்பைண்டர் அறிக்கையின்படி, இலங்கையின் பொருளாதாரம் போரின் முப்பது ஆண்டுகளை விடப் பாரதூரமாக இருக்கும்.

2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 0.5% எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட மோசமான நிலையில் இருந்தமை கவனத்தில் கொள்ளவேண்டும்.

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரம் இறுதியாக பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது.

2020 ஆம் ஆண்டு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை உயர வாய்ப்புள்ளது இதன் விளைவாக வருமான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகாதார செலவுகள் , சமூக நலனுக்கான செலவு மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான செலவுகள் கணிசமான அளவு அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.

இதற்கான பணத்தை எங்கியிருந்து பெற்றுக்கொள்வது? கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக அரசு மற்றும் தனியார் துறையின் ஊழியர்கள் தொழில்வாய்ப்பில் பல சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

 

குறித்த ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தைத் தவிர, ஏனைய கொடுப்பனவுகள் குறைந்துவிட்டன. தொழிற்சாலை மற்றும் வியாபார நிலையங்களின் செயற்திறன் மூன்றில் ஒரு பங்காக வரையறுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வருவாய் வீழ்ச்சியடைந்து வருவதாக 2019 ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் வருமானம் சுமார் ஆயிரத்து 560 பில்லியன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.8 சதவீதமாகும். இலங்கையின் தேசிய வருமானம் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் 2015 இல் சுட்டிக்காட்டியது.

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அரசாங்க செலவினங்களை நிர்வகிக்க முடியாது அத்தோடு, கடன் அதிகரிப்பதோடு, பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்லும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இப்போது நாட்டில் பொருளாதார நிலை மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. இந்நிலை சாதாரண நிலைக்குத் திரும்ப இன்னும் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். அதாவது 2024 ஆம் ஆண்டு குறைந்தது 14 சதவிகிதம் தேசிய வருமானத்தை எட்டமுடியும்.

சர்வதேச பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, மீண்டும் பொருளாதார எழுச்சி கட்டி எழுப்ப மூன்று விடயங்கள் உள்ளன. அதில் “வி” வடிவம் முக்கியமானது. உடனடியாக கீழ்நோக்கி ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, அவை விரைவாக உருவாகின்றன. இரண்டாவதாக, “யு” வடிவம் பெறக்கூடும். அதாவது, அது குறைந்து ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உருவாகிறது. மூன்றாவதாக, “எல்” என்ற எழுத்தின் வடிவத்தில் உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் தொடர வாய்ப்புள்ளது.

பாத்பைண்டர் அறக்கட்டளையின் அறிக்கை, விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ள நாடுகள் விரைவில் வெளிப்படும். அத்தோடு, இலங்கை இரண்டாவது பிரிவில் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பின்னணியில், நாடு ஒரு சாதாரண சமூக-பொருளாதார பின்னணியைக் கொண்டுள்ளது.

அரச துறை தொழிலாளர்கள் மூன்றில் ஒரு பங்காக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் துறை தொழிலாளர்கள் பலவந்தமாக வரையறுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் அலுவலகத்தின் ஆரம்ப நேரம் காலை 10.00 மணிக்குத் திறக்க நிர்பந்ததிற்குள்ளாகியுள்ளனர்.

இதுவரை, செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற வேக அமைப்புகள் ஓரங்கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அத்தகைய சந்தர்ப்பத்தில், பொருளாதாரத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. சமுதாயத்தைப் பராமரிப்பதற்கான செலவு அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், வருமானம் வீழ்ச்சியடைந்த ஒரு சமூகத்திடமிருந்து ஒரு பெரிய உறுதிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது, அன்றாட அத்தியவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

இந்த பின்னணியில், உள்நாட்டு கடன் பெருகக்கூடும், இதன் விளைவாகப் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும்.

நலன்புரி செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்தின் வரவு – செலவு பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 மாத்திரம் தயாரிக்க முடியும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையை அபிவிருத்தி பாதையில் இட்டுசெல்ல வேண்டுமென்றால், கட்டமைப்பிற்கு அப்பால் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிலையங்களின் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யக் குறைந்த வட்டி முறையில் உதவித் திட்டங்கள் தேவை என பாத்பைண்டர் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் ஏ.டி.பி. மற்றும் பிற முக்கிய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அவசரக் கடன்களைப் பெறுவதாகவும், மத்திய வங்கி மற்றும் மாநில வங்கிகளை நேரடியாகத் தொழில்முனைவோர் பணியில் அமர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குத் தாமதமாக பணம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

fort.jpgஎந்த நாடும் நிறுவனமும் நிபந்தனையின்றி உதவி வழங்குவதில்லை. அவர்களுக்குப் பின்னால் பல நோக்கங்கள் உள்ளன. நாட்டுக்கு ஏற்றவாறு அவற்றைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. தனியாக நின்று அத்தகைய நடவடிக்கைகளை நிராகரிப்பது சாத்தியமில்லை. ஆனால் இதுபோன்ற ஒரு நடவடிக்கையின் கசப்பான விளைவுகளை அனுபவிக்க சமூகம் தயாரா?

டிஜிட்டல் அடையாள அட்டைகள், சகலருக்கும் வங்கிக் கணக்குகள், அரசு சேவைகள், தொலைப்பேசி மருத்துவம் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஆகியவற்றில் தொழில்நுட்பம் கவனம் செலுத்த வேண்டும் என்று பாத்பைண்டர் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

முந்தைய அரசு ஸ்மார்ட் அட்டை முறைக்கு பஸ் சீட்டுக்களைப் பெற முயற்சித்தாலும் அது தோல்வியடைந்தது. அந்த நேரத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை. இன்று அது ஒரு சமூகத் தேவையாகவுள்ளது. பணத்தைப் பயன்படுத்த முடியாத இடத்திற்குப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. தொலைத்தொடர்பு சேவையில் ஒரு பெரிய முதலீடு செய்யப்பட வேண்டும்.

நாட்டை பாதுகாப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பதினைந்து வாரங்களுக்கு மேல் விதித்தப்பட்டிருந்தது. இப்படியான ஒரு நீண்ட கால கடமை நீக்கம் வரலாற்றிலிருந்ததில்லை. இந்த இடைவெளியைச் சமாளிக்க அதிகமாக பணியாற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சனிக்கிழமை நாட்களிலும் பணிபுரியவேண்டும் என பாத்பைண்டர் கட்டமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இங்கே பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு முக்கியமான யோசனை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு வகையான புதிய பயிர்களைப் பயிரிடுவதற்கு விதைக்கான செலவை ஏற்க அரசாங்கம் ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.

அத்தியாவசியமான உணவுக்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இது தோட்டக்கலைக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறை. ஏராளமான பொது மற்றும் தனியார் தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக முன்வைத்த வரவு- செலவு திட்டங்கள் இந்த தோட்டங்களின் விநியோகம் குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு ஏற்ப அமைந்தன. ஆனால் அது பலனளிக்கவில்லை. உதாரணமாக, நாட்டின் மொத்த தேயிலை பரிமாற்றம் 1.4 பில்லியன் ஆகும். இது ஒரு நன்மை அல்ல.

இந்த நிலத்தில் ஏனைய பயிர்களைப் பயிரிடப்பட்டால், அது அதிக இலாபம் ஈட்ட முடியும். சலுகை கடன் திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். ஆனால் அவற்றைச் செய்யாமல் இருப்பது ஏன்? “பாத்பைண்டர் அறக்கட்டளை” மட்டுமல்ல, பிற அமைப்புகளும் புதிய யோசனைகளைக் கொண்டு வருகிறார்கள். இவற்றைச் செயற்படுத்தும் திட்டத்தைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

நன்றி: மௌபீம
தமிழில்; தயா

http://thinakkural.lk/article/42842

 

Share this post


Link to post
Share on other sites

எளிதாக மீளமுடியாது: கரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்: பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை

covid-19-leading-economist-warns-of-10-years-of-depression-debt

 

கரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால், எளிதாக மீண்டுவருவது என்பது கடிமானது என்று முன்னணி பொருளாதார வல்லுநர் நோரியல் ரூபினி தெரிவித்துள்ளார்.

உலகளவில் டாக்டர் டூம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பொருளாதார வல்லுநர் நோரியல் ரூபினி, 2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதார சிக்கலை சரியாகக் கணித்துக் கூறியவர்.

 

துருக்கியில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து, அமெரிக்காவில் குடியிருக்கும் ரூபினி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹார்வார்ட் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ரூபினி ஐஎம்பி அமைப்பில் பொருளதாார ஆலோசகராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ரிசர்வ் வங்கி, உலக வங்கி, இஸ்ரேல் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் ஆலோசகராக ரூபினி பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதிபர் கிளிண்டன் காலத்தில் அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகராக ரூபினி பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது

கரோனா வைரஸ் உலகளவில் மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட தனது பொருளாதார செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்து லாக்டவுன் அறிவித்தது. கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மனித உயிர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரி்விக்கின்றனர்

இந்த சூழலில் டாக்டர் டூம் என்று அழைக்கப்படும் நோரியல் ரூபினி கரோனா வைரஸ் பாதிப்பால் உலகப்பொருளாதாரம் மீள்வது குறித்து பிபிசி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு 10 ஆண்டுகளுக்குவரை நீடிக்கும் என்பது எனது கணிப்பு. இந்த பாதிப்பிலிருந்து ஒவ்வொரு நாடும் எளிதாக மேலே வருவது என்பது கடினமான காரியம்

1590228122756.jpg

கரோனா வைரஸுக்குப்பின் சுருக்கமாகச் சொன்னால், பலநாடுகளில் வேலையிழப்பு அதிகமாக ஏற்படும், முன்புபோல் வேலைக்கு ஆள்எடுப்பது இருக்காது. அப்படி ஓர் ஆண்டுக்குள் உலகப்பொருளாதாரம் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக உலக நாடுகள் அறைகூவல் விடுத்தால் அந்த பொருளாதாரம் நோய்பீடித்ததாக, வலுவிழந்ததாக, புத்துணர்ச்சியில்லாததாகவே இருக்கும்

இதுவரையாரும் பார்த்திராத பொருளாதார சரிவு உலக நாடுகளில் இருக்கப்போகிறது. உலகப்பொருளாாரச் சிக்கலின்போது கூட உற்பத்தி தடைபடுவதற்கும், வீழ்ச்சி அடைவதற்கும் 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் கரோனா பாதிப்பால், 3 ஆண்டுகள் எடுக்கவில்லை, 3 மாதங்கள் எடுக்கவில்லை, 3 வாரங்களில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவும் மளமளவென சரிந்துவிட்டது.

உலகப்பொருளாதாரத்தில் மீட்சி என்பது “U”வடிவத்தில்தான் இருக்கும் அல்லது “L” வடிவத்தில் இருக்கும். அதாவது மிகப்பெரிய பொருளாதார மந்தமாகத்தான் இருக்கும். கரோனாவினால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வளர்ந்த, வளர்ச்சி அடைந்துவரும் நாடுகள், வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஏழைகளின் வேலையிழப்பு மோசமாக இருக்கும்

(யு- வடிவ பொருளாதார மீட்சி என்பது பொருளாதர வளர்ச்சி அடிமட்டத்துக்கு வீழ்்ச்சி அடைந்து, நீண்டகாலத்தில்தால் மெதுவாக வளர்ச்சி அடையும் அல்லது வளர்ச்சி இல்லாமலும் போகலாம்)

(எல்-வடிவ பொருளாதார மீட்சி என்பது பொருளாதார வளர்ச்சி திடீரென மோசமாக சரிவைச்சந்தித்து, அந்த பாதிப்பு நீண்டகாலத்துக்கு தொடர்வதாகும்)

கரோனாவால் பறிபோன வேலையிழப்புகள் அனைத்தும் பாதியளவுதான் மீண்டும் கிடைக்கும், அதிலும் முன்பு வாங்கிய ஊதியத்தில் பாதியளவும், எந்தவிதமான பலன்களும் இல்லாமல் இருக்கலாம், அல்லது பகுதிநேர வேலையாகக்கூட இருக்கலாம். வேலையில் ஒருவிதமான பாதுகாப்பின்மை, வருமானமும், ஊதியமும் சராசரியாகத்தான் இருக்கும்

2-ம்கட்ட கரோனா அலை வந்துவிடும் என்பதால், இன்னும் பல நாடுகள் முழுமையாக பொருளாதார நடவடிக்கையைத் தொடங்காமல் உள்ளன. நீ்ங்கள் கடைகளைத் திறந்துவைக்கலாம், கடைக்கு வந்து சென்றவர்கள் திரும்பி வரப்போகிறார்களா என்பதுதான் கேள்வி. சீனாவில் உள்ள பெரும்பலான ஷாப்பிங் மால்கள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகிறது. பாதி விமானங்கள் இயக்கப்படவில்லை. ஜெர்மனியில் கடைகள் திறந்திருக்கின்றன, ஆனால் பொருட்களை வாங்க மக்கள் கடைக்கு செல்லவில்லையே

வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளைவிட வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஆசியாவில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும். ஆனால், சீனா, அமெரிக்கா இடையே பெரும் பிளவு உருவாகும் இரு நாடுகளில் யார் சூப்பர் பவர் என்பதை தீர்மானி்ப்பதில் ஆசிய நாடுகள் வலிந்து தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கும்

இந்த ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உலகின் மற்ற நாடுகளுக்குச் செல்லும் போது நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்களா அல்லது எதிராக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழும்.

நீங்கள் எங்களுடைய செயற்கை நுண்ணறிவு முறைகளை, தொழில்நுட்பங்களை, ரோபாட்டிக்ஸை பயன்படுத்துங்கள், அல்லது எங்களின் போட்டியாளரின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்ற போட்டி வரும். உலகில் இன்னும் பிரிவுகள் உருவாகும்.

இவ்வாறு ரூபினி தெரிவித்தார்

https://www.hindutamil.in/news/world/555894-covid-19-leading-economist-warns-of-10-years-of-depression-debt-4.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this