Sign in to follow this  
கிருபன்

தூத்துக்குடி: மே 22... கடக்கும் நினைவேந்தலில் காத்துக் கிடக்கும் நீதி!

Recommended Posts

தூத்துக்குடி: மே 22... கடக்கும் நினைவேந்தலில் காத்துக் கிடக்கும் நீதி!

spacer.png

ச.மோகன்

அந்தக் கறுப்பு நாள் மே 22இன் நினைவுகள் சிவக்கின்றன. தூத்துக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலம், நீர், காற்று ஆகியன ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக்கழிவுகளால் மாசுபடுவதைத் தடுக்க அமைதியான முறையில், அறவழியில் போராடிய மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காவல் துறையின் கொடூரத் தாக்குதலுக்கும், ஒரு பெண்மணி பேருந்தில் பற்றிய தீயிலும் பலியானார்கள். பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.

இக்கொடிய நிகழ்ச்சி நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. நீதி எட்டாக்கனியாகவே உள்ளது. அவர்கள் குடும்பமாகச் சென்றனர். அவர்கள் கைகளில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் இருந்தன. பெண்கள், குழந்தைகள், முதியோர், ஆண்கள் என நிராயுதபாணிகளாகப் போராடிய அந்த அப்பாவி மக்கள் மீது அநியாயமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினரும், துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்த வருவாய்த் துறையினரும், இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசு உயரதிகாரிகளும், இரண்டு ஆண்டுகளாகத் தண்டனையில் இருந்து விலக்கு பெற்றிருப்பது நீதி, கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியம் அளிக்கிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய புலனாய்வுத் துறை, நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இதுவரை பெயரளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ஆக்கபூர்வமாக எந்த முடிவும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றன.

மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) மந்த நிலை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2018 ஆகஸ்ட் 14 அன்று உத்தரவிட்டது. இந்த விசாரணையை நான்கு மாதத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதன் பின்னரே அதுவரை விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடி நகரக் காவல் துறையினர் மக்களை அடித்து சித்ரவதை செய்த நிலை முடிவுக்கு வந்தது.

மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு, கலவரம் நடந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், பிற அரசு அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர், கொடுங்காயமடைந்தோர் ஆகியோரிடம் மட்டுமே விசாரணை மேற்கொண்டுள்ளது. பொத்தாம் பொதுவாக ஒரு முதல் தகவல் அறிக்கையை மட்டுமே மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தும்கூட பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், காவல் துறை அதிகாரிகளின் பெயர் இடம் பெறவில்லை. இச்செயல் மத்திய புலனாய்வுத் துறையின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. 2018 டிசம்பர் மாதத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. மத்திய புலனாய்வுத் துறையின் மெளனம் எப்போது கலையும் என்பது குடிமைச் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்

2018 மே 22ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை விசாரணை செய்ய மறுநாள் மே 23 அன்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ‘ஒரு நபர் விசாரணை ஆணையம்’ அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விசாரணை இன்னும் தொடர்கிறது .

வழக்கமாக ஒரு நபர் ஆணையம் என்றாலே ஓராண்டிற்குள் விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதே வெகு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்ற சந்தேகம் வெகுமக்களிடம் விமர்சனமாக எழுகிறது. நிலைமையைப் பார்க்கும்போது இதுபோன்ற ஆணையங்கள் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் கண்துடைப்பாக அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றனவோ என்ற கேள்வி மக்களிடையே இயல்பாக எழுகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அலட்சியம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகளின் ஆணையம் தாமாக முன்வந்து தன் வழக்காகப் பதிவு செய்தது. அதே வேகத்தில் இந்த வழக்கை முடித்து வைத்தது. அதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறிய காரணம் யாதெனில், “பாதிப்புற்றோருக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு நிலையைச் சீர் செய்ய தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்பவையே ஆகும்.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 பிரிவு 12 (b)இன் படி மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் அவ்வழக்கில் வாதாட முடியும். ஆனால், 16 பேர் உயிரிழந்த இத்துயர நிகழ்ச்சியில்கூட தேசிய மனித உரிமை ஆணையம் இச்சட்டத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்பதே காலம் பதிவு செய்துள்ள உண்மை.

பிற ஆணையங்களின் செயற்படா நிலை

கடந்த 2008 மே 22, 23 ஆகிய தேதிகளில் சுமார் 30 சிறுவர்கள் வல்லநாடு துப்பாக்கிச் சுடுதளத்தில் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்த நீதிபதி இதை உறுதி செய்தார். இதில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தலையீடு ஏதும் செய்யவில்லை. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியதாகக் கூறிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் பெறவில்லை.

இதே போன்று கடந்த 2018 ஜூன் மாதம் தேசிய பட்டியல்படுத்தப்பட்டச் சாதிகள் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் துப்பாக்கிச்சூட்டில் பாதிப்புற்றக் குடும்பங்களை நேரில் சந்தித்து அதன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் பெறவில்லை.

அரசின் கவனத்துக்கு...

காவல் துறையின் தாக்குதலில் தலையில் காயம் ஏற்பட்ட ஜஸ்டின் செல்வமித்திஸ் என்பவர் கடந்த 2018 அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இதற்கான இழப்பீடும், வேலைவாய்ப்பும் இதுவரை இவருடைய குடும்பத்தாருக்கு வழங்க பெறவில்லை. துப்பாக்கிச்சூட்டில் உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளராக ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலையைக் கண்டறிந்து, மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை வழங்கி, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பெற வேண்டும். செயற்கைக் கால் பொருத்தப்பட்டவர்கள், கொடுங்காயத்தால் பாதிப்புற்றோர் ஆகியோரின் வாழ்நாள் மருத்துவப் பராமரிப்புச் செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.

அரசின் சார்பு நிலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கி இறுதி நிலையில் உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் அன்று முதல் இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே தீவிரமாகச் செயல்படுகின்றனர். இது அரசின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரணத்தை பண்டாரம்பட்டி கிராம மக்கள் எதிர்த்தனர். இவர்கள் மீது சிப்காட் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அக்கிராமத்தைச் சேர்ந்த சகாயம் கூறுகிறார்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோருக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் செலுத்த பிளக்ஸ் டிஜிட்டல் பேனர் அடித்தவர்களுக்குக் காவல் துறை 21.5.2020 அன்று சம்மன் அனுப்பியுள்ளது. வணிகர் சங்கத்தினர் கட்டடத்தினுள் வைத்து நினைவேந்தல் செலுத்தக் கூடாது என்று காவல் துறை மிரட்டுவதாக வணிகர் சங்க மாநில இளைஞரணிச் செயலாளர் தெர்மல் ராஜா தெரிவிக்கிறார்.

இரண்டு ஆண்டுகளில் மக்கள் எதையும் மறக்கவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களின் உயிரீகத்துக்கும், உடலுறுப்பு ஈகத்துக்கும், கொடுங்காயத்துக்கும் வழங்கப்பட்ட இழப்பீடும், வேலைவாய்ப்பும் நிவாரணமே தவிர இழைத்த கொலைக் குற்றத்துக்குத் தீர்வாகாது. நிகழ்த்தப்பட்டப் படுகொலைக்கு நியாயம் கேட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் மக்களோடு, களப்போராளிகளின் உறவுகளோடு நீதியும் காத்துக் கிடக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

மனித உரிமை ஆர்வலரான ச.மோகன், தற்சமயம் மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். மும்பையிலிருந்து வெளியாகும் ‘போல்டு இந்தியா’ தமிழ் நாளிதழின் ஞாயிறு மலர் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

 

https://minnambalam.com/politics/2020/05/22/15/tuticorin-shooting-on-people-sterltite-protests

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு   நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் டெட் எக்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கடந்து வந்த பாதை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த உரையில் அவர் பேசிய முக்கிய விஷயங்களின் தொகுப்பு: "நான் பிறந்த வளர்ந்தது சென்னையில். நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருந்த ஒரு குடும்பம். குடிசைப் பகுதியில், ஹவுஸிங் போர்டு பகுதியில்தான் நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, 3 அண்ணன்கள், நான் என மொத்தம் 6 பேர். என் வாழ்க்கையில் நான் இன்று இருக்கும் நிலைக்கு என் அம்மாதான் முக்கியக் காரணம். எனவே அவரைப் பற்றி முதலில் பகிர்கிறேன். என்னுடைய 8-வது வயதில் என் அப்பாவை இழந்தேன். அதன் பிறகு என் அம்மாதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். அப்பாவின் இழப்பை உணராத வகையில் எங்களை வளர்த்தார். அம்மா ஒரு போராளி. அம்மா அதிகம் படித்தவர் அல்ல. என் தாய்மொழி தெலுங்கு. அம்மாவுக்கு அது மட்டும்தான் தெரியும். ஆனால் மும்பைக்குத் தனியாகச் சென்று, அங்கு மலிவு விலையில் புடவைகள் வாங்கி வந்து, வீடு வீடாகச் சென்று, பேருந்துகளில் எடுத்துச் சென்று அவற்றை விற்பார். இன்னொரு பக்கம் எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் இருந்தார். இப்படி எங்களுக்கு நல்ல கல்வி தர, உணவு தர நிறைய வேலைகள் செய்தார். எனக்கு 12 வயதானபோது என் மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்து போனார். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்கள். ஆனால் எங்களுக்கு அது தற்கொலையா, கொலையா, விபத்தா எதுவும் தெரியாது. என் அம்மாவுக்கு இது எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. மூத்த மகன் இறந்துவிட்டான் என்பதை அவரால் ஏற்க முடியவில்லை. சில வருடங்கள் போயின. எனது இரண்டாவது அண்ணன், எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்தார். அவருக்கு 30,000 - 40,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. என் அம்மா சந்தோஷப்பட்டார். ஒருவழியாக குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள, ஆதரிக்க ஒருவன் வளர்ந்துவிட்டான் என்று மகிழ்ந்தார். ஆனால் இன்னொரு சோகம் நடந்தது. அந்த அண்ணன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அது மிக மிகக் கடினமாக இருந்தது. என் அம்மா முற்றிலுமாக நம்பிக்கையிழந்து விட்டார். ஒருசில வருடங்கள் இடைவேளையில் அடுத்தடுத்த இழப்பு என்பதை அவரால் தாங்க முடியவில்லை. இதுபோன்ற ஒரு சூழ்நிலையைப் பார்க்கும்போது எந்தப் பெண்ணுக்குமே, எப்படியாவது குடும்பத்தை ஆதரிக்க வேண்டும் என்று தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. 11 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முதல் முதலில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஒரு புதிய பொருளை விளம்பரம் செய்ய சூப்பர் மார்க்கெட்டில் நின்று கொண்டு அங்கு வருபவர்களிடமெல்லாம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். பெசன்ட் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாசலில் நின்று கொண்டு, அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களைப் பிடித்து, குறிப்பிட்ட பொருளுக்கு விளம்பரம் செய்ய வேண்டும். எனக்குச் சம்பளமாக ரூ.225 கிடைத்தது. அப்படியே என்ன வேலையெல்லாம் செய்ய முடியுமோ செய்தேன். பிறந்த நாள் விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என்று வேலை செய்து 500, 1000 ரூபாய் என சம்பாதித்தேன். ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய் வரை சம்பாதித்தேன். ஆனால் ஒரு குடும்பத்துக்கு அது போதாது இல்லையா? எனவே டிவி தொடர்களில் நடிக்க முடிவெடுத்தேன். என் முதல் தொடருக்கு எனக்கு 1500 ரூபாய் கிடைத்தது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை படப்பிடிப்பு. ஆனால் ஒரு மாதத்துக்கு 5-6 நாட்கள்தான் படப்பிடிப்பு. அப்படியென்றால் மொத்தம் 5-6 ஆயிரம் தான் கிடைக்கும். அது எப்படி போதும்? அது எப்படி தொடரின் நாயகிகளுக்கு மட்டும் 20 ஆயிரம் 25 ஆயிரம் ரூபாய் எனக் கிடைக்கிறது என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு சினிமாவில் நடித்திருக்க வேண்டும். நல்ல படங்களில் நடித்து, அடையாளம் கிடைத்து, அங்கு பிரபலமானால்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்று என் அம்மா சொன்னார். சரி சினிமாவில் நடிக்கலாம் என்று முயற்சி செய்தேன். நடுவில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் முதல் பரிசு பெற்றேன். அது எனக்கு சினிமாத் துறையில் ஒரு அறிமுகம் கிடைக்க உதவியது. மானாட மயிலாட டைட்டில் வின்னர் என்று கூறி, பலரை அணுகி வாய்ப்புகள் கேட்டேன். நான் நடித்த முதல் படம் 'அவர்களும் இவர்களும்'. அந்தப் படம் சரியாக ஓடவில்லை. நான் தொடர்ந்து வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். திரைத்துறையில் பாலியல் ரீதியான தொல்லை அதிகம் என்று எப்போதும் கேள்விப்படுவோம் இல்லையா? எல்லாப் பணியிடங்களிலும் அந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால் ஊடகம் என்பதால் அதிகம் வெளியே தெரிகிறது. எல்லாப் பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை இது. பாலியல் தொல்லை மட்டுமல்ல, என் நிறம், என் தோற்றம் குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு வடக்கிலிருந்து வந்து பிரபலமான பெரிய நடிகைகளைப் போல உடை உடுத்தத் தெரியாது, அதற்கும் கேலி பேசினார்கள், ஒரு வேளை நான் தமிழ் பேசியதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்னவோ. ஒரு சில இயக்குநர்கள் 'நீங்கள் கதாநாயகியாக நடிப்பதற்கு சரியாக இருக்க மாட்டீர்கள்' என்றே சொன்னார்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நீங்கள் நடிக்கலாம் என்றார்கள். இன்னொரு பெரிய இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டேன், அவர் படத்தில் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்கிறேன் என்றார். நான் மறுத்துவிட்டேன். இப்படியே 2-3 வருடங்கள் கடந்தது. எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பிறகு 'அட்டகத்தி' படத்தில் அமுதா என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்குப் பெயர் வாங்கித் தந்தது. என்னை அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். தொடர்ந்து 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி', 'திருடன் போலீஸ்' என நாயகியாக நடித்து வந்தேன். இதன் பின் 'காக்கா முட்டை' என்ற படம்தான் என் வாழ்க்கையை மாற்றியது. அது, குடிசைப் பகுதியில் வாழும், இரண்டு குழந்தைகளின் அம்மா கதாபாத்திரம். வேறு யாரும் அதில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் அதிலென்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது உள்ளுணர்வு சொன்னதாலோ என்னவோ, நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். 'காக்கா முட்டை' படப்பிடிப்புக்காக குடிசைப் பகுதிகளுக்குச் சென்றேன். அங்கு ஒரு பெண்மணி, தனது வீட்டுக்குள் உட்கார்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அந்த 10x10 அறை தான் அவர் வீடு. அங்குத் துணி துவைத்த பின் அந்த இடத்தைச் சுத்தம் செய்வார், மின் விசிறி போட்ட பின் அந்த ஈரம் காய்ந்த பின் அங்கேயே சமைப்பார். அந்த வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரத்தில் கழிவறை ஒன்று இருந்தது. 4 குழந்தைகள், 1 நாய், ஒரு தாத்தா, ஒரு பாட்டி, இந்தப் பெண்மணி என அனைவரும் அந்த ஒரு அறையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்றே எனக்குப் புரியவில்லை. நாம் 2 படுக்கையறை கொண்ட வீட்டில் இருக்கிறோம், அதற்குப் பிறகு இன்னும் பெரிய வீடு, இன்னும் பெரிய வீடு என கனவு காண்கிறோம். ஒரு கார் இருந்தால், அதை விட விலை மதிப்பான கார், அதை விட பெரிய கார் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த 10x10 வீட்டில் அவர்களுக்கு இருந்ததை வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அது என்னை ஆச்சரியப்படுத்தியது. முகமெல்லாம் மஞ்சள், நெற்றியில் பொட்டு, காலில் கொலுசு என அந்தப் பெண்மணி எனக்குக் கடவுளைப் போலத் தெரிந்தார். அந்தப் படத்தின் அனுபவத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் இன்றும் பெரிய நடிகை கிடையாது, அன்றும் பெரிய நடிகை கிடையாது. அந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டன் எனக்கு நடிக்கக் கற்றுத் தந்தார். நான் ஒவ்வொருவரையும் பார்த்து, ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு இயக்குநரிடமும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். எனது நடிப்பை எப்போது திரையில் பார்த்தாலும், இன்னும் கூட நன்றாக நடித்திருக்கலாமோ என்றே தோன்றும். திருப்தியே கிடைக்காது. அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. பெரிய பெரிய ஜாம்பவான்களிடமிருந்து எல்லாம் பாராட்டு கிடைத்தது. படம் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றது. ஆனால் அடுத்த ஒரு வருடத்துக்கு எனக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க வேறெந்த வாய்ப்பும் வரவில்லை. படம் பெரிய வெற்றி, விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றுள்ளது ஆனால் ஏன் வாய்ப்பு வரவில்லை என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிலர் என் திறமையை மதித்து வாய்ப்பு தந்தார்கள். தனுஷுடன் 'வட சென்னை', விஜய் சேதுபதியுடன் 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்தேன். எனக்கு எந்தப் பெரிய நாயகர்களுடனும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. சரி, என் படத்தில் நானே நாயகனாக இருக்கிறேன் என முடிவு செய்தேன். அப்படித்தான் 'கனா' என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் எல்லாவற்றையும் மாற்றியது.     ஒரு கிரிக்கெட் வீராங்கனையைப் பற்றிய படம் அது. அதற்காக நான் 6 மாதங்கள் பயிற்சி எடுத்தேன். இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம், என் மீது நம்பிக்கை வையுங்கள், நான் கண்டிப்பாக அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாக நடிப்பேன் என்று கோரினேன். அந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு நிறைய விருதுகள், பாராட்டுகள் கிடைத்தன. பெண்களை மையமாக வைத்து உருவாகும் பட வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. இப்போது என் கையில் 6-7 படங்கள் இருக்கின்றன. எல்லாப் படங்களிலும் நான் தான் பிரதானம். இது நடந்ததற்குக் காரணம், என் மீது நான் வைத்த நம்பிக்கை. என்னை யாரும் ஆதரிக்கவில்லை, எனக்கு திரைத்துறையில் பின்புலம் கிடையாது, என்னை நான்தான் ஆதரித்துக் கொண்டேன். என் நிறம் மீது, என் தோற்றம் மீது நிறைய விமர்சனங்கள் வைத்திருக்கிறார்கள். பாலியல் தொல்லையும் எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால் அதை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும். எனக்கு யாராவது தொல்லை கொடுக்க முயன்றால் அவர்களுக்கு எப்படி பதிலடி தருவது என்பது எனக்குத் தெரியும். எனக்கு அந்த அளவுக்குத் துணிச்சல், தைரியம் இருந்தது. எல்லாப் பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எல்லாப் பெண்களும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியம். உங்களைக் காப்பாற்ற எந்த சூப்பர் ஹீரோவும், சூப்பர்மேனும் வரப்போவதில்லை. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் நானேதான் தத்தளித்தேன். என்னால் முடியுமென்றால் இங்கிருக்கும் யாராலும் முடியும் என்றே நான் நினைக்கிறேன். சரியா? இதுதான் என் வாழ்க்கைக் கதை, எனக்கு இன்று கிடைத்திருக்கும் வெற்றியை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறேன். என் மீது எனக்கு என்றும் நம்பிக்கை இருந்தது. நாம் அனைவரும் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. குறிப்பாகப் பெண்கள் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. இந்த வாய்ப்புக்கு நன்றி". இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.     https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/556179-aishwarya-rajesh-interview-9.html
    • கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்? லிண்டா கெட்டெஸ் பிபிசிக்காக Getty Images கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 24 மணி நேர காலத்தில் வெளிச்சம் மற்றும் இருட்டு என்ற உலக வாழ்க்கைக்கு மனிதர்களின் உடல் பழகி வளர்ந்துள்ளது. சூரிய வெளிச்சத்தைப் பொருத்து செயல்படும் வகையில் நமது உடல்கள் அமைந்துள்ளன. புற ஊதா கதிர்கள் நமது தோலில் படும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆவதை நல்ல உதாரணமாகக் கூறலாம். வைட்டமின் டி நமக்கு தினமும் கிடைப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுகின்றன. அது நமது நோய் எதிர்ப்பு செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நுரையீரல்களில் உள்ள பேருண்ணிகளுக்கு வைட்டமின் டி சக்தியைத் தருகிறது. இவை தான் சுவாச மண்டலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் முதல்வரிசை வீரர்களைப் போன்றவை. நுண்ணுயிர்களை எதிர்க்கக் கூடிய புரதத்தை உற்பத்தி செய்யும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அது நேரடியாகத் தாக்கிக் கொன்றுவிடும். B மற்றும் T செல்கள் போன்ற மற்ற நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளையும் அது ஊக்குவிக்கும். நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை காரணமாக இருக்கின்றன. வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு, சளிக்காய்ச்சல் என்ற மூச்சுக் குழாய்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். கோவிட்-19 நோயுடன் தொடர்புடைய தீவிர சிக்கல்களைக் குறைப்பதற்கு வைட்டமின் டி சத்துள்ள மருந்துகளைத் தரலாமா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். கோவிட் 19 நோய்த் தாக்குதலால் அதிகம் உயிரிழப்புகள் நிகழ்ந்த ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பியர்களுக்கு வைட்டமின் டி அளவு மிகக் குறைவாக இருந்தது என்று இந்த மாத ஆரம்பத்தில், டூப்ளின் டிரினிட்டி கல்லூரி முதுமையியல் நிபுணர் ரோஸ் கென்னியும், அந்தப் பெண்ணின் சகாக்களும் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  Pandemic என்றால் என்ன?  கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? முறையாக கை கழுவுதல் எப்படி?   சூரிய வெப்பமான காலத்தில், இது உணர்வுகளுக்குப் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். ஆனால், அதிக நேரத்தை வீட்டுக்குள்ளேயே செலவிடும் வாழ்க்கை முறைக்கு மாறி, இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சூரிய ஒளி படுவதைத் தடுக்கும் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துவதைப் பார்க்கும் போது, வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கு அவை காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நாடுகளில் கோவிட் - 19 பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், ``வைட்டமின் டி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவையும் காரணமாக இருந்திருக்கலாம் என்பதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் வலுவாக உள்ளன. குறிப்பாக தீவிர கோவிட் பாதிப்பு சூழ்நிலையில் இந்த காரணங்கள் கூறப்படுகின்றன'' என்று கென்னி கூறுகிறார்.  முதலில், முதலில் இன்டர்லெயுக்கின்-6 என்ற அழற்சியை ஏற்படுத்தும் உயிரிவேதிப் பொருளை வைட்டமின் டி குறைப்பதாகத் தெரிகிறது. இந்த அழற்சி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நுரையீரலில் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் நுழைந்து நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ACE2 உணர்பொறியின் தன்மையையும் வைட்டமின் டி மாற்றுகிறது. ஏற்கெனவே வைட்டமின் டி இந்த மாற்றத்தைச் செய்திருந்தால், கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து தொற்றிக் கொள்வது சிரமம் ஆகிவிடும். இந்தப் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வதற்கு, தன்னியல்பான, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இப்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தில் பெரியவர்கள் அனைவரும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது நல்லது என்று கென்னி கூறுகிறார். பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் நிறைய நேரத்தை வெளியில் செலவிட்டு அதிக வைட்டமின் டி பெற்றுக் கொள்வது வேறு பல நன்மைகளையும் கொண்டு வரும் என்றும் வலுவாகக் கூறப்படுகிறது. Getty Images உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் கோவிட்-19 தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதற்கு அறிவியல்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், சளிக் காய்ச்சல் மற்றும் சாதாரண சளி போன்ற மற்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக நமது தற்காப்பை அது பலப்படுத்துகிறது என்பதற்கு பல்வேறு ஆய்வு முடிவுகள் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இது உதவும் என்பதும் ஆய்வுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வனங்களில் சில நாட்களைக் கழித்தால், உடலில் இயல்பாக கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மன அழுத்தம் குறைவதுதான் இதற்குக் காரணம் என்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ``மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பலர் உடற்பயிற்சி செய்வது நமக்குத் தெரியும். அதிக மன அழுத்தம் இருப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நல்லது அல்ல என்பதும் மிகவும் தெளிவான விஷயம்'' என்று, நோய் எதிர்ப்பாற்றலில் உடற்பயிற்சியின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ரேஸ் பல்கலைக்கழக மாணவர் நெயில் வால்ஷ் கூறுகிறார். ``சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்றால், அது உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்கிறார் அவர். பூங்காவில், மரங்கள் சூழ்ந்த காட்டில் அல்லது பசுமைவெளியில் உடற்பயிற்சி செய்தால், மிகவும் நல்லது. இயற்கைவெளியில் செல்வது, நகர்ப்புற பூங்காவாக இருந்தாலும் சரி - இருதயத் துடிப்பு வேகம், ரத்த அழுத்தம் குறையும், மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறையும் என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இயற்கை சூழலுக்கு நெருக்கமாக, இயற்கையுடன் இணைந்து வாழ்வது இருதயக் கோளாறுகளை, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பைக் குறைக்கும், மரணத்தை தள்ளிப்போடும். அதிக உடற்பயிற்சி செய்வது மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றுடன், இவற்றுக்கு வேறு காரணங்களும் இருப்பதாக பல்வேறு கட்டுரைகள் கூறுகின்றன. வெளியில் செல்வதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், தனிமை உணர்வு குறைந்து, மன அழுத்தம் குறைய உதவிகரமாக இருக்கும் என்பது அவற்றில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. கவன மீட்பு தியரி என்ற காரணமும் குறிப்பிடப்படுகிறது. அதாவது இயற்கைக் காட்சிகள் மற்றும் எளிதாக நாம் செல்வதில் நமது கவனம் ஈர்க்கப்படுகிறது. அதிகம் உழைத்திருக்கும் நமது மூளை ஓய்வெடுக்க, மீட்சி பெற வாய்ப்பு கொடுப்பதாக இது அமைகிறது என விளக்கம் தரப்படுகிறது. இருந்தபோதிலும், நமது நோய் எதிர்ப்பு மண்டலங்களில் மரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. சில நாட்கள் காட்டுக்குள் இருந்தால், இயல்பாகவே கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நமது ரத்தத்தில் வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும் நோய் எதிர்ப்பு செல்களாக இவை உள்ளன.  Getty Images மரங்களில் இருந்து வெளியாகும் பைட்டான்சைட் என்ற பொருளை சுவாசிப்பதால் இது நிகழ்கிறது என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலுக்கு வெளியே இவற்றை வளர்த்து பரிசோதித்த போது, இயற்கையாக கிருமிகளை அழிக்கும் செல்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது. சுவாசிப்பதாலும் இதே பலன் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டியுள்ளது. ``நடைமுறையில், இந்த வழிமுறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக நான் கருதுகிறேன்'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓப்பன்ஸ்பேஸ் ஆராய்ச்சி மையத்தின் டைரக்டராக உள்ள கேத்தரின் வார்டு தாம்ப்ஸன் கூறுகிறார். நகர்ப்புற பசுமைவெளிகள் மற்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை தயாரித்த குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.  ``பைட்டோன்சைட்கள் முக்கியமானவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பயன்களைப் பெறுவதற்கு நீங்கள் சில காலம் முழுமையாக இயற்கை சூழலில் மூழ்கியிருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவு போன்ற பயன்களை அப்போது எளிதில் பெற முடியும்'' என்று அவர் கூறுகிறார். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேலைக்குச் செல்லும்போது காலையில், பிரகாசமான ஒளியில் செல்வதால், இரவில் எளிதாகத் தூங்கிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியில் செல்வது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். வீடுகளுக்குள் நாம் முடங்கி இருந்த நேரம், நமது உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாட்டைப் பாதித்திருக்கும். இது 24 மணி நேர சுழற்சிக்கு ஏற்ப, தூக்கம் உள்ளிட்ட உயிரியல் இயக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தி பழகியிருக்கிறது. நாம் வெளியில் செல்லும் போது வெளிச்சத்தின் தன்மை, நமது கண்களின் பின்புறத்தில் இருக்கும் ஒளி-உணர்வு செல்களில் பதிவதன் மூலம், உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. கண்களின் பின்னால் உள்ள இந்த செல்கள் மூளையில், உடலின் மாஸ்டர் கடிகாரமாகச் செயல்படும் செல்களுடன் தொடர்பு கொள்கின்றன.  ``வீட்டுக்குள் இருக்கும் வெளிச்சம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயல்பாடு தூண்டப்படாது. எனவே வாரம் முழுக்க ஒருவர் வெளியில் செல்லாமல் இருந்தால், இந்த ஒருங்கமைவுகளில் இடையூறுகள் ஏற்பட்டு, தூக்கத்தில் கோளாறுகள் ஏற்படும்'' என்று நியூயார்க் ட்ராயில் உள்ள லைட்டிங் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியானா பிகுவெய்ரோ கூறுகிறார்.  Getty Images காலையில் அதிக வெளிச்சத்துக்கு ஆட்படும், அலுவலகம் செல்லும் அலுவலர்கள், நடந்து செல்லக் கூடியவர்கள், குறைவான வெளிச்சத்துக்கு ஆட்படுபவர்களைக் காட்டிலும் இரவில் நன்றாகத் தூங்குகிறார்கள், இடையூறான தூக்கத்துக்கான வாய்ப்பு குறைகிறது என்று அவருடைய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. (நமது தூக்கத்துக்கு இயற்கை வெளிச்சம் ஏன் முக்கியமானது என்பதை அறிய மேலும் படியுங்கள்) ``உடல் கடிகார செயல்பாட்டில் இடையூறு, தூக்கத்தில் கோளாறு ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தன்மையைக் குறைப்பதாக தொடர்புபடுத்தப் படுகிறது'' என்று பிகுவெய்ரோ கூறுகிறார். ``எனவே நோய் எதிர்ப்பாற்றலில் வெளிச்சத்துக்கு நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், உடல் கடிகாரம் மற்றும் நல்ல தூக்கம் போன்றவற்றை செம்மைப்படுத்தும் அம்சம் மூலமாக மறைமுகமான தாக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது'' என்று அவர் கூறுகிறார். காலையில் பிரகாசமான வெளிச்சத்துக்கு ஆட்படுவது மக்களின் மனநிலையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவிகரமாக உள்ளது. இந்தப் பயன்களைப் பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டும் என்று பார்த்தால், அதைச் சொல்வது கடினமான விஷயமாக இருக்கும். நமது உடல் கடிகாரத்தை ஒருங்கமைவு செய்த நிலையில் வைத்திருப்பதற்கு, காலைநேர வெளிச்சம் முக்கியமானது என்றாலும், சூரிய வெளிச்சத்தில் அதிகபட்ச புறஊதா கதிர்கள் இருக்கும் மதிய நேரத்தில் தான் அதிகபட்ச வைட்டமின் டி உற்பத்தி நடக்கிறது. எனவே முடக்கநிலை கட்டுப்பாடுகளில் தளர்வு கிடைத்து, வாய்ப்பு கிடைத்தால், தினமும் ஒரு முறையாவது வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். சமூக இடைவெளி பராமரித்தலிலும், சூரிய வெப்பத்தால் கொப்புளம் ஏற்படாமலும் கவனமாக இருக்க வேண்டும். சூரிய வெளிச்சமும் இயற்கையும் தான் அற்புதமான ஹீலர்கள். அவை இலவசமாகக் கிடைக்கின்றன.   https://www.bbc.com/tamil/science-52791204
    • இந்தியாவை கையாளல் - யதீந்திரா முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது கொரோனாவின் விளைவு. வீடுகளில் இருந்தவாறே பலரும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளக் கூடியதாக இருந்ததால், அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒரு சில கலந்துரையாடல்களை செவிமடுக்க முடிந்தது. அதில் ஒன்று – தமிழர் உரிமைச் செயலரங்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையடல். இதில் இளம் தமிழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், இந்தியாவும் ஈழத் தமிழரின் விடுதலையும் (கள நிலைமை கருதி தலைப்பில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்னும் தலைப்பில் உரையாற்றிருந்தார். அவரது உரையின் சாரம்சம் இந்திய அரசின் ஆதரவை ஈழத் தமிழர்கள் பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அங்குள்ள அனைத்து தரப்பினருடனும் ஈழத் தமிழர்கள் உறவில் இருக்க வேண்டும். அங்குள்ள கட்சி வேறுபாடுகள், கட்சிப் பிரச்சினைகள் எதற்குள்ளும் ஈழத் தமிழர்கள் செல்லக் கூடாது. இது ஒரு முக்கிய உபாயமாக கைக்கொள்ளப்பட வேண்டும் – பொதுவாக தமிழ் நாட்டில் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்போர், எப்போதும் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதையே வழமையாகக் கொண்டிருக்கின்றனர். அதனோடு ஒப்பிட்டால் செந்தில்குமாரின் பார்வை யதார்த்தமான ஒன்றாக இருந்தது. இவ்வாறான கருத்தை நான் பல வருடங்களாக குறிப்பிட்டு வருகின்றேன். இந்தியா தொடர்பான பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதனை இப்போது, ஒரு தமிழ் நாட்டைச் சேர்ந்தவரின் வாயிலாக கேட்பது மகிழ்சியளிக்கின்றது. ‘இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும். எனக்குத் தெரிந்த ஒருவரின் கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம். அதனை இங்கு பதிவு செய்கின்றேன். அவர் இப்போது ஒரு புலம்பெயர் செயற்பாட்டாளர் ஆனால் அவர் உண்மையில் புலம்பெயர் செயற்பாட்டாளர் அல்ல. அவர் கொழும்பில் நிலைகொண்டிருந்த ஒரு சர்வதேச அரசுசாரா நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் கொழும்பில் இருக்கின்ற போது, விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒரு போதுமே ஆதரவாகப் பேசியதுமில்லை. மேற்குலகின் ஊடாக அறிமுகமான முரண்பாட்டுத் தீர்வு தொடர்பில் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். 2009இற்கு பின்னர் மேற்படிப்பிற்கான வாய்ப்பு ஒன்றை பெற்று ஜரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் அவர் திடிரென்று என்னுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். அப்போது நான் எங்களுடைய பக்கத்திலுள்ள தவறுகள் தொடர்பில் எழுதிக் கொண்டிருந்தேன். அவரது எழுத்துக்களை பார்த்தேன் – அவரது புலம்பெயர் புதிய நட்புக்கள் அவரை அதிகம் மாற்றியிருக்கவேண்டும். அவர் கொழும்பிலிருக்கும் போது இந்தியா தொடர்பில் பேசியதற்கும் – புலம்பெயர் நட்புவட்டங்களுக்குள் சென்ற பின்னர் இந்தியா தொடர்பில் பேசியதற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாட்டை காண முடிந்தது. இங்கு ஒரு குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் பற்றியே குறிப்பிடப்படுகின்றது. இந்தியா ஒரு உடனடி அயல்நாடு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யும். அது தெற்காசிய பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். அந்த வகையில் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி. ஒரு விடயம் தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொண்டால் அதன் பின்னர் அதனை எதிர்த்து நிற்றல் என்பதற்கு பொருள் இல்லை. அதன் பின்னரும் அதனை எதிர்ப்பது என்பது, அதனுடன் மோதல் நிலையை கடைப்பிடிப்பதாகும். விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு பாதையைத்தான் தெரிவு செய்தனர். அந்தப் பாதை வெற்றியளிக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் அமைப்பை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு கருத்துண்டு. அது உண்மை. ஆனால் இந்தியாவிடம் அதனை எதிர்பாக்கக் கூடிய தார்மீக பொறுப்பு தமிழர்களிடம் இருந்ததா என்னும் கேள்வியை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது. அதே போன்று இறுதி யுத்தத்தின் திசைவழியை மாற்றியமைக்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான் என்பதில் ராஜபக்ச தலைமையிலான கொழும்பும் தெளிவாகவே இருந்தது. ‘கோட்டாவின் யுத்தம்’ – என்னும் நூலில் இந்த விடயம் துலக்கமாக விபரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் கொழும்பிடம் இருந்தது போன்றதொரு தெளிவு தமிழர் பக்கத்தில் இருக்கவில்லை. சிலரிடம் இருந்தது ஆனால் அவர்களது பேச்சுக்கள் தமிழர் சபையேறவில்லை. இந்தியாவை கையாளுதல் என்னும் தலைப்பில் நீண்டகாலமாகவே நாம் பேசி வருகின்றோம். ஆனாலும் இதில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. உண்மையில் முன்னேற்றங்களை நோக்கி இந்த விடயத்தை தள்ளுகின்ற ஆற்றலுடன் தமிழ் தலைமைகள் என்போர் செயற்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் புதுடில்லியுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய ஆளுமையை கூட்டமைப்பு வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுடனான தொடர்பு என்பதை கூட்டமைப்பு வெறுமனே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தோடு மட்டுப்படுத்தியிருந்தது. அத்துடன் 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில், இந்தியாவிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றோம் என்பதில் கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு இருந்திருக்கவில்லை. இரண்டு, இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல சிந்தனைக் கூடங்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் தமிழர் தரப்பிற்கு தொடர்புகள் இல்லை. அதனை ஏற்படுதிக் கொள்வதற்கு தமிழர் தரப்பு முயற்சிக்கவும் இல்லை. மூன்று, இந்தியாவின் நலன்கள் தொடர்பான விடயங்களில் தமிழர் தரப்பு எப்போதுமே தங்களை உள்ளடக்குவதில்லை. உதாரணமாக இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பில் பிரதான தமிழ் கட்சிகள் ஒரு வார்த்தையேனும் இதுவரை பேசியதில்லை. இந்தியாவில் தமிழர்கள் வாழ்கின்றனர் எனவே தமிழர்களின் நலன்களில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும், என்னும் பார்வையே பெரும்பாலான தமிழ் தரப்புக்களிடம் உண்டு. ஆனால் இந்தியாவில் தமிழ் நாடு ஒரு அங்கம் மட்டுமே! இந்த விடயங்களில் தமிழர் தரப்புக்கள் தொடர்ந்தும் பின்தங்கியே இருக்கின்றன. இதில் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளிலும் தமிழர் தரப்பு ஈடுபடவில்லை. இது தொடர்பில் ஒரு வித தயக்கமே காணப்படுகின்றது. இந்தியாவுடனான உரையாடல் என்பது இந்திய அரசு தொடர்பானது மட்டுமல்ல. அங்குள்ள புத்திஜீவிகளுடன் பேசுதல், சிந்தனைக் கூடங்களுடன் உரையாடுதல், ஊடங்களுடன் தொடர்புகளை பேணுதல், இந்திய நலனை முன்னிறுத்தி செயலாற்றும் அமைப்புக்களுடன் உரையாடுதல் என – பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியது. இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றேன். தமிழ் நாட்டில் தங்கியிருந்து கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவரும் நண்பர் ஒருவரிடம், ஒரு முறை இது பற்றிக் கேட்டேன். பேராசிரியர் சூரிய நாரயணின் பெயரை குறிப்பிட்டு அவரைப் போன்றவர்களுடன் நீங்கள் பேசுவதில்லையா என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் கூறிய பதில் – நான் பேசச் செல்வதில்லை. அதெல்லாம் சிக்கல். இதுதான் தமிழர் தரப்பின் பிரச்சினை – இந்தியாவை எங்களுடைய நலன்களிலிருந்து அணுகவும் வேண்டும் ஆனால் எவருடனும் பேசவும் மாட்டோம். அவ்வாறாயின் தமிழரின் எண்ணங்களை எவ்வாறு இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வது? தமிழர் தரப்பு ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை நோக்கி நாம்தான் பயணிக்க வேண்டுமேயன்றி இந்தியா நம்மை நோக்கி வராது. பிராந்திய சக்தியான இந்தியா தனது நலன்களை வெற்றி கொள்வதற்கு குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை வரையறை செய்து பயணிக்கும். குறுகிய காலத்தில் எவரை கையாள வேண்டும் – நீண்டகால நோக்கில் எவரை கையாள வேண்டும் என்பதில் அவர்களிடம் ஒரு தெளிவான வரைபடம் இருக்கும். இந்த வரைபடத்தை வெளியிலிருந்து எவரும் மாற்ற முடியாது. ஆனால் அந்த வரைபடத்தை நாம் தெளிவாக புரிந்து கொண்டால், அதில் நமக்கு சாதகமாக இருக்கக் கூடிய விடயங்களின் ஊடாக இந்தியாவை நெருங்கலாம். இந்தியாவை எதிர்த்து பேசுவதால் இந்தியாவிற்கு எந்தவொரு தீமையும் இல்லை – மாறாக அது தமிழர்களுக்கே தீங்கை கொண்டுவரும். இந்தப் பிராந்தியத்தை பொருத்தவரையில், உலகளவில் இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கப் போகின்றது. குறிப்பாக கொரோனாவிற்கு பின்னரான உலக அரசியல் போக்கில் சீனாவிற்கு எதிரான சிந்தனை வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக, இந்தியாவை நோக்கி அனைவரது பார்வையும் திரும்பலாம். இதனால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவம் மேலும் வலுவடையும். இவ்வாறானதொரு சூழலில் தமிழர் தரப்புக்கள் இந்தியாவின் நலன்களை விளங்கிக் கொண்டு பயணிக்கும் பொறிமுறை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.   http://www.samakalam.com/blog/இந்தியாவை-கையாளல்/
    • சீனாவுக்கு பிரதமரும் இந்தியாவுக்கு ஜனாதிபதியும் போய் நின்று கொண்டு டிராகனுக்கு வாலையும் சிங்கத்துக்கு தலையையும் காட்டிக்கொண்டு சமயத்துக்கு தக்கவாறு பணம் கறந்து கொண்டிருப்பார்கள்.......!   🤔