கிருபன்

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

Recommended Posts

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

image_19bb638b2a.jpgஎம்.றொசாந்த் 

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும்  அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள்  போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முனெடுத்து வந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக  7 கொள்ளைச் சம்பவங்களுடன் மூவருக்கும் தொடர்புள்ளமை,  சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் மூலம் கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்படும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

4 சந்தேக நபர்களிடமிருந்தும் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள்  தொலைக்காட்சிப் பெட்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று, 6 அலைபேசிகள், அப்பிள் ஐபாட்  உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-கொள்ளை-சம்பவத்தில்-ஈடுபட்ட-குழு-சிக்கியது/175-250649

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, கிருபன் said:

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள்  போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அரச படைகளே ... தமிழ்ப் பகுதிகளில்,  போதைப்  பொருட்களை... உலாவ விட்டு,
தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும்... பாழாக்கியதன் பலன்,
இப்போ... திருட்டு, கொலை என்று வந்து நிற்கின்றது. 😡

இதற்குள்... போதை கடத்தல் காரருக்காக  வாதாட, சுமந்திரனும் இருக்கிறார். 😞

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, கிருபன் said:

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

image_19bb638b2a.jpg

இவர்கள் என்றுமே பிடிபட்டவர்களைக் காட்டிப் பொதுமக்களை இந்தக் களவாணிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி செய்யமாட்டார்கள். குற்றவாளிகளைப் பிடித்த தங்களின் பதவிகளை வெளிக்காட்டும் சின்னங்கள் கொண்ட சீருடைப் படங்களையே போட்டுக் காட்டுவார்கள். இதன் பின்னணி என்னவாக இருக்கும்.....??

குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வரும்வரை ஒருவரைக் குற்றவாளியாக வெளிக்காட்டக் கூடாது எனச் சட்டமிருப்பதாக இங்கு வந்து தாளம்போடக்கூடாது. சிறீலங்காவில் நீதி, நியாயம், சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் ஒரு கண்துடைக்கும் பம்மாத்துக் காரணிகளே.   

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

அரச படைகளே ... தமிழ்ப் பகுதிகளில்,  போதைப்  பொருட்களை... உலாவ விட்டு,
தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும்... பாழாக்கியதன் பலன்,
இப்போ... திருட்டு, கொலை என்று வந்து நிற்கின்றது. 😡

இதற்குள்... போதை கடத்தல் காரருக்காக  வாதாட, சுமந்திரனும் இருக்கிறார். 😞

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

ரதி...  "தமிழர்கள், சொக்கத் தங்கங்கள்"  என்று, நான்... எங்கும்  கூறவில்லை. 

ஆனால்... தமிழர் பகுதியில், "ஆறு  தமிழருக்கு... ஒரு, அரச படை காவல் (இராணுவம் + காவல்துறை + கடற்படை) என்ற விகிதத்தில்... குவித்து, வைத்த போதும்.... கேரள  கஞ்சாவும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போதைப் பவுடர்களும்... தாராளமாக  மாணவர்கள் மத்தியில்,  புழக்கத்தில் இருப்பது எப்படி❓

இவர்களால்... அதை ஏன்?  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  முடியாது உள்ளது... என்பதே இங்குள்ள ஆதங்கம். :)

பத்து நாட்களுக்கு  முதல்...  18 வயது சிறுவன் ஒருவன், வேறு சிறுவர்களுக்கு... போதைப் பொருட்களை விற்கிறான். அந்தச் சிறுவனுக்கு... இவ்வளவு காவல்துறை இருந்தும், இவைகள்... எப்படி கிடைத்தன?
அவைகள்... ஊருக்குள் வரும்  வழியை, கண்காணிப்பதுதான் அவர்களின் வேலை.

அதை விடுத்து...  தோட்ட வேலைக்குப் போய், களைத்து வரும் ஆட்களை, அடிப்பதும்.tw_confused:
வயோதிபர்களை, பெண்களை மிரட்டுவதும்... அவர்களின் வேலையல்ல.  :(

சென்ற, இரண்டு கிழமையில் மட்டும்..... அரச படைகள்...
சாதாரண மக்களை தாக்கும், சம்பவங்கள் பத்துக்கு மேல் நடந்து முடிந்துள்ளது. 😡

இவர்களுக்கு... உண்மையான அக்கறை இருந்தால்...
கடல் வழியாகவும், கொழும்பில் இருந்தும்,  முஸ்லீம் வியாபாரிகளுடாக...
யாழ்ப்பாணத்துக்கு... கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை  ஏன் தடுக்க முடியாது❓

தமிழன், நாசமாக... போகட்டும் என்று, வேண்டுமென்றே... 
அனுமதிக்கின்றார்கள்... என்பது, உங்களுக்கு, இன்னும் புரியவில்லையா❓ 😯

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

ராணுவத்தின் பெயரை சொல்லி களவெடுப்பது முழுவதும் நம்ம கழிசறைகள் பெரிய பைக்குகள் ,போண்கள், போதைக்கு காசு , இதற்கு எங்கே போவது களவுதான் இலகுவழி பல கும்பல்கள் சிக்கியிருக்கு தற்போது

Share this post


Link to post
Share on other sites

ரதி அவர்கள் கூறிய விடையத்துடன் நான் நூறு விகிதம் உடன்படுகிறேன் நான் என்னதான் சல்ஜாப்புகள் கூறினாலும் எம்மவர்க்கு எங்கே போனது புத்தி.

மாறாக விடுதலைப் புலிகளில் அங்கத்துவர்களாக இருந்து இறுதிப்போரின் பின்பு இராணுவத்தின் புனர்வாழ்வு முகாமுக்குப் போய் வந்தவர்களில் அனேகமானவர்கள் புனர்வாழ்விலிருந்து வரும்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகவே வெளிவருகிறார்கள் அவர்களுக்கு மிகவும் திட்டமிட்டரீதியில் போதைப்பழக்கத்து உட்படிதி வெளியில் விடுகிறார்கள்.

அதை விட முன்னால் போராளிகளுக்கான சமூக அந்தஸ்து என்பது தமிழர்களிடையே மிகவும் அரிது இப்போது அதுவே தாம் வாழும் சமூகத்தின்மீதான கோபமாக அவர்களுக்குள் உருவாகியுள்ளது. உங்களைப் பழிவாங்குகிறேன் எனப் பலர் இந்தச் சமூக ஒழுக்கக்கேட்டுக்கு தெரிந்தே உடன்படுகிறார்கள்.அதுவே அவர்களை வாழ்வின் விளிம்புநிலைக்குத் தள்ளிவிடுகிறது.

நான் அறிய இரண்டுபேர் இப்படியுள்ளார்கள். ஆனால் பிரச்சனை அவர்களுடன் நின்றுவிடுவதில்லை சம்பந்தமே இல்லாதவர்கள் தெரிந்தும் இப்பிரச்சனைக்குள் வந்து விழுகிறார்கள்

பத்துக்கிலோ கஞ்சாவோ அல்லது பத்துக்கிராம் போதைப் பவுடரோ பிடிபட்டால் அதேவாளை அதைப்போல் பலமடங்கு போதை சமாச்சாரம் எங்கோ கைமாறுகிறது என ஊகிக்கலாம்.இது இப்போது தமிழர் பகுதியில் மிகப்பெரிய வலைப்பின்னல் சாம்ராச்சியம் எல்லாமே கைமீறிப்போவிட்டது.

தவிர பிடிபட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல்களுமே அறம்சார்ந்து சிந்திப்பதில்லை இதில் முக்கியமானவர் 
யாழ் மாநகரசபை அங்கத்தவர் ரெமீடியஸ். 

ஆவாக்குழு காவாலிக்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் வக்கீல் ஆயராகியிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.

குறிப்பாகச் சொல்லப்போனால் இப்போது இப்படித் தறிகெட்டவர்களது அப்பன் ஆத்தை வளர்ப்புச்சரியில்லை என்பதே.அதைவிட சாதியம் தொடர்பான பழிவாங்கலும் அதாவது ஒருகாலத்தில் மேசாதியினரால் துன்புறுத்தபட்டவர்கள் அவர்களைப் பழிவாங்குகிறேன்பேர்வழி எனவும் இப்படியான அனத்துரக விமுறைக் அளிலும் ஈடுபடுகிறார்கள் ஆனால் அதுவே அவர்கள் மீழமுடியாத சிக்கல்களுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ராணுவத்தின் பெயரை சொல்லி களவெடுப்பது முழுவதும் நம்ம கழிசறைகள் பெரிய பைக்குகள் ,போண்கள், போதைக்கு காசு , இதற்கு எங்கே போவது களவுதான் இலகுவழி பல கும்பல்கள் சிக்கியிருக்கு தற்போது

பல்சர் மோட்டார் சைக்கிள்க்கு பெற்றோல் முடிந்து வீதிகளில்  தள்ளுப்பட்டு உருளுது என்று கேள்வி கோவிட் வந்தது இப்படியும் ஒரு நன்மை . 

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, பெருமாள் said:

பல்சர் மோட்டார் சைக்கிள்க்கு பெற்றோல் முடிந்து வீதிகளில்  தள்ளுப்பட்டு உருளுது என்று கேள்வி கோவிட் வந்தது இப்படியும் ஒரு நன்மை . 

இருந்தாலும் அவர்களுக்கு எப்படி காசு வருகின்றது என்பது தெரியாமல்தான் இருக்கிறது 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்களுக்கும் எமது ஆதரவை தெரியப்படுத்தினால் நல்லது..   Please read and sign the petition.. COVID-19 made all PR efforts online and social media.. So, don't ignore a minute time to argue what it will achieve, etc.. Just show your support..   "MP, Hugh McDermott, the state member for Prospect, NSW, has recently expressed his condolences and solidarity with the Australian Tamil community in his acknowledgment of the Tamil genocide. His statement, however, was met with opposition from the Sinhala nationalist polity who have indulged in a hate campaign against him and his family. "   https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
  • ஆழ்ந்த இரங்கல்கள்  #ஆறுமுகன்_தொண்டமான்
  • ஹாங் காங் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அவர்கள் Han இனத்தவர்கள்.  பிரித்தானியவே , சீனாவின் 100 வருட மேற்கு காலனித்துவ அரசுகளின் அவமானகரப்படுத்துத்தில்  பிரித்து 100 வருட குத்தகைக்கு எடுத்து.  சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை.  சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது. அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.
  • இந்த ராணுவ நடவடிக்கையில் என்னுடன் சிறு வயது முதல்  விளையாடிய, தெரிந்த பலரை இழந்துள்ளேன். ஒரு பனையை  சுற்றி சுற்றி ஹெலி அடிக்க, அருகில் இருந்த சேற்று கிடங்குக்குள் விழுந்து எங்களை காப்பாற்றினோம். இருந்தும் தரையால் வந்த ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்தோம். (எனது ஹம்பர் சைக்கிள் கவச வாகன செயினுக்குள் அகப்பட்டு கிழிந்த இரும்பு தகடானது). ஒவ்வொருவருள்ளும் ஒரு நீண்ட கதை. எனது பாடசாலை வகுப்பு நண்பர் நெல்லியடி முகாமுக்குள் லொறியுடன் சென்று தாக்கியதன் மூலம் ஓரளவு  நீதி கிடைத்தது. உயிர் நீர்த்த போராளிகள், பொது மக்கள், எனது விளையாட்டு கழக நண்பர்கள், அனைவருக்கும் வீர வணக்கங்கள் 
  • எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய பிரதமர் மோடி   இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5-ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.   பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.   தற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/05/26185055/1554210/prime-minister-modi-meets-with-national-security-advisor.vpf