Sign in to follow this  
கிருபன்

துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம் – கார்த்திக் பாலசுப்ரமணியன்

Recommended Posts

துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம் – கார்த்திக் பாலசுப்ரமணியன்

 
    •  

இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும்.

இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்பிட ஈழப் படைப்புகள் ஒரு தனித்த கவனத்தை இங்கே பெற்றுள்ளன. பிரமிள், மு.தளையசிங்கம், தெளிவத்தை ஜோசப், எஸ்.பொ என்று வலுவான முன்னோடி வரிசையும் அவர்களைத் தொடர்ந்து அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, குணா கவியழகன் என்று தனித்துவம் மிளிரும் படைப்பாளிகளும் இக்கவனக் குவிப்புக்கு அடிகோலியவர்கள் எனலாம். மேலும், போர்ச்சூழலும் அது கொண்டுவந்து சேர்த்திருக்கும் தீயூழும் தமிழகத்துக்குப் புதியவை. ஈழத்தின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் இன்றும்கூட தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்படியான இன்றைய சூழலில் இந்தத் தொகுப்பின் அவசியம் என்ன? யூ.கே.ஜி படிக்கும் என் மகனிடம் ஓவியப் பயிற்சிப் புத்தகம் ஒன்று உண்டு. அதில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அவற்றை இணைக்கும் எண்களும் வழிமுறையும் கூறப்பட்டிருக்கும். அவ்வழிமுறையின் துணைகொண்டு அப்புள்ளிகளை ஒன்றிணைக்கும் போது அதுவரைப் புலனாகாத சித்திரம் ஒன்று துலங்கி வெளிவரும். அதுவரை புள்ளிகளின் குவியலாக இருந்தவை சட்டென்று மானாகவோ, மயிலாகவோ உருப்பெற்று உலவுவதைக் காண முடியும். ‘துயிலாத ஊழ்’ என்னும் இத்தொகுப்பும் கிட்டத்தட்ட அதைத்தான் செய்கிறது. இதில் பலதரப்பட்ட அரசியல் மற்றும் இலக்கிய நிலைப்பாடுகளைக் கொண்ட பத்து சமகால ஈழப் படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, ஒரு படைப்பாளியின் சிறுகதை தொகுப்பொன்றை வாசிக்கும்போது அவரின் படைப்புலகத்தின் வழியே அவர் நம்பும் அரசியல், சமூக விழுமியங்கள், கலை இலக்கிய நம்பிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளவியலும். ஆனால், இவ்வாறாக பலதரப்பட்ட கலை – இலக்கிய – அரசியல் நம்பிக்கைகள் கொண்ட படைப்புகளைத் தொகுக்கும்போது அதன் வழியே ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான கலை இலக்கியப் போக்கு மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒரு கோட்டுச் சித்திரத்தை வாசகன் வரைந்துகொள்ள ஏதுவாகிறது. அதை முழுமையானதொரு சித்திரம் என்று கூறவியலாதபோதும், சமகால ஈழ இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள நிச்சயம் உதவும் ஒரு பயிற்சி ஓவியம் எனத் தாராளமாகக் கூறலாம். அதை இத்தொகுப்பு நூல் சிறப்பாகவே செய்திருக்கிறது. அவ்வகையில் இம்முயற்சி முக்கியமானதும் பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

thuyilaatha-oozh_FrontImage_845-198x300.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளில் புழங்கும் காலத்தின் வரிசையில் அடுக்கினால், மாபெரும் இறுதிப் போர்க்காலம், அப்போருக்கு முந்தைய பதற்றச்சூழல் கவிந்த காலம், போருக்குப் பிந்தைய இப்பதின்ம வருடங்கள் என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இதிலிருக்கும் கதைகள் இந்தியா, கனடா, ஐரோப்பா என்று உலகெல்லாம் பயணப்பட்டாலும் அவை வேர்பிடித்து நிலைகொள்ளூம் இடமாக ஈழமே இருக்கிறது. இயக்கப் போராளிகள், போராளிகளுக்குப் பக்கமிருந்தவர்கள், சாதாரணர்கள் என்று இதன் கதை மாந்தர்களும் இயக்க ஆதரவு எதிர்ப்பு புறக்கணிப்பு என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி காலம், இடம், மனிதர்கள் என்று வேறுபட்ட கதைகளின் தொகுப்பென்றாலும் இவ்வத்தனை கதைகளையும் இணைக்கும் கண்ணியாக இத்தொகுப்பின் தலைப்பு இருக்கிறது – துயிலாத ஊழ். ஆம், அத்தனை வேறுபாடுகளையும் தாண்டி எல்லோரிடமும் சொந்த நிலம் பறிபோய் நிற்கும் துயரமும் அவமானமும் வலியும் மாறாமல் படிந்திருக்கிறது. இந்தப் பொதுத்தன்மையின் பொருட்டுத்தான், இக்கதைகளில் ஒன்றன் தலைப்பை தொகுப்பு நூலுக்கு வைக்கும் பொது வழக்குக்கு மாறாக அகரன் எந்தக் கதையின் தலைப்புமாக இல்லாத இத்தலைப்பைத் தெரிவு செய்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

இத்தொகுப்பில் சயந்தனின் பூரணம், யதார்த்தனின் குசலாம்பாள் என்னும் செயின் புலாக் தமிழ் நதியின் அப்பாவின் புகைப்படம், அனோஜனின் பேரிட்சை ஆகியன என் மனது நெருக்கமாக உணர்ந்த கதைகள். இத்தொகுப்பிலுள்ள கதைகளை சிறுகதைகளுக்குண்டான கறாரான இலக்கிய அழகியல் மதிப்பீடுகளைக் கொண்டு விமர்சித்தால் சில கதைகள் அவற்றை பூர்த்தி செய்யாமல் போகக்கூடும். ஆனால், அவற்றை மீறி வாசிப்பவனோடு ஆத்மார்த்தமாக உரையாடும் உண்மையும் நேர்மையும் கொண்ட கதைகளாக இருக்கின்றன. சில உண்மைகளைப் பேசுவதற்கு கலைத்தன்மை கூடிவருவதற்காக காத்திருக்க முடியாதுதான். இவையே இத்தொகுப்பிலுள்ள எந்தக் கதையையும் புறக்கணித்துச் செல்லவியலாத நிலையைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள கலையரசி என்னும் கதையில் ஓரிடத்தில் போர் வாழ்வின் நினைவுகளைப் பேசிப்போகும் காட்சியில், “பேசித் தீராத வாழ்கை அது. பிறகு பேசும்” என்று ஒரு கதாப்பாத்திரம் சொல்லும். அக்கதாப்பாத்திரத்தின் பெயரும் கார்த்திக். இங்கு நானும் அதையே சொல்ல விரும்புறேன் – எழுதியோ வாசித்தோ தீராத கதைகள் இவை.

 

http://tamizhini.co.in/2020/05/16/துயிலாத-ஊழ்-சமகால-ஈழச்-சி/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன தளபதியின் கருத்தினால் அச்சம் Rajeevan Arasaratnam May 26, 2020 ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன தளபதியின் கருத்தினால் அச்சம்2020-05-26T15:38:45+00:00உலகம் ஹொங்கொங்கின் இறைமையை உறுதிசெய்யப்போவதாக சீனா இராணுவம் தெரிவித்துள்ளது. ஹொங்கொங்கிற்கான சீனா இராணுவத்தின் தளபதி சென்டாவோஜியாங் இதனை தெரிவித்துள்ளார். சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டங்களினால் ஹொங்கொங்கில் மீண்டும் பதட்டநிலையும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துள்ள நிலையிலேயே சீன இராணுவஅதிகாரி இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் புதிய மிகவும் ஆபத்தான தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கின் சிவில் உரிமைகளிற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியாகியுள்ள நிலையிலேயே சீன இராணுவ அதிகாரி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். ஹொங்கொங்கின் தேசிய இறைமையையும் அபிவிருத்தி நலன்களையும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மையையும் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளும் படையினரும் உறுதிபூண்டுள்ளனர், நம்பிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவ அதிகாரி அவர்களால் அது முடியும் என குறிப்பிட்டுள்ளார். புதிய பாதுகாப்பு சட்டம் முதற்தடவையாக சீன படையினர் ஹொங்கொங்கில் செயற்படுவதற்கு அனுமதித்துள்ளதால் அச்சநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தால் சீன படையினர் வீதிகளில் இறங்கலாம் என்ற அச்சம் ஹொங்கொங்கில் காணப்படுகின்றது. சீனாவின் உத்தேச சட்டத்திற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிhப்பு உருவாகியுள்ளது. http://thinakkural.lk/article/43543
  • ஆறுமுகன் தொண்டமானின் முறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு; முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் Bharati May 27, 2020ஆறுமுகன் தொண்டமானின் முறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு; முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்2020-05-27T00:17:55+00:00 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்தியா வம்சாவளி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட 1970ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியின் ஊடாக அதனை இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களின் கூட்டுத்தலைமையாக மாற்றியமைத்தவர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான். சௌமியமூர்த்தி தொண்டமானை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையக தமிழர்களுக்கு பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கும் போது ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆறுமுகன் தொண்டமான் என்ற ஒரு தலைவனின் சகாப்தம் முடிவடைந்ததாக நான் கருதவில்லை மாறாக தொண்டமான பரம்பறையூடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள் ஒரு போதும் முற்றுப்பெறாது. இந்த இயக்கத்தின் தொடர் செயற்பாடுகள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு தொடர்ந்தும் அளப்பெரிய சேவையினை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்னாரின் பிரிவில் சொல்லொன்னா துயரம் கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை தொழிளாலர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் முக்கியமாக அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கின்றேன். http://thinakkural.lk/article/43640 இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் செய்தியினை நம்ப முடியவில்லை; இந்திய உயர் ஸ்தானிகர் அதிர்ச்சி Bharati May 26, 2020இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் செய்தியினை நம்ப முடியவில்லை; இந்திய உயர் ஸ்தானிகர் அதிர்ச்சி2020-05-26T22:25:12+00:00 “இன்று மாலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவு குறித்த செய்தியினை நம்ப முடியவில்லை” என இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது; “அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை நம்ப முடியவில்லை.” இன்று மாலை இந்தியத் தூதுவரை ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் சந்தித்த போது எடுத்துக்கொண்ட படம் http://thinakkural.lk/article/43614
  • என்ன செய்வது நாங்கள் சீமான் போகும் பாதை சரியென்றால் இல்லை  தமிழ் இனத்தின் ஒண்ணாம் நம்பர் எதிரி சீமான் என்ற ரேன்சுங்கு கம்பு சுத்துகினம்  கோத்தபாயாக்கள் கூட இரண்டாம் பட்சமாகி  போவது அதிசயம் .இந்த பிரசனைகளால் இசைக்கலைஜன் கூட தானும் தன்பாடும்  என்று ஒதுங்கி போய்  விட்டார் .நாட்டிலை  எத்தனையோ  முக்கியமான பிரச்சனைகள் இருக்க ஆமைக்கறியும் ak 47 உறவுகளுக்குள் பிளவை உருவாக்குவது தேவையற்ற ஒன்று எதிர்க்கருத்து வைப்பவர்கள்  சிங்களவர்கள் இல்லையே விளங்கவில்லை அவர்களுக்கு அவ்வளவுதான் ஒருநேரம் தாங்களா  உணர்ந்து வருவினம் . அது மட்டும் கண்டும் காணாமல் விட்டு விடவேண்டியதுதான் இந்த லொக் டவுன் நேரம் இந்த ஓய்வும் நேரமும் இனி வாழ்க்கையில் வரப்போவது அரிது பிரயோசனமாய் கொள்ளுப்படுவது நல்லது .😄 சீமான்  ஒருமுறை ஆடுமேய்ப்பது அரசாங்க வேலையாக சேர்க்கணும் என்றார்  பலரும் திட்டினார்கள் ஆனால் சமீபத்தில்  நியூசிலாந்து ஆடுகளை ரொபோ நாய் மேய்கிறது 5g  அலைவரிசையியில் அந்த ரொபோ நாயை கட்டுப்படுத்துவது மூன்றாம் உலகநாட்டில் உள்ள குறைந்த ஊதிய சம்பளத்தில் உள்ள ஒருவர் . இங்கு ஆடு மேய்ப்பது  கவுரவமான தொழிலாய் மாறுகிறது . 99வீதமான சிங்களவர்களில் தங்களுக்குள்  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழனை அழிக்க  என்றால் ஒற்றுமையாய்  ஒரு புள்ளியில் இணைகிறார்கள் .இதுவும் சாதாரண கருத்து வேறுபாடு அவ்வளவுதான் .
  • உண்மை தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / சினிமா போன்ற‌ பொழுது போக்குக்கு அடிமையா போன‌ ஒரு நாட்டால் , க‌டும் போருக்கு அவ‌ர்க‌ளால் தாக்கி பிடிக்க‌ முடியாது / இந்தியாண்ட‌ போர் விமான‌ங்க‌ள் சீன‌ன்ட‌ நாட்டுக்குள் போனால் திரும்பி இந்தியாவுக்குள் வ‌ர‌ வாய்ப்பில்ல‌  , இல‌ங்கை அம்மாந்தோட்டையில் சீன‌னின் பெரிய‌ இராணுவ‌த‌ள‌மே இருக்கு , இது இந்த‌ பொக்கிஸ்ச‌த்துக்கு தெரிந்து இருக்குமோ தெரியாது / சீனான் நேபாள் பாக்கிஸ்தான் இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளை கைக்குள் வைத்து இருக்கிறான் மூன்று ப‌க்க‌த்தாலும் அடிக்க‌ தொட‌ங்கினா / பேச்சு வார்த்தை மூல‌ம் பிர‌ச்ச‌னையை தீர்ப்போம் என்று இந்திய‌ன் சீன‌னின் காலில் விழுந்து ம‌ண்டியிடுவான் 😉
  • சீனாவை விட்டு பொருளாதர ரீதியாக இந்தியா பக்கம் சாய விரும்பும் உலகம்  சீனாவை மீறி வளர விரும்பும் இந்தியா, இந்தியாவை பலவீனமாக்க விரும்பும் சீன அரசு.   கோவிட்19 ஊடாக, உலக ( மேற்குலக ) விருப்பம் / ஒழுங்கு எமது மக்களின் உரிமைகளை தரும் என நம்புவோம்.