Jump to content

`1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி

 

சைக்கிளில் பயணிக்கும் சிறுமி ஜோதி

காயம்பட்ட தனது தந்தையை சைக்கிளில் அமர்த்தி சுமார் 1,200 கி.மீ தூரம் பயணித்து 15 வயதுச் சிறுமி ஒருவர் சொந்த ஊரை அடைந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வருமானம் ஏதுமின்றித் தினக்கூலி, புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில், தங்களைச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 
 
புலம்பெயர் தொழிலாளர்கள்
 

மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளின் கோரிக்கையின்படி ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கெனச் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல நூறு கிலோமீட்டர்கள் வரை தொழிலாளர்கள் நடந்தும் சைக்கிளில் பயணித்தும் வருவதைப் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும்.

அப்படி, ஹரியானா மாநிலம் குருகிராமிலிருந்து பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்குக் காயம்பட்ட தனது தந்தையை சைக்கிளில் கொண்டு சேர்த்திருக்கிறார் 15 வயதுச் சிறுமியான ஜோதி குமாரி என்பவர். ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டௌன் அமல்படுத்தப்பட்ட அதேநேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.

 
சிறுமி ஜோதி குமாரி
 

இதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள். குருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் தேதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் தேதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர். வழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.

இந்த விவகாரம் ஊடகங்கள் வாயிலாக வெளியில் தெரியவே, அவருக்கு உரிய முறையில் பயிற்சிகள் கொடுக்கத் தயாராக இருப்பதாக இந்திய சைக்கிளிங் ஃபெடரேஷன் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய ஆன்கன் சிங், ``லாக் டௌன் முடிந்தவுடன் அவரை டெல்லிக்கு வரவழைத்து சில பரிசோதனைகளை வைக்க இருக்கிறோம். அதில், அவர் தேறும்பட்சத்தில் டெல்லியில் வைத்து அவருக்குப் பயிற்சிகள் கொடுக்க இருக்கிறோம். இன்று காலை அவரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினோம். அவரும் ஆர்வமாக இருக்கிறார்.

8ம் வகுப்பு மாணவியான அவர் தேர்வில் வெற்றிபெறும் சூழலில் ஆசியாவிலேயே மிகச்சிறந்த வசதிகள் கொண்ட டெல்லி சைக்கிளிங் மையத்தில் அவருக்குப் பயிற்சி அளிக்கப்படும். அவர் டெல்லி வந்து செல்வது மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்தும் எங்கள் செலவிலேயே ஏற்பாடு செய்யப்படும். 1,200 கி.மீ சைக்கிள் மிதிப்பது சாதாரணமான விஷயமல்ல. அந்தச் சிறுமியிடம் திறமை இருக்கிறது. உரிய முறையில் பயிற்சி கொடுத்தால் நிச்சயம் பெரிய அளவில் வருவார். 14 - 15 வரையிலான வயதில் சைக்கிளிங் செய்யும் வீரர், வீராங்கனைகள் நம்மிடம் 10 பேர்தான் இருப்பார்கள்’’ என்றார்.

https://www.vikatan.com/news/india/15-year-old-jyoti-cycles-1200-with-father-on-pavilion

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

`1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி

 

சைக்கிளில் பயணிக்கும் சிறுமி ஜோதி

 

இவ்வளவு தூரத்தையும்... தந்தையை சுமந்து கொண்டு, வீதி விபத்தில் அகப்படாமல்,
சொந்த வீடுவரை கொண்டு வந்து சேர்த்த, அந்தச்  சிறுமியின்... தைரியத்திற்கும்,
மனத் துணிச்சலுக்கும்.... தலை வணங்குன்றேன். 👏

Link to comment
Share on other sites

சிறுமிக்கு பாராட்டுக்கள். 20. கி.மி சைக்கிள்  ஒடிவிட்டு வீட்டுக்கு வந்தாலே ஏதொ பெரிய சாதனையை செய்தது போல் மனதிற்கு  இருக்கும். 1200 கி. மீ தந்தையையும் ஏற்றி சைக்கிள் ஒடுவதென்பது சாதாரண விடயம் அல்ல.  வருணாசிரமத்தை இன்றும் புனிதப்படுத்தும் இந்தியாவில் இவ்வாறான திறமையானவர்கள் உயர் ஜாதியில்  இருந்தால்  தான. அவர்களுக்கு அங்கீகாரமே கிடைக்கும். இல்லையென்றால் இந்த பத்திரிகை செய்தியுடன் எல்லாம் முடிந்துவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலையே இந்தியா ஒரு விசித்திரமான நாடு.
இந்திய அரசியலை ஒரு மத்துலை போட்டு கடைஞ்சு எடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிக்கு பாராட்டுக்கள் ..கடவுளின் ஆசீர்வாதமும் கிடைக்கட்டும் .
இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கை எவ்வளவோ மேல்  மக்களை  பஸ்களில் ஏற்றி அந்ததந்த ஊருக்காவது அனுப்புகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு மனோதிடம் இருந்தால் அந்தப் பிள்ளை இந்தச் சாகசத்தை செய்திருக்க முடியும்......பாராட்டுக்கள் தாயே.....!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கை எவ்வளவோ மேல்  மக்களை  பஸ்களில் ஏற்றி அந்ததந்த ஊருக்காவது அனுப்புகிறார்கள் 

உண்மை தான். கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மோசமான சம்பவங்களை தொலைகாட்சியில் பார்த்த இலங்கையர் பலரும் இதை தான் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
 
 
தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
 
அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 15 வயதான சிறுமி ஜோதி குமாரி 1,200 கி.மீ  10 நாட்களில் சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்து பிரமி்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்தவாரம் மூழுவதும் சமூக வலைதளங்களில் இந்த சிறுமி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து சொந்தமாநிலம் அழைத்து வந்தது டிரெண்டிங் ஆனது.
 
தற்போது இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு லாக்டவுன் முடிந்தபின் பயிற்சிக்கு அழைத்துள்ளது
 
ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளார்.
 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் மற்றும் ஆலோசகர் இவான்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டி உள்ளார்.
 
சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் அழகான கால்களின் சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பையும் ஈர்த்துள்ளது என இவ்வான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்.
 
அவர் தனது டுவிட்டில் கூறி இருப்பதாவது: 
 
"15 வயது ஜோதி குமாரி, தனது காயமடைந்த தந்தையை 7 நாட்களில் +1,200 கி.மீ தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார்.  சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் இந்த அழகான சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என கூறி உள்ளார்.
 
இவான்காவுக்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா "ஜோதி 1,200 கி.மீ தூரம் பயணம் செய்ததைப் போல அவரது வறுமையும் விரக்தியும் மகிமைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் அவரிடம் தோல்வியுற்றது, இது ஒரு சாதனையாக எக்காளம் போடுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.