Jump to content

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும்  என குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, சனத் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

sanga1.jpg

40 மில்லியன் டொலர்கள் செலவில் ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து மஹேல ஜயவர்த உள்ளிட்ட தரப்பினர் இதற்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்ததை அடுத்து நாட்டில் பெரும் பேசும் பொருளாக இந்த விடயம் காணப்பட்டது.

இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளையும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களையும் நேற்று அலரிமாளிகையில் சந்தித்தார்.

பெருந்தொகை பணத்தை கொண்டு கிரிக்கெட் மைதானம் அமைக்காமல், அதனை மாணவர்களின் கல்விக்காகவும் கிராமப்புற மாணவர்களின் கிரிக்கெட் மேம்பாட்டுக்காகவும் செலவிட முடியும் என்று ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சனத் ஜயசூரிய ஆகியோர் தெரிவித்தனர்.

குறிப்பாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

 வடக்கு கிழக்கில் மிகவும் திறமையான இளைஞர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளை பாரபட்சம் இன்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் என குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வலியுறுத்தினர்.

வடக்கில் 26 பாடசாலைகளுக்கு ஒரு மைதானம் மாத்திரமே காணப்படுவதாக மஹேல ஜனவர்தன தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு தேவையான வசதிகளை நாம் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் மஹேல ஜனவர்தன சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கில் திறமையான இளைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை எமக்கு உள்ளது என மஹேல ஜயவர்தன கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சென். பெற்றிக்ஸ் கல்லூரியில் ஆடுகளம் ஒன்றை அமைத்தோம். இதன் மூலம் திமையான வீரர்கள் கிடைக்கப்பெற்றார்.

இதுபோன்று மேலும் பல வசதிகளை நாம் செய்துகொடுக்கும் போது திறமையான வீரர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்க முடியும் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

ஆனால் இங்குள்ள வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுத்தால் சிறந்த வீரர்களை நாம் தேசிய அணிக்கு உள்வாங்க முடியும் என்றார்.

ஹோமாகமவில் புதிதாக மைதானத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்யவும், தற்போதைக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மைதானங்களின் வசதிகளை மேம்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

40 மில்லியன் டொலர் கடனைப் பெற்று 3 அல்லது 4 வீத வட்டியுடன் அதன் தவணைக் கொடுப்பனவாக 3.5 பில்லியன் ரூபா வீதம் 15 வருடங்களுக்கு செலுத்துவதற்கு பதிலாக, அந்த நிதியில் கிரிக்கெட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தியை திட்டமிடுவது சிறந்தது என குமார் சங்கக்கார இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்ந பேச்சுவார்த்தையின் பின்னர் ஹோமாகமவில் 40 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

https://www.virakesari.lk/article/82549?fbclid=IwAR36LwKSDLI7beqcsAaF6xgzVHjcSVuWb0OWdHeluY1XugYEHDvHpIaKlb4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழ்ப்பாணத்து பள்ளிக்கூடங்களில் உள்ள சாக்கு பிச்சுகளை தூக்கிவிட்டு ஒழுங்கான பிச் போட்டு கொடுக்கவேண்டும், அதை பராமரிக்கவும் வசதி செய்து கொடுக்கவேண்டும். சாக்கில் விளையாடி சர்வதேச தரத்துக்கு எப்படி முன்னேறுவது?

Link to comment
Share on other sites

இங்கு எல்லாமே அரசியல் தான். எல்லா இடங்களிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை. கிளிநொச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு என்ன நடந்தது? எல்லாவற்றையும் ஆரம்பிப்பார்கள் ஆனால் முடிக்கமாட்ட்டார்கள். இதுவும் பேச்சுடன் நிக்காமல் செயல்படுத்தினால் சரிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மே 18ல் அடித்த சிக்சருக்கு....இப்ப ஒரு ஓட்டம் அடித்துக் கொடுத்திருக்கினம்...இதை நம்ம 90 ஸ் தூக்கிப்பிடிப்பினம்....இதற்கிடையில் அங்கசனும் ..டக்கியும்  ஆள்சேர்ப்பு  நோட்டிசும் ஒட்டியிருப்பினம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெற்றை ஊக்குவிப்பதை நான் ஆதரிக்கவில்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மகிந்தவின் வால்பிடிகள். மகிந்தரின் முன்னைய ஆட்சியில் கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் தடகள மைதானமும்.. மாங்குளத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானமும் அமையப் போகிறது என்று கதை விட்டார்கள். அதற்கு முன் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் முரளிதரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்துக்கு போய் அங்கு சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்றார்கள்.

கடைசியில்.. இப்ப கோமகமவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைய பிளான் போட்டிருக்கினம். அது இப்போ கொரோனாவால்.. இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த கிரிக்கெட் மைதானம் இப்ப தேவையில்லை என்று சிங்களவர்கள் பலர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆக.. இவர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ற தோறணையில்.. மகிந்த - கோத்தா கும்பலின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வரும்.. மகிந்த கும்பலின்..முகவர்களே அன்றி வேறில்லை.

இவர்களின் கருத்துக்கள் குறித்து தமிழ் மக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஏமாறாமல் இருக்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான தமிழருக்கு என்று சில குணங்கள் இருக்கு ...அதில் ஒன்று எப்ப பார்த்தாலும் ,யார் என்ன செய்தாலும் அதில் நொட்டை பிடித்துக் கொண்டு இருப்பது ...மாற்ற முடியாது ....அவர்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை .

சங்க , மஹேல கிரிக்கட்டஸ்...அவர்கள், அவர்கள் கருத்தையும் ,அவர்களால் முடிந்ததையும் தான்  செய்ய முடியும் ...அவர்கள் அரசியல்வாதிகள் இல்லை  அரசிடம் போராடி பெற்று கொடுப்பதற்கு.🙁

அவர்கள் ஏதோ சொல்கிறார்கள் ...தமிழருக்காய் தான் கதைக்கிறார்கள்[தமிழ் அரசியல்வாதிகளே வாயை மூடிட்டு இருக்கும் போது அவர்களாவது கதைக்கிறார்கள் என்றில்லை😧 .] என்றிட்டு மூடிட்டு இருக்கலாம் ...அவர்கள் அப்படி தமிழனனுக்காய் கதைத்ததில் உங்களுக்கு ஏதாவது பாதிப்பா?...எதிர்க்க வேண்டும் என்பதற்காய் எல்லாத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதில்லை 

எல்லோரையும் எதிர்த்ததால் தான் மு.வா அழிவின் போது ஒருத்தரும் ஏன் நாயே என்று கேட்க வரவில்லை 😭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.