Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக இலங்கை தமிழ் பெண் நியமனம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக இலங்கை தமிழ் பெண் நியமனம்

raji-2-3-300x175.jpgஉலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயத்தொழில் பிரிவு தலைவராக கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ராஜி பாற்றாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கவும், பயிற்சி பெற்ற பின் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப் படுத்தவும், விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்களின் முன்னேற்றம், வாழ்வாதாரம் பெருகும்.

இதற்காக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு பல்வேறு தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கவும், பயிற்சி பெற்றபின் சிறிய நிதி ஆதாரம் பெற்றுத் தரவும், விரிவான திட்ட அறிக்கையை செய்து கொண்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் தயாரிக்கும் பொருட்களை வாங்கி ஆதரவு தெரிவித்தால் போதும், நம் தமிழ் உறவுகள் தலை நிமிர்ந்து வாழ பேருதவியாக இருக்கும்.

இக்கட்டமைப்பின் தலைவராக திருமதி ராஜி பாற்றாசனும், உதவியாக 7 துணை தலைவர்களும், 14 செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் தெரிவித்திருக்கின்றார்.

http://thinakkural.lk/article/42933

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நானும் யாழில் கருத்தெழுதும் வெத்து வேட்டுத்தானே... அதெப்பிடி  இவிங்க மட்டும் இதில் நம்மடை மாமாவும் இருக்கிறார்(அதிகமாக கிண்டாதைங்கோ அண்ணை பிறகு எல்லாவற்றையும் உளறி கொட்டிருவன்) மென்டீஸ் மட்டுமல்ல 250 ஓவா சோட்டியும் தாக்கம் அதிகமாக காட்ட ரெடியாக இருந்தபோதும் நல்லவேளை கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு கொடுத்த வைத்தியம் இன்னுமோர் தமிழ் நாட்டு அரசியல் பாரம்பரியத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது.
  • ஐ.நா பொதுச் செயலாளரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை விளக்கம்   ´ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் துறையில் உள்ள பொறிமுறைகள்´ தொடர்பான பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் உள்ள இலங்கை தொடர்பான குறிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. நேற்று (30) இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில், இலங்கையின் பதில் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ் அரசாங்கம் சார்பாக வௌியிட்ட அறிக்கை பின்வருமாறு. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ´அச்சுறுத்தும் விஜயங்கள்´, ´கண்காணிப்பு´, ´துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள்´ மற்றும் ´பழிவாங்கல்கள்´ தொடர்பாக, குறித்த சம்பவங்களை விசாரணை செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு அல்லது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான தேசிய நிறுவனங்களுக்கு முறையான முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது. அரசாங்கம் ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் உறுதிபூண்டுள்ள அதே வேளை, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்து, வழக்குத் தொடருவதனை உறுதி செய்கின்றது. தேசிய பாதுகாப்பின் நலனுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை செயற்படுத்துவதனைத் தவிர, குறிப்பாக பேரழிவுகளை ஏற்படுத்திய ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையும் கண்காணிப்பதில் ஈடுபடவில்லை என்பதும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. உலகெங்கிலுமுள்ள அடிப்படைவாத மற்றும் தீவிரமான கூறுகளின் நுட்பங்களுக்கிடையில் தேசிய பாதுகாப்பு நலன்களை இணங்கச் செய்யும் எந்தவொரு நாடும் வருந்தத்தக்க விளைவுகளை எதிர்கொள்ளும் என நாங்கள் நம்புகின்றோம். எனவே, இந்த சூழலில் அத்தகைய யதார்த்தத்தை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=134556
  • நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.
  • இலங்கையில் ஜேபி (justice  of peace) என்று பதவி ஒன்று இருக்கிறது.  சுத்த  தமிழில் சமாதான நீதிவான் என்று  சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை.  சில  ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். "இப்ப சரியான  பிசி " பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட  மாட்டார்கள். அவர்களை பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு.   ஜேபியாக என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும்  யாருக்கும்   தெரியாத பரம இரகசியம்.   எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார்.  பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார்.  இருட்ட  முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலை குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம்  நேரம் செல்ல போனால்  காட்டுகிற இடத்தில் கையொப்பம் போட்டு வேறு ஒரிடத்தில் சீலை குத்துவார். மற்றும்படி அவர் அருமையான  நல்ல ஜேபி. நான் முதன்முதலாக   கடவுச்சீட்டு எடுப்தற்கு அவரிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறேன்.  என்னைபோல பலருக்கு அவரின் கையொப்பத்தை நம்பி பாஸ்போர்ட் தந்திருக்கிறார்கள்.   இன்னுமொரு வகை ஜேபி இருக்கிறார்கள்.  மொரட்டுவ பஸ் வெள்ளவத்தைக்கு வந்து சேர்கிறபோது  பெரும்பாலும் பஸ் முழுக்க ஆட்கள் இருப்பார்கள்.  பெரிய மனசு படைத்த  கண்டக்டர் ஒரு காலையும் இரண்டு கைகளையும் பஸ்சுக்குள் திணிக்க  என்னை போன்றவர்களுக்கும்  வசதி செய்து தருவார்.ஒருமாதிரி  ஏறி ஒற்றை காலில் தொங்கி மெஜஸ்டிக் சிட்டியில் இறங்கி ஒரு குட்டி நடை போட்டால் பம்பலபிட்டி கடற்கரை தெரியும்.  அதற்கு பக்கத்தில்   காலாவதி திகதி முடிந்த பழைய கட்டடம் ஒன்று இருந்தது. அதுவே அப்போது பாஸ்போர்ட் ஒப்பீஸ்சாகவும்  இருந்தது.அந்த பகுதியில் போகிறபோது கொஞ்சம் தலையை திருப்பினாலும்  பின்னால் மந்திரவாதி போல ஒருவர் வந்து நிப்பார். ஜேபி சைன் வேணுமா என்று  கேட்பார். ஐம்பது ரூபாய்க்கு ஜேபி சைன் சுடச்சுட கிடைக்கும். அவர்கள் உண்மையான ஜேபியா அல்லது  கள்ள ஜேபியா என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.     ஜேபி பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான். இதற்கு மேல் ஒரு அங்குலமும் நான் அறியேன்.   கிறிஸ்துவுக்கு பின் வந்த காலமொன்றில் மகிந்த குடும்பமாக அரசை ஆண்டார் . புத்த மதம் அரசமதம் என்பதால்  சிலசமயங்களில்  அவருக்கு  அகிம்சை மற்றும் காருண்யம்   பற்றிய ஞாபகம்  வருவதுண்டு. அப்போதெல்லாம்   அவருடைய சீருடை அணிந்த படைவீரர்கள்   கொலை போன்ற சிறு  பாவங்கள்  செய்ய மாட்டார்கள். வெள்ளை வானும் சீருடைய அணியாத அவருடைய மற்றைய  படையினரும் அந்த குறையை நிவர்த்தி செய்தார்கள்.  இப்படியாக புத்தமதத்தின்  மகிமையை  உலகறிய செய்த பெருமைக்காக இப்போதும்  அவரை சிலர்  தலையில் வைத்து  கொண்டாடுவதுண்டு.   அந்த காலத்தில்  நான் கொழும்பில் இருந்தேன். அப்போதெல்லாம்  காந்தி லொட்ச்சில்  இடியப்பமும் சொதியையும் சப்பிட்டு நெல்சன் பிளேசில் பொழுதை போக்குவது வாழ்வின் பெரும் பேறாக இருந்தது.வெள்ளவத்தையில் இருந்த பழைய வீடுகள் வானுயர்ந்த தொடர் மாடி மனைகளாக  புது வடிவம் எடுத்தது. சுவிசிலும் யுகே(uk) இலும் இருந்த நம்மவரின் ஆசையில்  அது பெரும் வியாபாரமாக மாறியது. பேராதனையிலும் மொரட்டுவவிலும் படித்த இன்ஜினியர்கள் சிலர் புதிதாக குட்டி முதளாளிகளாக  மாறினார்கள்.  நானும் சிலகாலம் குட்டி முதளாளியாக உருமாறியிருந்தேன்.     இங்கிலாந்தில் படிப்பை முடித்த மயந்த திசாநாயக்க அமைச்சர் ஆகிற கனவில் மீண்டும்  இலங்கைக்கு வந்திருந்தார். மயந்த திசானாயக்க காமினி திசாநாயக்கவின் கடைசி மகன். அமைச்சராக இருந்த நவீன் திசாநாயக்கவின் தம்பி. இப்படி நீண்ட  பட்டியல் இருந்தாலும்  அரசனின் முதுகை சொறிவதை தவிர அமைச்சர் ஆக  வேறு வழி  கிடையாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. அரசன்  காலில்  போய் கிடந்தார்.  அரசர் அவரை வெள்ளவத்தையின் ஆளுங்கட்சி அமைப்பாளராக்கி அடுத்து வருகிற தேர்தலில் வென்று எம்பி (mp) ஆகி வரும்படி சொல்லி அனுப்பி வைத்தார்.  தேர்தலில் வெல்கிற சூக்குமம் எந்த புத்தகதிலும்  இல்லாததால் மனுசன்  திண்டாடிதான்போனார்.     அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. பல வருடங்களாக  பழம் திண்டு கொட்டை போட்ட வெள்ளவத்தை  விதனையார் மயந்த திசானாயக்கவுக்கு  ஆலோசனை சொன்னார். அதன் பிரகாரம் விதானையாரே  புதிய அமைப்பாளரை சந்திக்கிற கூட்டம் ஒன்றையும்  ஒழுங்கு செய்தார்.   கொள்ளுபிட்டியில் இருந்த அமைப்பாளரின் மாளிகையில் அந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பறையில் பெரிய சோபாவில் அவர் இருந்தார். பக்கத்தில் வெள்ளைநிற அலசேசன் நாய் அவரது காலை நக்கி தன் விசுவசத்தை காட்டியபடி இருந்தது. மற்றைய பக்கத்தில் விதானையார் கட்டிய கையோடும் குனிந்த முதுகோடும் முடிந்த வரை தன் மரியாதையை காட்டியபடி நின்றார். அவர்களுக்கு முன்னால்  நாங்கள் பத்து பேர் வரை அமர்ந்திருந்தோம். எல்லோரும் வெள்ளவத்தையில் வியாபாரம் செய்பவர்கள்.  அரிசி வியாபாரம் செய்பவர்  , எண்ணெய் கடை வைத்திருப்பவர் கட்டடம் கட்டுபவர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அமைப்பாளர் பேசினார். வருகிற தேர்தலில் தான் வெல்ல உதவவேண்டும் என்றார் . அதற்கு பிறகு வெள்ளவத்தையில்  பாலும் தேனும் ஒடுமென்றார். கொழும்பில்  தமிழருக்கு ஒரு தூசியும் விழாமல் பார்பதாகவும் சொன்னார்.பேசி முடிந்த  பிறகு விதானையாரை திரும்பி பார்த்து சொன்னதெல்லாம் சரியா என மெதுவாக கேட்டார்.    விதானையார்  அவரது காதுக்குள்  ஏதோ குசுகுசுத்தார்.  பிறகு  எங்களை  பார்த்து,எங்கள் எல்லோரையும்   ஜேபி ஆக்குவதாகவும் வருகிற தேர்தலில் தான் வெல்வதற்கு உதவிசெய்யும் படியும் சொல்லி  அனுப்பி வைத்தார்.     இரண்டு கிழமைக்கு பிற்பாடு ஒரு கடிதம் வந்திருந்தது. நான் ஜேபி ஆகியிருப்பதாகவும்  பொருத்தமான திகதி ஒன்றில்  சத்தியபிரமானம் செய்யும்படியும் எழுதப்பட்டிருந்தது.     ஜேபி ஆன வெட்கம் கெட்ட கதையை  எப்படி சொல்வது?   கையொப்பம் போடாமலே ஜேபி ஒருவர் பிளேன் ஏறி கரை சேர்ந்தார்.  இன்னுமொரு  நல்ல ஜேபி யை இலங்கை திருநாடு இழந்து போனது.  
  • ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் எனும் இடத்தில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்ராம்பூர் போலீஸார் ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "22 வயதான அந்தப் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் ஆகியும் இவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் அந்தப்பெண்ணை தொலைப்பேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், முடியவில்லை. சிறிது நேரம் கழித்து ரிக்ஷாவில் வந்திறங்கிய பெண்ணின் கைகளில் ஊசியில் ஏதோ ஏற்றிய தழும்பு இருந்தது. அந்தப் பெண் மோசமான நிலையில் இருந்தார். அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்துவிட்டார்" என போலீஸார் அந்தக் காணொளியில் கூறியுள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த வழக்கில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 சம்பவம் தொடர்பாக ஊடகங்களிட்ம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், "என் மகளை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் அவளுக்கு ஏதோ ஒரு போதைப்பொருளை ஊசியால் ஏற்றியுள்ளனர். அவள் மயக்க நிலையிலேயே வீட்டிற்கு வந்தார். அவளது கை, கால்களை உடைத்துள்ளனர். ஒரு ரிக்ஷாவில்தான் அவள் வீட்டிற்கு வந்தாள். வீட்டுவாசலில் அவளை தூக்கி எறிந்தனர். என் மகளால் நிற்கவோ சரியாக பேசவோ முடியவில்லை," என்று கூறினார். மேலும், "என்னை காப்பாற்றுங்கள், எனக்கு சாக வேண்டாம்" என தனது மகள் கூறியதாகவும் அவரது தாய் தெரிவித்தார். அந்தப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் முதுகுப்பகுதி உடைக்கப்பட்டதாக சில ஊடக செய்திகள் கூறுகின்றன. ஆனால், அது உண்மையல்ல என்று பல்ராம்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை அப்பெண்ணின் கை, கால்கள் உடைக்கப்பட்டதாக கூறவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தல் "ஹாத்ரஸ் சம்பவத்திற்கு பிறகு பல்ராம்பூரில் கூட்டுப்பாலியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாத்ரஸ் சம்பவத்தில் பாஜக அரசு கவனக்குறைவாக நடந்துகொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை போல இதிலும் செய்யாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இந்நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். "பல்ராம்பூர் சம்பவம் மனதை உலுக்குகிறது. மீண்டும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். யோகி அரசாங்கத்தின் கீழ் ஒரு பெண்ணாக வாழ்வது சாபக்கேடு. பெண்களை பாதுகாக்க முடியவில்லை, நீங்கள் பதவி விலக வேண்டும் யோகி ஜி" என்று அவர் கூறியுள்ளார். மிக சமீபத்தில்தான் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் https://www.bbc.com/tamil/india-54367808
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.