Sign in to follow this  
உடையார்

பூசகரை மாற்றியதால் பூதாகரமாகிய முரண்பாடு

Recommended Posts

பூசகரை மாற்றியதால் பூதாகரமாகிய முரண்பாடு

Temple-Jaffna-1.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் இன்று (22) அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், ஆலய நிர்வாகம் இயங்கவில்லை. ஆலயத்திற்கு தனிப்பட்ட நபர்கள் சிலர் உரிமை கோரி வருகின்றனர். இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதால், 11 வருடங்களாக நிர்வாகம் இயங்கவில்லை.

இருந்தபோதிலும் அதன் உரிமையாளர் என கூறப்படும் குருக்களே ஆலயத்தின் நிதி வளங்களையும் பூசை போன்றவற்றையும் தொடர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக அங்கு பூஜை செய்து வரும் குருக்கள் திடீரென நிறுத்தப்பட்டு வேறு ஒரு அர்ச்சகர் ஆலயத்தில் காலை பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடிய கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார், கொரோனா காலத்தில் ஆலயத்தில் இவ்வாறு ஒன்றுகூட முடியாது என கூறி உடனடியாக அனைவரையும் வெளியேற்றினர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/பூசகரை-மாற்றியதால்-பூதா/

 

அமைதியான ஓய்வு எடுக்குமிடம் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இலங்கை – இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிப்பு May 25, 2020 அன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.  இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதியளித்திருந்தார். அதன்போது கோத்தாபய ராஜபக்ஸ கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் ஏற்பட்டுள்ள அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருவதால், பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளும் முறையில், இந்தியா 8 ஆயிரத்து 360 கோடி ரூபா வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சார்க் மாநாட்டின்போது, இந்தியாவிடம் கேட்டிருந்த 3 ஆயிரத்து 40 கோடி ரூபாவுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கோத்தாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை கட்டுமான பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ மோடியிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை  #இந்தியா #அன்னியசெலாவணி #கோத்தாபய   http://globaltamilnews.net/2020/143627/  
    • யாழ்.இந்து திறன்பேசி  வசதியில்லாத O/L -A/L மாணவர்களுக்கு ரப்லெட் கணினி வழங்க நடவடிக்கை May 25, 2020   யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்),  திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத – வசதி குறைந்த மாணவர்களுக்கு ரப்லெட் கணினிகளை வழங்குவதற்கு கல்லூரியின் முதல்வர் இரட்ணம் செந்தில்மாறன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கல்லூரி முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் நிதி அனுசரணையில்,  ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான 60 ரப்லெட் கணினிகள் (வரைபட்டிகைகள் ) பாடசாலைக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கற்றல் நடவடிக்கைக்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன், கற்றல் காணொலிகள், செயலட்டைகள் மற்றும் மின் நூல்கள் என்பன பதிவேற்றப்பட்டு,  பொருளாதார நிலையில் பின் தங்கிய,   உயர்தர மற்றும் சாதரண தர மாணவர்களுக்கு இரவலாக வழங்கப்படவுள்ளதுடன், ரப்லெட் கணினிகளுக்குத் தேவையான இணைய இணைப்பு வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் கல்லூரியினால் செயற்படுத்தப்படும் நிகழ்நிலை(Online classes) வகுப்புக்களில் 100% மாணவர்கள் கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிப்படைந்த கல்லூரி மாணவர்களுக்கும், ஏனைய பல அயற் பாடசாலை மாணவர்களுக்கும் உலருணவுப் பொருட்களை வழங்கி முன்மாதிரியாகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  #யாழ்இந்து #திறன்பேசி  #பழையமாணவர்சங்கம்  #கொரோனா   http://globaltamilnews.net/2020/143618/
    • அல்லா தான் எல்லாவற்றுக்கும் மேலே என்பவர்கள் மூன்றாம் மாடியில் பிள்ளையார் கோவிலும் கீழே இரண்டாம் மாடியில் மசூதியும் இருப்பதை எப்படி பொறுத்து கொள்வார்களோ எதற்கும் நீங்கள் அவதானமாக போய்வாருங்கள்.😂