Sign in to follow this  
உடையார்

திடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்

Recommended Posts

திடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்

திடீரென எரிச்சல், கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள்

 

திடீரென உங்களுக்கு எரிச்சல், குழப்பம், கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* 7-9 மணி நேரம் தூக்கம் அவசியம் என மருத்துவ உலகம் அறிவுறுத்துகின்றது. தேவையான அளவு தூக்கம் கிடைக்காத பொழுது மேல் கூறிய பாதிப்புகள் எளிதில் ஏற்படும்.

 மறதி அதிகம் ஏற்படும்பொழுது அதிக எரிச்சல் ஏற்படும்.

* ஏதாவது வலி&மூட்டுவலி, முதுகு வலி என தொடர்ந்து இருக்கும்போது சிறு விஷயங்களும் ஒருவரை கோபப்படுத்தும்.

* மன உளைச்சல் உடையவர்கள் எப்போதும் குழப்பத்துடனே இருப்பர்.

* அதிக காபி, டீ, படபடப்பு & எரிச்சலை உண்டாக்கும்.

* நோய் பாதிப்பு, மாத விலக்கிற்கு ஓரிரு நாள் முன்னர் போன்றவைகள் ஒருவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.

* மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்கள் ஒருவித படபடப்பு, எரிச்சல், கோபத்துடன் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

* ‘டயட்டிங்’ என்ற பெயரில் முறையற்ற வகையில் பட்டினி கிடப்பது எரிச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும்.

* தைராய்டு சுரப்பி குறைபாடு, தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தாலும் படபடப்பு, வியர்த்தல், எரிச்சல் ஆகியவை இருக்கும்.

குறைபாட்டினை மருத்துவர் மூலம் சரி செய்து கொள்வது அவசியம்.

துளசி, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பூண்டு, புதினா இவற்றினை சமையலறை பக்கம் வைத்து தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக பயன்படுத்திக் கொள்வது நலம் பயக்கும்.

https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/05/22150641/1533365/Causes-of-sudden-irritation-and-anger.vpf

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்? லிண்டா கெட்டெஸ் பிபிசிக்காக Getty Images கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 24 மணி நேர காலத்தில் வெளிச்சம் மற்றும் இருட்டு என்ற உலக வாழ்க்கைக்கு மனிதர்களின் உடல் பழகி வளர்ந்துள்ளது. சூரிய வெளிச்சத்தைப் பொருத்து செயல்படும் வகையில் நமது உடல்கள் அமைந்துள்ளன. புற ஊதா கதிர்கள் நமது தோலில் படும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆவதை நல்ல உதாரணமாகக் கூறலாம். வைட்டமின் டி நமக்கு தினமும் கிடைப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுகின்றன. அது நமது நோய் எதிர்ப்பு செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நுரையீரல்களில் உள்ள பேருண்ணிகளுக்கு வைட்டமின் டி சக்தியைத் தருகிறது. இவை தான் சுவாச மண்டலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் முதல்வரிசை வீரர்களைப் போன்றவை. நுண்ணுயிர்களை எதிர்க்கக் கூடிய புரதத்தை உற்பத்தி செய்யும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அது நேரடியாகத் தாக்கிக் கொன்றுவிடும். B மற்றும் T செல்கள் போன்ற மற்ற நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளையும் அது ஊக்குவிக்கும். நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை காரணமாக இருக்கின்றன. வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு, சளிக்காய்ச்சல் என்ற மூச்சுக் குழாய்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். கோவிட்-19 நோயுடன் தொடர்புடைய தீவிர சிக்கல்களைக் குறைப்பதற்கு வைட்டமின் டி சத்துள்ள மருந்துகளைத் தரலாமா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். கோவிட் 19 நோய்த் தாக்குதலால் அதிகம் உயிரிழப்புகள் நிகழ்ந்த ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பியர்களுக்கு வைட்டமின் டி அளவு மிகக் குறைவாக இருந்தது என்று இந்த மாத ஆரம்பத்தில், டூப்ளின் டிரினிட்டி கல்லூரி முதுமையியல் நிபுணர் ரோஸ் கென்னியும், அந்தப் பெண்ணின் சகாக்களும் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  Pandemic என்றால் என்ன?  கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? முறையாக கை கழுவுதல் எப்படி?   சூரிய வெப்பமான காலத்தில், இது உணர்வுகளுக்குப் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். ஆனால், அதிக நேரத்தை வீட்டுக்குள்ளேயே செலவிடும் வாழ்க்கை முறைக்கு மாறி, இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சூரிய ஒளி படுவதைத் தடுக்கும் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துவதைப் பார்க்கும் போது, வைட்டமின் டி குறைவாக இருப்பதற்கு அவை காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நாடுகளில் கோவிட் - 19 பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், ``வைட்டமின் டி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவையும் காரணமாக இருந்திருக்கலாம் என்பதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் வலுவாக உள்ளன. குறிப்பாக தீவிர கோவிட் பாதிப்பு சூழ்நிலையில் இந்த காரணங்கள் கூறப்படுகின்றன'' என்று கென்னி கூறுகிறார்.  முதலில், முதலில் இன்டர்லெயுக்கின்-6 என்ற அழற்சியை ஏற்படுத்தும் உயிரிவேதிப் பொருளை வைட்டமின் டி குறைப்பதாகத் தெரிகிறது. இந்த அழற்சி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நுரையீரலில் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் நுழைந்து நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ACE2 உணர்பொறியின் தன்மையையும் வைட்டமின் டி மாற்றுகிறது. ஏற்கெனவே வைட்டமின் டி இந்த மாற்றத்தைச் செய்திருந்தால், கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து தொற்றிக் கொள்வது சிரமம் ஆகிவிடும். இந்தப் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வதற்கு, தன்னியல்பான, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இப்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தில் பெரியவர்கள் அனைவரும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது நல்லது என்று கென்னி கூறுகிறார். பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் நிறைய நேரத்தை வெளியில் செலவிட்டு அதிக வைட்டமின் டி பெற்றுக் கொள்வது வேறு பல நன்மைகளையும் கொண்டு வரும் என்றும் வலுவாகக் கூறப்படுகிறது. Getty Images உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் கோவிட்-19 தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதற்கு அறிவியல்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், சளிக் காய்ச்சல் மற்றும் சாதாரண சளி போன்ற மற்ற வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக நமது தற்காப்பை அது பலப்படுத்துகிறது என்பதற்கு பல்வேறு ஆய்வு முடிவுகள் உள்ளன. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இது உதவும் என்பதும் ஆய்வுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வனங்களில் சில நாட்களைக் கழித்தால், உடலில் இயல்பாக கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மன அழுத்தம் குறைவதுதான் இதற்குக் காரணம் என்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ``மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பலர் உடற்பயிற்சி செய்வது நமக்குத் தெரியும். அதிக மன அழுத்தம் இருப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நல்லது அல்ல என்பதும் மிகவும் தெளிவான விஷயம்'' என்று, நோய் எதிர்ப்பாற்றலில் உடற்பயிற்சியின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ரேஸ் பல்கலைக்கழக மாணவர் நெயில் வால்ஷ் கூறுகிறார். ``சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்றால், அது உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்கிறார் அவர். பூங்காவில், மரங்கள் சூழ்ந்த காட்டில் அல்லது பசுமைவெளியில் உடற்பயிற்சி செய்தால், மிகவும் நல்லது. இயற்கைவெளியில் செல்வது, நகர்ப்புற பூங்காவாக இருந்தாலும் சரி - இருதயத் துடிப்பு வேகம், ரத்த அழுத்தம் குறையும், மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறையும் என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இயற்கை சூழலுக்கு நெருக்கமாக, இயற்கையுடன் இணைந்து வாழ்வது இருதயக் கோளாறுகளை, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பைக் குறைக்கும், மரணத்தை தள்ளிப்போடும். அதிக உடற்பயிற்சி செய்வது மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றுடன், இவற்றுக்கு வேறு காரணங்களும் இருப்பதாக பல்வேறு கட்டுரைகள் கூறுகின்றன. வெளியில் செல்வதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், தனிமை உணர்வு குறைந்து, மன அழுத்தம் குறைய உதவிகரமாக இருக்கும் என்பது அவற்றில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. கவன மீட்பு தியரி என்ற காரணமும் குறிப்பிடப்படுகிறது. அதாவது இயற்கைக் காட்சிகள் மற்றும் எளிதாக நாம் செல்வதில் நமது கவனம் ஈர்க்கப்படுகிறது. அதிகம் உழைத்திருக்கும் நமது மூளை ஓய்வெடுக்க, மீட்சி பெற வாய்ப்பு கொடுப்பதாக இது அமைகிறது என விளக்கம் தரப்படுகிறது. இருந்தபோதிலும், நமது நோய் எதிர்ப்பு மண்டலங்களில் மரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. சில நாட்கள் காட்டுக்குள் இருந்தால், இயல்பாகவே கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நமது ரத்தத்தில் வைரஸ்கள் மற்றும் புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும் நோய் எதிர்ப்பு செல்களாக இவை உள்ளன.  Getty Images மரங்களில் இருந்து வெளியாகும் பைட்டான்சைட் என்ற பொருளை சுவாசிப்பதால் இது நிகழ்கிறது என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலுக்கு வெளியே இவற்றை வளர்த்து பரிசோதித்த போது, இயற்கையாக கிருமிகளை அழிக்கும் செல்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டது. சுவாசிப்பதாலும் இதே பலன் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டியுள்ளது. ``நடைமுறையில், இந்த வழிமுறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக நான் கருதுகிறேன்'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓப்பன்ஸ்பேஸ் ஆராய்ச்சி மையத்தின் டைரக்டராக உள்ள கேத்தரின் வார்டு தாம்ப்ஸன் கூறுகிறார். நகர்ப்புற பசுமைவெளிகள் மற்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை தயாரித்த குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.  ``பைட்டோன்சைட்கள் முக்கியமானவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பயன்களைப் பெறுவதற்கு நீங்கள் சில காலம் முழுமையாக இயற்கை சூழலில் மூழ்கியிருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவு போன்ற பயன்களை அப்போது எளிதில் பெற முடியும்'' என்று அவர் கூறுகிறார். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேலைக்குச் செல்லும்போது காலையில், பிரகாசமான ஒளியில் செல்வதால், இரவில் எளிதாகத் தூங்கிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியில் செல்வது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். வீடுகளுக்குள் நாம் முடங்கி இருந்த நேரம், நமது உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாட்டைப் பாதித்திருக்கும். இது 24 மணி நேர சுழற்சிக்கு ஏற்ப, தூக்கம் உள்ளிட்ட உயிரியல் இயக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தி பழகியிருக்கிறது. நாம் வெளியில் செல்லும் போது வெளிச்சத்தின் தன்மை, நமது கண்களின் பின்புறத்தில் இருக்கும் ஒளி-உணர்வு செல்களில் பதிவதன் மூலம், உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. கண்களின் பின்னால் உள்ள இந்த செல்கள் மூளையில், உடலின் மாஸ்டர் கடிகாரமாகச் செயல்படும் செல்களுடன் தொடர்பு கொள்கின்றன.  ``வீட்டுக்குள் இருக்கும் வெளிச்சம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயல்பாடு தூண்டப்படாது. எனவே வாரம் முழுக்க ஒருவர் வெளியில் செல்லாமல் இருந்தால், இந்த ஒருங்கமைவுகளில் இடையூறுகள் ஏற்பட்டு, தூக்கத்தில் கோளாறுகள் ஏற்படும்'' என்று நியூயார்க் ட்ராயில் உள்ள லைட்டிங் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியானா பிகுவெய்ரோ கூறுகிறார்.  Getty Images காலையில் அதிக வெளிச்சத்துக்கு ஆட்படும், அலுவலகம் செல்லும் அலுவலர்கள், நடந்து செல்லக் கூடியவர்கள், குறைவான வெளிச்சத்துக்கு ஆட்படுபவர்களைக் காட்டிலும் இரவில் நன்றாகத் தூங்குகிறார்கள், இடையூறான தூக்கத்துக்கான வாய்ப்பு குறைகிறது என்று அவருடைய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. (நமது தூக்கத்துக்கு இயற்கை வெளிச்சம் ஏன் முக்கியமானது என்பதை அறிய மேலும் படியுங்கள்) ``உடல் கடிகார செயல்பாட்டில் இடையூறு, தூக்கத்தில் கோளாறு ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தன்மையைக் குறைப்பதாக தொடர்புபடுத்தப் படுகிறது'' என்று பிகுவெய்ரோ கூறுகிறார். ``எனவே நோய் எதிர்ப்பாற்றலில் வெளிச்சத்துக்கு நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், உடல் கடிகாரம் மற்றும் நல்ல தூக்கம் போன்றவற்றை செம்மைப்படுத்தும் அம்சம் மூலமாக மறைமுகமான தாக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது'' என்று அவர் கூறுகிறார். காலையில் பிரகாசமான வெளிச்சத்துக்கு ஆட்படுவது மக்களின் மனநிலையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவிகரமாக உள்ளது. இந்தப் பயன்களைப் பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டும் என்று பார்த்தால், அதைச் சொல்வது கடினமான விஷயமாக இருக்கும். நமது உடல் கடிகாரத்தை ஒருங்கமைவு செய்த நிலையில் வைத்திருப்பதற்கு, காலைநேர வெளிச்சம் முக்கியமானது என்றாலும், சூரிய வெளிச்சத்தில் அதிகபட்ச புறஊதா கதிர்கள் இருக்கும் மதிய நேரத்தில் தான் அதிகபட்ச வைட்டமின் டி உற்பத்தி நடக்கிறது. எனவே முடக்கநிலை கட்டுப்பாடுகளில் தளர்வு கிடைத்து, வாய்ப்பு கிடைத்தால், தினமும் ஒரு முறையாவது வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். சமூக இடைவெளி பராமரித்தலிலும், சூரிய வெப்பத்தால் கொப்புளம் ஏற்படாமலும் கவனமாக இருக்க வேண்டும். சூரிய வெளிச்சமும் இயற்கையும் தான் அற்புதமான ஹீலர்கள். அவை இலவசமாகக் கிடைக்கின்றன.   https://www.bbc.com/tamil/science-52791204
    • இந்தியாவை கையாளல் - யதீந்திரா முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது கொரோனாவின் விளைவு. வீடுகளில் இருந்தவாறே பலரும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளக் கூடியதாக இருந்ததால், அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒரு சில கலந்துரையாடல்களை செவிமடுக்க முடிந்தது. அதில் ஒன்று – தமிழர் உரிமைச் செயலரங்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையடல். இதில் இளம் தமிழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், இந்தியாவும் ஈழத் தமிழரின் விடுதலையும் (கள நிலைமை கருதி தலைப்பில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்னும் தலைப்பில் உரையாற்றிருந்தார். அவரது உரையின் சாரம்சம் இந்திய அரசின் ஆதரவை ஈழத் தமிழர்கள் பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அங்குள்ள அனைத்து தரப்பினருடனும் ஈழத் தமிழர்கள் உறவில் இருக்க வேண்டும். அங்குள்ள கட்சி வேறுபாடுகள், கட்சிப் பிரச்சினைகள் எதற்குள்ளும் ஈழத் தமிழர்கள் செல்லக் கூடாது. இது ஒரு முக்கிய உபாயமாக கைக்கொள்ளப்பட வேண்டும் – பொதுவாக தமிழ் நாட்டில் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்போர், எப்போதும் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதையே வழமையாகக் கொண்டிருக்கின்றனர். அதனோடு ஒப்பிட்டால் செந்தில்குமாரின் பார்வை யதார்த்தமான ஒன்றாக இருந்தது. இவ்வாறான கருத்தை நான் பல வருடங்களாக குறிப்பிட்டு வருகின்றேன். இந்தியா தொடர்பான பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அதனை இப்போது, ஒரு தமிழ் நாட்டைச் சேர்ந்தவரின் வாயிலாக கேட்பது மகிழ்சியளிக்கின்றது. ‘இந்தியாவை எதிர்த்தல்’ என்பது புலம்பெயர் சூழலில் உள்ள பலரிடம் இருக்கும் ஒரு மனேபாவம். இதற்கு அவர்களின் வாழ்நிலையும் ஒரு காரணம். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் – தெற்காசிய பிராந்தியத்திலிருந்தே வெளியேறிவிட்ட உணர்வை பெற்றுவிடுகின்றனர். இதனால் அவர்களால் இலகுவாக இந்திய எதிர்புணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொள்ள முடிகின்றது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட தமிழ் அரசியல் தரப்பினர் மத்தியில் ‘றோ’ எதிர்ப்பு என்பது தீவிரமாக இருக்கின்றது. வடக்கிலும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியிலும் ‘றோ எதிர்ப்பாளர்கள்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நிலையாகும் – மேலும் இவ்வாறு பேசுகின்ற போது தாங்கள் அறிவுபூர்வமாக பேசுவதாகவும் சிலர் எண்ணிக் கொள்ளக் கூடும். எனக்குத் தெரிந்த ஒருவரின் கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம். அதனை இங்கு பதிவு செய்கின்றேன். அவர் இப்போது ஒரு புலம்பெயர் செயற்பாட்டாளர் ஆனால் அவர் உண்மையில் புலம்பெயர் செயற்பாட்டாளர் அல்ல. அவர் கொழும்பில் நிலைகொண்டிருந்த ஒரு சர்வதேச அரசுசாரா நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் கொழும்பில் இருக்கின்ற போது, விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒரு போதுமே ஆதரவாகப் பேசியதுமில்லை. மேற்குலகின் ஊடாக அறிமுகமான முரண்பாட்டுத் தீர்வு தொடர்பில் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். 2009இற்கு பின்னர் மேற்படிப்பிற்கான வாய்ப்பு ஒன்றை பெற்று ஜரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் அவர் திடிரென்று என்னுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டார். அப்போது நான் எங்களுடைய பக்கத்திலுள்ள தவறுகள் தொடர்பில் எழுதிக் கொண்டிருந்தேன். அவரது எழுத்துக்களை பார்த்தேன் – அவரது புலம்பெயர் புதிய நட்புக்கள் அவரை அதிகம் மாற்றியிருக்கவேண்டும். அவர் கொழும்பிலிருக்கும் போது இந்தியா தொடர்பில் பேசியதற்கும் – புலம்பெயர் நட்புவட்டங்களுக்குள் சென்ற பின்னர் இந்தியா தொடர்பில் பேசியதற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாட்டை காண முடிந்தது. இங்கு ஒரு குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினர் பற்றியே குறிப்பிடப்படுகின்றது. இந்தியா ஒரு உடனடி அயல்நாடு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யும். அது தெற்காசிய பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். அந்த வகையில் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி. ஒரு விடயம் தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொண்டால் அதன் பின்னர் அதனை எதிர்த்து நிற்றல் என்பதற்கு பொருள் இல்லை. அதன் பின்னரும் அதனை எதிர்ப்பது என்பது, அதனுடன் மோதல் நிலையை கடைப்பிடிப்பதாகும். விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு பாதையைத்தான் தெரிவு செய்தனர். அந்தப் பாதை வெற்றியளிக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் அமைப்பை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு கருத்துண்டு. அது உண்மை. ஆனால் இந்தியாவிடம் அதனை எதிர்பாக்கக் கூடிய தார்மீக பொறுப்பு தமிழர்களிடம் இருந்ததா என்னும் கேள்வியை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது. அதே போன்று இறுதி யுத்தத்தின் திசைவழியை மாற்றியமைக்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான் என்பதில் ராஜபக்ச தலைமையிலான கொழும்பும் தெளிவாகவே இருந்தது. ‘கோட்டாவின் யுத்தம்’ – என்னும் நூலில் இந்த விடயம் துலக்கமாக விபரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் கொழும்பிடம் இருந்தது போன்றதொரு தெளிவு தமிழர் பக்கத்தில் இருக்கவில்லை. சிலரிடம் இருந்தது ஆனால் அவர்களது பேச்சுக்கள் தமிழர் சபையேறவில்லை. இந்தியாவை கையாளுதல் என்னும் தலைப்பில் நீண்டகாலமாகவே நாம் பேசி வருகின்றோம். ஆனாலும் இதில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. உண்மையில் முன்னேற்றங்களை நோக்கி இந்த விடயத்தை தள்ளுகின்ற ஆற்றலுடன் தமிழ் தலைமைகள் என்போர் செயற்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் புதுடில்லியுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய ஆளுமையை கூட்டமைப்பு வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுடனான தொடர்பு என்பதை கூட்டமைப்பு வெறுமனே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தோடு மட்டுப்படுத்தியிருந்தது. அத்துடன் 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில், இந்தியாவிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றோம் என்பதில் கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு இருந்திருக்கவில்லை. இரண்டு, இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல சிந்தனைக் கூடங்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் தமிழர் தரப்பிற்கு தொடர்புகள் இல்லை. அதனை ஏற்படுதிக் கொள்வதற்கு தமிழர் தரப்பு முயற்சிக்கவும் இல்லை. மூன்று, இந்தியாவின் நலன்கள் தொடர்பான விடயங்களில் தமிழர் தரப்பு எப்போதுமே தங்களை உள்ளடக்குவதில்லை. உதாரணமாக இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பில் பிரதான தமிழ் கட்சிகள் ஒரு வார்த்தையேனும் இதுவரை பேசியதில்லை. இந்தியாவில் தமிழர்கள் வாழ்கின்றனர் எனவே தமிழர்களின் நலன்களில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும், என்னும் பார்வையே பெரும்பாலான தமிழ் தரப்புக்களிடம் உண்டு. ஆனால் இந்தியாவில் தமிழ் நாடு ஒரு அங்கம் மட்டுமே! இந்த விடயங்களில் தமிழர் தரப்புக்கள் தொடர்ந்தும் பின்தங்கியே இருக்கின்றன. இதில் முன்நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளிலும் தமிழர் தரப்பு ஈடுபடவில்லை. இது தொடர்பில் ஒரு வித தயக்கமே காணப்படுகின்றது. இந்தியாவுடனான உரையாடல் என்பது இந்திய அரசு தொடர்பானது மட்டுமல்ல. அங்குள்ள புத்திஜீவிகளுடன் பேசுதல், சிந்தனைக் கூடங்களுடன் உரையாடுதல், ஊடங்களுடன் தொடர்புகளை பேணுதல், இந்திய நலனை முன்னிறுத்தி செயலாற்றும் அமைப்புக்களுடன் உரையாடுதல் என – பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியது. இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றேன். தமிழ் நாட்டில் தங்கியிருந்து கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவரும் நண்பர் ஒருவரிடம், ஒரு முறை இது பற்றிக் கேட்டேன். பேராசிரியர் சூரிய நாரயணின் பெயரை குறிப்பிட்டு அவரைப் போன்றவர்களுடன் நீங்கள் பேசுவதில்லையா என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் கூறிய பதில் – நான் பேசச் செல்வதில்லை. அதெல்லாம் சிக்கல். இதுதான் தமிழர் தரப்பின் பிரச்சினை – இந்தியாவை எங்களுடைய நலன்களிலிருந்து அணுகவும் வேண்டும் ஆனால் எவருடனும் பேசவும் மாட்டோம். அவ்வாறாயின் தமிழரின் எண்ணங்களை எவ்வாறு இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வது? தமிழர் தரப்பு ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை நோக்கி நாம்தான் பயணிக்க வேண்டுமேயன்றி இந்தியா நம்மை நோக்கி வராது. பிராந்திய சக்தியான இந்தியா தனது நலன்களை வெற்றி கொள்வதற்கு குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை வரையறை செய்து பயணிக்கும். குறுகிய காலத்தில் எவரை கையாள வேண்டும் – நீண்டகால நோக்கில் எவரை கையாள வேண்டும் என்பதில் அவர்களிடம் ஒரு தெளிவான வரைபடம் இருக்கும். இந்த வரைபடத்தை வெளியிலிருந்து எவரும் மாற்ற முடியாது. ஆனால் அந்த வரைபடத்தை நாம் தெளிவாக புரிந்து கொண்டால், அதில் நமக்கு சாதகமாக இருக்கக் கூடிய விடயங்களின் ஊடாக இந்தியாவை நெருங்கலாம். இந்தியாவை எதிர்த்து பேசுவதால் இந்தியாவிற்கு எந்தவொரு தீமையும் இல்லை – மாறாக அது தமிழர்களுக்கே தீங்கை கொண்டுவரும். இந்தப் பிராந்தியத்தை பொருத்தவரையில், உலகளவில் இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கப் போகின்றது. குறிப்பாக கொரோனாவிற்கு பின்னரான உலக அரசியல் போக்கில் சீனாவிற்கு எதிரான சிந்தனை வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக, இந்தியாவை நோக்கி அனைவரது பார்வையும் திரும்பலாம். இதனால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவம் மேலும் வலுவடையும். இவ்வாறானதொரு சூழலில் தமிழர் தரப்புக்கள் இந்தியாவின் நலன்களை விளங்கிக் கொண்டு பயணிக்கும் பொறிமுறை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.   http://www.samakalam.com/blog/இந்தியாவை-கையாளல்/
    • சீனாவுக்கு பிரதமரும் இந்தியாவுக்கு ஜனாதிபதியும் போய் நின்று கொண்டு டிராகனுக்கு வாலையும் சிங்கத்துக்கு தலையையும் காட்டிக்கொண்டு சமயத்துக்கு தக்கவாறு பணம் கறந்து கொண்டிருப்பார்கள்.......!   🤔 
    • இலங்கை – இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிப்பு May 25, 2020 அன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.  இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதியளித்திருந்தார். அதன்போது கோத்தாபய ராஜபக்ஸ கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் ஏற்பட்டுள்ள அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருவதால், பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளும் முறையில், இந்தியா 8 ஆயிரத்து 360 கோடி ரூபா வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சார்க் மாநாட்டின்போது, இந்தியாவிடம் கேட்டிருந்த 3 ஆயிரத்து 40 கோடி ரூபாவுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கோத்தாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை கட்டுமான பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ மோடியிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை  #இந்தியா #அன்னியசெலாவணி #கோத்தாபய   http://globaltamilnews.net/2020/143627/