Sign in to follow this  
உடையார்

கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா?

Recommended Posts

கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா?

  • ரொரன்ரோவிலிருந்து குரு அரவிந்தன்

World-Corona-2.jpgரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வயதான தாதி ஒருவர் கண்ணாடி போன்ற கவச ஆடைக்குள்ளால் தெரியக்கூடியதாக உள்ளாடை மட்டும் அணிந்து சேவை செய்ததால், யாரோ அதைப்புகைப்படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். கடமையின்போது, தாதிகளுக்கான உடை அவர் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகின்றது. ஆண்கள் மட்டுமே உள்ள வாட்டில் அவர் பணியாற்றியாலும், நோயாளர் யாரும் அதை ஒரு குறையாக எடுத்து மேலிடத்திற்கு முறைப்பாடு செய்யவில்லை.

ஒன்ராறியோ முதல்வரின் பரிந்துரையின் படி வாகனங்களுக்கும் கூடிய இடைவெளி தேவை என்பதையும் குடும்ப அங்கத்தவர் தவிர வேறுயாரும் ஒரே வாகனத்தில் பயணிக்க்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்குக் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும். இதுவரை உள்ள அவசர உத்தரவுகளும், அனைத்து கட்டுப்பாடுகளும் மே மாதம் 29 ஆம் திகதிவரை தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவில் இதுவரை 24,187 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,993 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 18,580 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 577,682 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் ஆண்களைவிட (42.5 வீதம்,) பெண்கள்தான் அதிகம் (56.8 வீதம்) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கனடாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. சுமார் 33,000 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் சுமார் 500 வரையிலான தொற்று நோயாளர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் அவசர உதவிக்காகச் சென்று பணியாற்றிய படையினரில் 28 படையினர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். முதற்குடி மக்களுக்குக் கொரோனா தொற்று பாதுகாப்பிகாக மேலதிகமாக 75 மில்லியன் டொலர் ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் பாதிப்பு இரண்டாவது சுற்று வருமேயானால் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கனடியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் அறிவித்திருக்கின்றார். உலக நாடுகள் பொருளாதார நன்மை கருதி சில கட்டுப்பாடுகள் தளர்த்தியது போலவே, கனடாவும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கின்றது.

நிலைமையையைப் பார்த்து கட்டம் கட்டமாக இவை நடைமுறைப்படுத்தப்படும். கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக (21-5-2020) இதுவரை 81,324 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சென்ற வாரத்தைவிட 10,000 பேர் வரையில் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கியூபெக்கில் 45,495 பேரும், ஒன்ராறியோவில் 24,187 பேரும், அல்பேர்டாவில் 6,768 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,479 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் சிறு தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய் தொற்றுக் காரணமாக இதுவரை 6,152 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 36,091 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 1,379,655 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அதிக அளவிலான மக்களுக்கு, அதாவது 1 கோடியே 26 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று உள்ளவர்களை அதிக அளவில் கண்டுபிடிக்க முடிந்தது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். தொழில் நுட்பவல்லுனர்களின் சேவையைப் பாராட்டிய அவர், இது பெருமைப்பட வேண்டிய விடயம்தான் என்று மேலும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 1,584,700 பேர் இதுவரை, (21-05-2020) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 94,717 பேர் மரணமாகி இருக்கிறார்கள். தனிப்பட்ட வீடுகளில் மரணமானவர்களின் தொகை இதில் இடம் பெறவில்லை. மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு நியூஜோர்க்கிலும், நியூஜேர்சியிலும் இடம் பெற்றிருக்கின்றன. 28,663 பேர் நியூயோர்க்கிலும், இதற்கு அடுத்ததாக நியூஜேர்சியில் 10,843 பேரும் மரணித்திருக்கிறார்கள். முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி இருக்கின்றது. இங்கே பல முதியவர்களும், உதவியாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 30,000 மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 44,000 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 462 பேர் மரணமாகி இருக்கிறார்கள்.

21-05-2020 வரை உலகத்தில் மொத்தமாக 5,075,181 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 1,620,902 ஸ்பெயின் 280,117 ரஸ்யா 317,554 இங்கிலாந்து 250,908 இத்தாலி 228,006 பிறேசில் 310,921 பிரான்ஸ் 181,826 ஜெர்மனி 179,021 துருக்கி 153,548 ஈரான் 129,341, இந்தியா 118, 501, பெரு 108,769 ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பிரேஸிலில் ஓரு வாரத்தில் சுமார் ஒரு லட்சத்திகும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவும், பெருவும் ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறார்கள். சீனா 82,971 பேருடன் கணக்கை நிறுத்திக் கொண்டது. இந்தியா சென்ற வாரம் 78,810 ஆக இருந்தது இன்று 118,501 ஆகி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாகலாம். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 334,622 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 2,081,511 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கோடை முடிந்து குளிர் காலம் வரும்போது இரண்டாவது சுற்று கொரோனா வைரஸின் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கிடையில் இதற்கான மருந்துகள் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவோம்.

http://thinakkural.lk/article/42985

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த ராணுவ நடவடிக்கையில் என்னுடன் சிறு வயது முதல்  விளையாடிய, தெரிந்த பலரை இழந்துள்ளேன். ஒரு பனையை  சுற்றி சுற்றி ஹெலி அடிக்க, அருகில் இருந்த சேற்று கிடங்குக்குள் விழுந்து எங்களை காப்பாற்றினோம். இருந்தும் தரையால் வந்த ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்தோம். (எனது ஹம்பர் சைக்கிள் கவச வாகன செயினுக்குள் அகப்பட்டு கிழிந்த இரும்பு தகடானது). ஒவ்வொருவருள்ளும் ஒரு நீண்ட கதை. எனது பாடசாலை வகுப்பு நண்பர் நெல்லியடி முகாமுக்குள் லொறியுடன் சென்று தாக்கியதன் மூலம் ஓரளவு  நீதி கிடைத்தது. உயிர் நீர்த்த போராளிகள், பொது மக்கள், எனது விளையாட்டு கழக நண்பர்கள், அனைவருக்கும் வீர வணக்கங்கள் 
    • எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய பிரதமர் மோடி   இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5-ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.   பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.   தற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/05/26185055/1554210/prime-minister-modi-meets-with-national-security-advisor.vpf
    • பையன் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமக்கு விருப்பமான கட்சிக்களுக்கு ஆதரவு அளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் திராவிட திருடன், திராவிட சொம்பு என்று கூறும் நீ்ங்கள் அடுத்தவர் நாட்டின் அரிசியலில் தலையிடும் சீமானின் சொம்பு என்று கூறலாம் தானே.  அவர்கள் தமது நாட்டு அரசியலை சட்டபூர்வமாக செய்யும் போது பக்கத்து நாடான எமக்கு அவர்கள் அரசியலில் தலையிட என்ன உரிமை உள்ளது. அது அவர்களின் அரசியல்.  என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும்  நான் மரியாதையுடன் பார்க்கிறேன். ஆனால் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன்.  எமது ஈழ தமிழர் பிரச்சனைக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எமக்கு எதையும் சீமானால் படுங்க முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். ஆனால் அவர் ஈழத்த்தை வைத்து அரசியல் செய்வது வெறும்  அரசியல் விளையாட்டு. தமிழகத்தில் திமுக. அதிமுக என்று பிரிந்த பின்னர் திமுக வுக்கு எதிராக எம்ஜியாரின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதற்காக அவர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டு தான் இந்த திமுக வுக்கு எதிரான பிரச்சாரம். ஜெயல்லிதா இல்லாத நிலையில்  திமுகவுக்கு எதிரான வாக்குகளை இழுத்து பதவிக்கு வரலாம் என்று அவர் கனவு காண்கின்றார். அவ்வளவு தான். . அதனால் தான் ஜெயல‍லிதாவின் இறப்புக்கு பின்னர் அவர் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். செத்து போன கருணாநிதியை எப்போதும் வசைபாடும் அவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தூக்கில்  போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அப்போது சபாநாயகராக இருந்து வாக்கெடுப்பு நடத்தி  நிறைவேற்றிய அவரது மாமனார்  காளிமுத்துவை பற்றி வாயே திறப்பதில்லை. ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன.   
    • 'வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 33வது ஆண்டு நினைவுகள். 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி.  பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த  புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது.  மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல்  கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25  இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முகாமில் வடமராட்சியில் உள்ள போராளிகளுக்கு கூட்டம் ஒன்றை நடத்தினார்.  அந்தக் கூட்டம் நடு இரவு 1. 30 மணி வரை நீடித்தது அந்தக் கூட்டத்தில் யாழ்குடா நாட்டில் எதிரிகளின் தாக்குதல் திட்டம் பற்றியும் அதை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தேசிய தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் தான் முதன்முறையாக தலைவர் அவர்கள் போராளிகளுக்கு  பதவிநிலைக்கான பெயர்களை வழங்கினார். வழக்கமாக அதுவரை வீரச்சாவிற்கு பின்பே போராளிகளுக்கு பதவியின் பெயர்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மே 26 காலை கூட்டம் முடிந்து போராளிகள் முகாமுக்கு திரும்பினர்.   அன்று காலை 4. 30  பலாலியில் இருந்து 5க்கும் மேற்பட்ட உலங்குவானூர்திகள் வல்லை வெளியூடாக தாழப்பறந்து, முள்ளி, முள்ளியான், மண்டான் பகுதிகளில் தரையிறக்கப்பட்டு ராணுவ நிலைகளை பலப்படுத்தினர்.  அதன் தொடர்ச்சியாக வான் பரப்பு பகுதிகளில் உலங்குவானூர்திகள் பல மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன. மே 26  மணல் காட்டு கடல் பகுதியூடாக சிங்கள கடற்படையினர், வல்லிபுர கோவில் பகுதியில் பெருமளவு ராணுவத்தினரை தரை இறங்கினர். மே 26 காலை 5.30 உடுப்பிட்டி யூனியனுக்கு முன் அமைந்த புலிகளின் அந்த பிரதான மெயின்  முகாமில் போராளிகள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன்(50 Caliber ) தயாராகிக் கொண்டிருந்த வேளை, குண்டுவீச்சு விமானம்  புலிகளின் அந்த பிரதான மெயின் முகாமை தாக்கியது இதில் வீமன், ரம்போ சிவா, செட்டி, நாகேந்திரன் உட்பட சில போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். வடமராட்சி தொண்டமனாறு இராணுவ முகாம், பலாலி ராணுவ முகாமுடன் நேரடி தொடர்பில் இருந்தது. வல்வெட்டித்துறை இராணுவ முகாம், மற்றும் பருத்தித்துறை இராணுவ முகாமிலிருந்து   மணல்காடு, முள்ளி, முள்ளியான், மண்டானில் இறக்கப்பட்ட ராணுவம் மூலமாக வடமராட்சி பகுதி ராணுவத்தால் முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டது. மே 26 அதிகாலை 6.30 மணி. தொண்டமனாறு மெயின் முகாம் பொறுப்பாளர் கப்டன் அலன், மற்றும் நரேஷ். இருவரும் அதிகாலையில்   வல்லை வெளியில் ராணுவம் தரை இறங்கி உள்ளதா என கண்டறிய துவிச்சக்கரவண்டியில் சென்று பார்க்கின்றனர். பார்த்துவிட்டு இரண்டாவது பொறுப்பாளரிடம் வாக்கியில் இங்கு ஆமி இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். மறு முனையில் உள்ள இரண்டாவது பொறுப்பாளர் ராணுவம், கிரேசர், காட்டு வைரவர் பகுதியில் பதுங்கியிருப்பதாக அவர்களிடம் தகவல் சொல்கிறார்.  இருவரும் துவிச்சக்கரவண்டியில் மீண்டும் தொண்டமனாறு பகுதிக்கு திரும்பும் வேளையில் அப்பகுதியில் ராணுவத்தினர் பதுங்கி இருப்பதை  அவர்கள் இருவரும் அறியவில்லை. துவிச்சக்கரவண்டியில்  தொண்டமனாறு பகுதிக்கு வரும் அவர்களை ராணுவத்தினர்  மறைந்திருந்து தாக்குகின்றனர். இந்த இராணுவத்தினருடனான நேரடி சமரில் கப்டன் அலன் மற்றும் நரேஷ் இருவரும் வீரச்சாவை தழுவிக் கொள்கின்றனர். இந்த தாக்குதல் மூலமாக ஒப்பரேஷன் லிபரேஷன் முதல் சண்டை ஆரம்பிக்கின்றது. இந்த சமநேரத்தில் ராணுவம், கடற்படை, விமானப் படையினர் தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, முகாமிலிருந்து புலிகளின் காவல் அரணை நோக்கி பாரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பாரிய தாக்குதலில் இரு பகுதியினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த  ராணுவத் தாக்குதலின் உக்கிரத்தால் புலிகள் தொண்டமனாறு, மயிலியதனை வல்வெட்டிதுறை நிலைகளில் இருந்து பின்வாங்கி உடுப்பிட்டி பகுதிக்கு செல்கின்றனர். இவ்வேளையில் உலங்கு வானூர்தி மூலம் மக்களுக்கு ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசுகிறது. தாக்குதல் தொடங்குவதை அந்த பிரசுரங்கள் மூலம் அறிவித்த ராணுவம், மக்களை கோயில்கள்,  பள்ளிக் கூடங்களில் தஞ்சமடையும் படி அறிவுறுத்துகிறது. மே 26 மாலை 6 மணி வரை சண்டை நடைபெறுகிறது.  பருத்தித்துறை முகாம் ராணுவத்தால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. மே 26 மாலை 6 மணியுடன் சண்டை ஓய்கிறது. ஆனாலும் இரவு முழுவதும் கடல் விமானம் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் எல்லாம் தாக்கப்படுகின்றன. வல்வெட்டித்துறை முகாம் உடன் தொண்டமனாறு முகாமுக்கு தரை மூலமாக முன்னேறிய போது வல்வெட்டித்துறை ராணுவத்தினரின் எறிகணை வீச்சில், வேம்படியில் லெப்டினன் யூசி வீரச்சாவை தழுவிக் கொண்டார். மே 27 அதிகாலை 6 மணி இரண்டாம் நாள் சண்டை ஆரம்பமாகியது. வடமராட்சி சுற்றியுள்ள ராணுவ முகாம்களில் இருந்து ராணுவம் ஊர் பகுதிக்குள் முன்னேறுவதற்காக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவம் கம்பர்மலை, விறாச்சிக்குளம்  ஊடாக வேதக்கார சுடலை ஊடாக பாரிய தாக்குதலை மேற்கொண்டு உடுப்பிட்டி வல்வெட்டித்துறை பிரதான சாலையை ஊடறுத்து சண்டையை மேற்கொண்டது.  இதில் நம்மாள் தலைமையில் ராணுவத்தினருடன் பாரிய சமர் நடைபெற்றது. இதில் போராளிகள் ஜேபி, குண்டு பாலன், கடாபி, பரமு, குட்டி ஆகியோர் சிறுசிறு அணிகளாக முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்த வேளையில், உடுப்பிட்டி பத்தர் ஒழுங்கையில்  நிலை கொண்டிருந்த மோட்டார் படையணியின் தாக்குதலில் ராணுவம் பாரிய இழப்பை இரண்டாம் நாளில் சந்தித்தது. இரண்டாம் நாளில் நடைபெற்ற இந்த சமரில்  தக்சன், கஜன் என இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர்.  மேலும் பலர் படுகாயமடைந்தனர். பின்னர் படையணி பின்னோக்கி உடுப்பிட்டி யூனியன், இலந்தை காடு, வெள்ளரோட்டு பகுதியில் நிலைகளை அமைத்தனர். சமகாலத்தில் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதிகளை ராணுவம் கைப்பற்றினர். இத்துடன் இரண்டாம் நாள் சண்டை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் இரவு முழுவதும் ராணுவம் மக்கள் மத்தியில்  Y12  விமானம் மூலம் நேபாம் குண்டு வீச்சு  தாக்குதலிலும்,  பீப்பாய் மலக்கழிவு தாக்குதலிலும், எறிகணைத் தாக்குதலிலும்  ஈடுபடுகிறது. மே 28 காலை  மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறது.  புறா பொறுக்கி வெள்ளை ரோட்டில், இலந்தைக்காட்டில் பாரிய சண்டை நடைபெறுகிறது. இச்சண்டையில் புலிகள் பின்வாங்கி இரும்பு மதவடியில் நிலைகளை அமைத்து பலப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். இத்தருணத்தில் பெண்புலிகள் கவிதா, மாலதி தலைமையில் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சண்டையில் இணைக்கப்படுகின்றனர். மே 29 நெல்லியடிக்கு அருகாமையில் உள்ள இரும்பு மதகு அடியில் காலை மீண்டும் தாக்குதல் ஆரம்பிக்கிறது. இதனுடன் உலங்குவானூர்தி குண்டுவீச்சு விமானங்கள் சகிதம்  முன்னேறி வரும் ராணுவத்தினருடன்  புலிகளின் பாரிய மோதல் நடைபெறுகிறது. இத்தாக்குதல் முனையில் மட்டும் 2500 இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் மொத்தமே ஐம்பது  போராளிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாலி தயாரிப்பான  சியாமா செட்டி விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் மேல் பலத்த தாக்குதலில் ஈடுபட்டது. இச்சண்டையில்  புலிகளும் இராணுவத்தினரும் மிக அருகாமையில் இருந்து பலமாக மோதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலே பெண்புலிகள் நேரடி மோதலில் ஈடுபட்ட முதல் தாக்குதல். உலகிலேயே பெண்கள் மரபுவழி மோதலில் ஈடுபட்டதும் இந்த தாக்குதலே என்ற வீரமிகு பெருமை கொண்டது ஆகும். சண்டை அன்று இரவு வரை நீடித்தது. இத்தாக்குதலின் போது நெல்லியடி மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த சுக்லா, நிரூபன் அணியினர் வழங்கள் பணிகளிலும், காயப்பட்ட போராளிகளை நகர்த்துதல் பணிகளிலும் ஈடுபட்டனர்.   மே 30 காலை மீண்டும் சிங்களப் படையின் தாக்குதல் தொடங்கியது. விமான, உலங்குவானூர்தி தாக்குதல், மோட்டார் தாக்குதலுடன், நெல்லியடி மாலுசந்தி, மந்திகை ஆகிய இடங்களில் பாரிய தாக்குதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று வடமராட்சி ராணுவத்தினரின் கைகளில் முற்றுமுழுதாக வந்தது. இதனுடன் புலிகள் ஆனைவிழுந்தான் கண்டல் பகுதியூடாக தென் மராட்சி கொடிகாமம் மிருசுவில் பகுதிகளுக்கு  பின்வாங்கி நிலை எடுத்துக் கொண்டனர். 'வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்' 1987 மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 5நாட்களாக தொடர்ந்து இடம் பெற்றது.இந்தப் போரில் 817 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 15000க்கும் மேற்பட்ட மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகள் ஆக்கப்பட்டனர். பிரித்தானியர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்தபின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட முதல் மரபுப்போராக இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது.இந்தப் பாரிய இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ, கேர்ணல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் பல்வேறு படையணிகளில் (பற்றாலியன்கள்)இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 8000 படையினரைக் கொண்ட இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் இதற்கான அரசியல் தலைமைத்துவத்தையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். சிறிலங்கா அரசின் கூட்டுப்படை நடவடிக்கைகளில் முதற்கட்டமாக எந்தவிதமான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்காத அப்பாவித் தமிழ் மக்களை சொந்த வீடுகளில் இருந்து விரட்டி அடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றும் ஒரு இனவாத நடவடிக்கையாக இது அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பலாலி கூட்டுப்படைத் தளத்தில் இருந்து வெளிவந்த இராணுவம் வசாவிளான்,குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர்.இந்த இராணுவநடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்தனர்.இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டன. தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள உடுப்பிட்டி, பொலிகண்டி ஆகிய கிராமங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதே அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியின் இலக்காகவும் இருந்தது.இந்தப் படை நடவடிக்கையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த மேஜர் கோத்தபய ராஜபக்ச,மேஜர் சரத்பொன்சேகா, பிரிகேடியர் ஜி.எச்.டி. சில்வா,லெப்டினன்ட் நார்த் விக்கிரமரத்ன போன்ற முக்கியமான இராணுவ உயர் அதிகாரிகள் இத்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர். விமானம்,தரைவழி, மற்றும் கடல்வழித் தாக்குதல்கள் என மும்முனைகளிலும் படையினர் முன்னேறிச் சென்றனர். படையினர் வெறி கொண்டவர்களாக முன்னேறிச் சென்ற வழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களையும் கைது செய்து கப்பலில் ஏற்றி புதிதாக இதற்காக திறக்கப்பட்ட பூசா தடுப்பு முகாமுக்கு ஏற்றிச் சென்றனர். அங்கே கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதுவரையில் திரும்பவேயில்லை. அதேவேளை போகும் வழியெங்கும் ஆண்கள் பெண்கள்,குழந்தைகள் என்ற வேறுபாடுகள் இன்றி சுட்டும் எரித்தும் படுகொலைகள் செய்து கொண்டே சென்றனர். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வதிரி, புற்றளை,அல்வாய் போன்ற கிராமங்களில் சில வீடுகளிலும், ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தங்கி இருந்தனர்.இவ்வாறு ஆலயங்களில் தங்கியிருந்தவர்களை அடையாளம் கண்ட நிலையில் அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலை நோக்கி பலாலி இராணுவ முகாமில் இருந்து  அடுத்தடுத்து ஏவப்பட்ட எறிகணைகள் விழுந்து வெடித்ததால் ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த சுமார் 200பேர்கள் வரையான தமிழர்கள் உடல் சிதறிப் பலியாகினர்.வடமராட்சி எங்கும் மேற்கொள்ளப்பட்ட ' ஒப்பரேசன் லிபரேசன்' தாக்குதலில் 850பேர்கள் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தமது குடியிருப்புக்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். வடமராட்சி லிபரேசன் நடவடிக்கைத் தாக்குதலின் இலக்காக இருந்த வடமராட்சியில் முழுப்பிரதேசமும் படையினரின் கட்டுப் நாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.அதனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசபடையினர் வடமராட்சியின் முக்கிய பிரதேசங்களான  தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி,நெல்லியடி பருத்தித்துறை, மந்திகை ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒவ்வொரு இடங்களிலும் சிறு சிறு முகாம்களை அமைத்தனர்.வடமராட்சியின் முக்கிய தளமாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் 1500 இராணுவத்தினரைக் கொண்ட பாரிய முகாம் அமைக்கப்பட்டு  வெற்றிவிழா கொண்டாடினார்கள். அதேவேளை இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து தெருக்களில் மனிதர்ளின் உடல்களோடு நூற்றுக் கணக்கான ஆடுகள்,மாடுகள், நாய்கள் என்பனவும் இறந்து காணப்பட்டன. பலநாட்கள் வரை தெருவெங்கும் பிணவாடைகள் வீசிக்கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சி,  "வடமராட்சி மீளக் கைப்பற்றுதல் மீள் நடவடிக்கை" அடுத்த பகுதியில் தொடரும்... "தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்" எழுத்துருவாக்கம்: அ.சேரா. உதவி ஒருங்கிணைப்பு: ஆதவன், இரவியப்பா.  
    • ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன தளபதியின் கருத்தினால் அச்சம் Rajeevan Arasaratnam May 26, 2020 ஹொங்கொங்கின் இறைமையை உறுதி செய்வோம்- சீன தளபதியின் கருத்தினால் அச்சம்2020-05-26T15:38:45+00:00உலகம் ஹொங்கொங்கின் இறைமையை உறுதிசெய்யப்போவதாக சீனா இராணுவம் தெரிவித்துள்ளது. ஹொங்கொங்கிற்கான சீனா இராணுவத்தின் தளபதி சென்டாவோஜியாங் இதனை தெரிவித்துள்ளார். சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டங்களினால் ஹொங்கொங்கில் மீண்டும் பதட்டநிலையும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்துள்ள நிலையிலேயே சீன இராணுவஅதிகாரி இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் புதிய மிகவும் ஆபத்தான தேசிய பாதுகாப்பு சட்டம் ஹொங்கொங்கின் சிவில் உரிமைகளிற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியாகியுள்ள நிலையிலேயே சீன இராணுவ அதிகாரி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். ஹொங்கொங்கின் தேசிய இறைமையையும் அபிவிருத்தி நலன்களையும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மையையும் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளும் படையினரும் உறுதிபூண்டுள்ளனர், நம்பிக்கையுடன் உள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவ அதிகாரி அவர்களால் அது முடியும் என குறிப்பிட்டுள்ளார். புதிய பாதுகாப்பு சட்டம் முதற்தடவையாக சீன படையினர் ஹொங்கொங்கில் செயற்படுவதற்கு அனுமதித்துள்ளதால் அச்சநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தால் சீன படையினர் வீதிகளில் இறங்கலாம் என்ற அச்சம் ஹொங்கொங்கில் காணப்படுகின்றது. சீனாவின் உத்தேச சட்டத்திற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிhப்பு உருவாகியுள்ளது. http://thinakkural.lk/article/43543