Sign in to follow this  
உடையார்

85 வயதில் இப்படியொரு காதலா?

Recommended Posts

85 வயதில் இப்படியொரு காதலா?

85-years-old-love  

கரோனா காலத்தில் எவ்வவோ வினோதங்களைப் பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் பலரும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மனிதர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் காதலுக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் குறைவில்லை!

அமெரிக்காவின் நியூயார்க் மாவட்டத் தலைநகரான அல்பானியில் வசித்து வருபவர் 85 வயது ராபர்ட் பாப்பர். அவர் தனது காதல் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடி வரும் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது மனைவியான 80 வயது லாரா, அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அல்சைமர் நோய் என்பதால் மறதி காரணமாக என்ன செய்வது என்று தடுமாறும் தன் மனைவிக்கு கடந்த ஒரு வருடமாக மருத்துவ மனையில் கண்களை இமை காப்பதுபோல் அருகிலேயே துணையாக இருந்து வந்தார். ஆனால், கரோனா அவரை மனைவியிடமிருந்து வெளியே துரத்திவிட்டது. கரோனா பரவல் வேகமெடுத்ததும் ராபர்ட் பாப்பரிடம் மருத்துவமனை நிர்வாகம், ‘உங்கள் மனைவியின் சிகிச்சையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவருக்கோ உங்களுக்கோ கரோனா தொற்று இல்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உடனே நீங்கள் வீட்டுக்குப் போய்விடுங்கள். நகர நிர்வாகத்துக்கு நாங்கள் பதில்சொல்ல முடியாது” என்று கூறி அவரை வெளியே அனுப்பியதுடன் மருத்துவமனை உள்ளே நுழையவும் தடை விதித்துவிட்டது.

60 வருட தாம்பத்ய வாழ்க்கை நடத்திய ராபர்ட் இதை ஒப்புக்கொள்வாரா? இன்னமும் தன் மனைவி மாறாக் காதலுடன் இருந்த ராபர்ட் ஒரு முடிவு எடுத்தார். தினமும் மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவி தங்கியிருக்கும் அறைக்கு வெளியே இருக்கும் இடத்தில் கஷ்டப்பட்டு அமர்ந்துகொண்டு, தினமும் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இருந்து அவரைப் பார்த்துப்பேசி, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இதை வீடியோ எடுத்து அவரது பேத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அது பெரிய வரவேற்பை பெற்றுவிட்டது.

அவரது பேத்தி அலிசியா, தற்போது அல்சைமர் வியாதி நோய்க்கான ஆராய்ச்சியில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கிறார். ‘தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதால் தான் இந்த நோயை குணப்படுத்த முயல்வேன் என்று சபதம் ஏற்று இருக்கிறார்’. அமெரிக்காவில் அன்பும், காதலும் பாசமும் போலி என்று இனி யாரும் விமர்சிக்க முடியாது.

https://www.hindutamil.in/news/world/555850-85-years-old-love.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆழ்ந்த இரங்கல்கள்  #ஆறுமுகன்_தொண்டமான்
  • ஹாங் காங் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அவர்கள் Han இனத்தவர்கள்.  பிரித்தானியவே , சீனாவின் 100 வருட மேற்கு காலனித்துவ அரசுகளின் அவமானகரப்படுத்துத்தில்  பிரித்து 100 வருட குத்தகைக்கு எடுத்து.  சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை.  சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது. அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.
  • இந்த ராணுவ நடவடிக்கையில் என்னுடன் சிறு வயது முதல்  விளையாடிய, தெரிந்த பலரை இழந்துள்ளேன். ஒரு பனையை  சுற்றி சுற்றி ஹெலி அடிக்க, அருகில் இருந்த சேற்று கிடங்குக்குள் விழுந்து எங்களை காப்பாற்றினோம். இருந்தும் தரையால் வந்த ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்தோம். (எனது ஹம்பர் சைக்கிள் கவச வாகன செயினுக்குள் அகப்பட்டு கிழிந்த இரும்பு தகடானது). ஒவ்வொருவருள்ளும் ஒரு நீண்ட கதை. எனது பாடசாலை வகுப்பு நண்பர் நெல்லியடி முகாமுக்குள் லொறியுடன் சென்று தாக்கியதன் மூலம் ஓரளவு  நீதி கிடைத்தது. உயிர் நீர்த்த போராளிகள், பொது மக்கள், எனது விளையாட்டு கழக நண்பர்கள், அனைவருக்கும் வீர வணக்கங்கள் 
  • எல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி முப்படைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய பிரதமர் மோடி   இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5-ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.   பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.   தற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/05/26185055/1554210/prime-minister-modi-meets-with-national-security-advisor.vpf
  • பையன் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமக்கு விருப்பமான கட்சிக்களுக்கு ஆதரவு அளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் திராவிட திருடன், திராவிட சொம்பு என்று கூறும் நீ்ங்கள் அடுத்தவர் நாட்டின் அரிசியலில் தலையிடும் சீமானின் சொம்பு என்று கூறலாம் தானே.  அவர்கள் தமது நாட்டு அரசியலை சட்டபூர்வமாக செய்யும் போது பக்கத்து நாடான எமக்கு அவர்கள் அரசியலில் தலையிட என்ன உரிமை உள்ளது. அது அவர்களின் அரசியல்.  என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும்  நான் மரியாதையுடன் பார்க்கிறேன். ஆனால் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன்.  எமது ஈழ தமிழர் பிரச்சனைக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எமக்கு எதையும் சீமானால் படுங்க முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். ஆனால் அவர் ஈழத்த்தை வைத்து அரசியல் செய்வது வெறும்  அரசியல் விளையாட்டு. தமிழகத்தில் திமுக. அதிமுக என்று பிரிந்த பின்னர் திமுக வுக்கு எதிராக எம்ஜியாரின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதற்காக அவர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டு தான் இந்த திமுக வுக்கு எதிரான பிரச்சாரம். ஜெயல்லிதா இல்லாத நிலையில்  திமுகவுக்கு எதிரான வாக்குகளை இழுத்து பதவிக்கு வரலாம் என்று அவர் கனவு காண்கின்றார். அவ்வளவு தான். . அதனால் தான் ஜெயல‍லிதாவின் இறப்புக்கு பின்னர் அவர் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். செத்து போன கருணாநிதியை எப்போதும் வசைபாடும் அவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தூக்கில்  போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அப்போது சபாநாயகராக இருந்து வாக்கெடுப்பு நடத்தி  நிறைவேற்றிய அவரது மாமனார்  காளிமுத்துவை பற்றி வாயே திறப்பதில்லை. ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன.