Jump to content

கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீண்டும் உயிர் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீண்டும் உயிர் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்

பா.காயத்திரி அகல்யா பிபிசி தமிழ்
சிறுவர்கள் விளையாடுகிறார்கள்Getty Images

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் நோய் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஆரோக்கியமான சில வழி முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். 

அதே போல குழந்தைகளை நாள் முழுவதும் வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைப்பதும் பலருக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே அவர்களை நீண்ட நேரம் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி தாயம் விளையாட துவங்கி விடுகிறார்கள்.

தாயம் விளையாட துவங்கினால் பல மணி நேரம் அந்த விளையாட்டில் குழந்தைகளை ஈடுப்பாடுடன் வைத்திருக்க முடியும், மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் அணிகளாக பிரிந்து விளையாடுவதால் அணியை வெற்றி பெற வைப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். 

தாயக் கட்டை விளையாட்டில் யார் முதலில் தாயம் போட்டு விளையாட்டை துவக்குகிறார்கள் என்பதே சுவாரஸ்யம்தான். பல நேரங்களில் ஒரு மணி நேரம் போராடியும் தாயம் விழாமல், இடத்தை மாற்றி ஆளை மாற்றியெல்லாம் தாயம் விழவைக்க முயற்சி செய்வார்கள். கொரோனா ஊரடங்கின்போது பலர் இதை விட சுவாரசியமாக பல மணி நேரம் தாயக்கட்டை விளையாட்டில் பொழுதை போக்குகின்றனர். 

தாயம் விளையாட்டு

பொதுவாகவே தாயக்கட்டை, பல்லாங்குழி, கள்ளக்காய் போன்ற விளையாட்டுகள் விளையாடும்போது பலருக்கு தங்கள் நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு புரியும். பல விதமான கட்டங்கள் வரைந்து, புளியங்கொட்டைகள் பயன்படுத்தி விளையாடும் தாயமாக இருந்தாலும் சரி, பரம பதம் போன்ற விளையாட்டாக இருந்தாலும் சரி, எப்போது சறுக்கி விழுவோம், எப்போது தோல்வி நம்மை நோக்கி வரும் என்பதை கணிக்கவே முடியாது. 

ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் முதலில் இருந்து விளையாட துவங்குவோம். அதையே வாழ்க்கையிலும் பின்பற்றபட வேண்டும் என்பதே இவ்வகையான பாரம்பரிய விளையாட்டுகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில நன்மைகள். 

ஒரு சில பாரம்பரிய விளையாட்டுகள் 90ஸ் கிட்ஸுக்கு தெரிந்திருந்தாலும், இன்று பலருடன் இணைந்து ஆன்லைனில் லுடோ விளையாடி மகிழ்வது 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரும்தான். பலர் கூட்டு குடும்பமாக இல்லாமல், தனித்தனியாக வசித்து வந்தாலும் இணையத்தில் உள்ள லுடோ விளையாட்டில் உறவினர்கள் மற்றும் அனைத்து வயதினரும் ஒன்றாக விளையாடி மகிழ்கின்றனர். 

தாயக்கட்டை விளையாட்டு அனைவருக்கும் தெரிந்த பிரபலமான விளையாட்டு என்பது தான் இதற்கு காரணமா? அல்லது இது பாரம்பரிய விளையாட்டு என்பதால் இவ்வளவு சுவாரஸ்யமா என்பதை கணிக்க முடியவில்லை. 

உண்மையில் நமக்கு அனைத்து பாரம்பரிய விளையாட்டுகளும் தெரியுமா? அல்லது சில விளையாட்டுகளை மறந்துவிட்டோமா? இன்னும் இருக்கும் சில ஊரடங்கு நாட்களில் நாம் என்னென்ன விளையாட்டுகளை விளையாட முயற்சி செய்யலாம் என்பதை பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் கிரீடா நிறுவனத்திடம் பிபிசி கேட்டறிந்து. 

ஆடு புலி ஆட்டம் 

ஆடுபுல் ஆட்டம்

இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் விளையாடப்படுகிறது. ஏனென்றால் பல இந்திய மொழிகளில் ஆடு, புலியின் பெயரை மொழி பெயர்த்தே இந்த விளையாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த விளையாட்டை பொறுத்தவரை 15 ஆடுகளுக்கு ஒரு வித காயும் 3 புலிகளுக்கு ஒருவித காயும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 3 புலிகள் இருந்தாலும் 15 ஆடுகள் ஒரு குழுவாக ஒன்று கூடினால் புலி போன்ற வலிமை மிக்க விலங்குகளிடம் இருந்தும் தப்ப முடியும் என்பதே இந்த விளையாட்டின் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஒற்றுமையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு இந்த பாரம்பரிய விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கொட்டாங்குச்சியின்(தேங்காய் ஓடு) மேல் கால் வைத்து சமநிலையில் நடப்பது.

கொட்டாங்குச்சியில் நடக்கும் விளையாட்டு

இந்த விளையாட்டு இந்தியா உட்பட பல தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலும் இது முக்கியமான பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. 

கொட்டாங்குச்சியின் அடி பகுதியில் ஒரு கயிறு நுழையும் அளவு துளையிட்டு, அதில் நம் இடுப்பு அளவு கயிறை நீட்டமாக கட்ட வேண்டும். கொட்டாங்குச்சியின் துளைக்குள் கயிறை நுழைத்தவுடன் அதன் ஒரு புறத்தில் பெரிய முடிச்சி இடவேண்டும். 

அதாவது கயிறின் ஒரு புறத்தில் கொட்டாங்குச்சி தொங்க வேண்டும், முடிச்சி அவிழாத வகையில் இறுக்கமாக இருக்க வேண்டும். மற்றொரு புறத்தை உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ளும் அளவு நீட்டமான கயிறு தேவை. 

இதே போல் இரண்டு கொட்டாங்குச்சிகளில் கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு கொட்டாங்குச்சியின் மீது கால்கள் இரண்டும் வைத்து கயிறுக்கு ஒரு புறம் கட்டை விரலும் அதற்கு அடுத்த உள்ள விரலை கயிறுக்கு மற்றொரு புறமும் பொருத்திக்கொள்ள வேண்டும். கயிறின் மற்றொரு புறத்தை உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ள வேண்டும். தற்போது குதிகால் தரையில் படாத அளவுக்கு கொட்டாங்குச்சியின் மேல் உள்ள கயிறால் கால்களை இறுக்கி பிடித்துக்கொண்டு கயிரையும் விடாமல் மெல்ல விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். 

இதன்மூலம் சமநிலை என்றால் என்ன அதில் எப்படி கவனம் செலுத்துவது என்பதை புரிந்துகொள்ள முடியும். 

பல்லாங்குழி 

பல்லாங்குழி தமிழ்நாட்டின் மிக பழமையான பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. ஆப்ரிக்காவிலும் ''மென்கலா'' என்ற பெயரில் பல்லாங்குழி விளையாடப்பட்டு வருகிறது. இரண்டு பேர் விளையாடும் இந்த ஆட்டத்தில் ஒருவருக்கு ஏழு குழுக்கள் வீதம், மொத்தம் 14 குழிகளை கொண்டு இந்த பல்லாங்குழி ஆட்டம் விளையாடப்படும். 

கிரீடா நிறுவனம்

குழிகளுக்குள் புளியங்கொட்டைகளை குவித்துவிட்டு, ஒவ்வொரு முறையும் ஒரு குழிக்குள் இருக்கும் விதைகளை அடுத்தடுத்த குழிகளில் பகிர்ந்து ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். நிறைய புளியங்கொட்டைகள் இருக்கும் குழிகளை புதையல் என்று அழைப்பார்கள். எனவே புதையலை சென்றடைய எந்த குழியை கலைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து விளையாட வேண்டிய விளையாட்டு இது. 

அவ்வப்போது புதையலை பெற திட்டமிட்டு கொண்டே இருக்கவேண்டும். விதைகள் இல்லாத குழிகளில் விதையிட ஏற்கனவே நிறைய விதைகள் உள்ள குழியை கலைக்க வேண்டும். ''அதாவது இருக்கும் இடத்தில் இருந்து இல்லாத இடத்தில் செல்வத்தை சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை இந்த விளையாட்டு உணர்த்தும்''. மேலும் குழிக்குள் விதை இடுவது, நிலத்தில் விதை யிடுவதை உணர்த்துவதாகவும் கருதப்படுகிறது.

கல்லாங்காய் விளையாட்டு 

ஐந்து அல்லது ஏழு கற்களை வைத்து விளையாடலாம். பெரும்பாலும் ஜல்லி கற்கள் அல்லது கூழாங்கற்கள் பயன்படுத்தி விளையாடுவார்கள். இந்த விளையாட்டு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட பிரபலம். 

கீழே 5 அல்லது 7 கற்களை வைத்துக்கொண்டு, ஒரே கையில் ஒவ்வொன்றாக தூக்கிபோட்டு பிடிப்பார்கள். கற்களை மேலே தூக்கிபோட்டு கையை திருப்பி பிடிப்பதற்குள் கீழே உள்ள கற்களை கையில் எடுக்க வேண்டும். இதனால் கண் மற்றும் கை இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி இயக்குவது என்பது நமக்கு புரியவரும். கண் நரம்புகளையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள முடியும்.

 

வட்டமிட்டு புளியங்கொட்டை விளையாட்டு 

தோசைக்கல் அளவு ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்திற்குள் புளியங்கொட்டைகளை குவித்து வைக்க வேண்டும். அந்த வட்டத்திற்கு வெளியில் சிறிது தூரத்தில் இருந்து குவித்து வைக்கப்பட்டுள்ள புளியங்கொட்டைகளை ஊதி கலைக்க வேண்டும். பிறகு கலைந்துள்ள புளியங்கொட்டைகளை ஒவ்வொன்றாக ஒரே ஒரு விரல் மட்டுமே பயன்படுத்தி வட்டத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டும். ஒரு புளியங்கொட்டையை வெளியே நகர்த்தி வரும்போது மறறொரு கொட்டை மீது படாமல் நகர்த்த வேண்டும். அவ்வாறு யார் நிறைய புளியங்கொட்டைகளை நகர்த்துகிறார்களோ அவர்கள் தான் போட்டியின் வெற்றியாளர்.

பாரம்பரிய விளையாட்டுகள்

எந்த வகையான பாரம்பரிய விளையாட்டாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே விளையாடலாம், பென்சில் மற்றும் பேப்பரை பயன்படுத்தியே தாயக்கட்டை விளையாட்டுக்கு கட்டங்கள் வறையலாம். புளியங்கொட்டைகள் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் மற்ற பயிறு வகைகளை பயன்படுத்தலாம். இதுவே பாரம்பரிய விளையாட்டுகளின் சிறப்பு. 

நோய் தொற்று பரவாமல் இருக்க வீட்டில் செய்வதறியாது முடங்கி இருப்பவர்கள், வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடினால், உறவுகளுக்கு இடையில் நல்ல புரிதல் ஏற்ப்படும். இதுவே மனதை ஆரோக்கியமாக வைக்கும் என பாரம்பரிய விளையாட்டுகள் அமைப்பான கிரீடா நிறுவனம் தெரிவிக்கிறது
 

https://www.bbc.com/tamil/india-52775341

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ் விளையாட்டுகளில் அளாப்பி விளையாடுவதால் சிலமணி நேரத்துக்கு சமூக இடைவெளியும் பின்பற்றப்படும் .....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.