Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 

மகாசங்கத்தினரிடம் நேற்று (22) கருத்துத் தெரிவிக்கும்போதே,  அவர் இதனை தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தலபரள-மககயததவம-வயநத-இடஙகள-பதககக-சயலண/175-250711

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய பகுதிகள் என்று சொறீலங்கா அரசாங்கம் அடையாளப்படுத்தும் பகுதிகளை பாதுகாக்க.. சொறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கவல்ல.. புதிய அதிரடிப்படை அணி ஒன்று கோத்தாவால் களமிறக்கப்படுகிறது.

ஏலவே மகிந்தவின் முன்னைய ஆட்சியில் வடக்குக் கிழக்கில் தமிழரின் பாரம்பரிய தொல்பொருள் அடையாளங்கள் சிங்கள மயமாக்கப்பட்டது மட்டுமன்றி.. தொல்பொருள் திணைக்களம்.. மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் என்ற போர்வையில் தமிழரின் பூர்வீக நிலங்களும் அடையாளங்களும் கபளீகரம் செய்யப்பட்டு இருந்தன.

மைத்திரி - ரணில் "நல்லாட்சி"யும் அதைத் தொடர்ந்திருந்தது.

இப்போ மீண்டும்.. கோத்தாவின் இராணுவ முஸ்தீபோடு முழு வீச்சுப் பெறப்போகிறது கபளீகரம்.

தென்னிலங்கையில்.. தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட  பகுதிகளில் இல்லாத அக்கறை சிங்கள அரசுக்கு வடக்குக் கிழக்கில் எதற்கு..???!

ஏலவே சிங்கள முப்படைகளின் தேவைகளுக்கு.. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு என்று வடக்குக் கிழக்கில் தமிழரின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில்..  இப்போ கோத்தாவின் இந்த புதிய அதிரடிப்படை ஆரம்பிக்கப் போகிறது..  தனது ஆக்கிரமிப்பை. 

Presidential Task Force to protect archaeological sites

President Gotabaya Rajapaksa said that a Presidential Task Force will be appointed under the Defence Secretary to conduct a comprehensive survey of archaeological sites in the East and to take measures to preserve them, the President's Media Division said today.

http://www.dailymirror.lk/breaking_news/Presidential-Task-Force-to-protect-archaeological-sites/108-188786

 
Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலிருந்துதான் களை எடுப்பு (ங்கோத்தா திட்டத்தின்படி) ஆரம்பம் ஆகின்றதா 🤔 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, indoor
இனமொன்றின் குரல் is with Ulaka Maka Saanakkiyan.

கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்

ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் தொன்மைச்சான்றுகளை அழித்து பௌத்தமயமாக்கலை செய்து வருகிறது .குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் . திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள் . மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள் . இந்த ஆக்கிரமிப்புகளில் சில,

1. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன் மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட இப்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

2. இலங்கைத்துறை முகத்துவாரம் என்கிற திருகோணமலையின் பூர்விக தமிழ் கிராமம் இப்போது தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு லங்காபட்டன (Lanka Patuna) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது

3. பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த இந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவிலின் அத்திபாரம் மட்டும் தான் இன்று உள்ளது .

4. பாடல் பெற்ற சைவ தளமான திருக்கோணேஸ்வரம் கோவில் சூழலில் மேற்கொள்ளப்படும் சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் தடை செய்து வருகிறது

5. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

6.மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயத்தை புனரமைக்க புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் சொல்லுகிறது

7. மட்டக்களப்பு மாவட்டம் பூர்விக தமிழ் பகுதியான வாகனேரியில் பல்வேறுபட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது

8. மட்டக்களப்பு மாவட்டம் புளுகுணாவை பகுதியில் பல இடங்களை தொல்லியல் திணைக்களமும் புத்த பிக்குகளும் உரிமை கோரி வருகிறார்கள்

9. மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Fort) அமைத்துள்ள இடத்தில றுகுணு அரசுக்கு சொந்தமான பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது

10 . மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பகுதியில் பௌத்த மதம் சார்ந்த பல சான்றுகள் கிடைத்து இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது

11. மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள சுவாமிமலை அடிவாரத்தை புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் பௌத்த மதத்திற்கு உரிய இடம் என அடையளப்படுத்தி இருக்கிறார்கள்

12. மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் தொல்லியல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து 7 விகாரைகளை அமைத்து இருக்கிறார்கள்

13. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள வில்லுதோட்டம் தனியார் காணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என தொல்லியல் திணைக்களம் உரிமை கொண்டாடுகிறது

14. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பூர்விக வாழ்விடங்களில் 86 இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளும் /விகாரைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன . இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும் ஆலையடி பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 இடங்களும் அட்டாளைசேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும் கல்முனையில் 2 இடங்களும் அடங்கும்

15. கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12,000 ஏக்கர் காணிகள் தீகவாவி புனித பூமிக்கு சொந்தமான நிலம் என தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது

தொல்லியல் திணைக்களம் மூலம் பௌத்த மத அடையாளங்களை திணிப்பதும் அதன் மூலமாக சிங்கள ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதும் கடந்த 70 ஆண்டுகாலமாக சிங்கள ஆட்சியர்கள் தமிழ் சிறுபாண்மை சமூகங்களுக்கு எதிராக கையாண்டு வரும் மோசமான தந்திரமாக இருந்து வருகிறது . அந்த வகையில் கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டலில் இராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி பௌத்த மதத்திற்கு சொந்தமான தொல்லியல் இடங்கள் என பூர்விக தமிழ் கிராமங்களில் இருந்து அப்பாவி தமிழ் குடும்பங்களை வெளியேற்றி கிழக்கு மாகாணத்தை பௌத்த மயமாக்கி , சிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் செய்ய முயற்சிக்கிறார்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தமிழர்களை விட மற்ற இனங்களால் கபளீகரம் செய்யப்படுகிறது அதில் முதலாவதாக முஸ்லிம் கிழக்கை ஆக்கிரமிக்க நினைக்க அவர்களை தடுக்க அவர்கள் முயல்கிறார்கள் மகிந்த அரசு நெடுக்ஸ்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு தமிழர்களை விட மற்ற இனங்களால் கபளீகரம் செய்யப்படுகிறது அதில் முதலாவதாக முஸ்லிம் கிழக்கை ஆக்கிரமிக்க நினைக்க அவர்களை தடுக்க அவர்கள் முயல்கிறார்கள் மகிந்த அரசு நெடுக்ஸ்

கிழக்கினை முஸ்லிம்களிடம் இருந்து காக்க அல்ல.

கிண்ணியா போன்ற தலங்களை, பௌத்தமயமாக்க நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்றே நினைக்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கிழக்கினை முஸ்லிம்களிடம் இருந்து காக்க அல்ல.

கிண்ணியா போன்ற தலங்களை, பௌத்தமயமாக்க நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்றே நினைக்கிறேன்.

கன்னியா  என நினைக்கிறன் நீங்கள் சொல்ல வருவது கிண்ணியா முதூரில் உள்ள முஸ்லீம் நகரம்

கன்னியா அது பெளத்த தலமாகி கனகாலம் ஆகிவிட்டது நான் போனபோது உள்ளே செல்ல  அனுமதிக்கு காசு அறவிட்டார்கள் பிக்குகள் டிக்கட் எடுத்தே சென்றோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கன்னியா அது பெளத்த தலமாகி கனகாலம் ஆகிவிட்டது நான் போனபோது உள்ளே செல்ல  அனுமதிக்கு காசு அறவிட்டார்கள் பிக்குகள் டிக்கட் எடுத்தே சென்றோம்

பௌத்தமோ, இந்துவோ.....

நான் அங்கே போன போது அது இருக்கும் கோலத்தினை பார்த்து கவலைப்பட்டேன்.

யாருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு உடுப்பு மாத்திக் கொள்ள இடமேயில்லை. டாய்லட் வசதிகளும் இல்லை.

டிக்கெட்டினை போட்டு காசு வாங்கி, இந்த வசதிகளை செய்தால் நல்லது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகாவலி அபிவிருத்தி திடத்தினூடாகவும் அநேகமான பகுதி சிங்களமயமாக்கப்பட்டுவிட்ட்து. இப்போது கரையோர பகுதிகளும் அவர்களின் வசமாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. முக்கியமாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று நிறைய சிலைகளை கண்டெடுக்க போகிறார்கள். கன்னியா, மூதூர், வெருகல், பொதுவில், பணம என ஆராய்ச்சி முடுக்கி விடப்படும். அதட்கு பின்னர் எல்லாம் விகாரை மயம்தான்.

வடக்கிலும்கூட நெடுங்கேணி ஊடக உள்ளே வந்து விடடார்கள். மணலாறு veli ஓயாவாக மாறி வடக்கு கிழக்கு துண்டிக்கப்பட்டு விட்ட்து. இப்போது வடக்குக்கு மகாவலி திருப்பும் நடவடிக்கை மும்முரமாக நடக்கின்றது. இன்னும் ஒரு 20 வருடத்துக்குள் வடக்கிலும் கிழக்கின் நிலைமைதான்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

பௌத்தமோ, இந்துவோ.....

நான் அங்கே போன போது அது இருக்கும் கோலத்தினை பார்த்து கவலைப்பட்டேன்.

யாருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு உடுப்பு மாத்திக் கொள்ள இடமேயில்லை. டாய்லட் வசதிகளும் இல்லை.

டிக்கெட்டினை போட்டு காசு வாங்கி, இந்த வசதிகளை செய்தால் நல்லது.

இப்பவும் அதே நிலமைதான்  காசு பார்க்கிறார்கள் ஆனால் வசதிகள் இல்லை நாதமுனி

 

7 hours ago, Vankalayan said:

மகாவலி அபிவிருத்தி திடத்தினூடாகவும் அநேகமான பகுதி சிங்களமயமாக்கப்பட்டுவிட்ட்து. இப்போது கரையோர பகுதிகளும் அவர்களின் வசமாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. முக்கியமாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று நிறைய சிலைகளை கண்டெடுக்க போகிறார்கள். கன்னியா, மூதூர், வெருகல், பொதுவில், பணம என ஆராய்ச்சி முடுக்கி விடப்படும். அதட்கு பின்னர் எல்லாம் விகாரை மயம்தான்.

வடக்கிலும்கூட நெடுங்கேணி ஊடக உள்ளே வந்து விடடார்கள். மணலாறு veli ஓயாவாக மாறி வடக்கு கிழக்கு துண்டிக்கப்பட்டு விட்ட்து. இப்போது வடக்குக்கு மகாவலி திருப்பும் நடவடிக்கை மும்முரமாக நடக்கின்றது. இன்னும் ஒரு 20 வருடத்துக்குள் வடக்கிலும் கிழக்கின் நிலைமைதான்.  

20 மிக அதிகமென நான் நினைக்கிறன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/5/2020 at 21:52, தனிக்காட்டு ராஜா said:

கன்னியா அது பெளத்த தலமாகி கனகாலம் ஆகிவிட்டது நான் போனபோது உள்ளே செல்ல  அனுமதிக்கு காசு அறவிட்டார்கள் பிக்குகள் டிக்கட் எடுத்தே சென்றோம்

காசு அறவிடுவது நீதிமன்றினால் நிறுத்தப்பட்டுள்ளது.

பௌத்த ஆக்கிரமிப்பு சுற்றிவர இருந்தாலும் அது இன்னமும் இந்துக்களின் சொத்தாகவே இருந்து வருகிறது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தமிழீழத்தை சிங்கள மயமாக்க சீன அரசின் அறிவுறுத்தலின் பேரில் இது நடக்கின்றது. 

மோடியின் இந்தியா 13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க தவறியது ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் அதே நிலமைதான்  காசு பார்க்கிறார்கள் ஆனால் வசதிகள் இல்லை நாதமுனி

 

20 மிக அதிகமென நான் நினைக்கிறன் 

அது அதிகம் என்று கூற முடியாது. சிங்களவன் இரணைமடு குள நீர்தேக்கத்துக்கு அருகில் மரம் நட்டு அதன் பலன்களை பெற 20 வருட கணக்கில்தான் அப்படி எழுதினேன். அதட்கு முன்னேரே நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சீனாவிடம் இருந்து பொருளாதாரத்தை மற்றும் சிங்கள தேசத்திடம் இருந்து ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளையும் இந்தியாவின் கைகளில் செல்வதை தடுக்க இந்த சிங்கள குடியேற்றமும் உதவும். 

அதவாது, சிங்கள இனம் கிழக்கில் பெரும்பான்மை இனமாகவும், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அமையும். 

Edited by ampanai
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

20 மிக அதிகமென நான் நினைக்கிறன் 

கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின், இறுதியாக கிறீத்தவர்களில் கை வைக்கும் நிலை வரும்போது.... 

அப்போது ஜேர்மனியக் கவி கூறியபடி

" ""இறுதியாக என்னைத் தேடி வந்தார்கள். அப்போது எனக்காக பேசுவதற்கு யாரும் அங்கே இல்லை"" "

என்பதுதான் உண்மையாக இருக்கும். ☹️

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்வதற்காக புதிய செயலணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை முற்றுமுழுதாக அபகரிக்கும் நோக்கத்துடனேயே தொல்லியலுடன் தொடர்புபட்ட இடங்கள் குறித்து ஆராய்வதற்கான செயலணி பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ளது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

gota-buddist-leaders-300x200.jpg
கிழக்குமாகாணத்தில் துரித காணி அபகரிப்பை மேற்கொள்வதற்காக பௌத்த ஆலோசனை சபையை சந்தித்த ஜனாதிபதி அந்த பொறுப்பை பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான செயலணியிடம் வழங்கியுள்ளார் என தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
புனித பூமி என்ற போர்வையில் பௌத்தவிகாரைகளை அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்களை அடிப்படையாக வைத்து காணிகள் அபகரிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

tharmalingam-suresh-300x169.jpg
அம்பாறையில் 247 இடங்களும்,திருகோணமலையில் 74 இடங்களும்,மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட55 இடங்களும் பௌத்த மதத்துடன் தொடர்புiடைய பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலங்களில் தமிழர்களின் பெருமளவு நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடங்களை அபகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் காணிகளை முற்றுமுழுதாக அபகரித்து இலங்கையை முற்றுமுழுதாக சிங்கள தீவாக மாற்றுவதற்கான செயற்பாடு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முற்றுப்புள்ளிவைக்கப்படவேண்டுமென்றால் வடக்குகிழக்கு சேர்ந்த தமிழர் தேசம் அங்கீரிக்கப்படவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/43323

Link to post
Share on other sites
On 23/5/2020 at 16:30, ampanai said:

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 

இந்த அணி முறையா செயற்பட்டு தொல்பொருள் முக்கியத்துவ இடங்களை பாதுகாக்க நினைச்சா சிங்களவர்கள் இலங்கையை விட்டு முழுமையா வெளியேற வேணும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Vankalayan said:

அது அதிகம் என்று கூற முடியாது. சிங்களவன் இரணைமடு குள நீர்தேக்கத்துக்கு அருகில் மரம் நட்டு அதன் பலன்களை பெற 20 வருட கணக்கில்தான் அப்படி எழுதினேன். அதட்கு முன்னேரே நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.  

அதுதான் நடக்கும் இருந்து பாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தொல்பொருள் செயலணிக்கான வர்த்தமானி வெளியீடு

gaz.jpg?189db0&189db0

 

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியில், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை ஆணையாளர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கமாகும்.

இதேவேளை, பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான சட்டபூர்வமான சமூகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான புதிய செயலணியொன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ளார்.

அதற்கமைய அதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

13 பேரடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/கிழக்கு-தொல்பொருள்-செயலண/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை பகுதிகளிலும், கிளிநொச்சியிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுங்கேணி பிரதேசத்தில் மாகா ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ள மாகா நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்ந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்றும் மேலும் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மேற்படி மூவரும் உள்ளடங்குகிறார்கள். https://www.pagetamil.com/152798/
  • கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் 18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரமும், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வருடம் தோறும் நெற்செய்கை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. காலபோகத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், சிறுபோகத்தில் 20 ஆயிரம் ஏக்கபர் பரப்பளவுமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் போது ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு அடி உரம், வீ1, யூரியா, ரிஎஸ்பி, ரிடிஎம் போன்ற இரசாயன உரங்கள் சுமார் 200 கிலோ கிராம் பயன்படுத்தப்படல் தேவை எனவும், சில சந்தர்ப்பங்களில் இது 225 கிலோ கிராம் அல்லது 175 கிலோகிராம் என கூடி குறையும் எனவும் தெரிவிக்கும் விவசாயிகள் சராசரியாக ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 200 கிலோ கிராம் இரசாய உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கின்றனர். எனவே கிளிநொச்சியின் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கிராம் படி இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்ற போது மொத்தமாக வருடந்தோறும் கிளிநொச்சியின் நிலங்களில் 18 மில்லியன் கிலோ கிராம் அதாவது ஒரு கோடியே 80 இலட்சம் கிலோ இரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. (90000×200) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே ஒரு ஏக்கர் நெற் பயிர்ச் செய்கைக்கு சுமார் 500 மில்லி லீற்றர் கிருமி நாசினி தேவைப்படுகிறது என்றும் அதன்படி மொத்தமாக வருடந்தோறும் 90 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 45 ஆயிரம் லீற்றர் கிருமிநாசினியும் பயன்படுத்தப்படுகிறது விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் நெற்பயிர்ச் செய்கைக்கு மாத்திரம் வருடந்தோறும் ஒரு கோடியே 80 இலட்சம் கிலோ கிராம் இரசாயன உரமும் 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினியும் பயன்படுத்தப்படுவது ஆரோக்கியமற்ற சூழல் எனவும், வருடந்தோறும் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற போது நிலம் நஞ்சாக மாறிவிடும் எனவும் இதனால் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்து எனவும் சூழலியலாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். https://www.pagetamil.com/152755/
  • சீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்.!   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கதாபாத்திரமேற்று நடிக்க உள்ளார். நீலம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜி.வெங்கடேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/10/24/18395/
  • இது இந்தியாவில் நடக்கும் அடுத்த கம்பிளிங் மெகா சுத்து. பிரிட்டன் தேசிய லாட்டரி, பரிசுத் தொகை, 120 மில்லியன் பவுண் வெல்லும் சந்தர்பத்தை தவறவிடாதீர்கள். இத்தாலியின் லாட்டரியில்,4.5 billion ரூபாவை வெல்லுங்கள். இரு நாடுகளிலும் வெளிநாட்டுகாரர்கள் விளையாடவோ, பரிசைப் பெறவோ முடியாது என்பது நிபந்தனை. இவர்கள் செய்வது, அந்தந்த நாடுகளில் குடியுரிமையுடன் இருப்பவர்கள், லாட்டரி எடுப்பார். அதை சின்டிக்கேற் முறையில், பலர் சேர்ந்து, எடுப்பர். உதாரணமாக பத்துப் பேர் சேர்ந்து எடுத்து, பத்தில் ஒரு நம்பருக்கு விழுந்தால், பரிசு, பத்துப்பேருக்கும், பிரியும். அந்த சின்டிக்கேற் முறையை, இந்தியாவிக்கு நகர்த்தி மெகா சுத்துமாத்து செய்கிறார்கள். இதனை, அந்தந்த நாட்டு லாட்டரிக்கு அறிவித்தாலும், அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. வெற்றி சீட்டை வைத்திருப்பவர், அந்த பணத்தை யாருடன் பகிர்கிறார் என்பதை, சட்டபூர்வமாக தடுக்க முடியாது.   https://tamil.oneindia.com/news/you-could-win-a-4-3-billion-inr-italian-lottery-jackpot-without-going-to-italy-400391.html
  • வித்தியாசமான ஆய்வு. இரண்டு கருத்துக்கள் அல்லது குறைபாடுகள்: 1. எருமைப் பாலுக்கும் பசுப்பாலுக்கும் இருக்கும் பாரிய வேறுபாடு அதன் கொழுப்பு வீதம் (இது எருமைப்பாலில் அதிகம்). அதிக கொழுப்பு எருமைப்பாலைப் போசணை மிக்கதாக ஆக்காது. இன்று கொழுப்புக் குறைந்த பசுப்பாலை நாம் அன்றாடம் பாவிப்பது எமது உடல் நலம் சார்ந்த ஒரு தெரிவு. ஆனால், அதிக கொழுப்புள்ள எருமைப் பால் தயிர் தயாரிப்பிற்கு பசுப்பாலை விட அதிகம் பொருத்தமானது. பசுப்பால் பிரபலமாக வர இன்னொரு காரணம், மாட்டை, எருமை மாட்டை விட இலகுவாக பண்ணைகளில் வளர்க்கலாம் (domestication). எருமை மாட்டின் குணம் இந்த பண்ணை வளர்ப்பு முறைக்கு உகந்தது அல்ல. எருமையின் பிரபலமின்மைக்கு ஆரிய சதி காரணமாக இருக்கும் என்பதை எனக்கு நம்ப முடியவில்லை.  2. சிந்துவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடர்களுக்குரியது என்பதை அந்த "செல்" விஞ்ஞானக் கட்டுரை நிறுவவில்லை (குறைந்த பட்சம் விஞ்ஞான ரீதியில் அப்படியான முடிவு எட்டப் படவில்லை!). மேற்கு ஈரானிய மக்கள் (ஆரியர்?) பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே வேறொரு விவசாயக் குழுவாகப் பிரிந்து, அந்தக் குழுவில் இருந்து சிந்து வெளி விவசாயிகள் வந்தனர் என்றே "செல்" கட்டுரை முடிவு சொல்கிறது. இதன் படி தென்னிந்திய வாழ் மக்களும் சரி "ஆரியர்" எனப்படும் வட இந்தியரும் சரி fertile crescent என்ற மத்திய கிழக்குபகுதியில் இருந்து 10,000 BCE முன்பே கிழக்கு நோக்கி நகர்ந்த மக்களின் வழித்தோன்றல்களே! இது அதிசயமான கண்டு பிடிப்பும் அல்ல!    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.