Jump to content

ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள்; ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள்; எதுவரினும் வெற்றி உங்களிற்கே: ஈழத்தமிழர்களிற்கு நம்பிக்கையூட்டினார் கிழக்கு திமோரிய முன்னாள் ஜனாதிபதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ் ஹோர்தா தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது,

கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழர்களைப் போன்று மீப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஸ்பெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் ஸ்காட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களை போலவே, தமிழ்மக்களின் போராட்டமும் நியாயமானது என்றார்.

சிறிலங்காவில் தமிழர் இனவழிப்பு என்பதை குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் ஜெர்மனியில் யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும், ஒவ்வொரு தேசமும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த சுதந்திரத்தின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய அவருடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் சுதந்திரத்துக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.

சிறிலங்கா அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் ரமோஸ் ஹோர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீகள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

மே 18 முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

https://www.pagetamil.com/125996/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா செய்யவேண்டியதை சரியாக செய்து விட்டது.

குடியொப்பம் மூலம் ஸ்காட்டிஷ் மக்களே முடிவு செய்ய வைத்துவிட்டது லண்டன்.

அதனை ஸ்பெயின் செய்யவில்லை இன்னும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அவர் உப்ப சொல்றதை பதவியில் இருந்த போது சொல்லி இருக்கலாமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 அவர் உப்ப சொல்றதை பதவியில் இருந்த போது சொல்லி இருக்கலாமே

 

புரியல

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

 அவர் உப்ப சொல்றதை பதவியில் இருந்த போது சொல்லி இருக்கலாமே

 

பதவியில் இருந்த போது கேட்டு இருந்தால் சொல்லியிருப்பார். எவரும் கேட்டவில்லையே? அவரும் அவரது நாட்டு பிரச்சினைகளை பார்த்து கொண்டிருந்திருப்பார். பதவியில் இருக்கும் கயானா ஜனாதிபதியிடமும் ஏதோ சொல்லும்படி கேட்டிருப்பதாக எங்கோ படித்தேன். சொல்லுவார் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

பதவியில் இருக்கும் கயானா ஜனாதிபதியிடமும் ஏதோ சொல்லும்படி கேட்டிருப்பதாக எங்கோ படித்தேன். சொல்லுவார் கேளுங்கள்.

கயானா ஜனாதிபதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வை தொடக்கி  வைத்தாராம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎05‎-‎2020 at 21:19, MEERA said:

புரியல

அவர் எமக்காக கதைத்ததில் பிழை இல்லை ...ஆனால் , அவர் பதவியில் இருக்கும் போது எமக்காக கதைத்திருந்தால் அதன் பெறுமதி இன்னும் அதிகம் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.