Sign in to follow this  
nunavilan

தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா

Recommended Posts

தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்காத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா

 
ஜஸ்மின் சூகா (ITJP)

 

யஸ்மின் சூக்கா (ITJP)

இலங்கை இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுமுன் அவர்கள் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்தறிந்த பின்பே பதவிஉயர்வு வழங்க வேண்டுமென்பது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு உடன்பட்ட ஒரு விடயம். ஆனாலும் 11 வது போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ச போர்க்குற்றதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும், நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கும் வேண்டுமென்றே பதவி உயர்வுகள் வழங்கியிருக்கிறார்.

“இங்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் தேர்வு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்று. நல்லிணக்கம் பற்றி ஒரு சொல் கூட பேசப்படாததன் மூலம் அது எங்கள் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது எனபதே இலங்கையர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்லப்பட்ட செய்தி” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் (IJTP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.


 

லண்டன் ‘கழுத்துவெட்டு’ சைகை விவகாரம்

இப் பதவி உய்ரவுகளில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்று, பிரியங்கா பெர்ணாண்டோவினது. 2018 இல், பிரித்தானியாவில் இலங்கையின் பிரதானியாகவிருந்தபோது, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை காட்டிய காரணத்தால் பிரித்தானிய நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியிருந்தது. அவர் இலங்கைக்குத் திரும்பியதும் அவர் ஒரு ‘ஹீரோ’ வாகப் புகழப்பட்டு அடுத்தடுத்து பதவி உயர்வுகளும் வழஙகப்பட்டன.

போரின்போது 511 படைப்பிரிவின் தளபதியாக இருந்து தனக்குக் கீழ் பணிபுரிந்தார் எனக்கூறிய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தானும் கழுத்தை வெட்டும் சைகையைச் செய்துகாட்டியதோடு, பிரித்தானிய சம்பவம் தனக்கு இரத்தத்தைக் கொதிக்க வைத்ததாகவும் கூறியிருந்தார்.

“இதிலிருந்து இராணுவ அதிகாரிகளுக்கும், அரச பிரதானிகளுக்கும் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், நீங்கள் உலகமெங்கும் சென்று தமிழர்களை மிரட்டுவீர்களானால் உங்களுக்குச் சன்மானம் காத்திருக்கிறது என்பதே. அத்தோடு பிரித்தானியாவின் நீதித்துறையை மிகவும் மோசமாக அவமதித்திருக்கிறது” என மேலும் தெரிவித்தார் யஸ்மின் சூக்கா.

இசைப்பிரியா விவகாரம்

மே 2009 இல் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா அவர்களது படுகொலையோடு தொடர்புடைய விசேட படைத் தளபதியான ஹரேந்திர பராக்கிரம ரணசிங்கவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இசைப்பிரியா சரணடையும்போது அவரை ஏற்றுக்கொண்ட காணொளியில் இவர் இருக்கிறார் என்பதும், இது தொடர்பாக ஐ.நா. மேற்கொண்ட விசாரணையிந்மூலம் பின்னர் தெரியவந்திருந்தது. இசைப்பிரியாவின் கொல்லப்பட்ட உடலோடு வெற்றிக்களிப்பைக் கொண்டாடும் படத்திலும் ரணசிங்க உள்ளார். அப்படியிருந்தும் அவரும் பதஹ்வி உயர்வு வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்தையும் துச்சமாக மதிப்பதையே காட்டுகிறது.

தடுப்புக் காவலில் இருந்த தமிழ் சந்தேக நபர்களைத் துன்புறுத்தியதாகச் சந்தேகப்படும் 512 ஆவது பிரிகேட் தளபதியாகிய சன்னா டி. வீரசூரியாவுக்கும் பதவி உயர்வு வழங்கபட்டிருக்கிறது.

நாடு தொடர்ந்து இராணுவமயமாக்கமடைந்துவரும் வேளையில், ஜனாதிபதிக்கு நெருக்கமான பல இராணுவத்தினர் பல சிவிலியன் கடமைகளில் அமர்த்தப்பட்டும், பலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டும் வருகின்றமை கவலை அளிப்பதாக உள்ளது. கோவிட்-19 அச்சுறுத்தல் பரவலாக இருக்கின்ற வேளையில், இப்படியான கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்ட அதே வேளை, அதே காரணங்களைக் காட்டி அரசு தமிழர் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்த நிகழ்வுகளைத் தடை செய்துமுள்ளது.


 

மேஜர் ஜெனெரல்களாகப் பதவி உயர்த்தப்பட்ட ஐந்து பேர்:

  1. பிரியங்கா இந்துனில் பெர்ணாண்டோ (கெமுனு படைப் பிரிவு 511 வது பிரிகேட் தளபதி, 59 வது படைப்பிரிவு – பிரித்தானிய ‘கழுத்து வெட்டு’ புகழ்)
  2. ஹரேந்திர பராக்கிரம ரணசிங்க (571 வது பிரிகேட் தளபதி, 57வது படைப்பிரிவு. இசைப்பிரியா கொலை)
  3. ஜகத் கொடித்துவக்கு (காலாட்படை, 581/571 பிரிகேட்டுகளின் கீழ், 57&58 படைப்பிரிவுகளின் கீழ். மடு தேவாலய தாக்குதல்கள்)
  4. சன்னா டி.வீரசூரியா (காலாட்படை, 2010, 2011 களில் கைதிகளைத் துன்புறுத்தியவர்)
  5. சண்டன உடித் மாரசிங்க (கிழக்கு மாகாணப் படை வழங்குனர். 2010 ஹெயிட்டி அமைதிப்படைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்)https://marumoli.com/தமிழரை-மிரட்டினால்-பதவி/?fbclid=IwAR0rxNleZTO28RqLjo2PnMoe9PbsGL9hazYX1oMkjqhOBqrNR-Hf4d8GnS8

Share this post


Link to post
Share on other sites

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடானது, அரசியலை அடிப்படையாக கொண்டது என்றும் இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது என்றும் ஜஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் 30 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானம், இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர், அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பியங்கா பெர்ணாண்டோ இலங்கையின் இராஜதந்திரியாக இருந்தவேளையில், பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட இவருக்கு, வழஙக்கப்பட்ட பதவி உயர்வானது இதில் மிகவும் முக்கியமானதாகும்.

2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு, சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனாவினால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கை வழமைக்கு மாறாக சற்று எச்சரிக்கை விடும் தொனியில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

https://www.tamilwin.com/srilanka/01/246780?ref=home-top-trending

Share this post


Link to post
Share on other sites

maxresdefault.jpg

பொழுதன்னைக்கும் பாட்டு பாடாமல் நடவடிக்கை எடுங்களேன்..👌

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this