Jump to content

“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்-கதை 01-அலெக்ஸ் பரந்தாமன்

இரத்தத்தின் கதையை சொல்ல முன்பு : 

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%

 

வன்னிப்போரியல் வாழ்க்கைக்குள் எவருமே எதிர்பார்த்திருக்காத திருப்பங்களும், அவலங்களும் நடந்து முடிந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் அவை. அந்த அனுபவங்களானது சந்தோஷப்படுதல் ஒன்றைத்தவிர, மற்றைய எல்லாவிதமான உணர்வுகளையும் உள்வாங்கி, மீண்டெழுந்தனவாக அமைந்தன. அந்த மீண்டெழுதலோடு வாழ்வின் இன்னொருபக்கத்தை  அனுபவங்கள் வெளிக்காட்டி நின்றன. சக மனிதர்களைப் பற்றித் தெரியவும் அவர்களது குணவியல்புகள் மற்றும் குரோதச் செயற்பாடுகள் பற்றியும் அறியச் செய்தன.

வன்னிப்போர் முடிவடைந்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போர் மனப்புரிதலுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, ஏனையோருக்கும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றவை ஏராளம்! இந்தப்போருக்குள் அநேகமானவர்கள் இறந்தும், ஏனையோர் உயிர்மீண்டவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்பவர்களைப் பார்ப்பதிலும், அவர்களது அனுபவங்களைப் படிப்பதிலும் ஒரு சுவாரஸ்சியம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு கட்டத்தில் உளரீதியான சுகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது. சிந்தனை செய்பவர்களுக்கு அவர்தம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்த உதவியிருக்கின்றது. எழுத்து இலக்கியத்துக்கு கருக்களமாகவும் அமைந்திருக்கின்றது.

இந்த மனிதர்களைப்பற்றி நிறையவே எழுதலாம்! எழுதிக்கொண்டே போகலாம்! தொய்வில்லாத வசனநடைக்கு, அவர்களது துயர் தோய்ந்த வாழ்வின் பல பகுதிகளைத் தெரிந்தெடுக்கலாம். எழுதுவதை விரும்புபவனுக்கும், எழுத்தின்மீதான தேடல்களை அறிந்து கொள்பவனுக்கும் இந்த மனிதர்களின் வாழ்க்கை ஒரு கட்டாய தேவையாக இருக்கிறது.

புலிகளின் தமிழ்மக்களுக்கான விடுதலைப் போராட்ட காலத்தில், சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆங்காங்கே தமது சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்த இந்த மனிதர்களை, நிலம்மீதான படையினரின் ‘ முன்னேறுதல்’ நடவடிக்கை மெல்லமெல்ல அவர்களது இருப்பிடங்களை விட்டு நகர்த்தியது. துடைப்பங்களால் கூட்டி ஒதுக்கப்படும் குப்பைகள்போன்று ஓரிடத்தில் சேர்த்து விட்டது. அப்படிச் சேர்த்து விட்டதன் மூலம், அந்த இடத்தில் மிக நெருக்கமாக வாழ்ந்த இவர்களிடமிருந்து பல அனுபவங்களைப் பெறவும், அந்த அனுபவங்களூடாக அநேக விடயதானங்களையும் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாத்தளன் கடற்கரைப் பகுதியில் இருந்து  அம்பலவன் பொக்கணை, வலைஞன்மடம், முள்ளிவாய்கால் வரை, ஒன்று சேர்த்து விடப்பட்டிருந்த இந்த இடம்பெயர் மனிதர்களுக்குள் பலகதைகள் கனத்தனவாய் தேங்கிக் கிடந்தன. அக்கதைகள்  ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ள முடியாத சோகக்கதைகளாகவே இருந்தன. யாரை யார் தேற்றுவது என்பதுகூடத் தெரியாததொரு அவலநிலைக்குள்ளும் பல அராஜகச் செயற்பாடுகளும் அரங்கேறத்தான் செய்தன.

எல்லா மனித முகங்களிலுமிருந்து வழிந்து கொண்டிருந்தன கண்ணீர்த்துளிகள். வாய் இருந்தும் ஊமைகளாக… பேசுவதற்கு சுதந்திர மற்றவர்களாக… அவலக்குரல்களை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்களாக… இருந்தார்கள். அழுது… அழுது… அரற்றியபடியே, தங்களது அன்றாட வாழ்வினைக் கடந்து சென்ற இந்த மனிதர்கள், படிப்பதற்கு தலைசிறந்த நூல்களாகவே இருந்திருக்கிறார்கள் ; இன்றும் கூட இருக்கிறார்கள்!

போரியல் நிகழ்வுகள்… வாழ்வனுபவத்துக்கு புதுப்புது அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. இந்த அனுபவமானது அவர்களோடும் அவர்கள் மத்தியிலும் வாழ்ந்த எனக்கும் ஏற்பட்டிருந்தது என்பது புனைவல்ல.

இலக்கு நோக்கி நகர்வதாகத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம், இடைநடுவில் பல பாதைகளில்  பயணிக்கத்தொடங்கியபோது, வாழ்வின் இன்னொரு பக்கத்தையும்,  வஞ்சகங்களின் உச்சித் தொடுகையையும் அவ்வப்போது காணக்கூடிய தாக இருந்தது.

அசலெது? நகலெது? உண்மையெது? பொய்மையெது? நீதியெது? அநீதியெது? நட்பெது? பகையெது? என்பதையெல்லாம் வன்னிப்போருக்குள் பெற்றுக்கொள்ளக்கூடிய தாக இருந்தது.

மன அயர்ச்சியும் மரணத்தை நிதம்நிதம் ருசித்துப்பார்க்கும் வாழ்வுமாக, அவை எமக்கு எழுதப்படாத விதியுமாக இருந்த போதிலும், அவற்றையெல்லாம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அஞ்சியபடி… கடந்துதான் போகவேண்டியிருந்தது. சுதந்திரத்துக்காகப் போராடியநாம்,  இறுதிவரை சுதந்திர மற்ற மனிதர்களாகவும் சுகம் யாவும் இழந்து சோகத்தைச் சுமப்பவர்களாகவுமே வாழ்ந்து கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டிருந்தது முல்லைப் பெருங்கடல்வெளி.

கடற்கரைவெளியில் கிழக்குத் திசையில் தோன்றும் பூரண உதயத்தின்  ஒவ்வொரு அழகியலையும் ரசிக்கமுடியாதவர்களாக நித்தமும்  அவலங்களைச் சுமந்து வாழ்ந்த காலங்கள் கொடிதிலும் கொடியவை. இந்த அவலக்கொடுமைகளுக்குள் சாதி, சமயம், பணம், படிப்பு, பிரதேசவாதம் மற்றும் தமக்கான ‘ பிற தகைமை’ களை வெளிப்படுத்தியவர்களும் உண்டு.

குண்டுகள் உடலைத் துளைப்பினும், உயிரது கணங்களில் பிரியினும் ; கூடவே கொண்டுவந்த மரபுசார் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் தான், நானும் வாழ்ந்திருக்கிறேன்.

இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் விசித்திர மனப்பாங்குடையவர்கள். இந்த விசித்திரமனோபாவமே என்னை எழுதத் தூண்டுகிறது. வன்னிப்போர்  எனக்குக் கற்றுத்தந்தவை ஏராளம்! இந்த ஏராளத்தில் இருந்து சிலவற்றை எழுத்துக்களாகத் தொகுத்து ‘நடு’ வாசகர்களுடன்  இனிவரும் நாள்களில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நன்றி!

அலெக்ஸ் பரந்தாமன்-புதுக்குடியிருப்பு- இலங்கை

 

https://naduweb.com/?p=11277

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 02 -‘உப்புக்காற்றினுள் உறைந்த உண்மைகள்’- போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

 
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%ஓவியம் : டிசாந்தினி நடராசா

“ஆமி கிளிநொச்சியைவிட்டு வெளிக்கிட்டு விட்டானாம். உங்கை சனங்களெல்லாம் அள்ளுப்பட்டு வருகுதுகள்.”

வெளியே யாரோ கூறிக்கொண்டுசெல்வது தரப்பாள் கொட்டிலுக்குள் இருந்த அவனுக்கு வெகு துல்லியமாகவே கேட்டது.

அவன் தரப்பாள் கொட்டிலை விட்டு வெளியே வந்தான். கடலில் இருந்து வீசும் உப்புக்காற்று அவனை உதைத்துத் தள்ளுமாப்போல் வீசிக்கொண்டிருந்தது.

இந்த நிகழ்வு உண்மையா? அன்றிப் பொய்யா? சிலவேளைகளில் உண்மையாகவும் இருக்க்கூடும். பொய் யெனில், மக்களின்  மனதைக்குழப்பி… அக்குழப்பத்தில் அவர்கள் பதற்றப் படுவதை சிலர் ரசிக்கக் கூடும். ஊர் இரண்டு படும்போது அதன் இடையே இருக்கும் கூத்தாடிகள் தமக்குள் குதூகலிப்பதுபோன்று, புலிகள் – இராணு வத்தின் போர்க்கள நிலைவரத்தைப் பல புனைவுகள் கொண்டு சோடிப்பதனூடாக மேலும் பல குழப்பநிலைகள் உருவாகு வதை அவர்கள் விரும்பக் கூடும்.

 சிந்தனைகள் அவனுள் பலதெனவாய் விரிவடையத்தொடங்கின.

01.2009,

திங்கள்கிழமை முற் பகல் பத்துமணியளவில்,கைவேலிக் கிராமத்தில் முதன்முதலாக ஷெல் ஒன்று வந்து விழுந்து வெடித்துப் பெரும் சேதாரத்தை உண்டுபண்ணிய அந்த நிகழ்வை அவன் நினைத்துப் பார்க்கிறான்.

வீட்டின் பின்வளவுள் மரவள்ளிப் பாத்திகளுக்குள் சொரிந்து கிடந்த மரத்தின் இலைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோதுதான், அந்தச் ஷெல் கூவிக்கொண்டு வந்து விழுந்து வெடித்துச் சிதறியது.

அதிர்ந்துபோனது அவன்மட்டுமல்ல. அந்தப்பகுதி மக்களும்தான். அடுத்த ஷெல்லும் வரக்கூடும்… என்ற அச்ச உணர்வு அற்றவர்களாக அயலில் இருந்த அனைவரும் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றார்கள்.

என்ன அகோரமான காட்சி அது.

அங்கு சிதறிப்போனதில் எதுவுமே மிச்சமாக இருக்கவில்லை.

எங்கோ தூரத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, அக்காணியுள் தஞ்ச மடைந்திருந்த குடும்ப உறவுகள் அனைத்தும், தறப்பாள் கொட்டிலுடன் சின்னாபின்னமாகிக் கிடந்தன. குளறி அழுவதற்கு அந்தக்குடும்ப உறவுகளுக்காக அங்கு எவருமிருக்கவில்லை. ஒரு கிழவிமட்டும் அவலமாய் கத்திக்கொண்டிருந்தாள்.  அதுகூட அவளால் முடியாதிருந்தது. அவளது அகவையின்  உச்ச மும் மனதுள் பரவி நின்ற அச்சத்தின் முழுமையும் அவளது உடலை நடுங்கச் செய்து கொண்டிருந்தன.

அவனால் மேற்கொண்டு அங்கு நிற்க முடியவில்லை.அவனுள் விபரிக்க முடியாத விபரீத உணர்வுகள்…

“நாசமறுப்பார்! எங்கையிருந்து அடிச்சாங்களோ தெரியேல்லை?”

விடுப்புப் பார்க்கும் கூட்டத்தைவிட்டு அவன் வெளியேறிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து யாரோ கூறுவது அவனுக்குக் கேட்டது.

கைவேலிக்கிராமத்துள் ஷெல் வந்து விழுந்து வெடித்ததைத் தொடர்ந்து, பலர் கிராமத்தைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அங்கு இனியும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவனையும் விட்டு விலகியது. அவனும் தன் குடும்பத்தோடு கிராமத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தான். மக்க ளோடு மக்களாக மூடை முடிச்சுகளுடன் அயற்கிராமமான மாத்தளன் கடற் கரையை நோக்கி நடந்தவன், கடற்கரை க்கு அருகாமையில், தரப்பாள் கொட்டில் அமைத்துத் தங்கிக்கொண்டான்.

மக்கள் தொடர்ந்தும் மாத்தளனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மன்னாரில் இருந்து தொடங்கப்பட்டது இராணுவத்தினரின் முன்னேறும் நடவடி க்கை. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தார்கள்.

‘ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகின்ற நாய்களுக்கு இலகு’ என்பது போன்று, மக்களும் உயிருக்கஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு நகர, நகர இராணுவமும் அதனூடாக ஊடுருவி, இப்போது கிளிநொச்சி வரைக்கும் வந்து நின்றது.

கைவேலியை விட்டு வெளிக்கிட்டு மூன்று மாதங்களாகி விட்டன. அவனு க்கு வீட்டின் நினைவுகளே மனதுள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தன. அவரவர் ஏதோ அசட்டுத் துணிவில் தமது வீடுகளைப் பார்த்து விட்டு வருவதை அறிந்து கொண்ட அவனுக்கும், தனது வீட்டையும் வளவையும் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எழுந்தது.

குறிப்பாக, அவன் ஆசையோடு நட்டு வளர்த்த மரவள்ளிச்செடிகள், மனதில் வந்து நின்றன. இன்னும் ஒருமாதமும் பத்து நாள்களும் கடந்தால்  கிழங்குகள் அனைத்தும் உண்பதற்கேற்ற உணவாகிவிடும். சிங்கள அரசின் பொருளாதாரத் தடையின் நிமித்தம், அவன் நட்டு வளர்த்த பயிர்கள் அவை. ஆள் அரவம் இல்லையென்றால், குரங்குகள் கூட்டமாக வந்து எல்லாவற்றையும் சேதாரப்படுத்தி விடும். அவனுக்கு மரவள்ளிச் செடிகள் குறித்து கவலையாக இருந்தது. கைவேலிக்குப் போக வெளிக்கிட்டவனைத்  தடுத்து நிறுத்தினாள் மனைவி. மனைவியின் உறவினர்களும் அதை விரும்பவில்லை.

ஒருநாள் மாத்தளனுக்கு அருகில் உள்ள வலைஞன்மடம் எனும் இடத்தில் ஒருவரைப் பார்த்து விட்டு வருவதாக மனைவிக்குப் பொய் கூறிவிட்டு, தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு, கைவேலி நோக்கிப் புறப்பட்டான்.

மாத்தளன் கடற்கரையில் இருந்து கப்பல்றோட்டு வழியாக வந்து, பிரதான கிறவல்வீதியில் ஏறி ஓடிக்கொண்டி ருந்தது அவனது மிதிவண்டி. எதிரே சிலர் தலையில் மூடை முடிச்சுகளுடன் கால்நடையாக வந்து கொண்டிருந்தனர். இடம்பெயர்ந்துவந்த ஒரு குடும்பமொ ன்று இரணைப்பாலை மாதா கோவில் முன்பாக இளைப்பாறிக் கொண்டிரு ந்தது. அருகே சிலமாடுகளும் மேச்சலுக்குச் செல்ல மனமன்றி, சோர்ந்துபோய் படுத்திருந்தன. மாடுகளுக்கு எதிர்த்திசையில் பல நாய்கள் கூட்டமாகச் சேர்ந்தநிலையில், ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

நாய்கள் ஊளையிடுவது அபசகுனத் துக்குரியது… என்பது அவனது ஆன்மீக நம்பிக்கை. பொதுவாக, ஒருவர் இறப்பதற்கு முன், நாய்கள் இப்படி ஊளையிடுவதைக் கண்டிருக்கிறான். அப்படி யானால்…? அவனுக்கு திக்கென்று மனதுள் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது அவனது மனைவி அவன் வலைஞன்மடத்தில் நிற்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பாள்.

புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் காட்டுப்பக்கமாக ஷெல் ஒன்று விழுந்து வெடிக்கும் ஒலி கேட்கி றது. அவன் தனது மிதிவண்டியை நிறுத்தி விட்டு, அந்த இடத்தில் நின்ற வாறு யோசித்தான்.

‘கைவேலிப்பக்கம் போவமா? விடுவமா?’

எதிரே வந்த  சிறிய உழவு இயந்திர மொன்று அவனைக்கடந்து அப்பால் போனது.

‘சரி… போவம்!’

மனதில் துணிவு வந்தது. தனது மிதிவண்டியை பிரதான வீதியில் இருந்து உள்ஒழுங்கையில் திருப்பினான். ஷெல் கூவிவரும் ஒலிதனைக் கேட்டால், ஒருகணத்துள் நிலத்தில் விழுந்து படுத்து விடலாம். வெடிக்கும் ஷெல்லில் இருந்து பறக்கும் ஈயத்துகள்களை மரம் தடிகள்  கூடுமான வரை தடுத்து நிறுத்தும்… என்ற நம்பிக்கையோடு சென்று கொண்டிரு ந்தான்.

ஆள்களற்ற வீட்டில் சிலரது நடமாட்டம் தெரிந்தது. அவர்கள் கள்வராகவும் இருக்கக் கூடும். எரிகிற வீட்டில் பிடுங்குவதே இப்போது பலருக்குத் தொழிலாகி ப்போய்விட்டதை அவன் உணர்ந்தான். அவனுக்கு தனது வீட்டின் நினைவு வந்தது. கிடுகினால் வேயப்பட்ட ஒரு சிறுவீடு. அவனது குடும்பத்துக்குப் போதுமான வீடு அது. வீட்டை நினைக்க அவனுக்கு கவலை அதிகரித்தது.

உள் ஒழுங்கைகளால் ஓடிக்கொண்டிரு ந்த அவனது மிதிவண்டி, இப்போது வேறு ஒரு பிரதான வீதியில் ஏறி…ஓடிக்கொண் டிருந்தது. சுற்று வட்டமெங்கும் அமைதி கலந்த ஓர் அச்சநிலை காணப்பட்டது. தெருவில் ஓரிருவர் ஆங்காங்கே மிதிவண்டிகளில் வந்து கொண்டிருப்பது அவனுக்கு சற்று ஆறுதலைக் கொடுத் தது.

அவன் தன் வீட்டு வளவினுள் நுழைந்தான். அங்கே வீட்டு முற்றத்தில், நான்கு பேர் துவக்குகளுடன் நின்றார்கள். அவனது வருகையை அவர்கள் விரும்பவில்லை என்பதை அவர்களின் முகங்கள் வெளிக்காட்டி நின்றன.

“எதுக்கு இஞ்சை வந்தனீங்கள்?”

கேள்வி கேட்டவனின் குரலில் கடுமை இருந்தது. அவனுக்கோ கடும் சினம் பொங்கியது.

“இது எங்கட வீடு. வீட்டைப் பாத்திட்டுப் போவமெண்டு வந்தனான்”.

கேள்வி கேட்டவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்தான் அவன்.

துவக்கு வைத்திருந்தவன் எதுவும் கூறவில்லை. கடுப்பேறிய தனது முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

வீட்டின் உள்கதவு உடைக்கப்பட்டு, அறையினுள் இருந்த பொருள்கள் பலவும் சூறையாடப் பட்டிருந்தன. அவனுக்கு அதிர்ச்சியும் கவலையும் ஒருங்கே சேர்ந்தன. திரும்பி துவக்கு களுடன் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

“கதவு உடைச்சுக் கிடக்குது. ஆர் உடைச்சது?”

“ஆமி வந்து உடைச்சிருப்பான்…”

துவக்குக் கூட்டத்திலிருந்து வந்தது பதில்!

“ஆமி வந்து உடைக்கும் வரைக்கும் நீங்கள் என்ன செய்தனீங்கள்?”

“ஹலோ…………..! வீட்டைப் பாக்க வந்தால், பாத்திட்டுப் போம்.  தேவையில்லாமல் உதில நிண்டுகொண்டு விசர்க் கதை கதையாதையும்”.

அவன் எதுவும் கூறவில்லை. தான் நிற்கும் சூழ்நிலையை உணர்ந்தான். மனித சஞ்சாரமற்ற, எதுவித சாட்சிகளுமற்ற அந்தச் சூழ்நிலையில், தனக்கு எதுவும் நேரிடலாம்… என்ற அச்ச உணர்வு அவனுள் எழுந்தது. மனைவி மற்றும் பிள்ளையின் முகங்கள் ஒருகணம் மனத்திரையில் வந்துவிட்டு  மறைந்தன.

அவன் திரும்பிக் கிணற்றடிப்  பக்கம் வந்தான். கிணற்றை ஒருதடவை எட்டிப் பார்த்து விட்டு, பக்கத்து வேலியோரம் சென்று தனது மைத்துனரின் வீட்டை எட்டிப் பார்த்தான். அங்கே முற்றத்தில் தாழப்பதிந்த வேப்பமரக்கிளையொன்றில் தோல் உரிந்த நிலையில், ஒரு குட்டி ஆடு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக்குட்டியின் தோலை இடுப்பினில் ‘பிஸ்டல்’கொழுவியிருந்த ஒருவன் மேலும் உரித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு தலைக்குள் விறைக்கத் தொடங்கியது. திரும்பி தனது வீட்டின் முற்றத்துக்கு வந்தவன், தற்செயலாகத் திரும்பி வளவின் பின்பக்கத்தைப்பார்த்தான்.

நட்ட மரவள்ளித்தடிகளில் அரைக் கரைவாசி கிழங்குகளோடு பிடுங்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஏனைய கிழங்குத் தடிகளில் ஒன்றை இரு துப்பாக்கிக்காரர் இழுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவன் மெளனமாக தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினான். தெரு இப்போது வெறிச்சோடிப்போய் இருந்தது. அதேநேரம் மாதா கோவில் வளவினுள் அபசகுனமாக ஊளையிட்ட நாய்களும் நினைவினில் வந்து நின்றன.

விடுதலைக்கான பயணம் திசைமாறிப் பயணிப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அமைப்புக்குள் எங்கேயோ பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டு விட்டதையும், அந்த வெடிப்பினூடாக விரும்பத்தகாதவர்கள் ஊடுருவி விட்டதையும் சமகள நிகழ்வுகள் சாட்சியங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆமி கிளிநொச்சியைவிட்டு வெளிக்கிட்டு விட்டான்… என்ற செய்தி வெறும் புனைவல்ல என்பது புரிந்தது அவனுக்கு.

கதை விரியும்

அலெக்ஸ் பரந்தாமன்-புதுக்குடியிருப்பு-இலங்கை

 

 

https://naduweb.com/?p=11532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தீவிரவாதிகள், தமிழர்களையே கொன்றார்கள், மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சிங்களவன், இந்தியன், முழு உலகும் சொல்லியாயிற்று. இப்போதுவரை மீதமிருந்தது தமிழர் மாடும்தான். இல்லாதவர்பற்றி எவர் பேசினால்த்தான் என்ன, இல்லாவிட்டால்த்தான் என்ன? எதுவுமே மாறப்போவதில்லை.

போராட்டம் பயணம் மாறிவிட்டது, எனது வீட்டுக் கதவு திறந்துகிடந்தது, துப்பாக்கியோடு நின்றவர்கள் பேசினார்கள்...............................நேரே புலிகள் என்று சொல்லலாமே? எதுக்கு இந்த முகமூடி பின்னால் நின்று "துப்பாக்கி ஏந்தியவர்கள்"? 

11 வருடங்கள் கடந்தபின்னரும் கூட வருகிறார்கள் சிலர். நானும் முள்ளிவாய்க்காலில் இருந்தேன் என்று கூறிக்கொண்டு. 

எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் மெல்ல மெல்லமாக உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவர, இப்போது நாமே புலிகளுக்கெதிராக வசைபாடிக்கொண்டு வருவோம். 

உலமே சேர்ந்து அழித்தவர்கள் மேல் வசைபாடி, குற்றவாளிகள் என்று முத்திரை குத்தி, உங்கள் காழ்ப்புணர்வுகள் வழிந்தோடும்வரை கிறுக்குங்கள். பிணங்களுடன் புணர்ந்த மிருகங்களுக்கு இந்தக் கிறுக்கல்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை. 

நன்றி கெட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரஞ்சித் said:

போராட்டம் பயணம் மாறிவிட்டது, எனது வீட்டுக் கதவு திறந்துகிடந்தது, துப்பாக்கியோடு நின்றவர்கள் பேசினார்கள்...............................நேரே புலிகள் என்று சொல்லலாமே? எதுக்கு இந்த முகமூடி பின்னால் நின்று "துப்பாக்கி ஏந்தியவர்கள்"? 

 

இப்போதும் நேரே சொல்ல பயம் இருக்கின்றதாக்கும்.

எல்லோருக்கும் சொல்ல/எழுத ஏதோ இருக்கும்தானே. புதிதாக ஏதாவது சொல்கின்றார்களா பார்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:.

விடுதலைக்கான பயணம் திசைமாறிப் பயணிப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அமைப்புக்குள் எங்கேயோ பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டு விட்டதையும், அந்த வெடிப்பினூடாக விரும்பத்தகாதவர்கள் ஊடுருவி விட்டதையும் சமகள நிகழ்வுகள் சாட்சியங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

1 hour ago, ரஞ்சித் said:

புலிகள் தீவிரவாதிகள், தமிழர்களையே கொன்றார்கள், மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சிங்களவன், இந்தியன், முழு உலகும் சொல்லியாயிற்று. இப்போதுவரை மீதமிருந்தது தமிழர் மாடும்தான். இல்லாதவர்பற்றி எவர் பேசினால்த்தான் என்ன, இல்லாவிட்டால்த்தான் என்ன? எதுவுமே மாறப்போவதில்லை.

போராட்டம் பயணம் மாறிவிட்டது, எனது வீட்டுக் கதவு திறந்துகிடந்தது, துப்பாக்கியோடு நின்றவர்கள் பேசினார்கள்...............................நேரே புலிகள் என்று சொல்லலாமே? எதுக்கு இந்த முகமூடி பின்னால் நின்று "துப்பாக்கி ஏந்தியவர்கள்"? 

11 வருடங்கள் கடந்தபின்னரும் கூட வருகிறார்கள் சிலர். நானும் முள்ளிவாய்க்காலில் இருந்தேன் என்று கூறிக்கொண்டு. 

எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் மெல்ல மெல்லமாக உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவர, இப்போது நாமே புலிகளுக்கெதிராக வசைபாடிக்கொண்டு வருவோம். 

உலமே சேர்ந்து அழித்தவர்கள் மேல் வசைபாடி, குற்றவாளிகள் என்று முத்திரை குத்தி, உங்கள் காழ்ப்புணர்வுகள் வழிந்தோடும்வரை கிறுக்குங்கள். பிணங்களுடன் புணர்ந்த மிருகங்களுக்கு இந்தக் கிறுக்கல்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை. 

நன்றி கெட்டவர்கள்.

 

32 minutes ago, கிருபன் said:

இப்போதும் நேரே சொல்ல பயம் இருக்கின்றதாக்கும்.

எல்லோருக்கும் சொல்ல/எழுத ஏதோ இருக்கும்தானே. புதிதாக ஏதாவது சொல்கின்றார்களா பார்ப்போம்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 03 -‘இடப்பெயர்வு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%

 

ஓவியம் : டிசாந்தினி நடராசா

கிறவல் வீதியில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது உழவு இயந்திரம். பள்ளங்கள் நிறைந்த வீதிமீது இயந் திரத்தை மிகக் கவனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அதன் சாரதி. உழவு இயந்திரத்தின் முன்பாகவும் பின்பாகவும் வேறுசில வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பெட்டியின் இருபக்கவாட்டிலும் மக்கள் தங்கள் மிதிவண்டிகளில் நகர்ந்தவண்ணமிருந்தனர்.

காற்று கிறவல்வீதியின் செம்மண் புழுதியை பாரபட்சமின்றி எல்லோர் மீதும் வாரியிறைத்தபடி தன் பாட்டுக்கு வீசியபடியிருந்தது. மதியம் கடந்த பொழுதாயினும், வெயிலின் தாக்கம் குறையாத நேரம் அது. உழவு இயந்திரப்பெட்டியின்மேல் பொருள்களோடு பொருள்களாக சிவத்தாரும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள். உழவு இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தது.

‘போக்கறுந்து போவார்… நாசமறுப்பார்… ‘ தமிழீழம்’ எண்டு போராட வெளிக்கிட்டு, இப்படியே தெருத்தெருவா நாயாபேயா அலைய வேண்டிக் கிடக்குது…’

வார்த்தைகள் அவருக்குள் குமுறுகின்றன. அவற்றை வெளியே கொட்டப் பயந்தவர் அப்படியே தன்னுள் அடக்கிக் கொண்டார்.

வாழ்க்கையில் இயலாமைகளில் எழும் மன அவதிகளோடு, உடல் அசெளகரியப்படும் பொழுதுகளில் இப்படியான வார்த்தைகள் அவருள் பீறிட்டு எழும். ஆனால், வெளியே உரைத்து விடுவதற்கு உள்ளூர  எழுந்து  நிற்கும் அச்சம் அவரைத் தடுத்து விடும்.

சிவத்தாருக்கு இது நான்காவது இடப்பெயர்வு! அவரால் தாக்குப்பிடிக்க முடியவிவில்லை. ‘மன்னாரில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறிவிட்டது…’ என்ற செய்தி பரவலானபோது, அவர் அது குறித்து அச்சப்படவில்லை. அலட்சியப்படுத்தினார்.

‘உதுகள்(புலிகள்) விடாதுகள். எப்பிடியும் அடிச்சுக் கலைச்சு உள்ளுக்கை தள்ளிப் போடுங்கள்…’ என்றுதான் நினைத்தார். அவரது கணிப்பீடு ஒரு வாரம் கழியத் தவறாகி விட்டது. அவருக்கு மனம் இருப்புக் கொள்ள வில்லை. தகிப்பும் தவிப்புமான இருமன நிலை உணர்வு அவருக்குள் எழுந்தவண்ணமிருந்தது.

நகரின் மத்தியில் பிரபலமான பல்பொருள் வாணிபம், ஊரின் ஒதுக்குப் புறத்தில் அரிசி ஆலை. அதனோடிணைந்த தோட்டவெளி என்று எல்லாவற்ருக்கும் உரித்துடையவர். அவரது அதிகார ஆளுமையின் கீழ் பல தொழிலாளிகள் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். ஆலை மற்றும் வாணிபக்கடையில் ஊர் இளைஞர்கள் இருவருடன், மலையகத்தைச் சேர்ந்தவர்களும் வேலை செய்தார்கள். தோட்டவேலைகளுக்கு மட்டும் சமூகத்தில் பின்நிலைப்படுத்தப்பட்டவர்களும் சாதிரீதியில் குறைவானவர்கள் என்று கூறப்படுவோரும் நாள்கூலிகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தனக்கான சுயகெளரவத்தோடு கூடிய எந்தவொருவிடயத்திலும் தனக்குக் கீழே பணிபுரியும் தொழிலாளர்கள் வரம்புமீறாதபடிக்கு அவர்களை அந்தந்த நிலைகளில் வைத்து வேலையை வாங்கினார் சிவத்தார். காரணம், அவர் தன்னை எப்பொழுதும் ஓர் உயர்சாதிமானாக உருவகப்படுத்தி வாழ்பவர். ‘ காசுக்காரன்’ ,’வெள்ளாமாள்’… என்ற அடைமொழி அவரது பெயருக்கு முன்பாக நிமிர்ந்து  நகர்ந்து போனாலும், புலிப்பொடியள் பலருக்கு மத்தியில் சில நேரங்களில் சில இடங்களில்  பணிந்து குனிந்து அடங்கிப்போக வேண்டியிருந்தது.  இது குறித்து அவர் தனக்குள் குமையாத நாள்களே இல்லை.

பொதுவெளிக்குத் தெரியாமல் தன் மூலதனத்தை விரிவாக்கம் செய்து கொண்டிருந்ததன் நிமித்தம், சேரும் பணத்திற்கும் சாதித்தடிப்புக்கும் ‘ பொடியள்’ எடுபடாமல்போவது அவருக்கு உளரீதியான தாக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. அவர் தனது வருமானத்தை ஒரு மந்தநிலைபோல் மற்றவர்களின் பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும், அவரது செயல்பாடுகள் குறித்த தகவல்கள், அமைப்பின் மேலிடத்துக்கு சென்றவண்ணமே இருந்தன.

பொடியள் அடிக்கடிவந்து நிதி கேட்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் ‘ பஞ்சப்பாட்டு’ பாடினார். நாளடைவில் ‘ஒப்பாரிஓலம்’ ஓதத் தொடங்கினார். பொடியளும் விடவில்லை. மறைமுக கண்காணிப்புடன் அவரைப் பின்தொடர்ந்தவண்ணமே இருந்தனர்.

சிவத்தாருக்கு புலிகள் இயக்கம்மீது வெறுப்பு வந்துவிட்டது. ‘ வரி’ எனும் பெயரில் நிதி வசூலித்து, உடம்பு நோகாமல் பணம் சேர்ப்பதை அவர் தனக்குள் ஒரு கெளரவப் பிரச்சினையாகவே பார்த்தார். இதன் நிமித்தம் அவருக்குள் மெல்ல வளரத் தொடங்கியது பகையுணர்வு.

‘தூத்தேறிக் கூட்டங்கள்… உதுகள் எண்டைக்கு இந்த மண்ணைவிட்டுத் துலையுதுகளோ… அண்டைக்குத்தான் எங்களுக்கு நிம்மதி…’ என்று அவர் தனக்குள் சாபம்போட ஆரம்பித்தார்.

ஒருதடவை தனது தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரை வேலையில் பிழைகண்டு பிடித்ததன் நிமித்தம், பேச்சோடு பேச்சாக அவரைப் பார்த்து அவரது சாதியத்தைக்கூறிப் பேசிவிட்டார்.

ஆனால், அவரோ மாவீரர் குடும்பம். தனது மூன்று பிள்ளைகளை விடுதலைப் போருக்கு ஆகுதியாக்கினவர். அவர் நேரே தனது பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் சென்றார். பொறுப்பாளர் இந்த விடயத்தை தலைமைச் செயலகத் திடம் பாரப்படுத்தினார். விசாரணைக்கு வரும்படி சிவத்தாருக்கு அழைப்புக் கட்டளை

வந்தது. சாதித்தடிப்பும் மிதமிஞ்சிய பணமும் விசாரணை தன்னை என்ன செய்துவிட முடியும்…? என்ற திமிர் அவருக்குள் ஊறியிருந்தது. ‘காசுக்காக தங்களைப் போன்ற முதலாளிகளை நம்பித்தானே புலிகள் அமைப்பு இருக்கிறது.’ என்ற மனவோட்டம் அவரிடமிருந்தது. ‘எப்படியும் அவர்கள் தன்னிடம் வரத்தானே வேண்டும்.’ எனும் நினைப்பும் இருந்தது. இதன்நிமித்தம் அவர் விசாரணைக்குப் போனார். சாதியிலூறிய பணத்தடிப்பு அவரது சுயபுத்தியை பலவீனமடையச் செய்திருந்தது.

“ஓம்… நான் சொன்னனான்தான். ‘**ப்பொறுக்கி’ எண்டு சொன்னனான்தான். அதுக்கிப்ப என்ன?”  சிவத்தாரின் தடிப்புக் குணம் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க விடவில்லை.

பொறுப்பாளர் எதுவும் கூறவில்லை. முறைப்பாடு கொடுத்தவரை வீடு செல்லும்படி பணித்தார். சிவத்தாருக்கு மூன்றுமாதங்கள் அமைப்பின் கோழிப்பண்ணையில் வேலை செய்யுமாறு ‘பணிஷ்மன்’ வழங்கப்பட்டது. சிவத்தாரால் அந்தத் தண்டனையை ஏற்கவும் முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்கவும் தெரியவில்லை. தண்டனை முடிந்து வெளியே வந்த பின்பும் அவருக்குள் இருந்த அந்தத் ‘தடிப்பு’ இருந்ததைவிட மேலும் திமிறத் தொடங்கியது.

“வீட்டுக்கொருவர் நாட்டுக்காக விரைந்து வாரீர்…” என்ற பிரசாரத்தை அமைப்பின் பரப்புரையினர் முன்னெடுத்தபோது, பணத்தைச் செலவழித்து ‘ஏதோ ஒருவழியில்’ அவர் தனது இரண்டு மகன்களையும் ஒரேமகளையும் மன்னார் – இராமேஸ்வரக்  கடல்பாதையூடாக அந்நிய தேசத்திற்கு அனுப்பி விட்டார். பிள்ளைகள் பத்திரமாகப் போய்சேர்ந்து விட்டபோதிலும், அவர்களால் தனக்கும் தன்மனைவிக்கும் செய்யவேண்டிய அந்திமகால காரியங்கள் குறித்து மனம் கவலைப்படவே செய்தது.

வன்னிப்பெருநிலப்பரப்பினுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. துக்கரமான பலநிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்றவண்ணமிருந்தன. வீரச்சாவுகள், விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களின் உடல்கள், உடைமைகள் சேதாரமாகின. எங்கும் ஒரே இழவுகளாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது வன்னிப் பெருநிலப்பரப்பு.

மண்ணில் நிகழும் அவலங்களைப் பார்த்த சிவத்தாருக்கு எதையும் நம்பமுடியவில்லை. நாளுக்குநாள் ஏற்பட்டுவரும் அசாதாரண சூழ்நிலைகள் அவருக்கு எதுவும் புரிபடுவதாக இல்லை. ஏன் இப்படிப் போகிறது…? இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது…? என்பது குறித்து பொதுமக்களைப் போன்றே அவருக்குள்ளும் பலத்த சந் தேகங்கள் எழுந்தன.

புலிகள் தமது போராட்டத்துக்கான ஆள்பற்றாக்குறையைப் போக்குவதற்கு பொதுமக்களைப் பங்களிப்புச் செய்யுமாறு கோரியபோது, மேட்டுக் குடிவர்க்கமும், நடுத்தரவர்க்கத்தில் பெரும்பாலானவர்களும் ‘கள்ளமெளனம்’ காத்தார்கள். தாழ்நிலை வர்க்கத்திலிருந்தே பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தங்கள் பங்களிப்பைச் செய்ய முன்வந்தனர். இது புலிகள் அமைப்பின் தலைமைப்பீடத்துக்கு சற்று நெருடலைக் கொடுத்திருக்க வேண்டும்.

‘போராட்டத்தில் இணையுங்கள். இல்லையேல் ஆமியை யாழ்ப்பாணத்துக்குள் வரவிடுவம்.’

எனப் புலிகள் மிரட்டியதாக ஒரு ‘வாய்மூல வதந்தி’ பரவியதை சிவத்தார் அறிந்திருந்தார். பின்பு சிங்கள இராணுவம் யாழ்நகருக்குள் ஊடுருவ, அதற்கு ‘வலிகாம இடப்பெயர்வு’ எனும் நாமம் பொறித்ததையும் சிவத்தார் நினைத்துப் பார்க்கிறார்.

‘ஒருவேளை அந்த வலிகாம இடப்பெயர்வுக்கான சூழ்நிலைகள்தான் இப்பவும் வன்னியில் அமைஞ்சிருக்குதோ…?’ சிவத்தாரின் மனதுக்குள் வலுவடையத்தொடங்கியது சந்தேகம்.

“தம்பி! கவனமாப் பாத்துப் போ…”

சிவத்தாரின் மனைவி உழவுஇயந்திர சாரதியைப் பார்த்துக் கூறுகிறாள். சாரதிக்கு அவள் கூறியது கேட்கவில்லை. கிறவல்வீதி சீரில்லாமல் இருந்தினால், அவனது கவனம் முழுக்க வீதியிலேயே நிலைத்திருந்தது. தூரத்தே வீதியின் அருகோரம் ஒரு ‘லான்ட்மாஸ்டர்’ இயந்திரம் பெட்டியோடு பொருள்கள் உட்பட சரிந்து விழுந்து கிடந்ததைக் கண்டி ருக்க வேண்டும்.

கிளிநொச்சி நகரினுள் ஷெல்கள் விழ ஆரம்பித்தவுடன், சிவத்தார் தனது பல்பொருள் வாணிபத்தையும் ஆலையில் இருந்த நெல் மற்றும் அரிசிமூடைகளையும் விசுவமடுவுக்கு இடம்மாற்றி, இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆமி பரந்தனுக்கு வந்துவிட்ட செய்தியை அறிந்ததும், மீண்டும் நான்காவது தடவையாக இடம்மாற வேண்டிவந்து விட்டது சிவத்தாருக்கு. மனதுக்குள் புலிகளைத் திட்டிச் சாபம் போட்டவாறு இப்போது மாத்தளன் கடற்கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

பொழுது மெல்ல இறங்கி விட்டிருந்தது. நீலம்பாரித்த பெருங்கடல் கிழக்கே பரந்திருந்தது. காற்றும் ஒருவித ஓசையுடன் வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையை அண்டிய பகுதிகள் எங்கும் ஏற்கனவே வந்தமக்கள் தரப்பாள் கொட்டில் அமைத்து குடியிருந்தார் கள். மக்கள் தொடர்ந்தும் கடற்கரையை நோக்கி வருவதைக் கண்டதும், நிலம்பிடிக்கும் போட்டியைத் தவிர்க்க, சிவத்தார் அவசரம் அவசரமாக அருகில் இருந்த இருவரைக் கூலிக்கு அமர்த்தி, தரப்பாள் கொட்டிலைப் போட்டுக் கொண்டார்.

0000000000000000000000000000

மாலைப்பொழுது கவிழ்ந்து இருள் எங்கும் பரவியிருந்தபோதிலும், முன்நிலவின் ஒளியானது  நிலத்தில் மட்டுமன்றி கடல்நீரிலும் வியாபித்திருந்தது. தரப்பாள் வீடுகளில் ஆங்காங்கே தெரியும் லாம்பு வெளிச்சம் மனிதமுகங்களை இனம் காண உதவியது.

சிவத்தார் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவருக்கு இயற்கை உபாதை ஏற்பட்டிருந்தது.  கடற்கரை வெளியைத்தவிர, வேறு மார்க்கம் தெரியவில்லை. கடற்கரைக்கு வந்ததும் அவர் திகைத்துப் போனார். கரைநீளத்திற்கு ஆண் – பெண் என்ற பேதமின்றி கிழக்குமுகம் பார்த்தவாறு எல்லோரும் தங்கள் உடைகளை இடுப்புக்கு மேலே தூக்கியபடி குந்திக்கொண்டிருந்தார்கள். ஒரே இடநெருக்கடி! குந்தியவர் எழும்பியதும் உடனே இன்னொருவர் ஓடிவந்து குந்துவதுமாக அந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

‘சே… என்ன அரியண்டம்…’ என்று மனம் அருக்களித்துக் கொள்கிறது சிவத்தாருக்கு.

சிலவிநாடிகளின்பின், அவருக்குப் பக்கத்தில் குந்தியிருந்த கிழவியொருத்தி தனது கடமையை முடித்துக்கொண்டு எழுந்தபோது, ஒருவர் வேகமாக வந்து அந்த இடத்தில் குந்தினார். சிவத்தார் சற்று தலையைத் திருப்பி குந்தியவரைப் பார்த்தார். நிலவொளியாயினும் குந்தியவரது முகம் தெளிவாகத் தெரிவில்லை. எங்கும் ஒரே மலவெக்கை. எல்லோரும் மூக்கைப் பொத்தியபடி இருந்தார்கள்.

சிவத்தார் எழுந்து கொண்டார். கூடவே அவருக்குப் பக்கத்தில் இருந்தவரும் அலைநீரில் கையைக் கழுவிவிட்டு, சிவத்தாருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். இடைவழியில் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தபோது, ஒருபெட்டிக் கடையில் தொங்கவிடப்பட்ட லாம்பு வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது.

‘அட…! இவனா…?’

சிவத்தார் பதறிப்போனார். அவர் வேறு யாருமல்ல.  ஒருநாள் இயக்கப் பொறுப்பாளருக்கு முன்பாக ‘**ப்பொறுக்கி.’ என விளிக்கப்பட்ட வரும், சிவத்தாரின் தோட்டத்தில் நாள்கூலியாக வேலை செய்தவருமான கதிரன் என்பவர்.

எந்த இடத்திலும் கதிரனது சமூகத்தை தங்களுடன் சமநிலையில் வைத்துப் பார்க்க விரும்பாத சிவத்தாரின் மேட்டுக்குடி உணர்விலூறிய சாதித்தடிப்பும் பணத்திமிரும் கடற்கரையில் ‘கக்கா’ கழிக்க வந்த இடத்திலும், கதிரன் தனக்கு சமநிலையாக இருந்ததை ஏற்க மறுத்தது.

தறப்பாள் கொட்டிலுக்கு வந்தவர், மனைவியிடம் விபரத்தைக் கூறிவிட்டு, வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

“பொடியளுக்குக் கேட்டாலும் பேசாமல் இருங்கோ…”

“நீ பொத்தடி வாயை…” சிவத்தார் தன் மனைவியை அதட்டினார்.

மனிதர்களின் கழிவுகளை எதுவித பேதமுமின்றி, மாத்தளன் கடல் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருந்தது. அதற்கு பிரிவினை எண்ணம் கிடையாது. சாதிமத பேதம் தெரியாது. ஒவ்வொரு இரவுகளிலும் அதிகாலை வேளைகளிலும் அந்த மனிதர்கள் கழிக்கும் கழிவுகள் நீரோடு கலந்தபடி… கரைந்தபடி…

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

 

https://naduweb.com/?p=11786

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 04 -‘பிள்ளைபிடிகாரர்’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

இரத்தத்தின் கதை

எங்கும் அவலக்குரல்களும் அந்தரிப்பு நிகழ்வு களுமாக கடற்கரைப்பகுதி காட்சியளித்துக் கொண் டிருந்தது .உப்புநீர்க் கடலலைகளும் அன்று ஏனோ ஆர்ப்பரித்து எழாமல் அமைதியாகக் கிடந்தன.வீசும் காற்றும்கூட கள்ள உறக்கத்தையே கடைப்பிடித் தது. கதிரவன் மட்டும் உச்சிப்பொழுதில் தனது காங்கைகளை உக்கிரமமாக வெளிப்படுத்திக் கொண்டதில், காலடி மண்துகள்கள் கொதிநிலை கொண்டு தகித்தன.

அதுவோரு கனத்தநாள்… என்பதை வெளிப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் தமது முனைகளில் இருந்து ஏவும் ஷெல்கள் பலவும், ஒன்றன்பின் ஒன்றாக விண்ணதிரக் கூவியபடி… தரப்பாள் வீடுகளின்மேல் விழுந்து வெடித்துக் கொண்டிருந் தன. சிதறும் ஷெல்களில் இருந்து பரவும் ஈயத் துண்டுகள், ஏனைய தரப்பாள் கூரைகளையும், பாதுகாப்பற்ற மனிதர்களையும் துளையிட்டபடி… மறுபக்கமாகப் போய் விழுந்தன. சில தரப்பாள் வீடுகள் எரிகுண்டுகளின் நிமித்தம், தீப்பிடித்து எரியும் நிலையில்… அதை அணைப்பதற்கு ஆள்களற்று அதற்குள் இறந்து கிடந்தவர்களும் கருகிக் கொண்டிருந்தனர்.

வன்னிப்போர்க்களமுனை அதிர்ந்து கொண்டிருந்தது. புதுக்குடியிருப்பையும் மாங்குளத்தையும் இணைக்கும் ஒட்டுசுட்டான் பிரதானவீதியில் மன்னாக்கண்டலுக்கும் கற்சிலைமடுவுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருந்த மோதலில், இராணுவத்தரப்புக்கு புலிகள் பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.அதனால்தான் என்னவோ அவர்கள் அன்றைய பகல்பொழுதினில், ஷெல்வீச்சுக்களை மிகவும் மூர்க்கத்தனமாக நடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஷெல்கள் வந்து விழுவதும் அவை வெடித்துச் சிதறுவதும் ஓய்வதாக இல்லை. அதேவேளை, அவலக்குரல்களும் நின்றபாடாக இல்லை. பரமன் பதுங்குகுழிக்குள் மனம் இறுகிய நிலையில் இருந்தான். வெளியே உதவிகோரி அழைப்பவர்களின் குரல்கள் அவனது செவிகளில் வந்து விழுகின்றன. அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை. அவனுக்கு அக்கணத்தில் தனது உயிர் முக்கியமாக இருந்தது. ஆனால், அது சுயநலப்பாங்கானதல்ல. பாதுகாப்பற்ற… அதேசமயம் எந்தநேரத்திலும் எதுவும் நடந்துவிடக் கூடும்… என்ற அச்ச மனோநிலையில், யாரும் எவருக்கும் உதவிசெய்ய முடியாததாகவே இருந்தது. அவரவர் தங்களுக்கான இழப்பின் துயர்களை அவர்களே அழுதுகுளறி ஆற்றுப்படுத்த வேண்டியிருந்தது.

தறப்பாள் வீடுகளுக்கு வெளியே ஆள்நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், மனம் சலித்து வாழ்வின் விரக்திநிலைக்கு உச்சமாய் வந்துவிட்ட ஒருசிலரே “வருவது வரட்டும்…” என்ற மனப்பாங்குடன்ஆங்காங்கு உலாவிக் கொண்டிருந்தார்கள். ஷெல்கள் தொடர்ந்தும் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.

‘இண்டைக்கு என்ன நடந்தது? ஏன் இப்படிச் ஷெல்லுகளை அடிக்கிறாங்கள்…?’

பரமனுக்குக் குழப்பமாக இருந்தது.

“ஆமிக்காரருக்கு என்னவோ நடந்திட்டுது…”

பதுங்குகுழிக்குள் பரமனோடு இருந்த ஒருத்தர், அங்கு நிலவிய மெளனத்தைக் கலைக்கும் முகமாக தனது மன எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

“அதுக்காக இப்படியே ஷெல்லை அடிச்சுச் சனத்தைச் சாக்காட்டுறது…?”

குழிக்குள் இருந்த குடும்பப் பெண்ணொருத்தி வார்த்தைகளால் பொரிந்து தள்ளிளாள்.

பரமன் எதுவும் பேசவில்லை. மெளனமாக இருந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது மனைவி சப்பாணம் கட்டிய நிலையில் இருந்தாள். அவளது மடியில் அவர்களது குழந்தை வாயில் சூப்பியுடன் புறநிகழ்வுகள் எதுவும் அறியாது, தாயின் மார்போடு சாய்ந்திருந்தது.

“போற போக்கைப் பார்த்தால், நிலமை மோசமாகும் போலைதான் கிடக்குது. ஆராச்சும் இப்படி நடக்குமெண்டு எதிர்பாத்தவையே! இது எங்கையோபோய் முட்டிமோதிப்போட்டு நிக்கும்தானே…. நிக்கட்டும்! ” கூறிக்கொள்கிறார் குழிக்குள் இருந்த இன்னொருத்தர்.

அவர் கூறிய கருத்து சரியெனப்பட்டது பரமனுக்கு.

எந்தவொரு செயல்களுக்கும் அது நன்மையோ தீமையோ ஒரு முடிவு என்பது உண்டு. அந்தச்செயல்களின் பாவ புண்ணியத்தைப் பொறுத்தே அதன் நன்மையும் தீமையும் அமைகின்றன. “நீ எதை விதைக்கிறாயோ அதை அறுவடை செய்யாமல் மதிப்பதில்லை…” என ஓர் ஆகமநூல் கூறுகின்றது. அப்படியானால், வன்னிப்போர்க்கள நிலைமையின் பலாபலன் தான் என்ன? இதன் அறுவடை நன்மையாக முடியுமா? அன்றித் தீமையாக முடியுமா?

விடுதலைக்கான போராட்டம் திசைமாறிப் பயணிக்கும் போதே, அதன் இலக்கு ஒரு பூச்சியமாக மாறி, வெறும் புள்ளியாக முடிவுறப் போகுது… என்பதை மட்டும் பரமனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு இது ஏற்கனவே விளங்கிய விடயம்தான்.

ஒருசிறு கைத்துப்பாக்கியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் இனத்துக்கான விடுதலைப் போராட்டம், விலைமதிக்கமுடியாத ஆயுதங்களோடு வீங்கிப் பெருத்து நிற்கும் தருணத்தில், அப்போராட்டத்தை நிலை குலைப்பதற்காக முன்நகர்த்தப்படும் செயல்கள் தீவிரமடைந்து திசைமாறிப் பயணிப்பதையும் பரமனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

தெருவெங்கும் ‘பிள்ளைபிடிகாரர்’ உலாவத் தொடங்கிய போதே அவனது உள்ளுணர்வு ஏதோ ஒருவகையில் அவனை எச்சரித்துக் கொண்டிருந்தது. அவனும் இளவயதுடையவனாக இருந்தான். ஒரு குழந்தைக்குத் தந்தையாக… ஒரு பெண்ணுக்குக் கணவனாக… குடும்பப் பொறுப்புள்ளவனாக இருந்தான். களமுனைக்குத் தேவையான உடல்வாகு அவனிடமிருந்தது. இதனால், என்றாவது ஒருநாள், தானும் சிக்கல்களுக்கு உள்ளாகவேண்டிவரும்… என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவன் நினைத்ததுபோலவே நடந்தும் விட்டது.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் விவசாயச் செய்கைக்கு பெயர்போனது முத்தையன்கட்டு எனும் கிராமம். இக்கிராமத்தில் தனக்குத் தெரிந்த ஒரு கமக்காரரிடம் மரவள்ளித்தடிகள் வாங்கிக் கொண்டு, தனது மிதிவண்டியில் ஒட்டுசுட்டான் வீதிவழியாக வந்து கொண்டிருந்தபோது இடைவழியில் மன்னாகண்டல் எனும் இடத்தில் வழிமறிக்கப்பட்டான்.

பரமன் பதட்டமடையவில்லை. ‘ பிள்ளைபிடிகாரர்’ கேட்ட கேள்விகளுக்கு தக்கபதில்களை அவன் வழங்கினான். அவனிடமிருந்து சகல விபரங் களையும் உள்வாங்கிய அவர்கள், பலமணிநேரம் அவனைத் தடுத்து வைத்துவிட்டு, பொழுது மாலையானதும் வீடு செல்ல அனுமதித்தார்கள்.

போராட்ட அமைப்பின் ஆரம்பகாலக் கொள்கைகள் சிதிலமடையத் தொடங்கின. மக்களின் முகங்களில் கேள்விக்குறிக்கான உணர்வு பரவத் தொடங்கியது. சிங்கள அரசின் பொருளாதாரத்தடைகளுக்கு மத்தியில், வாழ்வதா? அன்றிச் சாவதா? என்ற எண்ணப்பாங்கு மக்களின் மனங்களில் பரவ ஆரம்பித்தது. பகைவனைவிட நண்பனாகத் தோற்றம் காட்டிய பலரும் இறுதியில் துரோகிகளாக மாறிப்போனார்கள். ‘தாகத்தில்’ தவித்தவர்களுக்கு இறுதியில் உப்புக் கடல்நீரே வழங்கப்பட்டது. கருத்துக் கூற எவருக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. இது ஏன்? எதற்கு? என்ற எதிர்வினையாற்றவும் அதை எழுதவும் துணிவு எழவில்லை. எல்லோரும் உயிருக்குப் பயந்து ஊரோடு ஒத்தபடி ஓடிக் கொண்டிருந் தார்கள்.

இறுதியில்… எல்லாவற்றையும் இழந்து ‘அம்மணமாகி’ நிர்க்கதியாய் நின்றார்கள். கையும் மனமும் வரண்டுபோயிருந்தன அவர்களுக்கு. வாழ்வதற்கு நிலம் இருந்தது. ஆனால், அவர்கள் வாழ முடியாதவர்களாக இருந்தார்கள். ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து, ஓரிடத்தில் பல ‘உபத்திரவங்களுக்கு’ மத்தியில் வாழத்தலைப்பட்டார்கள். மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல்வரை பரந்திருந்த நிலவெளியானது, மனிதர்களால் மட்டுமன்றி, மலவெக்கையாலும்
நிறைந்திருந்தது.

உண்ண உணவில்லை… உழைத்து உண்ணத் தொழில் இல்லை… நோய்க்கு மருந்தில்லை… பிரச்சினைத்தீர்க்க தலைமைக்கு வழி தெரியவில்லை… இந்த நிலையிலும், ” தூக்குங்கள் துப்பாக்கி… துணிந்துவிட்டால் எவன்பாக்கி…” என்ற பிரசார வாடையும் குறையவில்லை. இந்த வலிமிகுந்த வாழ்வியலுக்குள் மேலும் ஊடுவத் தொடங்கினார்கள் ‘ பிள்ளைபிடிகாரர்கள்’

எங்கும் ஒரே அவலக்குரல்கள்… ஒருபுறம் இராணுவத்தினரின் ஷெல்லடிகள்…மறுபுறம் விமானப் படையினரின் குண்டு வீச்சுகள்… இவைகளுக்கு நடுவில், அவலத்தைச்சுமந்து வந்தோரின் அல்லாடும் வாழ்வியலை மேலும் அச்சுறுத்தி. சிதைத்துக் கொண்டிருந்தது வன்னிப் போர்க்கள அரசியலும் போராட்டமும்.

சுமார் ஒருமணித்தியாலம்வரை பதுங்கு குழிக் குள் குந்திக்கொண்டும், சப்பாணம் கட்டிக்கொண் டும் இருந்ததால், பரமனுக்கு மேற்கொண்டும் அதற்குள் இருக்க முடியவில்லை. இராணுவத் தினரின் ஷெல்வீச்சுக்களும் சற்று தணிந்திருந்த நிலையில், தூரத்தில் எங்கேயோ பாரிய வெடியொலிகள் கேட்டவண்ணமிருந்தன.

“சரி ஒருக்கா வெளியிலை தலையை நீட்டிப் பார்ப்பம்…” என்று ஒருவர் கூறியபடி… ‘ L ‘வடிவத்தி
லான அந்தப்பதுங்குகுழியின் முன்பகுதியில் இருந்த ஒருத்தர், தவழ்ந்தநிலையில்… மெல்ல வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஒவ்வொருத்தராக வெளியே வந்தார்கள்.

பரமனும் தன் மனைவி பிள்ளையுடன் வெளியே வந்தான். கடற்காற்று தன்னில் குளிர்மையைச் சுமந்து வந்து அவன் முகத்தில் பட்டென அறைந்து விட்டுச் சென்றது. அந்தவலி மனதுக்கும் உடலுக்கும் சுகமளிப்பதாக இருந்தது அவனுக்கு.

ஷெல்கள் விழுந்து வெடித்த இடங்களில் தரப்பாள் வீடுகள் அலங்கோலமாகக் கிடந்தன. அதனுள் மனித உடலங்கள்… எங்கும் ஒரே இரத்தச் சிதறல்கள்… சதைத்துண்டங்கள்… உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் சாபவார்த்தைகள்… அந்தச் சாப வார்த்தைகளுக்குள் சிங்கள அரசும் இயக்கத்தின் தலைமையும் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தன.

மரணத்தை நோக்கி அடுத்தது யார்…? எவர்…? எங்கு…? என்ன வடிவத்தில்…? என்ற வினாக் களுக்கு எவருக்கும் விடை தெரியவில்லை. இருப்பினும், அவரவர் தங்கள் வாழ்வியக்கச் செயற்
பாட்டினுள் உள்நுழைந்து… மீண்டும் இயங்க ஆரம்பித்தனர்.

சற்று தூரத்தே ஒருமித்த அவலக் குரல்கள்… ஒலித்து வருவதைப் பரமன் அவதானித்தான். தனது தரப்பாள் கொட்டிலைவிட்டு நகர்ந்து, இடதுபக்கமாக சில அடிதூரம் நடந்தவன்… எதிரே வரும் சனக்கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றான்.

ஆண்கள் மற்றும் பெண்களாக… ஆறேழுபேரு க்கு மேற்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் ஒருசிறு பொதியைச் சீலைத் துணிகளால் சுற்றிக்கட்டிய நிலையில், அதைத் தூக்கிக் கொண்டு, கும்பிமணலினுள்நடக்க முடியாத நிலையிலும், ஓடிவந்து கொண்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து… ஏனையோர் குளறியபடி வந்தபடியிருக்க, அவர்களில் ஒரு பெண்னின் கைகளில் சிறு குழந்தையொன்றின் தலை. அதன் முகமெங்கும் இரத்தச் சிதறல்கள். குளறிவந்த கூட்டம் அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

பரமனின் தலைக்குள் கிபிர் விமானத்தின் மிகையொலி போன்ற உணர்வு… கண்கள் இருட்டிக் கொண்டு வருவதை அவன் உணர்ந்தான். தனக்கு ஏதோ நேரப்போவதை அவனால் ஊகிக்க முடிந்தது. அப்படியே அந்த இடத்தில் குந்திக் கொண்டான். இராணுவத்தினரால் ஏவப்பட்ட ஷெல் வீச்சுக்களின் அறுவடையின் ‘ஒரு பகுதி’ அதுஎன்பதை அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது.அதேநேரம் அவனைக் கடந்து சென்ற அவல ஒலிகளும் காற்றில் தேய்ந்த படி…மறைந்து கொண்டிருந்தன.

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்

 

https://naduweb.com/?p=12469

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்க மிச்சத்தை காணோம்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

இது எங்க மிச்சத்தை காணோம்  
 

அடுத்த இதழ் இன்னும் வரவில்லை!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 05 –‘இஞ்சருங்கோ…’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

 

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 அமரதாஸ்
 

அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மிகுந்த களைப்பாக இருந்தது அவளுக்கு. நத்தை நகருவது போன்றுஅவள், அவனுக்குப் பின்பாக மெல்ல நடந்து கொண்டிருந்தாள். தொடர்ந்தும் அடியெடுத்து வைக்க மிகவும் சிரமப்பட்டாள். அவளது கணவன் மிதிவண்டியை உருட்டியபடி அவளின்  நடைக்கிசைவாக நடந்தபடியிருந்தான். மிதிவண்டிமீது பல்வகைப் பொருள்கள் பாரமாய் அதை அழுத்திக் கொண்டிருந்தன. அதிக சிரமத்தோடு, வண்டிமீதான பாரத்தைச் சமநிலைப்படுத்தியவாறு, அருகில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சென்று கொண்டிருந்தான்.

‘இஞ்சருங்கோ’ அவள் அழைக்கிறாள். அவன் மிதிவண்டியை உருட்டியவாறு தலையைச் சற்று திருப்பி அவளைப் பார்க்கிறான்.

“என்னாலை ஏலாதாமப்பா உதிலை வாற காட்டாமணக்கு மரத்துக்குக் கீழை கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவமே ?”

அவன் எதுவும் கூறவில்லை. மிக அருகில் எதிரே தெரிந்த காட்டாமணக்கு மரத்தை நெருங்கியதும், தனது நடையைத் தளர்த்தி கிறவல் வீதிக்குப் பக்கத்தேயுள்ள ஒருசம தரையில் மிதிவண்டியை நிறுத்தினான். நடையில் ஏற்பட்ட களைப்பைப் போக்குவதற்காக வேறுசிலரும் ஏற்கனவே வந்து அந்த ஆமணக்கு மரத்தின்கீழ் குந்தியிருந்தார்கள்.

“என்ன செய்யுது ?”  அவன் கேட்டான். அவனது குரலில் பதற்றம் தெரிந்தது. அவள் உடன் பதிலளிக்கவில்லை, பெருமூச்செறிந்தாள். சில விநாடிகள் கழிந்தபின் கூறினாள்,

“களைப்பாக் கிடக்குது. என்னாலை நடக்கேலா தாம். ” கூறும்போதே அவளது உடலில் உள்ள பலவீனம்  குரலில் தெரிந்தது அவனுக்கு.

“சரி… உதிலை ஓரமா இரு…” எனக் கூறியவன், அவள் நிலத்தில் இருப்பதற்கு அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து அமரச் செய்தான். ஆமணக்கு மரத்தின்கீழ் இருந்தவர்களில் பெண்கள் மூவர் அவளை அனுதாபத்தோடு பார்த்தார்கள்.

அவன் தலையை நிமிர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஆமணக்கு மரத்தின் கிளைகளூடாக வந்த சூரியக்கதிர்கள் அவனது கண்களைக் கூசச் செய்தன. ‘நேரம் இப்ப பன்ரண்டுக்கு மேலை இருக்கும்…’ என அவன் மனம் கணக்கிட்டுக் கொள்கிறது.

“உதிலை உவையளோடை இரு. அந்தா அதிலை தெரியுற கடையில ஏதாவது சாப்பிடுகிறதுக்கு வாங்கி வாறன்.” என்று கூறிய அவன், அவளது பதிலை எதிர்பார்க்காது ஆமணக்கு மரத்துக்கு அப்பால் சற்றுதூரத்தில் தெரிந்த தற்காலிக தேநீர்க்கடையை நோக்கி நடந்தான்.

எங்கேயோ கிபிர் விமானத்தின் மிகையொலி கேட்கிறது. ஆமணக்கு மரத்தின்கீழ் இருந்த எல்லோரது முகங்களிலும் பீதி உணர்வு வெளிப்படுகிறது. கிறவல் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் தங்களின் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்கள். எல்லோரது பார்வையும் வானத்தை நோட்டமிடத் தொடங்கின. அதிலும் அவள்…  அவன் கடைக்குச் சென்ற திக்கைப் பார்ப்பதும், வானத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

உடையார்கட்டு – சுதந்திரபுரம் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்துவிட்டு, அதற்குள் மக்களைச் சென்று இருக்குமாறு அரசு கூறியபின், அங்கு சரமாரியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அரைக்கரைவாசி மக்கள் பலியாகிப் போயிருந்தார்கள். சதைகள் கிழிபட்டு, எலும்புகள் முறிந்து வெளித்தெரிந்த நிலையில், அந்த நிலப்பரப்பு அவல ஒலிகளின் உச்சத்தில் திணறிக் கொண்டிருந்தது.

அவளால் வேகமாக நடக்க முடியவில்லை. வயிறு பெரும் சுமையாகக் கனத்துக் கொண்டிருந்தது. வெயிலோ சுட்டெரித்தபடி இருந்தது. கைவசம் ஒரு குடைகூட அவளிடம் இருக்கவில்லை. பழைய துவாய் ஒன்றினால் தலையைப் போர்த்தியபடி நடந்து கொண்டிருந்தாள். தெருவில் உள்ள கிறவல் கற்கள் வேறு கால்களைக் குத்தி வேதனைப்படுத் திக் கொண்டிருந்தன. அவளால் நடக்க முடியவில்லை. அக்கணத்தில் அவளுக்கு தன் பெற்றோர்களின் நினைவு வந்தது.மனதுக்குள் அவர்களைத் திட்டித் தீர்த்தாள். இப்ப இந்தச் ‘சுமையைச்’ சுமப்பதைவிட, இயக்கத்துக்கே ஓடிப் போயிருக்கலாம்.

வன்னியில் போராட்டத்துக்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் ஆண்-பெண் என்ற வேறுபாடின்றி, ‘ பிள்ளைபிடிப்பு’ நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. நாளடைவில் வீடுகளுக்குள்ளும் புகுந்து குடும்ப அட்டை பெறப்பட்டு, அதிலுள்ள அங்கத்தவர் விபரங்கள் பார்க்கப்பட்டன. திருமணமான  குடும்பத்தவர்கள் தவிர, ஏனைய தனிநபர்கள்  விடுதலைக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன்நிமித்தம், பல பெற்றோர்கள் ‘போராட்டத்துக்கான பங்களிப்பு’ என்ற விடயத்தைப் புறமொதிக்கிவிட்டு, தம்பிள்ளைகளை மேலும் பொத்திப் பாதுகாக்கத் தலைப்பட்டனர். நாள், நட்சத்திரம், ஐவகைப் பொருத்தங்கள், சீதனபாதனங்கள் எதையும் பார்காமல், கேட்காமல் தம்பிள்ளைகளுக்கு இரகசியத் திருமணங்களை நடத்தி முடிக்கத் தொடங்கினர்.

அவளுக்கு இந்த அவசர திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. முதலில் மறுத்தாள்;அடம் பிடித்தாள்.  பெற்றோர் விடவில்லை.

“உன்ர கழுத்திலை தாலி கிடந்தால்தான் நீயும் தப்புவாய், உனக்கு வாறவனும் தப்புவான்.” என்ற அறிவுரை அவளுக்கு ஓதப்பட்டது. (பின்நாள்களில் திருமணம் முடித்த இளங்குடும்பத்தவர்களையும் பிடிக்கவெளிக்கிட்டது வேறுவிடயம்). அவளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவனுக்கும் ஏற்பட்டிருந்தது.

“நீ உயிரோடை இருக்க வேணுமெண்டால், உந்தத் தோல்நிறம், முகஅழகு, நகைநட்டு, சீதனம், பொருள்பண்டம்… ஒண்டையும் எதிர்பார்க்க ஏலாது. முதல்ல உயிர் முக்கியம். அதைக் காப்பாத்துறதுக்கு நீ இப்ப கலியாணம் கட்டியே தீரவேணும்.”

அவனதும் அவளதும் கருத்துக்கள் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டன. மன விருப்பங்கள் புறந்தள்ளப்பட்டன. ஓர் இரவுக்குள் ஐயர் இல்லாமலேயே பிள்ளையார் பூசையுடன் அவர்கள் இருவரும்’ திரு /திருமதி ஆகிக் கொண்டார்கள். மனப்பொருத்தம், முகப்பொருத்தம் இல்லாத நிலையிலும், அர்த்த ராத்திரியொன்றில் அவனது உடற்பசிக்கு அவள் தீனியாகிப் போனாள். அதன் விளைவாக அவனது இரத்த உரித்தொன்றை அவள் தன் வயிற்றிலேயே சுமந்தபடி நின்றாள்.

சுதந்திரபுர ஷெல் தாக்குதல்களின்போது, அவள் தனது உறவுகளைத் தவற விட்டிருந்தாள். அவரவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாப்பதிலேயே முனைந்தார்கள். எங்கும் புகைமண்டலம்… எங்கும் கந்தக நெடி… எங்கும் அவல ஒலி… குருதியில் நனைந்து கொண்டிருந்த நிலம்மீதில், யார் எவருக்கு என்ன நடந்ததென்பதை அறிய முடியாத நிலை.

அவனும் அவளும் சனநெரிசல்களூடாக  ஒருவாறு அந்த இடத்தை விட்டு வெளியேறிப் பரந்தனையும் புதுக்குடியிருப்பையும் இணைக்கும் பிரதான கிறவல் வீதியில் வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு அழுகை வந்தது. தனக்கு முன்னால் செல்லும் அவனைப் பார்த்தபடி அழுது கொண்டு நடந்தாள். அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. வழியிடையில் காட்டாமணக்கு மரத்தின் கீழ் இளைப்பாற வேண்டி வந்ததும், அவள் மரத்தின்கீழ்  அமர்ந்து கொண்டாள்.

தூரத்தே அவன் வருவது தெரிந்தது. அவனது கைகளில் இரண்டு பிஸ்கட் பெட்டிகள் இருந்தன. பிஸ்கட்பெட்டிகளை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு மிகுந்த பசிபோலும் அவன் கொடுத்ததும், அவள் ஒரு பெட்டியை அவசரமாகப்பிரித்துச்  சாப்பிடத் தொடங்கினாள். கிறவல் வீதியில் சனங்கள் சுமைகளோடு போய்க்கொண்டிருந்தார்கள். பொழுது மெல்லச் சரிந்து கொண்டிருந்தது. ஆமணக்கு மரத்தின் கீழ் இருந்தவர்களும் ஏற்கனவே எழுந்து சென்று விட்டார்கள்.

“என்னப்பா… வெளிக்கிடுவமே… ?” அவன் கேட்டான்.  “இன்னும் கன தூரமே…?” அவளது கேள்விக்கு அவன் பொய்யான பதிலே கூறவேண்டியிருந்தது.

இருவரும் எழுந்து கொண்டார்கள். பிஸ்கட்டையும் வெறும் நீரையும் குடித்ததில், அவளுக்கு சற்று தெம்பு ஏற்பட்டிருந்தது. பொழுதும் சரிந்து கொண்டிருந்ததில், வெயில் சூடும் மெல்லத்தணிந்து செல்லத் தொடங்கியது. அவள் இப்போது அவனோடு மிக அருகாக நடந்து கொண்டிருந்தாள்.

மாத்தளன் கப்பல்றோட்டிலும் மற்றும் கடற்கரைப்பகுதியெங்கும் சனங்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அவன் அந்தப்பகுதிக்குச் செல்லாமல், அதற்கு அப்பாலுள்ள அம்பலவன் பொக்கணை எனும் இடத்தைத் தாண்டி, வலைஞன்மடம் எனும் பகுதிக்கு அவளோடு போய்ச் சேர்ந்தான். பொழுது இரவாகி விட்டிருந்தது. அவனைப்போலவே வேறுசிலரும், தாம் கொண்டுவந்த பொருள்களுடன் களைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சுற்றிவர ஆங்காங்கே உயரமாய் வளர்ந்து நிற்கும் பனைமரங்கள். சின்னஞ்சிறு வடலிகள். அதற்கப்பால் பெருங்கடலில் இருந்து எழும் அலைகளின் ஒலிகள். மெலிதான கூதல்காற்று. தரப்பாள் வீடுகளில் தெரியும் சிறு லாம்பு வெளிச்சங்கள். அடுத்த கணத்தில் என்ன நிகழும் என்பதை அறியமுடியாத வாழ்வின் சூட்சுமத்தோடு,

வாழ்வதற்கான போராட்டத்தில் தோற்றுப்போனவர்களாக… அந்த இடத்தில் அநேகம்பேர் மனம் துவண்டு இருந்தார்கள்.

அவனும் அவளும் வலைஞன்மடத்துக்கு வந்து ஒரு மாதமாகி விட்டது. இதுவரையிலும், அவளால் தனது பெற்றோர்களைக் கண்டு கொள்ள முடிய வில்லை. உயிரோடு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. சுதந்திரபுரத்தில் இருந்து மிதிவண்டிமூலம் காவிக் கொண்டுவந்த பொருள்களால், அவன் சிறியதொரு தரப்பாள் கொட்டிலை அமைத்திருந்தான். மலம் கழிப்பதற்கு சனங்கள் அருகாமையில் உள்ள வடலிகள் வளர்ந்த இடத்தைப் பயன்படுத்தினார்கள். குளிப்பதற்கு ஒரு பொதுக்கிணறு இருந்தது. இடைக்கிடை ஷெல்கள் வந்து விழுந்து வெடித்தன. அவ்விடத்திலிருந்து எழும் கதறல் ஒலிகள் சற்று நேரம் கழிய, அடங்கிவிடும். சாவுகள் மலிந்துபோன வாழ்க்கைக்குள் அவளுக்கும் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஒருநாள்…  அம்பலவன்பொக்கணையில் உள்ள ஒருவருக்கு தென்னங்குற்றிகளால் பதுங்குகுழி அமைத்துக் கொடுக்கும் வேலைக்குப் போய்விட்டு வருவதாக அவன் அவளிடம் கூறிவிட்டுச் சென்ற அரை மணித்தியாலயத்தின்பின், ஷெல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து தரப்பாள் கொட்டில்களின்மேல் விழுந்து வெடிக்கத் தொடங்கின.

அவனுக்கு அவளின் நினைவு வந்தது. திரும்பிப் போகமுடியாத நிலை. ‘அவள் எப்படியும் சரிந்து படுத்து பாதுகாப்பைத் தேடிக்கொள்வாள்’. என்று அவன் தனக்குள் சொல்லி, தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தான். அவன் நினைத்தது போலவே அவள் தனது தரப்பாள் கொட்டினுள்

சரிந்தே படுத்திருந்தாள். ஷெல்கள் பரவலாக விழுந்து வெடித்த வண்ணமிருந்தன. அவள் அச்ச உணர்வைக் கடந்து விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். அருகில் இரத்த உறவுகளென எவருமில்லை… அவனுமில்லை… பக்கத்தில் இருப்பவர்களும் தங்கள் பாதுகாப்புக் கருதி, தமது கொட்டில்களுக்குள் முகம் குப்புறக் கிடந்தார்கள்.

ஷெல்கள் தொடர்ந்தும் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தன. அதிலும் ஒருஷெல் மிக அருகாக வெடித்துச் சிதறுகிறது. வெடியதிர்வினால் வயிற்றுக்குள் ஏதோ உதைப்பதான உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வின் நிமித்தம் அவள் வலி தாங்காமல், தாயை அழைக்கிறாள். அதேகணம் ஏதோ மரம் முறிவதான ஒலி. அவள் திகைத்தவளாய் தலையைச் சற்று நிமிர்த்தி, தரப்பாள் கொட்டிலின் முகட்டுப்பகுதியைப் பார்க்கிறாள். ஒருவிநாடிக்குள் அந்த முகடு…  தரப்பாள்… தடிகள் யாவும் தன்னை நோக்கி வருவதை அவள் உணர்ந்தாள்.

“ஐய்…” மிகுதி ஒற்றைச்சொல்லை அவள் உச்சரிப்பதற்கிடையில், எல்லாமே முடிந்து விட்டன.

அவளது நெஞ்சுக்கும் இடுப்புக்கும் இடையில் பாரிய பனைமரக்குற்றியொன்று விழுந்து அவளது வயிறு நசுங்கிப்போயிருந்தது. வாயாலும் மூக்காலும் குருதி பீறிட்டிருந்தது. அவள் அணிந்திருந்த ‘சோட்டி’ உடை இடுப்புக்குக் கீழே முன்பகுதியெங்கும் செந்நிறமாய் மாறியிருந்தது. வாய்   ஆ… வென விரிந்த நிலையில், தன் இரு இமைகளையும் மூடாமலேயே அவள் கிடந்தாள்

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்அலெக்ஸ் பரந்தாமன்


 

https://naduweb.com/?p=13157

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 06 – ‘சாவொறுப்பு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

இரத்தத்தின் கதைஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

என்றுமில்லாதவாறு அன்றையதினம் மாத்தளன் கடற்கரைப் பகுதிக்குட்பட்ட மக்களிடையே ஒரு மெளனம் தோய்ந்த பரபரப்புக் காணப்பட்டது. மக்கள் ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒலி குறைந்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டி ருக்கிறார்கள்? ஆமிக்காரர் நெருங்கி வந்து விட்டார் களா? என்ன நடந்தது? யாரைக் கேட்பது? எவரை விசாரிப்பது? பரமனுக்கு குழப்பமாக இருந்தது.

பரமனது தரப்பாள் கொட்டிலுக்கருகில் ஒரு வாகைமரம் வளர்ந்து காணப்பட்டது. அதனருகில் இரண்டு சிறு பாரைக்கற்கள் இருந்தன. வெய்யிலின் உக்கிரம் தாங்கமுடியாத பொழுதுகளில் அவன் தன் தறப்பாள் கொட்டிலைவிட்டு வெளியே வந்து அந்த மரத்தின் கீழுள்ள பாறைக்கற்களின்மீது அமர்ந்து கொள்வான். அவனைப்போலவே வேறு சிலரும் நிழல் குளிர்மைக்காக அந்த மரத்தின்கீழ் வந்து குந்திக்கொள்வார்கள்.

இன்று அந்த வாகைமரத்தடி அமைதியாக இருந்தது. அங்கு எவருமிருக்கவில்லை. கடற்காற்று மிதமாக வீசிக்கொண்டிருந்தது. காலை வெயிலின் இளஞ்சூடு வெண்மணற்பரப்புமீது பதிவிறங்கத் தொடங்கியது. எங்கேயோ ஒரு தரப்பாள் கொட்டி லுக்குள்ளிருந்து அடுப்பில் ரொட்டிகருகும் வாசனையை காற்று ஊதிச்சென்று கொண்டி ருந்தது.

பரமன் வாகை மரத்தடியை நோக்கி நடந்தான். மரத்தின்கீழ் இருந்த பாறைக்கல்லின் மீதமர்ந்தவாறு, எதிரே போக்கும் வரவுமாக இருந்தவர்களை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணுக் கெட்டிய தூரத்தில் இருவர் ஒருவரோடொருவர் உரையாடியபடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கிட்ட வந்ததும், பரமனால் அவர்களை இனம் காண முடிந்தது. அந்த இருவரும் பரமனது தரப்பாள் கொட்டிலுக்கு அருகில் இருப்பவர்கள். ஒருவர் வயது கடந்த அப்பு! மற்றவர் ஓர் இளைஞர். வாகை மரத்தின்கீழ்  பரமன் இருப்பதைக் கண்டதும்

அந்த அப்புவும் இளைஞனும் அவனருகில் அமர்ந்து கொண்டார்கள்.

“என்னடா பொடி… யோசினை… ?”

முகத்தில் வழிந்த வியர்வையைத் தனது துவாய்த்தலைப்பினால் துடைத்தபடி பரமனைப் பார்த்துக் கேட்கிறார் அப்பு!

”பெரிசா ஒண்டுமில்லையணை. உங்கை சனங்கள் ஏதோ பதகளிப்பட்டுத் திரியுறமாதிரி தெரியுது. என்னத்துக்கு…?”

“நீங்கள் ஒண்டும் கேள்விப்படேல்லையே… ?”  அப்புவோடு வந்த இளைஞன் கேட்டான்.

பரமனுக்கு அந்த இளைஞனது பதில் திகைப்பைக் கொடுத்தது. பரமன் அப்புவைப் பார்த்தான். அப்பு, தான் அறிந்துகொண்ட விடயத்தைப் பரமனுக்குக் கூறினார்.

“இண்டைக்கு ஆரோ மூண்டுபேருக்கு ‘சாவொறுப்பு’ வழங்கப்போகினமாம்… அதுதான் சனங்கள் கேள்விப்பட்டு, பேயடிச்சமாதிரி புறுபுறுத்துக் கொண்டு திரியுதுகள்…”

அப்புவின் பதிலைக்கேட்டு பரமன் அதிர்ச்சிக்குள்ளானான்.

“இந்த நேரத்திலையுமா… ? சனங்கள் படுகிற பாட்டுக்கை…?”  என்று கூறிய பரமனைப்பார்த்து, அப்பு மெதுவாகச் சிரித்தார்.

“தம்பி… வேட்டைக்குப்போற வேட்டைக்காரனுக்கு பகலும் ஒண்டுதான். இரவும் ஒண்டுதான். அவனுக்குப் பொழுதுகளைப் பற்றிப் பிரச்சினையில்லை. இரையிலைதான் அவன் எப்பொழுதும் கவனமாக இருப்பான் கண்டியோ…”

அப்பு பூடகமாகக் கதைப்பதை பரமனால் புரிந்து கொள்ள முடிந்தது. விநாடிகள் சில அங்கு நிலவிய மெளன நிலைக்குள் அடங்கி விடுகின்றன.

“முன்னம் ஒரு காலம் போஸ்ற்மரத்திலை மனிசர் சவங்களாகத் தொங்கின கதை இன்னும் முடியேல்லையடா தம்பி ! உயிர்களெல்லாம் இப்ப பெறுமானமற்றுப் போச்சுது. ஒரு சிறு கைத்துப்பாக் கியிலிருந்து தொடங்கின போராட்டத்துக்கு எத்தனை உயிர்ப்பலியள் குடுத்தாச்சு. ஆனாலும், அது இப்பவும் நரபலி கேட்டு ஆடுது… அழுகுது”.

அப்பு சலித்தபடி கூறுகிறார். அவரது பார்வையில் துயரம் தெரிந்தது. அவரது வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.

“எதுக்காக இந்தச் சாவொறுப்பு அப்பு… ?”  பரமன் கேட்கிறான்.

“சனங்கள் ஆமியிட்டை போறதுக்கு வழிகாட்டினவையாம்…”

அப்புவோடு கூடவந்த இளைஞன் கூறுகிறான். பரமன் அப்புவைப் பார்க்கிறான். அப்பு அந்த இளைஞனின் வார்தையை ஆமோதிப்பது போல பரமனைப் பார்த்து தலையசைக்கிறார்.

”இது சனங்களின்பால் கொண்ட அக்கறையல்ல. சனங்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கடற்கரைப்பகுதியைவிட்டு வெளியேறிவிட்டால், தாங்கள் தனித்துப் போய்விடக்கூடும் என்ற அச்ச உணர்வு மேலெழுந்திருக்கிறது. எத்தனைமக்களைப் பலி கொடுத்தேனும், தங்கட இருப்பைத் தக்கவைப்பதற்கான செயற்பாடுதான் இந்தச் சாவொறுப்பு. இப்படியான சாவொறுப்புகள் மூலம் சனங்களுக்கும் ஆமியிட்டை கூட்டிக்கொண்டுபோற ஆக்களுக்கும் அச்சுறுதல் விடுக்கப்படுகுது. ஆனால், சாவுகளைக் கண்டு ருசித்த; ரசித்த எங்கட சனங்கள் இவையின்ர கட்டுப்பாட்டுக்கை இருக்க மாட்டுதுகள். எப்பிடியும் ஏதோ ஒருவகையால… வழியாலை தடையளை உடைச்சுக்கொண்டு ஆமியிட்டை போகத்தான் செய்யுங்கள்…”

அப்பு கூறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் யதார்த்தம் உறைந்து கிடப்பதை பரமன் உணர்ந்து கொண்டான். எதிரே இளம்பெண்கள் சிவில் உடையில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோள்களில் துவக்குகள் தொங்கியவண்ணம் இருந்தன. அப்பு மெளனமானார். துவக்குப்பெண்கள் அவர்களைக் கடந்து சிறிதுதூரம் சென்றுவிட்டார்கள். அப்பு அவர்கள் போன திக்கைப் பார்த்துவிட்டுக் கூறுகிறார்.

”இண்டைக்கு உங்காலை எந்தவீட்டிலை இழவு நடக்கப்போகுதோ தெரியாது…”

”மெய்யணை அப்பு… சாகப்போறவை ஆரெண்டு தெரியுமே… ?”’ பரமன் அப்புவைப் பார்த்துக் கேட்கிறான்.

”ஆரோ தமிழிச்சி பெத்த புள்ளையள்தானடா தம்பி…”  அப்புவுக்கு குரல் பிசிறுகிறது… அவர் அந்த சாவொறுப்பை விரும்பவில்லை. அவர் மெளனமானார். அவருக்கு கடந்துபோன காலங்களில் நடந்து

முடிந்த சில நிகழ்வுகள் மனக்குழிக்குள் வந்து இறங்குகின்றன.

சிங்கள இராணுவத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள்… தகவல் வழங்கியவர்கள்… ஆதரவளித் தவர்கள்… என்ற குற்றச்சாட்டுகளுக்குள் பலர் தள்ளப்பட்டார்கள். அவர்கள் ‘துரோகி’களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அந்தத் துரோகிகளில் சிலர், பின்பு மின்கம்பங்களில் சவமாகத் தொங்கினார்கள். இதை அப்போதைய மக்களும் வரவேற்றார்கள். அது அவர்களுக்கு விருப்பமாகவும் வேண்டுதலாகவும் இருந்தது. ‘ மின்கம்பத்தண்டனைக் கலாசாரம்’ ஒரு தொடர்கதையானது.

இதைவிட, இயக்கங்களுக்குள் நிலவிய சாவொறுப்பு வழங்கும் போட்டி மனப்பான்மை காரணமாக சில அப்பாவி மக்களும் துரோகிகளானார்கள். இதன் ஒருகட்டமாக நெல்லியடி – பருத்தித்துறை வீதியில் மஹாத்மா திரையரங்குக்கு முன்பாக வுள்ள முன்பாகவுள்ள மின்கம்பம் ஒன்றில், ஒரு சலவைத்தொழிலாளி சுடப்பட்டு, துரோகி(?)யாக தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட காட்சி… அப்புவின் நினைவுக்கு வந்து போனது.

”என்னப்பு யோசனை… ?” அப்புவோடு கூடவந்த இளைஞன் கேட்டான்.

“ம்… ஒண்டுமில்லையடா பொடியள். ஏதோ பழைய நினைவுகள்…?”

தூரத்தில் எங்கேயோ இரண்டு நாய்கள் அபசகுன தொனியில் ஊளையிட ஆரம்பித்தன. அந்த ஊளை யொலிகளோடு, ஒலிபெருக்கியூடாகவும் இன்னொரு குரல் ஒலிக்கத் தொடங்கியது.

”அன்பார்ந்த தமிழீழ மக்களே ! எமது போராட்டத் துக்கு விரோதமாகவும் எதிரிப்படைகளிடம் எம்மக்கள் செல்வதற்கு வழிகாட்டிகளாகவும் செயற்பட்ட எம் இனத்தின் துரோகிகள் மூவருக்கு இன்றைய தினத்தில் தனித்தனியே மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞன்மடம் ஆகிய மூன்று இடங்களில் வைத்து சாவொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. எனவே… ”

ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் கப்பல்றோட்டால் கடற்கரைவரை சென்று, மீண்டும் அதேவழியாக மாத்தளன் சந்தியை நோக்கி நகருகிறது. கப்பல் றோட்டின் அருகே குடியிருந்தவர்கள் தங்கள் கொட்டில்களை விட்டு, வெளியே வந்தார்கள். விடுப்புப் பார்க்கத் தலைப்பட்டார்கள். சின்னஞ்சிறுசுகள் அடுத்து நிகழப்போகும் விபரீதத்தை அறியாதவர்களாக தமது பெற்றோருடன் ஒட்டியபடி பிக்கப்வாகனத்தை நோக்கினார்கள்.

ஒலிபெருக்கி உரைத்த வார்த்தைகளைக் கேட்டதும், மக்களில் ஒருபகுதியினர் முகம் சுழித்தனர். வேறு சிலர் அச்சப்பட்டனர்; பரிதாபப்பட்டனர். இன்னொருவகையினர் அந்தச் சாவொறுப்பை தம்மனதுக்குள் வரவேற்றனர்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது… பரமனும் அப்புவும் அந்த இளைஞனும் அதேயிடத்திலேயே இருந்தார்கள். சூரியன் வான உச்சிக்கு வந்து நின்றான். வாகைமர நிழல் இப்போது மரத்தைச் சுற்றி வட்டவடிவமாக விரிந்திருந்து.

எவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பு தோளில் கிடந்த துவாயை உதறி மணலில் விரித்து விட்டு, மரத்தின் அருகேயிருந்த பாறைக்கல்லின் மேல் தலையைச் சரித்துப்படுத்துக் கொண்டார். அப்புவோடு வந்த இளைஞன் எழுந்து தனது தரப்பாள் கொட்டிலை நோக்கிச் சென்றான். பரமன் தனித்திருந்தான்.  இன்னும் சொற்ப நேரத்தில் சாகப்போற அந்த மூவரையும் குறித்து அவனது சிந்தனை குழம்பிக் கொண்டிருந்தது.

வாழ்வதற்கு எந்த ஆதாரமுமற்ற நிலையில், அதற்கான மாற்றுவழி தேடிப்புறப்படுபவர்களையும்

அதற்கான வழிகாட்டல்களையும் தடுப்பது எந்த வகையில் நியாயமாகும்? நிலையான இருப்புக் கேற்ற வலுவான பொருளாதாரம் எதுவுமற்ற ஒரு சூனியப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ்வது எங்கனம்… என்று சிந்திப்பது தவறா? அப்படிச் சிந்திப்பவர்கள் இனத்தின் துரோகிகளா?

பரமனால் மேற்கொண்டு சிந்திக்க முடிய வில்லை. ”அழிவுக்கு முன்னானது அகந்தை (நீதிமொழிகள் – 16 : 18)” என்ற பைபிள் வசனம் ஏனோ அப்போது அவன் நினைவுக்கு வந்து போனது.

மாத்தளன் – கப்பல் றோட்டில் மீண்டும்… பிக்கப் வாகனத்திலிருந்து ஒலிபெருக்கிச்சத்தம் கேட்கிறது. வாகைமரத்தின் கீழ் படுத்திருந்த அப்பு வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தார்.

”அன்பார்ந்த தமிழீழ மக்களே ! இதோ… எம் இனத்தின் துரோகிகளான  இம்மூவருக்கும் இப்பொழுது சாவொறுப்பு வழங்கப்படும்நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞன்மடம் ஆகிய இடங்களில் வைத்து சாவொறுப்பு வழங்கப்படும்…”

பிக்கப்வாகனம் கடற்கரையை நோக்கிச் செல்கிறது. பாடையில் பிணப்பெட்டியை ஏற்றும் நேரம், உறவுக்காரப்பெண்கள் மாரடித்து, ஒப்பாரிபாடி வழியனுப்பி வைப்பதுபோன்று, அந்தப்பிக்கப்வாகனத்தின் பின்னால் குஞ்சு குருமன், கிழடு கட்டையென எல்லாம் ஒன்று திரண்டு சென்று கொண்டிருந்தன. பரமனுக்கு அந்த நிகழ்வைப் பார்க்க அருவருப்பாக இருந்தது.

”எட தம்பி மோனை…  வாவன்ரா ஒருக்கா என்ன நடக்குதெண்டு பாத்திட்டு வருவம்… ”

பரமன் எதுவும் கூறவில்லை. அப்புவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

”நான் உதுகளைப் பாக்கிற ஆள் இல்லை. ஆனால், வெடிவாங்கிச் சாகப்போறவன் ஆரெண்டதைப் பாக்க வேணும். நீ வாறதெண்டால் வா… நான் போறன்…’‘ அப்பு கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.  பரமன் மேற்கொண்டு எதுவும் கூற வில்லை. அவனும் அப்புவுக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினான்.

கப்பல்றோட்டுக் கடற்கரையில் வட்டவடிவத்தில் மக்கள் கூடியிருந்தார்கள். நடுவே பிக்கப்வாகனம். அதன் பின்புறத்தில் இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயதானவர்… கண்கள் கறுப்புத்துணியால் கட்டப்பட்டு, கைகள் கயிற்றினால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

இடுப்பில் ‘பிஸ்டல்’ கொழுவியிருந்த ஒருவன், அந்த மூவர்மீதான குற்ற அறிக்கையை ஒலிபெருக் கியூடாக அறிவித்தான். அதன்பின், பிக்கப்பில் இருந்த ஒருவர் நிலத்தில் இறக்கப்பட்டார். மக்கள் நடுவினில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். பிஸ்டல்காரன் தன் பிஸ்டலை வெளியே எடுத்தான்.

மக்கள் பலரது முகங்களிலும் பீதி உணர்வு வெளிப் பட்டது. சிலருக்குக் கறுத்து இறுகிக் காணப்பட்டது. இன்னும் சில விநாடிகளில் உயிரொன்று அதன் உடலில் இருந்து வெளியேறும் அவலத்தைக் காண விரும்பாத ஆதவனும் அச்சப்பட்டிருக்க வேண்டும். கருமுகில் ஒன்றினுள் தன்னை மறைத்து… முகிலோடு நகர்ந்து கொண்டிருந்தான்.

டுமீல்…

காற்றோடு கலந்து… கரைகிறது ஒரு வெடிச்சத் தம்! உயிர் சுமந்த அந்த உடல் இப்போது வெறும் கூடாக மண்ணில் சரிகிறது. தலையில் செப்புச் சன்னம் துளைத்த துவாரமூடாக பெருகுகிறது குருதி. குருகுமணல் சிவப்பாகிறது. வேடிக்கை பார்க்க வந்த சின்னஞ்சிறுசுகளின் முகங்களில் திகில் அப்பிய உணர்வு.

உயிரற்ற உடலருகில் வந்த ஒருவன், அந்த உடலின் முகத்தில் கட்டியிருந்த கறுப்புத்துணியை நீக்கிவிட்டு, பிக்கப்பில் ஏறிக்கொள்கிறான். பிக்கப் ஏனைய இருவரையும் சுமந்து கொண்டு அம்பலவன் பொக்கணை நோக்கி விரைகிறது. துரோகியாய் வீழ்ந்தவனின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் சிலர் அவனது உடலம் அருகே செல்கிறார்கள்.

சுடலையில் சவத்திற்கு கொள்ளி வைத்துவிட்டு, கொள்ளிக்காரனுக்குப் பின்னால் திரும்பும் கூட்டத்தைப்போன்று, கடற்கரையில் நின்ற மக்களும் பிக்கப் வாகனம் சென்றபிற்பாடு, அவரவர் தங்கள் தரப்பாள் கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்புவும் பரமனும் வாகை மரத்தடிக்கு வந்து விட்டனர். இருந்தாற்போல், அப்பு பரமனைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்டார்.

”ஏன்ரா பொடியா…பிக்கப்பாலை இறக்கின வனுக்கு தலையில வெடி வைச்சதும், பிக்கப்பிலை இருந்த ஏனைய ரண்டு பேற்ர மனநிலையும் அப்ப எப்படியிருந்திருக்கும்…”

அப்புவின் கேள்விக்கு பரமனால் பதில் கூற முடிய வில்லை. ஆனால், அவனது கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்தன கண்ணீர்த்துளிகள் பதில்களாக…

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன் அலெக்ஸ் பரந்தாமன்

 

https://naduweb.com/?p=14959

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்த நேரம் உதை செய்தவர்களுக்கு நியாயமாய்ப்பட்டு இருக்கும் ..செய்தவர்கள்  தற்போது உயிரோடு இருந்தால் உந்த நினைவுகளே அவர்களை உறங்க விடாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராளிகளை நாசூக்காக இழிவுபடுத்துவதற்கென்றே எழுதப்பட்டது போல் உணர்கிறேன். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

விடுதலைப் போராளிகளை நாசூக்காக இழிவுபடுத்துவதற்கென்றே எழுதப்பட்டது போல் உணர்கிறேன். ☹️

ஊழிக்காலத்தில் எல்லாமே புனிதமாக இருக்கவில்லை என்பது கசப்பைத்தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஊழிக்காலத்தில் எல்லாமே புனிதமாக இருக்கவில்லை என்பது கசப்பைத்தரும்.

ஊழி என்றாலே வேதனைதான். அது முழு உலகத்திற்கும் பொதுவானது. எமக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ? 😢

நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கலாம். அதில் முரண்பட ஏதுமில்லை. ஆனால் எழுதப்படும் முறை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல மிகவும் நாசூக்காக (slow poisoning) நஞ்சு தடவப்படுகிறது. 

நன்னீர்க் கிணற்றில் ஒரு துளி எண்ணெய் ஊற்றினால் கிணற்றின் மாற்பரப்பு எப்படி மாறிப்போகுமோ அதே போன்று, தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் எல்லாவற்றையும் மறைத்து போராட்டத்தின் நோக்கத்தையும் , அர்ப்பணிப்புக்கள், தியாகன்கள் எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தும்  விதமாக எழுத்து நடை உள்ளது. 

எதற்குமே தகுதியற்ற இழி குலமான தமிழினத்தின் சாபமே தியாகங்களை மிக இலகுவாக தூக்கி எறியும் பண்புதான்.

நன்றியற்ற இனம் 😡

 

😱

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 07 –’வீரமிகுநாடு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

அதிகாலையில் இருந்தே இராணுவத்தினர் ஷெல்களை ஏவத்தொடங்கிவிட்டார்கள். இந்த ஏவல் வேலை விடிகாலைவரையும் தொடர்ந்தது. கடற்கரையின் எதிர்ப்புறத்திசையின் அடர்வனத்துள், சமரானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரு தரப்பினரின் துவக்குகளில் இருந்து வெளிக்கிளம்பும்          வெடியொலிகள், அந்த விடிகாலை வேளையின் ரம்மியத்தையும் அமைதியையும் சிதைப்பதாகவே  இருந்தது.

மனிதவாழ்வியலின் அன்றாட இயக்கம் ஸ்தம்பித்த நிலையில், அச்சம்  மிகுதியாகி மனங்களுள் துயர்மிகுவலிகள் நிறைந்துபோய் கிடந்தன. நாள்களோ விடியலற்ற திசைகளாக… செல்லும்வழி சீரற்றனவாக…  இருள் சூழ்ந்த பொழுதுகளாகவே தினமும் நகர்ந்து கொண்டிருந்தன.

அதிகார வன்முறைகள் எங்கும் விஸ்வரூபமாய் நிமிர்ந்து நின்றன. மெளனமொழிகளே விழிகளால்பேசப்பட்டன. ‘வீரமிகுநாடு’ எனும் வாய்பாடு வங்குரோத்தாகிப்போனது. வில்லங்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிட்டுக்கொண்டிருந்தன. ” நம்பினார் கெடுவதில்லை…”  எனும்  முதுமொழியின் மேல் அவவிசுவாசம் பற்றிக் கொண்டிருக்க உதய திசையிலிருந்து மெல்லெனப் பரவத்தொடங் கியது செங்கதிரோனின் பொற்சுடர்கள்.

அடர்வனத்தின் நடுவே மிக உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது சமர். அங்கு ஒரு பகுதிக்கு இழப்புகள் அதிகமாகிக்கொண்டிருந்தன. இடம் பெயர்ந்து கடற்கரைப்பக்கம் குடியேறிய மக்களின் தற்காலிக          இருப்பிடங்களுக்குமேல், ஐஞ்சிஞ்சி, பத்திஞ்சி ஆட்டிலறிக் குண்டுகள் எனப் பலதும் வந்து விழுந்து         வெடித்துக்கொண்டிருந்தன. பல தரப்பாள்கொட்டில்கள் சின்னாபின்னமாகின. வேறு சில தீப்பிடித்து எரிய ஆம்பித்தன.

தரப்பாள் கொட்டிலிலிருந்து எரியும் தீ, அருகில் காவோலைகளால் சூழப்பட்ட வடலிப்பனைமரம் ஒன்றில் பற்றிக் கொள்கிறது. வடலி சுவாலைவிட்டு எரியத்தொடங்குகிறது. அதனருகில் தரப்பாள் கொட்டில்கள்.       கொட்டிலுக்குரியவர்கள் தங்களது கொட்டில்களும் எரிந்து விடக்கூடுமென எழுப்பும் அபய அபாயக்குரல்கள் காற்றோடு காற்றாகக்  கரைந்து விடுகின்றன. அந்த நிலையிலும் சில இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.   இரண்டு கைகளாலும் காலடிக் குருகுமணலை அள்ளி, வடலிமீது எறிகிறார்கள். காற்றுவேறு பலமாக வீசிக்கொண்டிருந்ததில், வடலிப் பெருநெருப்பு பக்கத்து வடலியிலும் பற்றிக்கொள்கிறது.

ஒருபக்கம் ஷெல்வீச்சு, மறுபக்கம் பெருநெருப்பு, இரண்டுக்கும் நடுவில் ஏதிலிக்கூட்டங்கள். இளைஞர்கள் தொடர்ந்தும் மண்ணை அள்ளி எறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களோடு சில பெண்களு ம் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்களது வாய் எதையோ முணுமுணுத்தபடி  இரண்டு கைகளாலும் மணலை  அள்ளி எறிந்து கொண்டிருந்தார்கள். நிச்சயமாக  அந்தப் பெண்களின் முணுமணுப்பு நல்ல வார்த்தைகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மனவேக்காளத்தின் எதிர்வினையாகவும் அவை இருந்திருக்கலாம்.

வடலியில் எரிந்து கொண்டிருந்த காவோலைகள் இரண்டு, காற்றின் இசைவிற்கு ஆட்டம்  காட்டிவிட்டுமரத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கின்றன. ஷெல்வெடிப்பினால் எரியும் கொட் டில்களோடு,       இப்போது மேலதிகமாக இரண்டு கொட்டில்களும் சேர்ந்து  எரியத்தொடங்குகின்றன.

எங்கும் அவலக்குரல் சூழ்ந்திருந்த அப்பகுதிக்கு அருகே ஒரு தரப்பாள் கொட்டில். அதனுள் ஒருபக்கமாக மரவாங்கொன்றின்மேல் படுத்திருந்தார் எண்பது வயது மதிக்கத்தக்க ஓர் அப்பு. அந்த மரவாங்கின் கீழே     பரந்திருந்த குருகுமணல்மீது இறப்பர்பாயை விரித்துவிட்டு, முகம்குப்புறக் கிடந்தான் அப்புவின் மகன். அவர்களது தறப்பாள் கொட்டிலோடு, மிக நெருக்கமாக தென்னைமரக் குற்றிகளாலான ஒரு காப்பரண்  வடிவத்திலமைந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் அப்புவின் மருமகளும்  பேரப்பிள்ளைகள் மூவரும் பாதுகாப்புக் கருதி இருந்தார்கள்.

அப்பு ஒரு பாரிசவாத நோயாளி. அவரைப் பதுங்கு குழிக்குள் வைத்துப் பராமரிக்க முடியாது. அதற்குள் போதியளவு இடமோ, வெளிச்சமோ, காற்றோட்டமோ இல்லை. அப்பு மறுத்து விட்டார். மகனுக்கு மிகுந்த          கவலையாக இருந்தது. அப்புவைத் தனியாக விட்டுவிட்டு, அவன் பதுங்கு குழிக்குள் செல்ல விரும்பவில்லை. ஷெல்கள் ஆங்காங்கே விழுந்து வெடிக்கும்போதெல்லாம், அதன் ஒலி கேட்டு அவனைத்தவிர, அவனது         மனைவியும் பிள்ளைகளும் பதுங்கு குழிக்குள் சென்றுவிடுவார்கள்.

அன்றும் அப்படித்தான். மகன் அப்புவைவிட்டு நகரவில்லை. அவரது மரவாங்கின் கீழ் குப்புறப்படுத்திருந்தான். அப்புவால் அப்படிப் படுக்கமுடியவில்லை. அவருக்கு முதுகுத்தண்டில் வருத்தம் வேறு இருந்தது. அவரால் நிமிர்ந்து படுக்க இயலாத நிலை. ஒருக்களித்துப் படுத்திருந்தார்.

“அப்பு…”  வாங்கின்கீழ் படுத்திருந்த அவரது மகன் அழைத் தான்.

“ம்…”

“பயப்படாதையணை. அவங்கள் ஆமிக்காரர் உப்பிடித்தான் கொஞ்ச நேரத்துக்கு அடிப்பாங்கள். பிறகு நிற்பாட்டிப் போடுவாங்கள்”.

” ம்…” அப்புவிடமிருந்து மீண்டும் அதேபதில்.

மகனுக்குத் தனது தந்தையைப் பார்க்க  கவலையாக இருந்தது. அருகில் ஒரு ஷெல் விழுந்து வெடிக்குமாயின், அதன் அதிர்வு அவருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என அவன் அஞ்சினான். தரையில்   படுத்திருப்பதும் முழுமையான பாதுகாப்பும் அல்ல. இருப்பினும், ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளமுடியும். தரையைவிட்டு மேலெழுந்து நிற்கும்போது, வெடிக்கும் ஷெல்லிலிருந்து சிதறும் ஈயக்குண்டுகள், நெருப்புத்தூண்டங்களாக மாறும். அவை மனித உடல்களைத் துளைக்கும்போது அங்கவீனம், உயிர்ச்சேதம் என்பன உண்டாகும். இதை அப்புவின் மகன் நேரிடையே பார்த்துமிருந்தான். இதனால் அப்புவைக்  குறித்து கவலைப்படவும் பயப்படவும் செய்தான்.

“பொடியா…” இப்போது அப்புவிடமிருந்து எழுகிறது குரல்.

“என்னணை அப்பு…? மகன் கேட்கிறான்.

“நீ கவனமா இரு மோனை…”

“ஓமணை…” மகனுக்குக் கண்கள் கலங்கி விடுகின்றன.

யாழ். குடாநாட்டில் மாதகல் கிராமத்தில் அப்பு பெயரறிந்த ஒரு கடற்தொழிலாளி. பத்துப்பிள்ளைகளின் தந்தை. அதில் கடைசி  இருவர் மாவீரர்கள். ஒருவன் வேவுப்புலி. இன்னொருமகள் கடற்கரும்புலி. வித்துடல் அற்று ஒளிப்படங்களாக வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள். இருமாவீரர்களின் தந்தையென சமூகம் கூறிக்கொண்டாலும், பிள்ளைகளின் சாவு அவரைப் பெரிதும் உளத்தாக்கத்துக்கு உட்படுத்தவே செய்தது.     ஆரம்பத்தில் அப்பு வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மனதுக்குள் குமைந்த துயரத்தை வெளியே கொட்டாமல்,                அப்படியே தனக்குள் அமுக்க அமுக்க அதுவே அவருக்கு நோயாகிக்கொண்டது. பின்பு பாரிசவாதமாகிப்    படுக்கையில் விழுத்தி விட்டது.

அப்புவின் மற்றைய பிள்ளைகள் குடும்பமாகி, அவரை விட்டு வேறு வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அப்பு தனக்குக் கொள்ளிபோட மகன் கூடவே இருக்க விரும்பினார். அதனால் மூத்த  மகனோடு இருந்து விட்டார். வெகுநேரமாக அப்பு ஒருபக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்ததில், முதுகினில் வலி    ஏற்பட்டிருந்தது. மெதுவாக உடலை அசைத்து, மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார். சற்று செவிப்புலனற்ற நிலையிலும், தூரத்தில் பெண்ணொருத்தி ஒப்பாரி வைத்து அழுவது அவருக்கு மெதுவாகக் கேட்கிறது.

“பொடியா…”  அப்பு மகனை அழைத்தார்.

“என்னப்பு…?”

“………………….”

அப்புவிடமிருந்து  எதுவித பதிலும் எழவில்லை. மகன் மெதுவாக வாங்கின் அடிப்பரப்பைவிட்டு நகர்ந்து, தலையை மேலாகத் தூக்கிப் பார்க்கிறான். அவனுக்கு அப்புவின் முதுகுப்பக்கம் தெரிகிறது. அவன்               திரும்பவும் இறப்பர் பாயில் படுத்துக் கொண்டான்.

கொட்டிலுக்கு வெளியே அழுகையும் அவலக்குரல் களும் கலந்த ஆரவாரம் கேட்கிறது. காயப்பட்ட ஒருத்தரை         அவசரமாக உறவினர்கள் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்வதை மகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆபத்துமிகுந்த நேரத்திலும், ஓர் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற  துடிப்புணர்வில் அவர்கள்         சென்று கொண்டிருந்தார்கள். அப்படிச் சென்றுகொண்டிருக்கும் அக்கணத்திலும், அருகே ஒரு ஷெல் வந்து விழுந்து வெடிப்பின் பல உயிர்கள் பலி கொள்ளப்படும் என்பதை அறிந்தும் அவர்கள் அவல ஓலங்களை  எழுப்பியபடி சென்று கொண்டிருந்தார்கள். பரவலாக விழுந்து வெடித்த ஷெல்கள், இப்போது ஒன்று இரண்டாக சிறுநிமிட நேர இடைவெளிவிட்டு வெடித்துக் கொண்டிருந்தன.

அப்பு படுக்கையில் இருந்து மெலிதாக அனுங்குவதை மகன் உணர்ந்தான். அவன் படுக்கையை விட்டெழுந்து மெதுவாக வாங்கில் அமர்ந்து கொண்டான். அப்பு சற்று உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. சிறுநீர் வெளியேறி சாரம் நனைந்திருந்ததை அவதானித்தான். ‘ சாரத்தை மாற்றுவம்…’ என நினைத்து, எழுந்தவனை ஷெல் ஒலியொன்று தடுத்து நிறுத்தியது.

எங்கும் ஒரே பதற்றமும் பதகளிப்பும் கண்ணீர் உகுத்தலுமாகவே இருந்தன. இடம்பெயர்ந்து வந்தவர்களின் வளர்ப்பு நாய்கள் சில ஊளையிட்டபடி இருந்தன. கிழக்கே பெருங்கடலில் இருந்து அலைகள் ஆர்ப்பரித்து        எழுந்து அடங்கும் ஓசை சற்று பலமாகவே இருந்தது. ஏதோ ஒரு பாரிய அழிவுக்கான முன்னறிவிப்புப்போல் இயற்கையின் இயல்புநிலை அக்கணத்தில் மாற்றம் பெறத்தொடங்கியது.

“அப்பா…”

அருகே பதுங்கு குழிக்குள் இருந்து அப்புவின் பேத்தி குரல் ஒலிக்கிறது.

மரவாங்கின் கீழ் படுத்திருந்த மகன், ‘என்ன…?’ என எதிர்க்குரல் கொடுத்தான்.

“பங்கருக்குள்ள கனநேரமா இருக்கேலாதாம். புழுங்கி அவியுது. நான் வெளியால வரப்போறன்”.

“கொஞ்சம் பொறம்மா… நிலமை சீரானதும் வெளியிலை வரலாம்…”

பதிலுக்கு அவன் கூறிமுடித்ததும், மிக அருகில் மிக மிக அருகில் ஆட்டிலறி  ஷெல்லொன்று விழுந்து வெடித்துச்          சிதறுகிறது. அதனைத் தொடர்ந்து அந்தச் சுற்றுவட்டாரமெங்கும் பரவலாக விழத்தொடங்கின ஷெல்கள்.              இடையிடையே ஐஞ்சிஞ்சி,பத்திஞ்சிச்ஷெல்கள். அதிலொன்று அப்பு இருந்த தரப்பாள் கொட்டிலுக்குச் சமீபமாக விழுந்து வெடித்தபோது, அதன் சிறு துண்டொன்று அப்புவின் தரப்பாள் கொட்டில் கூரைச்சீலையைக்    கிழித்துக் கொண்டு சென்றது. அப்பு பயந்துபோய் விட்டார்.

“எட பொடியா…?”  மகனைக் கூப்பிட்டார் அப்பு.

பாயில் முகம் குப்புறக் கிடந்த மகன், தலையைத் திருப்பி நிமிர்ந்து பார்தான். அவனுக்கு ஷெல்துண்டு கிழித்ததரப்பாள் கூரையினூடாக நீலவானமும் அதனிடையே  உள்ள வெண்முகிற்கூட்டமும் தெரிந்தது . அவன் அதிர்ச்சிக்குள்ளானான். திடீரெ னப் படுக்கையை விட்டெழுந்தான். அப்புவை தன் இரண்டு கரங்களாலும்               தூக்கி, வாங்கின் கீழ் தன்னோடு படுக்கவைத்துக் கொண்டான். அப்புவின் உடல் தொடர்ந்தும் நடுங்கிக் கொண்டிருந்தது. பயத்தில் சிறுநீரோடு மலமும் வெளியேறியிருந்தது

” ஐயோ… ஆமி வாறானாம்…”

வெளியே ஒருபெண் அலறிக் கொண்டு ஓடுவது மகனுக்குக் கேட்கிறது. ஷெல் வீச்சுகளும் மேலும் அதிகரிக்கத்                  தொடங்கின. அப்பு அனுங்கத் தொடங்கினார். பதுங்கு குழிக்குள் இருந்த பேத்தி பலமாக அழத்தொடங்கினாள். மகனுக்கு மனதுள் அச்ச உணர்வு கனதிகொண்டு உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.

திடீரென ஒரு பயங்கர வெடிச்சத்தம்!

அப்புவின் தரப்பாள் கொட்டிலோடு அமைக்கப்பட்டிருந்த ஒருபக்கப்  பதுங்கு குழித்தென்னைமரக்குற்றிகள் தூக்கி வீசப்படுகின்றன. குழிக்குள் இருந்தவர்கள்மீது  ஏனைய தென்னைமரக்குற்றிகள் விழுந்து மணலாலும் மூடப்பட்டு,அரைகுறை உடல்களாக வெளித்தெரிந்தன. எங்கும் ‘என்ர ஐயோ…’ என்ற        அவலக்குரல்களும், ‘எங்களைக் காப்பாத்துங்கோ…’ எனும் உதவிகோரலுமாக அந்தப்பகுதி அவலத்தின்     உச்சியில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது.

அருகில் இருந்த சில இளைஞர்கள் தமது உயிரச்சத்தையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்து, தென்னங்குற்றிகளை அப்புறப்படுத்தினார்கள். மண்ணுள் சிக்கியிருந்த  அப்புவின் மருமகளையும், பேரப்பிள்

ளைகளையும் வெளியே மீட்டெடுத்தார்கள். மருமகள் சற்று  சுயநினைவோடு வலதுகை முறிந்தநிலையில், உயிர்ப்புப் பெற்றாள். அவளுக்குத் தன் கணவனினதும் மாமனினதும் நினைவு மனதில் தட்டியது. ஒரு இளைஞனின் உதவியுடன் கைத்தாங்கலாக சிரமப்பட்டு எழுந்து கொண்டாள். அப்படியே சற்று திரும்பி          அப்பு இருந்த கொட்டிலைப் பார்த்தாள். கொட்டில் சின்னாபின்னமாகிச் சிதைந்து கிடப்பது அவளுக்குத் தெரிந்தது. மீண்டும் சுயநினைவிழந்து கீழேவிழப்போனவளைத்  தாங்கிப் பிடித்திருந்த இளைஞன் மீண்டும் தாங்கிக் கொண்டான்.

சில விநாடிகளின்பின் யாரோ ஒருவர் அவளது முகத்தில் தண்ணீர் அடித்து சுயநிலைக்கு வரச்செய்தார். அவளுக்கு நினைவு மெல்லத் திரும்பத் தொடங்கியது. மங்கலாகத் தெரிந்த காட்சிகள் அனைத்தும் தெளிவடைய ஆரம்பித்தன. கண்களை முற்றாகத் திறந்தவளுக்கு முதலில் முன்பாகத் தென்பட்டது கந்தகப்புகையில் கருகிப்போய் நின்ற ஒரு பூவரசமரமும் அதன் சிறுகிளையொன்றில் தொங்கிக் கொண்டிருத ஒரு பொருளுமாகும்.

அந்தப் பொருள்…

அப்பு தன்முகத்தில் அணிந்திருந்த வட்ட வடிவிலான வெள்ளிப்பிரேம்போட்ட மூக்குக் கண்ணாடியின் பாதிப்பகுதி.

அலெக்ஸ்பரந்தாமன்-இலங்கை  

அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்

 

 

https://naduweb.com/?p=15157

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 08 – ‘செந்தூரன்’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

 

அலெக்ஸ் பரந்தாமன்

பகல் முழுவதும் ஒரே அடைமழையாக இருந்தது. கடலில் இருந்து அலைகளும் ஆர்ப்பரித்து எழுந்து கரைகளில் வந்து மோதித் தணிந்து கொண்டிருந்தன. காற்றும் பலமாக வீசியபடிஎங்கும் குளிர்நிலை வியாபித்திருந்தது. மாலைநேரம் மழை சற்று ஓய்வெடுக்க வலையன் மடத்திலுள்ள ஒரு உறவினரைச் சந்தித்துவிட்டு, பிரதானவீதி வழியாக மாத்தளனுக்கு வந்துகொண்டிருந்தேன். வரும்வழியில் அம்பலவன் பொக்கணைச்சந்திக்கு அருகாமையில் யாரோ என்னை அழைப்பது கேட்கிறது.

“அண்ணை !  ஒருக்கா நில்லுங்கோ… உங்களோடை ஒரு விசயம் கதைக்கவேணும்…”

எனக்குத் திக்கென்றது. குளிர்கால நிலையையும் மீறி  ஊசிகள் குத்துவதான உணர்வுடன், உடல் ஒருகணம் குளிர்ந்து கொண்டது. ‘பிள்ளைபிடிகாரர்’ மனதிலே வந்து போனார்கள். கூடவே, மனைவி மற்றும் மகளது முகங்களும் ஞாபகத்துக்கு வந்தன.

நான் கேளாதது போன்ற பாவனையில் எனது நடையைச் சற்று துரிதப்படுத்தினேன். என்னைக் கூப்பிட்ட குரலுக்குரியவர் ஓடிவருவது அவரது காலிலுள்ள கனத்த சப்பாத்தின் ஒலியிலிருந்து அவர் ஒரு போராளி என்பதைப் புரியக்கூடியதாக இருந்தது.

எனக்கோ, ‘இனி மீட்சியில்லை. அவர்களுடன் போகவேண்டியதுதான்’ என்கிறதான ஓர் அதிர்வு உடலுக்குள் பரவிக்கொண்டிருந்தது. தொடர்ந்து கூப்பிடும் குரலைக் கேளாதவன்போல் பாசாங்கு செய்தால், அவர்கள் நிச்சயமாகக் காதைப்பொத்தி அறைவார்கள். திருப்பி பதிலுக்கு அடிக்கவோ, தர்க்கம் புரியவோ, நியாயம் கேட்கவோ முடியாது. கேட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்பது எனக்கு நன்கு தெரியாததொன்றல்ல.

ஏற்கனவே,  இந்தியன் ஆமி ‘அமைதிப்படை’யாக ஈழத்துக்கு வந்த நாள்களில், ஒருநாள் கோண்டாவில் – உப்புமடப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், ஒரு கூர்க்காஸ் படைச்சிப்பாயால் காதைப்பொத்தி அடிவாங்கி, ஒருவாரமாக இரத்தம் ஒழுகிய நிலையில், இன்று அக்காது செயலிழந்து கிடக்கிறது. இனி அதேபோன்று மறுகாதுக்கும் ஏற்பட்டால்…?

‘வருவது வரட்டும்…’ என்றதொரு அசட்டுத் துணிவில் நடையைச் சற்று தளர்த்தினேன். அதற்கிடையில், என்னைக் கூப்பிட்டபடி என்பின்னால் மெதுவாக ஓடிவந்த அந்தப் போராளியும் என்னருகில் வந்து என் தோள்மீது கையைப் போட்டார். முகம் இறுகிய நிலையில் மெதுவாக முகத்தைத் திருப்பினேன்.

‘செந்தூரன்’

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

90 களின் ஆரம்பத்தில் என்னோடு ஓர் அரிசி ஆலையில், சாதாரண ஒரு தொழிலாளியாகப் பணியாற்றியவன். கள்ளங்கபடமற்றவன். வெகுளித்தனம் நிறைந்தவன். நகைச்சுவையாளன். நல்ல பண்பாளன். எல்லா இளைஞர்களையும் போலவே, அவனும் ஒருநாள் இயக்கத்துக்குப் போய்விட்டான். அதன்பின், அவனைச் சீருடையில் ஏ.கே. துவக்கோடு சில இடங்களில் கண்டிருக்கிறேன். அவனும் என்னைத்தேடிவந்து கதைத்துவிட்டுச் செல்வான். வார்த்தைகள்  மிகச்சிக்கனமாக இருக்கும். போராட்ட அமைப்புக்குள் நிலவும் சிலரது செயற்பாடுகள் குறித்து,  என்னோடு தனிப்பட்ட ரீதியில், விவாதிப்பான். சிலநேரங்களில் அவனது அமைப்புச் சார்ந்த கருத்துகள் அவனது வெறுப்பையும், விரக்தியையும் வெளிக்காட்டுவனவாக அமையும்.

தொடர்ந்து நாட்டின் நிலைமை மோசமடையத் தொடங்கியது. தொடர் இடப்பெயர்வுகள், சொத்தழிவுகள், வீரச்சாவுகள், அகாலமரணங்கள், என்பன முடிவின்றி நீண்டு கொண்டு சென்றன. சில இரவுகளில் உறக்கமற்று இருக்கும்போது, இவனது முகம்வந்து என்முன்னே அழகுகாட்டி மறையும். அப்போதெல்லாம் இவனைக்குறித்து என்மனம் கவலைப்பட்டுக் கொள்ளும். ‘எந்த இடத்தில எந்தக் களத்தில யாரோடு நிற்கினானோ ?’ என எனக்குள் ஓர் உணர்வு அவதிப்படும். அக்கணம் அவன்மீது அனுதாபம் எழும்.

மன்னாரிலிருந்தும் மாவிலாறில் இருந்தும் படைநடவடிக்கை தொடங்கியபின், வன்னிப் பெருநிலப்பரப்பு சனசந்தடியற்ற நிலமாக மெல்ல மெல்லக் குறுகத் தொடங்கியது. போராட்ட அமைப்பின் ஆரம்பகால நடைமுறைகளில் மாற்றம் ஏற்படத்தொடங்கின. இந்த மாற்றத்தின் நிமித்தம் மக்களின் முகங்களில்  வினாக்குறி ஒட்டிக்கொண்டு நின்றது. மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த மக்களில் நானும் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான், இன்று செந்தூரனைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. அதுவும், மிக மோசமான கள, சமூக சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவனைச் சந்திக்கிறேன்.

என்னைக் கண்டதும் அவனது முகத்தில் ஆனந்தப் புன்முறுவல்! அந்தப் புன்முறுவல் ஒன்றே அவை எனக்கு இனம் காட்டியது. அதேவேளை அவன் ‘பிள்ளைபிடிகாரன்’ அல்ல… என்பதையும் தெளிவாக்கியது.

“எப்படி அண்ணை ! சுகமாக இருக்கிறியளே…?”

அவன் என்னைச் சுகம் விசாரிக்கிறான்.

நான் அவனைச் சந்திப்பேன் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் அதேபோன்ற உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்தும் என்னையே ஆச்சரியத்துடன் பார்த்தபடி திரும்பவும்  கேள்வி கேட்கத் தொடங்கினான்.

“இப்ப எங்கை இருக்கிறியள்… ?”

எனக்குப் பதிலளிக்க முடியவில்லை. காரணம், அவனது உடற்கோலம் அப்படியாக இருந்தது.

நன்கு கறுத்து சற்று மெலிந்தும் காணப்பட்டான். நீண்ட நாள்களாக எண்ணெய் கண்டிராத நிலையில் தலைக்கேசங்கள் பரட்டைபத்திக் கிடந்தன.அவன் அணிந்திருந்த சீருடையிலிருந்து, ‘குப்… ‘-பென அடிக்கும் வியர்வைமணம். நீண்ட நாள்களாக அவன் குளிக்கவில்லை என்பது தெரிய வந்தது. பசிக்களை வேறு முகத்தில் தெரிந்தது.

“இப்ப எங்கை இருக்கிறியள்… ?”  திரும்பும் அதே கேள்வியை என்னிடம் கேட்கிறான்.

“மாத்தளன் -கப்பல் றோட்டில…”

“சரி வாங்கோ.  ஒருக்கா உங்கட வீட்டை போவம்…”

எங்கும் ஒரே கும்மிருட்டாக இருந்தது. மழைமேகங்கள் வானைமூடி ஆக்கிரமித்து நின்றதால், நட்சத்திரங்களின் சிறு ஒளிகூட பூமியில் விழவில்லை. ஆங்காங்கே தரப்பாள் வீடுகளில் சிறுவெளிச்சமாக லாம்புகள், போத்தல் விளக்குகள் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தன.

நான் அவனையும் அழைத்துக்கொண்டு பிரதான வீதியில் நடக்க ஆரம்பித்தேன்.

“அண்ணை ! மெயின் ரோட்டாலை போகவேண்டாம். உள்ளுக்குள்ளாலை போவம்.”

“ஏன்ராப்பா… உள்ளுக்குள்ளாலை போறதுக்கு இந்த இராஇருட்டிலை கரைச்சல். அதோடை நேரத்தையும் விழுங்கிப்போடும். மெயின்ரோட்டாலை எண்டால், ஓரளவு மேக வெளிச்சத்தில நேரத்துக்குப் போயிடலாம்…”

“நேரம் போனாலும் பிரச்சினையில்லை. உள்ளுக்குள்ளாலை, தரப்பாள் கொட்டிலுகளுக்கிடையால போவம்…”

எனக்கு ஏதோ மனதுக்குள் உதைப்பதான உணர்வு. அதேசமயம்,  அவனது வார்த்தைகள் பல விடயத்தைப் புரிய வைப்பன போலவும் தோன்றின.

“சரி நட போவம்…” என்றேன் நான்.

பிரதான வீதியில் இருந்து கிழக்கே திரும்பும் ஒரு ஒற்றையடிப்பாதையூடாக இருவரும் சென்று கொண்டிருந்தோம். மழைக்காலமாகையால், பாதை சேறாகக் காணப்பட்டது. ‘பாட்டா’ செருப்போடு சேற்றினுள் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும்,  மெதுவாகவும் நிதானத்துடனும், இருளைப் பார்வைகளால் ஊடறுத்தும் நடப்பதற்கு அந்த மெதுவானநடை மிகவும் உதவியாக இருந்தது.

சிலயார் தூரம் சென்றபின்பு, அந்த ஒற்றையடிப் பாதையின் இருமருங்கிலும் வடலிப்பனைகள் மற்றும் மண்டுப்பற்றைகள் நிறைந்து காணப்பட்டன. அதனையும்தாண்டி அப்பால் செல்கையில்  தரப்பாள் வீடுகள் தென்படத்தொடங்கின. செந்தூரன் முன்னே நடந்து கொண்டிருந்தான்.

இருந்தாற்போல், மழை பெய்யத் தொடங்கியது. இடைக்கிடை மின்னல்களும் தோன்ற ஆரம்பித்தன. காற்றின் குளிர்ச்சி அதிகமாக இருந்தது. செந்தூரன் தனது தோளில் தொங்கிய துவக்கினை எடுத்து, அதன் முனையைக் கீழே விட்டபடி நடந்துகொண்டிருந்தான். தரப்பாள் வீடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளால் நாம் இருவரும் போய்க்கொண்டிருந்தோம். பாதை நேராக இருக்கவில்லை. தரப்பாள் விளிம்புகளை இழுத்துக்கட்டிய கயிறுகள் பாதையெங்கும் குறுக்கும் நெடுக்குமாக நிறைந்து கிடந்தன. இவ்வாறாக, நடந்து நடந்து கடற்கரைக்கு அருகில் வந்துவிட்டோம். இனிக்கப்பல் றோட்டுக்கு நேராக நடந்து அதில் ஏறிவிட்டால், வீட்டுக்குப் போய்விடலாம்.

“ஏனப்பா இவ்வளவு நேரம்… ?”

பொழுது நன்றாக இருட்டிவிட்டதனால்  வழியில் ஏதாவது ‘அசம்பாவிதங்கள்’ நிகழ்ந்திருக்கக்கூடும் என அவள் பயந்திருந்தாள்.

“ஒண்டுமில்லை வழியிலை இந்தத் தம்பியைக் கண்டாப்போல கதைச்சுக்கொண்டுவர நேரம் போட்டுது.”

அப்போதுதான் அவள் செந்தூரனைக் கவனித்திருக்க வேண்டும். கையிலே துவக்குடன் நின்றவனைப் பார்த்துவிட்டு, என்பக்கம் திரும்பினாள்.

“பயப்பிடாதை. அவன் நம்மட தம்பிதான். அவன் இருக்கிறதுக்கு ஒரு பாயை எடுத்துப்போடு.”

மணல்தரையில் அவள் விரித்துவிட்ட இறப்பர் பாயில் நாங்கள் இருவரும் அமர்ந்து கொண்டோம்.  தரப்பாள் கொட்டிலின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ள அடுப்படியில், மனைவி எங்கள் இருவருக்கும் தேநீர் தயாரிக்க ஆயத்தமானாள்.

“ம்… சொல்லு செந்தூரா !  இப்ப எங்கை நிக்கிறாய்? பிரச்சினைகள் என்னமாதி? அடிபாடு இதோடை முடியுமோ? அல்லாட்டி இன்னும் தொடருமோ?”

அவனிடமிருந்து எந்தப்பதிலுமில்லை. அவனுக்குப் பின்புறமாக லாம்பு ஒளிர்விட்டுக் கொண்டிருந்ததால், அவனது முக அசைவுகளை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

“உங்கை எல்லாச் சனமும் ஆமியிட்டை போகுதுகள். உங்களுக்குப் போக விருப்பமில்லையோ…?”

அவனது கேள்வி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. என்ன அர்த்தத்தில் இப்படிக் கேட்கிறானெனப் புரியாமல் தவித்தேன். லாம்பு வெளிச்சத்தில் அவன் என் முக உணர்வுகளைக் கவனித்து விட்டான்.

“ஆமிட்டை போறதுக்கு ஏதாவது வழி தென்பட்டால் இப்பவே ஓடித் தப்பியிடுங்கோ.”

அவனது வார்த்தைகள் எனக்குத் திகைப்பைக் கொடுத்தன.  ஒரு நீண்டகாலப் போராளி அவன். அவனே இப்படிக் கூறும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத் தெரிந்தன.

“ஏன்ராப்பா… என்ன நடந்திட்டுது ?” பதற்றமாய் ஒலிக்கிறது எனது குரல்.

களநிலைமை இப்ப சரியில்லை. ஆமி வாற நிலையைப் பார்த்தால் இந்தக் கடற்கரைப்பகுதி இன்னும் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்குமெண்டது எனக்கே தெரியாமல் கிடக்குது.”

“மெதுவாப் பேசு. அங்காலை இஞ்சாலையெல்லாம் ஆக்கள் இருக்கினம்.”

நான் அவனை எச்சரிக்கிறேன்.

அவன் தனது குரலைத் தாழ்த்தி மெதுவாகக் கூறத் தொடங்கினான்.

“சண்டைக்களத்தில இப்ப நிலைமை சரியில்லை. இயக்கத்துக்குள்ளை ஏதோவொரு பிறசக்தி ஊடுருவி விட்டமாதிரித் தெரியுது. அண்ணையின்ரை பேச்சு மூச்சைக் காணோம். தளபதிமாரெல்லாம் திக்கொன்றாய் பிரிஞ்சுபோய்க் கிடக்கினம். ஆமியளோடை அடிபடுகிறதுக்கு இப்ப ஆக்கள் காணாமல் கிடக்குது. சனங்களுக்குள்ளை சாவுகள் வரவரக் கூடிக்கொண்டு போகுது. உந்தப் ‘பிள்ளைபிடிப்பு’ வேலையாலை சனங்களிட்டை இருந்த மதிப்பு, மரியாதையெல்லாம் கெட்டுப் போச்சுது. சனத்துக்கு முன்னாலை துவக்கோடை போய் நிக்க வெக்கமாக் கிடக்குது. சாப்பாட்டுக்குக் சரியான கஷ்டம். மேலிடத்துக்குள்ளை என்ன நடக்குதெண்டு ஒருத்தருக்கும் தெரியாதாம். இப்ப போராளியளைவிட, உளவாளியள் கூடிப்போச்சுது. அதுதான் எங்கட சனத்துக்கு உந்தநிலை. இது எங்கைபோய் முடியப்போதுதெண்டது தெரியேல்லை. ஆனால்,  ஒண்டுமட்டும் தெரியுது… இனிச் சனத்துக்கு மீட்சியில்லையெண்டது…”

அவன் கூறியதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. அவன் கூறும்போது அவனிலிருந்து வெளிப்பட்ட விரக்தியையும் வேதனையையும் கண்டு, அவனது வார்த்தைகளை நிராகரிக்க முடியாமலும் இருந்தது.

‘எத்தனை பெரிய களங்களைக் கண்டு, அந்தக் களங்களையே கைப்பற்றி, உலகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்கள் இப்போது போரியல் முனையிலும் மக்கள் மத்தியிலும் தோற்றுக் கொண்டிருக்கிறார்களெனில் செந்தூரன் கூறுவதுபோன்று, அமைப்புக்குள் ஏதோ ஒரு சக்தி ஊடுருவி விட்டதா ? அப்படியானால், அந்த சக்தி எது?’  எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அவனுக்கும் எனக்குமிடையில் விநாடிகள் சில, மெளனமாய் கடந்து கொண்டிருந்தன. அந்த மெளன இடைவெளிக்குள் மனைவி தேநீரைக் கொண்டுவந்து வைத்தாள். கூடவே, இரண்டு ரொட்டிகளையும் செந்தூரனிடம் கொடுத்தாள். அவனுக்கு நல்ல பசி. எதுவித மறுப்பும் கூறாமல் வாங்கிக் கொண்டான். ரொட்டியைச் சாப்பிட ஆரம்பித்தான்.

“தலைவர் பாவம். எல்லாரையும் நம்பிக்கெட்டு ஏமாந்து போனார். எப்படியெல்லாம் போராடினம்.?எப்படியெல்லாம் தலை நிமிர்ந்து நிண்டம்…?”

செந்தூரனால் தொடர்ந்து பேச முடியவில்லை. அழுகிறான் போலும். ஒருகை அவனது கண்களைத் துடைத்துக் கொள்கிறது.

எனக்கு செந்தூரனைப்பற்றி நன்கு தெரியும். தனது அமைப்பின்மீதும், அதன் தலைமைமீதும் மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டவன். தனது மனசாட்சியின்படி வேலை செய்தவன். நீண்டகாலக் களப்பணியாளன். பல சமர்களில் பங்குபற்றியவன். அப்படிப்பட்டவனே விரக்தியும், வெறுப்பும் கொண்டு நிற்கையில், பிள்ளைபிடிகாரர்களால் வலிந்து பிடித்துச் செல்பவர்களிடம், எந்தளவுக்கு விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் எதிர்பார்க்க முடியும்…? என என்மனம் எண்ணிக் கொள்கிறது.

“சரியண்ணை… நான் வெளிக்கிடப்போறன்…” அவன் புறப்பட ஆயத்தமானான். நான் திகைத்துப் போனேன்.

“டேய்… இந்த இருட்டுக்குள்ளை எங்கையடா போகப்போறாய் ? வெளியில மழையும் பெய்யுது…”

“இனி எல்லாமுமே இருட்டுத்தான். எல்லாருக்குமே இருட்டுத்தான். எங்கேயோ சறுக்கிப்போட்டுது. விழுந்து போனம். இனி நிமிருவம்… எண்டது சாத்தியமில்லை. அதோடை, நான் இப்ப உங்களோடை தங்கியிருக்கேக்கை ‘பிள்ளைபிடிகாரர்’ வந்தினமெண்டால், என்னைவிட உங்களுக்குத்தான் நிறையப் பிரச்சினை”.

” நீ… என்னடா சொல்லுறாய்… ?”

“நான் களத்தை விட்டு, இயக்கத்தைவிட்டு ஓடி வந்திட்டன்…”

“என்னது… ?!?”

“என்னாலை இனி ஏலாது…”

வெளியே மழை பெரும் இரைச்சலுடன் கனத்துக் கொள்ளத் தொடங்கியது. மழையோடு சேர்ந்து மின்னல்கள், இடிமுழக்கங்கள், காற்று  என்பனவும் கைகோர்த்துக் கொண்டன. மழைநீர் வழிந்தோட முடியாமல் தரப்பாள் வீட்டுக்குள் வரத்தொடங்கியது.

அவன் எழுந்து கொண்டான்.

“நீ   இப்ப இந்த மழைக்குள்ள எங்கை போகப் போறாய் ?”

“மழையெண்டாலும் சனங்கள் ஆமியிட்டை போறதை விடமாட்டுதுகள். அந்தச் சனத்தோடை சனமா, நானும்போய் ‘சரண்டராகப்’ போறன்..”

அவன் கூறிக்கொண்டிருக்கும்போது, பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைகளில் எடுக்கக்கூடிய பொருள்களை எடுத்துக் கொண்டு, வயது வேறுபாடின்றி, பால்பேதமற்று ஆமியிடம் சரணடைவதற்காக எனது வீட்டின் முன்பாக, மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவனாக செந்தூரனும் தனது துவக்கை மறைத்தபடி அந்த இருளுக்குள் சென்று மறைந்து விட்டான்.

போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டன. முள்ளிவாய்க்காலில் கிபிர் விமானத்தின் ஒரேயொரு குண்டுத்தாக்குலில், அவனது பெற்றோர் மற்றும் சகோதரங்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர் என்ற தகவலைத் தவிர இதுவரை அவனைப்பற்றிய எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.

அவன் மக்களோடு மக்களாக ஆமியிடம் சரணடைந்திருக்கலாம்?

அல்லது –

ஆமியிடம் சரணடைய முயற்சிக்கும்போது, அவனது அமைப்பால் இனங்காணப்பட்டு, சுடப்பட்டு இறந்திருக்கலாம்?

அல்லது –

இராணவத்தரப்பால் காணாமல் ஆக்கப்பட்டிருக் கலாம்?

அல்லது  –

புனர்வாழ்வுபெற்று வெளியே வந்திருக்கலாம்?

அல்லது –

வெளிநாடொன்றில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம்?

அல்லது –

‘முன்னாள் போராளி’ எனும் அடைநாமத்துடன், வாழ்க்கையோடு அல்லாடுபவனாக, இந்த நாட்டின் எங்கோ ஒரு மூலையில், தன்னை வெளிப்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ?

எது எப்படியோ… செந்தூரன் ஓர் உண்மையான போராளி. மறக்க முடியாத முகம் அது!

இன்னும் இவனைப்போன்று எத்தனை ‘செந்தூரன்’கள்…

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை 

அலெக்ஸ் பரந்தாமன் அலெக்ஸ் பரந்தாமன்

 

 

https://naduweb.com/?p=15535

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தின் கதை’-கதை 09 – ‘உண்ணாச் சொத்து மண்ணாப் போச்சு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

82146163_164187474837244_706285433134252

 

பரமனால் தொடர்ந்தும் தரப்பாள் கொட்டிலினுள் உறக்கம் கொள்ள முடியவில்லை. பனிக்காலம்  பகல்நேர வெய்யிலின் வெப்பத்தை  உள்வாங்கி இருந்தது. இரவானதும் அந்த வெக்கையை அது வெளியே உமிழ்ந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே அவிச்சலும் புளுக்கமுமாக இருந்தன. போதாக்குறைக்கு வெப்பத்தை உள்வாங்கிய குருமணல் மேல் இறப்பர் பாயை விரித்துவிட்டுப் படுத்ததில், பாயூடாக வெப்பம் உடலினுள் பரவுவதை பரமனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவன் படுக்கையை விட்டெழுந்து, கொட்டிலின் வாசலில் குந்தினான். வானத்தில் வளர்பிறை ஒளிர்ந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே மயான அமைதி நிலை!  அவனுக்கு அந்த நிலை குறித்து ஆச்சரியமாக இருந்தது. அதேவேளை சற்று அச்சத்தையும் கொடுத்தது.

களமுனைகளில் எதுவித மோதல்களும் இடம் பெறவில்லையென்பது அவனுக்குப் புரிந்தது. இராணுவம் சமரை நிறுத்திவிட்டு, காடுகளூடாக வேவு பார்க்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கக்கூடும் என அவன் நினைத்தான். அதேபோல், புலிகள் தரப்பும் ஆள்கள் பற்றாக்குறை காரணமாகத்  தங்களது எதிர்த்தாக்குதல்களை நிறுத்தியிருக்கலாம் எனவும் அவன்  சிந்தித்தான். அக்கணத்தில் எந்தவொரு வெடி அதிர்வுகளும் எழாமல் இருந்தது அவன் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

பரமன் தன் குடும்பத்துடன் கைவேலியை விட்டுப் புறப்படும்போது, ஒருமாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களும் சிறுதொகைப் பணமுமே இருந்தன.

‘எப்படியும் இயக்கம் விடாது. ஆமியளை அடிச்சுக் கலைச்சுப்போடும். பிறகு வீட்டை போயிடலாம்…’ என்ற நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருந்ததுபோல, அவனிடத்திலும் இருந்தது. நாள்கள் நகர நகர… அந்த நம்பிக்கை சிதைவடையத் தொடங்கியது .

எல்லோரும் தொழிலற்று இருந்தார்கள். அதிலும் தினக்கூலிகளாக விளிம்புநிலை வாழ்வியலைக் கொண்டோர் ஒருநேர உணவுக்காக பெரிதும் போராட வேண்டியிருந்தது. வர்த்தகம் செய்தோர் தாங்கள் இடம்பெயரும்போது எடுத்து வந்த அத்தியாவசியப் பொருள்களை வைத்து, விலை நிர்ணயமற்று, மனம்போன போக்கில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். இருப்பில் உள்ள பொருள்களும் தீர்ந்து கொண்டிருக்க அப் பொருள்களுக்குப்  பெரும் தட்டுப்பாடு நிலவத்தொடங்கியது. இதன் நிமித்தம் களவுகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக, காசு, நகைகள் என்பவற்றைவிட, அரிசி, மா, சீனி போன்ற பொருள்கள் களவு போகத் தொடங்கின. இவ்வாறான களவுகளின்போது, சிலர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு ஏனையவர்களால் நையப்புடைக்கப்பட்டார்கள்.

இடைக்கிடை செஞ்சிலுவைச்சங்க அமைப்பின் அனுசரணையுடன் கப்பலில் கொண்டுவரப்படும் மா, சீனி, அரிசி, மைசூர்பருப்பு போன்ற பொருள்கள் குடும்ப அங்கத்தவர்களின் தொகையைப் பொறுத்து பங்கீட்டு அடிப்படையில் வழங்கினாலும் அவை போதுமானவையாக இருக்கவில்லை. சிலர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சாவடையத் தொடங்கினார்கள்.

பரமனுக்கு பொறுமையுணர்வு அற்றுப்போய் விட்டது. இனித் தன்னால் மீள முடியாது என்கிற உணர்வு எழுந்து கொண்டது. கையில் இருந்த பணமும் செலவாகி விட்டது. கொண்டு வந்த உணவுப்பொருள்களும் முடிவுற்று, தற்போது கையிலிருந்தது ஒண்டரைச்சுண்டு கோதுமைமாவும் இரண்டு போத்தல்மூடி சீனியும் மட்டுமே.

‘இனி என்ன செய்வது ? எங்கு போவது? யாரிடம் இரந்து கேட்பது?’ என்ற சிந்தனை எழுந்து கொண்ட போது, அடிவயிற்றுக்குள் ஏதோ பிசைவது போன்ற உணர்வால், அவன் அவதிப்பட்டான். காலையில் தேநீருடன் இரண்டு சிறிய கோதுமைமா ரொட்டிகளைச் சாப்பிட்டவன், மாலைவரை எதுவும் உட்கொள்ளவில்லை. பசி, பட்டினி அவனுக்குப் புதிதல்ல. ஆனால், அவனால் இப்போது இயலாதிருந்தது. இரவு படுக்கைக்காக உடலைச் சரிக்கும்போது, நாளைய பொழுதுக்கான தேவைகள் அவன் முன்னால் வந்து பயமுறுத்தின. உடலைவிட, மனசு அதிகம் சோர்வாகத் தென்பட்டது. வயிற்றுக்குள் குடல்களைச் சுற்றி ஏதோவொரு எரியுணர்வு படர்ந்து கொதுகொதுப்பது போன்று இருந்தது. ‘தண்ணீர் குடித்தால் நல்லது’ என நினைத்தவன் எழுந்து செல்ல மனமில்லாது அப்படியே இருந்தான்.

தூரத்தில் யாரோ நடந்து வருவது இருளில் சற்று மங்கலாகவே தெரிந்தது. வானத்தில் வளர் பிறையை கருமேகமொன்று மூடிக்கொண்டதில் வருபவரை இனம் காண பரமனால் முடியவில்லை. அவர் அவனருகில் வந்தபின்புதான் அவனால் அடையாளம் காண முடிந்தது.

“ஆர் முருகண்ணையே… ?”

“ஓம் தம்பி நான்தான். உங்காலை கடற்கரைப் பக்கம் போட்டு வாறன். நீர் என்ன இந்த நேரம் வெளியிலை வந்து குந்திக்கொண்டிருக்கிறீர்?” முருகண்ணர் கூறிக்கொண்டே பரமனுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

“நித்திரை வருகுதில்லை. அதுதான் வெளியிலை வந்து இருக்கிறன்” என்று அவன் கூறிக்கொண்டாலும் அவனால் வயிற்றுக்குள் தகித்துக் கொண்டிருக்கும் பசி வெக்கையை வார்த்தைகளாக வெளியே கொட்ட முடியவில்லை .

“தம்பிக்கு ஏதேனும் தொழில் வசதி இருக்கே ?”

“இல்லையண்ணை. ஏன் கேக்கிறியள்?”

முருகண்ணர் எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்தார். அவரது அமைதி பரமனுக்கு என்னவோ போலிருந்தது. ஏதோ கேட்க விரும்புவதையும், அதைக் கேட்கக்  கூச்சப்படுவதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

முருகண்ணர் பேச ஆரம்பித்தார். அவர் பேசப் பேசத்தான், தன்னைப்போன்றவர்களின் வாழ்வுக்கான, வயிற்றுக்கான போராட்டம் எந்த அளவுக்கு உச்ச நிலையைத் தொட்டு நிற்கிறது என்பதைப் பரமனால் புரிந்து கொள்ள முடிந்தது. வயிற்றுப்பசி தனக்கு மட்டுமல்ல என்பதும் அவனுக்குத் தெரிந்தது. முருகண்ணர் வேலை விடயம் குறித்து விசாரித்தது… அவரும் தொழில் இன்றி அவரது குடும்பமும் சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறதென்பதை விளங்கிக் கொண்டான்.

இருவரும், தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்ட பின்னடைவுகள், இராணுவத்தின் முன்னேறும் நடவடிக்கை, குடும்பத்தலைவர்களின் தொழிலற்ற நிலை, பசி பட்டினி நோய்கள் அதற்கான மருந்தின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், பிள்ளைபிடிப்புகள் என்பவை பற்றி ஒருத்தருக்கொருத்தர் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். நேரம் அது தன்பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது.

அந்தவேளையில் ஒருவர் தன்முதுகில் மூடையொன்றைச் சுமந்தபடி கும்பி மணலில் நடக்கச் சிரமப்பட்டவாறு அவர்கள் இருவரையும் கடந்து,  தரப்பாள் கொட்டில்களின் இடைவெளிகளூடாகச் சென்று மறைந்தார். பரமனும் முருகண்ணரும் அவர் போன திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னண்ணை இந்த நேரத்தில முதுகில மூட்டையோடை ?” பரமன் கேட்டான்.

“அதுதான் தம்பி எனக்கும் விளங்குதில்லை. களவோ அல்லாட்டி அறிஞ்சவை தெரிஞ்சவையிட்டை  ஏதேனும் வாங்கிக்கொண்டு போறாரோ தெரியேல்லை”

“இப்ப சாப்பாட்டுப் பிரச்சினைதானே பெரிய பிரச்சினையாகக் கிடக்குது. ஆமி ஏவுற ஷெல்லுகளாலை சாகிறதைவிட சாப்பாடு இல்லாமல்தான் எங்கட சனமெல்லாம்  சாகப்போகுதுகள். உங்கால வலைஞன்மடப் பக்கம் ஆரோ ஒரு அப்பு சாப்பாடு இல்லாமல் கிடந்து செத்தவராம்” என்று பரமன் கூறிக் கொண்டிருக்கையில், முருகண்ணர் குறுக்கிட்டார்.

“இயக்கமும் சாப்பாடில்லாமல் கஷ்டப்படுகுதாம். அடிபாட்டுக்களத்திலை நிற்கிறவைக்கு ஆகப்போக சாப்பாடு இல்லையாம்…”

முருகண்ணர் கூறியதைக் கேட்டு, பரமன் மெதுவாகச் சிரித்துக் கொண்டான். அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் பேச்சொலிகள் கேட்டன.  பரமனும் முருகண்ணரும் திரும்பிப் பார்த்தார்கள். சற்றுமுன், மூடை சுமந்து சென்றவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் மேலும் இரு இளைஞர்கள் வந்தனர். மூடை சுமந்தவர் பரமனுக்குக் கிட்டவந்ததும், அவர் சொன்ன தகவல் முருகண்ணருக்குத் தூக்கிவாரிப் போட்டது. பரமனுக்கு அச்சமாகவும் விருப்பமாகவும் இருந்தது.

“இயக்கத்தின்ரை களஞ்சியமொண்டை சனங்களெல்லாம் ஒண்டு சேர்ந்து உடைச்சு, அதுக்கை கிடந்த சாமான் சக்கட்டெல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போகுதுகள். உங்களுக்கும் ஏதும் தேவையெண்டால், எங்களோடை வாங்கோ. வந்து ஏதாவதை எடுங்கோ.”

அவர் கூறிவிட்டு, தன்னோடு கூடவந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, தரப்பாள் கொட்டில்களின் இடைவெளிகளூடாகச் சென்று கொண்டிருந்தார்.

பரமன் எழுந்து கொண்டான். தன் கொட்டிலின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மனைவியைத் தட்டி எழுப்பி, விடயத்தைக் கூறிவிட்டு வெளியே வந்தான். பரமனின் மனைவிக்குத் திகைப்பாக இருந்தது. படுக்கையை விட்டெழுந்தவள், வாசலுக்கு வந்து பார்த்தபோது, பரமன் முருகண்ணருடன் சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

முருகண்ணர் வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் பரமன் ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தான். கடற்கரையில் இருந்து மேற்குப்புறத்தே தென்னை மற்றும் மாமரங்களினால் சூழப்பட்ட இடத்தில் அந்த உணவுக் களஞ்சியம் இருந்தது. தகரத்தாலான மிக விரிவான நிலப்பரப்பைக் கொண்ட அந்தக் களஞ்சியத்தினுள் போதுமான உணவுப்பொருள்கள் நிறைந்திருந்தன. களஞ்சியத்தின் ஒருபகுதி உடைக்கப்பட்டு, அதனூடாக மக்கள் உள்நுழைந்திருந்தனர். பலரது முகங்களிலும் பசிக்களை.

தொழிலற்றவர்கள், சாப்பிடுவதற்கு பொருளற்று இருந்தவர்கள், விளிம்புநிலை வாழ்வியலைக் கொண்டவர்கள் எனப் பல ரகத்தினரும் அங்கே நிறைந்திருந்தனர். பின்விளைவுகள் எதையும் அவர்கள் நோக்கவில்லை. வருவது வரட்டும் என்ன துணிவு எல்லோரிடமும் மேலோங்கி நின்றது. சிலர் கொண்டுவந்த ‘டோர்ச் லைட்’ மூலம் ஒளி பாய்ச்சப்பட்டு, உடல் வலுவுள்ளவர்கள் மூடைகளை முதுகிலே சுமந்தபடி சென்றார்கள். பெண்கள் கடதாசிப் பெட்டிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். மூடைகளுக்குள் மற்றும் பெட்டிகளுக்குள் என்ன பொருள்கள் இருக்கின்றன என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை. அவதி அவதியாக கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு போகும்போதுதான் அந்த வெடிச்சத்தம் கேட்டது.

மக்கள் ஒருகணம் திகைத்துப் போனார்கள். சடுதியாக அந்த இடத்துக்கு வந்த மூன்று போராளிகளில் ஒருவன் மக்களை மிரட்டும் வகையில், வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தொடங்கினான்.

“தின்னுறதுக்கு சனங்களுக்குச் சாப்பாடில்லை. இதெல்லாம் ஆருக்குத் தேடி வைச்சிருக்கிறியள்…?”

அந்த இருட்டுக்குள்ளிருந்து ஆங்காரமாக ஆவேசமாக ஒலிக்கிறது ஒரு பெண்ணின் குரல். மறுகணம், வந்த போராளிகளிலொருவன் நிலைமையின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டான். பக்கத்தில் நின்றவனிடம் மெதுவாகக் கூறினான்.

“அண்ணை நிலைமை சரியில்லை. நாங்கள் ஆக மூண்டுபேர்தான் நிக்கிறம். சனங்களெல்லாம்பசிவெறியில நிக்குதுகள். உதுக்குள்ள தலையைக் குடுத்தால், எங்கட மூண்டு பேரின்ர தலையும் தப்பாது”

முதலாமவனுக்கு, இரண்டாமவனது கருத்து சரியாகவே பட்டது. வெடிச்சத்தம் கேட்டும் அசராது, பொருள்களை மக்கள் தூக்கிச் செல்வதை அவதானித்தவன், மேற்கொண்டு எதுவும் கூறாது, தன்னுடன் வந்தவர்களோடு இருளோடு இருளாக மறைந்து போனான்.

பரமனும் முருகண்ணரும் ஆளுக்கொரு மூடைகளை முதுகிலே சுமந்தபடி தங்கள் தரப்பாள் கொட்டில்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

‘கடவுளே ! மூடை தீட்டுப்பச்சையாக இருந்திட வேணும். உப்பைப் போட்டுக் காய்ச்சி கஞ்சியெண்டாலும் குடிக்கலாம்.’

பரமனது மனம் கடவுளை வேண்டிக் கொள்கிறது. இருவரும் ஒருவாறாக தங்களது இருப்பிடங்களுக்கு வந்து விட்டார்கள். வந்தவர்கள் அவசரமாக மூடைகளின் வாய்ப்பகுதியைப் பிரித்தெடுத் தார்கள். மறுகணம், பரமனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவனுக்கு அகப்பட்டது உளுத்தம்பருப்பு மூடை! முருகண்ணர் தூக்கி வந்தது சீனி மூடை.

“சரி அளந்தது அவ்வளவுதான் !” எனக்கூறிய முருகண்ணர், சீனி மூடையில் இருந்து வேண்டியளவு சீனியை எடுத்து, பரமனிடம் கொடுத்து விட்டு, மிகுதியுடன் தன் கொட்டிலை நோக்கிச் சென்றார்.

பொழுது மெல்லப் புலர்ந்து கொண்டிருந்த நேரம் அது! இரவு மக்கள், களஞ்சியத்தை உடைத்து  பொருள்களை எடுத்ததன் களிப்பை நிர்மூலமாக்குவது போன்று, அடுத்தடுத்து மாத்தளன் பகுதியெங்கும் ஷெல்கள் விழுந்து வெடிக்க ஆரம்பித்தன. துவக்கு வெடிச்சத்தங்களும் மிக அருகாமையிலிருந்து ஒலிக்கத் தொடங்கின. மாத்தளன் – கப்பல்றோட்டின் முச்சந்தியின் அருகாமையில் குடியிருந்தவர்கள் அலறியபடி கும்பல் கும்பலாக கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு, கடற்கரையை நோக்கி ஓடிவரத் தொடங்கினார்கள்.

“ஐயோ… ஆமி இரணைப்பாலை தாண்டி வந்திட்டான். எல்லாரும் ஓடுங்கோ…”ஓடிவரும் கூட்டத்திலிருந்து ஒலிக்கிறது ஒரு குரல்.

பரமனால் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை. சிந்திப்பதற்கான அவகாசமும் அப்போதிருக்க வில்லை. ஓடிவந்த  மக்கள் எல்லாம் கடற்கரைக்கு வந்து, பின் அங்கிருந்து அம்பலவன் பொக்கணை, வலைஞன்மடம் பகுதிகளை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இடையிடையே விழுந்து வெடிக்கும் ஷெல்களினால், பலர் அந்த இடத்திலேயே இறப்பதும், காயப்படுவதுமாக இருக்க, ஏனையோர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

பரமனும் மக்களோடு மக்களாக தனது மனைவி பிள்ளைகளுடன் ஓடினான். ஓடிஓடி இறுதியில், வலைஞன்மடத்தில் உள்ள ஒரு வாகை மரத்தின்கீழ் தஞ்சமடைந்தான். முருகண்ணரைப் பற்றி எதுவும் தெரிய வரவில்லை. ஓடிவந்தகளையில் அவன் மனைவி வெறுந்தரையில் படுத்திருந்தாள். பிள்ளைகள் இரண்டும் அழுதகண்களுடன் தாயோடு ஒட்டியபடி இருந்தன. அவளது தலைமாட்டில் இரண்டு சிறிய பயணப்பொதிகள் மட்டுமே இருந்தன. சீனிப்பொதி…???

ஆமி வந்தமாதிரிக்கு இந்தநேரம் அந்தக்களஞ்சியம்  அவையளிட்டை  வசமாக மாட்டியிருக்கும் என்பது தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.

“அநியாயப்படுவார் சனங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படேக்கை உந்தச் சாமான் சக்கட்டுகளைப் பகிர்ந்து குடுத்திருக்கலாம். கடைசியில சனத்துக்குமில்லாமல் தங்களுக்குமில்லாமல் ஆமியிட்டை தானம் பண்ணினதுதான் மிச்சம். ‘உண்ணாச் சொத்து மண்ணாப் போச்சு’

பரமன் தனக்குள் குமுறியபடி இருந்தான். தூரத்தே மக்கள் கடற்கரைவழியே கைகளில் மேலதிக பொருள்கள் எதுவுமற்றவர்களாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். இப்போது பசியில் கொதுகொதுக்கத் தொடங்கியது பரமனின் வயிறு.

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன் அலெக்ஸ் பரந்தாமன்

 

https://naduweb.com/?p=15663

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தின் கதை’-கதை 10 – “கண்ணீரோடு விதைப்பவர்கள் கம்பீரத்தோடு அறுப்பார்கள்”-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0

 

பரந்த நிழல் பரத்தி நின்ற வாகைமரத்தின்கீழ் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தரப்பாள் கொட்டில் சங்கக்கடையாக மாறியிருந்தது. நாட்டின் தென்பகுதியில் இருந்து கப்பலில்வரும் உணவுப் பொருள்களை சிறுபடகுகளில் இறக்கி, கரைக்குக் கொண்டுவந்து, பின் அவற்றை கரையிலிருந்து உழவு இயந்திரத்தின் பெட்டிகளில் ஏற்றி, கப்பல்றோட் வழியாக மாத்தளன் சந்திக்கு நகர்த்தி, அங்குள்ள தற்காலிக சங்கக்கடையில் களஞ்சியப்படுத்தியிருந்தார்கள் அரச அதிகாரிகள்.

மாத்தளன் சந்தியில் இருந்து வலைஞன்மடம் செல்லும்பாதையில் சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்தது அந்தச் சங்கக்கடை. பனிப்புகார் நீங்கி, சூரிய ஒளி மென்சூடாக நிலமெங்கும் பரவத் தொடங்கியபோது, நேரம் ஏழு மணியைக் கடந்து கொண்டிருந்தது. இன்றைக்கு முதல் தினமே பிற்பகல் பொழுதில் பொதுமக்களின் வாய்வழியூடாகப் பரவிய தகவலையடுத்து, பலரும் நேரத்தோடு, சங்கக்கடைக்கு முன்பாக வந்து சேர்ந்து விட்டார்கள். வந்தவர்கள், தாம் கொண்டு வந்த சிறு வெறும் உரப்பைகளை வரிசையில் ஆள் அடையாளமாக வைத்துவிட்டு, வாகைமரத்தின் கீழ் வந்தமர்ந்தார்கள். வாகைமரத்தடி பேச்சொலிகளால் நிறைய ஆரம்பித்தது.

சமகால அரசியல், இயக்கத்தின் ‘பிள்ளை பிடிப்பு’ விவகாரம், போர்க்களத்தில் புலிகளுக்கு ஏற்பட்டும் பின்னடைவு, புலம்பெயர் தேசமொன்றிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் ‘வணங்காமண்’ கப்பல் வருமென்ற எதிர்பார்ப்பு, என்று அங்கு நிற்பவர்களது உரையாடல்கள் பல விடயங்களைத் தாங்கி வெளிக்கொண்டிருந்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா புலிகளுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை… போன்ற விடயங்கள் அவரவர் அறிவுக்கும் பார்வைக்கும் அனுபவத்துக்கும் எட்டிய வகையில், அலசப்பட்டுக் கொண்டிருந்தன.

நிவாரண வரிசையில் எனது உரப்பைப் பொதியை அடையாளமாக வைத்துவிட்டு, வாகைமரத்தடிக்கு வருகிறேன். மரத்தடியில் நிற்பவர்களது உரையாடல்கள்… எனக்குள் ஈர்ப்புக் கொள்கின்றன. சிலரது கருத்துக்களில் அதிமேதாவித்தனம் வெளிப்படுகிறது. நடந்தது… நடக்கப்போவது… குறித்தும் ‘ தீர்க்க தரிசனங்கள்’ உரைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எனக்குச் சிரிப்பு வருகிறது. மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன். வேறு சிலரது உரையாடல்களில் அவநம்பிக்கை வெளிப்படுகிறது. அவை நம்பிக்கெட்ட உணர்வின் வெளிப்பாடு என்பது எனக்குப் புரியாததொன்றல்ல. தந்தை செல்வநாயகத்தின் அகிம்சைப்போராட்டமும் பிரபாகரனது ஆயுதப்போராட்டமும் முடிவில் மக்களுக்கு நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்திவிட்டு நின்றன. இந்த நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடுகளாக மண்வாரித் தூற்றல்கள், அறம் சார்ந்த சாபங்கள், என்பன ஆங்காங்கே கடற்கரையில் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

திடீரென வானத்தில் கிபிர் விமானத்தின் பிரசன்னம் நிகழ்கிறது. வாகைமர உரையாடல்கள் பலவும் மெளனம் கொள்கின்றன. அப்படியிருந்தும், அங்கிருந்த ஒரு வயோதிபமாதுவிடமிருந்து மனத்தகிப்பாக வார்த்தைகள் வெளிவருகின்றன.

“அழிவான்… முறிவான் இந்தக் காலங்காத்தாலை வந்திட்டான் நரபலி எடுக்கிறதுக்கு. கோதாரியில போன எங்கடயள் நேரத்துக்கு வந்து, இந்தச் சாமான் சக்கட்டுகளைத் தருகுதுகள் இல்லையே…!”

கிபிர் விமானம் வானத்தில் வட்டமடித்துவிட்டு, அப்பால் சென்று மறைந்ததும், மக்கள் மீண்டும் வாகை மரத்தின்கீழ் வந்தமர்ந்து கொண்டார்கள். நானும் மரத்தின் அருகில் அமர்ந்து கொள்கிறேன்.

திரும்பவும் கிபிர்விமானத்தின் மெலிதான மிகையொலி கேட்கிறது. வாகை மரத்தடி மீண்டும் சலசலப்புக்குள்ளாகிறது. எல்லோர் முகங்களிலும் சிறு பதற்ற உணர்வு தெரிகிறது. கடை வாசலுக்கு முன்பாக அரிசிமூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. இது விமானமோட்டிக்கு தவறான காட்சியாகப் புலப்பட்டுவிடுமென அங்கு நின்ற பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர். நான் இருந்த இடத்தைவிட்டு எழும்பவில்லை. கண்கள் வானத்தைத் துழாவியபடி இருந்தன.

“இண்டைக்கு கூப்பன் சாமான்களை வாங்க விட மாட்டான் போல கிடக்குது…”,

என்று எனக்கு மிக அருகில் இருந்து ஒரு குரல் வருகிறது. நான் திரும்பிப் பார்க்கிறேன். ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர், வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கூறுகிறார். சற்று கட்டையான மெலிந்த உடலமைப்பு. நரைத்த தலைக்கேசம். நீண்ட நாள்களாக சவரம் செய்யப்படாத முகம். மிகவும் பழசாப்போன நாலுமுழ வேட்டியுடன், தோளில் ஒரு துவாயுடன் காணப்பட்டார்.

தற்செயலாக தன்முகத்தை என்பக்கம் திருப்பியவர், நான் அவரைப் பார்ப்பது கண்டு, மென்மையாகப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு, திரும்பும் வானத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

“பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போனமாதிரி… சும்மா வந்து பயப்புடுத்திப் போட்டுப் போறான்…” அவர் கூறிக்கொண்டே என்னைப் பார்க்கிறார். நான் அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு புன்னகையை உதிர்க்கிறேன்.

“தம்பி எவடமடியப்பு… ?” அவர் கேட்கிறார்.

“புதுக்குடியிருப்பு…”

“அப்ப உதில பக்கத்திலதான்…”

“ஓமோம்…”

“ம்…”

நேரம் எட்டு மணிக்கு மேலாகியிருக்க வேண்டும். அந்த இடத்தில் எவரிடமும் கைக்கடிகாரம் இருக்கவில்லை. சங்க முகாமையாளர், கிராம அலுவலர் மற்றும் கடைப்பணியாளர்கள் என்போர் இன்னமும் வந்து சேரவில்லை. வாகைமரத்துக்கு அப்பாலும் சிறுநிழல் பரத்தி நின்ற பூவரசமரங்களின் கீழ் மக்கள் குழுமியிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் நேரம் நகர்வது சிரமமாக இருந்தது. அருகில் இருந்த அந்தப் பெரியவருடன் உரையாட ஆரம்பித்தேன்.

“அப்பு நீங்கள் எவடம்… ?”

அப்பு என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் கூறத்தொடங்கினார்.

“என்ரை பேர் சூசையப்பு தம்பி. நான் யாழ்ப்பாணம் வலிகாம இடப்பெயர்வோடை இஞ்சாலை வன்னிக்கு வந்தனான். மல்லாவிப்பக்கம் மகளோடை இருந்து, அங்கினேக்கை மருமோனோடை கூலிவேலைக்குப் போறனான். இப்ப சொந்த ஊருமில்லை. வந்த ஊருமில்லை. இரண்டுங்கெட்ட ஊரில இருக்கிறன்.”

நான் மெளனமாக அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“எட தம்பி… நாங்கள் பழையபடி எங்கட இடங்களுக்குப் போவமே மோனை… ?”

எனக்கு அப்புவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரைப்போன்று இந்தக்கடற்கரையில் இருக்கின்ற, இடம்பெயர்ந்து வந்திருக்கின்ற அத்தனை மக்களுடைய மனங்களிலும் ஊறிக்கிடந்து… உபத்திரவப்படுத்துகின்ற கேள்வியல்லவா இது. இராணுவ முகாம்களில் இருந்து, மக்கள் குடியிருப்பை நோக்கி பாரிய தாக்குதல்களோடு புறப்படுகிற இராணுவத்தை விரட்டியடித்து, அதே முகாம்களுக்குள் முடக்கி வைத்து, பசி பட்டினி போட்ட இயக்கம்மீது இந்த மக்கள் வைத்த நம்பிக்கை அனைத்தும் இன்று பொய்யாகி, புனைவாகிப் போய்நிற்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏன் இப்படி ஏற்பட்டது? என்னால் விடை பகிர முடியவில்லை. ஆயினும், அப்புவின் கேள்விக்குப் பதில் கூறியே ஆகவேண்டும்… என்ற எண்ணத்தில், அக்கணம் என்மனதில் பட்டதை அப்படியே அவரிடம் கூறினேன்.

“திரும்பவும் போவம் என்கிற நம்பிக்கையில்தானே வந்திருக்கிறம் அப்பு. எப்படியும் போய்த்தானே ஆக வேண்டும்…?”

எனது பதிலைக்கேட்டு அப்பு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். சிரித்தவர், அடுத்ததாக ஒரு கேள்வியொன்றை என்முன் உரைத்தார்.

“நீ பைபிள் படிச்சிருக்கிறியா பொடியா… ?”

எனக்கு அவரது கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. திரும்பி வீட்டை போறதுக்கும், பைபிள் படிப்புக்கும் என்ன சம்பந்தம்…? என்பது குறித்து எனக்குக் குழப்பமாக இருந்தது. இருப்பினும், அப்புவின் கேள்விக்குப் பதிலளித்தேன்.

“இல்லையப்பு ! நான் பைபிள் படிக்கேல்லை. நான் இந்து…”

எனது பதிலைக்கேட்டு, முறுவலித்தவர், மேற்கொண்டு கூற ஆரம்பித்தார்.

“தம்பி ! இனி நாங்கள் எங்கட வீடுகளுக்குப் போறதற்கான சாத்தியம் இல்லை. நிலைமை இதைவிட மோசமாகப் போகப்போகுது…”

நான் திகைத்துப் போனேன். இவர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறார். சற்றுமுன் கூறிய பைபிள் படிப்புக்கும்  தற்போது கூறிய வார்த்தைகளுக்கும் ஏதாவது தொடர்பாடல் உண்டா…? என என்மனம் குழப்பத்தினுள் தவித்தது.

“ஏனப்பு இப்படிச் சொல்லுறியள்… ? அப்பிடியெண்டால்…”

“சொல்லுறன் கேள். தற்கால உலக நடப்புகள் குறித்து பைபிளிலை ஏற்கனவே சில இடங்களில சொல்லப்பட்டிருக்கு. அதில சில சத்திய வசனங்கள் இப்ப எங்களுக்கு நல்லாப் பொருந்திப்போகுது கண்டியோ…”

“என்னப்பு சொல்லுறியள் ? எனக்கொண்டும் விளங்குதில்லை…”

“தம்பி…” எனத் தொடர்ந்தவர், ஒருகணம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, கூறத் தொடங்கினார்.

“பைபிள்ளை பழைய ஏற்பாட்டில ஒரு வசனம் இருக்குது.

“ஆண்டவர் கட்டளையிடாதிருக்க காரியம் சம்பவிக்கும் என்று சொல்கிறவன் யார் (புலம்பல் – 3 : 37)  முன்னம் நடந்தது, இப்ப நடக்கிறது, இனி நடக்கப்போறது, எல்லாமே அவன் (ஆண்டவர்) கட்டளையிட்டுத்தான் நடக்கிறது. நடக்கிற விளைவுகளானது அவனவன் செய்த நன்மை தீமைகளைப் பொறுத்தே நியாயத்தீர்ப்பாக அமைகிறது. இந்தத் தீர்ப்புகளை மனிசன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் அகிம்சைப் போராட்டத்திலிருந்து, பிரபாகரன்ர ஆயுதப்போராட்டம்வரை எல்லாமே தோத்துப்போய், சனங்களும் இப்ப அகதியளா வந்திருக்குதுகளெண்டால், இந்தச் சனங்களை மேய்ச்சு வழிநடத்தினவையள் சரியில்லையெண்டதுதான் அர்த்தம். இதுக்கு உதாரணமா ஒண்டைச் சொல்லலாம். பழைய ஏற்பாட்டில தாவீதுராஜா எண்டொரு அரசன் கடவுளுக்கு உண்மையாக இருந்தவன். அவன் ஒரு தடவை தவறிழைக்கும்போது, கடவுள் அவனது மக்களைத் தண்டிக்கிறார். அதை உணர்ந்த அரசன்,

“தவறு செய்தது நான். அதுக்காக ஏன் எனது ஜனங்களைத் தண்டிக்கிறீர்?” எனக் கேட்கிறான். எங்களுக்கு தன் தவறுகளை ஒப்புக்கொள்ளுகிற தாவீதுராஜா மாதிரி அரசனுகள் வந்து வாய்க்கேல்லை. அதுதான் இவ்வளவு வலி எங்களுக்கு. அதோடை, தனிமனித வழிபாடு எவ்வளவு ஆபத்தானது எண்டதை பழைய ஏற்பாட்டில ‘தானியேல்’ எண்ட சுவிஷேசம் வெளிப்படுத்துது. பிரபாகரன் ஒரு போர் வீரனாக இருக்கலாம். ஆனால், உயிரோடை இருக்கிற அந்தாளை கடவுளுக்குச் சமனாக வைச்சுப் பார்க்கறதில எனக்கு உடன்பாடில்லை.

“இன்னுமொண்டைச் சொல்லுறன் கேள்…

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் (மத்தேயு – 7 :12)”

இது இயேசு சொன்ன சத்திய வசனம்! நாங்கள் மன்னாரிலயிருந்தும் மாவிலாறிலயிருந்தும் ஊரூரா இடம்பெயர்ந்து இப்ப கடற்கரையில தஞ்சமடைஞ்சிருக்கிறமெண்டால், இது ஏதோ முற்பழி எண்டதை உணர வேணும். யாழ்ப்பாணத்தில இருந்து முஸ்லிம் சனங்களை வெளியேற்றேக்கை அதுகளின்ர மனம் எந்தளவுக்கு பதகளிப்பட்டு வலிச்சுதோ தவிச்சுதோ அந்தளவுக்கு நாங்களும் இப்ப இந்தக் கடற்கரைக்குக் கிட்ட இருந்து கொண்டு வலியளைச் சுமக்கிறம். தவிச்சுக் கொண்டிருக்கிறம். இந்த வலிப்பையும் தவிப்பையும் நாங்கள் வலிகாம இடப்பெயர்வில உணர்ந்திருக்க வேணும். வலிகாம இடப்பெயர்வு முஸ்லிம் சனத்தை வெளியேற்றின முற்பழி எண்டதை இன்னமும் ஒருதரும் உணருகினமில்லை.

“அதோடை இன்னுமொரு விசயம்… ஆரெண்டாலும் எவையெண்டாலும் என்னதான் பிரச்சினையெண்டாலும், அதை வாயால பேசித் தீர்க்கப் பார்க்க வேணும். அல்லது காலத்தின்ர நியாயத்தீர்ப்புக்கு விட்டிட்டு இருந்திட வேணும். அதை விடுத்து, “நானே எல்லாம்…” எண்டு வெளிக்கிடுகிறது மெத்தப்பிழை கண்டியோ! இப்படி வெளிக்கிடுகிற ஆக்களுக்கு அறிவு சீராக வேலை செய்யாது. அது ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கும். கடைசில விழுந்து கிடக்கேக்கைதான் ‘சுடலைஞானம்’ வேலை செய்யத் தொடங்கும். இதைத்தான்,

“அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மேட்டிமை ( நீதிமொழிகள் – 16 :18)” எண்ட வசனம் சொல்லுது. இயக்கத்துக்கு ஆயுதபலம் இருக்கெண்ட அகந்தையும், எங்களுக்கு இயக்கம் இருக்கெண்ட மேட்டிமையும்தான் இண்டைக்கு இப்படி விழுந்துபோய் கிடக்கிறம்.

“ஒரு உயிர் உருவாகிறது இன்னொரு உயிரின் மூலம். இதை அழிக்கிறதுக்கு மனிசனாய் பிறந்த எவனுக்கும் உரிமை கிடையாதடா தம்பி. “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக

(மத்தேயு – 19 : 19)” எண்ட வசனத்தை மறந்து, நாங்கள் எத்தனை பேரைத் துரோகியள் எண்டும், காட்டிக் கொடுத்தவையள் எண்டும் ‘போட்டுத் தள்ளி’யிருக்கிறம். இப்பிடிப் போட்டுத் தள்ளேக்கை, செத்துப்போறவனின் குடும்பம் எவ்வளவு மனவேதனை, எவ்வளவு மனக்கவலை, எவ்வளவு கண்ணீப்பெருக்கென எத்தனையை அனுபவிச்சிருக்கும்? தீண்டத்தகாதவர்கள், வேண்டத்தகாதவர்கள், எங்கட வழிக்கு வராதவர்கள், எங்கட கொள்கைக்கு மாறானவர்கள் எண்டு எத்தனையோ பேரைத் தீர்த்துக்கட்டேக்கை, அவையளின்ரை பெண்டில், பிள்ளையள் விட்ட கண்ணீரும் பெருமூச்சும்தான் எங்களை இண்டைக்கு இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கு. உண்மையில அவையளின்ர கண்ணீர் பெறுமதிமிக்கது. இதைத்தான்,

“கண்ணீரோடு விதைப்பவர்கள் கம்பீரத்தோடு அறுப்பார்கள்

(சங்கீதம் – 126 : 5)” எண்டு வேதவசனமும் சொல்லுது.

“மனிசன் எதை விதைக்கிறானோ அதை அறுப்பான் (எபேசியர் – 6 : 9)” எண்டு வேதம் சொல்லுறமாதிரி, இயக்கத்தின்ர உந்தப் பிள்ளைபிடிப்பு, தமிழ்நாட்டுக்கு தப்பிப்போற ஆக்களின்ர வள்ளங்களைச் சுடுகிறது, ஆமியிட்டை சரணடையப் போறவையைப் பிடிச்சு சித்திரவதை செய்யிறது, இதெல்லாம் கடற்கரைக் காத்தோடை அள்ளுப்பட்டுப் போகிடுமெண்டே நினைக்கிறாய் ? அறத்துக்கு மாறான, மனிதத்துக்கு விரோதமான இந்த வேலையளுக்கு, அவையவை அதற்குரிய பலனை அனுபவிச்சுப்போட்டுத்தான், இஞ்சையிருந்து வெளியேறுவினம். ஏனெண்டால், நான் முன்னம் சொன்னமாதிரி அவையள் எதை விதைக்கினமோ அதை அறுவடை செய்யாமல் இஞ்சையிருந்து வெளிக்கிடப்போறதில்லை.

“இதையும் ஒருக்காக் கேளடா பொடியா !

“மனிசன் தனக்கு எது பாதுகாப்பெண்டு நினைக்கிறானோ அதுவே அவனுக்குக் கடைசியில எமனாகிப் போயிடும். பாம்பாட்டிக்கு பாம்பு மாதிரி, பாகனுக்கு யானை மாதிரி, இடுப்பில ஆரெவன்  ‘பிஸ்டல்’ கொண்டு திரியுறானோ, அதேமாதிரிப் பிஸ்டலால்தான் அவனும் கொல்லப்படுவான். இதைத்தான் இயேசுவும் “பட்டயத்தை (ஆயுதம்) எடுக்கிற யாவரும் பட்டயத்தாலே மடிந்து போவார்கள் (மத்தேயு – 26 : 52)” எண்டு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.”

“நிலைமை வரவர மோசமாகுது. மன்னாரில இருந்த ஆமி இப்ப பரந்தனுக்கு வந்து, முல்லைத்தீவுக்கு வாற றோட்டில நிக்கிறானாம். அந்தநேரம் அன்ராசபுரம்(அனுராதபுரம்) ஏயாப்போட்டுக்குள்ளை புகுந்து விளையாடிய ஆக்களுக்கு, ஏன் இப்ப ஆமியளைத் தடுத்து நிறுத்தேலாமல் கிடக்குது தெரியுமே! இது அவனவன் செய்த அக்கிரமங்கள், அநியாயங்கள் எல்லாம் ஒண்டு சேர்ந்து, நியாயம் தீர்க்க வெளிக்கிட்டிருக்குது.

“அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது (॥ தெசலோனிக்கேயர் – 2 : 7)” எண்டது பொய்யில்லைக் கண்டியோ ! நான் சொல்லுறதெல்லாம் பொய்யெண்டு நீ நினைச்சால், இருந்து பார்… ஒருநாளைக்கு எல்லாரும் ஒருடத்தில இருந்து கொண்டு ” மாயை மாயை இதெல்லாம் மாயை ( பிரசங்கி 1 : 2)” எண்டு புலம்பிக்கொண்டு திரியாட்டி!”

அப்பு சொல்லச்சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓர் ஆகம நூலில் உள்ள சத்திய வசனங்களுக்கு சமகால நிகழ்வுகள் எவ்வளவு தூரம் பொருந்திப்போகின்றன  என்பதை நினைக்கும்போது, எனக்கு மேலும் வியப்பாக இருந்தது. அப்பு ஒரு மதபோதகர் அல்ல. ஒரு சாதாரண தினக்கூலி! வாழ்க்கையின் பெரும் பாகத்தைக் கழித்துவிட்டு நிற்பவர். படிப்பு வாசனையற்ற ஒரு தினக்கூலிக்குத் தெரிந்த விடயங்கள், ஏன் இதுவரை தம்மைப் புத்திஜீவிகளாகக் காட்டிக்கொண்டிருப்போருக்குத் தெரியவரவில்லை… என்பதைக் குறித்து நான் யோசித்தேன்.

அப்புவின் இருபேரப்பிள்ளைகள் மாவீரர்கள்! அதிலும் ஒருவர் கடற்கரும்புலி! என்பதை இடையே அவரது பேச்சிலிருந்து அறிய முடிந்தது. மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அதன் அமைப்புக்குறித்து எந்தளவுக்கு தன்னுள் எண்ணங்களைத் தேக்கிவைத்திருக்கின்றார் என்பதை நினைக்கும்போது, ”மாயை… மாயை… எல்லாம் மாயை…(பிரசங்கி – 1 : 2)” என்றுதான்இறுதியில் எல்லோரும் கூறவேண்டி வரப்போகுதோ….?

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்

ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

 

https://naduweb.com/?p=15902

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது இயலாமையை, தோல்வியை, பொறுப்பின்மையை மிக இலகுவாக பிறரின் மீது கொட்டுகிறார்... 

சிங்கள அரசுடன் சேர்ந்தியங்குபவர்கள் இவரைவிட எவ்வளவோ மேல்..

🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தனது இயலாமையை, தோல்வியை, பொறுப்பின்மையை மிக இலகுவாக பிறரின் மீது கொட்டுகிறார்... 

சிங்கள அரசுடன் சேர்ந்தியங்குபவர்கள் இவரைவிட எவ்வளவோ மேல்..

🙂

இந்தத் தொடரை வாசித்த வரையில், அலெக்ஸுக்கு கை கால் எல்லாம் ஒழுங்காக இருந்தன. உழைக்க யுத்தம் விடவில்லை, யுத்தம் இல்லாத பகுதிக்கு விலகிச் செல்ல அவரை வெளிச்சக்தியொன்று அனுமதிக்கவில்லை!

இங்கே எங்கே அவரது பொறுப்பின்மை, தோல்வி, இயலாமை காரணமாக அமைகிறது கப்ரன்? அப்படியானால் உங்களது இயலாமையும் பொறுப்பின்மையுமா நீங்கள் அந்த நிலப்பரப்பில் வசிக்காமல் விட்டது?

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

‘இரத்தத்தின் கதை’-கதை 11 – “வலைஞன்மடத்து அவலம்”-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்

 

ஒரு வாரமாக அவனுக்கு உடல்நிலை பலவீனமாக இருந்தது. இன்று அது மேலும் உயர்வடைந்திருந்தது. சாதாரண காய்ச்சல் என்றுதான் நினைத்திருந்தான். இப்போது அக்காய்ச்சல் படுத்த படுக்கையாக்கி விட்டிருந்தது அவனை.

முதல்நாள் இரவு நிறைவான தூக்கமில்லை அவனுக்கு. தரப்பாள் வெக்கையும், உடற்புழுக்கமும் அவனை நித்திரை கொள்ள விடவில்லை. அவனது உடல்நிலையறிந்து, அவன் மனைவி அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். பழைய கடதாசிமட்டை ஒன்றினால் காற்றுப் படும்படியாக விசுக்கிக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தொடர்ந்து விசுக்கிக் கொண்டிருந்ததில், கை வலியெடுக்க, மறுகையால்  மாறிமாறி விசுக்கிக் கொண்டிருந்தாள்.

“வேண்டாம் விடு… காணும்…”  அவன் அவளைத் தடுத்தான்.

“இல்லை… விடுங்கோ நான் விசுக்கிறன்…”

“கையல்லோ உளையப்போகுது…”

அவள் எதுவும் கூறவில்லை. விசுக்கிக் கொண்டிருந்தாள். வெப்பமாய் கொதிக்கும் உடல்மீது, அவள் மட்டையால் விசுக்கும்போது, வந்து பட்டுச்செல்லும் அந்த மென்மையான சிறுகாற்று… அவனுக்குச் சற்று சுகத்தைக் கொடுத்தது. ஆயினும், அவனுக்கு மனம் கேட்கவில்லை. அவளது கரத்தைப் பிடித்துத் தடுத்தான்.

“பேசாமல் படுங்கோ… உந்தக்காய்ச்சலுக்கு, நல்லா நித்திரை கொண்டால்தான், எப்பனெண்டாலும் சுகம் வரும்…”

என்று அவள் கூறியபடி, அவனுக்கு விசுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், விடியும் வரைக்கும் அவனையும் அவளையும் புறச்சூழ்நிலைகள் நித்திரை கொள்ளவிடவில்லை.

வலைஞன்மடத்திலிருந்து வடமேற்குப் பக்கமாக சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபடவென ஒலிக்கும் துப்பாக்கி வெடியோசைகள் சமரின் உச்சத்தை வெளிப்படுத்தியவண்ணம் இருந்தன. பக்கத்ததுத் தரப்பாள் கொட்டில் இருக்கும் அந்த வயோதிபப்பெண் மூன்று நாள்களுக்கு முன்பு ஷெல் வீச்சில் பலியாகிப்போன தனது மகனை நினைத்து இப்பவும் அழுது கொண்டிருந்தாள். தன்மகன் இறந்ததை அவள் இன்னமும் நம்பமுடியாதவளாக, தாங்கமுடியாதவளாக இரவில் பெருங்குரலெடுத்து, மகனை அழைத்த வண்ணம் இருந்தாள். அவளது அழுகையும் பிலாக்கண ஒலியும் அவனை நிம்மதியாக நித்திரைகொள்ள விடவில்லை. இதுதவிர, முன்பக்கத்து கொட்டிலில் படுத்திருந்த ஒரு பத்துவயதுச்சிறுவன், நள்ளிரா வேளையில் விழித்தெழுந்து, பசிக்குதென அடம்பிடித்தழுதது அவன் மனதை வெகுவாகப் பாதித்து விட்டது. பசியும் அழுகையும் சேர்ந்த அவல ஓலம் அவனருகில் நிகழ்ந்து கொண்டிருந்ததில்,  நித்திரை அனைவிட்டு வெகுதூரம் விலகியிருந்தது.

“இந்தாங்கோ மல்லித்தண்ணி.”

அவன் கண் விழித்துப் பார்க்கிறான். தன்மனைவி கையில் ஒரு சிறுகோப்பையுடன் தன்னருகில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

“என்ன நித்திரையா ?”

“இல்லை சும்மா கண்ணை மூடிக்கொண்டு இருந்தனான்”

அவள், அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல்சூடு சற்று தணிந்திருப்பது தெரிந்தது.

“காய்ச்சல் கொஞ்சம் விட்டிட்டுது. இப்பிடியே படுத்திருங்கோ. வெளியில வரவேண்டாம். சரியான வெய்யில்”.

“எங்கால மல்லி ?”

“உங்களுக்குக் காய்ச்சல் எண்டு கேள்விப் பட்டு, முன்பக்கத்துக் கொட்டில்ல இருக்கிற ஆச்சி கொஞ்சம் தந்தவ. அவிச்சுக் குடுக்கச் சொன்னவ”.

அவன் எதுவும் பேசவில்லை. அந்த ஆச்சியை மனதுக்குள் நினைந்துருகி, நன்றி சொல்லிக் கொண்டான்.

“இஞ்சரப்பா… வாங்கோவன் ஒருக்கா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போறன்.”

மனைவி கூறியதைக் கேட்டு, அவன் அந்த நோய்வலியிலும் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

“ஏன் சிரிக்கிறியள் ?”

“பின்னை என்ன… உங்கை காயப்பட்டு, சாகப்போற ஆக்களுக்கே மருந்தில்லையாம். காய்ச்சலுக்கா மருந்து வைச்சிருக்கப் போறாங்கள்? ஆஸ்பத்திரிக்குப் போறதைவிட, இதிலை கிடந்து செத்திடலாம்”.

அவள், அவனைக் கவலையுடன் பார்த்தாள். அப்படியே அவனது படுக்கையில் அவனுக்கருகில் ஒருபக்கமாகப் படுத்துக் கொண்டாள். அருகே கடலலைகளின் மெலிதான ஓசை. காற்றின் இசைவோடு ஆடியாடிவந்து கரையைத்தொட்டு அடங்குகின்றன. அவள் மனதிலுள்ளும் கடந்தகால நினைவுகள் அலையென ஆடத்தொடங்குகின்றன.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய கச்சான் தோட்டத்தில் அறுவடைக்காக சகபெண்களுடன் அவள் சென்றபோதுதான், அவனைப் பார்த்தாள். நிரையாக குனிந்த தலைநிமிராது, ஒவ்வொருவரும் கச்சான் செடிகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் ஒரு கதைப்பிரியன்! வேலை நேரத்தில் கதையினூடு, வேலையை நகர்த்திச் செல்வதில் கெட்டிக்காரன். நகைச்சுவை, அரசியல், சினிமா என்று பலவிடயங்களைப் பேசிக்கொண்டிருப்பான். அன்றும் வைகைப்புயல் வடிவேலுவைப்பற்றிக் கூற, கூட நின்ற பெண்கள் கெக்கலித்துச் சிரித்துக் கொண்டார்கள்.

அன்றைய நாளின்பின்பு அவளுக்கு அவன்மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. ஊருக்குள் தினக்கூலிகளாக வேலைக்குப் போகுமிடங்களில் பலதடவை இருவரும் ஒன்றாகச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் இருவருக்குமிடையே பேசுவதற்கான தயக்கம்  மெல்லென விலகி,நாளடைவில் நீண்ட உரையாடல்களாகமாறி,

அந்த உரையாடல்கள்மூலம் இருவரது மனமும் நெருக்கமாகி,அது காதலாக முகிழ்ந்தபோது அவனது பெற்றோர் கொதித்தெழுந்து கொண்டனர்.

“அதுகள் என்ன ஆக்களோ ? என்ன கோதாரியோ தெரியாது. கண்ட நிண்ட இடங்களிலைபோய் தலையைக் குடுக்காமல் பேசாமல் இரு. உனக்கு ஆகவேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்ளுவம்.”

சாதித்தடிப்பிலூறிய தன் பெற்றோர்களின் வார்த்தையைக்கேட்டு, மனதுக்குள் சிரித்த அவன், ஒருநாள் மாலைப்பொழுது மங்கும்வேளையில், அவளை அழைத்துக்கொண்டு, அடுத்த ஊருக்குச் சென்று விட்டான். அதற்குப்பின், அவனுக்கும் பெற்றோருக்குமான உறவு, பாசம் எல்லாமே வேரற்ற மரம்போலாகி விட்டன.

“எளியநாய்… எக்கேடுகெட்டுப்போகட்டும்…” என்ற சபித்தலோடு, அவனது பெற்றோர் அவனைக் கைகழுவி விட்டனர்.

அவனைப்போலவே அவனது மாமனும் ஒரு தினக்கூலியாகவே இருந்தார். கூலிக்கு ஆட்கள் தேவைப்படும்போது, இருவரும் ஒன்றாகவே சென்று வந்தார்கள். போர்ச்சூழல் காரணமாக அவரவர்கள் தங்கள் வாழ்மனைகளை விட்டு நகர்ந்தார்கள்.  அவனது குடும்பமும் ஒவ்வோர் இடமாக அலைக்கழிந்து, இறுதியில் உடையார்கட்டு – சுதந்திரபுரம் பகுதிக்கு வந்த சிலநாள்களின் பின்புதான் அந்த அறிவிப்பைக் கேட்க முடிந்தது.

சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், புலிகளிடமிருந்து மக்களை இனம் காண்பதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் அங்கு எல்லோரும் சென்று குடியிருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க, பலரும் அங்கு சென்று குடியமர்ந்து கொண்டார்கள். நம்பிக்கெட்ட அரசியல்வாழ்வின் அனுபவங்களைபெற்றுக் கொண்ட மூத்த வயதுடையோர்கூட,  அந்த அறிவித்தலுக்குப் பின்னாலிலுள்ள இனவாத சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

எல்லாமே சிலநாள்கள்தான். எந்த இடத்தைச் சிங்கள அரசு பாதுகாப்பு வலயமாக அறிவித்துதோ, அந்த இடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்மீதும் தமது இராணுவத்தைக் கொண்டு, சரமாரியான ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனுள் பலியாகிப் போனவர்களில் அவனது மாமன் குடும்பமும் ஒன்று. அவனது மனைவியைத்தவிர, குடும்பத்தில் வேறு எவருமே உயிரோடு மீளவில்லை.

சிதைந்துபோன உடல்களை அடக்கம் செய்ய முடியாத பதகளிப்பில், கையில் அகப்பட்ட பொருள்களை அவன் அள்ளி எடுத்துக்கொண்டான். கத்திக் குளறிக்கொண்டிருந்த அவளையும் பலவந்தமாக இழுத்துக்கொண்டு, அடுத்த ஷெல்கள் எங்கு விழுந்து வெடிக்கும் என்பது தெரியாத நிலையில், குறுக்குவழிகளூடாக மாத்தளன் கடற்கரைப்பகுதிக்கு வந்தான். அங்கு இருப்பதற்கு இடமில்லையெனத் தெரிந்ததும், அம்பலவன்பொக்கணைக்கு அருகில் உள்ள வலைஞன்மடம் என்ற பகுதிக்கு வந்து அங்கு குடியமர்ந்தான்.

தொழிலற்ற நிலையாயினும், கையிருப்பில் ஓரளவு பணம் இருந்தது அவனுக்கு  நிம்மதியைக் கொடுத்தது. அதுதவிர, மனைவியின் நகைகளும் பத்திரமாக  இருந்தன. ‘எப்படியும் பிரச்சினை தீரும். இயக்கம் ஆமியளை அடிச்சுக் கலைக்கும், வீட்டுக்குப் போகலாம். பழைய வாழ்க்கையைத் தொடங்கலாம்,’ என்ற கற்பனை அவனது மனதுள் ஆழ விரவியிருந்தது.

வலைஞன்மடத்துக்கு அவர்கள் இருவரும் வந்து பலநாள்களாகி விட்டன. பங்குனிமாத வெயில் தனது அகக்குணத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. உள்ளே தரப்பாள் வெக்கை. வெளியே சுடுமணல். ஆங்காங்கே சிறு கண்டல்மரங்கள், தென்னை, பனை மற்றும் பூவரசு மரங்களைத்தவிர குளிர்மையைப் பரப்பும் வேறெந்த மரங்களும் இருக்கவில்லை. வெப்பசுவாத்தியம் அவனது உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இரண்டுநாள்களாக சத்தி எடுத்தவன், மேற்கொண்டு எதுவும் சாப்பிட விருப்பமற்றவனாக மூன்றாம்நாள் படுக்கையில் விழுந்து போனான்.

தூரத்தில் எங்கேயோ கிபிர்விமானத்தின் மிகையொலி கேட்கிறது. அவனுக்குப் பக்கத்தில் படுத்திருந்த அவள், திடுக்கிட்டுக் கொண்டாள். விமானம் மாத்தளன் பகுதிக்கு அப்பால் இரணைப்பாலையை அண்டிய நிலப்பிரதேசத்துக்குமேல்  வட்டமடிப்பது, அதன் சுருதி குறைந்த ஒலியிலிருந்து தெரிந்தது அவளுக்கு.

“இஞ்சரப்பா… ” அவள் அவனது உடலில் லேசாகத் தட்டிக் குரல் கொடுத்தாள். அவன் அசையவில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை அவதானித்துக் கொண்டாள். அவனது நித்திரையைக் குழப்ப விரும்பாதவளாக அப்படியே அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள்.

இரணைப்பாலையைச் சுற்றி வட்டமடித்த விமானம், இப்போது மாத்தளன் கடற்கரையூடாக அம்பலவன்பொக்கணை, வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு… பகுதிகளுக்கு மேலாக பாரியதொரு வட்டமடித்துவிட்டு, சடுதியாக அதிவேகத்தில் வலைஞன்மடப்பகுதிக்குள் தாழ்ந்து மேலெழும்பியபோது… அந்தப்பிரதேசம் ஒருகணம் நடுநடுங்கிக் கொண்டது. மறுகணம்… எங்கும் அவலக்குரல்கள் அதிரத் தொடங்கின.

குண்டுவெடிச் சத்தத்தைக்கேட்டு அவன் படுக்கையைவிட்டு எழுந்தான்.

“ஐயோ… படுங்கோ… ” அவள் அலறியபடி அவனின் கையைப் பிடித்திழுத்து, தன்னோடு பக்கத்தில் உறங்க வைத்தாள். காய்ச்சலில் பலவீனப்பட்டிருந்த அவனதுடல், இப்போது மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. அவனது நடுக்கத்தைக்கண்ட அவள், பாயில் கிடந்த பழைய சாரத்தினால் அனைப் போர்த்து மூடிவிட்டு, அவனோடு நெருக்கமாக கைகளை இறுகப் பற்றியபடி படுத்திருந்தாள்.

எங்கும் அழுகையும் அவலமுமாக வலைஞன் மடப்பகுதி காட்சியளித்துக் கொண்டிருந்தது. இடையிடையே கிபிர் விமானங்கள் வரிசையாகவந்து வானத்தில் வட்டமடித்துவிட்டு, தென்பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அடக்கத்துக்கு காவமுடியாத சிதைந்த உடல்களை கொட்டில்களுக்குப் பக்கத்தில் உள்ள இடைவெளி இடங்களைத் தெரிந்தெடுத்து, குழிதோண்டி அனைத்தையும் போட்டு மூடினார்கள் அயலவர்கள். சடுதியான இறப்புகளும், சாவுக்கொண்டாட்டங்களுமற்ற பலநிகழ்வுகளை அன்றைய பகல்பொழுது தன்னுள் உள்வாங்கிக்கொண்டு, மறைய ஆரம்பித்தது.

எல்லோரும் அழுதழுது களைத்துப் போயிருந்தார்கள். சற்றுநேரத்துக்கு முன், தமக்கு முன்பாக இருந்தவர்கள் சதைத்துண்டுகளாகி மண்ணுக்குள் மறைந்து போனதை ஏற்கமுடியாதவர்களாய் ஏங்கிக்கொண்டிருக்கையில், இரவு வந்து வெகுநேரமாகி விட்டிருந்தது.

அவள்  திரும்பவும் மல்லித்தண்ணி கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். அவனுக்கு தன்மனைவியை நினைக்கப் பயமாக இருந்தது. வைத்தியசாலையில் எந்தவொரு நோய்க்கும், காயங்களுக்கும் மருந்தில்லாத நிலையில், தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், எந்தவொரு உறவுகளும் உதவிகளுமற்ற நிலையில் இருக்கும் அவளின் நாளைய நிலை…? அதை நினைக்க அவனுக்கு உடல்நிலை மேலும் தளர்வடைய ஆரம்பித்தது.

‘கடவுளே ! சாகிறதெண்டால், ரண்டுபேரும் ஒரே நேரத்தில ஒரே இடத்தில செத்துப்போயிட வேணும்.’ என அவன் மனதுக்குள் வேண்டுதல் செய்து கொண்டிருந்தபோது,  விண்ணதிரக் கூவிக்கொண்டு வந்த ஒரு ஷெல், இருதரப்பாள் கொட்டில்களுக்கிடையில்  விழுந்து வெடித்துச் சிதறியது.

“ஐயோ… ஆமி ஷெல்லடிக்கிறான்…”

முன்பக்கத் தரப்பாள் கொட்டிலுக்குள் இருந்து ஒலிக்கிறது ஒரு குரல். வெடிச்சத்தம் கேட்டதும், ஆங்காங்கே உலாவித் திரிந்தவர்கள் சட்டென நிலத்தில் படுத்து நிலையெடுப்பதும், எழுந்து ஓடுவதுமாக இருந்தார்கள்.

“என்னப்பா… பேந்து ஷெல்லடிக்கிறாங்கள்…”

என்று கூறியபடிஅவள் ஓடிவந்து பாயில் அவனுக்குப் பக்கத்தில் சேர்ந்து கொண்டாள். அவர்களுக்குப் பதுங்கு குழி எதுவும் இருக்கவில்லை. நிலத்தில் படுத்திருப்பதன் மூலம் ஓரளவு பாதுகாப்பு உண்டு என்று நம்பினார்கள்.

இரவிரவாக ஷெல்கள் விழுந்து வெடித்த வண்ணம் இருந்தன. பகல் பொழுதில் கிபிர் தாக்குதலுக்கு முகம் கொடுத்த நிலையில், தற்போது ஷெல் தாக்குதல்களையும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது இடம்பெயர்ந்த மக்களுக்கு.

“எங்கேயோ ஆமிக்குச் சறுக்கிப் போட்டுது. அதுதான் உந்த அடிஅடிக்கிறான்…” அவன் கூறுகிறான்.

எங்கும் ஒரே கும்மிருட்டு. ஷெல் அதிர்வில் எண்ணெய் விளக்குகளும் அணைந்து விட்டன. மேகவான் வெளிப்பைத் தவிர, வேறு எந்த ஒளியும் அங்கு ஒளிரவில்லை. உயிரைக் காக்கவும் வழி தெரியவில்லை. ஓடித்தப்பவும்  பாதை புரியவில்லை. விழிநீர்த் துளிகளையும், விம்மல் ஒலிகளையும், ஒப்பாரி ஓலங்களையும் சுமந்தபடி கனத்த துயராக இரவு நகர்ந்து கொள்ள, புலரத் தொடங்கியது ஒரு பொழுது.

அவரவர் தங்கள் உறவுகளைத் தேடுவதற்காய் ஷெல் விழுந்த பகுதிகளை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். அப்படி ஓடும்போது இடைவழியில் தெரிந்த ஒரு காட்சியைக் கண்டு, அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள்.

எந்த உறவுகளுமற்று வலைஞன்மடத்துக்கு வந்து, தஞ்சமடைந்த அவனும், அவளும்  தரப்பாள் கொட்டிலோடு, உடல்கள் சிதைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தார்கள்.

அலெக்ஸ் பரந்தாமன்- இலங்கை

 

https://naduweb.com/?p=16116

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 17:43, Kapithan said:

விடுதலைப் போராளிகளை நாசூக்காக இழிவுபடுத்துவதற்கென்றே எழுதப்பட்டது போல் உணர்கிறேன். ☹️

 

On 18/12/2020 at 15:17, Kapithan said:

தனது இயலாமையை, தோல்வியை, பொறுப்பின்மையை மிக இலகுவாக பிறரின் மீது கொட்டுகிறார்... 

சிங்கள அரசுடன் சேர்ந்தியங்குபவர்கள் இவரைவிட எவ்வளவோ மேல்..

🙂

மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, kalyani said:

 

மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??

கோமகன் ஈ.பி.ஆர்.எல். எfப்? 

அப்ப இதில் இருப்பது எதுவும் உண்மையில் நடக்கவில்லையா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் உள்ளதா??   புலிகளை நாசுக்காக போட்டு தாக்குகிறார் 10 வருடங்கள் கழிந்து.  கோமகனை யாழை விட்டு நீக்கிய பிறகு அவரின்  தளத்தில் இருந்து எப்படி  இப்பதிவுகளை இணைக்க முடியும்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.