Jump to content

மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்

 

கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சன‌க் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை.

ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துகள். 2014ல் அவள் விகடன் பேட்டியில் அது வரை 157 நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். ஸ்டாக் உண்டோ இல்லையோ என் அத்தனை நூல்களையும் பட்டியலிட்டிருக்கும் ஒரு தளம் காமன்ஃபோக்ஸ்.இன். அவர்கள் கணக்குப்படி இன்றைய தேதியில் ரமணிசந்திரன் 183 நாவல்கள் எழுதி இருக்கிறார். ஒருவேளை விடுபாடுகள் இருந்தாலும் அதிகபட்சம் 200 நாவல்கள் வரை போயிருக்கலாம் என்பதாக‌க் கணிக்கிறேன். கணக்குப் பார்த்தால் சராசரியாக ஆண்டுக்கு நான்கைந்து நாவல்கள் வருகின்றன. நல்ல எண்ணிக்கை தான்.

விபத்தாகவே எழுத்துத் துறைக்குள் வந்திருக்கிறார். ராணி, தினத்தந்தி என ஊடக உறவினர்கள் சூழ்பின்புலமானது அதற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்திருக்கிறது.

Ramanichandran-Novels-in-Tamil-Read-Onli

ரமணிசந்திரன்

ரமணிசந்திரனில் ரமணி என்பது மட்டும் அவரது பெயர்; சந்திரன் அவர் கணவரின் கொடை. இந்தப் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஏன் தம் கணவர் பெயரையும் தம் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள் என யோசித்திருக்கிறேன். இரண்டு காரணங்கள் தோன்றின. முதலாவது அதுவே ஒரு குறியீடு. தான் குடும்பம் எனும் வட்டத்துள் நின்று குடும்பப் பாங்கான கதைகளை மட்டுமே எழுதுவேன் என்ற மறைமுக அறிவிப்பு அதில் இருக்கிறது. அடுத்து அது கணவருக்கு வழங்கப்படும் நன்றி அல்லது லஞ்சம். தன்னை எழுத அனுமதிப்பதற்கும், அதற்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கும் பதிலீடாக அவரது பெயருக்குத் தரும் ஒரு கௌரவம்.

ரமணிசந்திரனை நான் என் ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறையில் வாசித்தேன். அப்போது நான் ராஜேஷ்குமார் ரசிகன் (அன்று அவரது பாணியில் ஒரு சிறுநாவலும் எழுதியிருந்தேன்). பொன்னியின் செல்வன் வாசித்திருந்தேன். குமுதம், ஆனந்த விகடன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். கோவையில் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து கொண்டிருந்த என்னுடைய‌ அத்தை கிருஷ்ணவேணி தன் அலுவலக நூலகத்திலிருந்து தினம் இரண்டு நூல்கள் எனக்கு எடுத்து வருவார். இப்போது binge watching என்கிறார்களே, அது போல் binge reading நாட்கள். அப்படி அறிமுகமானவர்கள் தாம் சாண்டில்யன், பாலகுமாரன், லக்ஷ்மி, அநுத்தமா, ரமணிசந்திரன் முதலானோர்.

அப்படி சுமார் 20 ரமணிசந்திரன் நாவல்கள் வாசித்திருப்பேன். ஐந்தாறு லக்ஷ்மி நாவல்கள். ஓரிரு அநுத்தமா நாவல்கள். அப்போதே ரமணிசந்திரன் நாவல் ஏதும் பெரிதாய் ஈர்க்கவில்லை. அவருக்கு முற்காலத்தவர்களான லக்ஷ்மி மற்றும் அநுத்தமாவின் எழுத்துகள் மேலானதாகத் தோன்றின. (குறிப்பாக லக்ஷ்மியின் மிதிலா விலாஸின் காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.) இந்தப் பெண் எழுத்தாளர்கள் எல்லோரையும் விட பாலகுமாரன் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவரே பெண்களையும் அவர்த‌ம் மனதையும் நேர்மையாகக் காட்டியதாக எண்ணினேன். ரமணிசந்திரனின் பாத்திர வார்ப்புகள் செயற்கையாக, யதார்த்தத்தில் இருந்து விலகி, அந்தரத்தில் நின்றதாகத் தோன்றின. அது ஒரு விலகலை அளித்தது. (அப்போது எனக்கு பதின்வயது என்பதையும் இங்கே அடிக்கோடிட விரும்புகிறேன்.)

Anbu-Manam-Maariyathen-Ramanichandran-Ta

அப்புறம் எது இல்லையென்றாலும் நடை ஒரு வெகுஜனப் புனைவுக்கு மிக முக்கியம் எனக் கருதுகிறேன். சுஜாதாவின் பல தொடர்கதைகள் உள்ளடக்கம் சற்று முன்பின் இருந்தாலும் தப்பித்தது அவரது அபாரமான நடையால் தான். பாலகுமாரன் குமுதம் இதழில் தொடராக எழுதிய ‘இது தான் காதல் என்பதா’ ஒரு கதைக்குரிய அம்சங்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும் பிழைத்தது நடையால். ரமணிசந்திரனுடையது சற்றே அலுப்பூட்டும் நடை. அதுவும் அந்த மனவிலக்கத்துக்கு முக்கியக் காரணம்.

அது தான் கடைசி. அதிலிருந்து இன்று சுத்தமாய் இருபதாண்டுகள் ஓடி விட்டன. பிறகெப்போதும் ரமணிசந்திரனை வாங்கியதோ, வாசித்ததோ, வாய்ப்பிருந்தும் நூலகத்தில் எடுத்ததோ இல்லை. இது தான் ரமணிசந்திரனுக்கும் எனக்குமான உறவு.

*

இவ்விடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வெகுஜன எழுத்துக்கு (அல்லது சினிமா உள்ளிட்ட எந்த வெகுஜனப் படைப்பு வடிவிற்கும்) எதிரானவன் அல்லன். இவ்விஷயத்தில் ஜெயமோகனிலிருந்து மிக வேறுபடுகிறேன்.

“வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தக்கட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு” என்பது தான் ஜெயமோகனின் கருத்து.

வெகுஜன எழுத்து வாசிப்பானது கொஞ்சம் சதவிகித வாசகர்களையேனும் நிச்சயம் சீரியஸ் இலக்கியத்தின் பக்கம் நகர்த்தும் என நான் நம்புகிறேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஜெயமோகன் சொல்வது உண்மையே என்றாலும் அதற்காக வெகுஜன எழுத்தைப் புறந்தள்ள முடியாது. அது ஒரு ரசனை நுகர்வுப் பண்டம் என்கிற அடிப்படையில் சமூகத்தில் ஜீவித்திருக்க வேண்டியது மிக அவசியம். சுதந்திர, ஜனநாயக தேசத்தில் மக்கள் தமக்குப் பிடித்த விஷயத்தைப் பெற எந்தத் தடையும் இருக்கக் கூடாது – அந்த விஷயம் உயர்வு அல்லது தாழ்வு என்கிற மதிப்பீடுகள் எல்லாம் தாண்டி. அதனால் வெகுஜன எழுத்தின் இருப்பை ஆதரிக்கிறேன். அதன் செழிப்பை வரவேற்கிறேன். அவ்வகையில் ரமணிசந்திரன் மாதிரி எழுத்துக்களும் சமூகத்தில் நிச்சயம் இருக்கலாம். அதை வாசகர்கள் போஷிக்கலாம். தவறே இல்லை.

இத்தனை வாசிப்பிற்குப் பின்பும் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய வெகுஜன‌ எழுத்தாளர்களை இன்னமும் விரும்பி வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சமீப ஆண்டுகளில் சிறந்த வெகுஜன எழுத்தாளராக உருவாகியுள்ள ஷான் வரை இந்த‌ எழுத்துக்களின் தேவை அவசியம் என‌ அழுத்திச் சொல்கிறேன்.

da64813cc0ea0591026ce9ef08a1b971-216x300

ஆக, நான் என் வாசிப்புத் திமிரைக் காட்டும் அற்ப எண்ணத்தில், வெகுஜன எழுத்து கேவலம் என்றெண்ணி ரமணிசந்திரன் எழுத்துகள் மீதான என் விமர்சனத்தை வைக்கவில்லை. பிறகு என்ன தான் பிரச்சனை? ரமணிசந்திரன் அவரது எழுத்தின் இயல்பை உணர்ந்த, அதை விரும்பும் வட்டத்துக்காக மட்டும் தானே எழுதுகிறார்? இரு தரப்பும் பரஸ்பரம் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதில் உனக்கு என்ன வந்தது என்பது வழமையான பழமையான கேள்விக‌ள். அக்கேள்விகள் நியாயமானவை தாம்.

ரமணிசந்திரன் எழுத்துகளில் எந்தத் தரிசனமும், தத்துவார்த்தமும் கிடையாது – எந்தவொரு வெகுஜன எழுத்தையும் விட அவரது நாவல்களில் அது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். அவரது எழுத்திலிருந்து வாசகன் பெற்றுக் கொள்ள ஏதுமில்லை. ஆனால் அவரே அவரது எல்லையைத் தெளிவாக‌ வகுத்துக் கொண்டு விட்டதால் இதை எதையும் நான் அவரது எழுத்துகளில் எதிர்பார்க்கவும் இல்லை.

பிறகு ஏன் ரமணிசந்திரன் எழுத்துகளை விமர்சிக்கிறேன்? அவரது எழுத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதைச் சுட்டுவதே என் விமர்சனங்களின் மைய நோக்கு. அவர் ஒரே ஒரு டெம்ப்ளேட்டை கடந்த ஐம்பது ஆண்டுகளாக எடுத்தாண்டு கொண்டிருகிறார். தலைப்பு, அட்டையை அகற்றி விட்டால் அவரது நாவல்கள் எல்லாமே ஒன்று தான். அவரது சுமார் இருபது நாவல்களை வாசித்திருப்பதாகச் சொன்னேன். அவற்றில் ஒன்றின் தலைப்பு கூட இன்று நினைவில்லை. ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களையும், மாற்றப்பட்ட புன்புலங்களையும் வைத்து ஆண்டுக்கணக்கில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்? எழுத்தாளனும் ஓர் அங்குலம் கூட நகரவில்லை; வாசகரையும் கொஞ்சமும் முன்னேற விடவில்லை என்று தானே அர்த்தம்! எழுத்தாளரோ, வாசகரோ இயந்திரம் அல்ல. செக்கு மாடு அல்ல. அவர்கள் மெதுவாகவேனும் நகர வேண்டும். அது அரை நூற்றாண்டாக நடக்கவில்லை என்பது ஒருவித‌ சலிப்பை அளிக்கிறது.

எனக்குப் பிடித்த வெகுஜன எழுத்தாளர்களாய் நான் குறிப்பிட்ட மூவரிலும் இந்தப் பிரச்சனை இல்லவே இல்லை என்பதையும் இவ்விடத்தில் சுட்ட விரும்புகிறேன்.

அடுத்து அவரது எழுத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். அது வாழ்க்கையைப் பேசுவதில்லை. யதார்த்தத்தைக் காட்டுவதில்லை. அது காட்டுவதெல்லாம் ஒரு கற்பனை உலகை. ஒரு பகற்கனவை. அதில் ஓர் ஆபத்து இருக்கிறது. அந்த எழுத்து வாசகரை ஒரு கற்பனாவாத உலகிற்கு இழுத்துச் சென்று, அதை உண்மை என நம்ப வைக்கிறது, அது போல் வேண்டும் என எதிர்பார்க்க வைக்கிறது. அது ஒரு நப்பாசை. நப்பாசை என்றே தெரியாத நப்பாசை. (ஒருவகையில் ரமணிசந்திரன் நாவல்களின் ஒளி ஊடக வடிவம் தான் திருமுருகனின் தொலைக்காட்சி சீரியல்கள் எனலாம்.)

அந்தரத்தில் மிதக்கும் அழகிய கற்பனை. பூமியில் கால் பதித்த நிஜ வாழ்வில் அது இல்லை என்றாகும் போது கடும் ஏமாற்றத்தையும் உளைச்சலையும் நிஜ வாழ்வில் வாசகருக்கு அளிக்கிறது. சில சமயம் அதன் பாதிப்பு நிஜ வாழ்வில் பிரதிபலிக்கிறது.

இந்த‌ விஷயம் வணிகரீதியாகத் திட்டமிட்டே செய்யப்படுகிறது என்றே நம்புகிறேன். எல்லா பெண்கள் மாத‌ நாவல்களின் அட்டையிலும் ஓர் அழகான‌ பெண்ணின் முகம் தான் ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கும் அல்லது ஏதேனும் ஒரு நடிகையின் நிழற்படத்தைப் போட்டிருப்பார்கள். ஏன்? அது அந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் அந்நாவலின் நாயகியாக உணரச் செய்யும் உத்தி. அந்தக் கனவுலகில் தன்னைப் பொருத்திக் கொள்ள புத்தக அட்டையிலிருந்தே பொறி வைக்கிறார்கள். உடைத்துச் சொல்வதாக இருந்தால் உளவியல்பூர்வமாக‌ ஏமாற்றுகிறார்கள். அது வாசகருக்கு இழைக்கப்படும் துரோகம் என்றே சொல்வேன். போதை மருந்து போல்.

ராஜேஷ் குமார் நாவல் வாசித்து அதைப் போல் கொலை செய்வேன் என்று யாரும் கிளம்பி இருக்கிறார்களா? அது ஒரு சமூகத் தொந்தரவற்ற வெகுஜன எழுத்து. மாறாக ரமணிசந்திரன் வாசகிகள் அவரது நாவலை வாசித்து விட்டு அம்மாதிரி வாழ்வுக்கு, அம்மாதிரி வாழ்க்கைத் துணைக்கு ஆசைப்படுகிறார்கள். உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தாலுமே தன் கணவன் ரமணிசந்திரன் நாயகனின் இந்தக் குணம் இல்லையே, அந்நாவலின் ஹீரோ மாதிரி இச்சூழலில் நடந்து கொள்ளவில்லையே என எண்ணிக் குமைகிறார்கள். அதைத்தான் அது விளைவிக்கும் ஆபத்து என்கிறேன்.

இன்னொரு விஷயம் அவரது நாவல் நாயகிகளின் லட்சியவாதத் தன்மை. அவர்கள் எத்தனை கஷ்டத்திலும் நேர்மையாக இருப்பது போல் இருக்கும். அதுவும் வாசிக்கும் பெண்களுக்கு ஒரு மயக்கத்தை ஊட்டுகிறது. தான் நிஜத்தில் அப்படி இல்லையே என தன்னிரக்கம் எழுகிறது. அதற்கு அடுத்தபடியாக யதார்த்தத்தை உதறி விட்டு தானே அந்நாயகி என்று கற்பனை செய்து கொள்ள வைக்கிறது. அது அவர்களுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியையும் குற்றவுணர்ச்சிகளிலிருந்து விடுதலையையும் அளிக்கிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. நிஜத்தில் ஏதும் மாற்றத்தைச் செய்ய எத்தனிப்பதில்லை. இந்த உளவியல் தான் அவரது நாவல்களின் பெருவெற்றி!

28578813-200x300.jpg

சில பெண்கள் – ரமணிசந்திரனின் தீவிர வாசகிகள் – ஆண்களுக்கு எப்படி சரோஜா தேவி புத்தகங்களோ பெண்களுக்கு அதே போல் தான் ரமணிசந்திரன் நாவல்கள் என சமூக வலைதளங்களில் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (எழுத்தாளர் சவிதா வெங்கடகிருஷ்ணன் நேற்று கூட ரமணிச்சந்திரன் பற்றிய குறிப்பொன்றில் இதைச் சொல்லி இருந்தார்.) அதாவது நல்ல அர்த்தத்தில். பெண்கள் உடற்காமத்தை விட மென்மையாக மனதை வருடும் விஷயங்களின் மூலமாகத் தான் பெரும் திருப்தியை எய்துவார்கள், அதை அவர் எழுத்துக்கள் தருகின்றன என்ற பாஸிடிவ் அர்த்தத்தில்.

அவரது வாசிப்போ, வெளியுலக அறிமுகமோ அத்தனை விரிவானதல்ல என அவரே பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அதிகபட்சம் ஜெர்ஃப்ரி ஆர்ச்சர். ஆக, ஒரு house-wifeனால் லட்சக்கணக்கான house-wifeகளுக்காக எழுதப்பட்டவை ரமணிசந்திரன் நாவல்கள். இந்தியக் கலாசாரத்துக்குள் நின்று எழுதப்பட்ட Mills & Boon இப்புதினங்கள்.

நான் ரமணிசந்திரன் தீவிர வாசகர்களைப் புரிந்து கொள்கிறேன். ரமணிசந்திரனைக் குறை சொல்வது அவர்களின் அறிவின் உயரத்தை நேரடியாகத் தாக்குவதாகவே புரிந்து கொள்கிறார்கள் என‌. துரதிர்ஷ்டவசமாக அது உண்மையும் கூடத்தான்.

அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், கண்டும் காணாமல் கடப்பது தான் இதைக் கையாளும் எளிய வழி. நவீன இலக்கியம் என்பது விமர்சனங்களால் செழுமையுறுவது. அதனால் இந்தத் தரப்பிலிருந்து கடுமையான கருத்துகள் வந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நவீன இலக்கிய ஆட்களால் அவ்வப்போதேனும் பொருட்படுத்தி விமர்சிக்கப்படும் இடத்தில் இன்றும் ரமணிசந்திரன் இருக்கிறார் என்பது தான்.

காரணம் அவரது வாசகப் பரப்பு மற்றும் விற்பனை வீச்சு. நவீனப் பெருங்கவி அடையாளம் கூடத் காணப்படாமல் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் போது எந்த ஓர் ஆழமும் இல்லாத எழுத்து லட்சக்கணக்கில் விற்று உச்ச நட்சத்திரமாகக் கருதப்படுவது எரிச்சலை ஊட்டும் தான். உலகம் எங்கிலும் உள்ள ஓர் சிற்றிலக்கிய வட்ட மனநிலை தான் இது.

அம்மாதிரியான நவீன வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களை ரமணிசந்திரன் தீவிர விசிறிகள் பாவம் பார்த்து மன்னித்து நகரலாம். மாறாக அவர்கள் விமர்சனத்தை மேட்டிமைத்தனம், மண்டைக் கொழுப்பு என எண்ணினால் அது சிறுபிள்ளைத்தனம்.

*

எனில் என்ன அர்த்தம்? ரமணிசந்திரன் நாவல்களை வாசிக்கவே கூடாதா? அப்படி இல்லை. பதின்மங்களில் ரசித்துக் கூட‌ வாசிக்கலாம். கற்பனை செய்யலாம். அது அறியாத வயது. பிறகு அதெல்லாம் ஒரு பகற்கனவு எனப் புரிந்து விட வேண்டும். அதன் பிறகும் வாசிக்கலாம். ஆனால் அது ஒரு ஃபேன்டஸி என்ற பிரக்ஞையுடன். தன் சொந்த வாழ்வைப் பாதிக்காத அளவில். ஆனால் அதற்கு மனமுதிர்ச்சி வேண்டும். அது பெரும்பான்மை இந்தியப் பெண்களிடம் கிடையாது என்பதால் இதெல்லாம் சிலருக்கே சாத்தியம். மற்றவர்கள் கடைசி வரை ரமணிசந்திரன் நாயகர்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அவருடையவை எளிய மனங்களுக்கான எழுத்து. கெட்ட ஆண்களைக் காதல் மூலம் திருத்தி தன்னை உருகக் காதலிக்க வைக்கலாம் என்ற நாடகீய நம்பிக்கைகளை விரும்புபவர்களுக்கானது. அவரை ரசிக்க ஏராள அப்பாவியாய் இருக்க வேண்டும். தமிழகத்தில் இத்தனை லட்சம் அப்பாவிகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ரமணிசந்திரனுடைய நாவல்கள் எவரது மனதையும் புண்படுத்தாத ரம்மியமானவை. அவரது கதைகளில் வன்முறை இராது, பிரிவுகள் இராது, நோய்கள் கிடையாது, கெட்டவர்கள் கிடையாது, மரணம் இராது, சோகமே இல்லாத ஒரு கற்பனாலோகம் அவருடையது. இதை அவர் தெரிந்தே செய்கிறார். “என் கதைகள் கற்பனைகள் மட்டுமே. நிஜ வாழ்க்கையை என் எழுத்துக்குள் நான் கொண்டு வருவதே இல்லை. இன்றைக்குச் சண்டை போட்டவர்கள் இன்னும் சில வருடங்களில் சமாதானமாகி விடலாம்; அவர்கள் சண்டை போட்ட காலத்தில் அவர்கள் வாழ்க்கையைக் கதையாக எழுதி, அதை அவர்கள் சமாதானம் ஆன பின்பு படித்தால் எவ்வளவு வலிக்கும்?” என அவரே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அவரது நோக்கம் என்றுமே உண்மை வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதல்ல. இது மிக எலிமெண்டரியான பார்வை. ஆனால் பாவம், அவரது வாசகிகளுக்குத் தான் அந்தப் புரிதல் இல்லை.

51sjyQqFyqL-194x300.jpg

இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ரமணிசந்திரனின் வணிக வெற்றியைப் பார்த்து அவரை நகல் செய்து சுமார் நூறு பெண் எழுத்தாளர்களேனும் இன்று மாதம் ஒரு நாவல் என எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ரமணிசந்திரன் போலவே அவர்களும் ஏகமாய் விற்கிறார்கள். (அவர்களில் பலருக்கு அது ஒரு தற்சார்பை அளிக்கிறது என்ற அளவில் அதை வரவேற்கிறேன்.) எல்லோருமே அதே டெம்ப்ளேட். அதே உணர்ச்சிகள். அதே கற்பனாலோகம். அதே கண்கள் சொருகிய ஏகாந்த நிலை வாசிப்பு. தொடக்கப் புள்ளியான ரமணிசந்திரனே சக்கை என்று சொல்லி விட்ட பிறகு இதெல்லாம் ஏன் எழுதவும் வாசிக்கவும் படுகின்றன என ஆதங்கமாய் இருக்கிறது.

இதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் கொஞ்சம் முயன்றால் ஒரு வேளை இன்னும் வேறு மாதிரி எழுத்துக்கு நகரலாம். ஆனால் செய்யாமல் தேனில் விழுந்த வண்டு போல் இதிலேயே கிடக்கிறார்கள். எத்தனை பெரும் மனித வள இழப்பு!

இந்தத் திசையில் ரமணிசந்திரன் சொல்லியிருக்கும் விஷயம் இது: “என்னைக் கேட்டா எல்லாப் பெண்களுமே எழுத்தாளர்கள்னுதான் சொல்வேன். பெண்களுக்கே கற்பனைத்திறன் ரொம்ப அதிகம். குழந்தைகளை வளர்க்கிறப்பவே தினமும் ஏதாவது கதை சொல்லிச் சொல்லித்தானே வளர்க்கிறோம். கதை சொல்லத் தெரிஞ்ச நம்மால், கதை எழுத முடியாதா என்ன?”. எழுத்தை இவ்வளவு அலட்சியமாக ஒரு வெகுஜனப் படைப்பாளி கூட அணுகக்கூடாது. அதற்கென்று ஒரு மரியாதையும் உழைப்பும் இருக்கிறது. பக்கத்தை நிரப்புவதும் பணம் சம்பாதிப்பதும் மட்டும் படைப்பு அல்ல.

ரமணிசந்திரன் மீது (அல்லது அவரது நூற்றுக்கணக்கான நகல் எழுத்தாளர்கள் மீது) எனக்கு எந்த தனிப்பட்ட காழ்ப்போ பொறாமையோ அல்ல. ஆனால் நவீன இலக்கிய வாசகனாகவும், சமூகத்தின் மீதும் சமூகத்தில் சரிபாதியான பெண்கள்மீதும் அக்கறை கொண்டவனாகவும் சில கருத்துக்களைப் பதிவு செய்வதே என் மேலான விருப்பு.
 

http://tamizhini.co.in/2020/05/16/மயங்குகிறாள்-ஒரு-மாது-சி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 21:48, கிருபன் said:

இந்தியக் கலாசாரத்துக்குள் நின்று எழுதப்பட்ட Mills & Boon இப்புதினங்கள்

ரமணிசந்திரனின் நூல்களைப்பற்றிய சரியான கணிப்பு... பதின்ம வயதில் பாடப்புத்தகத்திற்குள் ஒளித்து வாசித்த நாவல்கள்.. ஒரே ஒரு நாவல் மட்டும் சிறிது ஏற்புடையதாக இருந்தது. “ வைரமலர்”. மிகுதி எல்லாம் உங்களை ஒரு மயக்கத்திலேதான் வைத்திருக்கும். 

லக்‌ஷ்மியின் நாவல்களில் வரும் பெண்களை இப்பொழுது பார்க்கமுடியாது.. அவர் இப்பொழுது இருந்தால், அவருடைய நாவல்களின் பெண்களையும் இந்த காலத்திற்கு ஏற்ப எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.. அவருடைய நாவல்கள், அனேகமானவை நிஐங்களை பிரதிபலிப்பவை. ”ஒரு காவிரியைப் போல”, அவருடைய நாவல்களில் மிகவும் பிடித்த நாவல்.

On 24/5/2020 at 21:48, கிருபன் said:

இந்தப் பெண் எழுத்தாளர்கள் எல்லோரையும் விட பாலகுமாரன் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவரே பெண்களையும் அவர்த‌ம் மனதையும் நேர்மையாகக் காட்டியதாக எண்ணினேன்

மிகவும் உண்மை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூபால சிங்கம் புத்தக சாலையில் ஏன் சித்தி வேலே செய்தவர்.  நியூ மாஸ்டரில் ரியுஷன் முடிந்த பின்னர், பூபால சிங்கம் கடைக்கு போய் வந்திருக்கும் புது புத்தகளை அள்ளிக்கொண்டுபோய், சித்தி வீட்டில் வைத்து வாசித்து முடித்துவிட்டுதான் ஊருக்கு போவேன் அம்மம்மா அன்புடன் போடும் அறுசுவை உணவை உண்டபின். என்ன ஒரு காலம் அது. வாசிக்காத லக்ஷ்மி & ரமணிசந்திரன் புத்தகங்கள் இல்லை  அந்த நேரம். பொன்னியின் செல்வன் மூன்றுதாரத்துக்கு மேல் வாசித்து முடித்தனான். இப்ப வாசிக்க அலுப்பா இருக்கு. 

பூபால சிங்க சிறியண்ணா,  மல்லி அக்கா, சித்திக்கு தான் நன்றி செல்லனும் என் வளர்ச்சிக்கு. எந்த புத்தகமென்றாலும் இலவசாமாக எடுத்து தருவார்கள் கெண்டுபோக, நல்ல உள்ளங்கள்.நீடுழி வாழனும்.

நான் கதை புத்தகம் வாசிக்க வெளிக்கிட்டால் இடி இடித்தால் கூட கேட்கது அந்தளவுக்கு ஒன்றி போய்விடுவோம். நான் கொண்டுவரும் புத்தகங்களை அம்மாவும் நானும் போட்டி போட்டு இரவிரவாக படிப்போம் விளக்கு வெளிச்சத்தில். என் வாசிப்புக்கு அம்மாவும் ஒரு காரணம். மனிப்பாய் வாசிகசாலை பெறுப்பாளர் (எல்லோரும் காளி என கூப்பிடுவார்கள் அந்தளவுக்கு கண்டிப்பு) என்னுடன் பயங்கர அன்பு, வாசிக்க நல்ல நல்ல புத்தகங்களா தேடி தருவா, என்னுடன் அன்பா இருந்த மாதிரி வேறு யாருடனும் நான் பார்க்கவில்லை, அவாவின் செல்ல பிள்ளை நான். புத்தன் சாத்திரி நீங்கள் என்ன மாதிரி காளியுடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.