Jump to content

கவுண்டமணி பிறந்தநாள்: அறியப்படாத தகவல்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டமணி பிறந்தநாள்: அறியப்படாத தகவல்கள்!

spacer.png

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கவுண்டமணிக்கு முன்பு, பின்பு என பிரித்து பார்ப்பது தவிர்க்க முடியாதது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், சுருளிராஜன் என நகைச்சுவை சிகரங்கள் இருந்தனர். நடிகர் கவுண்டமணி பிரவேசத்திற்கு பின் கவுண்டமணி - செந்தில் என பிரிக்க முடியாத காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தியது. நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று(மே 25).

அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 25:

1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

2. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

3. பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ’16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!

4. அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

5. கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

6. மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

7. இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

8. கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

9. உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

10. திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

11. சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

12. கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

13. புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

14. ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

15. கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

spacer.png

16. கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.

17. ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

18. ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலின் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

19. கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

20. எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

21. டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

22. கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

23. ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

24. 2010-ல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

25. ஒரே ஒரு தடவைதான் வார ஏடொன்றில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

https://minnambalam.com/entertainment/2020/05/25/40/goundamani's-birthday-special

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Top 30 Goundamani GIFs | Rechercher le meilleur GIF sur Gfycat

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுண்டர் சார்.......!   💐

படம் போட்டது நம்ம தோழர் புரட்சி  புளகாங்கிதம் அடையட்டும் என்று......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

Top 30 Goundamani GIFs | Rechercher le meilleur GIF sur Gfycat

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுண்டர் சார்.......!   💐

படம் போட்டது நம்ம தோழர் புரட்சி  புளகாங்கிதம் அடையட்டும் என்று......!  😇

பகிடி தலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂..

ஐ.நா சபையுடன் கதைத்து பகிடி தலைவரின்ட பிறந்த நாளை பகிடி தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டருக்கு பிறந்தநாள் வாழ்துகள். 

அரிய தகவல்களை பகிர்ந்த கிருபன் ஜிக்கு நன்றியும்.

கவுண்டர் சுய எள்ளல் மிக்கவர் என்பது ஊகிக்க கூடியதுதான்.

On 25/5/2020 at 12:28, கிருபன் said:

கவுண்டமணி பிறந்தநாள்: அறியப்படாத தகவல்கள்!

spacer.png

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கவுண்டமணிக்கு முன்பு, பின்பு என பிரித்து பார்ப்பது தவிர்க்க முடியாதது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், சுருளிராஜன் என நகைச்சுவை சிகரங்கள் இருந்தனர். நடிகர் கவுண்டமணி பிரவேசத்திற்கு பின் கவுண்டமணி - செந்தில் என பிரிக்க முடியாத காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்து ஆதிக்கம் செலுத்தியது. நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று(மே 25).

அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 25:

1. ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

2. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

3. பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ’16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!

4. அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

5. கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

6. மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

7. இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

8. கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

9. உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

10. திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

11. சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

12. கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

13. புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

14. ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

15. கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

spacer.png

16. கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.

17. ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

18. ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலின் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

19. கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

20. எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

21. டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

22. கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

23. ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

24. 2010-ல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

25. ஒரே ஒரு தடவைதான் வார ஏடொன்றில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

https://minnambalam.com/entertainment/2020/05/25/40/goundamani's-birthday-special

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை கிட்டடியில் இணைத்தமாதிரி இருக்கு! ஒரு வருடம் ஓடினதே தெரியவில்லை😯

கவுண்டமணி ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!  சில வாரங்களுக்கு முன்னர் உள்ளத்தை அள்ளித்தா படம் பார்த்தேன்!! கவுண்டரின் லூட்டி அந்த மாதிரி!! ரம்பாவின் தொடையழகையும் மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடியதாக இருந்தது😻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஈழத்து மருமகள் எண்டு ஒரு மரியாதை இல்லாமல்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sethupathi IPS - Goundamani leaves his job | Comedy pictures, Comedy  quotes, Comedy

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுண்டர் சார்......!  💐

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

இந்தத் திரியை கிட்டடியில் இணைத்தமாதிரி இருக்கு! ஒரு வருடம் ஓடினதே தெரியவில்லை😯

கவுண்டமணி ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!  சில வாரங்களுக்கு முன்னர் உள்ளத்தை அள்ளித்தா படம் பார்த்தேன்!! கவுண்டரின் லூட்டி அந்த மாதிரி!! ரம்பாவின் தொடையழகையும் மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடியதாக இருந்தது😻

தமிழ் சினிமாவில் கவுண்டமணி அளவுக்கு எவரும் உருவக் கேலிகள், மாற்றுத்திறனாளிகளை நக்கலடிப்பது, திருநங்கைகளை / திருநம்பிகளை அருவருப்பான முறையில் கேலி செய்வது போன்றவற்றை செய்தது இல்லை. 

ஒரு தலைமுறைக்கு நகைச்சுவை என்பதே இவ்வாறான கேலிகள்தான் என்று ஏற்க வைத்தவர். இன்றும் அருவருப்பான தமிழ் மீம்ஸ்களில் வாழும் உத்தமர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

அந்தநாள் ஞாபகம்???😻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

தமிழ் சினிமாவில் கவுண்டமணி அளவுக்கு எவரும் உருவக் கேலிகள், மாற்றுத்திறனாளிகளை நக்கலடிப்பது, திருநங்கைகளை / திருநம்பிகளை அருவருப்பான முறையில் கேலி செய்வது போன்றவற்றை செய்தது இல்லை. 

ஒரு தலைமுறைக்கு நகைச்சுவை என்பதே இவ்வாறான கேலிகள்தான் என்று ஏற்க வைத்தவர். இன்றும் அருவருப்பான தமிழ் மீம்ஸ்களில் வாழும் உத்தமர்.

நிழலி,

நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மனநிலை மாற்றம் எமது சூழலில், தனிப்பட்டு என்னில் கூட கடந்த 20 ஆண்டில் ஏற்பட்ட ஒன்றுதானே?

கவுண்டரின் அப்படியான பகிடிகள் வந்த காலம் வேறு அதை 2021 கண்ணாடி மூலம் பார்ப்பது சரியாகுமா?

அப்போது இருந்த சமூக விழுமியங்களையே அவர் பிரதிபலித்தார்.

கவுண்டர் சொன்னதை, டைரக்டர், சென்சார் போர்ட் அனுமதிக்க நாம் கைதட்டி வரவேற்று சிரித்தோம். எந்த ஒரு ஊடகமும் எதிர்க்கவில்லை.

பின்னாளில் எதிர்பு எழும்பியபோது கவுண்டரும் பாணியை மாற்றிக் கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கவுண்டரின் அப்படியான பகிடிகள் வந்த காலம் வேறு அதை 2021 கண்ணாடி மூலம் பார்ப்பது சரியாகுமா?

அப்போது இருந்த சமூக விழுமியங்களையே அவர் பிரதிபலித்தார்.

21 Memes ideas | memes, funny comments, tamil comedy memes

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

21 Memes ideas | memes, funny comments, tamil comedy memes

😁

கவுண்டரின் பாணியில்

”நீ சொல்லாவிட்டால் யார் சொல்லுவார் மனமே” 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நிழலி,

நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மனநிலை மாற்றம் எமது சூழலில், தனிப்பட்டு என்னில் கூட கடந்த 20 ஆண்டில் ஏற்பட்ட ஒன்றுதானே?

கவுண்டரின் அப்படியான பகிடிகள் வந்த காலம் வேறு அதை 2021 கண்ணாடி மூலம் பார்ப்பது சரியாகுமா?

அப்போது இருந்த சமூக விழுமியங்களையே அவர் பிரதிபலித்தார்.

கவுண்டர் சொன்னதை, டைரக்டர், சென்சார் போர்ட் அனுமதிக்க நாம் கைதட்டி வரவேற்று சிரித்தோம். எந்த ஒரு ஊடகமும் எதிர்க்கவில்லை.

பின்னாளில் எதிர்பு எழும்பியபோது கவுண்டரும் பாணியை மாற்றிக் கொண்டார்.

உண்மைதான்

ஆனால் பல  படங்களில் படங்களை  ரசிப்பதற்கு  இடையில் இவர்களது இந்த  மாதிரியான பகிடிகள் இடைஞ்சலாக  எரிச்சலாக  இருந்ததையும் கண்டவர்கள் நாம்.

இந்த நிலையை  மாற்றிய தலைமுறையினரும்  நாங்கள் தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் பல  படங்களில் படங்களை  ரசிப்பதற்கு  இடையில் இவர்களது இந்த  மாதிரியான பகிடிகள் இடைஞ்சலாக  எரிச்சலாக  இருந்ததையும் கண்டவர்கள் நாம்.

இந்த நிலையை  மாற்றிய தலைமுறையினரும்  நாங்கள் தானே??

உண்மைதான். கவுண்டரின் ஓவர் கத்தல் சில நேரம் கடுப்படித்ததும் உண்டு.

எங்கள் ஊரில் ஒரு வாய்பேசாத ஆள் இருந்தார். ஊரே அவரை “ஊமை” எண்டுதான் கூப்பிடும். வயசு வித்தியாசம் இல்லாமல். அவர் பெயரே எனக்கு தெரியாது. இப்ப வீட்டில விசாரிச்சு பார்த்தன் - ஒருத்தருக்கும் தெரியாது☹️.

இப்படி ஒரு கட்டமைப்பில், காலத்தில் இருந்து வந்தவர். அவரின் கமெடிகள் அதைதான் பிரதிபலித்தன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அந்தநாள் ஞாபகம்???😻

அந்தநாளில் கள்ளக்கொப்பியில் 24 இன்ஞ் ரீவியில் புள்ளி ஓட பார்த்து வெறுத்து இருந்தது! ஆனால் இப்ப 55இன்ச் OLED ரீவியில் அமேசன் பிரைம்  HD குவாலிற்றியில் பார்க்க குளிர்ச்சியாக இருக்கு😻😻😻

16 hours ago, நிழலி said:

தமிழ் சினிமாவில் கவுண்டமணி அளவுக்கு எவரும் உருவக் கேலிகள், மாற்றுத்திறனாளிகளை நக்கலடிப்பது, திருநங்கைகளை / திருநம்பிகளை அருவருப்பான முறையில் கேலி செய்வது போன்றவற்றை செய்தது இல்லை. 

ஒரு தலைமுறைக்கு நகைச்சுவை என்பதே இவ்வாறான கேலிகள்தான் என்று ஏற்க வைத்தவர். இன்றும் அருவருப்பான தமிழ் மீம்ஸ்களில் வாழும் உத்தமர்.

நாங்களும் 95 வீதம் நாகரீகமாக இருக்கிறமாதிரி இருப்போம். ஒரு 5 வீதம் ஊத்தைப் பழக்கம்  எப்பவும் இருக்கும்😃 அதனால் கவுண்டமணியின் கேலிகள் முகம் சுளிக்க வைப்பது குறைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

என்னது கள்ள கொப்பியோ…கொஞ்சம் மரியாதையா கமரா கொப்பி எண்டு சொல்லுங்கோ🤣.

# பப்ளிக் #பப்ளிக்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

தமிழ் சினிமாவில் கவுண்டமணி அளவுக்கு எவரும் உருவக் கேலிகள், மாற்றுத்திறனாளிகளை நக்கலடிப்பது, திருநங்கைகளை / திருநம்பிகளை அருவருப்பான முறையில் கேலி செய்வது போன்றவற்றை செய்தது இல்லை. 

ஒரு தலைமுறைக்கு நகைச்சுவை என்பதே இவ்வாறான கேலிகள்தான் என்று ஏற்க வைத்தவர். இன்றும் அருவருப்பான தமிழ் மீம்ஸ்களில் வாழும் உத்தமர்.

அது மட்டுமல்ல, வேலைக்காரர்களை அனைத்து படங்களிலும் நாய் என்றே குறிப்பிடுவார், மனிதர்களின்மேல் காரி  துப்புவது, வயதானவர்கள் பெண்களை  மிக கேவலமாக திட்டுவது,

பின்நாட்களில் உச்சத்தை அடைந்த பின்னர்  தன் கட்டுப்பாட்டைமீறி ஹீரோக்களைகூட பேச விடாமல் வாயில் வந்ததையெல்லாம் பேசி நகைச்சுவை செய்தார்.  கெட்டவார்த்தைகள் மிக அதிகமாக பயன்படுத்தினார் அவர் நகைச்சுவையில் அதிகம் ஒலி தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.

மேலே சுவியண்ணா இணைத்த கவுண்டமணி ஒரு நடிகராகநடித்த படத்தில் Top 30 Goundamani GIFs | Rechercher le meilleur GIF sur Gfycat

விடுதலைபுலிகளை மோசமாக விமர்சனம் செய்திருப்பார்.

ஆனால் கவுண்டமணி ஹீரோவை மிஞ்சிய ரேஞ்சுக்கு போவதற்கு முதல் வந்த படங்களில் செந்திலுடனும் தனியாகவும் நடித்த படங்களின் நகைச்சுவை என்றும் பசுமையானது. .

பல குறைகளை தவிர்த்து பார்த்தால் கவுண்டர் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்தான் மாற்று கருத்தேயில்லை.

Link to comment
Share on other sites

9 hours ago, goshan_che said:

நிழலி,

நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மனநிலை மாற்றம் எமது சூழலில், தனிப்பட்டு என்னில் கூட கடந்த 20 ஆண்டில் ஏற்பட்ட ஒன்றுதானே?

கவுண்டரின் அப்படியான பகிடிகள் வந்த காலம் வேறு அதை 2021 கண்ணாடி மூலம் பார்ப்பது சரியாகுமா?

அப்போது இருந்த சமூக விழுமியங்களையே அவர் பிரதிபலித்தார்.

கவுண்டர் சொன்னதை, டைரக்டர், சென்சார் போர்ட் அனுமதிக்க நாம் கைதட்டி வரவேற்று சிரித்தோம். எந்த ஒரு ஊடகமும் எதிர்க்கவில்லை.

பின்னாளில் எதிர்பு எழும்பியபோது கவுண்டரும் பாணியை மாற்றிக் கொண்டார்.

9 hours ago, goshan_che said:

நிழலி,

நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மனநிலை மாற்றம் எமது சூழலில், தனிப்பட்டு என்னில் கூட கடந்த 20 ஆண்டில் ஏற்பட்ட ஒன்றுதானே?

கவுண்டரின் அப்படியான பகிடிகள் வந்த காலம் வேறு அதை 2021 கண்ணாடி மூலம் பார்ப்பது சரியாகுமா?

அப்போது இருந்த சமூக விழுமியங்களையே அவர் பிரதிபலித்தார்.

கவுண்டர் சொன்னதை, டைரக்டர், சென்சார் போர்ட் அனுமதிக்க நாம் கைதட்டி வரவேற்று சிரித்தோம். எந்த ஒரு ஊடகமும் எதிர்க்கவில்லை.

பின்னாளில் எதிர்பு எழும்பியபோது கவுண்டரும் பாணியை மாற்றிக் கொண்டார்.

ஒரு தலைமுறைக்கு நகைச்சுவை என்பதே இவ்வாறான கேலிகள்தான் என்று ஏற்க வைத்தவர் என்று நான் குறிப்பிட்ட அதே தலைமுறை வாழ்ந்த காலத்தில் சிறுவனாக நான் இருந்த போது நானும் இவரை ரசித்தது மட்டுமன்றி சக நண்பர்களையும் என்னுடன் படித்தவர்களையும் "டேய் கோமுட்டித் தலையா" என்றெல்லாம் அழைத்தும் இருக்கின்றேன். அதே நேரத்தில் இவர் காலத்தில் நடித்த இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜனகராஜை இவரை விட அதிகமாக ரசித்தும் இருக்கின்றேன்.

அன்றைய காலகட்டத்தில் அது சரியானதாக ஏற்கப்பட்டதால் இன்றும் அதை சரி என்று ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அன்றைய ரசனை ஒரு தவறு . சக மனிதர்களின் குறைகளை கேவலமாக கேலிபண்ணும் ரசனையை போற்ற வேண்டியது இல்லை.

எல்லாவற்றையும் விட இவரை ஒரு லெஜெண்ட் ஆக இன்று முன்னிலைப்படுத்தி சமூகவலைத்தளங்களில் போற்றி எழுதுவது அவரது நகைச்சுவையின் பின்னால் இருக்கும் அசிங்கங்களை அங்கீகரிப்பது ஆகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நீங்கள் உண்மையில் இப்போ ஹாட் டாபிக் ஆக இருக்கும் ஒரு விடயத்தை தொடுகிறீர்கள். அதாவது woke culture. வரலாற்றினை இப்போதைய விழுமியங்களில் இருந்து பார்த்து பலவருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இப்போ தீர்ப்பு எழுதுவது.

அண்மையில் சிசில் ரோட்ஸ் என்பாரது சிலையை ஆக்ஸ்போர்ட்டில் வைத்திருப்பது பற்றி எழுந்த சர்சை நினைவிருக்கலாம். அவர் ஆபிரிக்காவை சுரண்டியவர் (சிம்பாம்வே ரொடேசியா என்று முன்பு அழைக்கப்பட்டது).

ஆனால் ஆக்ஸ்போர்ட்டில் பல நல்ல விடயங்களுக்கு பணம் கொடுத்து இப்போதும் அவர் பணம் பயன்படுகிறது.

இதே போல் ரட்யார்ட் கிப்ளிங், சர்சில், காந்தி என பலர் மீது நிறவெறி விமர்சனம் வைக்கபட்டு அவர்கள் வரலாற்றில் போற்றபட கூடாது என்பார் ஒரு சாரார்.

என்னை கேட்டால் அவர்களை அவர்களது நல்லதோடும் தீயதோடும் ஏற்று

இவர் இன்ன காலத்தில் இப்படியான வேலையை செய்தார். இது இப்போ ஏற்று கொள்ளதக்கதாக இல்லை ஆனால் அப்போ இதை சமூகம் ஏற்று கொண்டது என பதிவதே நியாயமான வரலாற்று பார்வையாக அமையும்.

கவுண்டர் கொண்டாடபட வேண்டியவர், ஆனால் இப்படி ஒரு disclaimer ஓடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய நகைச்சுவை காட்சிகளை தனியாக  பார்த்தும் இரசிக்கிறார்கள் ☹️
இவருடைய நகைச்சுவையை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

29 minutes ago, நிழலி said:

அன்றைய ரசனை ஒரு தவறு . சக மனிதர்களின் குறைகளை கேவலமாக கேலிபண்ணும் ரசனையை போற்ற வேண்டியது இல்லை.

இவரை ஒரு லெஜெண்ட் ஆக இன்று முன்னிலைப்படுத்தி சமூகவலைத்தளங்களில் போற்றி எழுதுவது அவரது நகைச்சுவையின் பின்னால் இருக்கும் அசிங்கங்களை அங்கீகரிப்பது ஆகிவிடும். 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கவுண்டமணியை விமர்ச்சிப்பவர்கள் அன்று ரசித்தார்கள்....
அதே போல் சிவாஜிகணேசன் மற்றும் எம்ஜிஆர் போன்றோரின் நடிப்பை, அசைவுகளை ரசித்தவர்கள் இன்று ஓவர் ஆக்ரிங் என்கிறார்கள்.
ஒரு காலத்தில் கவுண்டமணி சகலராலும் போற்றப்பட்டவர். நாயே என அவர் திட்டிய போதும் அது நகைச்சுவையாக பார்க்கப்பட்டது.

எனது செல்லப்பிராணியாக நாய் வளர்க்கின்றேன். கொஞ்சுகின்றேன் என்பவரை நாய் என சொன்னால் ஏன் அவருக்கு கோபம் வருகின்றது? 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.