Jump to content

இலங்கையில் மும்மொழிக்கல்வி  - இணையத்தில் ஒரு கேள்வி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ஒரு கேள்வி.

சிங்கள மாணவர்கள் பாடசாலைகளில் தமிழ் மொழியினை படிக்க வேண்டுமா?

சாயா திசாநாயக்க என்னும் பெண் அளித்துள்ள பதிலில், ஆம், 1 - 9 வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளையும் படிக்க வேண்டும். 

மூன்றினையும் GCE க்கு எடுக்க முடியாவிடில் ஒரு பாடத்தினை விடுத்து தாய் மொழியினை எடுக்கலாம். பின்னர் அந்த ஒரு பாடத்தினை தனியாக முடிக்கலாம்.

இப்போது இலங்கையில் அரச, தனியார் வேலைகளுக்கு மூன்று மொழியும் தேவைப்படுவதால் மாணவர்களும் படிக்கின்றனர் என்கிறார் அவர். (யாழ் புகையிரத நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்த சிங்கள இளைஞர்கள் பேசிய தமிழால் வியந்தேன். பின்னர், சிங்களவர்கள் அரச வேலை எடுக்க, தமிழ் மொழி பயில்வது உண்மைதான் என அறிந்து கொண்டேன்.)

அத்துடன் GCE க்கு தான் எழுதிய தமிழ் மொழி வினாத்தாளை இணைத்துள்ளார். இரண்டாம் மொழி என தெளிவாக குறிக்கப்படுள்ளது

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

main-qimg-2d5ba4982f58ebbc51922691effbadf3

இலங்கையில் இத்தகைய கேள்வித்தாள்களில் உமக்கு, நீர், நீங்கள், எழுதுக என்று மரியாதையாக இருக்கும். தமிழகத்தில் கேள்வித்தாள்களில் நீ, உனது, எழுது என ஒருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

49 minutes ago, Nathamuni said:

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

படிப்பிக்கிறார்கள்!

ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

படிப்பிக்கிறார்கள்!

ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும். 

மும்மொழி   தேர்ச்சி  என்பது கிந்தியாவின் குள்ள நரி அறிவுறுத்தலின் படி, சிங்களம் வரித்துக் கொண்ட வேண்ட வெறுப்பான கொள்கை, நீண்ட கால நோக்கமான தமிழ் மக்களே தமிழீழம் என்பதை கைவிட செய்வதற்கான  ஹிந்திய, சிங்கள இனப்படுகொலையாளர்களின் குயுக்தி.   

கிந்தியாவின் கல்வி கொள்கையை ஹிந்தியை  தொல்புருள், வரலாற்று துறையுடன் ஒருங்கமைத்து , ஹிந்தியை மொழியை ubequitous  ஆக்கி அதன் மூலம் அந்தந்த தேசங்களின் தனித்துவத்தை  பொருளாதார பிணைப்பை வைத்து கிந்தியத்திற்குள் சீரழிக்கும் நீண்ட கால திட்டதை கிந்தியா தான் செய்ய முயற்றசிப்பதை, சிங்களத்துக்கும் சொல்லி கொடுத்துள்ளது. 

பெயருக்காவது, சில அதிகாரங்களுடன், தமிழருக்கான நிலம் என்று  இருக்கும் தமிழ் நாடே கிந்தியாவின் நரி திட்டத்தை நிராகரித்து விட்டது.

அதுவும் ஓர் தேசத்தின், இனத்தின் தொல்பொருள், வரலாற்று அடையாளங்களையும், கலாசாரத்தையும், மதத்தையும், பாரம்பரியங்களையும் அழிக்கும் அல்லது மறைக்க எத்தனிக்கும் சொறி சிங்கள அரசுக்கு கீழ் மும்மொழி தேர்ச்சி என்பது வந்து முடியும் இடம் ஈழத்து தமிழர் சிங்களத்துக்குள் முற்றாக சீரழிவது.  
 
இதை இந்த திரியிலேயே கணக்கு கூடியதாக உள்ளது. அதாவது,  வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் (பதிவை இட்டவர்), சிங்களவர் பேசிய தமிழில் விதந்து, தமிழர்களும் இப்படி சிங்களம் படிக்கிறார்களா என்று அவரை வினவ வைத்திருக்கிறது. 

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும். அத்துடன் முமொழி தேர்ச்சியும் படிப்படியாக நீக்கப்படும். பொருளியல், மற்றும் புவியியல் (தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு இல்லை) பிணைப்பால் வெளியில் சிங்களமும், வீட்டில் தமிழும் என்று ஆகி, பின்பு எல்லாமுமே சிங்களம் ஆகும்.

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

வரலாற்று மற்றும் பொருளியல்  காலப் பரிமாணத்தில், எமது மிகப் பெரிய சந்தை தமிழ் நாடு, நல்லகாலம் சிங்களத்துக்கு அயலில் ஒன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

அப்படி செய்ய முடியுமா என்ன?

பள்ளியில் படிப்பிக்கும் ஒரு பாடத்தினை எடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா?

அப்படியானால் சிங்களவர்கள் ஏன் படிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள முக்கியமான பிரச்னை, மொழிப்பிரச்சனை காரணமாக தொடர்பு கொள்ளுதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்.

நாடு, பிரிகிறதோ இல்லையோ, தமிழனுக்கு அடுத்த வீட்டுக்காரன் சிங்களவன், அவர்களுக்கு தமிழன். ஒருவருடன் ஒருவன் பேசத்தான் வேண்டும். கவலை, சந்தோசங்களை பகிரத்தான் வேண்டும்.
 
Link to comment
Share on other sites

இலங்கைக்கு சிறீலங்கா என்று சிங்கள அரசு பெயரை மாற்றியபோது, தமிழர்களும், கொதித்தெழுந்தார்கள், தமிழில் இலங்கை என்றே இருக்கும் என்று அதனைச் சிங்களம் சட்டம் ஆக்கியதும்... தமிழ்த் தலைவர்களும் அமைதிகொண்டார்கள்.  

இன்று என்னிடம் யாராவது எந்தநாடு என்று கேட்டால் சிறீலங்கா என்றுதான் சொல்லவருகிறது.

எங்கள் ஊரின் முகவரியை ஆங்கிலத்தில் எழுதும்போதுகூட ILANKAI என்று யாரும் எழுதுவதில்லை என எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

ஆங்கிலத்தில் ஸ்ரீ லங்கா என்றே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் நாதமுக்கு ஒரு துரோகிப்பட்டம் கொடுத்திடுவமா.காசா பணமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

பேசாமல் நாதமுக்கு ஒரு துரோகிப்பட்டம் கொடுத்திடுவமா.காசா பணமா.

சுவையர்,

தமிழர்கள் மட்டுமே சிங்களம் படிக்க வேண்டும் என்று இருந்தால், (இருந்தது), நான் சொல்வது பிழை.

தீவின் சகல மாணவர்களும் மூன்று மொழிகளும் படிக்கச் சொன்னால், சரிதானே.

தமிழர்கள், சிங்களத்தினை படித்து, அரச, தனியார் வேலை எடுக்கவேண்டாமா?

Link to comment
Share on other sites

8 hours ago, Kadancha said:

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும்.

சிங்களத்தை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு சிங்களம் பேசாமல் தமிழர் இருக்கலாம் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

சிங்களத்தை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு சிங்களம் பேசாமல் தமிழர் இருக்கலாம் தானே!

9 hours ago, Kadancha said:

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

மும்மொழி   தேர்ச்சி  என்பது கிந்தியாவின் குள்ள நரி அறிவுறுத்தலின் படி, சிங்களம் வரித்துக் கொண்ட வேண்ட வெறுப்பான கொள்கை, நீண்ட கால நோக்கமான தமிழ் மக்களே தமிழீழம் என்பதை கைவிட செய்வதற்கான  ஹிந்திய, சிங்கள இனப்படுகொலையாளர்களின் குயுக்தி.   

கிந்தியாவின் கல்வி கொள்கையை ஹிந்தியை  தொல்புருள், வரலாற்று துறையுடன் ஒருங்கமைத்து , ஹிந்தியை மொழியை ubequitous  ஆக்கி அதன் மூலம் அந்தந்த தேசங்களின் தனித்துவத்தை  பொருளாதார பிணைப்பை வைத்து கிந்தியத்திற்குள் சீரழிக்கும் நீண்ட கால திட்டதை கிந்தியா தான் செய்ய முயற்றசிப்பதை, சிங்களத்துக்கும் சொல்லி கொடுத்துள்ளது. 

பெயருக்காவது, சில அதிகாரங்களுடன், தமிழருக்கான நிலம் என்று  இருக்கும் தமிழ் நாடே கிந்தியாவின் நரி திட்டத்தை நிராகரித்து விட்டது.

அதுவும் ஓர் தேசத்தின், இனத்தின் தொல்பொருள், வரலாற்று அடையாளங்களையும், கலாசாரத்தையும், மதத்தையும், பாரம்பரியங்களையும் அழிக்கும் அல்லது மறைக்க எத்தனிக்கும் சொறி சிங்கள அரசுக்கு கீழ் மும்மொழி தேர்ச்சி என்பது வந்து முடியும் இடம் ஈழத்து தமிழர் சிங்களத்துக்குள் முற்றாக சீரழிவது.  
 
இதை இந்த திரியிலேயே கணக்கு கூடியதாக உள்ளது. அதாவது,  வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் (பதிவை இட்டவர்), சிங்களவர் பேசிய தமிழில் விதந்து, தமிழர்களும் இப்படி சிங்களம் படிக்கிறார்களா என்று அவரை வினவ வைத்திருக்கிறது. 

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும். அத்துடன் முமொழி தேர்ச்சியும் படிப்படியாக நீக்கப்படும். பொருளியல், மற்றும் புவியியல் (தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு இல்லை) பிணைப்பால் வெளியில் சிங்களமும், வீட்டில் தமிழும் என்று ஆகி, பின்பு எல்லாமுமே சிங்களம் ஆகும்.

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

வரலாற்று மற்றும் பொருளியல்  காலப் பரிமாணத்தில், எமது மிகப் பெரிய சந்தை தமிழ் நாடு, நல்லகாலம் சிங்களத்துக்கு அயலில் ஒன்றுமில்லை. 

இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான் ...மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. அதை அரசே அமுல்படுத்தியிருப்பதும் நல்லதுதான். ஆனால் எமது விசர்த் தமிழர் தமிழை வேண்டாத மூன்றாம் மொழியாக்கி ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் ஆவலோடு படிக்குதுகள். அதுதான் எரிச்சலாயிருக்கு. மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. அதை அரசே அமுல்படுத்தியிருப்பதும் நல்லதுதான். ஆனால் எமது விசர்த் தமிழர் தமிழை வேண்டாத மூன்றாம் மொழியாக்கி ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் ஆவலோடு படிக்குதுகள். அதுதான் எரிச்சலாயிருக்கு. மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Nathamuni said:

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

எப்படி பார்த்தாலும், மூன்றாவதாக வர ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

எப்படி பார்த்தாலும், மூன்றாவதாக வர ஏலாது.

சரி எனக்கு உதுகளைப்பத்தி கனக்கத்தெரியாது. எதுக்கும் நாளைக்கு சீமாட்டி  வந்து அப்பித்தப்பி பூசி மெழுகுவா தானே அப்ப பாப்பம். 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான்

அது உங்களுக்கு உள்ள மொழி, புவியியல், வரலாறு மற்றும் மானிடவியல், அதை பற்றி  ஓர் இனத்தை மற்றும் தேசத்தை அழிப்பதே தமது தேசத்தின் இனத்தின் இருப்பை தக்க வைக்கும் என்ற சிந்தனை  கருவை வரலாறாக தமது  (சிங்கள) தேசத்தில்  விதைக்கும்  ஓர் அரசின்    கொள்கைகளை வடிவமைக்கும் மற்றும் அந்த கொள்கைகளின் விளைவுகளை அறுவடை செய்யும் காலப் பரிமாணம்   போன்றவற்றின்  விளக்கத்தின் மற்றும் அறிவு  எல்லைக்கு உட்பட்ட புரிதல்.

அப்படி இருந்தும், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை தூரத்தில் வைத்து கையாள வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

நீங்கள் ஒன்றை கவனிக்கவில்லை, சிங்களம் தனது வரலாற்று கற்பிப்பதில் உண்மைகளை சொல்லி மாற்றம் கொண்டு வந்து இருந்தால், இந்த மொழி கொள்கையும் சமாதானத்தை அடைவதில் ஒரு தடமாக இருந்திருக்கும் என்பது தோற்றமளவில் எற்புடையதாகலாம்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

சரி இல்லை. ஒரு மொழியை ஆவலோடு படிப்பது மடத்தனம் இல்லை.

Link to comment
Share on other sites

On 27/5/2020 at 02:59, குமாரசாமி said:

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kali said:

கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும் 

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.

Link to comment
Share on other sites

7 minutes ago, colomban said:

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

யாரைவிட மேல்? 
கொழும்பு ரமில்ஸ்சை விடவா? கொழும்பு முஸலிம்சை விடவா?  

Link to comment
Share on other sites

Quote

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

இருக்கிற ஆமியிட்டை படிச்சாலே ஆயிரம் பாடசாலைக்கு சமம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 14:08, Nathamuni said:

தீவின் சகல மாணவர்களும் மூன்று மொழிகளும் படிக்கச் சொன்னால், சரிதானே.

தமிழர்கள், சிங்களத்தினை படித்து, அரச, தனியார் வேலை எடுக்கவேண்டாமா?

அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது.

கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை.

இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும்.

இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kadancha said:

மும்மொழிக் கல்வி, கோத்தாவின் திட்டம் இல்லை.

இது இரு மொழிக் கல்வியாக, தமிழ் இல்லாமல் போனால் அது கோத்தாவின் திட்டமாக இருக்கும்.

நாம் வெளி நாட்டில் இருந்து பார்வையினை செலுத்துவதில் தவறலாம்.

அங்கே, ஒரு அரசியல், சமாதான உறுதிப்பாடு வரவேண்டும் என்றே வளவளத்த ரணில் + மைத்திரி வீட்டுக்கு அனுப்பப்பட்டு,  உறுதியான கோத்தா ஆட்சிக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையில், மீசையினை முறுக்கிக் கொண்டு, கோத்தாவும், மகிந்தவும் வாயால வடை சுட்டுக் கொண்டே இருக்க முடியாது.

விரைவாக அமைதியை கொண்டு வரவே அவர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெல்ல, அமெரிக்கா உதவி உள்ளது. ரணிலிலும் பார்க்க, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கோத்தா, நல்ல தெரிவு தான்.

அப்படி அமைதி திரும்பினால், முதலீடு செய்யப்போவது, புகலிடத்தமிழர்கள் தான் முதலிடம் வகிப்பார்கள்.

அப்போது வேலை, தமிழ் பேசும் சிங்களவர்களுக்கும் கிடைக்கும் என்பது, சிங்களவர்களுக்கு புரிந்துள்ளது.

ஊரில் கோவில் அய்யர் சொன்னார்.  வெளிநாட்டில் இருந்து பணம் தாராளமாக வருகிறது. ஆனால் மணி அடிக்க, கோவில் வேலைகள் செய்ய ஆளில்லை. தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள் வந்தாலும் எடுக்க ரெடி. இந்த செய்தி தென் பகுதி போனால், சவூதி போறவன், உங்க வந்து நிப்பான்.

கிழக்கில், ஒரு கோவிலில், இந்துவாக வேலை செய்து, ஒரு இஸ்லாமியர் பிடிபட்ட கதை தெரியும் தானே. அவர் பொட்டு, விபூதியுடன் வீதியால் வேலை முடிந்து போகும் போது, போலீஸ் காரர்கள் ID கேட்டதால் மாட்டினார்.

இருந்தாலும், அவர் எதுவும் பூசிக்க கொண்டு போவது, எங்கே வேலை செய்வது என்ற சுதந்திரம் கொண்டவர். அதிகாரிகளிடம் தனது சரியான அடையாளத்தினையே சமர்ப்பித்தார் என அவரில் எந்த தவறும் இல்லை என நீதிமன்று விடுவித்தது. 

ஆகவே, பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து பார்த்தால், மும்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் புரியும்.

முன்பு தமிழர்கள் சிங்களம் படிதோம். அரச, தனியார் வேலைகளின் பின்னால் ஓடியதால். இப்ப, தமிழர்கள் லண்டன், டொரோண்டோ, சிட்னி, மெல்போர்ன், நியூயார்க் எண்டு வேலை தேடுகினம் எல்லோ. 

உந்த ஸ்ரீ லங்கன் வேலைகள் யாருக்கு வேணுமப்பா எண்ட மாதிரி திரியினம் கண்டியளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.

உண்மைதான் கொழும்பார்.

ஆனாலும் சும்மா வரேல்ல, சிங்கள சிறீ எழுத்தை எதிர்பதில் தொடங்கி அடிபட்டு, சண்டை போட்டு தானே அந்த அங்கீகாரம் வந்தது.

இன்று சிங்களம் படித்தால் தான் அரச வேலை என்ற நிலை மாறி, தமிழும் படிக்கவேண்டும் என்ற நிலை.

இன்றைய நிலையை மாத்தி, தமது மொழிவாதம் பேசும், பழைய நிலைக்கு கொண்டு போக இனவாதிகளால் முடியாது.

முடியுமாயின், சிங்களம் தமக்கென்று தனிநாடு அடைந்த பின்பே சாத்தியம்.

முடிந்தால் அடைந்து பார்க்கட்டும். 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.