Jump to content

நடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fire-story_0_0-720x433.jpeg

நடிகையை பார்க்க, இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்த்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்றுமுன்தினம் (24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

தீக்காயத்திற்கு உள்ளன யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே மாலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

http://athavannews.com/நடிகையை-பார்க்க-இந்தியா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்த அபலை பெண்.
இவரை முன்னமேயே தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு  படிப்பறிவின் நிலை உளவள மன  ஆற்றல்  கல்வியும் சேர்த்தே படிப்பிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 19:19, ரதி said:

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

On 25/5/2020 at 19:04, பெருமாள் said:

அந்தளவுக்கு  படிப்பறிவின் நிலை உளவள மன  ஆற்றல்  கல்வியும் சேர்த்தே படிப்பிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு .

உப்பிடியான மண்டை லூசானதுகள் இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

Link to comment
Share on other sites

On 25/5/2020 at 19:19, ரதி said:

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்றவர்களும், குழந்தை பாலருந்தும் நேரம் மறந்து சின்னத்திரை பார்ப்பது நம்மஊரிலும் நடக்கிறது.

26 வயசுப் பெட்டையின் ஆத்மா சாந்தியடைய, அந்த தென்னிந்திய சின்னத்திரை நடிகையைச் செத்தவீட்டில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். :100_pray:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒழுங்காக விசாரனை செய்ய வேணும்.வேறை பிரச்சனையோ தெரியாது .இந்தக்காலத்தில் யாரை நம்புவது என்டு தெரியாது.26 வயதுப் பெண் ஏதோ மிட்டாய் கேட்ட மாதிரி கொஞ்சம் நம்ப சிரமமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எல்லாம் ஒரு கனநேரத்து முடிவுதான்.விசர்ப்பெட்டை..... எவ்வளவுபேர் கை  கால்  கண் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்குதுகள்....இதுகளுக்கு எல்லாம் கொழுப்பு கூடிப்போச்சு ......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான மண்டை லூசானதுகள் இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

கொறோனா நேரத்தில், உலகமே முடங்கிப் போயிருக்கும் போது.....

அந்தப் பெட்டைக்கு வந்த, ஆசையை பாருங்கோவன். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இருந்தும் பலன் இல்லை

இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டியளோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதெல்லாம் இருந்தும் பலன் இல்லை

இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டியளோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது 

அதுதான் நல்லது.அப்பதான் நாங்கள் ஆடு கோழி வளரத்து காசு பாக்கலாம்.

Link to comment
Share on other sites

இஞ்ச சிலபேர், முதியவர்கள் உட்பட, சினிமா நடிகைகளின்ற படங்களை போட்டு அடிக்கிற கூத்தை விடவா உந்தபிள்ளை பெரிசாசெய்து போட்டுது, சொல்லப்போனால் எல்லோரும் (சில தறுதலை பெண்டுகளும்) சேர்ந்து இந்த பெண்ணை கொலைசெய்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 03:04, பெருமாள் said:

அந்தளவுக்கு  படிப்பறிவின் நிலை உளவள மன  ஆற்றல்  கல்வியும் சேர்த்தே படிப்பிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு .

இதுதான் உண்மை..நான் ஒவ்வொரு வருடமும் ஊருக்கு போவதுண்டு..அங்கே எவ்வளவு தூரம் பெண்கள் படித்து மிகவும் திறமையனவர்களாக, பல இடங்களில் முக்கியமான பதவிகளில் வேலைபார்த்து வந்தாலும், இன்னமும் பெரும்பாலான பெண்களின் மனமுதிர்ச்சி என்பது சிறுவட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அது கொஞ்சம் மாறவேண்டும். 

என்னைப்பொறுத்தவரை.  பாடசாலைகளில் இந்த மனநலம்பற்றிய அறிவை கற்பித்தல் மிகவும் அவசியம்.. இந்த பழையமாணவ சங்கங்கள் தேவையில்லாமல் கட்டடங்களை கட்டாமல் மாணவர்களின் மன ஆற்றல், உளரீதியான தைரியம், சுயகைத்தொழில் முயற்சிகளை பற்றிய பட்டறைகளை அதிகம் நடத்தினால் சமுதாயம் நன்மை பெறும்

On 26/5/2020 at 03:19, ரதி said:

26 வயசுப் பெட்டையை  கல்யாணம் கட்டி கொடுக்காமல் வீட்டில வைத்திருந்தால் இப்படித்தான் ...வர ,வர யாழ்ப்பாணம் இந்தியாவை விட கேவலமாய் போய்க்கிட்டு இருக்கு 

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும், திருமணம் செய்து கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதுதான் உண்மை..நான் ஒவ்வொரு வருடமும் ஊருக்கு போவதுண்டு..அங்கே எவ்வளவு தூரம் பெண்கள் படித்து மிகவும் திறமையனவர்களாக, பல இடங்களில் முக்கியமான பதவிகளில் வேலைபார்த்து வந்தாலும், இன்னமும் பெரும்பாலான பெண்களின் மனமுதிர்ச்சி என்பது சிறுவட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அது கொஞ்சம் மாறவேண்டும். 

என்னைப்பொறுத்தவரை.  பாடசாலைகளில் இந்த மனநலம்பற்றிய அறிவை கற்பித்தல் மிகவும் அவசியம்.. இந்த பழையமாணவ சங்கங்கள் தேவையில்லாமல் கட்டடங்களை கட்டாமல் மாணவர்களின் மன ஆற்றல், உளரீதியான தைரியம், சுயகைத்தொழில் முயற்சிகளை பற்றிய பட்டறைகளை அதிகம் நடத்தினால் சமுதாயம் நன்மை பெறும்

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும், திருமணம் செய்து கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? 

உண்மை தான் .
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும், திருமணம் செய்து கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? 

👍

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

திருமணம் செய்து கொடுக்க வழியிருந்தால் எந்தப்பெற்றோரும்  பெரும்பாலும்.   அதனைத்தான் நாடுவார்கள்.. ஆனால் வழியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

சீதனம் என்று கொடுக்கவும் வேண்டும்.🥵

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.