Jump to content

பூதாகரமாக மாறிவரும் புலிகள் பணம் பெற்றதாக த.தே.ம.முன்னணி பிரமுகர் கூறிய விவகாரம்!


Recommended Posts

உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அந்த போராட்டத்தில் தங்களை அகுதியாக்கிய மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும்படியான கருத்துக்களை அண்மையில் சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறி களத்திலும், புலத்திலும் பாரிய எதிர்வினையாற்றப்பட்ட நிலையில், தற்பொழுது த.தே.ம.முன்னியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/143952?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

ஊடகத்துக்கான பண்பு யாதெனில் ஒரு செய்தியை முழுமையாக ஒளிபரப்புதல் வேண்டும். சிங்களத்துக்கு செம்பு தூக்குவோருக்கு ஆதரவாக வெட்டியொட்டி ஒளிபரப்புதல் கூடாது. ஐபீசீயும் சிங்களஅரசின் ஊதுகுழலாகிவிட்டதா?

கப்பிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முழுமையான பதிவை யாராவது தரவேற்றம் செய்தால் மட்டுமே உரையாடலின்  உண்மையான நோக்கம் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமதாசா அரசிடமும், மகிந்த அரசிடமும் தமிழீழ விடுதலை புலிகள் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுள்ளதாக உள்ளகவேலை பார்த்தவர்கள் கூறி உள்ளார்கள். 

நாம் எமது கண்ணால் காணாத ஒன்றை உண்மை என்றும் சொல்ல இயலாது, மறுக்கவும் இயலாது. ஆனால், இவை எல்லாம் இப்போது விவாத பொருளாகி எமது நேரம், சக்தியை வீண்விரயம் செய்யப்படவேண்டுமா?

போர் நிறைவடைந்து ஆயுதங்களும் மெளனிக்கப்பட்டுவிட்டது. 

பழைய பூராயங்களை ஆராய்வதைவிடுத்து இப்போது மக்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறவும், வாழ்க்கை செழிக்கவும் நேரம், சக்தியை செலவு செய்தால் சிறப்பு.

Link to comment
Share on other sites

7 hours ago, nochchi said:

ஊடகத்துக்கான பண்பு யாதெனில் ஒரு செய்தியை முழுமையாக ஒளிபரப்புதல் வேண்டும். சிங்களத்துக்கு செம்பு தூக்குவோருக்கு ஆதரவாக வெட்டியொட்டி ஒளிபரப்புதல் கூடாது. ஐபீசீயும் சிங்களஅரசின் ஊதுகுழலாகிவிட்டதா?

கப்பிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முழுமையான பதிவை யாராவது தரவேற்றம் செய்தால் மட்டுமே உரையாடலின்  உண்மையான நோக்கம் புரியும்.

நியாயமான ஆதங்கம்.

ஆனா, இங்க போராளிகளைப் பற்றி காண்டீபன் பயன்படுத்தும் சொல்லுகள் நல்லதல்ல.

அது தான் சர்ச்சைக்கு காரணம்னு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gowin said:

நியாயமான ஆதங்கம்.

ஆனா, இங்க போராளிகளைப் பற்றி காண்டீபன் பயன்படுத்தும் சொல்லுகள் நல்லதல்ல.

அது தான் சர்ச்சைக்கு காரணம்னு நினைக்கிறன்.

கள உறவே உண்மைதான்!

உயிரீகம் புரிந்து உறங்காது எம்மை உயிர்பித்துக்கொண்டிருப்போரையும்  இன்றும் பல்வேறு துன்பஙகளைச் சுமந்து விலைபோகாது வாழும் மறவர்களையும் புண்டுத்தும் சொற்பிரயோகங்களை யார் பயன்படுத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டும்.  இங்கே நான் சுட்டியிருப்பது ஐபீசீயின் சகுனி வேலையை மட்டுமே.  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 26/5/2020 at 12:12, nochchi said:

உயிரீகம் புரிந்து உறங்காது எம்மை உயிர்பித்துக்கொண்டிருப்போரையும்  இன்றும் பல்வேறு துன்பஙகளைச் சுமந்து விலைபோகாது வாழும் மறவர்களையும் புண்டுத்தும் சொற்பிரயோகங்களை யார் பயன்படுத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டும்.

காண்டீபனின் பேச்சு ஒரு குழப்பவாதியின் பேச்சு போல இருக்கு.
கஜேந்திரகுமார் கட்சியின் சுமந்திரன் காண்டீபன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.