Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில் தளபதி சூசை சீமானை தொடர்ந்து போராட வேண்டுகிறார்.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு இட்லி ஒட்டுமொத்த இடமெல்லாம் புகையுது 

தமிழ் தாய் மகன் நகைச்சுவை மன்னன் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சீமான்  ஒருமுறை ஆடுமேய்ப்பது அரசாங்க வேலையாக சேர்க்கணும் என்றார்  பலரும் திட்டினார்கள் ஆனால் சமீபத்தில்  நியூசிலாந்து ஆடுகளை ரொபோ நாய் மேய்கிறது 5g  அலைவரிசையியில் அந்த ரொபோ நாயை கட்டுப்படுத்துவது மூன்றாம் உலகநாட்டில் உள்ள குறைந்த ஊதிய சம்பளத்தில் உள்ள ஒருவர் . இங்கு ஆடு மேய்ப்பது  கவுரவமான தொழிலாய் மாறுகிறது .

சீமான் சொன்னவைகளை பார்த்து சிரித்தார்கள்.ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சீமான் சொன்னவைகளை பின்பற்றுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சாப்பிட்டாரோ இல்லையோ.. எனி நம்மாக்கள் செய்து சாப்பிடுவாங்கள்..

இதோ உள்ளீட்டு குழிப்பணியாரம் செய்யும் முறை.. இதை இட்லி சட்டியில் வைச்சு செய்தால்.. கறி இட்லி. அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

தம்பி  படம்  போடேக்க  சிரிப்பு  வரேல்லயா  திரும்ப  திரும்ப  முட்டாள்  எண்டத  நிருப்பிச்சுக்கொண்டு. உங்கட  மான்  வந்திருக்கிறது. 203 துப்பாக்கி, ஆரம்ப காலங்களில்  தளபதிகளும்,  பின்னர்  மெய்ப்பாதுகாவலர்களும்  வைத்திருந்தார்கள். எந்த பயிற்சி முகாமிலும்  சூட்டு பயிற்சிக்கு  கொடுப்பதில்லை 

என்ன நந்தன் 
உங்களை கிங் எண்டெல்லாவோ நினைச்சன் ,அடுத்தவனை கிண்டலடிக்க போய் நீங்களும் பிழையாய் அல்லவோ எழுதுகிறீர்கள் , .203 துப்பாக்கியோ ....? ஒரு வேளை போராளிகள் இப்படிச்சொல்லித்தான் உங்களுக்கு பயிற்சி தந்தவினமோ, துப்பாக்கியின் பெயர் அதுவல்ல கீழே பொருத்தியிருக்கும் Grenade launcher தான் M 203 (Single shot 40mm) .
துப்பாக்கியின் பெயர் M16A1, கண்ணை கட்டிக்கொண்டு துப்பாக்கியை கழட்டி பூட்டுமளவுக்கு பயிற்சியளித்த புலிகள் துப்பாக்கியின் பெயரை கூட ஒழுங்காக சொல்லித்தரவில்லையோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இல்லை  இயக்கத்தில்  அது  203 தான்

விக்கிபீடியா, கூகில்  அப்ப இல்ல

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் சீமானின் அரசியல் கருத்துக்களுக்கு பதில்கருத்து வைக்க துப்பற்ற கூட்டம் ஆமைக்கறி இட்லிக் கறி ஏகே 74 என்பதை வைத்து நாம் தமிழர் கட்சியை பலவீனப் படுத்த முனைகின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகள் வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாராய உற்பத்தி  மற்றும்  வியாபாரம்,. செர்லைட் தொடக்கம் மீதேன் ஈதேன் அணு உலை ஒப்பந்தம் நீட் தேர்வு  தமிழர் அல்லாதோருக்கு தமிழ்நாட்டில் அரசு பணிகள் ,  மணற்கொள்ளை தொடக்கம்  நீர் நில வளச் சுரண்டல் , ஆறு குளம் குட்டைகள் அழிப்பு என அனைத்தும் திராவிடக் கட்சிகளின் ஒப்புதலுடனேயே நடந்தது. இத்தோடு மேலும் ஒன்று மாநிலத்தில் தி மு க ஆட்சி மத்தியல் தி மு க கூட்டணி காங்கிரஸ் ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்தது. இவற்றை எல்லாம் அம்பலப் படுத்தும் சீமானின் அரசியலுக்கு எதிர்க்கருத்து தமிழகத்தில் வைக்க  முடியாது.  ஆமாம் நாங்கள் இவற்றை செய்தோம் என்று திராவிடக் கட்சிகளால் சொல்லவா முடியும் ? அதனால் ஆமைக் கறி இட்லிக் கறி போன்ற அற்தமற்ற விசயங்களை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. 

சீமான் முனனெடுககும் பல அரசியல் பிரச்சரங்களில் ஒன்று தான் ஈழ இனவழிப்பு குறித்த விசயம். ஆனால் நம்வருக்கு சீமான் ஈழத்தை பற்றி மட்டும் பேசி அரசியல் செய்வதாக ஒரு பிரமை.. ஈழத்து இலக்கிய புடுங்கிகள் புத்திஜீவி புடுங்கிகள் மற்றும் போராட்ட முடிவுக்கு பின்னர் புலிகள் போராட்டம் புலிக்கொடி மாவீரர்கள் போன்ற அடயாளங்களை குத்தகைக்கு எடுத்த புடுங்கிகளுக்கு வேறு எவரும் பேசக் கூடாது. ஏனெனில் இவர்கள் பேச விரும்பாத விசயத்தை வேறு எவரும் பேசக் கூடாது. புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு, சிங்களவருடன் சேர்ந்து வாழ்வது அதிஸ்டம் என்று கூத்துமைப்பு பிதற்றுவதும், போராட்டம் முடிந்த கதை என்று தி மு க போன்ற கட்சிகள் பேசுவதும் இவர்களுக்கு போதுமான அரசியல். தற்போதைக்கு ஈழத்தில் நடந்த கெடுமையும் இனவழிப்பும் தொடர்ந்து பொதுவெளியில் உயிரப்புடன் வைத்திருப்பதில் நாம் தமிழர் கட்சியை  பங்கை போல் வேறு அரசியல் கட்சிகளை சுட்டிக்காட்ட முடியாது.

1 hour ago, Kaalee said:

நீண்டகாலமாகவே எனக்கொரு கேள்வி, புலிகளுக்கு படகோடினார்கள் , உதவி செய்தார்கள் என்று சொல்லி பல ஈழத்தமிழர்கள் இன்றுவரை இந்திய சிறைகளில் வாடுகிறார்கள். அது எப்படி புலிகளில் இருந்தேன் என்று சொல்லித்திரியும் சோபாசத்தி போன்றோர் எவ்வித பிரச்சனையும் இன்றி இந்தியா போய்வருகிறார்கள்?

புலிகள் இயக்கத்தில் இருந்த பின்னர் கொரில்லா நாவல் மூலம் இலக்கியத் தளத்திற்கு இந்திய ஊடகங்கள் நகர்த்தியது. அவ் அடயாளத்தில் இருந்து பின் வருவது போல் பல பதில்கள் தேவைப்பட்டது. அவைகள் எல்லாம்  போராட்ட  காலத்தில்  இடது சாரி வட்டம் இலக்கிய வட்டம் மதம்  சாதி தலித்தியம் என பல கோணத்தில் தேவைப்பட்ட நீண்ட கதைகள். பாகிஸ்த்தான் மல்ரிபரல் போல இந்திய மல்ரிபரல் இது. 

Quote

இப்போது L.T.T.E அமைப்பு குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் உங்கள் கருத்து என்ன ?

சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது?

இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை.

இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

பையன் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமக்கு விருப்பமான கட்சிக்களுக்கு ஆதரவு அளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் திராவிட திருடன், திராவிட சொம்பு என்று கூறும் நீ்ங்கள் அடுத்தவர் நாட்டின் அரிசியலில் தலையிடும் சீமானின் சொம்பு என்று கூறலாம் தானே.  அவர்கள் தமது நாட்டு அரசியலை சட்டபூர்வமாக செய்யும் போது பக்கத்து நாடான எமக்கு அவர்கள் அரசியலில் தலையிட என்ன உரிமை உள்ளது. அது அவர்களின் அரசியல்.  என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும்  நான் மரியாதையுடன் பார்க்கிறேன். ஆனால் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன். 

எமது ஈழ தமிழர் பிரச்சனைக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எமக்கு எதையும் சீமானால் படுங்க முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். ஆனால் அவர் ஈழத்த்தை வைத்து அரசியல் செய்வது வெறும்  அரசியல் விளையாட்டு. தமிழகத்தில் திமுக. அதிமுக என்று பிரிந்த பின்னர் திமுக வுக்கு எதிராக எம்ஜியாரின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதற்காக அவர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டு தான் இந்த திமுக வுக்கு எதிரான பிரச்சாரம். ஜெயல்லிதா இல்லாத நிலையில்  திமுகவுக்கு எதிரான வாக்குகளை இழுத்து பதவிக்கு வரலாம் என்று அவர் கனவு காண்கின்றார். அவ்வளவு தான். . அதனால் தான் ஜெயல‍லிதாவின் இறப்புக்கு பின்னர் அவர் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். செத்து போன கருணாநிதியை எப்போதும் வசைபாடும் அவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தூக்கில்  போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அப்போது சபாநாயகராக இருந்து வாக்கெடுப்பு நடத்தி  நிறைவேற்றிய அவரது மாமனார்  காளிமுத்துவை பற்றி வாயே திறப்பதில்லை.

ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன. 

துல்ப‌ன் உங்க‌ளுக்கு  நுனா அண்ணாவும் , குசா தாத்தாவும் ந‌ல்ல‌ விள‌க்க‌ம் அளித்து இருக்கின‌ம் /

என‌க்கும் நாக‌ரிக‌ம் ப‌ற்றி ந‌ல்லாவே தெரியும் , என் ம‌ன‌சில் திராவிட‌ கூட்ட‌ம் பிராடுக‌ள் மாதிரி தான் தெரிகிறார்க‌ள் ஏன் என்றால் அவ‌ர்க‌ளுக்கு என்று ஒரு கொள்கை இல்லை , இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு இது தான் திராவிட‌ம் 😁/

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

பையன் உங்களுக்கு அப்படி தெரிவது போல்  தமிழக மக்களுக்கு  சீமானும் சேர்த்து  பிராடாக தெரிகிறார். அதனால் தான் அவர்கள் வாக்களிக்க வில்லை.  அது தமிழக மக்களின் பிரச்சனை. எமக்கு வாக்களிக்க கூட உரிமை இல்லை. அவர்களின் பிரச்சனையை அவர்களே பார்த்து கொள்வார்கள். 

இங்கிருந்து சீமானுக்கோ வேறு எவருக்கோ சொம்பு தூக்க வேண்டிய அவசியமும் அதற்கான உரிமையும் கூட எமக்கில்லை. அது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது. சென்ற வருடம் கூட டென்மார்க் வந்தேன். டென்மார்க்  அழகான நாடு. அதை அனுபவியுங்கள். கொப்பன்க்ஹேகன் ஐரோப்பாவில் மிக அழகான நகரங்களில் ஒன்று. அப்படியான நாட்டில் வாழ கொடுத்து வைத்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற ஏதாவது செய்யுங்கள். அதுவே உங்களுக்கு கை கொடுக்கும். 

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

அரசியல் கட்சி என்றால் எதிர்கட்சிகளை சாடுவது தான் உலகில் எங்கும் நடக்கிறது. சுவிசில் நடக்கவில்லையா அல்லது கனடாவில் நடக்கவில்லையா??

இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே??

சீமான் ஒரு போதும் சொல்லவும் இல்லை. அது சாத்தியமும் இல்லை.  அப்படி யாராவது நினைப்பார்கள் எனவும் நினைக்கவில்லை. ஈழதமிழர்கள் தமிழ் நாட்டில் தலைமை மாற வேண்டும் என சீமானுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள். மாற்றங்கள்  ஏதாவது நடக்குமாக இல்லையா என சீமார் ஆட்சிக்கு வந்த பிறகு தான் சொல்லலாம்.
சீமானின் ஆயிரத்துக்கு மேற்பட்ட காணொளிகள் கருத்தாளம் மிக்கவையாக நீண்ட காலநோக்கு கொண்டவைகளாக இருப்பவைகளை விமர்சிக்க யாருக்கும் அறிவு இல்லையோ என எண்ண தோன்றுகிறது.

நுணாவிலான் நான் கூறுவது ஒன்று தான். ஈழதமிழராகிய நாம் அவர்களின் அரசியிலில் தலையிடுவது தேவையற்றது.  அது  ராஜ தந்திமும் அல்ல.  தமிழக தமிழருக்கு அவரவருக்கு பிடித்த கட்சிக்கு வாக்களிக்கும் ஆதரவளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் அவர் இவனின் சொம்பு அவனின் சொம்பு என்றால் இங்கிருந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதும் அதனுள் தான் அடங்கும். ஆனால் இங்கிருந்து அடுத்தவன் நாட்டு அரசியலில் அங்குள்ள ஒருவருக்கு சொம்பு தூக்குவது தேவையற்றது. 

எமக்கு காலாகாலமாக உதவி செய்தவர்கள் அங்கு உள்ளார்கள். அவர்களை கூட சீமானின் குறுகிய அரசியலுக்காக  பகைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. 

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

  தமிழ்நாட்டு கட்சிகளால் ஈழத்தமிழருக்கு எதுவுமே நடக்கா விட்டாலும் சீமான் இன்றும் ஈழத்தமிழருக்கு நடந்த அவலங்களை பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்றார் அல்லது எடுத்துச் சொல்கின்றார்.எத்தனையோ தமிழ்நாட்டு உறவுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனை என்னவென்றே தெரியாத நிலையில் சீமானின் பங்கு அளப்பெரியதாகவே தெரிகின்றது.அதிமுக எம்ஜிஆர் தவிர,திமுக எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையை ஊறுகாய் போல் தொட்டு சென்று விட்டு  மூடிமறைத்தார்களே தவிர வேறெதுவுமில்லை. 

எமது இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்தால் ஏன் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எமக்கு தேவைப்படுகின்றார்கள்?

சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கொஞ்ச நாட்களில் ஈழத்தமிழருக்கு பிரச்சனைகளே இல்லையென்று புத்தகத்தை மூடி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 நீங்கள் மாற்றுக்கருத்து,விவாதம் எனும் போர்வையில் யதார்த்தம் இல்லாமல் கருத்து வைப்பவர்.

குமாரசாமி தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் 1985 இலேயே பாரிய ஆதரவு இருந்த‍து.  தமிழகத்தின் பல சிறிய கிராமங்களில் 1984 / 85 காலப்பகுதியில் எவ்வாறு ஆதரவு இருந்த‍து என்பதை நன்றாக‍ அறிந்தவன் நான். புலிகளுக்காக நிதி திரட்டும் பல  இசை நிகழ்வுகளே பகீரங்கமாக 1985 /86 களில் நடைபெற்றது. 1991 ல் எம்மவரே அதை கெடுத்து குட்டி சுவராக்கும் வரை அந்த ஆதரவு இருந்த‍து. அதன் பின்னர் கூட  பல  ஈழ அனுதாபிகள் புலிகளை ஆதரித்து கைதாகி சிறைக்கு சென்றனர். அப்போது சீமான் சின்ன பிள்ளை அல்ல. 1966 ல் பிறந்த சீமானுக்கு அப்போது 35 - 40 வயது தானே. இன்று மேடையேறி தெரு சண்டியன் போல் கண்டவர்களை எல்லாம் திட்டி திரியும் சீமான் அன்று வெட்டியாக தானே இருந்தார் ஏன் அப்போது போராடவில்லை. 2009 ன் பின்னர் புலிகள் இல்லாத காலப்பகுதியில் அங்கு சட்டதில் தளர்வு ஏற்பட்ட பின்னர் அரசியல் செய்ய சீமானுக்கு உள்ள உரிமையை நான் கேள்வி கேட்கவில்லை.  அது அவரது உரிமை. ஆனால் தான் தான் எல்லாம் வெட்டி விழுத்தினேன் மற்றவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று என்று மேடைகளில் தொண்டை கிழிய தெரு சண்டியன் போல் கத்த தேவையில்லை.  தமிழகத்தில் வவாழும் மக்கள் மிக தெளிவாக இருப்பதை இட்டு நான் மகிழ்வடைகிறேன். அங்கு வாழும் மக்களுக்கு ஒரு சலூட்.  அதே போல் எமது தாயகத்தில் வாழும் மக்களும் மிக தெளிவாக உள்ளனர். 

இதற்க்குள் சம் சும் எப்படி வந்தார்கள் . மருந்து மாத்திரை எடுப்பது போல் நீங்கள் எபோதும் சம் சும்மை சாப்பாட்டு முன்பு ஒருமுறை சாப்பாட்டிற்கு பின்பு ஒரு முறை திட்டுவது உங்கள் வாடிக்கை.  இங்கு சம் சும்மை திட்டுவபர்களிடம் நான் கேட்பது 2009 க்கு முன்பு அரசியல் செய்து தப்பு தாளம் ஆடியவர்களிடம் இப்படி உரிமையுடன்  கேட்டிருந்தால் சம் சும் போன்றவரகள் எம்மை ஏமாற்றும் நிலை வந்திருக்காது. யதார்த்தைப்பற்றி பேசும் உங்களுக்கு யதார்த்தம் என்றால் என்ன என்றே தெரியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பையன் உங்களுக்கு அப்படி தெரிவது போல்  தமிழக மக்களுக்கு  சீமானும் சேர்த்து  பிராடாக தெரிகிறார். அதனால் தான் அவர்கள் வாக்களிக்க வில்லை.  அது தமிழக மக்களின் பிரச்சனை. எமக்கு வாக்களிக்க கூட உரிமை இல்லை. அவர்களின் பிரச்சனையை அவர்களே பார்த்து கொள்வார்கள். 

இங்கிருந்து சீமானுக்கோ வேறு எவருக்கோ சொம்பு தூக்க வேண்டிய அவசியமும் அதற்கான உரிமையும் கூட எமக்கில்லை. அது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது. சென்ற வருடம் கூட டென்மார்க் வந்தேன். டென்மார்க்  அழகான நாடு. அதை அனுபவியுங்கள். கொப்பன்க்ஹேகன் ஐரோப்பாவில் மிக அழகான நகரங்களில் ஒன்று. அப்படியான நாட்டில் வாழ கொடுத்து வைத்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற ஏதாவது செய்யுங்கள். அதுவே உங்களுக்கு கை கொடுக்கும். 

உங்க‌ளின் பார்வை முற்றிலும் த‌வ‌று /
நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தொட‌ங்கி இப்ப‌ தான் 10வ‌ருட‌ம் முடிந்து இருக்கு / 50 வ‌ருட‌ திராவிட‌ க‌ட்சியோடு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை ஒப்பிட்டு பார்க்க‌ வேண்டாம் , உங்க‌ளின் இந்த‌ ப‌திவுக்கு இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ த‌மிழ‌க‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு எப்ப‌டி இருக்கும் என்று /

ஓட்டுக்கு காசு குடுக்காம‌ திராவிட‌ க‌ட்சிக‌ளால் தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ முடியாது /

ராஜீவ் காந்தி எல்லாம் எங்க‌ட‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிட‌லாம் , இந்திய‌ம் எம் இன‌த்தை அழிக்க‌லாம் , எம் சொந்த‌ உற‌வுக‌ளின் அர‌சிய‌லில் நாம் த‌லையிட‌க்  கூடாது என்று நீங்க‌ள் எழுதுவ‌து வேடிக்கையாய் இருக்கு /

உங்க‌ளுக்கு த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ப‌ற்றிய‌ புரித‌ல் பெரிசா இல்ல‌ ,

த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் சீமானை இந்த‌  ப‌த்து ஆண்டு புரிந்த‌ ப‌டியால் தான் கிட்ட‌ த‌ட்ட‌ 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள்  நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌வை ,  

துல்ப‌ன் நீங்க‌ள் என்ன ‌ எழுதுறீங்க‌ள்  என்று தெரியாம‌ எழுதிட்டு இருக்கிறீங்க‌ள் /

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வு இல்லாம‌ த‌மிழீழ‌ம் கிடைக்க‌ப் போர‌து இல்லை , 

அதுக்கு தான் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளை த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் மெது மெதுவாக‌ ம‌க்க‌ளுக்கு  புரிய‌ வைக்கிறார் /

த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரும் மாற்ற‌ங்க‌ள் நாளுக்கு நாள்  நிக‌ழ்ந்து கொண்டு இருக்கு , க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ அக்க‌ம் ப‌க்க‌ம் என்ன‌ ந‌ட‌க்குது என்று /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் உதிரிக் கட்சியாக இருக்கும் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு போதும் தனித்துப் போட்டியிட்டு அரசியல் அதிகாரங்களைப் பெறப்போவதுமில்லை. தமிழ் நாட்டை ஆளப்போவதுமில்லை. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதும், வேறு மாநிலத்தவர்களை எதிர்ப்பதும் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுத் தராது என்பதுதான் கடந்த 10 வருட சீமானின் அரசியல் சொல்கின்றது.

 விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். 

இந்தியாவின் அழுத்தம் இல்லாது ஈழத் தமிழருக்கு எதுவும் கிடைக்காது. சீமான் சங்கிகளுடன் கூட்டு வைத்தாவது எதையாவது செய்ய முயன்றால் நல்லது!😀

Quote

இந்தியா ஒரு உடனடி அயல்நாடு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யும். அது தெற்காசிய பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். அந்த வகையில் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி. ஒரு விடயம் தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொண்டால் அதன் பின்னர் அதனை எதிர்த்து நிற்றல் என்பதற்கு பொருள் இல்லை. அதன் பின்னரும் அதனை எதிர்ப்பது என்பது, அதனுடன் மோதல் நிலையை கடைப்பிடிப்பதாகும். விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு பாதையைத்தான் தெரிவு செய்தனர். அந்தப் பாதை வெற்றியளிக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் அமைப்பை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு கருத்துண்டு. அது உண்மை. ஆனால் இந்தியாவிடம் அதனை எதிர்பாக்கக் கூடிய தார்மீக பொறுப்பு தமிழர்களிடம் இருந்ததா என்னும் கேள்வியை நம்மால் தாண்டிச் செல்ல முடியாது. அதே போன்று இறுதி யுத்தத்தின் திசைவழியை மாற்றியமைக்கக் கூடிய ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான் என்பதில் ராஜபக்ச தலைமையிலான கொழும்பும் தெளிவாகவே இருந்தது. ‘கோட்டாவின் யுத்தம்’ – என்னும் நூலில் இந்த விடயம் துலக்கமாக விபரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஆற்றல் தொடர்பில் கொழும்பிடம் இருந்தது போன்றதொரு தெளிவு தமிழர் பக்கத்தில் இருக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

தமிழ் நாட்டில் உதிரிக் கட்சியாக இருக்கும் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு போதும் தனித்துப் போட்டியிட்டு அரசியல் அதிகாரங்களைப் பெறப்போவதுமில்லை. தமிழ் நாட்டை ஆளப்போவதுமில்லை. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதும், வேறு மாநிலத்தவர்களை எதிர்ப்பதும் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுத் தராது என்பதுதான் கடந்த 10 வருட சீமானின் அரசியல் சொல்கின்றது.

 விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். 

இந்தியாவின் அழுத்தம் இல்லாது ஈழத் தமிழருக்கு எதுவும் கிடைக்காது. சீமான் சங்கிகளுடன் கூட்டு வைத்தாவது எதையாவது செய்ய முயன்றால் நல்லது!😀

 கிருப‌ன் அண்ணா , உங்க‌ளின் ஆதார‌ம் இல்லா குற்ற‌ சாட்டுக்கு உங்க‌ளை விட‌ வ‌ய‌து குறைந்த‌ இளைஞ‌ன் சொல்லுவ‌தை கேலுங்கோ , நாம் த‌மிழ‌ர் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌வும்  ம‌ற்றும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்காக‌வும் என்ன‌ செய்தார்க‌ள் என்ப‌த‌ 5நிமிட‌த்தில் தெரிந்து கொள்ள‌லாம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இஞ்ச கனபேருக்கு சீமான் ஊரெல்லாம் மாவீரர்,  புலிகள்,  தலைவர் என்று கூறித்திரிவது வயித்தெரிச்சலை உண்டுபண்ணுகிறது. அதனை நேரடியாகக் கிண்டலடிப்பதற்குத் துணிவில்லை. ஆதலால் சீமான் சாப்பிட்டதை வைச்சு தங்கட முதுகை தாதாங்களே சொறிஞ்சு புளகாங்கிதம் அடையினம். 😏

இன்று இந்தியாவில் ஈழத் தமிழரை நினைவுபடுத்தும் ஒரே ஒரு இயக்கம் நாம் தமிழர் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாடு ஈழத் தமிழரை மறந்தே போயிருக்கும்.👍

இந்தத் தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் கூட்டம் அடிக்கும் நக்கலுக்கு அளவேயில்லை. 😏

புலிகளின் விருந்தோம்பலை புகழ்ந்து உயர்வாகக் கூறுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை 😏

அதுசரி, சீமான் எதைச் சாப்பிட்டாலும் இவங்களுக்கு  என்ன பிரச்சனை 🤔

அருமையான‌ ப‌திவு வாழ்த்துக்க‌ள் 👏

Link to comment
Share on other sites

43 minutes ago, கிருபன் said:

தமிழ் நாட்டில் உதிரிக் கட்சியாக இருக்கும் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு போதும் தனித்துப் போட்டியிட்டு அரசியல் அதிகாரங்களைப் பெறப்போவதுமில்லை. தமிழ் நாட்டை ஆளப்போவதுமில்லை. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதும், வேறு மாநிலத்தவர்களை எதிர்ப்பதும் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுத் தராது என்பதுதான் கடந்த 10 வருட சீமானின் அரசியல் சொல்கின்றது.

 விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். 

இந்தியாவின் அழுத்தம் இல்லாது ஈழத் தமிழருக்கு எதுவும் கிடைக்காது. சீமான் சங்கிகளுடன் கூட்டு வைத்தாவது எதையாவது செய்ய முயன்றால் நல்லது!😀

கிருபன் நீங்கள் சுட்டிக்காட்டிய  கட்டுரையில் பல ஜதார்த்தங்கள்  உள்ளன. எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அது தான் உண்மை. போரட்டத்தின்  உணர்சசி அரசியலை ஒரு அத்திவாரமாக மட்டுமே  கொள்ள வேண்டும். அதையே  முழுமையாக நம்பியது தான் போராட்டத்தை நடத்தியவர்கள் செய்த தவறு.

அரசியல் என்பதைப் பார்தால் எமது அரசியல் தலைவர்களும் மக்களை ஏமாற்றினார்கள். ஆயுதப் போராளிகளும் மக்களை ஏமாற்றினார் கள் என்பதே ஜதார்த்தம். ஆயுதப் போராட்டதில் மாவீர்களின் தியாகங்கள் உருவாக்கிய பலத்தை புலிகள் அரசியல்த்துறை சிதைத்தது என்பதே உண்மை. அரசியல்துறை சிறப்பாக  செயற்பட்டிருந்தால் மாவீரர்களின் ஈகத்தால் தமிழருக்கு எதிர்காலத்திலாவது தமிழீழக் கிடைக்கக்கூடிய ஒரு அத்திவாரம் போடப்பட்டிருக்கும். அதுபற்றி விமர்சிப்பது தவறு என்று யாராவது இங்கு கூறுவார்கள் என்றால் ஒரு பலமும் இல்லாத வெறும் பயல்களான சம் சும்மை விமர்சிப்பதிலும் எந்த பயனும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழகத்தில் வவாழும் மக்கள் மிக தெளிவாக இருப்பதை இட்டு நான் மகிழ்வடைகிறேன். அங்கு வாழும் மக்களுக்கு ஒரு சலூட்.  அதே போல் எமது தாயகத்தில் வாழும் மக்களும் மிக தெளிவாக உள்ளனர். 

இதற்க்குள் சம் சும் எப்படி வந்தார்கள் . மருந்து மாத்திரை எடுப்பது போல் நீங்கள் எபோதும் சம் சும்மை சாப்பாட்டு முன்பு ஒருமுறை சாப்பாட்டிற்கு பின்பு ஒரு முறை திட்டுவது உங்கள் வாடிக்கை. 

👍

1 hour ago, கிருபன் said:

தமிழ் நாட்டில் உதிரிக் கட்சியாக இருக்கும் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு போதும் தனித்துப் போட்டியிட்டு அரசியல் அதிகாரங்களைப் பெறப்போவதுமில்லை. தமிழ் நாட்டை ஆளப்போவதுமில்லை.

💯

தமிழ்நாட்டுக்கு முதல்வராக வருபவரை தெரிவு செய்வதில் வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்களின் வாக்குகளே முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ஐநா  தீர்மானம் ஒன்று  நிறைவேற்றினால் சீமான் தான் முதல்வர்.

1 hour ago, கிருபன் said:

சீமான் சங்கிகளுடன் கூட்டு வைத்தாவது எதையாவது செய்ய முயன்றால் நல்லது!😀

பாரதிய ஜனதா கட்சி தான் தனக்கு உதவிக்கு சீமானை இறக்கியதாக சொல்கிறார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து ஊட‌க‌ ச‌ந்திப்பில் க‌ல‌ந்து கொள்ளும் அண்ண‌ன் சீமான் எங்கை , ஊட‌க‌ ச‌ந்திப்பின் போது இட‌க்கு முட‌க்கா ஊட‌க‌விய‌ளாள‌ர்க‌ள் கேள்விக‌ள் கேப்பார்க‌ள் என்று பேட்டி குடுக்க‌ த‌ய‌ங்கும் திராவிட‌ம் எங்கை ?  

20200527-115250.png

அண்ண‌னின் இந்த‌ பேட்டியை பார்க்க‌ மிக‌வும் ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் /

இன்று இர‌வு பேட்டியை காண‌லாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை நான் இணைத்த‌ காணொளிக்கு கிருப‌ன் அண்ணாவின் ப‌தில‌ காணும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

பையன் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தமக்கு விருப்பமான கட்சிக்களுக்கு ஆதரவு அளிக்கும் உரிமை உள்ளது. அதை போய் திராவிட திருடன், திராவிட சொம்பு என்று கூறும் நீ்ங்கள் அடுத்தவர் நாட்டின் அரிசியலில் தலையிடும் சீமானின் சொம்பு என்று கூறலாம் தானே.  அவர்கள் தமது நாட்டு அரசியலை சட்டபூர்வமாக செய்யும் போது பக்கத்து நாடான எமக்கு அவர்கள் அரசியலில் தலையிட என்ன உரிமை உள்ளது. அது அவர்களின் அரசியல்.  என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும்  நான் மரியாதையுடன் பார்க்கிறேன். ஆனால் எவர் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன். 

எமது ஈழ தமிழர் பிரச்சனைக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எமக்கு எதையும் சீமானால் படுங்க முடியாது என்பது சீமானுக்கும் தெரியும். ஆனால் அவர் ஈழத்த்தை வைத்து அரசியல் செய்வது வெறும்  அரசியல் விளையாட்டு. தமிழகத்தில் திமுக. அதிமுக என்று பிரிந்த பின்னர் திமுக வுக்கு எதிராக எம்ஜியாரின் தொண்டர்களை தன்பக்கம் இழுப்பதற்காக அவர் செய்யும் அரசியல் சித்து விளையாட்டு தான் இந்த திமுக வுக்கு எதிரான பிரச்சாரம். ஜெயல்லிதா இல்லாத நிலையில்  திமுகவுக்கு எதிரான வாக்குகளை இழுத்து பதவிக்கு வரலாம் என்று அவர் கனவு காண்கின்றார். அவ்வளவு தான். . அதனால் தான் ஜெயல‍லிதாவின் இறப்புக்கு பின்னர் அவர் கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். செத்து போன கருணாநிதியை எப்போதும் வசைபாடும் அவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தூக்கில்  போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அப்போது சபாநாயகராக இருந்து வாக்கெடுப்பு நடத்தி  நிறைவேற்றிய அவரது மாமனார்  காளிமுத்துவை பற்றி வாயே திறப்பதில்லை.

ஈழத் தமிழரை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியாலும் எமக்கு எதுவும் செய்ய முடியாது. நாமே ஏதும் செய்தால் தான் உண்டு. சும்மா மண்குதிரைகளை நம்பி ஏமாறும் நிலையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே  தெரியும். ஒரு சில புலம்பெயர் சீமானின் சொம்புகள் தான் அப்படி முட்டாள்தனமான நம்பிக்கையை கொண்டுள்ளன. 

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை.

இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது.

அந்த நிலைமைக்கு காரணமானவர்களில், கருணாநிதியும் ஒருவர் என்று எமக்கு தெரியும்.

அதே நாட்டின் ஒருவர், குற்ற உணர்வில் எதுவும் பேசினால், அவர்கள் எம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று போட்டு தாக்குவது.

செய்தார்கள், வைகோவும், திருமாவும், திருமுருகனும். ஏன் லண்டன் தமிழர்கள், பாலுவையும், ஸ்டாலினையும் கூட லண்டன் அழைத்து உபசரித்து பேசினார்கள்.

நம்புவர்கள் நம்பி விட்டு போகட்டும்.... நம்பாதவர்கள் நம்பாமல் போகட்டும்... அது அவரவர் உரிமை.

அதுக்காக, உங்கள் விருப்பு, வெறுப்புகளை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாமே.

ஒரு கோஸ்ட்டி, கூட்டமைப்பினை சாடுகின்றது. இன்னோரு கோஸ்ட்டி கஜேந்திரகுமார் பின்னால் நிக்கும்.

மேலும் ஒரு கோஸ்ட்டி டக்லஸ் தான் பிதாமகன் என்று சொல்லும்.

கருணாவை விரும்பும் கோஸ்ட்டியோ, அவர் மூலமாக மகிந்தவை வளைத்து அலுவல் பார்க்கலாமே என்று சொல்லும்.

இன்னும் ஒரு கோஸ்ட்டியோ, சர்வதேசத்தினை நம்புவோம் என்று சொல்லும்.

அது அவரவர் விருப்பு வெறுப்பு. அனைவைரையும் நமது விருப்பு வெறுப்புக்குள் கொண்டுவரும் வேலை, ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத வேலை.

கிருபனுக்கும், நந்தனுக்கும், உங்களுக்கும் பிடிக்கவில்லை.

பையனுக்கு, நெடுகருக்கு, இசைக்கு, ஈழப்பிரியருக்கு, குமாரசாமியாருக்கு பிடிக்கிறது.

ஆனால், வேண்டுமென்றே, பதிவினை போட்டு, அடுத்தவர்கள் பைத்தியக்காரர்கள், நாம் விண்ணாதி விண்ணர்கள் என்று காட்டிக்கொள்வதில் ஏதோ பெருமை. 🤧

ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன். யாரும் தொப்பியை எடுத்துக் கொள்ள வேண்டாம். 🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

எங்கை நான் இணைத்த‌ காணொளிக்கு கிருப‌ன் அண்ணாவின் ப‌தில‌ காணும் 😁

வெறும் கட்சிப் பிரச்சாரக் காணொளிதானே😁

இப்படியான கட்சிப் பிரச்சாரக் காணொளிகள் பிரித்தானியாவில் தேர்தல் காலத்தில் அதிகம் வருவதுண்டு. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவது இரு பெரிய கட்சிகளில் ஒன்றுதான்.

உதிரிக் கட்சிகள் (நாம் தமிழர் போன்றவை) இரு பெரிய கட்சிகளில் ஒன்றை வெல்ல அல்லது தோற்க வைக்க முயலலாம். ஆனால் first-past-the-post நடைமுறையில் ஒரு ஆசனத்தைக் கூட எடுக்கமுடியாது. இவர்கள் தேர்தலில் போட்டியிடுவது எல்லாம் கிடைக்கும் அற்ப சொற்ப வாக்குகளை வைத்து பெரிய கட்சிகளுடன் பேரம் பேசத்தான்🤪

தாயகத்தில் உள்ள தமிழர்கள் தமிழகத்தின், புலம்பெயர் மக்களின் ஆதரவோடுதான் தீர்வு ஒன்றை எட்டமுடியும். அதற்கு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளினதும் ஆதரவு தேவை. உதிரிக் கட்சிகள் உணர்ச்சிக் கோஷங்களை போட்டு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது😀

56 minutes ago, Nathamuni said:

கிருபனுக்கும், நந்தனுக்கும், உங்களுக்கும் பிடிக்கவில்லை

2009 மாவீரர் தினத்திற்கு எக்செல் மண்டபத்திற்குப் போயிருந்தேன். தலைவரையும், தளபதிகளையும், ஆயிரமாயிரமாக வீரச்சாவடைந்த போராளிகளையும் நினைவுகூர்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு. ஆனால் செந்தமிழன் சீமான் (நேரடியாக வருவதற்கு அவருக்கு விஸா பல நாடுகள் கொடுப்பதில்லை) பேச்சு ஒளிபரப்பப்பட விசிலடிச்சான் குஞ்சுகள் அடித்த விசிலோடு வெளியே வந்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து சில மாதங்களிலேயே தலைவர் இருக்கிறார், வெளியே வருவார் என்று உசுப்பேத்துவர்களை அடியோடு பிடிப்பதில்லை. அப்படித்தான் சீமானின் சில்லறை அரசியலில் வெறுப்பு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

வெறும் கட்சிப் பிரச்சாரக் காணொளிதானே😁

இப்படியான கட்சிப் பிரச்சாரக் காணொளிகள் பிரித்தானியாவில் தேர்தல் காலத்தில் அதிகம் வருவதுண்டு. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவது இரு பெரிய கட்சிகளில் ஒன்றுதான்.

உதிரிக் கட்சிகள் (நாம் தமிழர் போன்றவை) இரு பெரிய கட்சிகளில் ஒன்றை வெல்ல அல்லது தோற்க வைக்க முயலலாம். ஆனால் first-past-the-post நடைமுறையில் ஒரு ஆசனத்தைக் கூட எடுக்கமுடியாது. இவர்கள் தேர்தலில் போட்டியிடுவது எல்லாம் கிடைக்கும் அற்ப சொற்ப வாக்குகளை வைத்து பெரிய கட்சிகளுடன் பேரம் பேசத்தான்🤪

நீங்கள் சொல்வது சரிதான்.

ஆனாலும், திமுக 1940 களில் ஆரம்பித்து ஆட்சியினை பிடித்தது 1967ல். பரிதாபகரமாக கலைஞர் கையில் வீழ்ந்து நாசமானது.

நாம் தமிழர் இன்று உதிரிக் கட்சியாக இருக்கலாம். ஆனால் ஆரம்பகால திமுக போல வளரும் கட்சி.

அது காலங்கள் எடுக்கலாம் என புரிந்து வைத்திருக்கிறது.

அவர்கள் வந்து எமக்கு ஏதாவது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், ஊழல் நிறைந்த தமிழகத்தின் மக்களுக்கு, அவர்களாவது ஏதாவது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பே எனது ஆதரவுக்கு காரணம்.

பலர் இங்கே, அவர்கள் ஈழத்துக்கு என்ன தான் செய்ய முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறார்களோ என்று தோன்றுகின்றது.

நான் இந்த வித சந்தர்பவாதங்களை விரும்புவதில்லை. தனது உரை எங்கே ஒலிபரப்பாகின்றது எனற புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அது வேறு நோக்கத்துடன் ஒலி பரப்பாகியிருக்கலாம்.

பின்னர் அவர் அந்த வகையில் செய்ய இணங்கவில்லை என்று அறிகிறேன்.

உங்கள் எரிச்சல் புரிந்தாலும், எய்தவர்கள் வேறு, அம்பு வேறு என்பதை அறிவீர்கள்.

ஆனாலும் இப்போது, சீமானுக்கு வெளிநாட்டு தமிழர்களில் பலர் குறித்த தெளிவுகள் வந்துள்ளது. ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தன. கனடா போயிருந்த போது, சிங்களவர்களை அழிக்கவேண்டும் வேண்டும் என ஆவேசமாக பேசி இருந்ததால், நாடு கடத்தப் பட்டார்.

விஜகாந்த்தை, தெலுங்கர் என்னடா நம்மை ஆளுவது என்று சொல்லி இருக்கிறார். நானும் உங்களை போலவே நினைத்து இருந்தேன்.

இப்போது, தெளிவுடன், தெலுங்கு அமைப்புகளுடன் பேசி, அவர்களது பயத்தினை போக்கி உள்ளதாக அறிகிறேன்.

இந்த விடயங்களில் அவர் பேச்சில் இப்போது முதிர்ச்சி தெரிகின்றது.

தாயகத்தில் உள்ள தமிழர்கள் தமிழகத்தின், புலம்பெயர் மக்களின் ஆதரவோடுதான் தீர்வு ஒன்றை எட்டமுடியும். அதற்கு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளினதும் ஆதரவு தேவை. உதிரிக் கட்சிகள் உணர்ச்சிக் கோஷங்களை போட்டு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது😀

மத்திய அரசு ஆணி ஒன்றும் புடுங்கப்போவதில்லை. சீனாவினை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது.

ஊழல் திமுகவின் குடுமி, காங்கிரஸிடம் மாட்டி இருந்ததால், 2009ல் எதுவுமே செய்யமுடியவில்லை. 

ஆமாம் சாமி போட்டும், கனிமொழி, ராசா சிறை சென்றதை தடுக்க முடியவில்லை.

அதே நிலையில் தான் இன்று அதிமுக மாட்டி தவிக்கிறது.

இரண்டுமே ஒன்றும் செய்ய முடியாது. பங்களாதேஷ் விவகாரத்தில், வங்கத்தின் முதல்வர் சித்தார்த்த சங்கர ரே இந்திரா காந்திக்கு சவால் விடும், நேர்மையும் துணிச்சலும் இருந்தது.

இங்கே அது இல்லை.  ஆகவே சீமானை, ஈழம் என்ற கண்ணாடியினை போட்டுக் கொண்டு பார்க்காமல், தமிழக அரசியல் என்று மட்டும் பாருங்கள்.

இறுதியில் தீர்வானது அமெரிக்க நலன்கள், சீன நலன்களால் பாதிப்புள்ளாகும் போது தான் கிடைக்கும்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்தில் இருந்தா கிருப‌ன் அண்ணா /
2005ம் ஆண்டு எம்ம‌வ‌ர்க‌ள் வன்னியில் ப‌ல‌மா இருந்த‌ போதும் கூட‌ சொன்னார்க‌ள் இந்தியா த‌லையிட்டு எம‌க்கு தீர்வு பெற்று த‌ற‌னும் என்று /
நீங்க‌ள் சொல்லும் திராவிட‌ க‌ட்சிக‌ள் அப்ப‌ என்ன‌ செய்தார்க‌ள் , 
2009ம் ஆண்டு எம் இன‌ம் அழிய‌ இந்த‌ ப‌த‌வியை வைத்து என்னால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று க‌ருணாநிதி சொன்ன‌த‌ ம‌ற‌ந்து போனிங்க‌லா ,

இப்ப‌ ஸ்ராலின் தானே எதிர் க‌ட்சி த‌லைவ‌ர் , ஏதாவ‌து ஈழ‌ம் ப‌ற்றி வாய் திற‌ந்தாரா , 

திமுக்கா
ஆதிமுக்கா இவ‌ர்க‌ளால் தான் முடியும் என்றால் இந்த‌ 11 ஆண்டில் என்ன‌த்த‌ இவ‌ர்க‌ள் செய்தார்க‌ள் , ப‌தில‌ சொல்லுங்கோ கிருப‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது சரிதான்.

ஆனாலும், திமுக 1940 களில் ஆரம்பித்து ஆட்சியினை பிடித்தது 1967ல். பரிதாபகரமாக கலைஞர் கையில் வீழ்ந்து நாசமானது.

நாம் தமிழர் இன்று உதிரிக் கட்சியாக இருக்கலாம். ஆனால் ஆரம்பகால திமுக போல வளரும் கட்சி.

அது காலங்கள் எடுக்கலாம் என புரிந்து வைத்திருக்கிறது.

அவர்கள் வந்து எமக்கு ஏதாவது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், ஊழல் நிறைந்த தமிழகத்தின் மக்களுக்கு, அவர்களாவது ஏதாவது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பே எனது ஆதரவுக்கு காரணம்.

பலர் இங்கே, அவர்கள் ஈழத்துக்கு என்ன தான் செய்ய முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறார்களோ என்று தோன்றுகின்றது.

2009 மாவீரர் தினத்திற்கு எக்செல் மண்டபத்திற்குப் போயிருந்தேன். தலைவரையும், தளபதிகளையும், ஆயிரமாயிரமாக வீரச்சாவடைந்த போராளிகளையும் நினைவுகூர்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு. ஆனால் செந்தமிழன் சீமான் (நேரடியாக வருவதற்கு அவருக்கு விஸா பல நாடுகள் கொடுப்பதில்லை) பேச்சு ஒளிபரப்பப்பட விசிலடிச்சான் குஞ்சுகள் அடித்த விசிலோடு வெளியே வந்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து சில மாதங்களிலேயே தலைவர் இருக்கிறார், வெளியே வருவார் என்று உசுப்பேத்துவர்களை அடியோடு பிடிப்பதில்லை. அப்படித்தான் சீமானின் சில்லறை அரசியலில் வெறுப்பு வந்தது.

நான் இந்த வித சந்தர்பவாதங்களை விரும்புவதில்லை. தனது உரை எங்கே ஒலிபரப்பாகின்றது எனற புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அது வேறு நோக்கத்துடன் ஒலி பரப்பாகியிருக்கலாம்.

பின்னர் அவர் அந்த வகையில் செய்ய இணங்கவில்லை என்று அறிகிறேன்.

உங்கள் எரிச்சல் புரிந்தாலும், எய்தவர்கள் வேறு, அம்பு வேறு என்பதை அறிவீர்கள்.

ஆனாலும் இப்போது, சீமானுக்கு வெளிநாட்டு தமிழர்களில் பலர் குறித்த தெளிவுகள் வந்துள்ளது. ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தன. கனடா போயிருந்த போது, சிங்களவர்களை அழிக்கவேண்டும் வேண்டும் என ஆவேசமாக பேசி இருந்ததால், நாடு கடத்தப் பட்டார்.

விஜகாந்த்தை, தெலுங்கர் என்னடா நம்மை ஆளுவது என்று சொல்லி இருக்கிறார். நானும் உங்களை போலவே நினைத்து இருந்தேன்.

இப்போது, தெளிவுடன், தெலுங்கு அமைப்புகளுடன் பேசி, அவர்களது பயத்தினை போக்கி உள்ளதாக அறிகிறேன்.

இந்த விடயங்களில் அவர் பேச்சில் இப்போது முதிர்ச்சி தெரிகின்றது.

தாயகத்தில் உள்ள தமிழர்கள் தமிழகத்தின், புலம்பெயர் மக்களின் ஆதரவோடுதான் தீர்வு ஒன்றை எட்டமுடியும். அதற்கு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளினதும் ஆதரவு தேவை. உதிரிக் கட்சிகள் உணர்ச்சிக் கோஷங்களை போட்டு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது😀

மத்திய அரசு ஆணி ஒன்றும் புடுங்கப்போவதில்லை. சீனாவினை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது.

ஊழல் திமுகவின் குடுமி, காங்கிரஸிடம் மாட்டி இருந்ததால், 2009ல் எதுவுமே செய்யமுடியவில்லை. 

ஆமாம் சாமி போட்டும், கனிமொழி, ராசா சிறை சென்றதை தடுக்க முடியவில்லை.

அதே நிலையில் தான் இன்று அதிமுக மாட்டி தவிக்கிறது.

இரண்டுமே ஒன்றும் செய்ய முடியாது. பங்களாதேஷ் விவகாரத்தில், வங்கத்தின் முதல்வர் சித்தார்த்த சங்கர ரே இந்திரா காந்திக்கு சவால் விடும், நேர்மையும் துணிச்சலும் இருந்தது.

இங்கே அது இல்லை.  ஆகவே சீமானை, ஈழம் என்ற கண்ணாடியினை போட்டுக் கொண்டு பார்க்காமல், தமிழக அரசியல் என்று மட்டும் பாருங்கள்.

இறுதியில் தீர்வானது அமெரிக்க நலன்கள், சீன நலன்களால் பாதிப்புள்ளாகும் போது தான் கிடைக்கும்.👋

பலர் நா த கட்சி வளர்ந்து வருகின்றது என்பதை விட வளரக் கூடாது என்பதில் அதிக கவனமாக உள்ளனர். 😏

விசித்திரமாக இருக்கிறது 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.