Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

19 நிமிடம் 30 வினாடிகளில் ஆமைக்கறி, உடும்புக்கறி வருகின்றது😆

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Iசின்ன வயதில் தமிழ் மொழிப் பாடப் புத்தகத்தில் நான் படித்த கதையொன்றை, செந்தமிழன் சீமான் இன்று ஞாபகப்படுத்திவிட்டார்:

ஒருவன் வெகுதூரம் பயணித்து, ஆற்றைக் கடந்து 
தனது மாமியாரின் வீட்டை அடைகிறான். அன்போடு வரவேற்கும் மாமி, ஓர் உணவுப் பண்டத்தை அவனுக்கு அளிக்கிறார். நல்ல பசியோடு இருக்கும் இவன் அந்தப் பண்டத்தைப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சுவையான இனிப்புக் கலவையுள்ளது. இவன் தனது வாழ்நாள்நாளில் அப்படியான பண்டத்தைப் பார்த்ததேயில்லை. அந்தப் பண்டத்தின் பெயர் என்னவென்ற இவன் கேட்க, மாமி 'கொழுக்கட்டை' என்கிறார். வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் அந்தப் பண்டத்தைச் செய்து தரச் சொல்லிக் கேட்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டவன், அந்தப் பண்டத்தின் பெயரை மறந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடு 'கொழுக்கட்டை... கொழுக்கட்டை' என உச்சரித்தவாறே வீடு திரும்புகிறான். ஆனால் ஆற்றைக் கடக்கும் போது 'ஆத்துக்கட்டை... ஆத்துக் கட்டை' என நாக்கும் ஞாபகமும் புரண்டு போகின்றன.

வீடு திரும்பியதும் மனைவியிடம் 'ஆத்துக்கட்டை' செய்து தரச் சொல்லிக் கேட்கிறான். மனைவியோ 'ஆத்துக்கட்டை' என்றொரு பண்டமே கிடையாது என்கிறாள். கோபமுற்ற இவன் மனைவியை அடித்துவிடுகிறான். அடி வாங்கிய மனைவியின் உடலில் வீக்கங்கள் ஏற்பட்டுகின்றன. அவள்  அழும்போது 'அய்யோ என்னுடைய உடலில் கொழுக்கட்டை மாதிரி வீக்கம் வந்துவிட்டதே' எனப் புலம்புகிறாள். 'அதுதான் கண்ணே அதுதான் கண்ணே' என இந்த மனிதன் உற்சாகமாகக் கூவுகிறான்.

இலங்கைக்கே உரிய, தமிழகத்தினருக்குத் தெரியவே தெரியாத 'மாலுபாண்' என்ற உணவைச் சீமான் சாப்பிட்டிருக்கலாம். அதுவும் இட்லி சைஸ் தானே. உள்ளே மீன் கலவையிருக்கும். கடல் கடக்கும்போது பெயர் மறந்துபோய் 'கறி இட்லி' என ஞாபகக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை 'மாலுபாண்' என்ற சிங்களச் சொல்லுக்கு 'கறி இட்லி' என்றுகூட அவராகவே தூய தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கலாம். உண்மையிலேயே அது மிகப் பொருத்தமான பெயர்தான். 

சும்மா சும்மா ஒருவரைக் கேலி செய்வது யாவருக்கும் எளிதான காரியமே, மாறாக நாம் அவரைப் புரிந்துகொள்ளவும் முயல வேண்டும்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200526-143144.png

இந்த‌ ப‌திவுக்கு க‌ண‌க்க‌ எழுத‌ தேவை இல்ல‌ இந்த‌ ப‌ட‌ம் ஒன்று போதும் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

20200526-143144.png

இந்த‌ ப‌திவுக்கு க‌ண‌க்க‌ எழுத‌ தேவை இல்ல‌ இந்த‌ ப‌ட‌ம் ஒன்று போதும் 😉

ஆமால்ல!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஆமால்ல!

 

 

மேல‌ ஒரு ப‌திவு தோழ‌ர் எழுதி இருக்கிறார் அதை இணைத்து இருக்கிறேன் , வாசித்து பாருங்கோ கிருப‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

மேல‌ ஒரு ப‌திவு தோழ‌ர் எழுதி இருக்கிறார் அதை இணைத்து இருக்கிறேன் , வாசித்து பாருங்கோ கிருப‌ன் அண்ணா 

முழுமையாகக் படிக்க முதலே மட்டு ஒருத்தர் தூக்கிட்டார் போலிருக்கே😑

கிடைத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு வீடியோ பார்த்தேன். அதையும் பாருங்கள்.😆

பெப்ரவரி 2008 இல் அண்ணன் சீமானை விமான ஊர்தியில் வரவழைத்த சேரா (சேரலாதன்) ஒரு படகில் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஹொலிவூட் திகில் படமாக ஒன்றை எடுக்க உதவியிருக்கும்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசனா இருக்கிறது பிரச்சனை இல்ல மெகா லூசனா இருக்கிறது தான் பிரச்சனை , ஆமா ஆமைக்கறி சாப்பிட்ட லண்டன் புண்ணியவான் யாரது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஊரில ஆமை.. உடும்பு சாப்பிடாத மாதிரி ஒரு படை கிளம்பி இருக்குது. இவை புலம்பெயர்ந்து ஊரை மறந்த படையாம். அவைக்கு தொழில் சீமான் வாயால என்ன விழுகுதுன்னு பார்த்திட்டே இருப்பது தான்.

இயக்கம்..காட்டுப்பன்றி.. உடும்பு.. ஆமை.. வெளவால்.. எல்லாம் சாப்பிடுறது தான். 

அடுத்தது.. ஒரு சிலது.. சோப்போட சோப் ஒட்டுதில்லையாம்.. அதிலும் நக்கல்.

ஊரில சன்லைட் சோப்யையே உடைய உடைய ஒட்டி ஒட்டி குளிச்சதுங்க.. இப்ப வெளிநாடுக்கு வந்திட்டு.. ஒட்டிப்பார்க்குதுகளாம் ஒட்டல்லையாம். 

சீமானை விட அவரை திட்டிறதுங்க காமடி தான் பெரிய காமடி. 😄😄

Link to comment
Share on other sites

சோபாசக்திக்கு இருந்த சரக்கு முடிஞ்சுது போல. ஆமைக்கறியில் இறங்கி இருக்கிறார்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 வயசென்ன.. 12 வயசில பங்கர் வெட்டினவங்களும் உண்டு. அந்த ரைமில.. சிலர் ஏஜென்சிகாரனை தேடிக்கிட்டு இருந்திருப்பார்கள்.. எந்த நாட்டுக்கு ஓடலாமின்னு. அவைங்க எல்லாம் இப்ப மூவிங் பங்கர அப்படின்னா.. என்னென்னு கூட கேட்கக் கூடும்.

நுணாவில் பகுதியில் நாவல் மரத்துக்கு வலை கட்டி.. வெளவால் பிடிச்சு சாப்பிட்ட மட்டுவில் பயிற்சி முகாம் போராளிகளுக்கு தெரிந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2008 பெப்ரவரியில் வந்த செய்திகளை ஊர்ப்புதினம் பகுதியில் பார்த்தேன்.

மன்னாரில் கடுஞ்சண்டை நடந்து தெற்கு அடம்பனை இராணுவம் பிடித்து முன்னேறிக்கொண்டிருந்த காலத்தில் அண்ணன் சீமானுக்கு விதவிதமாக ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி சமைக்க ஒரு பெரிய அணியும், அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் குறிப்பெடுக்க ஒருவரும், பண்டி வேட்டைக்குப் போய் 5 கிலோ சைஸ் பண்டியை கண்களாலேயே நிறுத்து வேட்டையாட ஒருத்தரையும், AK-47 சுட்டுப் பழக்க இன்னோர் அணியையும் இயக்கம் தமிழரின் விருந்தோம்பல் பண்பைக் காட்ட அமர்த்தியிருந்தது!

2009 இல் யுத்தம் தோல்வியில் முடிவடைந்தபோது எமது எதிர்காலம் சூனியமாகப் போய்விட்டதே என்று நாம் கவலைப்பட்ட தருணத்தில் அண்ணன் இனி ஆமைக்கறி சாப்பிடமுடியாதே என்று வருத்தப்பட்டிருப்பார்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

லூசனா இருக்கிறது பிரச்சனை இல்ல மெகா லூசனா இருக்கிறது தான் பிரச்சனை , ஆமா ஆமைக்கறி சாப்பிட்ட லண்டன் புண்ணியவான் யாரது

நான் ஊரில சாப்பிட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் ஊரில சாப்பிட்டிருக்கிறேன்.

 கறி இட்டலி பிரச்சனை இல்லை ஐயா!
அவையளுக்கு சொன்ன ஆள்தான் பிரச்சனை. tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமானுக்கு விதவிதமாக ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி சமைக்க ஒரு பெரிய அணியும், அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் குறிப்பெடுக்க ஒருவரும், பண்டி வேட்டைக்குப் போய் 5 கிலோ சைஸ் பண்டியை கண்களாலேயே நிறுத்து வேட்டையாட ஒருத்தரையும், AK-47 சுட்டுப் பழக்க இன்னோர் அணியையும் இயக்கம் தமிழரின் விருந்தோம்பல் பண்பைக் காட்ட அமர்த்தியிருந்தது!

 

சீமானுக்கு என்றில்லை.. வைகோவுக்கு ஹிந்தியப் படைகள் சுற்றி நிற்க.. தாக்குதல் நடத்த நடத்த சாப்பாடு போட்டுத்தான் இயக்கம் அனுப்பியது.

அதேபோல் 2002 க்குப் பின் பலர் தமிழகத்தில் இருந்து வன்னிக்கு வந்து போயிருக்கிறார்கள். 

சீமானுக்கு என்று விசேடமாக உணவு கொடுத்தார்களோ இல்லையோ.. நிச்சயம் பட்டினி போட்டிருக்கமாட்டார்கள். ஆமை.. உடும்பு.. இதெல்லாம் வன்னியில் சர்வ சாதாரணம். 

மேலும்.. கறி இட்லி என்பதும் புதிதல்ல. ஏலவே ஊரில் செய்வது தான்.  குறிப்பாக கறியாக சமைச்சு போர்க்களத்திற்கு கொண்டு போய் தொட்டுச் சாப்பிட்டிட்டு இருக்க முடியாது. அதனால்.. கறி இட்லி அவிச்சு சனம் அனுப்பியதுண்டு. குறிப்பாக ஆகாய கடல் வெளி சமரின் போது. குறிப்பாக ஆகாய கடல் வெளி சமர் காலத்தில் மக்களிடம் இருந்து இறைச்சிப் பொரியல்.. பலகாரங்கள்.. மற்றும் கறி இட்லி.. பன்.. இவை தான் அதிகம் விரும்பிப் பெறப்பட்டது. கள முனை போராளிகளுக்கு வழங்க. ஆகவே இவை சீமானுக்கு விசேட கவனிப்பாக பரிமாறப்பட்டிருக்காது. சாத்தியாமனது வழங்கப்பட்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா தமிழ்நாட்டில் சீமான் இல்லாவிட்டால் ஈழமக்களுக்கு பிரச்சனை ஒன்று இல்லை என்றே முடித்து வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சினிமா தமிழ்நாட்டில் சீமான் இல்லாவிட்டால் ஈழமக்களுக்கு பிரச்சனை ஒன்று இல்லை என்றே முடித்து வைத்திருப்பார்கள்.

சீமானின் ஈழ குறிப்பாக புலிகள் ஆதரவுக் குரலை.. நாம் தமிழரின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில்.. தமிழகத்தில்... திமுக.. திராவிடக் கட்சிகள்.. இடது சாரிகள்.. பெரியார் புகழ்பாடி அரசியல்வாதிகள்.. கருணாநிதி புகழ்பாடி அரசியல்வாதிகள்.. ராஜீவ் குடும்ப விசுவாசிகள்.. காங்கிரஸ் கட்சி.. விசுவாசிகள்.. தமிழக வளங்களை சுரட்டும் பெரிய நிறுவனங்கள்.. அரசியல்வாதிகள்.. என்று பெரிய ஒரு கூட்டம்..  இணைந்துள்ளது.

இத்தோடு தேசிய தலைவருக்கும் புலிகளுக்கும் சதா எதிர்வினையாற்றும் புலம்பெயர் புகழ்விரும்பிக் கூட்டமும் இணைந்துள்ளது. 

இவர்கள் தான் சமூக வலையில்.. சீமானின் வாயால் என்ன வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்து.. அதனை உள்வாங்கி மீள உமிழ்ந்து திரிவது. 

சீமானும்.. நாம் தமிழரும் இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு பயனிப்பதால்.. சீமான்.. இந்த சீப்பானதுகளுக்கு அஞ்ச மாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் ஊரில சாப்பிட்டிருக்கிறேன்.

அண்ணா நான் கேட்டது அந்த கூட சேர்ந்து சாப்பிட்டு,, இப்ப லண்டனில் இருக்கிற எருமை யாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

15 வயசென்ன.. 12 வயசில பங்கர் வெட்டினவங்களும் உண்டு. அந்த ரைமில.. சிலர் ஏஜென்சிகாரனை தேடிக்கிட்டு இருந்திருப்பார்கள்.. எந்த நாட்டுக்கு ஓடலாமின்னு. அவைங்க எல்லாம் இப்ப மூவிங் பங்கர அப்படின்னா.. என்னென்னு கூட கேட்கக் கூடும்.

நுணாவில் பகுதியில் நாவல் மரத்துக்கு வலை கட்டி.. வெளவால் பிடிச்சு சாப்பிட்ட மட்டுவில் பயிற்சி முகாம் போராளிகளுக்கு தெரிந்திருக்கும். 

சாரி டாக்டர் திரும்பவும் சரியான ஆளுடன் பிழையான  இடத்தில மோதுறிங்க

நுணாவில் ரஞ்சன் தெரியுமா பெம்மர் அடியில போட்டார். நாங்க  மட்டுவில்லில  90 ல் இருந்து மூணு  வருசம்  வண்டி ஓட்டிய ஆட்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது நல்லெண்ணங்கள் கொண்ட சீமைத்துரைகள் சீமானின் ஈழ அரசியலை விடுத்து பிற அரசியல் திட்டங்கள் பற்றி எதையுமே தங்கள் பொன்வாயை திறந்து சொல்ல மாட்டார்கள்.
ஊழல் மற்றும் கொள்ளையடிக்கும் கட்சிகளுக்கு துணை போகின்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

சாரி டாக்டர் திரும்பவும் சரியான ஆளுடன் பிழையான  இடத்தில மோதுறிங்க

நுணாவில் ரஞ்சன் தெரியுமா பெம்மர் அடியில போட்டார். நாங்க  மட்டுவில்லில  90 ல் இருந்து மூணு  வருசம்  வண்டி ஓட்டிய ஆட்கள் 

வண்டில் ஓட்டியும்.. பாப்பா வெளவால் பிடிச்சது தெரியாமல் போனது எப்படியோ..??!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிடுற ஆட்களில  ஏறி  வண்டி  ஓட்டாம  சரியான  தலைவன்  வழியில்  செல்லுங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

வண்டில் ஓட்டியும்.. பாப்பா வெளவால் பிடிச்சது தெரியாமல் போனது எப்படியோ..??!  

பாப்பா யாருக்கு  எதுக்கு பிடிச்சார்  எண்டு  அவரிட்டதான்  கேட்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

அம்பிடுற ஆட்களில  ஏறி  வண்டி  ஓட்டாம  சரியான  தலைவன்  வழியில்  செல்லுங்க

 

தலைவன் வழியில் செல்லுறன் என்றவனை தலைவன் வழிகாட்டல் இல்லாத இடத்தில் நிறுத்துவது மிக அவசியம். ஏன்னா.. தமிழனுக்கு அங்கு ஒரு பலம் இருக்குது. அதை இழக்க முடியாது. இழந்ததால் தான்.. 1987 இல் உருவான சூழலை.. 2009 இல் உருவாக்க முடியவில்லை.

சீமான் ஒரு சிறு துரும்பாக இருக்கட்டும். ஈழம் மிதந்து சென்று மறுகரையை அடைய. அதில் தப்பேதும் இல்லை.  ஈழத்தையும்.. ஈழத்துயரையும்.. ஈழப் போராட்டத்தையும் தலைமையையும் மறந்து திரியும்.. திராவிட.. காங்கிரஸ் முதலைகளை விட.. சீமான் எனும் சிற்றெறும்பும்.. சிறுதுரும்பும்.. எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.