Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Link to post
Share on other sites
 • Replies 777
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை. இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது. அந்த நிலைமைக்கு காரணமானவர்கள

இந்த திரி முடிஞ்சிட்டுதா  இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂. விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛. இணையவனும், நுணாவு

அன்புள்ள மருதங்கேணி,  ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அ

 • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருக்கும் என்ன பிரச்சனை என்றால் சீமானால் சிங்களவருடன் சண்டைபோட்டு தமிழ் ஈழம் பெற்றுத்தர முடியாது என்பதாகும்.

நான் உட்பட எல்லோரது தேவையும் பிரபாகரன் அவர்களது இடத்திலிருந்து யாராவது மிகவும் மூர்க்கமாக சிங்களத்தை எதிர்த்துப் போராடவேண்டும் நாம் எல்லோரும் எங்காவது வசதியான நாட்டிலிருந்து அஞ்சோ பத்தோ அனுப்பி வைச்சிட்டு அது சரியில்லை இது சரியில்லை என விமர்சனம் செய்யவேண்டும் அவ்வளவுதான் அதனால்தான் சீமான் மீது எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இவர் நடுவழியில் விட்டுட்டுப் போயிடுவாரோ என.

ஆனால் உண்மை என்னவென்றால் சீமானே யாரோ ஒருவரது நிகழ்சி நிரலுக்குத்தான் தாளம் போடுகிறார் அது விடுதலைப் புலிகள் எனத் தப்புக்கணக்குப் போடவேண்டாம். நிச்சயமாக அது இந்திய நடுவண் அரசின் உளவுத்துறையாகத்தான் இருக்கும். 

தேசியத் தலைவரைப் போல் வேறு யாரு உண்மையாக தமிழ் இனத்துக்குப் போராட இனிமேல் வரப்போவதில்லை. 

அதற்கு இடையில் யார் ஆமைக்கறி சாப்பிடால் என்ன ஆட்டுக்கல் சூப் குடித்தால் என்ன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ...
உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா?
அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே?

சீமான் செய்த பாவமோ என்னமோ 
நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம்.

நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சீமான் இப்படி பேசுறதுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பெரிய ஆதரவாக இருந்தீர்கள்?
இப்போதான் இதை பார்த்து நீங்கள் கொஞ்சம் மாறீவிட்தீர்கள் ...
சீலை எப்ப கொஞ்சம் விலகும் ... அப்படியே அள்ளி மாண்டஹத்தை வாங்கலாம் 
என்று காத்திருக்கும் உங்களுடன் பேசுவத்துக்கு என்று பெரிதாக எதுவுமே இல்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 2009ம் ஆண்டு சிறை க‌ழிவ‌றையில் க‌த‌றி அழுத‌ அண்ண‌ன் சீமான் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ...
உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா?
அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே?

சீமான் செய்த பாவமோ என்னமோ 
நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம்.

நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா 

11 hours ago, Maruthankerny said:

சீமான் இப்படி பேசுறதுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பெரிய ஆதரவாக இருந்தீர்கள்?
இப்போதான் இதை பார்த்து நீங்கள் கொஞ்சம் மாறீவிட்தீர்கள் ...
சீலை எப்ப கொஞ்சம் விலகும் ... அப்படியே அள்ளி மாண்டஹத்தை வாங்கலாம் 
என்று காத்திருக்கும் உங்களுடன் பேசுவத்துக்கு என்று பெரிதாக எதுவுமே இல்லை 

இவ்வளவு தானா😉 நான் இன்னும் மோசமாய் எதிர்பார்த்தேன் ....இனி மேல் உங்கள் கருத்தை எழுதி போட்டு அதற்கு கீழே இன்னார்🙂 மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என எழுதுங்கள் ...விசயம் முடிந்தது.
எவ்வளவு படிச்சென்ன,அமெரிக்காவில் இருந்தால் என்ன குணங்கள்  மட்டும் மாறவே மாறாது😠
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன‌டாப்பா ஒரு அடிக்கே இந்த‌ ஆட்ட‌மா , 

சீமானின் த‌ம்பிக‌ளுக்கு நாக‌ரிக‌ம் என்றால் என்ன‌ என்று ந‌ல்லாவே தெரியும் , நாக‌ரிக‌த்துக்கு அப்பால் சில‌ ச‌மைய‌ம் ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😉

சீமானின் த‌ம்பிக‌ள் அறிவாளி வேச‌ம் போடுப‌வ‌ர்கள் இல்ல‌ த‌ங்க‌ளை அறிவாளிக‌ள் போல் காட்டி கொள்வ‌தும் இல்லை 😉, அதோடு கொச‌ப்புக‌ளுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌தும் இல்லை 😉 ,

அண்ண‌ன் எவ் வ‌ழியோ த‌ம்பிக‌ளும் அவ் வ‌ழி தான் 💪😘👏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

இவ்வளவு தானா😉 நான் இன்னும் மோசமாய் எதிர்பார்த்தேன் ....இனி மேல் உங்கள் கருத்தை எழுதி போட்டு அதற்கு கீழே இன்னார்🙂 மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என எழுதுங்கள் ...விசயம் முடிந்தது.
எவ்வளவு படிச்சென்ன,அமெரிக்காவில் இருந்தால் என்ன குணங்கள்  மட்டும் மாறவே மாறாது😠
 
நீங்கள் எதிர்பார்க்கிறதுக்காக எல்லாம் மோசமான நிலைக்கு நாம் இறங்க வேண்டும் 
என்றில்லையே? நான் மேலே மூன்று கருத்து சீமானின் அரசியில் தளம் பற்றி எதிர்க்கருத்து 
இருப்பின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வாருங்கள் என்று எழுதி இருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் சீமான் பூரி சாப்பிட்டார் பொரிவிளாங்காய் சப்பிட்டார் 
என்று கனோடு இருந்தால் நீங்கள் ஓவருவராக வரிசை கட்டி வர இதை வேலையில்லாமல் 
கருத்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டுமா? 

எழுதிய பதிலை படிக்க உங்களுக்கு விக்கினம் இருக்கும்போது 
நான் மட்டும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமா?

எனக்கு சீமான் வன்னியில் தோசை சாப்பிடாரா? பிட்டு சாப்பிடாரா?
என்பது தேவை இல்லை ... அரசியல் களத்தில் அவர் என்ன செய்கிறார் 
அவருடைய கடைசி என்ன செய்கிறது என்பதே தேவையானது.

உங்களிடம் ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் வாருங்கள் 
தொடர்ந்தும் விவாதிக்கலாம். 
சீமான் கடவுள் தப்பே இருக்காது என்ற பிற்போக்கு தனமோ அப்படி தவறு 
இருப்பின் மூடி வைத்துக்கொண்டு வக்ககாலத்து வாங்கும் மனநிலையில் நான் இல்லை 
உங்களிடம் எதிர் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அன்புள்ள மருதங்கேணி, 

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள்.

சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும்

சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா

சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா

சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது.

புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன்.

பணிவுடன்,

பகலவன்

குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.

Edited by பகலவன்
 • Like 5
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ப‌க‌லவ‌ன் அண்ணா உங்க‌ளின் ப‌திவில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் இருப்ப‌து தெரியுது , இது நீங்க‌ள் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரியாம‌ல் எழுதின‌தா தெரியுது /

நீங்க‌ள் ம‌ருத‌ங்கேணி அண்ணாவிட‌ம் கேக்க‌ இருக்கும் கேள்வியை நேர‌டியாக‌வே அண்ண‌ன் சீமானிட‌ம் கேக்க‌லாம் , அத‌ற்கு அண்ண‌ன் சீமான் த‌குந்த‌ விள‌க்க‌ம் அளிப்பார்  எப்ப‌வும் /

சூசை அண்ணா போன் ப‌ண்ணின‌ போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் , க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும் , 2009ம் ஆண்டு நீங்க‌ள் தாய‌க‌த்தில் இறுதி போர் வ‌ரை இருந்து இருந்தா த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை /

மேலை நான் இணைத்த‌ காணொளியை பாருங்க‌ள் 2009ம் ஆண்டு என்ன‌ ந‌ட‌ந்த‌தென்ப‌தை(  ம‌ணி செந்தில் அண்ண‌ன் வ‌டிவாய் விள‌க்கி சொல்லுகிறார் )

அண்ண‌ன் சீமானோடு 2009ம் ஆண்டில் இருந்து ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அண்ண‌ன் சீமானோடு தான் ப‌ய‌ணிக்கின‌ம் /

உங்க‌ளின் இந்த‌ கேள்விக்கு ஒரு சில‌ ம‌ணித்தியாள‌த்தில் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரிந்து கொள்ள‌லாம் , அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌ள் முன்னால் போராளிக‌ள் தொட்டு இன்னும் ப‌ல‌ர் ,

அவையை தொட‌ர்வு கொண்டா உண்மை நில‌வ‌ர‌த்தை உட‌ன‌ சொல்லுவின‌ம் /

முன்பு ஒரு திரியில்  உங்க‌ளிட‌ன் சாள்ஸ் அண்ணா ப‌ற்றி கேட்டு இருந்தேன் அத‌ற்கு இன்றும் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ வில்லை , பொது வெளியில் எழுத‌ விரும்பா விட்டால் த‌னி ம‌ட‌லில் கூட‌ அதை தெரிவித்து இருக்க‌லாம் /
ச‌ரி விடுங்கோ 😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது தான் யாழிலும் ப‌ல‌ருடைய‌ வேலை ஹா ஹா 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

 • Like 2
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

சூசை அண்ணா போன் ப‌ண்ணின‌ போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் , க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும் , 2009ம் ஆண்டு நீங்க‌ள் தாய‌க‌த்தில் இறுதி போர் வ‌ரை இருந்து இருந்தா த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை /

அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. 

இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். 

எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. 

சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.

சந்தோஷுடன் பேசியும் இருக்கிறேன்.

உங்களின் தமிழ் உணர்வையும் பற்றையும் மதிக்கிறேன். அதற்காக கண்மூடித்தனமாக நம்பிக்கைகளும், உணர்வுபூர்வமான முடிவுகளும் உங்கள் தேடலை மட்டுப்படுத்திவிடும்.

 • Like 3
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 

97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

எனக்கு அவை தேவையும் இல்லை. 

Edited by பகலவன்
 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகலவன் said:

அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. 

இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். 

எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. 

சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌னிமொழி ம‌ற்றும் வைக்கோ இவ‌ர்க‌ளின் தொலைபேசி நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து மே 18க்கு ஒரு வார‌ம் முத‌லே  ,

அண்ண‌ன் சீமானுக்கு சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ என்ன‌ த‌ய‌க்க‌ம் , வைக்கோ க‌ருணாநிதி போல் அண்ண‌ன் சீமான் அப்ப‌ அர‌சிய‌ல் வாதி இல்லை , ப‌ட‌ இய‌க்குன‌ர் , உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டி பெரிய‌ பொருப்பில் இருந்த‌வ‌ர்க‌ள் சும்மா இருக்க‌ , ஒரு ப‌த‌வி ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ண‌ க‌தைக்க‌ என்ன‌ இருக்கு ,  அப்ப‌டி க‌தைக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்சு இருந்தா க‌தைத்து இருப்பார் , இத‌ என்னால் உறுதியாய் சொல்ல‌ முடியும் , 

இனி ப‌ழைய‌ செய்திக‌ளை கில‌ற‌  பெரிசா விரும்ப‌ வில்லை , 2009ம் ஆண்டு கூடுத‌லா‌ அண்ண‌ன் சீமானின் நாட்க‌ள்  சிறையில் ,  உண்மையை அண்ண‌ன் சீமான் பேச‌ ஏதாவ‌து பொய்வ‌ழ‌க்கு போட்டு அண்ண‌ன் சீமானை உள்ளை த‌ள்ளுவ‌தில் க‌ருணாநிதி ச‌ரியாய் செய‌ல் ப‌ட்டார் , அண்ணன் சீமானின் குர‌ல் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து க‌ருணாநிதியால் 2009ம் ஆண்டு ,

2008ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் ஈசியா எடுக்க‌லாம் , கிடைத்த‌தும் இந்த‌ திரியில் இணைக்கிறேன் , 

உங்க‌ளின் கோவ‌ம் க‌ருணாநிதி  வைக்கோ  ராம‌தாஸ் திருமாள‌வ‌ன்  இவ‌ர்க‌ள் மேல்  தான் இருக்க‌னும் , 
அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் பேசின‌து எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் ,

நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றிய‌து திராவிட‌ம் , 2008ம் ஆண்டு இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானே ஒரு திரியில் எழுதினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் என்று , அப்ப‌ என்னை பார்த்து சிரித்தார்க‌ள் த‌ம்பி நீ சின்ன‌ பெடிய‌ன் உங்க‌ளுக்கு க‌லைஞ‌ரின் அர‌சிய‌ல் தெரியாது என்று , ச‌ரி அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் தான் ஆனால் க‌ருணாநிதி மீதான‌ என‌து க‌ணிப்பு மிக‌ ச‌ரி /

உங்க‌ளின் அடுத்த‌ ப‌திலை வாசித்து விட்டு என் ப‌திலை எழுதுகிறேன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

ஹ‌லோ கிருப‌ன் பெரிய‌ப்பா ந‌ல்ல‌ பைய‌னை கெட்ட‌ பைய‌னா  ஆக்கி போடாதைங்கோ 😁 

அண்ண‌ன் சீமானை இப்ப‌ எவ‌ள‌வு ந‌ம்புகிறேனோ அதே மாதிரி வைக்கோ ஜ‌யாவையும் அதிக‌ம் ந‌ம்பினேன் , 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கும் வைக்கோவை விட்டு கொடுத்த‌து இல்லை , பிற‌க்கு அவ‌ரின்  உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் தெரிய‌ வ‌ர‌ ம‌ற்றும் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ இவ‌ர் எல்லாம் ஒரு ஆளா என்று காரி துப்பும் அள‌வுக்கு இருந்த‌து வைக்கோவின் செய‌ல் பாடு /

2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

அப்ப‌ இருந்த‌ ந‌ம்பிக்கை அவ‌ர் மேல் அப்ப‌ இருந்த‌ ம‌ரியாதை எல்லாம் இப்ப‌ இல்லை 😉

Edited by பையன்26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

14 minutes ago, பையன்26 said:

2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை.

இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

வைக்கோவையும் அண்ண‌ன் சீமானையும் ஒரு த‌ட்டில் வைத்து பார்க்க‌ வேண்டாம் , ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை , ந‌ம்பிக்கையோடு சீமானை அண்ண‌ன் என்று அழைக்கிறேன் , நான் ம‌ட்டும் இல்லை இன்னும் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் /

அந்த‌ காணொளியில் அண்ண‌ன் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை ப‌ற்றி  பெரிசா பேசி இருக்காட்டியும் அவ‌ர் பேசின‌ ப‌ல‌ நூறு காணொளிக‌ளில் ஈழ‌ பிர‌ச்ச‌னை  ப‌ற்றி பேசி இருக்கிறார் பெரிய‌ ஊட‌க‌ங்க‌ளிலும் ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் சொல்லி இருக்கிறார் , 

இந்த‌ 11 வ‌ருட‌த்தில் எம்ம‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்தார்க‌ள் கிருப‌ன் அண்ணா , அதை முத‌ல் சொல்லுங்கோ 😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 

97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

எனக்கு அவை தேவையும் இல்லை. 

இந்த‌ ப‌திவு உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , இது தேவை இல்லா ப‌திவு இதை உங்க‌ளிட‌ம் இருந்து கொஞ்ச‌மும் எதிர் பார்க்க‌வும் இல்லை 🤔 , உங்க‌ளின் விவாத‌த்தை ப‌ற்றி மேலே விப‌ர‌மாக‌ எழுதி விட்டீங்ள் , அதை ப‌ற்றியான‌ விவாத‌ம் தான் இப்போது நாம் விவாதிக்கிறோம் 🤞,

த‌ம்பி ப‌ட‌ம் 2005 ம் ஆண்டு க‌ட‌சியில் எடுக்க‌ தொட‌ங்கிய‌ ப‌ட‌ம் , 

அத‌ற்கு முத‌ல் பூஜா த‌மிழ் திரைப் ப‌ட‌த்தில் ந‌டித்து இருக்கிறா , 2005 ச‌மாதான‌ கால‌ம் ,

இந்த‌ ப‌திவை நீங்க‌ள் முன்னால் போராளி என்று சொல்லி நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அடி ம‌ட்ட‌ தொண்ட‌ன் கூட‌ விவாதிக்கும் நிலை வ‌ந்தா , அந்த‌ தொண்ட‌ன் உங்க‌ளை பார்த்து கேட்டால் ந‌டேஷ‌ன் ஜ‌யா எம் போராட்ட‌த்தில் பெரிய‌ ப‌த‌வியில் இருந்து கொண்டு அவ‌ரால் எப்ப‌டி சிங்க‌ள‌த்தியோட‌ வாழ‌ முடிஞ்ச‌து என்றால் உங்க‌ளின் ப‌தில் என்ன‌வாய் இருக்கும் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா ,

பூஜாவை அண்ண‌ன் சீமான் த‌மிழ் திரைப்ப‌ட‌த்தில் அறிமுக‌ம் செய்து வைக்க‌ல‌  அத‌ற்கு முத‌லே அவா த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌ தொட‌ங்கி விட்டா ,

விஜ‌ய‌ல‌ச்சுமி ப‌ற்றிய‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா இந்த‌ திரியில் அவாவின் பெய‌ரை எழுதி இருக்க‌ மாட்டீங்க‌ள் /

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/5/2020 at 11:46, Maruthankerny said:

அது முழுதும் பொய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே .........
அதில் ஏதாவது சீமானின் கொள்கை பற்றியோ அல்லது எதிர்கால பொருளாதாரம் பற்றி 
பேச படுகிறதா? பேட்டிக்கு ஏன்னு அழைத்து நமீதாவை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் 
நமீதா பற்றித்தான் சொல்ல முடியும். 
சீமான் பேசி 1000 வீடியோ இருக்கிறது .... யாழ்களத்தில் சேர்வர் போதவில்லை திரியை நிறுத்துங்கள் 
என்று கேட்கப்பட்ட ஒரே திரி சீமான் பற்றியதுதான்.
இதில் ஒரு 10 நிமிட காணொளியை கொண்டு திரிகிறீர்களே? 
உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா?

ஆமைக்கறி 
கறி இட்லி இவற்றை நான் நம்பவே இல்லை இது பொய் என்பதில் எனக்கு 100% தெரிகிறது 
ஆனால் அப்படியொரு விம்பத்தை கட்ட வேண்டிய அரசியல் சூழல் சீமானுக்கு உண்டு 
சீமான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல .....2009 இன படுகொலைபின்பு அதை பார்த்து வலி கொண்ட 
ஒரு சாதாரண மனிதன் அதற்கு நீதி கேட்க ஒரு 3 பேரை உடன் சேர்ப்பது என்றாலும் ஒரு வியூகம் தேவை 
அதற்காக அது கட்ட படுகிறது.

தவிர சிலகாலம் முன்பு ஒரு வீடியோ வந்தது சீமான் நா. த கட்சியில் இருந்த 
ஒரு இளைஞனை தொலைபேசியில் திட்டுவது ....மிகவும் அருவெறுப்பாக இருந்தது 
நான் என்னிடம் இருக்கும் நா த ஈமெயில் எல்லாவற்றுக்கும் அதை கண்டித்து ஈமெயில் அனுப்பினேன்.
அதில் ஒரு மேதாவி போக்கும் ஒரு அதிகார தொனியும் இருந்தது.

சீமானின் அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இது தான் ஆரோக்கியமான விவாதம்.

சீமான் படுக்கும் போது என்ன கலர் சாரம் கட்டினார் 
என்ன சாப்பிட்டார் என்பது ஒரு தரம் தாழ்ந்த நிலை. 

நாங்கள் அறிவாளிகள் என்று காட்டுவதுக்கு அடுத்தவனை சொரியும் 
ஒரு அநாகரீகமாவே எனக்கு படுகிறது. நீங்கள்தான் அறிவாளிகள் என்பதை நானாகவே 
பலமுறை எழுதிவிட்டிருக்கிறேன் ........அதை இனி நீங்கள் நிரூபிக்க தேவை இல்லை.  

Super, thanks

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

நாம் தமிழர் அரசியலை நீங்கள் இன்னமும் சரியாகவே அறியவில்லை 
இப்படியான ஒரு குறைநிலையில் இருந்துகொண்டே உங்கள் கருத்த்துக்களை பகிர்க்கிறீர்கள் 
நாம் தமிழர் அரசியலின் ஒருபாகம் ஈழ விடுதலைதான்.
எங்களை போன்றவர்கள் நாம் தமிழரோடு பயணிப்பதுக்கும் காரணம் 
எங்கள் இலக்கு ஒன்று தான். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பகலவன் said:

அன்புள்ள மருதங்கேணி, 

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள்.

சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும்

சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா

சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா

சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது.

புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன்.

பணிவுடன்,

பகலவன்

குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.

கொன்ஸ்பிரசி தியரிகளின் பிராகாரம் பல சோடிப்புக்களை செய்யமுடியும் 
ஆனால் அவை முதலில் ஒன்றோடு ஒன்று பொருந்தியும் ஆகவேண்டும். 

வேள்பாரி முதல் ராஜேந்திர சோழன் தொடங்கி பிரபாகரன் வரை 
வரலாறை புரட்டினால் துரோகம்தான் பின்னால் இருந்து ஒவ்வரு 
தமிழ் ஆளுமையையும் குத்தி இருக்கிறது எனும்போது 

இன்னொரு துரோகம் பற்றி தமிழர்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும் என்பதில் 
எந்த குறைபாடும் இல்லை.

உங்களை ஆக்கபூர்வமான விவாதத்துக்கு வாருங்கள் என்றால் 
மூன்று பேருக்குள் நடந்த தொலைபேசி அழைப்புக்கு காரணம் கேட்டு வந்து இருக்கிறீர்கள் 
எனக்கு மூவரில் சூசையை தவிர்த்து (இந்திய இராணுவ நேரம் பலமுறை சந்தித்து இருக்கிறோம்)
வேறுயாரையும் எனக்கு நேரிலேயே தெரியாது அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்களா பேசினார்களா?
என்பது எனக்கு எவ்வாறு தெரிந்திருக்கும்?

ஆனால் எதோ ஒரு முடிச்சை இதன் மூலம் போட்டு இருக்கிறீர்கள் ...
அதுக்குள் ஏதும் இருக்க முடியுமா? என்று பார்க்க வேண்டியதாகின்றது.

உங்களின் மொத்த செய்தியின் தகவல் சீமான் ஒரு இந்திய உளவாளி என்றாகிறது.
ஆகவே சீமானை 100 வீதம் ஒரு இந்திய உளவாளியாகவே நானும் எண்ணிக்கொண்டு 
உங்கள் கதையை படிக்கிறேன் ....படிக்கும்போது எனக்கு பின்வரும் கேள்விகள் வருகின்றன 
இதுக்கு நீங்கள் பதில் தரும்போது ... நாம் இதை தொடரலாம். 

இந்திய உளவாளியான சீமானை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சூசை 
தொலைபேசியில் அழைக்கிறார் .......

கேள்வி 1
புலிகளை பற்றி உளவறிய வேண்டுமெனில் 
இப்போ தொலைபேசி அழைப்பை எடுத்து தேவையான செய்தியை சூசையிடம் இருந்து 
பெற வேண்டுமா? அல்லது தொலைபேசி அழைப்பை எடுக்காது விட வேண்டுமா? 

ஆனால் சூசை சந்தோஷ் என்று இன்னொருவரை தொடர்பு கொண்டு பேசுகிறார் 
சீமானுடன் பேச வேண்டியதை அவர் சந்தோசுடன் பேசுகிறார் ...... 
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தால் சூசை பேசியிருக்க கூடியதை 
சந்தோஷ் என்பவர் ஒலிப்பதிவு செய்கிறார் (இது சூசைக்கும் தெரிந்து இருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம்  நீங்கள் தெளிவாக எழுதவில்லை) 

கேள்வி 2
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தால் பேசி இருக்க கூடியதை 
சந்தோஷ் (இரண்டாம் நபர்)  என்பவர் ஏன் சீமானிடம் கொடுக்கும்போது வெளியிட வேண்டாம் என்று கேட்க்கிறார்?

கேள்வி 3
வெளியிடுவதுதான் சீமானின் நோக்கம் என்றால் 
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? 

நீங்கள் தள்ளி தள்ளி இருப்பதால் நாம்தமிழர் முன்னெடுக்கும் அரசியலும் தளத்தில் 
அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் உங்களுக்கு தெரியவில்லை. 
உங்களிடம் ஆதாரமாக ஏதும் இருந்தால் எழுதுங்கள் 
என்னிடம் இருக்கும் எல்லா நாம்தமிழருக்கும் ஈமெயில் அனுப்பி சீமானின் வண்டவாளத்தை 
புட்டு புட்டு வைக்கிறேன். விடுகதை விடுவதுபோல வந்து சந்தோஷ் இருக்கிறாரா? நிற்கிறாரா?
என்றால் எனக்கு எப்படி தெரியும்? சுபாஸ்சந்திரபோசே இருக்கிறாரா? இல்லையா? என்ற மர்மான கொன்பிரசி  கதைகள் வாழும் உலகமிது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்திய புலனாய்வு துறை தலையீடு இல்லாவிட்டால் இலங்கையில் போர் ஏற்பட்டு இருக்குமா என்பதே சந்தேகமே. தமிழர் சிங்களவர் இடையில் முறுகல் நிலமைகள் தோன்றினாலும் நாடு பொருளாதாரத்தில் முன்னேறி ஆசியாவில் மாபெரும் வளர்ச்சியை கண்டு இருக்கும் .

சீமானை இந்திய புலனாய்வு துறையின் ஆட்டுவிப்பில் இயங்குபவர் என கூறுவது எம்மவர்கள் வழமையாக ஆட்களுக்கு துரோகி பட்டம் கொடுத்து துரோகி முத்திரை குத்துவதற்கு ஒப்பானது.

இந்திய புலனாய்வு துறையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யார் செயற்படவில்லை என்று ஒருவராலும் நிறுவமுடியாது தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் உட்பட.

 • Like 1
Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.