Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

ஈசுவரா....

பிரபாகரன் படத்தினை முகப்பில் போட்டதுக்கே, அந்த வார விகடனை இலங்கையில் தடை செய்திருந்தார்கள், முந்திய, மகிந்தா அரசு.

இப்போது ஒரு வணிக இதழ், அப்படி ஒரு கேள்வியை கேட்கும், கேட்டாலும், அதனை எடிட் பண்ணி நீக்காமல் இருப்பார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா? 

சரி, தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவை.

சீமான் சரியில்லை.

குறணி முத்தராக, இருப்பதனை விட்டு, யார் சரி என்று சொல்லுங்கள். உங்களுடன் சேர்ந்து அவரையே ஆதரிக்கிறோம்.

ஒருவர் வந்து துவக்கு பத்தி சொல்கிறார். இனொருவர் வந்து அது தவறே என்கிறார். முதலில் வந்தவரை காணோம். பிறகு பார்த்தால், ஆவேசமாக வேறு கருத்துடன் வருகிறார்.

இன்னோருவர், அங்கே சூசை பக்கத்தில் நின்றேன் என்கிறார். எப்படி ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தேன் என்று சொல்லாதவரை, நாம் அவரை எப்படி நம்ப முடியும் என நினைக்க மறுக்கின்றார்.

இன்னோருவர், மோசமான துரோகத்தினை செய்தவரை வெளிப்படையாக ஆதரிப்பவர்.

இவை எல்லாம் பார்க்கும் போது, ஒரு புள்ளியில் ஏதோ ஒன்று இந்த எதிர்ப்பாளர்களை இணைக்கின்றது என்றே தோன்றுகின்றது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • Replies 777
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை. இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது. அந்த நிலைமைக்கு காரணமானவர்கள

ரதி

இந்த திரி முடிஞ்சிட்டுதா  இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂. விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛. இணையவனும், நுணாவு

பகலவன்

அன்புள்ள மருதங்கேணி,  ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அ

 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, உடையார் said:

பையன் அப்படியே கைவிட்டிருக்கலாம்

வ‌ண‌க்க‌ம் உடையார் ஜ‌யா , உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் , உங்க‌ளின் ஆத‌ங்க‌ம் புரிகிற‌து ,

நானும் க‌ட‌ந்து செல்ல‌வே விரும்பினேன் , ஆனால் இவ‌ர்க‌ள் விட்ட‌ பாடு இல்லை , 

நானும் அண்ண‌ன் சீமானை போல‌ எதையும் நேருக்கு நேர் சொல்லி போடுவேன் , இத‌ இசைக்க‌லைஞ‌ன் அண்ணாவும் 2013ம் ஆண்டு சொல்லி காட்டின‌வ‌ர்  பைய‌ன் அப்ப‌டி தான் என்று , 

மேல‌ ம‌ருத‌ங்கேணி அண்ணா எழுதின‌ மாதிரி காய்க்கிற‌ ம‌ர‌த்துக்கு தான் க‌ல் எறி விழும் , 

எம் இன‌த்தில் ஒருத‌ர் வ‌ள‌ந்து வ‌ருகிறார் என்றால் அது ஒரு சில‌ருக்கு பிடிக்காது , அண்ண‌ன் சீமான் சொன்ன‌ ப‌ல‌ ஆயிர‌ம் விடைய‌ங்க‌ள் இருக்க‌ /

சீமான் ஏன் 2009ம் ஆண்டு தொலைபேசி எடுக்க‌ வில்லை , சீமான் எப்ப‌டி அத‌ சொல்ல‌லாம் ,

ப‌த‌வில‌ இல்லாத‌ ஒருத‌ர‌ எம்ம‌வ‌ர்க‌ள் தொட‌ர்வு கொள்ள‌ இவ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து இருப்பின‌மா என்று யோசிச்சு பார்த்த‌ ம‌ன‌ம் சொல்லுது அது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை என்று , 2009ம் ஆண்டு அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை சிறையில் தான் , 

இதில் அண்ண‌ன் சீமான் சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்காம‌ இருந்தார் என்று க‌ட்டு க‌தை வ‌ருது இது முற்றிலும் பொய் என்ப‌து ப‌ல‌ருக்கு தெரியும் , சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ணும் போது அண்ண‌ன் சீமான் சிறையில் , இத‌ நான் ம‌ட்டும் சொல்ல‌ வில்லை , அண்ண‌ன் ம‌ணி செந்திலும் சொல்லி இருக்கிறார் , ம‌ணி செந்தில் இறுதி க‌ட்ட‌ போர் முடிந்த‌தும் அண்ண‌ன் சீமானை சிறையில் போய் ச‌ந்திக்கிறார் , இப்ப‌டி ப‌ல‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் இருக்க‌ க‌ட்டு க‌தை ஒரு போதும்  ந‌ன்மையை த‌ராது தீமையை தான் த‌ரும் 

இவ‌ர்க‌ள் யார் ச‌ட்ட‌ம் போட‌  அண்ண‌ன் சீமான் முன்னொடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்காட்டி ஓர‌மாய் ஒதுங்க‌ வேண்டிய‌து தானே 200ரூபாய் கூட்ட‌ம் த‌யாரிக்கும் காணொளிக‌ள் இணைக்கும் போது , 

என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் வெளியிட்ட‌ காணொளிக‌ளை இந்த‌ திரியில் நான் இணைத்தேன் , 

இதில் அண்ண‌ன் சீமானின் பெய‌ரை சாமான் என்று எழுதி த‌ன்னை தானே தாழ்த்தி கொள்ளுகிறார் , 
நான் ஆவ‌து எழுத்து பிழை விட்டு த‌ன்னும் என் மொழியை எழுதுகிறேன் , ஆனால் ப‌ல‌ரால் நான் எழுதுவ‌து கூட‌ அவ‌ர்க‌ளால் எழுத‌ முடியாது /

என்ர‌ எழுத்த‌ வைத்து த‌ப்பு க‌ண‌க்கு போட்டால் அவ‌ர்க‌ளின் அறியாமை என்று தான் சொல்லுவேன் , 

நான் த‌னி ஒருவ‌னாய் எதையும் எதிர் கொள்ளுவேன் 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

நான் த‌னி ஒருவ‌னாய் எதையும் எதிர் கொள்ளுவேன் 

பையா,

வேண்டுமென்றே மொக்கையாக பதிந்து இழுத்து அலம்பறை பண்ணுவது தெரிகின்றபடியால், அப்படியே விட்டு விடுங்கள்... பாருங்கள், விஜயலட்சுமியை, திமுக சொம்புகள் மொக்கை விடீயோக்களை இங்கே கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றதே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

பையா,

வேண்டுமென்றே மொக்கையாக பதிந்து இழுத்து அலம்பறை பண்ணுவது தெரிகின்றபடியால், அப்படியே விட்டு விடுங்கள்... 

அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு எத்த‌ன‌ த‌ட‌வை சிறைக்கு போனார் , என்ன‌ மாச‌ம் என்ன‌ திக‌தி போனார் ம‌று ப‌டியும் எப்ப‌ சிறைக்கு போனார் என்ர‌ விப‌ர‌ம் சீக்கிர‌ம் கிடைக்கும் அத‌ இந்த‌ திரியில் இணைத்து விட்டு இந்த‌ திரியை விட்டு  க‌ட‌ந்து செல்ல‌ போகிறேன் நாதா 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு எத்த‌ன‌ த‌ட‌வை சிறைக்கு போனார் , என்ன‌ மாச‌ம் என்ன‌ திக‌தி போனார் ம‌று ப‌டியும் எப்ப‌ சிறைக்கு போனார் என்ர‌ விப‌ர‌ம் சீக்கிர‌ம் கிடைக்கும் அத‌ இந்த‌ திரியில் இணைத்து விட்டு இந்த‌ திரியை விட்டு  க‌ட‌ந்து செல்ல‌ போகிறேன் நாதா 

தயவு செய்து மினக்கடாதீர்கள்.

கடந்து போன நானும், வேறு திரிகளில் பதியாத இசைக்கலைஞனும் வந்து பதியும் அளவுக்கு, நீங்கள் தனிமையில் போராடுகிறீர்கள்.

மினக்கெடாதீர்கள், உங்கள் நேரத்துக்கு பிரயோசனமில்லை.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உடையார் ஜ‌யா , உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் , உங்க‌ளின் ஆத‌ங்க‌ம் புரிகிற‌து ,

நானும் க‌ட‌ந்து செல்ல‌வே விரும்பினேன் , ஆனால் இவ‌ர்க‌ள் விட்ட‌ பாடு இல்லை , 

நானும் அண்ண‌ன் சீமானை போல‌ எதையும் நேருக்கு நேர் சொல்லி போடுவேன் , இத‌ இசைக்க‌லைஞ‌ன் அண்ணாவும் 2013ம் ஆண்டு சொல்லி காட்டின‌வ‌ர்  பைய‌ன் அப்ப‌டி தான் என்று , 

என்ர‌ எழுத்த‌ வைத்து த‌ப்பு க‌ண‌க்கு போட்டால் அவ‌ர்க‌ளின் அறியாமை என்று தான் சொல்லுவேன் , 

நான் த‌னி ஒருவ‌னாய் எதையும் எதிர் கொள்ளுவேன் 

பையா உங்களின் நிலை எனக்கும் பலருக்கும் தெரியும், நாம் எம் மக்களிற்கு எப்படியாயினும் விடுதலை கிடைக்கனும் அவர்களின் வாழ்வு முன்னேறனுமென்று நினைக்கின்றோம், சீமான் இதை கட்டாயம் செய்வார் என நம்புகிறேன் உங்களை போல, சிலருக்கு அதில் நம்பிக்கையில்லை, அது அவர்களின் பிரச்சனை, எல்லோரையும் திருப்பதிபடுத்த நினைத்தால் அது முடியாது, நம் தலைவருக்கு கூட அது தெரிந்தே இருந்தது. அதானல் சில வேளைகளில் இவற்றைவிட்டு, எமது இலக்கை மட்டுமே நோக்கி பயணம் செய்வோம் எம் மக்களின் விடுதலைக்கும் அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கும்

பையா உம்முடன் நானுமிருக்கின்றேன், எங்கள் மக்களுக்கு நன்மையெனில்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இப்போது ஒரு வணிக இதழ், அப்படி ஒரு கேள்வியை கேட்கும், கேட்டாலும், அதனை எடிட் பண்ணி நீக்காமல் இருப்பார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா? 

எடிற் பண்ணுவார்கள் என்று தெரிந்தால் அந்தப் பேட்டிக்கே ஒத்துக்கொள்ளக்கூடாது. தரமான ஊடகங்கள் இப்படி சில்லறை வேலை எல்லாம் செய்வதில்லை. எனவே எடிற் பண்ணியிருப்பார்கள் என்பது நம்பும்படி இல்லை. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பேட்டி கொடுக்கும்போது கேள்வி கேட்பவர்கள் எப்படி சுத்திவளைச்சுக் கேட்டாலும் தங்களது ஸ்கிறிப்ற் இலிருந்து மாறுவதில்லை. சொல்லவேண்டியதை திரும்ப பிடிகொடுக்காமல் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் மக்களுடன் உரையாடவே பேட்டிகளைப் பாவிக்கின்றார்கள். மக்களுக்கு முக்கியமாக  என்ன சொல்லவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

56 minutes ago, Nathamuni said:

சரி, தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவை.

சீமான் சரியில்லை.

குறணி முத்தராக, இருப்பதனை விட்டு, யார் சரி என்று சொல்லுங்கள். உங்களுடன் சேர்ந்து அவரையே ஆதரிக்கிறோம்.

இந்தத் திரியிலேயே முன்னர் சொல்லியிருக்கின்றேன்.

தங்களுக்கான விடிவு/தீர்வு என்னவென்பதைத் தீர்மானிப்பது தாயகத்தில் வசிக்கும் மக்கள்தான். அவர்களில் இருந்துதான் சரியான தலைமை வரவேண்டும். அவர்கள்தான் தமிழகத்தையும் (குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) புலம்பெயர் தமிழர்களையும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர சரியான வழியில் பாவிக்கவேண்டும். 

தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூட சரியாக எழுத கதைக்க தெரியா... எனக்கே தெரியும்.  ஆனால் இதுவரை நான் கண்ட கனவிலிருந்து விலகியதில்லை, கனவும் நம்பிக்கையும்தான் இப்ப எம் ஆயுதம், எம்மால் முடிந்தவரை விடுதைலைக்காக எந்த வழியில் என்றாலும் போராடுவோம், அதற்கு சீமான் தமிழ் நாட்டை ஆழ வேண்டும், இது பலருக்கு நகைப்பாக இருக்கலாம், ஆனால் எமக்கும் பல புதிய தலை முறை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் இது நம்பிக்கை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எடிற் பண்ணுவார்கள் என்று தெரிந்தால் அந்தப் பேட்டிக்கே ஒத்துக்கொள்ளக்கூடாது. தரமான ஊடகங்கள் இப்படி சில்லறை வேலை எல்லாம் செய்வதில்லை. எனவே எடிற் பண்ணியிருப்பார்கள் என்பது நம்பும்படி இல்லை. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பேட்டி கொடுக்கும்போது கேள்வி கேட்பவர்கள் எப்படி சுத்திவளைச்சுக் கேட்டாலும் தங்களது ஸ்கிறிப்ற் இலிருந்து மாறுவதில்லை. சொல்லவேண்டியதை திரும்ப பிடிகொடுக்காமல் சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் மக்களுடன் உரையாடவே பேட்டிகளைப் பாவிக்கின்றார்கள். மக்களுக்கு முக்கியமாக  என்ன சொல்லவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

நாம வாழ்வது UK ல. பேசுவது இந்தியா குறித்து.

வாழுமிடத்தின் 'உத்தரவாத' தரத்தினை, இந்தியாவில் எதிர்பார்க்கவா முடியும்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.

அது நீங்கள் விடலாம், ஆனால் நாம் தொப்புள் கொடி உறவுகள் எம்மால் விடமுடியாது, நாம் தமிழர், அவர்களுடன் தான் இணைந்து பயணிப்போம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

பையா உங்களின் நிலை எனக்கும் பலருக்கும் தெரியும், நாம் எம் மக்களிற்கு எப்படியாயினும் விடுதலை கிடைக்கனும் அவர்களின் வாழ்வு முன்னேறனுமென்று நினைக்கின்றோம், சீமான் இதை கட்டாயம் செய்வார் என நம்புகிறேன் உங்களை போல, சிலருக்கு அதில் நம்பிக்கையில்லை, அது அவர்களின் பிரச்சனை, எல்லோரையும் திருப்பதிபடுத்த நினைத்தால் அது முடியாது, நம் தலைவருக்கு கூட அது தெரிந்தே இருந்தது. அதானல் சில வேளைகளில் இவற்றைவிட்டு, எமது இலக்கை மட்டுமே நோக்கி பயணம் செய்வோம் எம் மக்களின் விடுதலைக்கும் அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கும்

பையா உம்முடன் நானுமிருக்கின்றேன், எங்கள் மக்களுக்கு நன்மையெனில்

ias சகாயம்  ஜயா 

அண்ண‌ன் சீமானை பார்த்து சொன்னார் , த‌ம்பி உன்னை பார்க்க‌ பாவ‌மாய் இருக்கு என்று , அவ‌ர் பாவ‌ப் ப‌டும் அள‌வுக்கு அண்ண‌ன் சீமானின் ப‌ணி மிக‌ வேக‌மாக‌வும் நேர்மையாகும் இருக்கு என்று அர்த்த‌ம் ,
ச‌காய‌ம் ஜ‌யாவின் நேர்மையை உல‌க‌ ம‌க்க‌ளுக்கே தெரியும் , 

அதே மாதிரி தான் ஒரு க‌ட்ட‌த்தில் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் ப‌ணிய‌ பார்த்து நானே க‌ண் க‌ல‌ங்கினேன்  , எப்ப‌டி இருக்க‌ வேண்டிய‌ அண்ண‌ன் எம‌க்கு குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிட்ட‌தில் இருந்து எவ‌ள‌வ‌த்தை இழ‌ந்து விட்டார் என்று / இதெல்லாம் அவ‌ரை தூற்றுப‌வ‌ர்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

எனக்கு கூட சரியாக எழுத கதைக்க தெரியா... எனக்கே தெரியும்.  ஆனால் இதுவரை நான் கண்ட கனவிலிருந்து விலகியதில்லை, கனவும் நம்பிக்கையும்தான் இப்ப எம் ஆயுதம், எம்மால் முடிந்தவரை விடுதைலைக்காக எந்த வழியில் என்றாலும் போராடுவோம், அதற்கு சீமான் தமிழ் நாட்டை ஆழ வேண்டும், இது பலருக்கு நகைப்பாக இருக்கலாம், ஆனால் எமக்கும் பல புதிய தலை முறை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் இது நம்பிக்கை

உடையார்,

நேற்று ஒரு காணொளி பார்த்தேன். பராக் ஹுசேய்ன் ஒபாமா குறித்தது.

அனுபவம் இல்லாத இளைஞன். அப்போது தான் இல்லியனய் மாநில கவனர் ஆகி இருக்கின்றார்.

ஜனநாயக கட்சி தேர்தல் நியமனத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்த போது, இவரா, தேறுவாரா என்று சந்தேகங்கள். காரணம், முதலாவதாக ஓட்டத்தில் இருந்தவர், மேல்தட்டு ஹிலாரி கிளின்டன்.

ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அவரது வசீகரமான பேச்சு பிரபல்யமாகி இருந்தது.

அவரது ஆட்டோகிராப் வாங்க மாணவர்கள் அலை மோதினார்கள்.

அவரது திறமை, மிக பெரிய கூட்டத்துக்கு ஒரு செய்தியை சொல்லும் திறமை மட்டும் அல்ல, பேச்சுடன் சேர்ந்த புத்திசாலித்தனமான கருத்துக்கள் (His power of speaking to a larger group of people that coupled with clear mind).

அந்த மாணவர்கள், இளையோர் ஆதரவு காரணமாக அவர் ஹிலாரியை மட்டுமல்ல, குடியரசு கட்சி வேட்ப்பாளரையே தோற்கடித்து, (முதலாவது அரை கறுப்பு) ஜனாதிபதியானார்.

அங்கேயும் சொன்னார்கள்.... ஹுசைன்.... முஸ்லீம்... அமேரிக்காவுக்கு ஆபத்து... 

இந்த கருத்தாழம் மிக்க பேச்சுவன்மை தமிழகத்தில் ஏனையவர்களுக்கு இல்லாத காரணத்தினால் தான், ஆமைக்கறி, கறி இட்லி, ak47 என்று யாருக்கும் பிரயோசனம் இல்லாத விசயங்களை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

(@2.38; Spin masters, the negative ad pedlar are trying to divide us )

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

எனக்கு கூட சரியாக எழுத கதைக்க தெரியா... எனக்கே தெரியும்.  ஆனால் இதுவரை நான் கண்ட கனவிலிருந்து விலகியதில்லை, கனவும் நம்பிக்கையும்தான் இப்ப எம் ஆயுதம், எம்மால் முடிந்தவரை விடுதைலைக்காக எந்த வழியில் என்றாலும் போராடுவோம், அதற்கு சீமான் தமிழ் நாட்டை ஆழ வேண்டும், இது பலருக்கு நகைப்பாக இருக்கலாம், ஆனால் எமக்கும் பல புதிய தலை முறை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் இது நம்பிக்கை

உடையார் ஜ‌யா 1992ம் ஆண்டு உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் பாக்கிஸ்தான் அணியை வ‌ழி ந‌ட‌த்திய‌வ‌ர் இம்ரான் கான் , அந்த‌ உல‌க‌ கோப்பையில் பாக்கிஸ்தான் கோப்பையை வென்ற‌து /

கிரிக்கேட்டில் இருந்து ஓய்வு பெற்ற‌ இம்ரான் கான் சிறிது கால‌ம் க‌ழித்து க‌ட்சி ஆர‌ம்பிக்கிறார் , அவ‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்கும் போது ப‌ல‌ர் சிரித்தார்க‌ள் கிண்ட‌ல் அடித்தார்க‌ள் , அப்ப‌ ஊட‌க‌த்தை பார்த்து இம்ரான் கான் சொன்ன‌ ஒரு வார்த்தை என‌க்கு ஓட்டு போடும் பிள்ளைக‌ள் இப்போது பாட‌சாலையில் ப‌டித்து கொண்டு இருக்கிறார்க‌ள் என்று சொல்லி விட்டு அந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் இருந்து வெளியில் போகிறார் , இப்போது பாக்கிஸ்தான் நாட்டு ஜ‌னாதிப‌தி இம்ரான் கான் , இது தான் அர‌சிய‌ல் /

திராவிட‌ம் என்று ஓவ‌ரா கூவுவ‌ர்க‌ளின் குர‌ல்க‌ள் கால‌ப் போக்கில் அட‌ங்கும் /

Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தங்களுக்கான விடிவு/தீர்வு என்னவென்பதைத் தீர்மானிப்பது தாயகத்தில் வசிக்கும் மக்கள்தான். அவர்களில் இருந்துதான் சரியான தலைமை வரவேண்டும். அவர்கள்தான் தமிழகத்தையும் (குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) புலம்பெயர் தமிழர்களையும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர சரியான வழியில் பாவிக்கவேண்டும். 

தாயகத்தில் உருப்படியான தலைமை இப்போது இல்லையென்பதால் நான் சொல்வது உடனடியாக நடக்காது என்று புரியும். ஆனால் உருப்படியான தலைமை அங்கு தோன்ற முடிந்தளவு உதவவேண்டும். மற்றும்படி தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.

அதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஏன் அங்குள்ள அரசியலை இழுக்கிறீர்கள், மாறாக உங்கள் தாயக அரசியலை வழிநடத்துங்கள்.

தமிழகத்தில்,  அங்குள்ள, சாதிய வேறுபாடுகளால், தமிழரல்லாத வெளியாரை தலைமை தாங்க வைக்கும் அவலத்தினை, தடுக்க, வெளியராயினும், தமிழரான பிரபாகரனை, தலைவராக, கொண்டு செல்ல வேண்டிய, தேவை அங்குள்ளதை புரிந்ததால், தான், எமது அரசியலுடன் சேர்த்து அலம்பறை செய்யாமல் இருக்கும், புரிதல் உள்ளது.

சீமான் உறுதியாக நின்றதால், மராட்டியர் ரஜனி, பின்வாங்கி உள்ளார். MGR உடன் நடித்த, வேறு வகையில் உறவில் இருந்த காரணத்தினால், செலவுக்கு காசு இல்லாமல் குமுதத்தில் சுஜசரிதை எழுதிய, கர்நாடகத்து பிரமணப்பெண், திராவிட கழகம் ஒன்றை தலைமை தாங்கி, முதல்வராகி, 900 கோடி ரூபா சொத்து கொள்ளை அடித்து, போனவாரம் அவரது வாரிசுகள் அறிவிப்பு வந்தது. இதுதான் வெளியார் செய்த வேலை. அந்த பெண்ணுடன் சேர்த்தே கொள்ளை அடித்தவர் இன்னும் சிறையில்.

மறுபக்கம், டிக்கெட் இல்லாமல் ரயில் வந்தவர், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரும் தமிழர் இல்லை.  தனது குடும்பத்தின் கொள்ளைகளை மத்திய காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளாமல் இருக்க, ஈழத்தின் அவலத்தினை கண்டுகொள்ளாமல் இருந்த அந்த மனிதரின் கட்சி ஒரு தீர்வைப் பெற்றுத்தர முன் வரும் என்று நம்புகிறீர்களா?

இது புரியாவிடில், ஆச்சோ, போச்சோ... அப்படியோ இப்படியோ என்று போய், சீமான் அங்கே செய்வது இனவாத அரசியல் என்று சொல்வதில் முடிகிறது.

சிங்களவன் ஆண்டதை எதிர்த்து, அதாவது இனவாதத்தினை எதிர்த்து ஏன் போராடினோம் என்ற கேள்வியினை வசதியாக தவிர்த்து விடுகிறீர்கள்.

தமிழக அரசியலை தமிழகத்தினருக்கே விட்டுவிடலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

உண்மையை உர‌க்க‌ சொன்ன‌துக்கு , பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் ட‌ங்கு 🤞

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

உண்மையை உர‌க்க‌ சொன்ன‌துக்கு , பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் ட‌ங்கு 🤞

அட... கொஞ்சம் பொறுங்கோ பையா...

வருவினம் பாருங்கோ.... மொக்கைக் கருத்துக்களுடன்... 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

அட... கொஞ்சம் பொறுங்கோ பையா...

வருவினம் பாருங்கோ.... மொக்கைக் கருத்துக்களுடன்... 😉

அவையை விர‌ல் நீட்டி கேக்க‌ நிறைய‌ இருக்கு / அவையின் பொய் புழுகுக‌ளை நேற்று க‌ண்டாச்சு , 

சூசை அண்ணாவோடு அருகில் நின்ற‌வை புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு த‌ப்பி வ‌ர‌ முடியுது , போர்க‌ள‌த்தில் ச‌க‌ போராளிக‌ளோடு சிங்க‌ள‌வ‌னை எதிர்த்து போர் செய்த‌ போராளிக‌ள் இப்ப‌வும் சிறைக்குள் வாடுதுக‌ள் , பெரிய‌ பெரிய‌ த‌லைக‌ளை வ‌லை போட்டு தேடின‌ க‌ருணாவின் ஆட்க‌ளும் சிங்க‌ள‌ ப‌டையும் அவையிட‌ம் இருந்து சீக்கிர‌மா த‌ப்பி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து அண்ண‌ன் சீமானை பார்த்து கேள்வி கேக்கின‌ம் ,

நாதா , நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து  ஏழாலையில் , ஆனால் யாழ்பாண‌த்திலும் கூட‌ த‌ங்கி இருக்கிறேன் , அங்கு எங்க‌ளுக்கு மூன்று வீடு இருக்கு /

உங்க‌ளுக்கு சிறித‌ர் திரைய‌ர‌ங்கு தெரியும் என்று நினைக்கிறேன் , அதுக்கு பின்னுக்கு தான் எங்க‌ள் வீடு ,  அந்த‌ திரைய‌ங்கில் அனைத்து த‌மிழீழ‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் ஓடின‌து ,

அந்த‌ இட‌த்தை 22வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு பார்த்த‌ போது என‌து கைபேசியில் இருந்து ப‌ட‌ம் எடுக்க‌ விரும்பினேன் ,அந்த‌ திரைய‌ர‌ங்கு   இப்ப‌ ட‌க்ள‌ஸ்தேவான‌ந்தாவின் ஒவ்பிசா இருக்கு , சீடிவி க‌ம‌ரா அதில் பூட்டி இருந்த‌த‌ நான் க‌வ‌ணிக்க‌ வில்லை , ந‌ண்ப‌ன் சொன்னான் போன‌ உள்ள‌ வைய‌டா வேவு பார்க்க‌ வ‌ந்த‌து என்று விசார‌னைக்கு கூட்டிட்டு போவாங்க‌ள் என்று ந‌ண்ப‌ன் சொன்னான் , அப்ப‌டி ப‌ல‌ சிக்க‌ல்க‌ளில்  முன்னால் போராளிக‌ள் வாழுகின‌ம் , 

 முன்னால் போராளிக‌ளை வெளியில் எடுக்க‌ கொழும்பில் தெரு நாய் மாதிரி அங்கையும் இங்கையும் என்று அலைந்து திரிய‌ வேணும் , அதோடு சாட்சிக்கு ப‌ல‌ரின் கை எழுத்தும் தேவை , இப்ப‌டி ப‌ல‌ சிக்க‌ல்க‌ள் இருக்கு நாதா , 

எல்லாம் அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம்

புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 

புரிந்து கொண்ட படியால் தான் எழுதுகிறேன்.

நான் எந்த இயக்கத்தினையும் சார்ந்தவனோ, அல்லது ஆதரவு கொடுத்தவனோ இல்லை.

கொழும்பில் இருந்திருக்கிறேன். சிங்களவர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்கள் மொழியில், கொழும்புத் தமிழிலும் சரளமாக பேசுவேன்.

நாட்டின் ஒரு முக்கியமான மாகாணத்தின் இராணுவ தளபதியுடன் மிகுந்த நட்பில் உளேன். கொழும்பில் நண்பரின் வீட்டில் சந்தித்த போது, சீமான் குறித்த பேச்சு வந்தது. அவருக்கு நாயகர்கள், சிங்களவர்களான கதை குறித்து விளங்கப்படுத்திய போது, அதிர்ந்து போனார். அவருக்கு தெரிந்திருக்க வில்லை. அவருக்கு, நாட்டின், தமிழரும், சிங்களவர்களும், தமிழகத்து தமிழரும் எவ்வாறு நாயகர்களினால் அடிமைப் படுத்தப்பட்டார்கள் என்று விளக்கப் படுத்தினேன்.

பண்டாரநாயக்கா என்னும் தெலுங்கர், வெள்ளையர்கள் இருக்கும் வரை தமிழராக, கிறிஸ்தவர் ஆக நடித்து, பின்னர் சிங்களவராக, பௌத்தராக நடித்தார் என்பதை அவர் நம்ப நீண்ட விளக்கம் தேவைப்பட்டது.

அவர் மறுநாள், என்னை தேடி நான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்து, எனக்கு இலங்கையில் போர்த்துகேயர் ஆட்சியினால் உண்டான கலாசார மாறுதல்கள் என்னும் ஆங்கில புத்தகத்தினை பரிசாக தந்து சென்றார். 

ஆகவே, சீமான் புலி ஆதரவா, போலியா என்பது எனது கவலை இல்லை. அவர்கள் வெளியாளாயினும், தமிழரான பிரபாகரனை தலைவராக கொண்டு செல்லவேண்டிய தேவையினை புரியும் தெளிவு உள்ளது.

சீமான் தன்னை தலைவராக முன்னிறுத்தி இருந்தால், அவர் சார்ந்த சாதிய தலைவராகவே, திராவிடம் நிறுத்தி இருக்கும். ராமதாசும், திருமாவளவனும் வேறு பலரும் இந்த அவலத்தில் இருந்து தப்ப முடியவில்லை என்பதே நிதர்சனம்.

நாம் தமிழர் கட்சி, பிரபாகரனை தலைவனாக கொண்டுள்ள படியால் தான், அதனால், முத்துராமலிங்க தேவரையும், காயிதே மிலத்தினையும். தீரன் சின்னமலையினையும், ஐயா வைகுந்தரினையும் ஒன்றாக தமிழர்கள் என்று சாதியத்துக்கு வெளியே எடுத்து பேச முடிகிறது.

இது புரிந்ததால், திமுக, அலறிக்கொண்டு, இப்போது பிரபாகரனை நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளது. பண்டாரநாயக்கவின் அதே நடிப்பினை, திராவிடம் என்ற பெயரில் அங்கே நடித்துக் கொண்டு இருக்கின்றனர்

இந்த நுண்ணிய, ஆனால், ஆபத்தான திராவிட அரசியல் புரியாமல், இங்கே, வெறுமனே வாயை மென்று துப்புவதன் காரணம் என்ன என்று புரியவில்லை. 

இந்த திராவிடர்கள் எமது அரசியல் தீர்வுக்கு தேவையாம். செத்தவீட்டுகே வராதவன், வேறு எதுக்கு வருவான் என்ற புரிதல் இல்லை. இந்த திராவிடர்களால் எமக்கு அவலமாக கிடைத்ததே போதும்.

சீமானை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நாமல்ல. தமிழக மக்கள்.

அவர்கள் ஆதரவு 2016ல் 1.1%ல் இருந்து 2019ல் 4% வரை அதிகரித்து உள்ளது. 2021ல் ஆதரவு அதிகரிக்கிறதா, குறைகிறதா என்று தெரிந்து விடும்.

இங்கே எதுக்கு அவித்து இறுக்குகிறார்கள், ஆவேசமாக? 🤔

எனது ஒரு அவதானிப்பு - தவறாக கூட இருக்கலாம் - (தமிழ்) புத்தகங்களை அதிகமாக தேடி, தேடி வாசிக்கும், கதைகளை எழுதும் பலர் இங்கே சீமானை எதிர்பவர்களாக உள்ளனரே... கவனித்தீர்களா பையா? 😀

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு எதிராக கருத்தெழுதுபவர்களின் நிலையை பார்க்கும் போது முட்டையில் மயிர் புடுங்குபவர்களாகவே தெரிகின்றது.
சீமானின் அரசியல் திட்டங்களை விவாதிக்க ஆயிரம் விடயங்கள் இருந்தும் ஆமைக்கறியில் தொடங்கி இப்போது விஜயலட்சுமியில் வந்து நிற்கின்றார்கள்.இது ஏதோ ஒரு இயலாத தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது....

அன்றைய சமத்துவ,ஜனநாயக,அரசியல் புரட்சியாளர்களின் வரலாறுகளை முழுமையாக தெரிந்தால் விஜயலட்சுமியையும் கறி இட்டலியையும் தலையில் வைத்து கொண்டாட மாட்டார்கள்.

இந்த உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்கள் யாருமேயில்லை. அந்த வகையில் சீமானுக்கு என் ஆதரவுகள் என்றும் உண்டு.
எமக்கு தனிநாடு கிடைக்காவிட்டாலும் சீமானின் குரல் தமிழ்நாடு மூலமாக எமக்கு தேவை.

சீமானை சரியில்லை என சொல்பவர்கள்  வெளிநாட்டிலிருந்து ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும் மற்றவர்களை குறிப்பிட்டு அவர்கள் எந்த விதத்தில்  எம் இனத்திற்கு சரிப்பட்டு வருவார்கள் என்பதையும் கூறலாமே???

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ தான் இந்த‌ வீடியோவை உப்லொட் ப‌ண்ணினேன் ,

சூசை அண்ண‌னுட‌ன் க‌தைக்கும்  போது சூசை அண்ணா சொல்லுகிறார் சீமானிட‌ம் சொல்ல‌ சொல்லி , சூசை அண்ண‌ன் கூட‌ க‌தைத்த‌வ‌ர் சொல்லுகிறார் சொல்லுகிறேன் என்று , சூசை அண்ண‌ன் போன் ப‌ண்ணும் போது சீமான் அண்ண‌ அருகில் இருந்து இருந்தா அண்ண‌ன் சீமானோடு நேர‌டியாய் க‌தைத்து இருப்பார் , 

இந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் ந‌ட‌க்கும் போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் 
 
இடுபாவ‌ன‌ம் கார்த்திக் ந‌ன்றி தோழா 🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

சீமானுக்கு எதிராக கருத்தெழுதுபவர்களின் நிலையை பார்க்கும் போது முட்டையில் மயிர் புடுங்குபவர்களாகவே தெரிகின்றது.
சீமானின் அரசியல் திட்டங்களை விவாதிக்க ஆயிரம் விடயங்கள் இருந்தும் ஆமைக்கறியில் தொடங்கி இப்போது விஜயலட்சுமியில் வந்து நிற்கின்றார்கள்.இது ஏதோ ஒரு இயலாத தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது....

அன்றைய சமத்துவ,ஜனநாயக,அரசியல் புரட்சியாளர்களின் வரலாறுகளை முழுமையாக தெரிந்தால் விஜயலட்சுமியையும் கறி இட்டலியையும் தலையில் வைத்து கொண்டாட மாட்டார்கள்.

இந்த உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்கள் யாருமேயில்லை. அந்த வகையில் சீமானுக்கு என் ஆதரவுகள் என்றும் உண்டு.
எமக்கு தனிநாடு கிடைக்காவிட்டாலும் சீமானின் குரல் தமிழ்நாடு மூலமாக எமக்கு தேவை.

சீமானை சரியில்லை என சொல்பவர்கள்  வெளிநாட்டிலிருந்து ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும் மற்றவர்களை குறிப்பிட்டு அவர்கள் எந்த விதத்தில்  எம் இனத்திற்கு சரிப்பட்டு வருவார்கள் என்பதையும் கூறலாமே???

கேள்வி சரியானதுதான். ஆனால் பதிலை எதிர்பார்க்காதீர்கள். வரவே வராது. எங்கள் கவனம் முழுதும் முட்டையில் மயிர் புடுங்குவதாகவே இருக்கும். 😂😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

கேள்வி சரியானதுதான். ஆனால் பதிலை எதிர்பார்க்காதீர்கள். வரவே வராது. எங்கள் கவனம் முழுதும் முட்டையில் மயிர் புடுங்குவதாகவே இருக்கும். 😂😂

சீமானை  சரியில்லையெண்டு சொல்லுறவையள் வேறை மாற்றுக்கருத்து சொல்லுறதாயும் தெரியேல்லை.சும்மா ஆமைக்கறி சரியில்லை எண்டுறதும்......விசயலட்சுமிக்கு பவுடர் போடுறதுமாய் இருக்கினம்.😂

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சீமானை சரியில்லை என சொல்பவர்கள்  வெளிநாட்டிலிருந்து ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும் மற்றவர்களை குறிப்பிட்டு அவர்கள் எந்த விதத்தில்  எம் இனத்திற்கு சரிப்பட்டு வருவார்கள் என்பதையும் கூறலாமே???

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை தாயகத்தில் இருந்துதான் வரவேண்டும். தமிழகமும் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களும் பின்தளமாகவே செயற்படவேண்டும். இப்படித்தான் 2009க்கு முன்னர் இருந்தது. அதுதான் சரியானதும் ஆகும்.

தாயகத்தில் உள்ள தற்போதைய தலைமை தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தராது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

2009 மே மாதத்திற்குப் பின்னர் ஈழத்தமிழருக்கு சரியான தலைமை இல்லாததால், அந்த வெற்றிடத்தை சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும். 

26 minutes ago, Kapithan said:

கேள்வி சரியானதுதான். ஆனால் பதிலை எதிர்பார்க்காதீர்கள். வரவே வராது. எங்கள் கவனம் முழுதும் முட்டையில் மயிர் புடுங்குவதாகவே இருக்கும். 😂😂

என்னுடைய சப்பாத்துக்குள் கால்களை நுழைத்து நடக்கவெளிக்கிட்டால் தள்ளாடவேண்டும். 😀எனவே மற்றவர்கள் எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்கள் சிந்திப்பது தேவையா?😊

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தலைமை தாயகத்தில் இருந்துதான் வரவேண்டும். தமிழகமும் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களும் பின்தளமாகவே செயற்படவேண்டும். இப்படித்தான் 2009க்கு முன்னர் இருந்தது. அதுதான் சரியானதும் ஆகும்.

தாயகத்தில் உள்ள தற்போதைய தலைமை தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தராது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. புலம்பெயர் தமிழர்தான் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

2009 மே மாதத்திற்குப் பின்னர் ஈழத்தமிழருக்கு சரியான தலைமை இல்லாததால், அந்த வெற்றிடத்தை சீமான் என்ற மாயமானைக் கொண்டு நிரப்ப முனையாமல், சரியான தலைமையை தாயகத்தில் உருவாக்கி அவர்களுடன் கைகோர்க்கவேண்டும். 

ஆங்கில ஜோக் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

The FAT lady complained that the food served in the restaurant is HORRIBLE and they served VERY SMALL portion...

புலம் பெயர்ந்தவர்களும் ஒண்டும் செய்யக்கூடாது. தமிழ் நாட்டிலும் ஒண்டுமே செய்யக்கூடாது.

சம், சும்... விக்கி, கஜேந்திரன் கோஸ்ட்டி, டக்ளஸ், கருணா அம்மான் ஏதாவது செய்தால், நாம் ஆதரவு தருவோம்...

ஹலோ.... விடிஞ்சுட்டுது... ஒழும்புங்கோ.... கோத்தா தேத்தண்ணி ஆத்திக்கொண்டு நிக்கிறார். :grin:

Edited by Nathamuni
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆங்கில ஜோக் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

The FAT lady complained that the food served in the restaurant is HORRIBLE and they server VERY SMALL portion...

புலம் பெயர்ந்தவர்களும் ஒண்டும் செய்யக்கூடாது. தமிழ் நாட்டிலும் ஒண்டுமே செய்யக்கூடாது.

சம், சும்... விக்கி, கஜேந்திரன் கோஸ்ட்டி ஏதாவது செய்தால், நான் ஆதரவு தருவோம்...

ஹலோ.... விடிஞ்சுட்டுது... ஒழும்புங்கோ.... கோத்தா தேத்தண்ணி ஆத்திக்கொண்டு நிக்கிறார். :grin:

முதல் பந்திக்கு அப்பால் வாசிக்காமல் வந்த கருத்து என்று புரிந்துகொள்கின்றேன்.😎

 • Haha 1
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது!   இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது .   குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 million நட்டம், MIG மிகையொலி விமான கொள்வனவு ஊழல் $6 million, சீனி கொள்வனவு மோசடியால் ஏற்பட்ட இழப்பு $ 83 million, BMW கார் இறக்குமதி வரி மோசடி $ 84 million என வரையற்ற ஊழல் மோசடிகளால் இலங்கையின் நிதி நிலவரம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி இருக்கின்றது இதுமட்டுமில்லாது அரசியல் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் , சர்வதேச விமான நிலையம் போன்ற பாரிய முதலீடுகள் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை விட ஆண்டு தோறும் மீள செலுத்த வேண்டிய கடன் அதிகரித்து இருக்கின்றது இதன் பிண்ணனியில் Private Public Partnership (PPP) என்கிற திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் , கட்டடங்கள் மற்றும் காணிகளை தனியாருக்கு விற்கும் நிலைப்பாட்டை கோட்டாபயா ராஜபக்சே நிருவாகம் எடுத்து இருக்கின்றது . மேற்குறித்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக Selendiva Investments Limited என்கிற நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் மூன்று கட்டத்தின் கீழ் கொழும்பின் பெருமளவான பிரதேசத்தை விற்கும் தீர்மானத்தை எடுத்து இருக்கின்றது அந்த வகையில் Colombo Fort Heritage Square என்கிற முதல் கட்டத்தின் கீழ், 1. இலங்கை விமானப் படை தலைமையகம் 2. கொம்பனித் தெரு பொலிஸ், கொம்பனித் தெரு பொலிஸ் விளையாட்டு மைதானம், கொம்பனித் தெரு பொலிஸ் விடுதித் தொகுதி. 3. கொழும்பு விமானப் படை முகாம் 4. கொழும்பு விமானப் படை விளையாட்டு மைதானம் (Rifle Green Ground) 5. கொழும்பு சினமன் லேக் சைட் 6. கொழும்பு M.O.D. Cyber Operation Centre 7. இராணுவ தொலைத் தொடர்புகள் மற்றும் உபகரணங்கள் பொறியியல் ரெஜிமென்ட் தலைமையகம் ஆகிய பிரதேசங்கள் தனியார் மயப்படுத்த பட உள்ளன அதே போல Immovable Property Development, என்கிற இரண்டாம் கட்டத்தின் கீழ், 1. கிரேன்ட் ஒரியன்டல் கட்டிடம் 2. கபூர் கட்டிடம் 3. யோர்க் வீதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் 4. வௌிவிவகார அமைச்சு கட்டிடம் 5. தபால் திணைக்கள தலைமையகம் 6. பொலிஸ் தலைமையகம் 7. செத்தம் வீதியில் அமைந்துள்ள FICD தலைமையக கட்டிடம் (தற்போது CHEC Port City (Pvt) Ltd என்ற சீன நிறுவனத்தின் பாவனையில் உள்ளது ) 8. ஹில்டன் ஹோட்டல் மற்றும் வீடுகள் 9. ஹயாத் ஹோட்டல் மற்றும் வீடுகள் 10. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் அதற்கு அருகில் உள்ள 200 ஏக்கர் காணி உட்பட்ட நிலப்பரப்பு தனியார் மயப்படுத்த அமைச்சரவை தீர்மானித்து இருக்கின்றது அரசாங்கம் மேற்கூறிய இடங்களை தனியார்மயப்படுத்த தீர்மானித்து உள்ள நிலையில் பெருமளவான இடங்களை China Communications Construction Company (CCCC) என்கிற சீனா நிறுவனம் வாங்குவதற்கு முன்வந்து இருக்கின்றது . ஆனால் இந்த நிறுவனம் அமெரிக்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டு இருப்பதால் அவர்களது துணை நிறுவனமான CHEC Port City Colombo (PVT) LTD என்ற சீன நிறுவனத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை செய்ய முயற்சித்து வருகின்றார்கள் இது தவிர , சீனா அரசின் உதவியுடன் கட்டப்பட்ட தாமரை கோபுரம நட்டம் அடைந்துள்ள நிலையில் மீண்டும் சீனா நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்க பட்டுள்ளது இந்நிலையில் கொழும்பின் பெரும்பகுதி குறிப்பாக Colombo 1 and Colombo 2 ஆகியன சீனா நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக சீனா எதிர்வரும் காலத்தில் உருவாகும்   http://poovaraasu.blogspot.com  
  • அல்ஜீரியன்ஸ் காரரை பிரான்ஸ் தமிழர், அடையார் என்பார்கள். சீனாக்காரரை கனடா தமிழர் சப்பட்டை என்பார்கள். பிரிட்டனில், ஜயாத்துரை என்றால், அயர்லாந்துக்காரர். கனடாவில் அனேகமாக வெள்ளையளை குறிக்கலாம். ஆபிரிக்கர்களை, கறுவல் என்று சொல்வார்கள்.  
  • ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர். அந்த கன்டெய்னர்கள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர். தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு   இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹெராயின் போதைப்பவுடர்கள் சோப்புக்கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதை அவை இடம்பெற்ற கன்டெய்னர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்த விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் தம்பதி சுதாகர் மற்றும் துர்கா வைஷாலி சென்னையில் இருப்பதை அறிந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை இரு தினங்களுக்கு முன்பே ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த தம்பதி கடந்த திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார். இதன் பிறகே இந்த கைது விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தகவலின் முழு விவரமும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கை மற்றும் மதிப்பில் கடத்தப்பட்ட போதைப்பொருளை இந்திய அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பறிமுதல் செய்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிகாரத்தை தாலிபன் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டில் இருந்து இந்த போதைப்பொருட்கள் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த போதைப்பொருட்களை இந்தியாவில் அதுவும் விஜயவாடாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனம் எந்த பின்புலத்தில் இறக்குமதி செய்தது, இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ள என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் அதிகம் விளையும் போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பிச் செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தாலிபன் கூறுகிறது. ஆனால் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 -ல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் எவ்வளவு அபின் உற்பத்தி செய்யப்படுகிறது? அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெராயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அபின் பற்றி தாலிபன் கூறியிருப்பது என்ன? "நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதைமருந்தும் தயாரிக்கப்படவில்லை" என்று காபூலை தாலிபன்களை கைப்பற்றிய பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறினார். "அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப்பொருள் கடத்தல் இருக்காது என்றும் அவர் கூறினார். தாலிபன்களின் ஆட்சியில் போதைப் பொருள் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது முதலில், தாலிபன் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998-ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000-ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது. இது பெரும்பாலும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும். ஆனால் 2000-ஆம் ஆண்டு ஜூலையில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர். தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறது. தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002ல் அபின் மற்றும் ஹெராயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது. ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது. இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம். உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது. https://www.bbc.com/tamil/india-58639318
  • கொத்து என்ற சொல்லே தமிழ் சொல் தானே. காத்தான்குடி தான் பிறந்த ஊர் என்று ஒரு வெள்ளை தேடி அங்கே போய், அந்த கடையில வாங்கி சாப்பிட்டு வீடியோ போட்டுது.. 😉
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.