Jump to content

வேட்டைக்கு விரித்த வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டைக்கு விரித்த வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தை

  • நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

1-1-1024x551.jpgமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரிய வகை மிருகங்களில் ஒன்றாக கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.

வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே இந்த கறுஞ்சிறுத்தை இன்று சிக்கியுள்ளது.

மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சுமார் 08 வயதுடைய கறுஞ்சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டு அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

http://thinakkural.lk/article/43535

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

IMG_20200526_153044.jpg?189db0&189db0

சிறுத்தையின் நெஞ்சில் காயம். புலி என்றதும் சுட்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகிச்சை பலனின்றி கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

நல்லத்தண்ணி, லக்ஸபான தோட்டத்தில் வாழைமலை பகுதியில் கடந்த 26 ஆம் திகதி வலையில் சிக்கிய நிலையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில், 6 அடி நீளமுடைய ஆண் கருஞ்சிறுத்தை கடந்த 26 ஆம் திகதி அதிகாலை சிக்கியது.

வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் வைத்தே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் பாதுகாப்பான முறையில் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சிகிச்சை-பலனின்றி-கருஞ்சிறுத்தை-உயிரிழப்பு/175-251050

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.