Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு.. உதாசீனங்களைத் தாண்டி வென்ற நடிகை!

ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நிறத்தையும், தான் தமிழ் மொழி பேசுவதாலும் பல இடங்களில் நிராகரிக்க பட்டதாக ஒரு கல்லூரியில் தான் நடிகையானதற்கு பின் உள்ள போராட்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டார் நடிகை Aishwarya Rajesh.

காக்கா முட்டை, கானா போன்ற வெற்றி படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இப்போது தமிழ் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் இப்போது க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் ஹீரோவிற்கு சமமாக பஞ்ச் டயலாக் பேசிய படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சாதாரணக்குடும்பத்து பெண் குப்பத்துல இருக்குற ஒரு ஹௌசிங் போர்டுல பிறந்து வளர்ந்த லோயர் மிடில் கிளாஸ் பொண்ணு தான் நான். என்னுடைய வீட்டில் நாங்க மொத்தம் ஆறு பேரு, அம்மா, அப்பா, 3 அண்ணன்கள் அப்புறம் நான். நான் தான் கடைசி பொண்ணு எனக்கு 8 வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு, அதுக்கப்புறம் எங்க அம்மா தான் ஒரு தனி ஆளா வேலைக்கு போய் எங்களை கஷ்டப்பட்டு படிக்க வெச்சாங்க. ஆனா அம்மா ஏதும் பெருசா படிச்சதில்ல ஆனால் எங்களை காப்பாத்த அவ்வளவு கஷ்டப்பட்டாங்க. முதல்ல எங்க அம்மாவ பத்தி நான் சொல்லிடுறேன் என்றார்.

அம்மா எல்.ஐ.சி ஏஜெண்ட் அப்பா இறந்ததுக்கு அப்புறம் அம்மா எங்களை காப்பாத்த மும்பைக்கு போயி மொத்தமா புடவையெல்லாம் வாங்கிட்டு வந்து சென்னைல வீடுவீடா போய் விப்பாங்க. அதுக்கப்புறம் எல்.ஐ.சி ஏஜெண்டா இருந்தாங்க, இப்போ கூட என் கூட நடிக்கிறவங்களை யாராச்சும் பார்த்தா அவங்ககிட்ட போயி ஒரு எல்.ஐ.சி பாலிஸி போடுறீங்களானு அம்மா கேப்பாங்க.

அடுத்தடுத்த இழப்பு எனக்கு ஒரு 12 வயசு இருக்கும் என்னுடைய மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்துட்டார். அண்ணன் இறந்தது தற்கொலையா கொலையானு கூட எங்களுக்கு இன்னும் தெரியலை. அப்போ அவர் ஒரு பெண்ணை காதலிச்சாரு. இன்னொரு அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு முடிச்சிட்டு கைநிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சார், அவரும் கொஞ்ச நாள்லயே ஒரு ரோடு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு. அம்மா அப்படியே இடிஞ்சி போய்ட்டாங்க .

அம்மா தந்த அட்வைஸ் இப்படி எங்க வாழ்க்கைல கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வந்துட்டு இருந்துச்சி. அதுக்கப்புறம் நானும் சின்ன வேலைக்கு போக ஆரம்பிச்சேன். நான் பார்த்த முதல் வேலை சூப்பர் மார்க்கெட் முன்னாடி சாக்லேட் ப்ரோமோஷன் அதுக்கு அவங்க 225 ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க, சீரியல்ல நடிக்க போயிருக்கேன் அப்போ ஒரு நாளைக்கு 1,500 ரூபா குடுத்தாங்க ஆனா அதுவும் மாசத்துல ஆறு நாட்கள் தான் வேலை இருக்கும். சீரியல்ல லீட் ரோல் பண்றவங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குதுமா நான் ஏன் பண்ணக்கூடாதுனு கேட்டேன். அதுக்கு அம்மா தான் சினிமால நடிச்சா அதைவிட அதிகமா சம்பளம் கிடைக்கும். அதுவும் நாம நடிச்ச படம் நல்ல ஓடனும்னு சொன்னாங்க.

நான் படங்கள்ல நடிக்க வாய்ப்புத்தேடுனேன், அப்போ பல இயக்குனர்கள் என்னை உதாசீனப்படுத்துனாங்க. சிலர் என்னை நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது, போய் வேற வேலை இருந்தா பாருங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என, என் லுக், நிறம், பர்சனாலிட்டினு என் மேல நிறைய விமர்சனம் வெச்சாங்க. அப்புறம் எனக்கு "அவர்களும் இவர்களும்" படத்துல நடிக்குற வாய்ப்பு கிடைச்சது. பின் இயக்குனர் ரஞ்சித் சார் படத்துல அமுதாங்கிற சின்ன கேரக்டர்ல நடிச்சேன் அது ரொம்ப சின்ன ரோல் தான் ஆனா அது தான் என்ன மக்கள் கிட்ட என்னை கொஞ்சம் கொண்டு போய் சேத்துச்சி. அதுக்கப்புறம் வந்த வாய்ப்புகள் தான் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் படங்கள்லாம்.

இப்படி போயிட்டு இருந்த என் வாழ்க்கை இயக்குனர் மணிகண்டன் இயக்கிய "காக்கா முட்டை" படம் தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையா அமைந்தது. அந்த படத்துல நான் ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிச்சிருப்பேன். அந்த கதையில ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிக்கனும்னு நிறைய பேர் அந்த ரோல்க்கு யாரும் நடிக்க வரலை. எனக்கு அந்த கதை ரொம்ப புடிச்சிருந்துச்சி அதனால நான் நடிக்க ஒத்துக்கிட்டேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பெரிய பெரிய டைரக்டர்ஸ், ஜாம்பவான்கள் எல்லோரும் பாராட்டினாங்க. ஆனா அதுக்கப்புறம் எனக்கு படவாய்ப்பு ஏதும் வரல, அதுதான் ஏன்னு புரியல! வடசென்னைல தனுஷ், தர்மதுரைல விஜய்சேதுபதினு ஒரு சிலர் தான் என் திறமைய பாத்து வாய்ப்பு கொடுத்தாங்க.

பல படங்களில் நடித்து சரியான அங்கீகாரம் இல்லாமல் இருந்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது கனா படம் தான். அதற்கு நான் அருண்ராஜ் காமராஜாவிற்கு எனது நன்றியை எவ்வளவு சொன்னாலும் பத்தாது என தனது நன்றியை அந்த அப்படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் அருண்ராஜ் காமராஜாவிற்கு தெரிவித்தார்.

நாம் எந்த வேலையை செய்தாலும் அதை முழு மூச்சுடன் யார் என்ன சொன்னாலும் மனம் தளராமல் செய்தால் நமக்கான அங்கீகாரம் ஒரு நாள் கட்டாயம் கிடைக்கும் என்பதற்கு ஐஸ்வர்யா ரஜேஷ் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

 

 

Fb 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

அப்பாவும், அப்பப்பாவும், அத்தையும் சினீமத் துறையி நடிகர்கள் என்பதை சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். 

அப்படி இருந்தாலும், அவருக்கு தடைகள் வந்ததும், அதை தாண்டியதும் பாராட்டவும், வாழ்த்தவும் வேண்டும்.  

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

மன்னிக்கவும் கவனிக்கவில்லை

இதுக்கெல்லாமா? நான் பலதடவை இணைத்துள்ளேன் மீண்டும் மீண்டும் நிர்வாகத்திற்கு நல்ல மனமென்றபடியால் நீக்கிவிட்டார்கள். ஒரு செய்தி தொடருக்காகதான் மேலே இணைத்தேன் மீண்டும்.

நல்ல நடிகை, இன்னும் வளரனும் 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல: ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

aishwarya-rajesh-advice

 

வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல என்று ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ் செய்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் 'க/பெ ரணசிங்கம்', 'திட்டம் இரண்டு', 'துருவ நட்சத்திரம்', 'இடம் பொருள் ஏவல்' மற்றும் தெலுங்கில் 'டக் ஜெகதீஷ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


தற்போது கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளும் இல்லாமல் வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த கரோனா காலத்தில் டெட் எக்ஸில் ஆற்றிய உரையை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு அவரது பெண் ரசிகை ஒருவர் "ஹாய் அக்கா நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. திருப்பூரில் இருக்கும் நான் உங்களுக்காக உயிரைக் கூட விடுவேன்.. உங்களை மிகவும் நேசிக்கிறேன்.. உங்கள் நடிப்பு மிக அருமை.. இவ்வுலகத்துக்கு நீங்கள் ஒரு அடையாளம்.. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அக்கா. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அக்கா" என்று கருத்து தெரிவித்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் "மிக்க நன்றி.. ஆனால் இது போன்ற வார்த்தைகளை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல.. எப்போதும் அந்த வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.. உங்களைப் போன்ற ரசிகை கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனா நான் எப்போதும் உங்களுக்கு தோழியாக இருப்பேன். இனி மீண்டும் அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்தால்.." என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/558988-aishwarya-rajesh-advice-1.html

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.