உடையார்

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்

Recommended Posts

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்

01-14.jpg?189db0&189db0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது.

ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் தற்போது நன்னீர் மீன் பிடியானது கோட்டைக்கல்லாறு ஆறு, கல்லாறு ஆறு, மட்டக்களப்பு ஆறு, கொக்கட்டிச்சோலை ஆறு, வாழைச்சேனை ஆறு உட்பட்ட பல ஆறுகள் மற்றும் பல குளங்கள் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகின்றது.

இதில் கோல்டன் மீன், செப்பலி, கணையான், கொய் கொடுவா, கெண்டை விரால், சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வீச்சு வலை மற்றும் மீன் கூடுகள் மூலம் தற்போது மீன்கள் பிடிபடுவது குறைவாகவே காணப்படுகின்றது. பல மணிநேரங்கள் சென்ற பின்னரே மீன்கள் பிடிபடுவதுடன், அதுவும் குறைவாகவே பிடிபடுகின்றது. (150)

 • 01-14.jpg?189db0&189db0
 • 01-12.jpg?189db0&189db0
 • 01-3-6.jpg?189db0&189db0
 • 01-1-3.jpg?189db0&189db0
 
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நானும் இந்தப்பாலத்துக்கு போய் மீன் வாங்குவேன் (திலாப்பியா) கிலோ 400 ரூபாய் மீன் குறைவென்றால் 600 ரூபாய்க்கு மேல் 

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

இந்த இடத்தை பெயரளவில் தெரியும்.

திலப்பியா மட்டுமா கிடைக்கும்?

cat fish  (கடல் கெளிறு மீன் போன்ற தோற்றம்), ஆனால் கெளிறு மீன்னின்  வெடுக்கு இல்லை.

விரால், கெண்டை கிடைக்குமா?

நன்னீர் மீன்கள்  யாழில் விற்றகப்படுவது வெகு அருமை, ஏனெனில் அவை பொதுவாக விரும்பப்படுவதில்லை இல்லை.

மேற்கு வந்து மிகவும் குறுகிய காலத்தில் சமைக்க தொடங்கிய போது தான்  எனக்குப் புரிந்தது, யாழில், பொதுவாக வடமாகாணத்தில் உள்ளோருக்கு நன்னீர் மீன்களை எப்படி சமைப்பது என்று தெரியாது.  

இப்பொது எப்படியோ தெரியாது.

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, Kadancha said:

இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா

யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு 

எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம்,

வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Kadancha said:

பொதுவாக வடமாகாணத்தில் உள்ளோருக்கு நன்னீர் மீன்களை எப்படி சமைப்பது என்று தெரியாது.  

கடல் மீன்களைவிடவும் நன்னீர் மீன்களில் மணம் அதிகமாக இருக்கும், அதனை வெடுக்கு என்று சொல்வார்கள். அதனால் அதனைச் சமைப்பது அரிது. அதுமட்டுமல்ல அங்கு சைவர்கள் அதிகம். மாமிசம் உண்ணவிரும்பும் சைவர்கள், பிறர் அறியாமல் உண்பதில் வல்லவர்கள். நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு 

மிகவும் உண்மை. 
என்னுடைய அப்பம்மா வெளிப்படடையாக சொல்லுவார். குளம், ஆற்று மீன்கள் தாழ்ந்தவர்கள் (சாதியைச் சொல்லியும்) வாங்குவது என்று.

ஆனால்  அப்பா, அம்மா சொல்லுவது கிடையாது, குளம், ஆற்று மீன்கள் வாங்குவதை விரும்புவது இல்லை.

கடல் கெளிறு கூட வாங்குவது, ஊரில் ஓர் விதமாக பார்க்கப்படும். வேறு கடல் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் அருமையாக வாங்கப்படும், பொதுவாக தவிர்க்கப்படும்.

எனது வீட்டில் வியாழன், வெள்ளி, மற்றும் விரதங்கள், திருவிழாக்கள் தவிர, பொதுவாக மீன் தவிர்க்கப்பட முடியாத உணவு .

27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா

எங்கிருந்து கருவாடாக வருகிறது. 
கிழக்கில் உடனடி நன்னீர் மீன்கள் கிடைப்பது இல்லையா?  

13 minutes ago, Paanch said:

நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.

எப்படி சமைப்பது என்பது தெரியாது.

உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, Paanch said:

கடல் மீன்களைவிடவும் நன்னீர் மீன்களில் மணம் அதிகமாக இருக்கும், அதனை வெடுக்கு என்று சொல்வார்கள். அதனால் அதனைச் சமைப்பது அரிது. அதுமட்டுமல்ல அங்கு சைவர்கள் அதிகம். மாமிசம் உண்ணவிரும்பும் சைவர்கள், பிறர் அறியாமல் உண்பதில் வல்லவர்கள். நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.

மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா. ஜப்பான் மீன் அந்த மாதிரி சுவை, பொரித்து சாப்பிட 

39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா

யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு 

எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம்,

வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்

இதெல்லாம் யாழ் மத்தியில்தான், நாங்கள் பெடியலா தூண்டில் போட்டு பிடிப்போம் எங்க ஊர் பெரிய குளத்தில். அப்படி பன்னாடை விறகு வைத்து சுட்டு சாப்பிடுவோம், சில வேளை கள்ளுக்கும் நல்ல சைட்டிஸ்😄

6 minutes ago, Kadancha said:

உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும். 

கடல் கெளிறு முள் குத்தினால், அதன் வலி சிலநாட்களுக்கு இருக்கும். அம்மா முன்னர் சமைத்தவா, எனக்கு செய்முறை தெரியா, ஆனா தலை சமைப்பதில்லை

Share this post

Link to post
Share on other sites

நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪

சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.

இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.

இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.

https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்

 • Like 4

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, உடையார் said:

மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா

மீன் சமையலில், எப்போதுமே தூளில் ஊற வைக்க விட்டாலும்,  மஞ்சளில் ஊறவைத்துத் தானே சமைப்பது. 

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, உடையார் said:

இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர்.

பலசைவர்கள் மச்சம் மாமிசத்தை விரும்பினாலும் அதனைச் சுவையாக சமைப்பதில் தேர்ந்தவர்கள் அல்ல.

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும். 

வீட்டில் என்ன கறி என்று கேட்பார், அம்மா சொல்லித்தந்தபடி பருப்பு, வாழைக்காய் என்று சொல்வேன். கடல் வாழைக்காயா? என்று புன்சிரிப்புடன் கேட்பார். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, Kadancha said:

மீன் சமையலில், எப்போதுமே தூளில் ஊற வைக்க விட்டாலும்,  மஞ்சளில் ஊறவைத்துத் தானே சமைப்பது. 

இதற்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கனும்

25 minutes ago, Paanch said:

பலசைவர்கள் மச்சம் மாமிசத்தை விரும்பினாலும் அதனைச் சுவையாக சமைப்பதில் தேர்ந்தவர்கள் அல்ல.

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும்

வீட்டில் என்ன கறி என்று கேட்பார், அம்மா சொல்லித்தந்தபடி பருப்பு, வாழைக்காய் என்று சொல்வேன். கடல் வாழைக்காயா? என்று புன்சிரிப்புடன் கேட்பார். 

நீங்கள் சொல்வது சரி இங்கு பலர் பழுத்த சைவங்கள். எங்கள் சொந்ததில் பலர் சைவம் அசைவம் தொட மாட்டார்கள். ஏன் வீட்டில் மனைவிகூட சுத்த சைவம்.

எங்கள் அம்மா நன்றாக சமைப்பா மச்சம், நண்பர்கள்  எங்கள் வீட்டில் சாப்படுவது வழக்கம். அம்மாவிடமிருந்தான் சமையல் கற்றேன். 

துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக - என் அம்மம்மாவின் கை பக்குவம் இதில் புகுந்து விளையாடும், அன்று அவர்களுடன் தான் சாப்பாடு

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

பலசைவர்கள் மச்சம் மாமிசத்தை விரும்பினாலும் அதனைச் சுவையாக சமைப்பதில் தேர்ந்தவர்கள் அல்ல.

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும். 

வீட்டில் என்ன கறி என்று கேட்பார், அம்மா சொல்லித்தந்தபடி பருப்பு, வாழைக்காய் என்று சொல்வேன். கடல் வாழைக்காயா? என்று புன்சிரிப்புடன் கேட்பார். 

அதன் செய்முறையை யாழில் இணைக்கலாமே?...து.ப எப்படி வெட்டுவது:unsure:

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் இந்தப்பாலத்துக்கு போய் மீன் வாங்குவேன் (திலாப்பியா) கிலோ 400 ரூபாய் மீன் குறைவென்றால் 600 ரூபாய்க்கு மேல் 

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

எனக்குத் தெரியும் ஏன் கேட்க்கிறீர்கள்  

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, ரதி said:

அதன் செய்முறையை யாழில் இணைக்கலாமே?...து.ப எப்படி வெட்டுவது:unsure:

துவரம் பருப்பை ஊற வைத்து, வடை பதத்துக்கு அரைத்து, வடைக்கு சேர்க்கும் பொருட்களுடன் சேர்த்து, தட்டி, துண்டுகளாக வெட்டி, (சிலர் அவித்த பின்னர் வெட்டுவினம்) இடியப்பம் அவிப்பதுபோல் அவித்து அதை கறிக்குள்ள போட்டு இறக்குவது.

தமிழகத்தில் வடகறி என்பர்.

சிலர், அவிக்காமல், குழைத்த வடை மாவையே சிறு துண்டுகளாக கறிக்குள் போடுவர்.

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Paanch said:

அதனை வெடுக்கு என்று சொல்வார்கள்.

கடல் உணவு எல்லாவற்றினதும் மணத்தை வெடுக்கு என்று தானே சொல்வது.

இறைச்சியின் மணம் முச்சை.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, உடையார் said:

நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪

சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.

இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.

இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.

https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்

ஒரே தொகுதி.அது தான் சமையல் கலை தான்டவம்ஆடுது.

Share this post

Link to post
Share on other sites

சிறு வயதில் குருணாகலில் வாழும் போது, அப்பா ஒரு முறை குளத்து மீன் (பென்னம் பெரிய குளம் என்று சொல்லலாம் )சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சமைத்துப் பார்த்தார். அதன் வெடுக்கு மணம் மூக்கை பொத்தும் அளவுக்கு இருந்ததால், அம்மா அதன் பின் வாங்க வேண்டாம் என்று உத்தரவு போட்டு விட்டார்.

இங்கு கனடாவுக்கு வந்த பின் நன்னீர் மீன்களில் திலாப்பியா வாங்கி Oven னில் வைத்தோ அல்லது BBQ போட்டோ சாப்பிடுவது வழமை. திலாப்பியாவின் தலையை வெட்டி எறிந்து விட்டு, உடலில் கத்தியால் சில கீறுகள் போட்டு, உப்பு மஞ்சள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தடவி கொஞ்ச நேரம் வைத்து விட்டு Oven னில் வைத்து பேக் செய்தாலோ அல்லது BBQ செய்தாலோ நல்ல சுவையாக இருக்கும். 

ஐரோப்பியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வரும் நன்னீர் மீன்களை அடிக்கடி சமைத்தல் கூடாது. இவை வியட்னாம், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் Farm மில் வைத்து அளவுக்கு அதிகமான Antibiotics கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுபவை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்ற அளவில் சாப்பிட்டால் தான் சரி.

சரி,
ஊரில் பாசையூர் சந்தையில் கடல்காகம் வைத்து விற்பதைப் பார்த்துள்ளேன். போன வருடம் போகும் போதும் பார்த்தனான்....ஆராவது கண்டு இருக்கின்றீர்களா அல்லது சமைத்து இருக்கின்றீர்களா 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்

ஆம். ஏனெனில் அது ஆற்றுப் படுக்கை அமைந்த இடமும், வங்காள விரி குடாவின் நிலையற்ற காலநிலை நிலையும், கடல் வளம் இருந்தும், அந்த பிரதேசத்தின் மீன் சுவையை  நன்னீர் மீன்களால் நிரப்பி விட்டது. 

இப்பொது மீன் உணவு அவர்களின் ஓர் அடையாளம்.   

Share this post

Link to post
Share on other sites

இலங்கை கடல்மீன் தாராளமாக கிடைக்கும் நாடு.அதனால் மக்களுக்கு நன்னீர் மீன்களின் அவசியம் தெரியவில்லை. அப்படியிருந்தும் விரால் மீன் நல்ல சுவையானது.நன்னீர் மீன்களை பச்சைத்தண்ணி மீன் என்று பலரும் அதை விரும்புவதில்லை.வடபகுதி பல ஊர்களில் வெள்ளாளர் குலம் குளத்து மீன் சாப்பிடமாட்டினம்.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

அந்த ஊருக்கே வந்திருக்கன்!
சுனாமியின் பின்னர் சில நிவாரண உதவிகளை வழங்க.
உடைந்த கோட்டை கல்லாறு பாலம், தென்னை மரமளவுக்கு எழும்பிய சுனாமி அடையாளங்கள் இப்பவும் மனதிலுண்டு.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, நிழலி said:

சிறு வயதில் குருணாகலில் வாழும் போது, அப்பா ஒரு முறை குளத்து மீன் (பென்னம் பெரிய குளம் என்று சொல்லலாம் )சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சமைத்துப் பார்த்தார். அதன் வெடுக்கு மணம் மூக்கை பொத்தும் அளவுக்கு இருந்ததால், அம்மா அதன் பின் வாங்க வேண்டாம் என்று உத்தரவு போட்டு விட்டார்.

நன்னீர்  மீன்களை பொதுவாக தோலை உரிக்கப்பட வேண்டும்.

8 minutes ago, நிழலி said:

இங்கு கனடாவுக்கு வந்த பின் நன்னீர் மீன்களில் திலாப்பியா வாங்கி Oven னில் வைத்தோ அல்லது BBQ போட்டோ சாப்பிடுவது வழமை. திலாப்பியாவின் தலையை வெட்டி எறிந்து விட்டு, உடலில் கத்தியால் சில கீறுகள் போட்டு, உப்பு மஞ்சள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தடவி கொஞ்ச நேரம் வைத்து விட்டு Oven னில் வைத்து பேக் செய்தாலோ அல்லது BBQ செய்தாலோ நல்ல சுவையாக இருக்கும். 

இங்கு வரும் pangasius (அது ஓர் cat fish) தோலுடனும், தோல் உரித்ததாகவும் சோதனையாக bbq அல்லது oven செய்து பாருங்கள். மணத்தில், சுவையில் வித்தியாசம் இருக்கும்.

இது திலப்பியாவுக்கும் பொருந்தும். Salmon இற்கும் பொருந்தும்.  

ஏன் கடல் மீன்களுக்கும் பொருந்தும். ஆனால். கடல் மீன்களின் தோலுடையான் சேர்த்து சமைக்கும் மனமும் ருசியும் நாம் பழக்கப்பட்டு விட்டோம். 

razor அளவு கூருடைய filleting knife ஆல்  அநேகமான பெரிய மீன்களின்  செதில்களும் அதனுடன் சேர்ந்த தோலும் லும் வெட்டி நீக்கலாம். 
 
ஆனால், ஒரு போதுமே முட்கள் நீக்கப்பட கூடாது.

Share this post

Link to post
Share on other sites

கடல் மீன் தாராளமா கிடைக்க எதுக்கு நன்னீர் மீனுக்கு அடிபடனும் ?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kali said:

கடல் மீன் தாராளமா கிடைக்க

எல்லோருக்கும் கிடைக்கிறது என்றால், ஏன் நன்னீர் மீன் விற்கப்படுகிறது, இலங்கை தீவின் குறிப்பிட்ட ஓர் பிரதேசத்தில் நன்னீர் மீனை ஒதுகிறார்கள் என்று தெரிந்தும்.

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Paanch said:

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும். 

16 hours ago, ரதி said:

அதன் செய்முறையை யாழில் இணைக்கலாமே?...து.ப எப்படி வெட்டுவது:unsure:

16 hours ago, Nathamuni said:

துவரம் பருப்பை ஊற வைத்து, வடை பதத்துக்கு அரைத்து, வடைக்கு சேர்க்கும் பொருட்களுடன் சேர்த்து, தட்டி, துண்டுகளாக வெட்டி, (சிலர் அவித்த பின்னர் வெட்டுவினம்) இடியப்பம் அவிப்பதுபோல் அவித்து அதை கறிக்குள்ள போட்டு இறக்குவது.

தமிழகத்தில் வடகறி என்பர்.

சிலர், அவிக்காமல், குழைத்த வடை மாவையே சிறு துண்டுகளாக கறிக்குள் போடுவர்.

அவித்த துவரம் பருப்பை,  அரைத்து.... இடியப்ப தட்டில் வைத்து அவித்த பின்...
அதனை சிறு துண்டுகளாக வெட்டியும் சமைக்கலாம்.
பொரித்து சமைத்தால்... இன்னும் சுவையாக இருக்கும்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

Garra_Rufa.JPG விராலை விட ஏரி குரவை அருமையாக இருக்கும்.. ஈழத்தில் இருக்கா ..? 👌

Share this post

Link to post
Share on other sites

3.5 மில்லியன் பெறுமதியான நன்னீர் மீன் குஞ்சுகள்..!! நம்பலாமா…???

வடமாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மீன்பிடி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகிய நிலையில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதுவரைக்கும் வடமாகாணத்தில் உள்ள சுமார் 23 குளங்களுக்கு 3.5 மில்லியன் பெறுமதியான நன்னீர் மீன் குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டுள்ளது என மீன்பிடி அலகு பணிப்பாளர் எஸ்.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • பின்னாலை வந்து மோடி நின்றது எதற்காக அதையும் விபரமா சொன்னாதானே எங்களுக்கும் புரியும். மோடி வந்து திடிதிப்பென்று இண்டைக்கே உங்கட பின்னாலை நிக்கிறார். தேர்தல் பிரசாரத்திலை போய் இப்படி சொல்லி வாக்கு கேட்கவேணும் என்பதற்காக இதுவரையும் சொல்லாமை இப்பதான் சொல்றிங்கள். மோடி வந்து நிண்டதுதான் நிண்டுட்டார் கொஞ்சம் விடுங்கோ நிண்டிட்டு போகட்டும். இதை கேள்விப்பட்டா தங்களுக்குபின்னாலை சீனாவின் அரச தலைவர் சி ஜிப்பிங் நிக்கிரார் என்றெல்லொ  ராஜபக்ச கோஷ்டி சொல்லபோகுது. இந்தியாவிட்டை இல்லாத வீட்டோ உரிமையும் சீனாவுக்கு இருக்குதெல்லோ. சம்பந்தன் ஐயா உங்கடை திருகு தாளத்தும் ஒரு அளவு வேணும்.  
  • கீழடி அகழாய்வில், எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன! சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் 6-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு எடைக்கல்லும் முறையே 8, 18, 150, 300 கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில், கடந்த மே 20-ஆம் திகதி முதல் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில், மணலூரில் சுடுமண்ணாலான உலை, கீழடியில் விலங்கின் எலும்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்பு, அகரத்தில் மண்பானைகள் என அடுத்தடுத்து பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், தமிழாா்வலா்கள் மத்தியில் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு மீது மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் அகரத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னா், கொந்தகையில் ஒரே குழியில் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், கீழடியில் ஏற்கெனவே இரு மண்பானைகள் கிடைத்த இடத்தின் அருகிலேயே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், தண்ணீரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்காக இதுபோன்று வடிகால் வசதியை ஏற்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா். https://athavannews.com/கீழடி-அகழாய்வில்-எடைக்கற/
  • தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார். இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை. கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன். எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார். அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/
  • எனக்கு இப்படியான சைனஸ் பிரச்சினை 7,8 வருடத்துக்கு ஒரு முறை வரும். அடிக்கடி தலையிடி, மூக்கடைப்பு... போன்றவற்றால் மிக அவதிப் படுவேன்.  தொண்டை, மூக்கு, காது (HNO) வைத்தியரிடம் சென்று அதனை அவர் அகற்றி விட்டபின். பெரிய ஒரு விடுதலை கிடைத்த மாதிரி இருக்கும். அது ஒரு சிறிய அறுவை சிகிச்சை தான்.. அவரது வைத்திய நிலையத்திலேயே.  15 நிமிடத்தில் செய்து விடுவார்கள். இரண்டு நாளில்.. மீண்டும் வேலைக்கு செல்லலாம்.
  • பால கோபாலா என் அருகினில் வருவாய்