Jump to content

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த பேட்டி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அமைதிப்படைகளை அனுப்பினார்.

இலங்கை விடயத்தை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார். இதன் காரணமாகவே இலங்கையில் 15 இந்தியர்களை இழந்தோம்.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் புவியியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமாலேயே இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னேற்பாடுகள் இன்றியே அமைதிப்படையில் இலங்கை விடயத்தில் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய இலங்கைக்கான இந்திய தூதுவர் திக்ஷிட் எழுதிய புத்தகத்தில் இந்த விடயங்கள் தெளிவாக இருக்கின்றன.

இதனை படியுங்கள். இலங்கையில் நாம் 15 ஆயிரம் பேரை இழந்தோம். இலங்கை தொடர்பான இந்தியாவிடம் ஒருங்கிணைப்பின்றி காணப்பட்ட கொள்கைகளே இதற்கு காரணம்.

இந்திய பிரதமர், மத்திய அரசு, வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, புலனாய்வு பிரிவுகள். சி.பி.ஐ. இலங்கை விடயம் தொடர்பிலான வெவ்வேறான கொள்கைகளை கொண்டிருந்தன.

தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர். இலங்கை தொடர்பாக தமிழகத்தின் தனியான கொள்கையை கொண்டிருந்தார். அனைத்து துறைகளிலும் சிக்கலாக காணப்பட்டன.

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, இந்தியா எத்தனை கொள்கைகளை கொண்டுள்ளது என இந்திய தூதுவர் திக்ஷிடம் கேட்டிருந்தார்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் இறுதியில் ராஜீவ் காந்தியின் படுகொலை முடிந்தது எனவும் நட்வார்சிங் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/247136?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன்கள் வரிசையாக  புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம்  வாழ்வில் பொன் நாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

இந்தியா... இதுவரை ஈடுபட்ட  சீனா, பாகிஸ்தானுடனான போர்களில், 
தமிழ் ஈழ  விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரே அதிகம்
என முன்பு, இந்தியச் செய்தி ஒன்றில் வாசித்தேன்.

அத்துடன்... மீண்டும் பழைய வாழ்க்கைக்கு... திரும்ப முடியாத கை, கால்களை....
இழந்த இராணுவத்தினர்
45, 000 பேருக்கு மேல் இருப்பார்கள்.

வல்லரசுக்கே.... தண்ணி காட்டியவர்கள், 
விடுதலைப் புலிகள்... என்பதில் பெருமை கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹிந்தியன்கள் வரிசையாக  புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம்  வாழ்வில் பொன் நாள்  

சமாதான கொடி நட்டமாதிரி இருக்கு இந்தியா சண்டைக்கு போகாது போனால் பெண்டு நிமிரும் 

குனிய வச்சி கும்மி அடிக்கிற என்று சொல்லுவாங்களே அதேதான் நடக்கும் கும்மிடுவான் சப்ப மூக்கன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்... மீண்டும் பழைய வாழ்க்கைக்கு... திரும்ப முடியாத கை, கால்களை....
இழந்த இராணுவத்தினர்
45, 000 பேருக்கு மேல் இருப்பார்கள்.

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

அவ‌ங்க‌ள் 1996ம் ஆண்டு முல்லைதீவில் இற‌ந்த‌ ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ இராணுவ‌த்தின் உட‌ல்க‌கை வேண்ட‌ ம‌றுத்த‌வ‌ங்க‌ள் /

க‌ட‌சியில் அவ‌ர்க‌ளின் உட‌ல்க‌ளை காட்டு பிர‌தேச‌த்தில் எரிக்க‌ப் ப‌ட்ட‌தா நினைக்கிறேன் /

இறுதிக‌ க‌ட்ட‌ யுத்த‌த்தில் சிங்க‌ள‌ ஆமி எவ‌ள‌வு பேர் இற‌ந்தார்க‌ள் என்று ச‌ர‌த் பெண்சேக்காவுக்கு தெரியும் , அவ‌ன் ஏதோ ஒரு நாள் உண்மையை வெளியிடுவான் /

2008ம் ஆண்டில்  இருந்து 2009மே வ‌ர‌ போராளிக‌ள் வைத்த‌ கிளைமோர் தாக்குத‌லில் பல‌ சிங்க‌ள‌ இராணுவ‌ம் கொல்ல‌ப் ப‌ட்டார்க‌ள் / அதோடு கை கால் இழ‌ந்த‌வை ப‌ல‌ர் /
கை கால் இழ‌ந்த‌ இராணுவ‌த்தை சிங்க‌ள‌ம் ஒரு பெரிய‌ இட‌த்தில் வைத்து ப‌ராம‌திக்கின‌ம் , அவ‌ர்க‌ளால் ந‌ட‌க்க‌ முடியாது , 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

உண்மைகள் இப்பதான் வெளிவருகின்றது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. பானு (திருத்தம் செய்யப்பட்டுள்ளது).. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தளபதிகள் புடைசூழ பானு ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

அன்பு அண்ணா.. தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவை அடைந்தார். 

9 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

ஏலவே சரத் பொன்சேகாவின் கணக்குப் படி 25,000 இல் இருந்த சொறீலங்கா படை இழப்பு.. இந்த வருடம்... திடீர் கொரோனா தொற்றுப் போல்..  29, 800 வரை போய்விட்டது. காணாமல் ஆக்கப்பட்டது.. ஓடிப்போனது இதுகளுக்குள் காட்டின.. போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கணக்கையும் கூட்டினால்.. இழப்புகள் அங்கும் அதிகரிக்கும்.

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தினேஷ் ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் போல‌ கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி / 

கோட்டை தாக்குத‌ல் வெற்றிக்கு பிற‌க்கு என‌து அம்மா அண்ணா பெரிய‌ம்மா என்று எல்லாரும் போய் பார்த்த‌வை கோட்டையை , அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் என்ன‌ வீட்டில் ம‌ற்ற‌ அக்காவோடு விட்டுட்டு போன‌வை , பிற‌க்கு கொஞ்ச‌ம் வ‌ள‌ந்தா பிற‌க்கு கோட்டை ப‌குதியை பார்த்தேன்  💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

நீங்க‌ள் அப்ப‌வே க‌ள‌த்தில‌ குதிச்சிட்டிங்க‌ள் ச‌கோத‌ரா , உங்க‌ளின் துணிவுக்கு பாராட்டும் வாழ்த்துக்க‌ளும் 

கோட்டை வெற்றி தாக்குத‌லுக்கு பிற‌க்கு தான் யாழ்பாண‌த்து ம‌க்க‌ள் பெரும் மூச்சு விட்ட‌வை / கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ பேய்க‌ளை விர‌ட்டி அடிச்சு இருக்காட்டி , யாழ்பாண‌த்து பெரியாப்ச‌த்திரி ம‌ருத்துவ‌ம‌னை   கூட‌ மூட‌ப் ப‌ட்டு இருக்கும் /

கோட்டை தாக்குத‌லுக்கு பிற‌க்கு யாழ்பாண‌ம் க‌ல‌க‌ல‌ப்பாய் இருந்த‌து ச‌கோத‌ரா 😘 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தின் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தில் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

சிறித‌ர் தியேட்ட‌ரில் எங்க‌ட‌ தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌த‌ எழுத‌ ம‌ற‌ந்திட்டீங்க‌ள் ச‌கோத‌ரா , 

அந்த‌ நாட்க‌ளை நினைக்க‌ உண்மையில் எவ‌ள‌வு ம‌கிழ்ச்சியாய் இருந்து இருக்கிறோம் என்ற‌து இப்ப‌ தெரியுது /

சிறித‌ர் தியேட்ட‌ருக்கு பின்னுக்கு எங்க‌ளுக்கு மூன்று பெரிய‌ க‌ல் வீடு இருக்கு , பின்னேர‌ம் ஆனா தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ள் வீட்டில் இருந்த‌ ப‌டியே கேக்க‌லாம் , ப‌ட‌ம் ஓட‌ முத‌ல் தாய‌க‌ பாட‌ல்க‌ள் போட்டுட்டு தான் ப‌ட‌ம் ஓட‌ தொட‌ங்குவின‌ம் ,
அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் ச‌கோத‌ரா 😘
 
13 minutes ago, nedukkalapoovan said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தின் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

இப்ப‌ அந்த‌ திரைய‌ர‌ங்கு  டுக்க‌ள‌ஸ் தேவ‌ன‌ந்தாவின் ஒப்பிசா இருக்கு ச‌கோத‌ரா , கால‌க் கொடுமை 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சிறித‌ர் தியேட்ட‌ரில் எங்க‌ட‌ தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌த‌ எழுத‌ ம‌ற‌ந்திட்டீங்க‌ள் ச‌கோத‌ரா , 

அந்த‌ நாட்க‌ளை நினைக்க‌ உண்மையில் எவ‌ள‌வு ம‌கிழ்ச்சியாய் இருந்து இருக்கிறோம் என்ற‌து இப்ப‌ தெரியுது /

சிறித‌ர் தியேட்ட‌ருக்கு பின்னுக்கு எங்க‌ளுக்கு மூன்று பெரிய‌ க‌ல் வீடு இருக்கு , பின்னேர‌ம் ஆனா தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ள் வீட்டில் இருந்த‌ ப‌டியே கேக்க‌லாம் , ப‌ட‌ம் ஓட‌ முத‌ல் தாய‌க‌ பாட‌ல்க‌ள் போட்டுட்டு தான் ப‌ட‌ம் ஓட‌ தொட‌ங்குவின‌ம் ,
அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் ச‌கோத‌ரா 😘
 
ஆம்.

அந்தக் காலத்தில் தான் யாழ் கழகங்களுக்கிடையேயான கிரிக்கெட் வளர்ச்சி பெற்றது. 

கல்வியிலும் வடக்கு தொடர்ந்து தன்னை முன்னிலையில் நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. யாழ் இந்துக் கல்லூரி.. அகில இலங்கை அளவில் அன்று றோயல் கல்லூரிக்கு அடுத்த நிலையில் இருந்தது.

விபச்சாரம்.. மதுபானம்.. போதை.. என்ற எதுவும் இருக்கவில்லை. இளைஞர்கள் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்பது அதிகம் இருந்தது. குறிப்பாக லயன்ஸ்... சென் ஜோன்ஸ் அம்புளன்ஸ்.. ரோட்டறிக் கழகங்களில்.. இவர்களின் பங்களிப்பு மிக அதிகம் இருந்த காலம். 

கலைகள் எங்கும் வளர்க்கப்பட்டன. கோலாட்டம்.. கும்பி.. பரதநாட்டியம் என்று கலை வளர்ச்சியோ..  எம் தாயக இளம் பெண்களின் வாழ்வியல் என்பது நள்ளிரவில் கூட தனிய சென்று வரும் அளவுக்கு சுதந்திரமாக இருந்தது. 

இதனை சர்வதேச ஊடகவியலாளர்களே வியந்து பதிவு செய்துள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

 உண்மை ச‌கோத‌ரா /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

1 hour ago, nedukkalapoovan said:

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தினேஷ் ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

அன்பு அண்ணா.. தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவை அடைந்தார். 

ஏலவே சரத் பொன்சேகாவின் கணக்குப் படி 25,000 இல் இருந்த சொறீலங்கா படை இழப்பு.. இந்த வருடம்... திடீர் கொரோனா தொற்றுப் போல்..  29, 800 வரை போய்விட்டது. காணாமல் ஆக்கப்பட்டது.. ஓடிப்போனது இதுகளுக்குள் காட்டின.. போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கணக்கையும் கூட்டினால்.. இழப்புகள் அங்கும் அதிகரிக்கும்.

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

யாழ் கோட்டை தாக்குதலை முன் நின்று நடத்தியது பானு ...அவருக்கு உதவியாக கிழக்கு போராளிகளும் ,கருணாவும் நின்றார்கள்...பானுவே கோட்டையில் கொடியேற்றினார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யாழ் கோட்டை தாக்குதலை முன் நின்று நடத்தியது பானு ...அவருக்கு உதவியாக கிழக்கு போராளிகளும் ,கருணாவும் நின்றார்கள்...பானுவே கோட்டையில் கொடியேற்றினார்.
 
ஆம். பானுவும் வழிநடத்தினார்.  கோட்டையில் தினேஷ் ஏற்றினார்... என்றே நினைக்கிறேன். 

பானு ஆனையிறவில் ஏற்றினார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பேர் இறந்ததுக்கு முக்கியமான காரணமும் இருக்கு நாறல் வெண்ணெயில் செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே அந்த மனம் அவர்களை காட்டி குடுத்து கொண்டு இருந்தது .திரும்ப திரும்ப வடிவேலு கொண்டையை மறைக்காமல் அடிவாங்குவதை போல் வாங்கி கட்டினவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

ஆம். பானுவும் வழிநடத்தினார்.  கோட்டையில் தினேஷ் ஏற்றினார்... என்றே நினைக்கிறேன். 

பானு ஆனையிறவில் ஏற்றினார் என்று நினைக்கிறேன். 

எனக்கும் கோட்டையில்  கொடியேற்றினது யார் என்பது நினைவில் இல்லை ...நீங்கள் சொல்வது போல் சு.பானாவாய் இருக்கலாம் ...ஆனையிறவில் பானு ஏற்றினார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

எனக்கும் கோட்டையில்  கொடியேற்றினது யார் என்பது நினைவில் இல்லை ...நீங்கள் சொல்வது போல் சு.பானாவாய் இருக்கலாம் ...ஆனையிறவில் பானு ஏற்றினார் 

கோட்டையிலும் பானு தான் கொடியேற்றினார்.

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

1 hour ago, nedukkalapoovan said:

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய விமானம் அல்ல.

ஆரம்பத்தில் அவ்ரோ மூலமும் பின் கட்டுநாயக்காவில் இருந்து பறந்து வந்த ராட்சத விமானம் மூலமும் போட்டார்கள்.

ஆம் பீப்பாய் வெடிகுண்டுகள் மட்டுமன்றி.. பீப்பாய் மலக்குண்டுகளும் வீசப்பட்டன. கொழும்பு வைத்தியசாலை கழிவுகள் அடங்கிய குண்டுகள். அதன் பின்னர் வடக்கில் செப்ரிசீமியா தாக்கம் குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்... பரவலாக அதிகரித்திருந்தது. பின் குடா நாட்டில் இதன் தாக்கம் அதிகரித்தது. 

Shaanxi Y-8 - Wikipedia

சீனத்தயாரிப்பு வை-8 பாவிக்கப்பட்டிருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

இது புர‌ளி மாதிரி தெரியுது சிறி அண்ணா , அப்போது நான் சிறுவ‌ன் எதுக்கும் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் விள‌ங்க‌  ப‌டுத்தினா ந‌ல்லா  இருக்கும் சிறி அண்ணா / 

5 minutes ago, nedukkalapoovan said:

இந்திய விமானம் அல்ல.

ஆரம்பத்தில் அவ்ரோ மூலமும் பின் கட்டுநாயக்காவில் இருந்து பறந்து வந்த ராட்சத விமானம் மூலமும் போட்டார்கள்.

ஆம் பீப்பாய் வெடிகுண்டுகள் மட்டுமன்றி.. பீப்பாய் மலக்குண்டுகளும் வீசப்பட்டன. கொழும்பு வைத்தியசாலை கழிவுகள் அடங்கிய குண்டுகள். அதன் பின்னர் வடக்கில் செப்ரிசீமியா தாக்கம் குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்... பரவலாக அதிகரித்திருந்தது. பின் குடா நாட்டில் இதன் தாக்கம் அதிகரித்தது. 

Shaanxi Y-8 - Wikipedia

சீனத்தயாரிப்பு வை-8 பாவிக்கப்பட்டிருந்தது. 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி , இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌ தான் கேள்வி ப‌டுறேன் ச‌கோத‌ரா ☺/ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.