Jump to content

Minneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

Minneapolisல்  பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பு மனிதன். 

 

நிர்வாகம் ??? கறுப்பு ?? மனிதன் ??/       

  கர்த்தாவே இவர்களை மன்னித்தருளும் ( என்ன எழுதுகிறார்கள் என அவர்கள் அறியாதிருக்கிறார்கள் !!!)

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களிலும் ,ஊடகங்களிலும் இவரது கொலை பெரிய சர்ச்சையாய் போய்க் கொண்டு இருக்கிறது ...அமெரிக்கர்களுக்கு இது புதுசு இல்லை ...என்ன தான் கொலைகாரனாய் இருந்தாலும் இப்படி சுவாசிக்க முடியாமல் கொலை செய்தது பெரிய குற்றம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே நெஞ்சு வலிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவுக்கு முதலாவதாக பின்னூட்டம் விட்டிருந்தேன்.  அது பிரசுரிக்கப்பட்டும் இருந்தது.  இப்ப பார்த்தால் அதனைக் காணவில்லை.  அகற்றியவர்கள் எவராயினும்,  பின்னூட்டடத்த்தை அகற்ற முன்னர் அல்லது அதற்குப் பின்னராவது பின்னூட்டம் இட்டவரை தொடர்பு கொள்ள  முனையவில்லை என்பதனை  மனக்கசப்புடன் அவதானிக்கின்றேன் .
இங்கே உரையாட வருகிறவர்கள் வேலை வட்டி ஒன்றும் இல்லாமல் பொழுது போக்க வருகிறவர்கள் என்று தவறாகக் கருதி விட்டனரா,   ஒரு வேளை.. ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

 

Minneapolisல்  பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட  மனிதன். 

 

வீடியோவை நீக்கிவிட்டார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா எப்போதும் சிறந்த நாடாக மாற முடியாது' -  ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைக்கு நீதி கேட்கும் ஹாலிவுட் பிரபலங்கள்

hollywood-stars-demand-justice-for-george-floyd

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற நபரை ஒரு மோசடி வழக்கில் சந்தேகித்து போலீஸார் கைது செய்தனர். கைதுக்கு ஒத்துழைக்காத அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் போலீஸாரின் பிடியில் இருந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்ததையடுத்து, மினியபோலிஸ் நகரில் ஆங்காங்கே பெரியளவில் போராட்டம் வெடித்தது. இதில் சில இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுமிடையே மோதல் ஏறப்பட்டது.


இந்நிலையில் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வயோலா டேவிஸ்: அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இதுதான். கறுப்பாக இருப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாங்கள் தற்போது நவீன கால கொலைகளை எதிர்கொள்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துவதற்காக வழியை காணாத வரை அமெரிக்கா எப்போதும் உயர்ந்த நாடாக மாறாது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஜான் போயேகா: என்னால் சுவாசிக்க முடியவில்லை. என் வயிறு வலிக்கிறது. என் கழுத்து வலிக்கிறது. எல்லாமே வலிக்கிறது. அவர்கள் என்னை கொல்லப்போகிறார்கள்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட். இனவெறி பிடித்த காவலர்களால் கறுப்பின மக்கள் மீதான தாக்குதல் தொடர்வது வேதனையளிக்கிறது.

ஜஸ்டின் பீபர்: இது நிறுத்தப்படவேண்டும். இது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த மனிதரின் மரணம் எனது கோபத்தை தூண்டுகிறது. இனவெறி என்பது ஒரு பிசாசு. அதற்கு எதிராக நாம் நம் குரலை பயன்படுத்தவேண்டும்.

அன்னே ஹாத்வே: இதுதான் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவர் உயிரோடு இருந்திருக்கவேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரை கொன்ற காவலர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.

நிக் ஜோனாஸ்: ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் தங்கள் அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டார்கள். இது மன்னிக்கவே முடியாதது.

 

https://www.hindutamil.in/news/cinema/hollywood/556847-hollywood-stars-demand-justice-for-george-floyd-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாமானியன் said:

இந்த பதிவுக்கு முதலாவதாக பின்னூட்டம் விட்டிருந்தேன்.  அது பிரசுரிக்கப்பட்டும் இருந்தது.  இப்ப பார்த்தால் அதனைக் காணவில்லை.  அகற்றியவர்கள் எவராயினும்,  பின்னூட்டடத்த்தை அகற்ற முன்னர் அல்லது அதற்குப் பின்னராவது பின்னூட்டம் இட்டவரை தொடர்பு கொள்ள  முனையவில்லை என்பதனை  மனக்கசப்புடன் அவதானிக்கின்றேன் .
இங்கே உரையாட வருகிறவர்கள் வேலை வட்டி ஒன்றும் இல்லாமல் பொழுது போக்க வருகிறவர்கள் என்று தவறாகக் கருதி விட்டனரா,   ஒரு வேளை.. ??  

இதற்கு இன்னும் பதில்லையா நிர்வாகத்திடம்? சாமனியன் அப்படி என்னதான் எழுதிவிட்டார் தூக்குமளவுக்கு🙄. தப்பாக இதுவரை கருத்து எழுதியதை பார்க்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பின நபர் சுட்டுக் கொலை! அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்…!

 

Capture3333-960x612.jpg?189db0&189db0

 

அமெரிக்காவின் Minneapolis மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரினால் மனிதாபிமானமற்ற முறையில் கருப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டை நடத்திய காவல்துறை அதிகாரி உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது இது வன்முறையாக மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

நம்ம ஊர்தான் 

நடந்த உண்மையளை புட்டுபுட்டு வைக்கலாமே. 😎

Link to comment
Share on other sites

On 27/5/2020 at 22:53, சாமானியன் said:

நிர்வாகம் ??? கறுப்பு ?? மனிதன் ??/       

  கர்த்தாவே இவர்களை மன்னித்தருளும் ( என்ன எழுதுகிறார்கள் என அவர்கள் அறியாதிருக்கிறார்கள் !!!)

 


 

https://newuthayan.com/கருப்பின-நபர்-சுட்டுக்-க/

கருப்பின நபர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை உலுக்கும் கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: டிரம்ப் 'வன்முறை பதிவு'

அமெரிக்காவை உலுக்கும் கறுப்பினத்தவர் மரணம்: சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்படத்தின் காப்புரிமைSTEPHEN MATUREN / GETTY

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

"என்னால் மூச்சு விட முடியவில்லை" - ஜார்ஜ் ஃப்ளாய்ட்

அந்தக் காணொளியில் போலீஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.

அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறுகிறார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்படத்தின் காப்புரிமைTWITTER/RUTH RICHARDSON Image captionஜார்ஜ் ஃப்ளாய்ட்

அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு போலீஸார் கலைக்க முயன்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த போலீஸ் நபர் ஒருவரும் மற்ற மூன்று போலீஸ் நபர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்படத்தின் காப்புரிமைEPA

சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், "எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்," என்று தெரிவித்தார்.

கண்ணீர் மல்கப் பேசிய அவர், "பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்" என்றும் "கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்," என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கேமரா மேன் மின்னெசோட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸார் கூறுவது என்ன?

உணவகம் ஒன்றில் கள்ளப்பணம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் அவரை தொடர்புகொண்டனர்.

போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை.

போலீஸார் கூறுவது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டிரம்பின் ட்விட்டர் பதிவு

இந்நிலையில் மினியாபொலிஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "மினியாபொலிஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு நடைபெறவதை நான் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். தீவிர இடதுசாரி கொள்கையுடைய மேயர் ஃப்ரே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசியப் படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன்.

ரவுடிகள் ஜார்ஜ்ஜை அவமதிக்கின்றனர். நான் அதை நடக்க விட மாட்டேன். ஆளுநர் டிம் வால்சிடம் பேசியுள்ளேன். அவருடன் ராணுவம் துணை நிற்கும் என்று தெரிவித்தேன். ஏதாவது பிரச்சனையென்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும்" என பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

ஆனால் இந்த ட்விட்டர் பதிவு "வன்முறையை தூண்டுவதாக" உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை.

https://www.bbc.com/tamil/global-52852370

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நடந்த உண்மையளை புட்டுபுட்டு வைக்கலாமே. 😎

இதில அவர் வந்து  எழுதுறத்திற்கு என்ன இருக்கு அவரே பயந்து போயிருக்காரு tw_fearful:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இதற்கு இன்னும் பதில்லையா நிர்வாகத்திடம்? சாமனியன் அப்படி என்னதான் எழுதிவிட்டார் தூக்குமளவுக்கு🙄. தப்பாக இதுவரை கருத்து எழுதியதை பார்க்கவில்லை

எல்லாத்துக்கும் பதில் சொல்லவேண்டி வந்துவிடும் என்றுதான் மோகன் அண்ணா யாழுக்கு சந்தா கேட்காமல் இலவசமாக விட்டிருக்கின்றார் போலிருக்கு😃

நானும் கவனித்திருந்தேன். தலைப்பில் முன்னர் கறுப்பு மனிதன் (black man என்பதன் இயந்திரத்தனமான நேரடி மொழியாக்கம் -  Google translation ஆகவும் இருக்கலாம்😀) என்று இருந்தது. இப்போது கறுப்பைக் காணவில்லை.

கறுப்பர் கொல்லப்பட்டதால்தான் இது முக்கிய செய்தி. அதை political correctness என்று மொட்டையாக மனிதன் என்று எழுதியுள்ளது சரியாகப்படவில்லை.

தரக்கட்டுப்பாட்டை இறுக்கமாக பேணும் பிபிசி unarmed black man என்றுதான் சொல்கின்றது.

Black man - கறுப்பு மனிதன், கறுப்பினத்தவர் என்று சொல்வதை விட கறுப்பர் என்றே எளிமையாகச் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நடந்த உண்மையளை புட்டுபுட்டு வைக்கலாமே. 😎

 

1 hour ago, ரதி said:

இதில அவர் வந்து  எழுதுறத்திற்கு என்ன இருக்கு அவரே பயந்து போயிருக்காரு tw_fearful:

கொஞ்சம் உண்மைதான் 
என்னோடு வீட்டில் இருப்பவர் எரிந்துகொண்டு இருக்கும் இதே இடத்தில் இருக்கும் 
ஒரு கொஸ்பிடலில்தான் வேலை செய்கிறார். இன்று வேலைக்கு போவது என்னவோ 
முள்ளிவாய்க்காலில் இருந்து தப்புவதுபோல திட்டம் வகுத்து நான் இங்கிருந்து டெலிபோனில் 
கதைத்துக்கொண்டிருக்கவே போய் சேர்ந்தார்.

இப்போது இராணுவமும் போலீசும் எல்லா பகுதிக்கும் வந்துவிட்டார்கள் சில பேரை கைது செய்து இருக்கிறார்கள் கொஞ்சம் நிலைமை சீராகிறது .....

ஆனால் இந்த வார இறுதியில்தான் பாரிய ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து 
இருக்கிறார்கள் வேறு மாநிலங்களில் இருந்தும் ஆட்கள் பஸ்களில் கார்களில் வந்துகொண்டு 
இருக்கிறார்கள்.

வார இறுதி எவ்வாறு இருக்கும் என்பதுதான்  தெரியவில்லை.
கடை உடைப்பு   எரிப்பு எல்லாம்  வெள்ளை இனத்தகவர்கள் (இன துவேசம் உள்ளவர்கள்)  இந்தியா பா க ஜா போல  உள்ளிருந்து அவர்கள்தான் செய்கிறார்கள் 
ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பி அவ பெயரை உண்டாக்குவது அவர்கள் திட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2020/05/27/us/gallery/george-floyd-demonstrations/index.html

Minnesota State Patrol troopers block a road in Minneapolis on Friday, May 29, the fourth day of protests calling for justice for George Floyd, who died in police custody.
Kerem Yucel/AFP/Getty Images
 

Protesters continue to demonstrate against the death of George Floyd, a black man who died Monday in Minneapolis after pleading for help as a police officer pinned him -- unarmed and handcuffed -- to the ground.

The unrest follows the anger that poured through communities across the country as video of Floyd's last moments alive began circulating on social media.

Floyd's cause and manner of death remain pending and are being investigated by local, state and federal law enforcement, the Hennepin County Medical Examiner's Office said in a statement.

The incident recalls the 2014 death of Eric Garner, who uttered the words, "I can't breathe," while in an officer's chokehold in New York. Since Garner's death, the phrase has become a rallying cry in the Black Lives Matter movement.

https%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F200529062059-01-cnn-crew-arrest-minneapolis-protest-0529-screengrab.jpg
CNN journalist Omar Jimenez, who identifies as black and Latino, is taken into police custody during a live broadcast early Friday, at the site of the protests in Minneapolis. Jimenez's crew, including a producer and a camera operator, were also placed in handcuffs. They have since been released from custody.
CNN
https%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F200529020520-03-george-floyd-protests-0529.jpg
Protesters gather in front of a burning fast food restaurant early Friday in Minneapolis.
John Minchillo/AP
https%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F200528212854-02-george-floyd-memphis-protest-0520.jpg
A protester winces in pain after being sprayed with pepper spray by police during a demonstration near the Memphis Police Department precinct in Memphis, Tennessee, on Thursday, May 28.
Patrick Lantrip/Daily Memphian/AP
https%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F200529124856-23-george-floyd-protest-0529-3rd-precinct-burning.jpg
A protester dumps heating fuel on the fire at the Minneapolis police Third Precinct on Thursday.
Zach Boyden-Holmes/The Register/Sipa USA
https%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F200529104602-01-george-floyd-protest-0528-mn.jpg
Protesters demonstrate outside of a burning Minneapolis police Third Precinct on Thursday.
John Minchillo/AP
https%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F200529125412-09-george-floyd-protest-0528-mn.jpg
A protester moves around the smoke-filled Third Precinct building of the Minneapolis Police Department on Thursday.
John Minchillo/AP
Link to comment
Share on other sites

101179884_10157013114621822_751222947096

காவல்துறை ஒரு கறுப்பினத்தவரை கொன்றதற்கு நீதி வேண்டி வெள்ளை இனத்தவர்கள் உட்பட அனைவரும் போராடி அது கலவரமாக மாறியுள்ள ஒரு சூழலில் அந்த நாட்டு ஜனாதிபதி என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்!

கொல்லப்பட்ட George Floyd மீதான உண்மையான அனுதாபமாகத் தெரியவில்லை.

மாறாக, போராடுபவர்கள் = காடையர்கள்
போராட்டம் = களவு
அதனைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு.

இராணுவத்தை அனுப்பக் கலவரம் வேண்டுமென்றே தூண்டப்பட்டதாகவும் தகவல். காவல்துறையின் செயலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த tweetஐ Twitter கட்டுப்படுத்தியுள்ளது. பார்க்க மட்டுமே முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் கொரோனா பிரச்சனையை திசை திருப்புவதற்காக வேண்டும் என்றே இவரை கொலை செய்து இருக்கிறார்கள் ..கறுப்பின மக்களுக்கு சப்போட் பண்ணுறம் என்று சொல்லி வெள்ளையின ரவுடிகள் கடைகளை உடைத்து , உடமைகளை சூறையாடி, பத்தாதற்கு எரித்தும் பிரச்சனையை தூண்டுகின்றனர் ...டிரம்பும் இதைத் தான் எதிர் பார்க்கிறார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்

மின்னபொலிஸ் அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

latest tamil news


 

இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காரில் வந்த ஒரு மர்ம நபர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.


latest tamil news


 


இதில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கத்தியால் தாக்கிய பெண் சுட்டுக்கொலைபுளோரிடா மாகாணத்தின் டெம்பிள் ரெரேஸ் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே, ஹேபா மும்தாஜ் அலாஜாரி, 21, என்ற பெண், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்தினார். இதைக் கண்ட மற்ற போலீசார், அப்பெண்ணை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்தியதில், போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2549233

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பினத்தவர் கொலை! கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்

கருப்பினத்தவர் கொலை! கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் தயார் நிலையில் உள்ளது.
பதிவு: மே 31,  2020 06:37 AM
வாஷிங்டன்

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.


மினசோட்டா,ஜார்ஜியா,ஓஹியோ,கொளராடோ,விஸ்கான்சின்,கென்டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பியா ஆகிய மாநிலங்களில் நிலமை மோசமாக உள்ளது போராட்டங்கள் வெடித்து உள்ளன

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/31063724/George-Floyd-protests-spread-nationwide.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.