• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

கொரோனா குறித்து போலிப்பிரசாரங்கள் – விசாரணைகளுக்காக விசேட குழு

Recommended Posts

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.jpg

கொரோனா குறித்து போலிப்பிரசாரங்கள் – விசாரணைகளுக்காக விசேட குழு

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் வைத்தியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/கொரோனா-குறித்து-போலிப்பி/

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இனி சமூக வலைத்தளங்களில்  கொரோனா என்ற வசனத்தை கண்டாலே தூக்கி உள்ள போடுவாங்கள் 
இரண்டு நாட்களில் 250க்கும் அதிகம்  , வெகு சீக்கிரமே உண்மை வெளியில் வரும் என்று சொன்னேன் ,அதுக்காக இவ்வளவு சீக்கிரமாகவா...?

Edited by அக்னியஷ்த்ரா

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இனி சமூக வலைத்தளங்களில்  கொரோனா என்ற வசனத்தை கண்டாலே தூக்கி உள்ள போடுவாங்கள் 
இரண்டு நாட்களில் 250க்கும் அதிகம்  , வெகு சீக்கிரமே உண்மை வெளியில் வரும் என்று சொன்னேன் ,அதுக்காக இவ்வளவு சீக்கிரமாகவா...?

இப்பதானே திறந்து விட்டுருக்காங்கள் இனி கொரனாவின் அதிரடியை காணலாம் போல இருக்கு 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இனி சமூக வலைத்தளங்களில்  கொரோனா என்ற வசனத்தை கண்டாலே தூக்கி உள்ள போடுவாங்கள் 
இரண்டு நாட்களில் 250க்கும் அதிகம்  , வெகு சீக்கிரமே உண்மை வெளியில் வரும் என்று சொன்னேன் ,அதுக்காக இவ்வளவு சீக்கிரமாகவா...?

அக்னி, வெளிநாடுகளில் இருந்து போறாக்களுக்கு தான் கொரோனா ...ஏன் இலங்கையரசாங்கம் ஆட்களை உள்ளுக்குள் எடுக்கிறார்களோ தெரியா :unsure:

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

அக்னி, வெளிநாடுகளில் இருந்து போறாக்களுக்கு தான் கொரோனா ...ஏன் இலங்கையரசாங்கம் ஆட்களை உள்ளுக்குள் எடுக்கிறார்களோ தெரியா

அப்பிடியெண்டு நீங்க நினைச்சிட்டு இருங்கோ அக்கி ...அங்க திடீர் திடீர் என்று செத்து விழுறவைகள 
என்ன வருத்தம் என்டே தெரியல என்று வெளியில் சொல்லிப்போட்டு கொண்டுபோய் எரிக்கிறதா  கேள்வி 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

அக்னி, வெளிநாடுகளில் இருந்து போறாக்களுக்கு தான் கொரோனா

 

29 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்பிடியெண்டு நீங்க நினைச்சிட்டு இருங்கோ அக்கி ...அங்க திடீர் திடீர் என்று செத்து விழுறவைகள

எத்தனை என்று தெரியுமா? 

இது விஞ்ஞான அடிப்படையில் அடையப்பட வேண்டிய முடிவு.

சொறி சிங்களம் அதை செய்யாது. ஏனெனில், அதற்கு பணமும், வளமும் இல்லை, முக்கியமாக சொறி சிங்களத்தின் இப்போதைய கரிசனை எப்படி யாரிடஸ்ம் இருந்து பணம் பெறுவது வங்குரோத்தை தள்ளிவைப்பதற்காக, சீன-ஹிந்திய முறுகல் நிலைமையில்.   

உள்ளுக்குள் இல்லை மற்றும் வெளியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே உண்டு  என்பதை, எவர் என்றாலும், விஞ்ஞான அடிப்படையில் பரிசோதிக்காமல், தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது, அவரவரின் இந்த வருத்தம் பற்றிய விளக்கத்தின் எல்லை.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அப்பிடியெண்டு நீங்க நினைச்சிட்டு இருங்கோ அக்கி ...அங்க திடீர் திடீர் என்று செத்து விழுறவைகள 
என்ன வருத்தம் என்டே தெரியல என்று வெளியில் சொல்லிப்போட்டு கொண்டுபோய் எரிக்கிறதா  கேள்வி 

இவ்வாறான திடீர் மரணங்கள் இதுவரை ஒரு 30 ஐ தாண்டியிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இதனை தயாரித்தது, நளினி சிவதாசன். பிபிசிக்குள நம்ம ஆக்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது. நளினி, தயாரித்த இந்த புரோகிராம் குறித்து சொல்லவில்லை.
    • இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்-  சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்         by : Yuganthini இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட அறிக்கையாளரினால், அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வதேசக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 7 மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஐ.நா.விசேட அறிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்றே  இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி  வேகமாக சுருங்கி வருகின்றது. மேலும்  சிவில் சமூக அமைப்புக்கள், இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு  உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்கு அதிகளவு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது,கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் ஊடாக  கருத்துச்சுதந்திரம், அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அத்துடன் சமூக செயற்பாட்டாளர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்டற்ற அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகப் கருத்து வெளியிடக்கூடிய ஒரே தளமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை காணப்படுகிறது. ஆகவே இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதைக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அவதானிக்க வேண்டும். மேலும் இலங்கை விவகாரங்களில் வலுவான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது  அவசியம்” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/இலங்கை-மீது-வலுவான-அணுகு/
    • அரசாங்கம், தங்களால் களமிறக்கப்பட்டவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு கொடுக்காமல், தங்களுக்கு அளிக்கப்பட்டதன் மர்மம்தான் என்னவோ? விளக்குவீர்களா? 
    • யாழில் தேர்தல் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார் மகிந்த தேசப்பிரிய   யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை நேரில் வருகை தந்து ஆராய்ந்தார். யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்துக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். அத்துடன் மாவட்ட செயலர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.   -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=130908
    • யாரோ சொன்னார்கள், சிங்களம் சமஷ்ட்டி தர தயாராய் இருந்தது. தலைவர் தான் எதிர்த்தவர் என்று. பத்து ஆண்டுகள் கடந்தும் தாறோம் எண்டதை காணோம். சிங்களவன் சொல்லுறதெல்லாம் வேதவாக்கு  எண்டு காலை நக்குகிறவர்கள் நம்பலாம். அவனே தான் சொன்னதை  சொன்னதென்று ஏற்றுக்கொள்ள மாட்டான்.    விடுவிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பாதுகாப்புக்காக இருமடங்கு இளைஞர் உள்ளே வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் வைக்கப்படுபவர். தங்கள் முகவருக்கு முன் ஆயத்த  பாதுகாப்பாய்.